ஆசியா
:
ஆப்கானிஸ்தான்
Afghanistan: US forces carry out
cold-blooded murder at Kandahar hospital
ஆப்கானிஸ்தான்: அமெரிக்கத் துருப்புகள் காந்தஹார் மருத்துவமனையில் படுகொலையில் ஈடுபட்டனர்
By Peter Symonds
1 February 2002
Back to screen version
காந்தஹாரில் திங்கட்கிழமை ஒருதலைப்பட்சமாக நடந்த யுத்தத்தில் அமெரிக்கா தலைமையிலான
இராணுவப்படை ஆறு வெளிநாட்டு தலிபான் ஆதரவாளர்களை சுட்டுக் கொன்றது. டிசம்பர் தொடக்கத்தில் இருந்து மிர்வாய்ஸ்
மருத்துவமனை வார்டு ஒன்றில் இவர்கள் அடைபட்டுக் கிடந்தனர். அமெரிக்க இராணுவம் அவர்கள் அறுவரையும் விட்டுக்
கொடுக்காத பிடிவாதக்காரர் என்றும் இஸ்லாமிய தியாகிகளாக இருக்க விரும்பினர் என்றும் கூறிற்று. ஆனால் ஒருவர்
அரைகுறை உண்மை, பச்சைப் பொய்கள் ஆகியவற்றின் மறைப்பை விலக்கிப் பார்ப்பாராயின் நடந்தது ஒரு திட்டமிட்டு செய்யப்பட்ட
கொலையாகும் என்பது தெரியும்.
அதிகாரபூர்வமான செய்திகள்படி காந்தஹார் கவர்னர் குல் அகா ஷிர்ஜாய் (Gul
Agha Shirzai) கீழ் செயல்பட்ட 100 ஆப்கான் படைக்குழுவால்
இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இது அமெரிக்க சிறப்பு படையினர் மற்றும் துப்பாக்கி வீரர்களால் பரிந்துரைக்கப்பட்டது.
"அரபுகள்" மீதான இந்த தாக்குதல் அதிகாலையிலே தொடங்கி முடிக்கப்பட்டுவிட்டது.
நண்பகல் 1-45 மணிக்கு மற்றொரு தாக்குதல் தொடங்கிற்று. துப்பாக்கி ஏந்தியோர் ஊர்ந்து
தயார் நிலையில் இருந்தனர். போர் வீரர்கள் மருத்துவமனை ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். ஸ்டர்ன்
குண்டுகள், பிஸ்டல், தானியங்கி ஆயுதங்கள் முதலியவை வெடிக்கும் சத்தத்தை வெளியிலிருந்த பத்திரிகையாளர்கள் கேட்டனர்.
முக்கால் மணி நேரம் கழித்து, அனைத்தும் முடிந்துவிட்டது. முடிவாக ஆறு "அல்கொய்தா" கைதிகள் இறந்துவிட்டனர். பல
ஆப்கான் படைக்குழுவின் ஆட்கள் காயமடைந்தனர், ஒருவர் படுகாயமடைந்தார்.
மேஜர் கிறிஸ்மில்லர் எனும் அமெரிக்க பொறுப்பு அதிகாரி பத்திரிகை நிருபர்களிடம்
பின்வருமாறு கூறினார்: ``கடைசி நிமிடம் வரை நாங்கள் ஒவ்வொரு போராளியையும் சரணடையுமாறு கூறினோம்.
யாரும் கேட்கவில்லை. அந்த அராபியர்கள் சாகும் வரை போராடினர். " குல் அகாவின் மூத்த ஆலோசகர் காலித்
பஷ்துன் கிளிப்பிள்ளை போல அவ்வாறே ஒப்பித்தார்: "எல்லாம் முடிந்துவிட்டது. கடைசிச் சொட்டு இரத்தம் உள்ளவரை
போராடினர். நாங்கள் ஒரு கெடு விதித்தோம். அவர்களைக் காப்பாற்றுவோம் எனக் கூறினோம். ஆனால் அவர்கள்
கேட்கவில்லை. எங்களுக்கு வேறு வழியில்லை."
மில்லரையும் அமெரிக்க இராணுவத்தையும் பொறுத்த மட்டில் எல்லாம் முடிந்துவிட்டது. "அராபியர்கள்"
தாங்கள் விரும்பியதை... தகுதியானதை அடைந்தனர். அமெரிக்கப் படையினர் "ஐ லவ் நியூயோர்க்" பேட்ஜுகளை அணிந்திருந்தனர்.
