World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

National Front stages violent provocation in Paris

பாரிஸில் ஆத்திரமூட்டும் வன்முறையை தேசிய முன்னணி அரங்கேற்றியுள்ளது.

By Therese LeClerc
10 June 2002

Back to screen version

கடந்த வாரம் அதி வலதுசாரி தேசிய முன்னணியின் (FN) ஆதரவாளர்கள் பாரிஸின் வடகிழக்கிலுள்ள அதிக தொழிலாள வர்க்கம் வாழும் பகுதியில் தனது அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் வீதியால் சென்றவர்கள் மீது தொடுத்த தாக்குதலினால் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதல் சுற்று பாராளுமன்றத் தேர்தல்களுக்கு ஒரு வாரம் முன்னதாக யூன் 2 காலை 11.30 மணியளவில், இரண்டு தேசிய முன்னணி வேட்பாளர்கள் அத்துடன் 30 அல்லது 40 முரட்டு ஆதரவாளர்கள் சகிதம் பாரிஸ் 20ம் வட்டாரத்திலுள்ள வாரந்தோறும் நடைபெறும் வெளிச் சந்தைப் பகுதிக்கு வந்தனர். லூ மொன்ட் (Le Monde) பத்திரிகை, அப்பகுதியில் நின்ற பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF) வேட்பாளரான கத்தரீன் ஜிகோவை நெருங்கிய மூன்று தேசிய முன்னணியினர் அவரை எள்ளி நகைத்து பயமுறுத்தியதாக செய்தி வெளியிட்டது. ''அவர்கள் எமது போஸ்டர்களை துண்டு துண்டாக கிழித்தெறிந்தும் அங்கு நின்றவர்கள்மேல் தாக்குதல்களையும் தொடுத்தனர்'' என ஜிகோ கூறினார்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR), பாசிச எதிர்ப்புக் குழுவான Ras l'front மற்றும் Alternative Libertaire உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மீதும் அவர்கள் பாய்ந்தனர். இதே சம்பவத்தைப் பற்றி LCR ன் ஆதரவாளர் கூறுகையில் ''அவர்கள் எனது கைகளிலிருந்த பத்திரிகைகளைப் பறித்தனர். நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கையில் என் முகத்தில் குத்து விட்டனர். பின்பு குண்டர்கள் அனைவரும் சேர்ந்து எம்மீது பாய்ந்து விழுந்தனர்'' என்றார். ஒரு பெண் தேசிய முன்னணியினரின் துண்டுப் பிரசுரத்தை வாங்க மறுத்ததையடுத்து அவர் மீதும் தாக்குதலைத் தொடுத்தனர்.

''இத்தாக்குதல் மிகவும் வேகமாகவும் முரட்டுத்தனமாகவும் இருந்தது'' என Ras l'front உறுப்பினர் செய்தியாளர்களிடம் கூறியதுடன் ''அவர்களிடம் பாரிய கண்ணீர்ப் புகைக் குண்டுகள் இருந்தன. எம்மீது அதனைப் பாவித்து அவ்விடத்தை வெறுமையாக்கினர்'' என்றார்.

சிறுவர்களைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. ஒரு பெண் தனது இரு சிறுவர்களுடனும் மற்றும் ஐந்து மாதக் குழந்தையுடனும் அப்பகுதியில் சாமன்கள் வாங்கிக் கொண்டிருந்தார். ''கவனம் இங்கு குழந்தைகள் இருக்கின்றார்கள்'' என யாரோ ஒருவர் கத்தியபோதும் அதில் ஒரு வித்தியாசமும் இருக்கவில்லை. ''செம் மஞ்சள் நிறமுடைய கண்ணீர்ப்புகையை குழந்தைக்கும் அடித்தனர். நான் ஓடினேன், சிலர் என்னைப் பின் தொடர்ந்தனர்'' குழந்தை பின்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அப் பெண் கூறினார்.

இவற்றை நேரில் பார்த்தவர்கள் இச் சம்பவத்தினால் ஆழமான பாதிப்புக்கு உள்ளாகினர். ''நாம் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. தேசிய முன்னணி ஆட்கள் இப்பகுதி முழுவதும் நின்றிருந்தனர். அவர்கள் தாக்குதல் மேற்கொள்ளப்போவதை உணர்ந்துகொண்டேன். அவர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வெளியே எடுத்தபோது நான் கத்தினேன். உடனடியாக அவர்களில் இருவர் என்னை நோக்கி ஓடி வந்தனர்'' என அப்பகுதியில் தனது மனைவி மற்றும் மகளுடன் சென்ற 38 வயதுடைய ஆசிரியர் ஒருவர் கூறினார்.

Ras l'front இனுடைய வலைத்தளச் செய்தியில் பொலிசார், இத்தாக்குதலைச் செய்தவர்களில் ஒருவர், பல சாட்சிகளினால் அதேநாள் இரவு, தேசிய முன்னணி வெளிவிட்ட வாதத்தில் அவர்கள் சந்தைப் பகுதியிலிருந்து வெளியெறும்போது தாக்கப்பட்டதாகக் கூறியது. பாசிசத்துக்கு எதிரான பிரச்சாரவாதிகள் தங்களுக்குள் ஒருவர் மாறி ஒருவராக கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியதாக, தேசிய முன்னணி உறுப்பினர் ஒருவர் கூறினார்.

அடையாளம் காட்டப்பட்டுள்ளபோதிலும் அத்தோடு இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந்தவர்கள் தேசிய முன்னணிக்கு எதிராக முறையீடுகளை பதிவு செய்தபோதிலும் அவர் அமைதியாக செல்ல அனுமதித்ததோடு மேலதிகமாக எதுவும் நடக்கவில்லை. ஆனால் ''தேசிய முன்னணிக்கு எதிராக அவர்கள் ஒழுங்குக் கேடாகவும் மற்றும் பொய்களையும் முறையீடு செய்தனர்'' என பொலிசார் தெரிவித்தனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved