:
செய்திகள் ஆய்வுகள் :மத்திய
கிழக்கு
What the Likud vote reveals about Israel's
real intentions
இஸ்ரேலுடைய உண்மையான நோக்கம் சம்பந்தமாக லிக்குட் கட்சியின்
வாக்களிப்பு எதை அம்பலப்படுத்துகின்றது
By Chris Marsden
18 May 2002
Back to screen version
கீழ்வரும் நாடகத்தின் விளக்கத்தை, நீங்கள் விரும்பினால், அவதானித்துக் கொள்ளுங்கள்:
அரபாத்தினுடைய Fateh
இயக்கத்தின் மத்திய தலைமைத்துவம், இஸ்ரேலுடைய இருப்பை நிராகரித்த
கட்சியின் அங்கீகாரத்தைப் பற்றி சிந்தித்து, வாக்களிக்கும் ஓர் தீர்மானத்தை எடுப்பதாக அறிவித்துள்ளது. அரபாத் இத்
தீர்மானத்துக்கு எதிராக பேசியுள்ளார். ஆனாலும் இது பெரும்பான்மையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய அமெரிக்காவின் நிலை என்ன? இந்த வாக்களிப்பை ''இது எவ்வகையிலும் தொடர்பில்லாதது''
எனக் கூறி New York Post
பத்திரிகை நிராகரிக்குமா? இஸ்ரேலை தான் அங்கீகரித்ததை தொடர்ச்சியாக
உறுதிப்படுத்தி வருபவரும், அதேசமயம் அண்டை நாட்டுடன் அமைதிக்காக அர்ப்பணித்துள்ள அரசாங்கத்தின் ஒரு தலைவராகவும்
இருக்கும், அவருடைய சுயமான பார்வை கட்சியின் மற்றைய ஒரு சிறு கடும் தலைமைகளைவிட முக்கியமானது'' என அரபாத்தை
பேச்சு வார்த்தை உடன்படிக்கைக்காக, ஜனநாய பாதையை நோக்கித் திரும்பியுள்ள ஓர் உத்தம புருஷன் என வெள்ளை
மாளிகை புகழ்ந்துரைக்குமா?.
இது ஒருபோதுமே நம்பமுடியாதது, அப்படியல்லவா? அதற்கு மாறாக, இப் பத்திரிகைத்துறை,
அரபாத்தை ஓர் குற்றவாளி என தனது விரல்களால் குறிப்பிடுகிறது. அவருடைய அமைதிக்கான சிறிய பேச்சின் முக்கியத்துவம்
பயனற்றதாக்கப்பட்டதுடன், இஸ்ரேலை அழித்தொழிக்கும் வேலைக்கான கருமத்தை நேரடியாக இவரே மிகவும் இரகசியமாக
வைத்திருந்தார் எனவும் குற்றம் சாட்டப்படுகிறார்.
இஸ்ரேலின் ஆளும் கட்சியின் மத்திய குழுவின் மே மாதம் 12 ல் நடைபெற்ற வாக்களிப்பின்
பெறுபேறுகளை கணக்கில் எடுக்கையில், லிக்குட் பாலஸ்தீன அரசுக்கான ஒரு திட்டத்தையே நிராகரித்ததுடன், இது எமது
கட்சியின் ஒரு மாற்றமுடியாத நிலைப்பாடு எனவும் தெரிவித்தது.
இவ் வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து பாலஸ்தீனத்தின் ஒரு முக்கிய பேச்சாளரான
Saeb Erekat
என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், இது ஜனாதிபதி புஷ்சின் முகத்தில் அறைவது
போல் உள்ளது என்றார். ''இந் நடவடிக்கையே மிகவும் தெளிவான முறையில், பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்தை
தெளிவுபடுத்துகிறதே அன்றி அவர்கள் குறிப்பிடுவதைப் போன்று பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு யுத்தமல்ல, மேலும்
உண்மையில் இவ்யுத்தத்தை நடைமுறைப் படுத்துவதினூடுதான் மேற்குக்கரை மற்றும் காசா போன்ற அபகரித்த இடங்களையும்
பாதுகாக்க முடிகின்றன.''
மேலும் அரபாத் இது பற்றிக் குறிப்பிடுகையில், ''அவர்கள் கைச்சாத்திட்ட ஒஸ்லோ ஒப்பந்தத்தின்
அழிவுகள்தான் இவை '', எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், Capitol
Hill இல் அமைதி ஆட்சி புரிகின்றது. லிக்குட் கட்சியின் வாக்குகள் எப்போதுமே
அக் கட்சியின் மிகவும் பிடிவாதம் மிக்க ஒரு சிறுபான்மையினரின் நலன்களுக்காக, ஷரோனை எதிர்த்து போட்டியிடும்
கட்சியின் தலமைப்பீடத்துக்காக, அதாவது அடுத்த கோடை காலத்தில் வரும் தேர்தலில் ஒரு ஜனாதிபதியாக தன்னை
நியமனம் செய்வதற்கு விரும்பிக் கொண்டுள்ள Binyamin
Netanyahu என்பவரை முன் கொண்டுவர பிரயத்தனம் செய்கிறதேயன்றி
வேறொருமல்ல என நிராகரிக்கப்படுகின்றது.
வெள்ளை மாளிகையின் ஒரு பேச்சாளரான
Ari Fleischer,
புஷ், ''அமைதியான வழிக்கான சிறந்த முறை, இஸ்ரேலுடைய கண்காணிப்பில் ஒரு பாலஸ்தீன அரசை அருகருகே அமைத்துக்
கொள்வதுதான் என தொடர்சியாக நம்பி வருகிறார்... மேலும் இதைப் பற்றி, அதாவது உள்நாட்டு அரசியல் விவகாரங்களைப்
பற்றி நான் கருத்து தெரிவிக்கவில்லை. ஏனெனில் ஒவ்வொரு நாடும் தமது உள்நாட்டு அரசியல் கொள்கைகளை தீர்மானிக்க
முடியும். ''
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் கொலின் பெளவல், ஐஸ்லாந்தில் நடைபெறவுள்ள வெளிநாட்டு
அமைச்சர்களுக்கான NATO
கூட்டத்திற்கு போகும்போது செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில், ''நாம் வாக்குகளை எவ்வகையிலும் பார்க்காமல்
இருந்திருக்கலாம்'' எனக் கூறியதைத் தொடர்ந்து, லிக்குட்டின் வாக்குகள் சம்பந்தமாக அவர் ஷரோனுடன் பேசியதாகவும்,
''அதிகப்படியான மக்கள் பாலஸ்தீன அரசைக் கோருகிறார்கள், இதை நோக்கியே அவரும் செயற்படுவதாக எனக்கு
உறுதி மொழி அளித்துள்ளார். எனவே பிரதமர் ஷரோனின் அடிப்படையான இவ் விடயத்தின் எண்ணத்தில் ஏதேனும் மாற்றம்
இருப்பதாக நான் கருதவில்லை, பாலஸ்தீன அரசு ஒன்றை எதிர் காலத்தில் அமைப்பதற்கான திசையை நோக்கியே அவரும்
நகர்ந்து கொண்டு இருக்கிறார்'' எனவும் தெரிவித்தார்.
இதேமாதிரியான ஒரு நிலையையே ஐரோப்பாவும் நடைமுறைப்படுத்துகிறது. ஸ்பெயினின் வெளிநாட்டு
அமைச்சரான Josep Pique,
பாலஸ்தீன அரசு நிறுவுவதுதான் மத்திய கிழக்கின் முரண்பாடுகளுக்கான
''ஒரேயொரு தீர்வாகும்'' எனக் கூறியுள்ளார். மேலும் அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர்கள் இடையே தெரிவிக்கையில்,
லிக்குட் வாக்குகளின் பிரதிபலிப்பானது ''ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறது. இஸ்ரேல் அரசாங்கத்தின்
நிலைப்பாட்டைப் பற்றி நாம் என்ன கருதுகிறோம்?''
