World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
: ஐரோப்பா
:
பிரான்ஸ்
Right wing wins solid majority in French legislative election Record abstention reflects popular disaffection பிரெஞ்சு பாராளுமன்ற தேர்தலில் வலதுசாரி உறுதியான பெரும்பான்மையைப் பெற்றது வாக்களிக்க செல்லாமையின் அளவு மக்களின் அதிருப்தியைப் பிரதிபலிக்கிறது By David Walsh வலதுசாரிக் கட்சிகள், பிரதானமாக ஜாக் சிராக்கின் கோலிசவாதிகள் தலைமையிலான ஜனாதிபதித்துவ பெரும்பான்மைக்கான ஐக்கியம் (UMP), ஜூன் 9 அன்று முதலாவது சுற்று பிரெஞ்சு பாராளுமன்றத் தேர்தல்களில் கணிசமான வெற்றியை ஈட்டியுள்ளது. இந்த வாக்குப் பதிவானது, வாக்களிக்க செல்லாமையின் உயர்ந்த அளவையும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்கான ஆதரவில் மேலும் கூடிய சீர்குலைவையும் குறித்து நிற்கிறது. ஞாயிற்றுக் கிழமை (09.06.2002) வாக்குப்பதிவில் 33.3 சதவீதம் யு.எம்.பிக்கும் 4.8 சதவீதம் பிரான்சுவா பேய்ரு இன் பிரெஞ்சு ஜனநாயகத்திற்கான ஐக்கியத்திற்கும் (யு.டி.எப்) உள்பட, பாராளுமன்ற வலதுசாரியினர் மொத்த வாக்குகளில் 43 சதவீதத்தைப் பெற்றனர். அடுத்த ஞாயிறு (16.06.2002) அன்று இரண்டாவது சுற்றில் 370-419 க்கு இடையிலான இடங்களுடனும் யு.டி.எப் 12-27 வரையிலான இடங்களுடனும் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. ஆகையால் சிராக்கின் யு.எம்.பி வலதுசாரிக் கட்சிகளின் கூட்டணி 577 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஞ்சு தேர்தல் முறையின் கீழ், ஐம்பது சதவீதத்திற்கும் கீழான வாக்குகளையும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மொத்தம் பதிவான வாக்குகளில் 12.5 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை (நேற்றைய வாக்குகளில், சராசரியாக உண்மையான வாக்குகளில் 20 சதவீதம்) பெறும் பாராளுமன்ற வேட்பாளர்கள், முடிவைத் தீர்மானிக்கும் இரண்டாவது சுற்றுக்குள் நுழைவர். இது 16ம் தேதி நடைபெறவிருக்கிறது. கூட்டரசாங்கத்தின் முந்தைய "பன்மை இடதுகளில்" பெரும்பான்மைக் கட்சியான சோசலிசக் கட்சி, முதலாவது சுற்று வாக்களிப்பில், 24.1 சதவீதத்தை (1997ல் முதலாவது சுற்றில் 23.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில்) பராமரித்தது, ஆனால் அது குறைந்த பட்சம் பாராளுமன்றத்தில் அதன் 248 இடங்களில் மூன்றில் ஒரு பகுதியை இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் இரண்டாவது சுற்றில் அதன் கூட்டணி பங்காளர்களின் வாக்காளர்களிடமிருந்து அதற்கு மிகக் குறைந்த வாக்குகள் பெறவிருக்கிறது மற்றும் ஏனென்றால் வலதுசாரியினர் குறிப்பிட்ட மட்டத்துக்கு தங்களை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இடைக்கால கட்சித் தலைவர் பிரான்சுவா ஒலாண்ட் இன் கீழ், சோசலிசக் கட்சி ஊக்கமில்லாத, குறிக்கோள் இல்லாத பிரச்சாரத்தை செய்தது, அது பொதுமக்கள் மத்தியில் சிறிதளவு அக்கறையையே உண்டு பண்ணியது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி 1997ல் அதன் முதலாவது சுற்றில் பெற்ற 9.8 சதவீதத்துடன் (2.5 மில்லியன்) ஒப்பிடுகையில் 4.8 சதவீத வாக்குகளைப் பெற்று (1.2 மில்லியன்) அதன் வரலாற்று வீழ்ச்சியைத் தொடர்ந்தது. கட்சித் தலைவர் றொபேர்ட் ஹியூ, யு.எம்.பி வேட்பாளருடன் முடிவு காணும் போட்டியை பாரிசின் வடக்கு புறநகர்ப் பகுதியில் அவரது மாவட்டத்தில் எதிர் கொண்டிருக்கிறார், மற்றும் ஏனைய பொறுப்பில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் (கடந்த பாராளுமன்றத்தில் இருந்த 35 பேர்கள்) யு.எம்.