World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பாEurope reacts nervously to Bush's State of the Union speechபுஷ் இன் நாட்டின் நிலைமை தொடர்பான பேச்சுக்கு ஐரோப்பா பதட்டத்துடன் பதிலளிக்கிறது By Peter Schwarz நாட்டின் நிலைமை தொடர்பான ஜோர்ஜ் புஷ் இன் பேச்சுக்கு ஐரோப்பிய செய்தியூடகங்களின் பதிலளிப்பு மட்டுப்படுத்தப்பட்ட சிலேடையான குறிப்புரை மற்றும் மிக வெளிப்படையான விமர்சனங்களுக்கிடையில் வேறுபட்டதாக இருந்தன. புஷ் மீதான நேரடியான தாக்குதல் குறைவாக இருந்தபோதும், அவரது 29 ஜனவரி பேச்சினால் ஐரோப்பாவின் செல்வாக்கு மிகுந்த அரசியல் வட்டாரங்கள் ஆழமாக பாதிக்கப்பட்டன என்பதை பரவலான விமர்சகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ''யுத்தமானது அனைத்தினதும் தந்தையாக இருக்கிறது'' என்ற தலையங்கத்தின் கீழ் ஜேர்மன் ஜனாதிபதி ஹகார்ட் ஷுரோடர் இன் வாஷிங்கடனுக்கான திடீர் பயணத்தை பற்றி Süddeutsche Zeitung பத்திரிகை விமர்சகர் குறிப்பிடும்போது, ''பாவம் ஹகார்ட் ஷுரோடர்'', தற்போது முடிசூட்டிக்கொண்ட அமெரிக்க சீசரின் சிம்மாசனத்திற்கு முன்னால் ஐரோப்பாவின் முதலாவது பிரகாசமான மனிதன் வீற்றிருப்பது ஒன்றும் இலகுவாக இருக்கப்போவதில்லை. ஜோர்ஜ் புஷ், காங்கிரசால் அவருக்கு வழங்கப்பட்ட புகழுரையை கொண்டாடிவிட்டிருந்ததுடன் உயர் பொது அபிப்பிராய கணிப்பீடுகளில் தன்னை பிரகாசப்படுத்திக்கொண்டார். ''தற்போது அன்றாட சிக்கலான விடயங்களான உருக்கு பற்றிய முரண்பாடுகள், ரஷ்ய கடன், கைதிகளின் நிலைமைகளை ஞாபகப்படுத்த தற்போது ஜேர்மன் ஜனாதிபதி வருகிறார்: ஓ, இந்த பாரிய சுமைகளைக் கொண்ட ஐரோப்பியர்கள்'' என குறிப்பிட்டிருந்தது. இன்னொரு வகையில், புஷ்ஷின் தற்போதைய மாவீர தோற்றம் பரந்தமுறையில் உள்நாட்டு பிரச்சனைக்கான பதிலளிப்பாக இருக்கின்றது என்ற கருத்தை பத்திரிகை சொல்கிறது: ''ஜனாதிபதிக்கு செப்டம்பர் 11 தாக்குதலால் பின்போடப்பட்ட அவரது உள்நாட்டு நிகழ்ச்சி நிரலை முன்தள்ள இந்த யுத்தம் அவசியமாக இருக்கிறது. ஆனால் அவை இன்னமும் முடிந்துவிடவில்லை. வரவுசெலவு திட்ட பற்றாக்குறைக்கான நியாயப்படுத்தலாயும் அதேபோல் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டத்திற்கு அவரது பதிலளிப்பாக இருப்பதற்கும் புஷ் இற்கு இந்த யுத்தம் அவசியமாக இருக்கிறது. அத்துடன், புஷ் இற்கு இந்த யுத்தமும், பரந்த மட்டத்தில் உடனடியானமுறையில் அது அவருக்கு கொணர்ந்த பிரசித்தியும் இந்த வருடம் காங்கிரஸ் தேர்தல் நடைபெற இருப்பதால் அவசியமாகவுள்ளது. செப்டம்பரில் இடம்பெற்ற தாக்குதலின் ஞாபகத்தினது எந்தவித மழுங்கடிப்பையும் தடுப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த தோற்றம் ஜனாதிபதிக்கு அவசியமாக இருக்கிறது.'' பிரெஞ்சு பத்திரிகையான Libération ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் இதையொத்த முறையில் பார்ப்பதுடன் விடயத்தை அடிக்கோடிட அது ஒரு அமெரிக்க சமூகவியலாளரை மேற்கோள் காட்டியது. ''Monterey Institute of International Studies (California) இல் பேராசிரியராக இருக்கும் Glynn Wood ஐ பொறுத்தவரை, புஷ் இன் மூலம் வெளிப்படுத்தப்பட்ட அறிவுப்பொலி என்றோன் ஊழல் (Enron scandal), பொருளாதார மந்தநிலை, வரவுசெலவுத்திட்ட நிலைமை போன்ற உள்நாட்டு கவலைகளின் சிந்தனைகளை சிதறடிப்பதற்கான நோக்கத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. 