இவ்வாக்குகளை, ''இது எவ்வகையிலும் தொடர்பில்லாதது'' எனக் கூறிய
New York Post
பத்திரிகை அதை முழுப்படியே நிராகரித்துள்ளது, மேலும் அதைப்பற்றி அது விவாதிக்கையில், ''ஏனெனில் ஜனாதிபதி ஆரியல்
ஷரோனுக்கு வாக்களிப்பு எப்படியிருப்பினும், எனக்கு வழிகாட்டிய கருத்துக்களின் பிரகாரம் நான் இஸ்ரேலை தொடர்சியாக
வழிநடாத்த வேண்டும்'' என அவர் குறிப்பிட்டதை எடுத்துக்காட்டியது.
ஷரோனுடைய உண்மையான எண்ணத்தையும், அவருடைய கட்சியின் மத்திய குழுத் தலைமையால்
அது மிகவும் வேறுவிதமாக எடுத்துக் கொள்ளப்பட்டதையும், மேலும் இந்நிலைப்பாடு புஷ் நிர்வாகத்துக்காக ஒவ்வொரு முகியமான
பேச்சாளர்களாலும் கையாளப்பட்ட விதத்தையும் நாம் இங்கே தெளிவுபடுத்தினோம்.
பாலஸ்தீன மக்களின் உரிமைக்காக அவர்களுக்கு ஓர் சொந்த அரசை நிர்மாணிக்க ஷரோன்
ஒரு மாபெரும் போராட்டத்தில், வலிமையான ஓர் எதிர்ப்பிற்கு எதிராக அவர் இறங்கியுள்ளதாக ஒருவருக்கு நினைக்கத்
தோன்றலாம். ஆனால் இவை உண்மைக்கு தொடர்பில்லாத ஒரு விடயம். ஷரோனும், நெத்தனியாகுவும், பாலஸ்தீனர்களுக்கு
எதிரான முறையில் ஒரு விட்டுக்கொடுக்காத எதிர்ப்பாளர்களாக தம்மைக் காட்டிக் கொள்வதில் ஒருவரோடு மற்றவர்
போட்டி போட்டுக் கொள்கின்றனர்.
நெத்தனியாகுவின் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு லிகுட்டின் ஒரு அழுத்தம் திருத்தமான
விளக்கத்தை கொடுக்கிறது, அல்லது அக்கட்சிக்குள் ஆளுமை செலுத்தும் செல்வாக்கு மிக்க போக்கானாது ஒரு பாலஸ்தீன
அரசை அமைப்பதற்கான திட்டத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. நெத்தனியாகு, அவருடைய ஒரு உரையில் மேற்கு
கரையில் நடைபெறும் இராணுவத் தாக்குதலை ஷரோன் எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே நிறுத்திக் கொண்டுள்ளார் எனவும்,
அரபாத்தை அவருடைய றாமாலா கட்டிடத்தில் இருந்து வெளியே நடமாட அனுமதித்துள்ளார் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் ''பயங்கரவாதத்தை இராணுவ நடவடிக்கையால் ஒழித்துக் கட்ட முடியாது எனும் மூளை கெட்டுப்போன
விளக்கத்தைக ஏற்றுக்கொள்ள முடியாது..... நாம் அரபாத்தின் அரசாங்கத்தை முற்றாக அழித்தொழித்து விடுவதுடன்,
அவரையும் அரங்கில் இருந்து அகற்றி விடவேண்டும்.'' என தெரிவித்தார்.
அவருடைய ''மேற்கில் உள்ள ஜோர்டான் நதிக் கரையில் பாலஸ்தீன அரசு இருக்கக்கூடாது,
ஏனெனில், இஸ்ரேலுக்கு இது ஓர் உயிராபத்தானது. இவ் விடயம் பற்றி மிகவும் உறுதியாக இருத்தல் வேண்டும்.'' பாலஸ்தீனர்கள்
சில சமயம், அரசுக்கு கீழ் உள்ள ஒரு பிரிவாக (Statehood)
இல்லாமல், ''முழுப்படியே ஒரு தனியான ஆட்சியை'' விரும்பிக்
கொள்ளலாம், ஏனெனில் அரசானது ''அதனது எல்லைகளையும், விமானத் தளங்களையும்'' தனது பூரண
கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல் வேண்டும்'', என அவர் வலியுறுத்தினார்.
