:
செய்திகள் ஆய்வுகள் :
ஐரோப்பா
:
பிரான்ஸ்
The French Ligue Communiste Révolutionnaire defends its opportunism
பிரான்சின் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தனது சந்தர்ப்பவாதத்தை
பாதுகாக்கின்றது
By David Walsh in Paris
10 June 2002
Back to screen version
பல அமைப்புகளும் தனிநபர்களும் தம்மை ''புரட்சியாளர்கள்'' என அழைக்கின்றனர், ஆனால்
உண்மையில் அப்படியானவர்களல்ல.
பிரான்சின் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்
(LCR) உள்ளடக்கத்தில்
ஒன்றுமில்லாத இப்படியான ஒரு ''இடது'' வார்த்தைஜால அமைப்பாகும். உண்மையில் இது ஒரு ஆழ்ந்த சந்தர்ப்பவாத
அமைப்பு மட்டுமல்லாது, பிரான்சின் அரசியல் கட்டமைப்பின் இடதுபிரிவின் நிலைப்பாட்டை எடுக்கின்றது.
ஏப்பிரல் 21ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதலாவது கட்டவாக்கெடுப்பில்
அதன் பிரதிபலிப்பானது, அவ்வமைப்பின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. அக்கட்சியின்
வேட்பாளரான Olivier Besancenot 1.2
மில்லியன் வாக்குகளை பெற்றார். இது மொத்த வாக்கில் 4.25% ஆகும். தற்போதைய
ஜனாதிபதியும் கூடிய வாக்குகளை பெற்றவருமான ஜாக் சிராக் 5.7 மில்லியன் வாக்குகளையே பெற்றிருந்தார். புரட்சிக்
கம்யூனிஸ்ட் கழகம் (LCR)
முன்னொருபோதும் இவ்வளவு வாக்குகளை பெற்றிருக்கவில்லை.
அரசியல் வித்தகர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில், முதலாவது கட்ட வாக்களிப்பு வலதுசாரி
கோலிச கட்சியின் சிராக்கிற்கும், தேசிய முன்னணியின் தலைவரான லு பென்னிற்கும் இடையிலான இரண்டாம் கட்ட வாக்களிப்பில்
போட்டியை தோற்றுவித்தது. பாராளுமன்ற இடதுகளின் வேட்பாளரான சோசலிச கட்சியை சேர்ந்த பிரதமர் லியோனல்
ஜொஸ்பன் மூன்றாம் இடத்தை அடைந்ததுடன், இரண்டாம் கட்டவாக்களிப்பில் கலந்துகொள்ளமுடியாது போனார். இதற்கான
பிரான்சின் முதலாளித்துவ அமைப்பினது வலது மற்றும் சோசலிச கம்யூனிச கட்சி அடங்கலான இடது பிரிவினரது பிரதிபலிப்பானது,
சிராக்கிற்கு வாக்களிக்க ஒன்றிணைந்து பிரச்சாரம் செய்வதாக இருந்தது.
அக்கட்சி தன்னையோ அல்லது தனக்கு வாக்களித்த மில்லியனுக்கு மேற்பட்ட வாக்களாளர்களையோ
அல்லது அரசியல் கொள்கைகளையோ முக்கியமாக எடுத்துக்கொள்வதில்லை என்பது எடுத்துக்காட்டப்பட்டது. புரட்சிக்
கம்யூனிஸ்ட் கழகம் (LCR)
தற்போதைய ஜனாதிபதிக்கு சார்பான உத்தியோகபூர்வமாக ஆதரவளிக்கப்பட்ட
பிரச்சாரத்துடன் தன்னை கூடியளவில் இணைத்துக்கொண்டது.