பி வேட்பாளருடன் தோல்வி சாத்தியமானதை அல்லது தோல்வி ஏற்படக் கூடியதை எதிர்கொண்டிருக்கின்றனர். பிரெஞ்சு ஸ்ராலினிஸ்டுகள் 8க்கும் 17க்கும் இடையில் வெற்றிபெறுவதை எதிர்நோக்கி இருக்கின்றனர். அதற்கு ஆதரவு உச்ச நிலையில் இருந்தபோது, 1967 பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி முதல் சுற்றில் 22.5 சதவீதத்தை வென்றது, அல்லது கிட்டத்தட்ட அதன் தற்போதைய வாக்கின் பங்கைப் போல் ஐந்து மடங்கு வாக்குகளை வென்றிருந்தது. லிபரேசன் பத்திரிகை: "1999ன் பரிதாபகரமான ஐரோப்பிய தேர்தல் முடிவுகள், 2002ல் நகராட்சி அழிவு மற்றும் ஏழுவாரங்களுக்கு முன்னரான ஜனாதிபதி பேரிடர் இவற்றுக்குப் பின்னர், கட்சியின் நிதிநிலையை வற்றச்செய்துவிட்டது, கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் அடிமட்டத்தை அடையவில்லை." எனக் குறிப்பிட்டது. லு பிகாரோ பத்திரிகை: "கம்யூனிஸ்ட் கட்சியானது பிரெஞ்சு மாநகர்களில் மற்றும் வட்டாரங்களில் பெரும்பான்மைப் பகுதிகளில் ஏதாவது காலூன்றியதற்கான இடமிருந்தால் அதனை இழக்கக் கூடும்." என எழுதியது தசாப்தகாலங்களாக பிரெஞ்சு முதலாளித்துவத்துக்கு தொழிலாள வர்க்கத்தைக் கீழ்ப்படுத்தும் பிரதான கருவிகளுள் ஒன்றாக இருந்த பிரெஞ்சு ஸ்ராலினிசத்தின் பொறிவு, பாரதுாரமான விளைபயன்களைக் கொண்டுள்ளது. ஜோன் மேரி லு பென்னின் அதிவலதுசாரி தேசிய முன்னணி (NF) நல்வாய்ப்புக்கள் விலகி விட்டதை உணர்ந்தது. ஏப்ரலில் முதலாவது சுற்று ஜனாதிபதி தேர்தலில் லுபென் 16 சதவீத வாக்குகளைப் பெற்ற பொழுது, தடைஉடைத்து ஊடுருவிய பின்னர், பாராளுமன்ற வாக்குகளில் முதல் சுற்றில் கணிசமான விளைவை அவரது கட்சி சாதிக்கும் என, ஒருவேளை அதன் வேட்பாளர்களில் 200 பேர்கள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிச் செல்வார்கள் என கணிக்கப்பட்டது. அந்த நிகழ்வில், தேசிய முன்னணி 11.3 சதவீதத்தை மட்டுமே (1997ல் முதலாவது சுற்றில் பெற்ற 15.3 சதவீதத்திற்கு எதிராக) பெற்றது மற்றும் 1997ல் 134 பேராக இருந்த நிலைக்கு எதிராக, அதன் வேட்பாளர்கள் 37 பேர்கள் மட்டுமே முடிவைத் தீர்மானிக்கும் ஜூன் 16 க்கு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதி இடதுகள் என அழைக்கப்படுகின்ற கட்சிகளில் இரண்டான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR) மற்றும் Lutte Ouvrière (எல்.ஒ) என்றுமில்லாத வகையில் அதிகமான வேட்பாளர்களை நிறுத்தி இருப்பினும், ஏப்ரலில் ஜனாதிபதி தேர்தலில் முதலாவது சுற்றில் அவர்கள் பெற்ற முடிவுகளில் இருந்து அவர்களின் மொத்த வாக்குகள் வீழ்ச்சியுற்றதைக் கண்டன. எல்.சி.ஆர் அதன் வேட்பாளர்களுக்காக 320,000 வாக்குகளைப் (1.3 சதவீதம்) பெற்றன, அதேவேளை எல்.ஒ 304,000 (1.2 சதவீதம்) பெற்றது. பியர் லம்பேர்ட்டின் கட்சியான தொழிலாளர் கட்சி (PT) 81,600 வாக்குகளைப் பெற்றது. தங்கள் பாணியில் ட்ரொட்ஸ்கிச கட்சிகள் என்று அறிவித்துக் கொள்ளும் இந்த மூன்று கட்சிகள் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் பெற்ற 10.4 சதவீதத்திற்கு எதிராக, தற்போது 2.8 சதவீத வாக்கை சேகரித்தன. 1997 பாராளுமன்றத் தேர்தலில் முதல் சுற்றில், "அதிவலதுசாரி" மொத்த வாக்குகளில் 2.6 சதவீதத்தைப் பெற்றது. உண்மையான வாக்குகளின் அர்த்தத்தில், அரசாங்க வலது 1997 ஐ விடவும் இருபது லட்சம் வாக்குகளை ஈட்டியது, அதன் இலாபம் அதிவலதுகள் மற்றும் உத்தியோக ரீதியிலான இடதுகளின் இழப்பில் வந்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், பன்மை இடதுகள் சமூக நிலைமைகளை முன்னேற்றுவர் என்ற நம்பிக்கையில் லியோனல் ஜொஸ்பன் மற்றும் அவரது கூட்டணி