நெத்தனியாகுக்கு ஷரோனின் பதில், முன்னர் பிரதமராக இருந்த சிலர், ''அவர்கள் இதய
பூர்வமாகவும், சில சமயம் அப்பாவிகளாகவும் இருந்து கொண்டு அரபாத்துடைய கைகளை குலுக்கி இருக்கிறார்கள்.''
ஷரோன், தான் அவ்வாறு செய்யவில்லை. இஸ்ரேல் அரசுக்கு கீழ் உள்ள ஒரு பிரிவாக பாலஸ்தீனம் இருக்க வேண்டும்
எனும் கோரிக்கையை நான் நிராகரிக்கவில்லை. ஆனால் கேள்வி என்னவெனில், இங்கு ஒரு சரியான நிலைப்பாடு முன்வைக்கப்படவில்லை
என்பதுதான், இது மேலும் தன்னுடைய முன்னெடுப்புக்களை குழப்பிவிடுவதினூடு அரசாங்கத்தின் கொள்கைகளையும் மூடி மறைப்பதற்கே
சேவை செய்கிறது. ''ஒரு இறுதி முடிவு என இன்று எடுக்கப்படும் எந்தவொரு நிலைப்பாடும் இஸ்ரேலின் அரசுக்கு அபாயமாக
அமைவதுடன், நமக்கு மீதான அழுத்தங்களுக்குமே அவை வழி வகுக்கின்றன.'' என அவர் எச்சரிக்கை செய்தார்.
''நாம் பாலஸ்தீன அரசுடன் இன்று உறவாடிக் கொண்டு இருக்கவில்லை, இவ்விடயம் நிகழ்சி நிரலில் இல்லை. நாம் இன்று
கையாளும் நடவடிக்கை யாதெனில், பயங்கரவாதத்தை முற்றாக அழித்தொழிப்பதிலும், பாலஸ்தீன தேசிய இராணுவத்தின்
பயங்கரவாத கட்டுமானத்துக்கு எதிராகவும் போராடிக் கொண்டு இருக்கிறோம். இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் இராணுவம்,
பாதுகாப்பு படையினர் மற்றும் இஸ்ரேலின் அனைத்து மக்களும் இப் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டும்
போராட்டத்தில் தம்மை ஐக்கியப்படுத்தி இருக்கின்றனர். எனவே முக்கியமல்லாத விடயங்களைப் பற்றி இந்நேரத்தில் விவாதித்துக்
கொண்டு இருக்கமுடியாது'' எனவும் குறிப்பிட்டார்.
ஷரோனைப் பொறுத்த மட்டில், பாலஸ்தீன அரசைப் பற்றிய ஒரு பேச்சுவார்த்தை முக்கியமற்றது,
ஏனெனில் அப்படி ஒன்று அங்கே இருக்கவில்லை. ஒரு மாதத்துக்கு முன்னால் அவரால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை
பிரச்சாரத்தில் ஏறத்தாள 2,200 பாலஸ்தீனர்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர். அவருடைய நேரடித் தலமையின் கீழ்
பாலஸ்தீன நிர்வாகத்தின் பல முக்கியமான முன்னணித் தலைவர்கள், (அரபாத்தை தவிர) கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீன நிர்வாகத்தின் றாமாலா தலைமைக் காரியாலயம் அடித்து நொருக்கப்பட்டுள்ளது, அங்கே உள்ள எழுத்து வடிவிலான
ஆவணங்களும், மற்றும் கல்வி, போக்குவரத்து, நில உடமையாளர்களும் வரலாறும் போன்ற பதிவு செய்யப்பட்ட கம்பியூட்டர்
நாடாக்கள் என்பனவும் நாசமாக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள், வானொலி நிலையங்கள், பத்திரிகை காரியாலயங்கள்
போன்றவையும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. இவற்றின் விளைவாக, இம் மக்களுடைய அத்தியாவசிய தேவைகளின் சேதம்
மில்லியன் கணக்கான டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளன. இதை மிகவும் சுருக்கமாக கூறுவதெனில், ஒரு அரசு இயங்குவதற்கு
தேவையான அனைத்து முக்கியமான காரணிகளும் அழித்தொழிக்கப்பட்டுள்ளன.