Alain Krivine இனால் தலைமை தாங்கப்படும் இக்கட்சியானது
சிராக்கிற்கு வெளிப்படையாக வாக்களிக்க அழைப்புவிட மறுத்தது. அதற்கு பதிலாக இரண்டுபேருக்கிடையிலான
போட்டியில், அது தனது ஆதரவாளர்களை ''லு பென்னிற்கு எதிராக'' வாக்களிக்குமாறு அழைப்புவிட்டது. இவர்கள்
யாரை முட்டாளாக்க நினைக்கின்றார்கள் என்பது தெரியவில்லை.
அது இரண்டாவதுகட்ட வாக்களிப்பிற்கு முன்னரே சிராக்கிற்கு வாக்களிக்கபோவதாக பகிரங்கமாக
அறிவித்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (LCR)
ஜனாதிபதி வேட்பாளரான Besancenot
இனை முட்டாளாக்கவில்லை.
இந்த ''புரட்சிகர'', ''கம்யூனிச'' அமைப்புக்கள் தொழிலாளர்களையும் இளைஞர்களையும்
பிரான்சின் முதலாளித்துவத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு அரசியல் ஆதரவை வழங்குமாறு தீவிரமாக அழைப்புவிட்டன.
இதன் விளைவாக, சமூகத்திட்டங்களின் மீதும் பிரெஞ்சு தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தின் மீதும் சிராக்கின் அரசாங்கம்
நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் தனது நலன்களை
பாதுகாத்துக்கொள்ள எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் அது ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் புரட்சிக்
கம்யூனிஸ்ட் கழகம் (LCR)
அரசியல் பொறுப்பேற்கின்றது.
Alain Krivine இனதும் புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகத்தின் ஏனைய தலைவர்களினதும் நிலைப்பாட்டின்படி ஏப்பிரல் 21 இற்கு பின்னர் சிறிய மாற்றீடே உள்ளது. சிராக்கின்
முகாமை எதிர்க்க எடுக்கும் நிலைப்பாடானது அது தன்னை அடித்தளமாக கொண்ட மத்தியதர எதிர்ப்பு இயக்கத்துடனும்,
ஸ்ராலினிச தொழிற்சங்க அதிகாரிகளுடனும் அதனை மோதலுக்கு கொண்டு சென்றுவிடும். மேலும் இது தனது சொந்த அணியிற்குள்ளேயே
பிளவுவரையிலான நெருக்கடியை கொண்டுவந்துவிடும். இப்படியான ஒரு விளைவானது இவ்வமைப்பின் நிலையான அரசியல்
முடிவாகிவிடும்.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமானது சிலவேளை பப்லோவாத கட்சியின் ஒரு சிறந்த வடிவமாகும்.
பப்லோ வாதமானது 1950களின் இறுதியில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள் தோன்றிய ஒரு போக்காகும். இது சோசலிச
புரட்சிக்கான ஒரு சர்வதேச கட்சியை கட்டுவதற்கான போராட்டத்தை நிராகரித்ததுடன், பப்லோவாதிகள் இதனை ஒரு
பயனற்ற முயற்சியாக கருதினர். இதற்கு பதிலாக அவர்கள் 1938 ஆம் ஆண்டில் லியோன் ட்ரொட்ஸ்கியால் கட்டப்பட்ட
நான்காம் அகிலத்தை ஸ்ராலினிச, சமூக ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் மற்றும் காலனித்துவ,
அரைக்காலனித்துவ நாடுகளின் குட்டிமுதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுக்கும் ஒரு ஆலோசகராகவும், ''இடது''
விமர்சகர்களாகவும் மாற்றமுயன்றனர். மைக்கல் பப்லோவினதும், ஏர்னஸ்ட் மண்டேலினதும், பியேர் பிராங்கினதும்
கிறிவினினதும் ஏனையவர்களினதும் பொறுப்பின்கீழ் பிரான்சின் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஆனது ஒரு அரை நூற்றாண்டாக
இக் கலைப்புவாத வழியை கடைப்பிடித்தது. சந்தர்ப்பவாதமானது கவனத்திற்கு எடுக்கமுடியாத காலத்திற்குள் கட்சிகளையும்
தனிமனிதர்களையும் சீரழித்ததுடன், கொள்கையற்றவர்களாகவும் மாற்றியது.