'அமெரிக்க அரசியல் வரலாற்றில் இது பதிலளிப்புகளின் மரபுரீதியான ஒரு வழிமுறையாகும்-- முக்கியமான அச்சுறுத்தல் திரைகளை உருவாக்குவதன் மூலம் உள்நாட்டு பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப முனைகிறார்கள்,' என அவர் குறிப்பிட்டார்.'' பிரெஞ்சு பத்திரிகையான Le Monde புஷ் இன் யுத்த விருப்ப தோற்றநிலையில் இருந்து ஆபத்து எழுகிறது என குறிப்பிட்டிருந்தது. கடுமையாக மறைக்கப்பட்டிருந்த வசையுடன் அந்த பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் தொடங்குகிறது: ''ஐக்கிய அமெரிக்கா, தான் இன்னும் யுத்தத்தில் இருப்பதாக கருதுகின்றது. குளிர்யுத்த காலத்தின்போது கம்யூனிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு சமமான ஒரு பலப்பரீட்சைக்காக தனது நாட்டினை தயார்படுத்த வேண்டும் என்ற ஒரு மனிதனின் பேச்சாக அது இருந்தது.'' அந்தப் பத்திரிகை பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது ஒரு அரசியல் போராட்டமாகும் என அழுத்திக் குறிப்பிட்டதுடன் அது மேலும் கேட்கிறது: ''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் பென்டகனின் ஒரு வரவுசெலவுத் திட்டத்திற்கான பணியா அல்லது அரசியல்வாதிகளுக்கும் காவல் துறைக்கும் இடையிலான கூட்டுழைப்பா?'' அது தனியே ஒரு ''இராணுவ விளைவுகள்?'' கேள்வியாக மட்டுமா இருக்கிறது. வடகொரியா, ஈராக் மற்றும் ஈரான் மீதான புஷ் இன் தாக்குதல் சீனா மற்றும் ரஷ்யாவுடனான முரண்பாட்டினை கட்டவிழ்த்துவிடும் என இறுதியாக பத்திரிகை எச்சரிக்கிறது: ''சீனா மற்றும் ரஷ்யா இருநாடுகளும் வடகொரியா, ஈராக் மற்றும் ஈரானின் மிகமுக்கிய ஆயுத ஏற்றுமதியாளர்களாக இருக்கின்றன என சுட்டிக்காட்டுவது மட்டும் போதுமானது.'' பிரிட்டனின் பினான்சியல் டைம்ஸ் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்த காலத்தில் உடையக்கூடிய நிலையிலுள்ள கூட்டினை உடைப்பதற்கு எதிராக ஒரு தெளிவான எச்சரிக்கையை வெளியிட்டது. ஒரு ஆசிரியர் தலையங்கத்தில் ''ரவுடியின் பேச்சு,'' என தலையங்கம் இட்டு, ''ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியும் மற்றும் இராணுவத் தளபதியும் ஐக்கிய அமெரிக்காவினால் வழிநடத்தப்படும் இப்படியானதொரு பரந்த சர்வதேச கூட்டினை ஐக்கியப்படுத்த வழிசமைத்த கவனமான இராஜதந்திரத்தையும், நிதானத்தையும் கைவிடாது இருப்பது இதுவரை முக்கியமானதாக இருக்கிறது. ஒரு 'பயங்கரத்தின் மையத்தை' தோற்கடிக்க வேண்டும் என்ற அவரது உரையின் சத்தம் ஆபத்தாக இருப்பதுடன், பொதுவான நோக்கை பாதுகாப்பதற்கு மாறாக கூட்டினை உடைப்பதற்கு இட்டுச்செல்லும்.'' என பத்திரிகை அறிக்கைவிட்டது. ஈரான், ஈராக் மற்றும் வடகொரியாவுக்கு எதிரான புஷ் இன் பயமுறுத்தலினை இட்டு பத்திரிகை குறிப்பிட்டதானது, ''பூகோள பயங்கரவாதம் மற்றும் போக்கிரி அரசுகளும் வித்தியாசமான நோக்குகளை கொண்டிருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் வித்தியாசமான அணுகுமுறை தேவையாக இருக்கிறது. வடகொரியாவும் ஈரானும் ஈராக்கினை ஒத்ததாக இருக்கவில்லை. அவர்களை ஒன்றாக இணைப்பதானது எளிமைப்படுத்தலாக இருப்பதுடன் ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் புதிய கூட்டுக்களை அந்நியப்படுத்துவதாக இருக்கும்.'' அதன் ஆசிரியர் தலையங்கம் கீழ்காணும் வார்த்தைகளுடன் முடிவுபெற்றது: ''அலுவலகத்தின் முதலாவது வருடம் திருவாளர் புஷ்ஷினை மிகப்பிரபல்யம் ஆக்கியுள்ளது. ஆனால் அது நிதானத்தை கைவிடுவதன் ஒரு அறிகுறியாக இருக்கக்கூடாது.'' ஒரு ''றேகனிச பணியின் உணர்மையை'' யும் மற்றும் அவரது ஐரோப்பிய கூட்டுக்களிடம் இருந்து ஒரு விலகிச் செல்தலையும் புஷ் வெளிக்காட்டுகிறார் என ஜேர்மனிய Frankfurter Rundschau பத்திரிகை கவனத்துடன் குறிப்பிட்டது. ''செப்டம்பர் 20ல் அவரது பேச்சுக்கு மாறாக இந்தத் தடவை ஜனாதிபதி கூட்டுகளை மேலெழுந்தவாரியான முறையில் மட்டுமே குறிப்பிட்டுச் செல்கிறார். அன்று பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர்தான் மேடையில் அமர்ந்திருந்தார் ஆனால் இந்தத் தடவை வாஷிங்கடனுக்கு தான் அளிக்கக்கூடிய உதவியை விட வாஷிங்கடனில் இருந்து மிகையான உதவி அவசியமாக இருக்கும் ஒரு மனிதன், ஆப்கானிஸ்தானின் தற்காலிக ஜனாதிபதி Hamid Karsai அமர்ந்திருக்கிறார்.'' பத்திரிகையின் படி, ஐரோப்பியர்களின் பணியானது ஐக்கிய அமெரிக்காவின் மீது ஒரு ''மிதமான செல்வாக்கை'' உண்டுபண்ண முயற்சிப்பதாக இருக்கிறது. புஷ்ஷின் பேச்சு பற்றிய எதுவித குறிப்புக்களையும் ஐரோப்பிய அரசாங்க வட்டாரத்தில் இருந்து காண்பது கடினமாக இருந்தது. அதைத்தொடர்ந்த ஐரோப்பிய தலைவர்களின் வெளிப்படுத்தல்களின் எதிர்பார்ப்புக்கள் அமெரிக்கர்கள் ஒரு கூட்டுழைப்பு மற்றும் அமைதியான நோக்கத்திற்கு ஏற்றதாக தம்மை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதாக இருந்தது. தற்போதைய இந்த உரையின் அதிர்வில் இருந்து மீழ்வதற்கு அவர்களுக்கு இப்போது சிலகாலங்கள் தேவையாக இருப்பதை ஒருவர் உணரக்கூடியதாக இருந்தது. அண்மைய நாட்களாக இராஜதந்திர உறவுகள் தெளிவான வகையில் இறுக்கமாக்கப்பட்டுள்ளன. வார தொடக்கத்தில் கிட்டதட்ட எப்போதுமில்லாதவாறு ஐரோப்பிய வெளிநாட்டமைச்சர்கள் அமெரிக்காவின் மத்திய கிழக்கு கொள்கையில் இருந்து தம்மை அந்நியப்படுத்தியுள்ளனர். அதேவேளை புஷ், பாலஸ்தீன ஜனாதிபதி யசீர் அராபத்தை தாக்கியதுடன் இஸ்ரேல் பிரதமர் ஆரியல் ஷரோனை வாஷிங்கடனுக்கு வரும்படி எடுத்துக்காட்டான முறையில் அழைப்பு விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டமைச்சர்கள் ஷரோனை தாக்கியதுடன் அரபாத்தை தனிமைப்படுத்தும் எந்த முயற்சிக்கும் எதிராக எச்சரிக்கை விடுத்தார்கள். இப்படியான பதட்டங்கள் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அதிகரித்த முறையிலான
கடினமான முரண்பாடுகளையும், இவை நீண்டகாலத்திற்கு வாஷிங்டனின்
மேலாதிக்க தன்மையை அமைதியான முறையில் பொறுத்துக்கொள்ள
முடியாதையும் மற்றும் சாத்தியமற்று இருப்பதையும் முன்னறிவிக்கின்றன. |