பேஸ்பால் (Base Ball)
தொப்பிகளை அணிந்திருந்தனர். இவர்கள் பழிவாங்கும் நோக்குடன் செயல்படுவதற்கான
குறிகாட்டலாக இருந்தது... அதைச் செய்தனர்....
உண்மையாகவே என்ன நடந்தது?
பத்திரிகை வாயிலாக வெளிவரும் ஒவ்வொரு செய்திகள் தொடர்பாகவும் கருத்து சொல்வது
சாத்தியமில்லாதது. பத்திரிகைக் கட்டுரைகள் ஏதாவது ஒரு வழியில் அதிகாரிகள் கூற்றையே எதிரொலிக்கின்றன
--போராளிகள் இஸ்லாமிய தீவிரவாதிகள்-- தியாகிகளாக ஆகவேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்கள்.. அதன்விளைவாக
மடிந்தனர். எதையும் யாரும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை அல்லது ஆராயவில்லை. மிக விமர்சன ரீதியான அவதானிப்புக்கு
பின்னர் யோசனையாக அல்லது சந்தேகங்கள் துளைத்தெடுப்பதாய் எதுவும் தோன்றவில்லை. இருப்பினும், இந்த விவரங்களை
நகர்த்துகையில் வேறுபட்ட கதை வெளிப்படுகிறது.
யார் அந்த ஆறுபேர்? அவர்கள் அனைவரும் அல்கொய்தா உறுப்பினர்களா?
மருத்துவமனை பணியாளர்களுள் ஒருவரான மருத்துவர் மூசாவின் கூற்றுப்படி அவர்களனைவரும்
17க்கும் 25க்கும் இடையிலான வயதுடைய இளைஞர்கள். முன்னாள் ஆப்கான் அரசு கவிழ்ந்ததை அடுத்து டிசம்பரில் மருத்துவமனையில்
சிக்கிக் கொண்ட காயம்பட்ட 19 தலிபான் வீரர்களில் மீதியுள்ளவர்கள். மற்றவர்கள் ஓடிவிட்டனர், கொல்லப்பட்டனர்
அல்லது கைது செய்யப்பட்டனர். எஞ்சி உள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் அதிக காயங்கள் பட்டவர்களாக இருந்தனர்.
"அல்கொய்தா", ``சர்வதேச பயங்கரவாதி``,
``அரபு`` என்ற பெயர்கள் ஊடகத்தில் எல்லா அயல்நாட்டு தலிபான் ஆதாரவாளர்களையும் குறிப்பதாக உள்ளது. திட்டவட்டமாக
அவர்கள் எந்த நாட்டவர் என்பதைக் கூற முடியவில்லை. அந்த ஆறுபேர் செளதி அரேபியா, அல்ஜீரியா மற்றும் யேமனில்-
இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் வயதைப் பார்க்கும்போது, எல்லோரும் இல்லாவிட்டாலும் பெரும்பான்மையினர்
அல்கொய்தா தீவிரவாதிகள் அல்லர் என்பது புலனாகிறது. அவர்கள் ஆப்கனிஸ்தானுக்கு வந்த தலிபான் ஆதரவாளர்கள்.
எனவே அவர்கள் கைவிடப்பட்டனர் என்ற உண்மையே, ஒசாமா பின் லேடன் அவர்கள் மீது அக்கறை செலுத்தவில்லை
என்பதைக் குறிகாட்டுகிறது.
ஏன் அவர்கள் பிடித்து வைக்கப்பட்டனர்?
அவர்கள் சரணடையாமல் இருந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது, அமெரிக்க
ஆதரவாளரான குல் அகா புதிதாக கவர்னர் பதவியேற்று இருப்பதும் ஒரு அற்ப காரணம் அல்ல. ஜனவரி-6ல்
நியூயோர்க் டைம்ஸ் நாளேடு குல் அகா ஒரு குண்டர் என்றும் தன் கீழ் பணிபுரியும் சொந்த ராணுவத்தினரை
அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் எதிரிகளை துன்புறுத்துவதாகவும் கூறுகிறது. காந்தஹாருக்குள் பிரவேசிக்குமுன் அவர் "அராபியர்களுக்கும்
பாகிஸ்தானியர்களுக்கும்" எந்தவிதமான கருணையும் காட்டவேண்டாம் என தனது படைகளுக்கு கட்டளையிட்டார். காந்தஹார்
விமான நிலையத்தில் வெளிநாட்டு தலிபான் ஆதரவாளர்களை படுகொலை செய்தபொழுது அவர் வார்த்தை தவறாதவராக
இருந்தார்.