ஜூன் 9ஆம் திகதி முதற்கட்ட பாராளுமன்ற தேர்தலில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், ''LCR-100%
இடது'' என்ற பதாகையின் கீழ் 412 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. பலதொகையான இடங்களில் அது பலவிதமான
பிரதேசரீதியான ''இடது'' கூட்டுக்களின் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கின்றது. எல்லாமாக அது மொத்த 577 தொகுதிகளில்
450 இல் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது அல்லது வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கின்றது. இது மொத்த தொகுதிகளில்
80% ஆகும். இது 1997 இல் 130 வேட்பாளர்களுடன் கலந்துகொண்டதன் பின்னர் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பாரிய
பிரச்சாரமாகும்.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பிரச்சாரத்தின் வலியுறுத்தலானது பிரான்சில் இரண்டு வகைப்பட்ட
''இடதுகள்'' இருக்கின்றன என்பதாகும். ஒன்று, உத்தியோகபூர்வ, பாராளுமன்ற இடதுகளான சோசலிச கட்சியும் அதன்
கூட்டுக்களும் (கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக்கட்சி, இடது தீவிரவாதிகள்). மற்றையது ''அடித்தளத்திலிருந்து'' வரும், ''தீவிர''
இடதுகளாகும். இது ''வலதுகளுக்கும், அதிதீவிர வலதுகளுக்கும்'' தெளிவாக எதிரானதாகும். இந்த முகாமில் புரட்சிக்
கம்யூனிஸ்ட் கழகம் தன்னை இணைத்துள்ளது.
வேலைநீக்கத்தை தடுத்தல், பொதுச்சேவைகளை பாதுகாத்தல், ஆகக்குறைந்த சம்பள மட்டத்தையும்
சமூக வசதிகளையும் உயர்த்துதல், போதைப்பொருள் பாவிப்பை சட்டபூர்வமாக்கல், பெண்களுக்கு சமஉரிமை, ஓரினச்சேர்க்கையாளர்களை
தரக்குறைவாக நடத்துதலை நிறுத்துதல், 60 வயதில் முழு ஓய்வூதியம், சுற்றுசூழல் பாதுகாப்பான கொள்கைகளை
அமுல்ப்படுத்தல், ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சகல ''சமூக எதிர்ப்பு நடவடிக்கைகளை'' நிராகரித்தல்
என்பனவான 10 புள்ளிகள் அடங்கிய தேர்தல் வேலைதிட்டத்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்வைத்துள்ளது.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும்,
Lutte Ouvrière
இனதும், கம்யூனிச கட்சியினதும், சோசலிச கட்சியினது சிலபிரிவினது வேலைத்திட்டங்களை வித்தியாசப்படுத்தி பார்ப்பது
கடினமானது. இவை அனைத்தும் சீர்திருத்த பட்டியலை போன்று காணப்படுகின்றது. அதில் பிரான்சின் சமூகம் தொடர்பான
அதிகரித்துவரும் சமூகத்துருவப்படுத்தலும் பரந்துபட்ட பிரிவினர் அரசியல் அந்நியமயமாதல் தொடர்பாகவும், சோசலிச
கட்சியினதும் கம்யூனிச கட்சியினதும் குற்றமிக்க காட்டிக்கொடுப்புக்கள் பற்றியும், தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் உள்ள
தலைமையினதும் முன்னோக்கினதும் நெருக்கடி தொடர்பாகவும் அல்லது சமூகம் ஒரு சோசலிச மாற்றத்திற்குள்ளாக
வேண்டிய தேவை தொடர்பாகவும் முக்கிய அக்கறை செலுத்தப்படவில்லை.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்
தன்னை ''அணிதிரட்டலுக்கான'' கட்சி என வேறுபடுத்திக்
காட்டுகின்றது. அரசியல் போராட்டம் என்பதன் கருத்து அதனால் ''நிரந்தரமான அணிதிரட்டல்'' என
Besancenot குறிப்பிட்டதுபோல்
மாற்றப்பட்டுள்ளது. சகல நிலைமையின் கீழும் உழைக்கும் மக்கள் மத்தியில் நிலவும் சீர்திருத்தல்வாத உணர்மைகளுக்கு எதிராக
ஒரு சோசலிச முன்னோக்கிற்காக போராடவேண்டும் என்ற மார்க்சிச கட்சியின் கருத்தானது முற்றுமுழுதான சந்தர்ப்பவாதிகளான
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முற்றுமுழுதாக அந்நியமானதாகும்.