பங்காளர்கள் பக்கம் திரும்பிய நடுத்தரவர்க்க வாக்காளர்கள், இந்தத் தேர்தலில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சட்டம் ஒழுங்குக்கு உறுதி அளித்த சிராக் முகாமிற்கு வாக்களித்து தங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். வாக்களிக்காமை நிலைச்சான்று சுமார் 35 சதவீத மக்கள் தொகையினர் வாக்களிக்காது விட்டனர் -வாக்களிக்கத் தவறியவர்கள் பெரிய தனித்த அரசியல் அணியாக ஆயினர். இந்த பெரும்பான்மையான வாக்களிக்காமை வீதமானது ஜூன் 9-ன் மிகவும் அரசியல் ரீதியான, முகத்தில் அறைந்தாற்போன்ற அம்சங்களுள் ஒன்றாகும். ஒவ்வொரு திணுசுகளிலும் மாற்று அரசியலை வழங்கிக் கொண்டிருப்பதாக கூறும் வேட்பாளர்கள் எண்ணிக்கையின் மட்டம் உயர்ததாக இருப்பினும், கிட்டத்தட்ட 39 மில்லியன் பிரெஞ்சு வாக்காளர்களில் 14 மில்லியன் பேர் வாக்களிப்பிலிருந்து விலகி இருந்தனர். பாராளுமன்றத்தில் அபரிமிதமான பெரும்பான்மையைப் பெறும் சிராக்கின் அணி தேர்வு, தகுதி பெற்ற வாக்காளர்களில் கால் பங்கிற்கும் குறைவானவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. கருத்துக் கணிப்பு செய்பவர்களின்படி வாக்களிக்காமையானது திட்டவட்டமான வர்க்கத் தன்மையைக் கொண்டிருக்கிறது. 53 சதவீதம் பல்கலைக் கழக மாணவர்கள், 51 சதவீதம் வேலையில்லாதோர், 45 சதவீத தொழிலாளர்கள் மற்றும் "இடைப்பட்ட தொழில்களில்" உள்ளவர்களில் 43 சதவீதத்தினருடன் சேர்த்து, 18லிருந்து 24வரையிலான வயதுடைய ஐம்பத்தெட்டு சதவீதத்தினர் மற்றும் 25 லிருந்து 34 வயது வரையிலான ஐம்பத்தி நான்கு சதவீதத்தினர் வாக்களிக்காதிருந்தனர். மற்றொரு புறத்தில், 21 சதவீத கைவினைஞர்கள் மற்றும் கடைக்காரர்கள், 25 சதவீத சுய தொழில் உடையவர்கள், 20 சதவீத ஓய்வு பெற்றோர் (இளைப்பாறியோர்), 26 சதவீத விவசாயிகள் மற்றும் liberal professions மற்றும் நிர்வாகத்தினரில் 33 சதவீதத்தினர் வாக்களிப்பதிலிருந்து விலகி இருந்தனர். வாக்களிக்காமை வீதம், மக்கள் தொகையினரின் பரந்த தட்டினரால் உணரப்படும் அரசியல் ஈடுபாடின்மை மற்றும் அந்நியப்படலின் ஆழமான மட்டத்தையே எதிரொலிக்கிறது. இந்தத் தேர்தலில் இரண்டு பதிவுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற உண்மை குறிப்பிடத்தக்கதாகும்: அதிகமான எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் மற்றும் அதிகமான வீதத்தில் வாக்களிக்க செல்லாமை ஆகும். லு பிகாரோ குறிப்பிட்டது: "இந்த இரு புள்ளி விவரங்களின் மாறுபடல்கள், பெரும்பாலும் முதல் சுற்றின் உடலமைப்பியலை கணிதரீதியாக வழங்குகிறது." ஆனல் இந்த உடலமைப்பியல் என்பது என்ன? பிரெஞ்சு மக்கள் பத்து நாட்களாக பிரச்சார சாதனங்களால் -துண்டறிக்கைகள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களால்- 8,400 வேட்பாளர்களுக்கு மேலாக, சராசரியாக ஒரு மாவட்டத்திற்கு 15 வேட்பாளர்கள் வீதம் கொண்டு பிரச்சார சாதனங்களால் மூழ்கடிக்கப்பட்டனர். இருந்தும் வேட்பாளர்களின் பெருக்கம் சம்பந்தமாக அரசியல் அக்கறையின் மட்டம் தலைகீழ்விகிதத்தில் குறைவாக இருக்கிறது. வலது, இடது மற்றும் "அதி இடது" களின் வேட்பாளர்களின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு குறைவான கூட்டமே வந்தது: பரந்த மக்களின் தினந்தோறுமான நடவடிக்கைகள், அல்லது ஒவ்வொருநாளும் நடைபெறும் உரையாடல்களில் அரிதாகவே தேர்தலானது உணரப்பட்டது. பிரெஞ்சு தேர்தலில் "அதி இடது" என்று அழைக்கப்படுகின்றது உட்பட அரசியல் அணிசேர்க்கைகளில் அல்லது வேட்பாளர்களில் ஒருவர் கூட, பரந்த மக்களின் நலன்கள் மற்றும் அடிப்படை சமூகத் தேவைகள் -தரமான வேலைகள், சிறந்த