ஆறு தலிபான் ஆதரவாளர்கள் ஒரு ஓரமாக காவலில் வைக்கப்பட்டனர். அவர்களின் இரண்டு
"அராபிய" சகாக்கள் --உண்மையில் சீனாவிலிருந்து
வந்த உய்குர்கள்-- மருத்துவமனை ஊழியர்களால் தந்திரமாகப் பிடிக்கப்பட்டனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க இராணுவ தூண்டுதலில், மருத்துவமனை, கைதிகளுக்கு உணவை நிறுத்திவிட்டது. இதை
செஞ்சிலுவைச் சங்கம் மனித நேயமற்றது எனக் கண்டித்தது. மருத்துவமனை சமையல் துறை மானேஜர் மொகமது ரசுல்
கூறியதாவது "ஒரே ஒரு ரஷிய பிஸ்டல் மற்றும் சில கண்ணி வெடிகள் அவர்கள் கைவசம் இருந்தன. பலர் படுகாயம்
அடைந்திருந்தனர். ஒருவருக்கு காலில்லை, மற்றவர்களுக்கு வயிற்றில் அடிப்பட்டிருந்தது.
திங்களன்று அறுவரும் தாம் சரணடையுமாறு அமெரிக்க படைகள் கூறியதைப் புரிந்து கொண்டனரா
எனத் தெரியவில்லை. குல் அகாவின் பேச்சாளர் அவர்களை ஒலி பெருக்கி மூலம் அழைத்ததாகக் கூறினார்; ஆனால் எந்த
மொழியில் எனக் கூறத் தவறினார். பின்னர் யோசித்துவிட்டு, அவர்களை சரணடையக் கூறி அவர்களுக்கு ஒளிப்பேழை ஒன்று
அராபிய மொழியில் அனுப்பப்பட்டது என்றும் கூறினார்.
சிறைக்கைதிகள் "சாகும் வரை போராடினரா?"
எந்த மட்டத்துக்கு உண்மையாகவே சண்டை நடைபெற்றது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
முதல் தாக்குதல் தோல்வியுற்ற பின், அரபு கைதிகள் இருந்த இடத்தில் அமெரிக்க ஆப்கான் துருப்புகள் தண்ணீரைப்
பாய்ச்சுவதற்கு தீயணைப்பு என்ஜின்களை வரவழைந்தன. அறுவரையும் தண்ணீரில் மின் சக்தியைப் பாய்ச்சி கொன்றுவிடலாம்
என விவாதம் இடம் பெற்றது. அது படுகொலை போல அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால்-- இந்த முயற்சி கை
விடப்பட்டது. எனவே இரண்டாம் முறை தாக்குதல் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
பல பத்திரிகை செய்திகள் அமெரிக்க படை அறுவரையும் உயிரோடு பிடிக்க முயலவில்லை
என்று சந்தேகங்களைக் கிளப்புகின்றன. ெராயட்டர் கட்டுரைப்படி முதலில் இருவர்தான் இறந்தனர் என்று போலீஸ்
அறிக்கை கூறியது. சில நிமிடங்களுக்குப் பின்னர், புதிய நிலையாக, புதிதாக நடைபெற்ற சண்டையில் ஆறுபேரும் இறந்துவிட்டதாக
அறிவிக்கப்பட்டது. "உண்மை சரியாகப் புலப்படவில்லை. நான்கு ஆப்கான் போர் வீரர்கள் கையெறி குண்டுச் சிதறல்களால்
அல்லது துப்பாக்கிக் குண்டுகளால் காயமடைந்தனர் மற்றவர்கள் சிறைக் கைதிகளாக எடுத்துச் செல்லக் கூடிய நிலையில்
இருந்திருக்கவில்லை`` என்று காந்தஹாரில் ஒரு இன்டிப்பன்டன் பத்திரிகையாளர் ஒருவர் கூறினார்.
கொலைக்குப் பிறகு நடந்த காட்சி முன்னுக்குபின் முரணாக உள்ளது. உள்ளூர் ஆப்கான் பத்திரிகையாளர்
ஒருவர் அறையின் உள்ளே சென்று ஒரு வீடியோ எடுத்துள்ளார். இது ஆறுபேர் குண்டுகளால் துளைக்கப்பட்டு தரையில் கிடந்ததைக்
காட்டுகிறது. "சாகும் வரை" போராடும் கைதிகள் மூவரில் இருவர் படுக்கைகளின் அடியில் அலங்கோலமாகக் கிடந்தனர்.
