World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

French parliamentary elections: political right benefits from prostration of the left

பிரெஞ்சு பாராளுமன்ற தேர்தல்கள்: இடதுகளின் அடிபணிதல்களில் இருந்து வலதுகள் அரசியல் ஆதாயம் அடைகிறது

By Peter Schwarz
4 June 2002

Back to screen version

பிரெஞ்சு பாராளுமன்றம் ஜூன்9 மற்றும் ஜூன்16 தேதிகளில் இரண்டு சுற்றுக்களாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறது. அனைத்து கணிப்புக்களும் மே 5 அன்று திரும்பத் தேர்ந்து எடுக்கப்பட்ட கோலிச ஜனாதிபதி ஜாக் சிராக் பாராளுமன்றத்தில் பழமைவாதிகளின் பெரும்பான்மையை வெல்வார் என முன்கணிக்கிறது. அது பாராளுமன்றத்திற்குள்ளே எதிர்க்கட்சிகளால் தடுக்கப்படாத அவரது வலதுசாரி வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதற்கான நிலையில் அவரை வைக்கும்.

வாக்கெடுப்பு கணிப்பீடுகளின்படி, சிராக்கின் பழமைவாத முகாம் பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 577 இருக்கைகளில் 340லிருந்து 400 வரையிலான இருக்கைகளை சிராக்கின் பழமைவாத முகாம் பிடிக்கும். தற்போதைய இடதுசாரி பெரும்பான்மை 150லிருந்து 210 இருக்கைகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலின் முதலாவது சுற்றுக்காக முன்னிறுத்திக் காட்டப்படும் சதவீத வேறுபாடு குறைவாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது, ஆனால் இங்கும் கூட அனைத்து வாக்கெடுப்பு கணிப்புக்களும் முந்தைய அரசாங்கத்தை உருவாக்கிய இடது கட்சிகளினதை விடவும் பழமைவாத முகாமை முன்னுக்கு வைத்துள்ளது. இடது கட்சிகளுக்கு 35லிருந்து 38சதவீதம் வரை முன்னிறுத்திக் காட்டப்படும் அதேவேளை, அவர்கள் 40 சதவீதவாக்குகள் அளவில் வெல்வர் என எதிர்பார்க்கப்படுகின்றனர். அதிவலதுசாரியினர் 15சதவீதம் அளவில் பெறுவர், சோசலிச இடதுகள் 3லிருந்து 4சதவீதம் வரையும் பிரதான முகாமிற்கு வெளியில் நிற்கும் சுற்றுச்சூழல் கட்சிகள் 3லிருந்து 5சதவீதம் வரையும் பெறுவர்.

இருப்பினும், தேர்தல் கணிப்பீடுகள் மிக நம்பமுடியாதவை என நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி தேர்தல்களுக்கு முன்னர், தேசிய முன்னணி வேட்பாளர் ஜோன் மேரி லுபென் இரண்டாவது சுற்றுக்கு நுழைவார் என்று கருத்துக் கணிப்புக்கள் எதுவும் முன்கணிக்கவில்லை. மேலும் கூட, பிரெஞ்சு தேர்தல் முறை வியப்பூட்டும் முடிவுகளுக்கு சாதகமானதாக இருக்கிறது மற்றும் துல்லியமான முன்கணித்தலைச் செய்வதற்கு உகந்ததாயிருக்கவில்லை.

இருக்கைகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக சதவீத வாக்குகளின் வீதாசாரத்தில் ஒதுக்கப்படவில்லை. பதிலாக, ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எவ்வாறாயினும், இரண்டு அல்லது மூன்று கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் மேலாதிக்கம் செய்யும் விதமாய் பிரிட்டனில் உள்ளதற்கு மாறாக, பிரான்சில் பல்வேறுவிதமான கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துகின்றனர். இந்த ஆண்டு, 577 பாராளுமன்ற இருக்கைகளுக்கு 8,400 வேட்பாளரகளுக்கு மேல் போட்டி இடுகின்றனர்- ஒரு தொகுதிக்கு 14 பேர்களுக்கும் அதிகமானோர் போட்டி இடுகின்றனர், இது ஒரு வரலாற்று பதிவுச்சான்று ஆகும்.