பாரிசில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் கூட்டம்
இவ்விடயங்களில் சில ஜூன் 5ஆம் திகதி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினால்
Besancenot கட்சி
வேட்பாளராக போட்டியிடும் பாரிஸ்
தொகுதியில்
நடாத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெளிவாகக் காணக்கூடியதாக
இருந்தது.
அக்கூட்டம் LCR
இன் இன்னொரு வேட்பாளரான
Béatrice Bonneau
ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதில் அவர் ''உண்மையாக நிலைமையை மாற்றும்''
வேலைத்திட்டம் குறித்து ஒரு சில பொதுவான குறிப்புகளுடன் ஆரம்பித்தார். மாற்றீட்டிற்காக
Besancenot உடன்
இணைந்து போட்டியிடும் Sandra Demarq, LCR
இன் வேலைத்திட்டத்தை வாசித்தார்.
முக்கிய உரை நிகழ்த்துவது
Besancenot இற்கு வழங்கப்பட்டபோது அவர் ''இரண்டு சாதகமான
இடதுகள்'' குறித்து உரையாற்றினார். சோசலிச கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி போன்றோர் முதலாளித்துவம்
''தாண்டமுடியாத'' ஒன்று என கருதுவதாகவும், தேசிய முன்னணிக்கு எதிரான போராட்டம் ''தற்போது
ஆரம்பித்துள்ளது'' எனவும் குறிப்பிட்டார். அவர் மேலும் ''அரசாங்க இடதுசாரிகள் ஜனாதிபதி தேர்தலில் இருந்தும்,
தாங்கள் ஏன் தொழிலாள மக்களிடமும் இளைஞர்களிடமும் இருந்து அந்நியப்பட்டுபோனோம் என்பதிலிருந்தும் ஒன்றையும்
கற்றுக்கொள்ளவில்லை'' எனவும் கூறினார். சாதாரண இடங்களின் நிலைமையை பற்றி அவர் குறிப்பிட்டு தொழிலாள மக்கள்
இடதுகளிடமிருந்தும் வலதுகளிடமிருந்தும் ''ஒன்றையும் பெற்றுக்கொள்ளவில்லை'' எனக் குறிப்பிட்டார்.
எம்முடனான ஒரு கலந்துரையாடலில் [பார்க்க
An interview with Olivier
Besancenot, candidate of the Ligue Communiste Révolutionnaire],
27 வயதுடைய Besancenot
ஒரு போலித்தன்மையுமில்லாத ஒரு உண்மையான நட்பான மனிதனாக காணப்பட்டார்.
எவ்வாறிருந்தபோதிலும், ஜூன் 5ம் திகதி கூட்டத்தில் அவரது குறிப்புகள் அவர் அரசியல் கேள்விகள் குறித்து மிகவும் குறைவாகவே
விளங்கிக்கொண்டுள்ளார் என்பதை காட்டுகின்றது. அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,
LCR இன் பப்பலோவாத
தலைமையால் தொழிலாள வர்க்கத்தினுள் புகுத்தப்பட்டிருப்பதின் ஒரு வகையையே காட்டுகின்றார்.