வெளிப்படையாகக் கூறின், இஸ்ரேலுக்கு பாலஸ்தீனத்தின் சுதந்திரத்தில் உண்மையில் விருபப்பம்
இல்லை, அதனது எதிரியின் அழித்தொழிப்பில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு யுத்தத்தில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது என இங்கு
ஒரு திட்டவட்டமான முறையில் கட்டுக்கதை அடிப்படையாகவுள்ளது. ஆனால் அது உண்மை அதற்கு மாறாகவே உள்ளது.
ஷரோன் நெத்தனியாகுவின் தீர்மானத்தை எதிர்த்தது இதற்காகவே தவிர அதைவிட வேறு
காரணம் கிடையாது. அவர் மறுபடியும், ''பயங்கரவாதம், வன்முறை மற்றும் ஆத்திரமூட்டல்களை முற்றாக ஒழிப்பதற்கு''
அழைப்பு விடுகிறார், இவை அமைதியைநிலை நாட்டுவதற்கான ஒரு முன் நிபந்தனையை பாலஸ்தீன நிர்வாகத்திற்கு வழங்குவதுடன்,
ஒரு ''அடிப்படையான சீர்திருத்தவாத கட்டுமானம்'' எனும் கோரிக்கையையும் முன்வைப்பதுடன், மேலும்
பொருளாதாரம், சட்டம், சமூக நிலமைகள் போன்ற'' அனைத்து பாதுகாப்பு நிலமைகளை'' முழுமையாகவும், அமைப்பு
ரீதியாகவும் நிர்வகிக்கும் பொறுப்பையும் எடுக்கவேண்டும்'' எனவும் கூறுகிறார். அதாவது இதை மிகவும் சுருக்கமாக கூறின்,
பாலஸ்தீன நிர்வாகத்தை முழுப்படியே இஸ்ரேலுக்கு சரணாகதி அடைவதுடன், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கும்
அது மிகவும் நேரடியாக கட்டுப்பட்டிருத்தல் வேண்டும் என்பதாகும் .
இவ் விடயத்தைத்தான் ஏதோ பாலஸ்தீனத்திற்கு வழங்கும் ஒரு உரிமை என்பதாகவும்,
அதுவும் இது மிகவும் காரசாரமான விவாதங்களுக்கு இறுதியில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஷரோன், அரசுக்கு கீழ்
உடனடியாக அமைய இருக்கும் ஒரு பாலஸ்தீனம் என்பதை மீண்டும் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளத்தேவையில்லை எனும்
விடயத்தில் அவர் இந்நேரத்தில் மிகத் தெளிவாக இருந்தார். அதேசமயம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற
காம்ப் டேவிட் ஒப்பந்தத்தில் அரபாத் நிராகரித்த இந்த கோரிக்கைக்கு அவருடைய முன்னாள் பிரதமரான
Ehud Barak என்பவரின்
அடிபணிவானது மிகவும் ஒரு ஆபத்தான மற்றும் மன்னிக்க முடியாதது என அவர் கருதிக் கொண்டார். ஷரோன் முன்னெடுக்கும்
இந் நடவடிக்கையானது, தென் ஆபிரிக்க நிறவாத
அரசில் அங்கம் வகித்த
Bantustans இனத்தின் நிலமையுடன் ஒப்பிடக்கூடியதாக உள்ளது, அதாவது
மக்களின் சமூக வசதிகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் போன்ற எந்த விதமான உரிமைகள் ஆயினும் சரி, இவை இஸ்ரேலாலும்,
அமெரிக்க எஜமானர்களாலும் நிராகரிக்கப்பட்டு அம் மக்கள் கண்காணிக்கப்படுகையில், பாலஸ்தீன நிர்வாகம் இவற்றை
அடிமைத்தனமாக ஏற்றுக் கொள்ளல் வேண்டும் என்பதாகும்.