வேட்பாளர் 50 சதவீதத்துக்குமேல் வாக்குகள் பெற்றால் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படுவார். இரண்டாவது சுற்றில், பன்மைத்தன்மை போதுமானது. முதலாவது சுற்றில் 12.5 சதவீத வாக்குகள் பெறும் வேட்பாளர்கள் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். எவ்வாறாயினும், இரண்டாவது சுற்று வேட்பாளர் மற்றொரு வேட்பாளரின் வெற்றிவாய்ப்பை ஊக்கப்படுத்துவதற்கு தம்மை வாபஸ் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த முறையானது, கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையில் தந்திரோபாய பேரங்களையும் ஒப்பந்தங்களையும் ஊட்டி வளர்க்கிறது. கட்சியின் நலன்களின்பேரில், இரண்டாவது சுற்றில் பலமான நிலையில் வைப்பதற்காக, தடையான 12.5 சதவீத வாக்குகளைப் பெறுவதற்கு முதல் சுற்றில் நெருக்கமாகப் பின்னப்பட்ட கூட்டுக்களை அமைக்கின்றன. இரண்டாவது சுற்றின் விளைவானது வாபஸ்வாங்க சம்மதிக்கும் வேட்பாளர்களால் பெரும்பாலும் தீர்மானிக்கப்படும்.

இது தொடர்பானதில் சூழ்நிலை பழமைவாதிகளுக்கு சாதகமாக இருக்கிறது. சிராக் ஜனாதிபதி தேர்தலில் அவரது வெற்றியைப் பயன்படுத்தி மூன்று வலதுசாரி கட்சிகளை - கோலிசவாதிகளை (Rassemblement pour la République, அல்லது RPR), தாராண்மை ஜனநாயகவாதிகள் (Démocratie libérale, அல்லது DL) தாராண்மை பழமைவாதிகள் (Union pour la démocratie française, அல்லது ஹிஞிதி) தன்பின்னே ஐக்கியப்படுத்துவதற்கு தீர்மானகரமாக இருந்து வருகிறார். அவரது தேர்தல் வெற்றி தெளிவாகத் தொடங்கியதும், ஜனாதிபதி பெரும்பான்மைக்கான ஒன்றிணைப்பு (Union pour la majorité présidentielle, அல்லது UMP) எனும் புதிய கூட்டை அவர் நிறுவினார், அது இப்பொழுது 536 தொகுதிகளில் தனி பழமைவாத வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. UDF-ன் ஒரு பகுதி UMP-உடன் சேராமல் 130 தொகுதிகளில் சொந்த வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

பாராளுமன்ற இடது, தங்களை "ஐக்கிய இடது" என்று அழைத்துக் கொண்டிருப்பினும், சிதறுண்ட நிலையில் பாராளுமன்ற தேர்தல்களில் நுழைந்துள்ளனர். 34 தொகுதிகளில் மட்டும் அனைத்து இடதுசாரி கட்சிகளாலும் ஆதரிக்கப்பட்ட கூட்டு வேட்பாளராக இருக்கின்றனர். மற்றும் 130 தொகுதிகளில் அவர்களுள் சிலரால் ஆதரிக்கப்படும் கூட்டு வேட்பாளர்கள் நிற்கின்றனர். எஞ்சியுள்ள அனைத்து தொகுதிகளிலும், ஒவ்வொரு கட்சியும் அதனது சொந்த வேட்பாளரை நிறுத்தி உள்ளன. சோசலிசக் கட்சி 574 வேட்பாளர்களைக் கொண்டிருக்கிறது, கம்யூனிஸ்ட் கட்சி 500 வேட்பாளர்களைக் கொண்டிருக்கிறது, பசுமைக் கட்சியினர் 465 வேட்பாளர்களைக் கொண்டிருக்கின்றனர், ஜோன்-பியர் செவனுமோ ரிபப்ளிகன் போல் (Jean-Pierre Chevènement's Republican Pole) 400 வேட்பாளர்களையும் முதலாளித்துவ தீவிரவாதக் கட்சி (Bourgeois Radical Party) 50 வேட்பாளர்களையும் கொண்டிருக்கின்றது.