வாழக்கைத் தரங்கள் மற்றும் தொழிலாளர்கள் நிலையை முன்னேற்றுதல்- தொடர்பான வேலைத் திட்டத்தை முன்வைக்கவில்லை. சிறப்பாக ஆளும் செல்வந்தத் தட்டை அல்லது நடுத்தர வர்க்கத்தின் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகள், பிரான்சில் வளர்ந்துவரும் சமூக சமத்துவமின்மை: தற்காலிக மற்றும் பகுதி நேர வேலை, பிழைப்பு சாதனங்களை அரிதாகப் பெறும் குடும்பங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, நீடித்த வேலையின்மை, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், தொழிலாள வர்க்க பகுதிகளில் வளர்ந்து வரும் துன்பம் பற்றி கவலையற்றதாகத் தங்களைக் காட்டிக் கொள்கின்றனர். லு மொண்ட் -இல் உள்ள விமர்சகர் ஒருவர், "இந்த வசந்த காலத்தில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற இரட்டை வாக்களிப்பின் மிகவும் தொல்லைப்படுத்தும் அம்சம்" "பிரெஞ்சு மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் முழுதும்" "தற்போதைய அரசியல் பிரதிநிதித்துவ முறை" மற்றும் "அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலைத் திட்டங்கள்" இரண்டிலுமிருந்து விலக்கப்பட்டதை உணர்ந்தனர் என எழுதினார். செய்தித்தாள் தொடர்ந்தது: ஜனாதிபதி தேர்தலின்போது அவர்கள் வாக்களித்ததன் மூலம் வெளிப்படுத்தினர், அவர்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமானோர், வேட்பாளர்களை ஒருவழியிலோ அல்லது மற்றைய அரசாங்க வேட்பாளர்களை வேறுவழியிலோ கண்டித்துக் கொண்டு வெளிப்படுத்தினர், அவர்கள் இதனை ஜூன்9 அன்று பெரும் திரளான எண்ணிக்கையில் வாக்களிப்பில் இருந்து விலகி இருந்ததன் மூலம் திரும்பச் செய்தனர்." மக்களின் ஆழமான மற்றும் பரந்த அளவிலான அந்நியப்படலும் வலதுசாரிகளின் பெருமளவு வெற்றியும், அரசாங்கத்திலுள்ள "இடதுகள்" மீது -அனைத்திற்கும் மேலாக, சோசலிசக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மீது குற்றச்சாட்டைக் கொண்டிருக்கிறது. 1990களில் பிரதமர் அலன் யூப்பே அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்ட எழுச்சியானது அவரது வலதுசாரி ஆட்சியைக் கீழிறக்கியது இறுதியில் லியோனல் ஜொஸ்பனின் சோசலிஸ்டுகள் தலைமையிலான கூட்டரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. ஜொஸ்பன் பிரெஞ்சு சமுதாயத்தின் மிகவும் அழுத்துகின்ற துன்பங்களுக்கு பதில் கொடுப்பார் என என்னென்ன நம்பிக்கைகள் இருந்தனவோ அவை நீண்டகாலத்திற்கு முன்பே முடிந்து விட்டன. சோசலிசக் கட்சியின் கூட்டரசாங்கம் பெரும் முதலாளிகளின் நலன்களின் நிர்வாகியைத் தவிர ஒன்றுமில்லை என தம்மை நிரூபித்துக் கொண்டது. இலாபத்திற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரான்சை ஒருங்கிணைப்பதன் மூலம் இலாபத்தைப் பெறுவதற்கு வேண்டி புதிய சந்தைகளை, வளங்களை மற்றும் நெறிமுறைகளைக் காண்பதற்கு, பிரெஞ்சு மூலதனத்தின் திட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தைக் கீழ்ப்படுத்துவதை பிரதான பணியாக அது பார்த்தது. பன்மை இடதுகளின் கூட்டரசாங்கத்திற்கு காபினெட் அமைச்சர்களை அளித்த மற்றும் ஜொஸ்பன் பின்னால் பின்பற்றிச் சென்ற ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி, இரு "இடது பங்காளிகளுக்கும்" இடையில் இன்னும் வேறுபாடு இருந்தது என்று பிரமைகளை வைத்திருந்த பலரால் கைவிடப்படுவதற்கான தகுதியைக் கொண்டிருக்கிறது. "ஏப்பிரல்-மே நாட்கள்" அதி வலதுசாரிகளுக்கு எதிராக அவர்களை எதிர்த்து பல பத்துலட்சக் கணக்கான மக்கள் பாரிஸ் மற்றும் பல பிரெஞ்சு மாநகரங்களின் வீதிகளை நிறைத்தபொழுது, ஏப்பிரல் இறுதி மற்றும் மே1 