இதில் அமெரிக்காவின் பங்கென்ன?
மேஜர் மில்லர் பத்திரிக்கைகளுக்குக் கூறியதாவது, "ஆலோசனை கூறுவதும் உதவி செய்வதும்தான்
எங்களின் பணி." இருக்கின்ற ஆதாரப்படி இக்கூற்று அப்பட்டமான பொய்யாகும். அமெரிக்க சிறப்புப் படைகள் ஆப்கான்
படைக்கு ஒருவாரமாகத்தான் பயிற்சி அளித்து வந்தன. அமெரிக்க துப்பாக்கி வீரர்கள் களத்தில் இருந்தனர். நியூயோர்க்
டைம்ஸ் செய்தி பின்வருமாறு அறிவித்தது: "சிறப்பு அமெரிக்கப் படைகள் அணியும் ஜாக்கெட்டுகள் மற்றும் காக்கிச்
சீருடைகள் போராட்டம் நடைபெறும்போது நன்றாகத் தெரிந்தன. அசோசியேட் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர்
ஒருவர் குண்டு வீசுவதைப் பார்த்தார்." ரொயட்டர் செய்திப்படி ஒரு அமெரிக்கர் உத்தரவுகளை உரத்த குரலில்
வழங்கிக் கொண்டிருந்தார். இதைவிட முக்கியமானது என்னவென்றால் அமெரிக்கப் படைவீரர்கள் சீருடை இல்லாமல் செயல்பட்டு
வந்தார்கள். இவ்வாறே மருத்துவமனையில் சீருடை இல்லாமலே நிழலாக செயல்பட்டு வந்த ஒரு அமெரிக்கர்
தாக்குதலுக்கிப் பின்னர் நடவடிக்கைகளை இயக்கிக் கொண்டிருந்ததாக நியூயோர்க் டைம்ஸ் கட்டுரை வெளிப்படுத்தியது.
"மாலை 6:15 மணிக்கு ஆயுதங்கள் ஏந்திய காப்பாளர்களை ஏற்றிய பல வேன்கள் மருத்துவ மனைகளை விட்டு வெளியே
சென்றன. அதில் ஒன்றினது வண்டியின் முட்டுத் தாங்கியில் I
love New York என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. சீருடை அணியாத
அமெரிக்கர்கள் எம்-16 துப்பாக்கியை தோளில் தொங்கப்போட்ட வண்ணம் சென்றனர். சடலங்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டன
என்பது தெளிவாகத் தெரியவில்லை.
செப்டம்பர் 11 முதற்கொண்டு சி.ஐ.ஏ தெற்கு ஆப்கானிஸ்தானில் மும்முரமாக வேலை செய்து
கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மையாகும். குல் அகா போன்றோருடன் இது கூட்டாக செயல்பட்டது.
ஆனால் அமெரிக்க ராணுவமும் அவர்களும் ஏன் ஆறு சடலங்களை கொண்டு செல்வதில் அக்கறை கொள்ளவேண்டும்? மேற்கூறிய
நிகழ்ச்சிக்கு காரணம் பின்வருமாறு: காந்தஹார் மருத்துவமனை மோதல் இராணுவ ரீதியாக அபாயகரமானது அல்ல ஆனால்
குல் அகாவிற்கும் அமெரிக்க இராணுவ ஆலோசகர்களுக்கும் அது ஒரு அரசியல் பிரச்சனையாக மாறிவிட்டது.
வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை பின்வருமாறு விளக்கியது: "உள்ளூர் ஆப்கான்கள் அரபு
கைதிகளுக்கு இரக்கம் தெரிவித்தனர். அவர்களுக்கு உணவு நிறுத்தப்பட்டது குறித்து அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உணவு
கொடுப்பது நிறுத்தப்பட்ட பின் மருத்துவர்கள், மற்றவர்கள், மருத்துவமனையை காவல் காக்கும் ஆப்கன் படை வீரர்கள்
ரகசியமாக கைதிகளுக்கு உணவு அளித்து வந்தனர்.
மேலும் தன்னிச்சையான அமெரிக்க இராணுவ தாக்குதலுக்கு அந்த இடத்தில் எதிர்ப்பு உள்ளது.