பழமைவாதிகளைப் பொறுத்தவரை வலதுசாரியினரிடமிருந்து போட்டி இருக்கக் கூடும். தேசிய முன்னணி 563 வேட்பாளர்களை நிறுத்திக் கொண்டிருப்பதுடன், சில பார்வையாளர்கள் அவர்கள் இரண்டாவது சுற்றில் 237 தொகுதிகளில் நிற்பார்கள் என எதிர்பார்க்கின்றனர். இப்பொழுதுவரை, சிராக் அதிவலதுசாரிகளுடன் பகிரங்க தேர்தல் கூட்டை வைப்பதை நிராகரித்திருக்கிறார், அதேவேளை உண்மையில் பல மட்டங்களில் அங்கு ஒத்துழைப்பு இருந்து வருகிறது.

தீவிர இடதுசாரி கட்சியினர், ஜனாதிபதி தேர்தலில் முதல் சுற்றில் எல்லோரும் சேர்ந்து பத்து சதவீத்த்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றனர், இரண்டாவது சுற்றை அடைவதில் அவர்களுக்கு மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளது. பெரும்பலான தொகுதிகளில் அவர்கள் ஒருவருக்கு எதிராக மற்றொருவரை நிறுத்தி உள்ளனர்-Lutte Ouvrière (LO) 560 வேட்பாளர்களுடனும், The Ligue Communiste Révolutionnaire (LCR) 440 வேட்பாளர்களுடனும், மற்றும் The Parti des Travailleurs (PT) 200 வேட்பாளர்களுடனும் போட்டி இடுகின்றனர்.

வலதுசாரிகளின் "பலம்"

சிராக்கினதும் வலதுசாரியினதும் சாதகமான நிலை அவர்களின் கொள்கைகளுக்கான எந்தவித பரந்த ஆதரவின் அடிப்படையைக் கொள்ளவில்லை, மாறாக அரசியல் கோழைத்தனம் மற்றும் இடதுகளின் திவாலை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்த நிலைப்பாடு ஜனாதிபதி தேர்தலில் தெளிவாக தெரியத் தொடங்கி இருந்தது மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலில் முதல் சுற்றில், அளிக்கப்பட்ட அனைத்து வாக்குகளில் ஐந்தில் ஒரு பங்கைக்கூட சிராக் வெல்லவில்லை மற்றும் முதலாளித்துவ வலதுகளின் வேட்பாளர்கள் அனைவரும் சேர்ந்து 1995ல் நடந்த கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் நாற்பது இலட்சம் வாக்குகளை இழந்தனர். எவ்வாறாயினும், பாரம்பரிய வலதுகளுக்கான இந்தவாக்குகளில் வீழ்ச்சி, ஆளும் இடது கூட்டணிக்கு இலாபமாக அமையவில்லை, அது அதன் வாக்காளர்களுக்கு கசப்பான நம்பிக்கையைத் தந்திருந்தது. அதிவலதுசாரி தேசிய முன்னணி இலாபமடைந்தது. லுபென், முன்னாள் பிரதமரும் சோசலிச கட்சி வேட்பாளருமான லியோனல் ஜோஸ்பனை போட்டியிடவிடாது அகற்றி, இரண்டாவது சுற்றில் சிராக்கிற்கு எதிராகப் போட்டி இட்டார்.

ஜனாதிபதி தேர்தலில், உத்தியோகரீதியான இடது கட்சிகள் சிராக்கிற்கு அவரது எளிதான வெற்றியை உறுதிப்படுத்தும் வண்ணம் தங்களின் ஆதரவை அளித்தன. சிராக், பதிவான அனைத்து வாக்குகளிலும் 80 சதவீதத்தை வென்றார்.

சிராக்கிற்கான வாக்கு அவரது கொள்கைகளுக்கானதாய் குறிக்கவில்லை, மாறாக "குடியரசின் மதிப்புக்களுக்காக" வே ஆகும் என்று இடதுகள் கூறினர் மற்றும் இந்த வாதத்தை ஊழல்மிக்க மற்றும் செல்வாக்கிழந்த கோலிச ஜனாதிபதிக்கு சாதகமான அவற்றின் பிரச்சாரத்திற்கு நியாயப்படுத்தப் பயன்படுத்தினர். சிராக் அதிகம் வாக்குகள் வாங்க, அவர் மிகப் பலவீனமாக இருக்க நேரும், ஏனெனில் பரந்த வெற்றியானது அவரது மறு தேர்ந்தெடுக்கப்படலுக்கு அவரது எதிர் கட்சியினருக்கு கடப்பாடுடையவர் என்பதை விளக்கிக் காட்டும் என சில இடதுசாரி அரசியல்வாதிகள் வாதிக்கின்றனர்.