ஜூன் 5ஆம் திகதி கூட்டத்தில், ஆரம்ப உரையை தொடர்ந்த கலந்துரையாடலானது, உடனடிப்பிரச்சனைகளான
பொதுச்சேவை தொடர்பான விடயங்கள், தபால் துறையின் தலைவிதி, போன்றவை தொடர்பான கலந்துரையாடலாக
LCR இன்
அங்கத்தவரால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இது அவர்களின் சொந்த பிரச்சாரத்தின்படி அரசியல் நெருக்கடியையும், பாசிசத்தின்
எழுச்சியையும், மோசமான சமூக நடவடிக்கைகளையும் உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டனர்.
LCR தொடர்பாக ஒருவர்
அணுகுகையில், இவ்வமைப்பானது தனது அமைப்பின் பெயரையோ அல்லது வேலைத்திட்டத்தையோ அல்லது தொடர்ச்சியாக
ஒன்றையே கூறுவதையோ, தன்னைப்பற்றிய எந்நவொரு விடயத்தையோ முக்கியமாக எடுப்பதில்லை என்பதை எப்போதும்
கவனத்தில் கொள்ளவேண்டும்.
கேள்விகளும் பதிலும் தொடர்பான சலிப்பான பரிமாற்றம் மண்டபத்தில் ஒரு உறங்குநிலை
தோற்றுவித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வேளையில் உலக சோசலிச வலைத்தளத்தினையும் ஜேர்மன் சோசலிச சமத்துவ
கட்சியினையும் சேர்ந்த உல்றிச் றிப்பேட் இக்கலந்துரையாடலில் தலையிட்டார். அவர் பிரான்சின் தேர்தல்கள் உலக முக்கியத்துவம்
வாய்ந்தது எனவும் இது அடிப்படையான அரசியல் கேள்விகளை எழுப்புகின்றது எனக்குறிப்பிட்டார். ஏன் வலதுசாரிகள் குறிப்பிடத்தக்க
வெற்றிபெற்றனர் மற்றும் எவ்வாறு இதற்கு எதிராக போராடுவது என்பது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் றிப்பேட்
வரலாற்றுப் பாடங்களை எடுத்துக்காட்டினார். அவர் ''பாசிசம் தேர்தல்களாலோ அல்லது முதலாளித்துவத்தின் ஏதாவது
ஒரு பிரிவுடனான கூட்டுக்கள் மூலமோ நிறுத்தப்பட முடியாது எனவும், பாசிச அமைப்புக்களுக்கு எதிரான போராடத்திற்கு
ஒரு சோசலிச முன்னோக்கை அடித்தளமாகக்கொண்டு தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன சமூக சக்தியாக அரசியல்
ரீதியாக அணிதிரட்டப்படுவது தேவை'' என குறிப்பிட்டார்.
அவர் ''1932 இன் ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சி, படை அதிகாரியான
கின்டன்பேர்க்கிற்கு வாக்களிக்க அழைப்புவிட்டதையும், பல தொழிலாளர்களின் வாக்குகளுடன் கின்டன்பேர்க்கிற்கு ஜனாதிபதியாக
தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாதங்களுக்கு பின்னர், அவர் கிட்லரை ஜனாதிபதியாக்கியதை'' சுட்டிக்காட்டினார்.
றிப்பேட் கடந்தமாத ஜனாதிபதி தேர்தலில்
LCR இன் நிலைப்பாட்டை,
அதாவது சிராக்கிற்கு ஆதரவளித்தை சுட்டிக்காட்டி ''இது தொழிலாளர்களை பலவீனமாக்கியதுடன், சிராக்கிற்கும், ஒரு
வலதுசாரி அரசாங்கத்திற்கும் எதிரான போராட்டத்திற்கான சாதகமற்ற நிலைமையை தோற்றுவித்ததாக'' குறிப்பிட்டு,
தேர்தலை நிராகரிக்குமாறு LCR
ஏன் அழைப்புவிடவில்லை? மற்றும் இரண்டு வலதுசாரி முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கும்
இடையில் உள்ள ஒரு மாற்றீடு தொழிலாள வர்க்கம் இரண்டுபேருக்கும் ஆதரவளிக்காதுவிடுவதுதான் என ஏன் கூறவில்லை
என்ற கேள்விகளை முன்வைத்தார்.
Besancenot, றிப்பேட்டிற்கு பதிலளிக்கையில்,
LCR இன் நிலைப்பாட்டை பின்வரும் அடித்தளத்தில் பாதுகாத்தார். முதலாவதாக,
தாம் முக்கிய முதலாளித்துவ பிரிவினரிடமிருந்து சுதந்திரமாக ஒழுங்கமைத்ததாக குறிப்பிட்டார். ''நாங்கள் தான்
மக்களை முதலாவதாக வீதிக்கு அழைத்தவர்கள், அதாவது நடவடிக்கைக்காக ஒரு பிரச்சாரத்தை செய்தோம்'' என குறிப்பிட்டார்.
இரண்டாவதாக, ''அதிவலதுசாரிகளை வீதிகளிலும், தேர்தலிலும் தடுப்பது எமது நோக்கம்
எனவும்,
இது தம்மத்தியில் ஒரு விவாதத்தை ஆரம்பித்து வைத்தது எனவும் நாம் அதை ஒளித்துவைக்கவில்லை
எனவும், எமது அமைப்பில் தெளிவாக சிராக்கிற்கு வாக்களிக்க அழைப்புவிடவேண்டும் என நினைத்தவர்களும் இருந்தார்கள்.
இதற்கு மாறாக லு பென்னிற்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என கூறியது பிழை என நினைத்தவர்களும் இருந்தார்கள்.
கூடுதலானோரின் நிலைப்பாடு நான் கூறியதே. உண்மையாகவே இது ஒரு முக்கிய விடயம் என நான் உங்களுடன் ஒத்துக்கொள்கின்றேன்.
ஆனால் இது இந்த நூற்றாண்டிற்கான விடயமல்ல'' என குறிப்பிட்டார்.
அவர் தொடர்கையில்'' ஆனால் உங்களது நிலைப்பாடான தீவிரமான நிராகரிப்பை எமது
அமைப்பில் எவரும் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் நாங்கள் சிராக்கையும், லு பென்னையும் ஒரே கூடையினுள் போடவில்லை.
ஏனெனில் எல்லாம் ஒன்றாக இருந்தபோதிலும், கிறீஸ் நாட்டு பத்திரிகையில் தேசிய சோசலிசத்தினது பாட்டை பாடுபவர்களுக்கும்
(லு பென்), வெளிநாட்டவரை விரும்பாத ஆனால் அதிகாரத்திற்கு வந்ததும் முழு தொழிலாள அமைப்பை மட்டமல்லாது
முழு சமூக இயக்கத்தையும் கட்டாயம் தாக்கப்போகும் இனவாத வலதுசாரியிற்கும் ( சிராக்) இடையில் ஒரு வித்தியாசம்
உண்டு. பிரச்சனை என்னவென்றால் லு பென் பதவியேற்றால் நாங்கள் ஒரு விவாதத்தையும் நடத்தமுடியாது. இப்போது
ஜாக் சிராக்கின் கீழ் எமக்கு உரிமையுண்டு'' என குறிப்பிட்டார்.
இக்கருத்துக்கள் எல்லாவற்றையும் வெளிப்படுத்திக்காட்டுகின்றன.
முதலாவதாக, வலதுசாரிக்கட்சிகள் லு பென்னிற்கு எதிராக சிராக்கிற்கு ''வீதிகளில்
அணிதிரட்டவில்லை, ஏனெனில் அவர்கள் இதனை செய்யத்தேவையில்லை'' என்பதை
Besancenot பார்க்கத்
தவறுகின்றார். இடதுகள் என அழைப்பவர்களுடன், ''அதிதீவிர இடதுகள்'' அவர்களுக்காக அதனை செய்கிறார்கள். இதானல்
சிராக்கின் அணியினர் தேசிய முன்னணியுடனும், அதன் ஆதரவாளர்களுடனும் அரசியல் மோதலுக்குபோகாமல் பின்தள்ளியிருப்பதுடன்,
நவ பாசிச வலதுசாரிகளுடன் எதிர்காலத்தில் இணைந்து இயங்க தயார் செய்கின்றார்கள்.
LCR இனுள் சிராக்கிற்கு பகிரங்கமாக வாக்களிக்க
கோரவேண்டும் என கூறியவர்களும் இருக்கின்றார்கள் என்பதும் முக்கியமானது. ஏனெனில் இது ஆச்சரியத்திற்குரியதுமல்ல,
ஏனெனில் அவர்களுள் Besancenot உம் ஒருவர்.
Besancenot இற்கு இது ஒரு அழுத்தம்
கொடுக்கும் விடயம் அல்ல என்பதை ஒருவர் பின்வருமாறு கருதலாம். அதாவது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளை
பாதுகாப்பதும், பாசிசத்தின் அபாயத்திற்கு எதிராக போராடுவதும் இந்நாற்றாண்டிற்குரிய விடயமல்ல என்றால், அவை
என்ன?
சிராக்கிற்கும் லு பென்னிற்கும் இடையிலான உறவும், அரசியல் சிறப்பியல்பு தொடர்பான
LCR இன்
வேட்பாளரின் கருத்தும் முக்கியமானவை. இரண்டாம் கட்டவாக்களிப்பில்
LCR, Lutte Ouvrière, Parti des Travailleurs
போன்றவற்றை ஒரு நிராகரிப்பிற்கு அழைப்புவிடுமாறு உலக சோசலிச
வலைத்தளம் வெளிவிட்ட அறிக்கையில் [பார்க்க
"பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலை
தொழிலாள வர்க்கம் புறக்கணிப்பதற்காக சிராக்கையும் லு பென்னையும் நிராகரி!"]
சிராக்கிற்கும் லு பென்னிற்கும் இடையில் வித்தியாசங்கள் இல்லை என மறுப்பது
என்பது முழு தீவிரவாதம் என குறிப்பிட்டிருந்தது.
சிராக்கிற்கும் லு பென்னிற்கும் இடையிலும், சிராக்கிற்கும்
UDF இன்
François Bayrou
இற்கும், Bayrou
இற்கும் தாராளவாத கட்சியின்
Alain Madelin இற்கும், லு பென்னிற்கும் இன்னொரு வலதுசாரிகட்சியான
MNR இன்
Bruno Mégret
இற்கும் வித்தியாசங்கள் உள்ளன. சில வேளைகளில் இவ் வித்தியாசங்கள் பெரிதானதாகவில்லை.
ஆனால் தொழிலாள வர்க்கம் இவற்றை விளங்கிக்கொள்ள கடமைப்பட்டுள்ளது. ஆனால் இறுதியில் இவ்வித்தியாசங்கள் ஒரேமாதிரியானவை.
அனைத்து இக்கட்சிகளும் வேட்பாளர்களும் பிரெஞ்சு முதலாளித்துவத்தை பாதுகாப்பதுடன், முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்திடமிருந்து
ஒரு நேரடி எதிர்ப்பை நோக்குகையில் இவை அனைத்தும் பிரெஞ்சு மூலதனத்தையும் அதனது ஆட்சியையும் பாதுகாக்க பாசிச
சர்வாதிகாரத்தின் பின்னால் கூட ஒன்று திரண்டுகொள்வர்.