இந்த அமெரிக்க இராணுவ தாக்குதல் பலரைக் கொன்றுவிட்டது. சென்ற வாரம் அமெரிக்க சிறப்பு படையினர் காந்தஹாருக்கு
100 கி.மீட்டருக்கு வடக்கே உள்ள (Hazarqadam)
என்ற இடத்தில் இரண்டு வளாகங்களை தாக்கிற்று. இதில் 15 பேர் இறந்தனர், 27 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால்
அங்கிருப்பவர்கள் தலிபான்கள் அங்கிருந்து போய்விட்டனர் என்றும், இறந்தவர்கள் அங்குள்ள குடிப்படையினர் என்றும் கூறுகின்றனர்.
மேலும் அவர்கள் அமெரிக்க இராணுவம் பல கைதிகளைக் கொன்றுவிட்டதாகக் குற்றம் சாட்டினர். இரண்டு சடலங்கள் கைகள்
பின்னுக்கு கட்டப்பட்டு குப்பையில் கிடந்தன.
பென்டகனானது அல்கொய்தா "தலைமையிட வசதிவாய்ப்பு" மேல் தாக்குதல் நடத்தியதாகவும்,
சிறப்புப் படைகள் எதிராளிகளிடமிருந்து உள்ளூர் மலைவாழ் மக்கள் மேல் தவறுதலாக தாக்குதல் நடத்தவில்லை என்றும்
கூறிற்று.
புளோரிடாவிலுள்ள அமெரிக்க நடுவண் ஆணையகத்தைச் சேர்ந்த மேஜர் பில் ஹாரிசன்
பேசுகையில், அமெரிக்க இராணுவத்திற்கு மற்ற தகவல் சேகரிக்கும் முறை இருப்பதாக செய்தி ஊடகத்திற்கு உறுதி கூறினார்.
U-2 விமானங்கள்,
செயற்கைகோள் ஆகிய இவையே தகவல் சேகரிக்கும் சாதனங்கள். ஆனால் அவர் கிராமப்புற ஆப்கானிஸ்தானில் இரண்டு
வளாகங்களில் யார் இருந்தனர் என்பதை மேற்கூறிய நுண் தகவல் சாதனங்களால் எப்படி கண்டுபிடிக்க இயலவில்லை என
விளக்கத் தவறினார்.
ஆனால், இந்த "விளக்கங்கள்" வெறும் கண் துடைப்பே ஆகும். அவை சுற்றத்தாரையும்
நண்பரையும், மற்றும் இனக்குழு உறுப்பினரையும் நம்ப வைக்காது. இதைப்போல பல நிகழ்ச்சிகள் அமெரிக்க இராணுவத்திற்கு
மக்கள் எதிர்ப்பை மிகவும் வேகமாக அதிகப்படுத்துகின்றன. இந்த உள்ளடக்கத்தில் காந்தஹார் மருத்துவமனையில் இருந்த
ஆறு கைதிகள் தொடர்பாக மக்கள் கோபத்திற்கு அமெரிக்க இராணுவம் இலக்காக நேரும் என அச்சுறுத்தியது. எனவே
அவர்களை கொல்ல முடிவு எடுக்கப்பட்டது.
காயமடைந்த தலிபான் ஆதரவாளர்கள் அவர்களது சொந்த முடிவுக்கு விடப்பட்டனர். ஏனெனில்
அவர்கள் பிரச்சனையை ஏவுகனைகளாலோ அல்லது பி-52 விமான குண்டு வீச்சு தாக்குதலினாலோ தீர்க்க முடியாது.
எந்த தாக்குதலானாலும் நகர மையத்தில் மக்கள் நடுவில் நடத்தப்படவேண்டும்.
எனவே இராணுவ நடவடிக்கையானது அதை மூடி மறைக்கக்கூடிய ஒரு காரண காரியத்தோடு
கவனமாக எடுக்கப்பட்டது. எனவே இதன் பாகமாக ஒரு வார பயிற்சி பற்றியும் சி.ஐ.ஏ இனதும் அதன் உதவியாளர்களினதும்
பாரிய வெற்றி பற்றியும் குழுமி இருந்த பத்திரிகையாளர்களுக்கு செய்தியாக விடுக்கப்பட்டது......... இப்படியானதொரு
சந்தர்ப்பத்தில் சம்பவங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை முரண்பாட்டுக்கு உள்ளாக்ககூடிய வகையிலான எந்த
தடயங்களும் விட்டுவைக்கப்படவில்லை.
|