சிராக், அவரைப் பொறுத்தவரை, அத்தகைய காட்டிக்கொள்ளலால் கவலைப்படவில்லை மற்றும் அவரது எதிர்பாராத தீர்க்கமான தேர்தல் வெற்றியை நல்லமுறையில் அவர் பயன்படுத்திக் கொள்கிறார்.

அவரது சொந்த முகாமில், முன்னர் அவரது நிலை ஐயத்திற்கிடமானதாக இருந்தது, அவர் இப்பொழுது உண்மையில் சவால் செய்யமுடியாத நிர்வாகியாக அதிகாரம் செலுத்துகிறார். அவரது பெரும் உட்கட்சி போட்டியாளர்கள்- 1995 ஜனாதிபதி தேர்தலில் அவரது போட்டியாளராக இருந்த எட்வார்ட் பலடூர் மற்றும் பாரிசின் கடந்தகால ஓடுகாலி மேயரான, ஜோன் திபேரி போன்றோர் - அவருடன் சமரசமாகப் போயிருப்பதுடன் ஜனாதிபதி பெரும்பான்மை கட்சியான UMP பட்டியலில் வேட்பாளராக நிற்கின்றனர்.

யு.டி.எப் பின் தலைவரான பிரான்சுவா பேய்ரு (François Bayrou) மட்டும்தான் சிராக்கைத் தொடர்ந்து எதிர்க்கின்றார் மற்றும் யு.எம் பி-ல் சேர மறுக்கிறார். எவ்வாறாயினும், அவரது சொந்தக் கட்சியின் 67 எம்பிக்களில் பன்னிரண்டுபேர் மட்டுமே அவரை ஆதரிக்கின்றனர். எஞ்சியோர் தாங்கள் யு.எம்.பி க்கு எதிராக நின்றால் தங்களின் இடங்களை ஜூன் 9-ல் இழந்துவிடுவோம் என அஞ்சுகின்றனர்.

அவரது மே5 மறுதேர்வினைத் தொடர்ந்து, சிராக் பெரு முதலாளிகளின் பிரதிநிதிகள் மற்றும் நெருங்கிய நம்பிக்கையாளர்களால் மேலாதிக்கம் செய்யப்படும் புதிய அரசாங்கத்தை நியமித்திருக்கிறார். தற்போது அரசு எந்திரத்தில் உள்ள அனைத்து மூலோபாய ஸ்தானங்களும் வலதுசாரி அரசியல் வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டன: ஜனாதிபதி, செனட் மிக முக்கியமான நிர்வாக வட்டாரங்கள், ஐரோப்பிய மட்டத்தில், எதிர்கால ஐரோப்பாவிற்கான பேரவை, அது முன்னாள் யு.டி.எப் தலைவர் Valéry Giscard d'Estaing-ஆல் தலைமை தாங்கப்படுகிறது.

அரசாங்கத்தின் புதிய தலைவராக, பிரமதர் ஜோன் பியர் ரஃப்ரன் (Jean-Pierre Raffarin) (DL), பாராளுமன்றத் தேர்தல்களை அணுகும் கண்ணோட்டத்தில் நியமிக்கப்பட்டார். அவர் சிராக்கின் விசுவாசமான பின்பற்றாளர், அவர் ஏற்கனவே ஜனாதிபதியின் அனைத்து ஆணைகளுக்கும் கீழ்ப்படிபவராவார், அதேவேளை சமரசவாதி மற்றும் சமூப் பேச்சாளன் எனக் கருதும் அதேவேளை, இன்னும் ஐந்தாண்டுகால "கூட்டரசாங்க வாழ்க்கை" யிலிருந்து, அதாவது வலதுசாரி ஜனாதிபதி மற்றும் இடதுசாரி அரசாங்கம் இவற்றின் சேர்க்கையிலிருந்து விளையும் அரசியல் செயலிழந்த தன்மையை கட்டாயம் தவிர்க்க எண்ணும் இடது முகாமிலிருக்கும் வாக்காளர்களை அவர் ஈர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறார்.