சோசலிசவாதிகளின் ஆரம்பப்புள்ளி ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுக்கிடையிலான அல்லது அதனது
குட்டி முதலாளித்துவ ஏஜன்டுகளினிடையேயான பெரியதான அல்லது சிறியதான முரண்பாடல்ல. மாறாக முழு முதலாளித்துவ
அமைப்பிலிருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரமாகும். பாசிசத்திலிருந்தும் சர்வாதிகாரத்திலிருந்தும்
தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது இதுதான் என்பதை தொழிலாள வர்க்கத்தின் துன்பகரமான
நிகழ்வுகளூடாக வரலாறு மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது. பாசிசத்திற்கு எதிரான போராட்டம் என்பதன் கீழ் முதலாளித்துவத்தின்
தாராளவாத அல்லது ''ஜனநாயக'' பிரிவின் கீழ் தொழிலாள வர்க்கத்தை அடிமைப்படுத்துவது, 1931-33 இல் ஜேர்மனியிலும்,
''மக்கள் முன்னணி'' மூலமாக 1930களின் இறுதியில் பிரான்சிலும் எடுத்துக்காட்டப்பட்டதைப்போல் அதன் விளைவு
தொழிலாள வர்க்கத்திற்கு தோல்வியும், பாசிசத்திற்கு வெற்றியுமாகும்.
சிராக் பாசிசத்திற்கு எதிரான மூர்க்கமான எதிர்ப்பை காட்டவில்லை என
LCR திரும்ப திரும்ப
கூறுவதும், Besancenot
கூட்டத்தில் குறிப்பிட்ட கருத்துக்களும் பிரான்சின் ஜனாதிபதியின் மீது வைத்திருக்கும்
பரந்த, முக்கிய நம்பிக்கையை காட்டுகின்றது. அவரின் குறிப்புக்கள், மேலும் ''வீதிகளில்'' ஆர்ப்பாட்டத்திற்காக
LCR ஓய்வின்றி
செய்த நடவடிக்கையின் பின்னால் உள்ள அரசியல் நம்பிக்கையற்ற தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.
வலதுசாரிகளிலிருந்தும் உத்தியோகபூர்வ இடதுசாரிகளிடமிருந்தும் சுயாதீனமாக தாம் அணிதிரட்டியது
என LCR
கூறுவது தவிர்க்கமுடியாதபடி சோசலிச கட்சியும், கம்யூனிச கட்சியும் கூறும் ஒரேவிவாதமான, ஆனால் சற்று விளக்கமற்ற
ஏமாற்று ''இடது'' வார்த்தைகளில் சிராக் தான் ''குடியரசின் பெறுமதிகளை'' பாதுகாக்கின்றார் என்பதையும்,
அவர் வலது மற்றும் இடது அமைப்புக்களையும், ஏன் ''முழு தொழிலாள வர்க்க இயக்கத்தை மட்டுமல்லாது, முழு சமூக
இயக்கத்தின் மீதும் தாக்குதல் நடாத்தமாட்டார் என நம்பலாம்'' எனக் கூறுவதாகும்.
Besancenot தனது சொந்த வார்த்தைகளில்
LCR பிரெஞ்சு ஆளும்வர்க்கத்தின் முன்னும், முதலாளித்துவ பொது
அபிப்பிராயத்தின் முன்னும் விபச்சாரமாடியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றார்.
இக்கூட்டத்தில் றிப்பேட் உரையாற்றிய பின்னர், ஒரு
LCR அங்கத்தவர்
''நான் சுவாரசியமான நேரத்தில் வந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்'' என இன்னொருவருக்கு கூறியதை கேட்கக்கூடியதாக
இருந்தது. அவரும் விரைவாக பேசினார். Besancenot
தனது கருத்துக்களை கூறிய பின்னர்
LCR இன் தலைமை
அங்கத்தவர்கள் தலையிட்டு விவாதத்தை முன்னைய விடயத்தை நோக்கி அதாவது பிரான்சின் பொதுச்சேவையை பாதுகாப்பதற்கான
அரசியல் வழிவகைகளுக்கு அப்பாற்பட்டு, அதனை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை நோக்கி திருப்ப முயன்றனர். அவ்வமைப்பின்
அங்கத்தவர்களும், ஆதரவாளர்களும் எந்நிலைமையின் கீழும் ஒரு முக்கிய அரசியல் கலந்துரையாடலுக்கான வார்த்தைகளை
பகிர்ந்துகொண்டனர்.
|