உண்மையில், இக் கூட்டத்தின் பகைமையான அதன் உள்ளடக்கம் மிகவும் ஒரு அதிதீவிரம்
வாய்ந்தது. லிக்குட்டுக்குள் ஆளுமை செலுத்தும் பாசிச சக்திகளுக்கு மத்தியில் உள்ளோர், பாலஸ்தீனர்கள் எமக்கு சமமானவர்கள்
என்பதில் இருந்து துரோகிகளாகிவிட்டனர் எனக்கூறி, அவர்களை உடனடியாக அழித்தொழிக்க கூடியவாறு அவர்களது பிரச்சாரத்திற்கு
இன்னமும் தகுந்த விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை.
ஷரோனுடைய பேச்சின் ஒரு கட்டத்தில் நெத்தனியாகு, பிரதமரை மேலும் மூர்க்கமாக செயல்பட
வைப்பதற்காக அவருக்கு மதிப்பு கொடுக்குமாறு தனது ஆதரவாளர்களை அவர் பிடிவாதமாக கேட்டுக் கொண்டுள்ளார்.
இறுதியாக ஷரோன், பாலஸ்தீன அரசை ஸ்தாபிப்பதற்கு எதிராக ஆட்சேபித்து தீர்மானத்தை நிறைவேற்றிய அனேகமான
மத்திய குழுவினரின் கைதட்டல் ஆரவாரத்திற்கு மத்தியில் நடந்து சென்றார். பல ஆய்வுகளின் படி, நெத்தனியாகு அவருடைய
தலைமைக்குள் நடத்திய கடுமையான போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதாக லிகுட் கட்சி அறிவித்தது. ஆனால் இதை ஒரு
வெறும் உள்நாட்டு நோக்கத்திற்காக கையாள்வதென்பது ஒரு பிழையானதாகும்.
புஷ் நிர்வாகம், பாலஸ்தீனத்தின் விடயத்தில் லிகுட்கட்சி மேற்கொண்ட இவ்வாறான ஒரு திறந்த
கொள்கை விளக்கத்தினால் சற்று கலவரமடைந்துள்ளது. ஆனால் இதன் அர்த்தம் எவ்வகையிலும், வாஷிங்டனில் மேல் மட்டத்தில்
உள்ள அதிகாரிகளுக்குள் "Bibi"
(நெத்தனியாக்கு) அதிகமான திருப்தியாளர்களோ, ஆதரவாளர்களோ இல்லை என
பொருள்பாடாது.
நெத்தனியாகு அமெரிக்காவில் அவருடைய உயர் கல்விக்கான காலங்களை செலவழித்து
B.Sc.
பட்டம் பெற்றுள்ளார். கட்டிடக்கலை, M.Sc.,
மற்றும் நிர்வாகத்துறை போன்றவற்றையும் படித்துள்ளார். இவர் முக்கிய குடியரசுவாதிகளாலும், ஜனநாயகவாதிகளாலும்,
விசேடமாக சியோனிஸ்டுகள் மற்றும் கத்தோலிக்க தீவிரவாதிகளாலும் தொடர்ச்சியாக பெரிதுபடுத்தப்பட்டு வருகிறார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு சியோனிஸ்ட் இயக்கத்தின் பிரதிநிதியான
Morton Klein என்பவர்
இத் தீர்மானம், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்துக்கு ஒரு மிக முக்கியமான அடியை முன்னெடுத்து வைத்துள்ளதாக
புகழ்ந்துரைத்துள்ளார்.