நாட்களின் "அணிதிரளல்", சிராக்கின் தேர்தல் வெற்றியாகவும் பெரிய அளவில் வாக்களிக்காமையாகவும் மாறியது பற்றி பலவிதமான விமர்சகர்கள் வியப்பை வெளிப்படுத்தினர். லு மொண்ட் -இல் வந்த கட்டுரை அவதானித்தது: "புதுமையான தேர்தல், புதுமையான ஞாயிறு, ஜூனின் பிரான்ஸ் மே-இனது அல்லாததாய் இருப்பினும்..... ஏழுவாரங்கள் மட்டும்தான், மற்றும் இதோ பிரான்ஸ் இருக்கிறது; என்றுமில்லா வகையில் அதிகமான வாக்களிக்காதோர், ஒரு ஐயம் பற்றிக்கொள்கின்றது: ஏப்பிரல்-மே நாட்களினது என்ன எஞ்சி இருக்கின்றன?" இது குட்டிமுதலாளித்துவ குருட்டுத்தனம் ஆகும். இந்நிகழ்வுப்போக்கு அந்த அளவு புதிரானது அல்ல. ஏப்பிரல் 21 ஜனாதிபதி வாக்கு அரசியல் நிறுவனத்திற்கு -இடது மற்றும் வலது இருவருக்கும் எதிரான எதிர்ப்பின் பெரும் மூலகங்களைக் கொண்டிருந்தது. சுமார் 16 சதவீதம் லு பென்னுக்கு வாக்களித்தனர், 10 சதவீதம் அதி இடதுகளுக்கு வாக்களித்தனர் மற்றும் 30 சதவீதத்தினர் வாக்களிக்க வராது விட்டனர். இவ்வாறு, பதிவுசெய்த வாக்காளர்களில் அரைப்பகுதியினர் இடது மற்றும் வலது அரசாங்க கட்சிகளை நிராகரித்தனர். ஜனாதிபதி தேர்தலில் ஜொஸ்பனை விலக்கிய மற்றும் உத்தியோகரீதியான வலது வேட்பாளர் சிராக்கிற்கும் அதிவலது நவீன பாசிஸ்டுகளின் வேட்பாளர் லு பென்னுக்கும் இடையில் ஜனாதிபதி தீர்மானிக்கும் போட்டியை எதிர்பாரத அளவில் விளைவித்த, ஏப்பிரல் 21 வாக்களிப்புக்குப் பிறகு உடனடியாக, இனவாத, புலம்பெயர்ந்தோர் விரோத தேசிய முன்னணி தலைவர் இரண்டாவது சுற்றில் வந்திருப்பது தொடர்பாக இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் வெடித்தன. இந்த அணிதிரளல் கட்டுப்பாட்டை விட்டு போய்விடும் மற்றும் நிலவுகின்ற அரசியல் கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அஞ்சி, அரசியல் மற்றும் செய்தி ஊடக நிறுவனங்கள், லுபென் எதிர்ப்பு இயக்கத்தை சிராக்கிற்கு வாக்களிப்பதற்கானதாக வழிப்படுத்த, பிரதானமாக இடது மற்றும் "அதி இடதுகள்" கட்சிகளின் வழியாக செயல்பட்டு வேலை செய்தன. ஊழலில் சிக்கி பதவியை விட்டு அகற்றினால் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் - தற்போதைய ஜனாதிபதி "குடியரசின் மதிப்புக்களை" காப்பவர் மற்றும் அதனைப் பொதிந்திருப்பவர் என காட்டப்பட்டார். லு மொண்ட் பந்தி எழுத்தாளர்கள், பரந்த மே1 ஆர்ப்பாட்டங்களில் மேலாளுமை செய்த முழக்கம் "சிராக்கிற்கு வாக்களி" என்று இருந்ததை மறந்துவிடுவதாய்க் காணப்படுகின்றனர். ஜனாதிபதி பிரச்சாரத்தின் இரண்டாவது சுற்றில், வலது சாரி, சட்டம் ஒழுங்கு பிரச்சாரத்தை நடத்தும் பிற்போக்கு பிழைப்புவாத அரசியல்வாதியான சிராக்கின் சார்பாக இரண்டு வார காலமாக தங்களைத் தாங்களே ஆர்வத்துடன் திணித்துக் கொண்டு, சோசலிசக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் பாராளுமன்றத் தேர்தல்களில் வாக்களிக்கும் வாக்காளர்கள் பக்கம் திரும்பி கோலிச தலைவருக்கு எதிராக தங்களது ஆதரவை அளிக்குமாறு கேட்டனர். ஆனால் சிராக்கிற்கான அவர்களது பிரச்சாரம் திட்டவட்டமான விளைபயன்களை உண்டு பண்ணியது. ஒரு புறம், அது -ஜனாதிபதி தேர்தலில் முதல் சுற்றில்- 19 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த- தற்போதுள்ள ஜனாதிபதியை- பொதுமக்களின் சில குறிப்பிட்ட உறுப்பினர்களின் கண்முன்னால் - புனரமைத்தது அல்லது பகுதியாகவோ புனரமைத்து -அவர்களின் கட்சியின்படி வாக்களித்தனர். மற்றொருபுறத்தில், சிராக்கிற்குப் பின்னால் ஒன்று சேர்ந்து வந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சிகள் ஆகியவற்றின் முழு ஒளிக்கற்றை பலரின் குரோதம் மற்றும் சிடுசிடுப்பை ஆழப்படுத்தி உள்ளது. நிறுவனமானது மீண்டும் ஒருமுறை அவர்கள் மீது விரும்பாத செயலைச் செய்வதற்கு கூடி இருந்தது மற்றும் தங்களின் கழுத்தை அறுக்க சிராக்கை நிர்பந்தித்துக் கொண்டிருந்தது என்று அவர்கள், சரியாகவே, உணர்ந்தனர். அவர்களது பதில் ஜூன்9 அன்று வீட்டில் இருப்பதாக இருந்தது. "அதி இடதுகள்" "அதி இடது" என்று அழைக்கப்படுகிற கட்சிகள் தற்போதைய அரசியல் முட்டுச்சந்துக்கு பிரதான பொறுப்பை பகிர்ந்து கொள்கின்றன. சிராக் ஆதரவு முகாமில் சேர்ந்த எல்.சி.ஆர், வாயடிவாத ரீதியாக அது சிராக்கிற்காக பிரச்சாரம் செய்யவில்லை, மாறாக "லு பென்னுக்கு எதிராக" மட்டுமே பிரச்சாரம் செய்ததாகக் கூறியது. ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றுக்கு முன்னால் அதன் ஜனாதிபதி வேட்பாளர் ஒலிவியே பெசன்ஸநோ, தான் சிராக்கிற்கு வாக்களித்ததாக பகிரங்கமாக அறிவித்தார். Lutte Ouvrière முதலில் வாக்களிக்காமையை நிராகரித்தது, பின்னர் தனிநபர் வாக்களிக்காமைக்கு அழைப்பு விடுத்தது, இறுதியில் காலி அல்லது பழுதான வாக்குச்சீட்டிற்கு அழைப்பு விடுத்தது. அவர்களின் பதில் சாத்வீகமானதாக, குற்றத்தை ஒப்புக்கொள்வதாக மற்றும் பாதுகாப்பதாக இருந்தது. எல்.ஓ ஆனது சிராக்கிற்கு வாக்களிக்க வெளிப்படையாக வேண்டுகோள் விடுக்காத வரைக்கும், அவ்வியக்கமானது செய்தி ஊடகம் மற்றும் "பன்மை இடது" களுக்குள்ளே உள்ள கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏனைய சக்திகளிடமிருந்து தாக்குதலுக்கு ஆளானது. இந்த எதிர்ப்பினால் அச்சுறுத்தப்பட்ட Lutte Ouvrière பின்வாங்கியது. மேதினத்தன்று, இலட்சக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றக் கிடைத்த சந்தர்ப்பத்தில், எல்.ஓ துண்டறிக்கைகளை விநியோகிக்க எந்தவிதமான அக்கறையும் கூட எடுக்கவில்லை அல்லது சிராக்கை ஆதரிப்பதற்கு மாற்று மூலோபாயத்தை முன்னெடுக்கவில்லை. என்ன செய்யப்படுகிறது என்பதைவிட சில சமயங்களில் என்ன செய்யாமலிருக்கப்படுகிறது என்பது முக்கியமானதாக இருக்கிறது. ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என அழைக்கப்படும் எல்.சி.ஆர், எல்.ஓ மற்றும் பி.டி ஆகியன தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையைச் சொல்ல அழைக்கப்பட்டன: சிராக் மற்றும் லு பென் இவர்களுக்கு இடையிலான தேர்வு என்பது ஒரு தேர்வே அல்ல, மாறாக சக்திமிக்க வகையிலான உழைக்கும் மக்களின் வாக்குரிமை பறிப்பே ஆகும். ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றை செயலூக்கத்துடன், ஆக்ரோஷத்துடன் புறக்கணிப்பது நாளின் நடப்பாக இருந்தது. உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் இம்மூன்று அமைப்புகளுக்கும் விடுத்த பகிரங்கக் கடிதத்தில் (பார்க்க "பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலை தொழிலாள வர்க்கம் புறக்கணிப்பதற்காக சிராக்கையும் லு பென்னையும் நிராகரி! Lutte Ouvrière, Ligue Communiste Révolutionnaire, and Parti des Travailleurs ஆகியோருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்") குறிப்பிட்ட நடவடிக்கைக்கான வழிமுறையை முன்மொழிந்தன. உ.சோ.வ.