வாஷிங்டனை விட, மத்திய கிழக்கைச் சேர்ந்த வேறொருவர், அவர் ஷரோனின் கூட்டரசாங்கத்தில்
அமர்ந்துள்ள இஸ்ரேலுடைய தொழிற் கட்சியைச் சேர்ந்தவர், லிகுட்டின் இந்த மிக முக்கியமான வாக்கை உணர்வு பூர்வமாக
நிராகரிக்கிறார்.
ஷரோனுடைய வெளிநாட்டு அமைச்சரான சிமோன் பெரெஸ், லிகுட்டின் வாக்கு ஒரு அர்த்தமும்
இல்லாதது எனவும், ''அவை அனைத்தும், வார்த்தைகள், வெற்று உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் வார்த்தைகளே'' எனவும்
கூறியுள்ளார். ''தொழிற் கட்சி அரசாங்கத்துடன் இருக்க விரும்புகிறது. அதைவிட்டு வெளியேறி, லிக்குட் மத்திய குழு
தீர்மானத்தின் போக்குகளுக்கு போக விரும்பவில்லை. ஏனெனில் அது மறுநாள் காலையில் வேறு ஏதாவது ஒரு விடயத்தை
தீர்மானித்து வைத்திருக்கும்'' என்பதாக அவர் உறுதியளித்தார்.
சிமோன் பெரெஸ், அவர் நேர்மையாகவே கடமையாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார், ஏனெனில்,
அரசாங்கம் ஒரு பேச்சுவார்த்தை உடன்படிக்கைக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் படி இறுதியாக ஒரு பாலஸ்தீன
அரசை நிறுவுவதற்கான வழிகளிலுமே ஈடுபடுகிறது. இது பொய் என்பது தொழிற்கட்சியைச் சேர்ந்த
Haim Ramon என்பவரின்
கருத்தில் தெரிகின்றது. இவரும் உணர்வுபூர்வமாக லிக்குட்கட்சி வாக்களித்துள்ள நடைமுறையிலான முக்கியத்துவத்தையும் நிராகரிக்கிறார்.
ஆனால் இவருடைய எதிர்ப்புக்கான காரணம், சிமோன் பெரெஸின் எதிர்பார்ப்பை விட முற்றிலும் வேறானது. ''இவை
அரசாங்கத்திற்குள் எவ்வகையிலும் செல்வாக்கு செலுத்த முடியாது, ஏனெனில் ஷரோன் உண்மையில் உள்ள யதார்த்தத்தைப்
பற்றி கதைக்கிறார், பாலஸ்தீன அரசுக்கான அவருடைய நிபந்தனைகள் மிகவும் கடினமானது, இவற்றை அவரால் நடைமுறைப்படுத்த
முடியாது'' என அவர் மேலும் கூறினார்.
Ha'aretz எனும் பத்திரிகையின் செய்திப்படி,
பாதுகாப்பு அமைச்சரும், தொழிற் கட்சியின் தலைவருமான Benjamin Ben-Eliezer,
நெத்தனியாகுவுடன், அடுத்த உள்நாட்டு தேர்தலுக்குப் பின்னர், ஒரு இணைந்த அரசாங்கத்தை ஸ்தாபிப்பதைப் பற்றிய ஒரு
இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். மேலும் இவ் இருவரும் அந்நேரம் தத்தமது கட்சிகளில் தலைமையாக
இருப்பர் என எதிர்பார்க்கின்றார்கள். Benjamin Ben-Eliezer
தொழிற் கட்சியின் வேட்பாளராக வர விரும்புபவர். அவர் தான் தோல்வி அடைந்து, நெத்தனியாகு அடுத்து வரவிருக்கும்
அரசாங்கத்துக்கு தலைமை தாங்கினால் தனது பாதுகாப்பு அமைச்சர் பதவியை
பாதுகாத்துக் கொள்ளவிரும்பி ஒரு உத்தரவாதத்தை வேண்டி நிற்பதாக கூறப்படுகின்றது.
|