த தொழிலாள வர்க்கம் புறக்கணிப்பதற்கான செயலூக்கமான பிரச்சாரமானது, நிறுவனத்தின் கட்சிகளுக்கு ஒரு மாற்றீட்டைக் காணவிரும்பும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரை கல்வியூட்டவும் அரசியல் திசைவழிப்படுத்தவும் சக்தி மிக்க வகையில் பங்களிப்பு செய்யும் என விவாதித்தது. புறக்கணிப்பானது முதலாளித்துவ நிறுவனத்திலிருந்து, அதன் ஊடகத்திலிருந்து மற்றும் அதன் அரசியல்வாதிகளில் இருந்து சுதந்திரமான நிலைப்பாட்டை தொழிலாள வர்க்கம் தனதாக்கிக் கொள்வது தேவையானது மற்றும் அது சாத்தியமானது என்பதை எடுத்துக்காட்டி இருக்கும். "இடதோ" அல்லது வலதோ எந்த முதலாளித்துவ பகுதி இறுதியில் அடுத்த அரசாங்கத்தை அமைத்தாலும், அது எதிர்கொண்டாக வேண்டிய உக்கிரப்படுத்தப்பட்ட தாக்குதல்களுக்காக அது தொழிலாள வர்க்கத்தை பலப்படுத்தி இருக்கும். தொழிலாள வர்க்கத்தின் உண்மையான சுயாதீனமான கட்சியின் அபிவிருத்தியை நோக்கிய வழியை சுட்டிக்காட்டி இருக்கும். மற்றும் அது ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் வரலாற்று மற்றும் அரசியல் வேர்களின் மீது தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் தெளிவூட்ட உதவி புரிந்திருக்கும், மற்றும் போராட்டத்தின் உண்மையான சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தில் அக்கறையைத் தூண்டி இருக்கும். அத்தகைய பிரச்சாரத்தை மேம்படுத்தல் எல்.ஓ, எல்.சி.ஆர் மற்றும் பி.டி ஆகியவற்றின் ஆற்றலில் இருந்தது. அவர்கள் கிட்டத்தட்ட முப்பது லட்சம் வாக்குகள் கொண்ட, உத்தியோகபூர்வமான இடது மற்றும் வலது ஆகிய இரண்டிற்கும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் இணைந்த உரிமைக் கட்டளையைப் பெற்றிருந்தனர். தங்களை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்ளும் கட்சிகளுக்கான எதிர்பாராத வாக்கு, பெரும் திரளானோரின் வாக்களிக்காமை, தொழிலாள வர்க்க புறக்கணிப்பிற்கான ஆதரவின் சக்திமிக்க களஞ்சியத்தை குறிகாட்டுகிறது. அத்தகைய பிரச்சாரம் எந்த அளவு பெரிதாக பதிலை வெற்றிகொள்ளும் என்பது அதற்கான போராட்டப் போக்கில்தான் தீர்மானிக்கப்பட முடியும். ஆனால் உடனடி பதில் என்னவாக இருந்தாலும், அது தொழிலாள வர்க்கம் ஒட்டு மொத்தமாக அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் சாதகதான அடி எடுப்பாக இருந்திருக்கும். இம் மூன்று அமைப்புக்களும் இந்த வேண்டுகோளை அலட்சியம் செய்தன அல்லது நிராகரித்தன. இதுவரை அவர்களின் பிரதிநிதிகள் புறக்கணிப்பு பற்றிய பிரச்சினையை நேரடியாக குறிப்பிட்டவாறாக, அவர்கள் அத்தகைய நடவடிக்கைப் போக்கிற்கு "சக்திகளின் உறவுகள்" சாதகமாக இல்லை என்ற அடிப்படையில் நிராகரித்தனர். இடைநிலைவாதப் போக்குகள் எப்பொழுதும் செய்வதுபோல, சோசலிசக் கட்சியின் சொந்த நடவடிக்கை "இந்த உறவுகளின்" பகுதி என்பதை, மற்றும் நனவாகவும் படிமுறை ரீதியாகவும் வழிநடத்தப்பட்டால், அதனை மாற்ற முடியும் என்பதை அவர்கள் மறந்து விட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக, எல்.ஓ, எல்.சி.ஆர் மற்றும் பி.டி. ஆகியன புறக்கணிப்பிற்கான அழைப்பை நிராகரித்தன ஏனென்றால் அத்தகைய நடவடிக்கைப் போக்கிற்காக போராடல் அவர்களை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோசலிசக் கட்சி அதிகாரத்துவங்களுடன், அதேபோல அவர்கள் தசாப்பதங்களாக நெருக்கமான உறவுகளை வைத்திருக்கும் பல்வேறு நடுத்தர வர்க்க எதிர்ப்பு இயக்கங்களின் தலைமைகளுடனும் மோதலுக்கு கொண்டுவரும். இது அவர்கள் செய்யவிரும்பாதது மற்றும் அவ்வாறு செய்ய முடியாதது ஆக இருந்தன. தலைமையின் வெற்றிடம் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்ததாக ஒரு சமயம் கூறிக் கொண்ட அல்லது இன்னும் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக் கொள்ளும் அனைத்து அமைப்புக்களின் தோல்வியானது, வலதுசாரி கோலிச சக்திகளுக்காக அறுதிப் பெரும்பான்மையை உருவாக்கியுள்ளன. தலைமைக்கான இந்த வெற்றிடம் சூழ்நிலைகளையும் கூட உண்டுபண்ணியுள்ளது, அதில் அதிவலதுசாரி தேசிய முன்னணியின் போலித்தனமான-ஜனரஞ்சக சொல்அலங்காரப் பேச்சுக்கள் மிகவும் வெறுப்புற்ற மற்றும் ஒடுக்கப்பட்டோர் மத்தியில் செவிமடுப்பைத் தொடர்ந்து கண்டுகொள்ளும். சிராக் தலைமையிலான, பிரதமர் ஜூன் பியர் ரஃபாரன், உள்விவகார அமைச்சர் நிக்கோலா சர்கோசி மற்றும் நிதி அமைச்சர் பிரான்சிஸ் மெர் ஆகியோர் இப்பொழுது வேலை செய்வர். பிரெஞ்சு முதலாளித்துவத்தின் நிலைப்பாடு அதனைக் கோருகிறது. ஐரோப்பாவிற்குள் தங்களின் போட்டியாளர்களுக்கு அக்கறையான எதிர்ப்பை மேம்படுத்துதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தணியாத வேட்கையின் அக்கறையுடன் போட்டியிடுவதற்கும், பிரெஞ்சு ஆளும் செல்வந்தத் தட்டு அதன் "சொந்த" உழைக்கும் மக்களிடமிருந்து பெருமளவிலான தியாகங்களை கட்டாயமாக வலியுறுத்திச் செய்விக்கிறது. பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கமானது, அது திணிக்கப்படுவதைப் பார்க்க விரும்பும் வேலைத் திட்டத்தைப்பற்றி முயற்சி செய்து விளக்குகுவதில், அரசியல் காரணங்களுக்காக, ஏதோ தன்னடக்கமாக இருந்து வருகின்றது. பிரிட்டனின் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையில் ஜூன் 6-ல் இடம்பெற்ற கட்டுரையானது அந்த அளவு எச்சரிக்கையாக இல்லை. வரவிருக்கின்ற யு.எம்.பி அரசாங்கமானது, அடுத்தடுத்து வந்த வலதுகளின் பிரெஞ்சு அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தத் தவறிய பொருளாதார சீர்திருத்தங்களை .........மேலதிகமான வேலைவாய்ப்புக்களை குறைப்பதன் மூலம், இளைஞர் வேலைவாய்ப்பு மீதான விதிமுறைகளை தளர்த்தல் மூலம் மற்றும் குறிப்பாக சிறிய தொழில்களுக்கு வாரத்திற்கு 35 மணிநேர வேலையின் பாதிப்புக்களை நிவர்த்தி செய்ய மிகைநேர வேலைக்கான பெரிய அளவில் நெகிழ்வுத்தன்மையை அனுமதித்தல் மூலம் முதலீட்டு நம்பிக்கையை மறுபடியும் உண்டாக்குவதில்......... (நிதி அமைச்சர் மெர்) நம்பும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வரலாற்று சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கும்" என்று அது கருத்துரைத்தது. "தனியார்மயமாக்கல் -மனக்கிளர்ச்சியைத் தூண்டி விடுகிற வார்த்தை- பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனால் வரும் மாதங்களில் அரசு சொத்துக்களை விற்பதற்கான திட்டங்கள் விருப்பத்தின் முக்கியமான சமிக்கையாக ஆகப்போகிறது.... நீங்கள் போகும்பொழுது பணம்பெற கட்டணம் செலுத்துங்கள் என்ற அரசு நடத்தும் ஓய்வூதியங்கள் பங்களிப்புக் காலத்தை நீட்டிக்காமல் மற்றும் ஓய்வு பெறும் (இளைப்பாறும்) வயதை 60க்கு அப்பால் உயர்த்தாமல் தாக்குப் பிடிக்க முடியாதிருக்கிறது. இருந்தும் எந்த மாற்றமும் ஏற்படுத்தும் முன்னர், அரசாங்கமானது பொதுத்துறை ஊழியர்களுக்கு தாராள ஓய்வூதிய விதிமுறைகளை முதலில் கவனிக்க வேண்டி இருக்கிறது. தொழிற்சங்கங்கள் போராடப்போவதாக உறுதி கொண்டிருக்கின்றன." பிரெஞ்சு செல்வந்தத் தட்டானது தேர்தல் முடிவை ஓரளவு அற்ப தன்னிறைவுடனும்
திருப்தியுடனும் பார்க்கிறது. சீர்திருத்தவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகள், அதேபோல அவர்களின் "இடது" பின்னொட்டுக்கள்
இவர்களை எளிதாக சூழ்ச்சியுடன் கையாளக் கூடியதாக இருந்தது, மற்றும் பாராளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மையை
ஒழுங்கு செய்வது எளிதாக இருந்தது. பிரதான சமூக மோதல் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. தொழிலாள வர்க்கத்தைப்
பொறுத்தவரை, அடுத்த சுற்று போராட்டங்களில் தீர்க்கமான பிரச்சினை மதிப்பிழந்த பழைய தலைமைகளிலிருந்து தம்மை
விடுவித்துக் கொள்வதும் சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தம்மை மறு ஒழுங்கு செய்வதுமாக இருக்கும். |