இது துல்லியமாக ரஃபரன் தேர்தல் பிரச்சாரத்தின் மையக் கருத்தாகும். சீர்திருத்தங்கள் அமைதி மற்றும் ஒருங்கிசைவான சூழலில்தான் சாத்தியம், மோதலின் பின்னணியில் அல்ல என அவர் போதனை செய்கிறார். கூட்டரசாங்க வாழ்க்கை பிரெஞ்சு மக்களின் ஐக்கியத்துடன் ஒத்தியலக்கூடியதல்ல மற்றும் அரசாங்கத்தை செயலூக்கத்துடன் செயலாற்றுவதில் இருந்து தடுக்கிறது என அவர் கூறுகின்றார். இந்த வாதத்தைப் பயன்படுத்தி சோசலிச கட்சியின் கூற்றுக்களை வரவழைக்கிறார், ஜோஸ்பன் அரசாங்கத்தின் ஐந்து ஆண்டுகளின் பொழுது தொடர்ச்சியாக கூட்டரசாங்க வாழ்க்கை நாட்டுக்கு தீங்கானது என்று புகார்கூறியது. ஜோஸ்பன் அமைச்சரவையின் தலைவர் ஒலிவர் ச்ரமெக் (Oliver Schrameck) கூட அந்த விஷயத்தைப் பற்றி புத்தகம் எழுதினார்.

குறைந்தபட்சம் தொழிற்சங்கங்களைப் பொருத்த அளவில், ரஃபரனது பிரச்சாரம் வெற்றிகரமாக இருந்து வருகிறது. அண்மைய காலங்களில், அனைத்து ஐந்து தேசிய தொழிறசங்க கூட்டமைப்புகளின் தலைவர்கள் அரசாங்கத்தின் இருக்கையான மார்டினியோனுக்கு விஜயம் செய்தனர் மற்றும் புதிய பிரதமரையும் "சமூக ஒருங்கிணைப்பு (social dialogue)" இல் ஈடுபடும் அவரது விருப்பத்தையும் புகழுதலை முன்னெடுத்தனர். கருத்துக் கணிப்பின்படி, 60 சதவீத பிரெஞ்சுக்காரர்கள் அவர் பதவி ஏற்ற நான்கு வாரங்களுக்கு பின்னால் ரஃபரனுடன் திருப்தி அடைந்திருக்கின்றனர்.

இருப்பினும், முக்கிய அமைச்சகங்கள்- உள்துறை, வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு மற்றும் நீதி- ஆகியனவற்றில் சிராக்கின் அதிவலதுசாரி பின்பற்றாளர்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் கடுமையான சட்டம் ஒழுங்கு கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேசிய முன்னணி வாக்காளர்களை வெல்ல நோக்கம் கொண்டிருக்கின்றனர்.

பெரும் அளவில் இடதுசாரிகளைத் திடுக்கிடச் செய்யும் விதமாக, சிராக் முகாமின் முன்னணி பிரதிநிதிகள் தாங்கள் அதிவலதுசாரிகளுக்கு எதிராக "ரிப்ப்ளிகன் பிரண்ட்" உடன் ஒட்டிக் கொள்ள விரும்பவில்லை என தெளிவுபடுத்தி இருக்கின்றனர், ஜனாதிபதி தேர்தல்களில் சிராக்கிற்கான அதன் ஆதரவை நியாயப்படுத்த இடதுகள் அதனை ஊக்கி உதவி இருந்திருக்கின்றனர்.

கோலிச RPR-ன் தலைவர் சேர்ஜ் லுபெலெட்டியே (Serge Lepeltier) RTL தொலைக் காட்சியில் இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவாக UMP வேட்பாளர்கள் வாபஸ் பெறமாட்டார்கள், இரண்டாவது சுற்றில் இடது, வலது மற்றும் தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு இடையில் மோதல் இருக்கவேண்டும் என்று அறிவித்தார். தேசிய முன்னணியின் கோட்டையான, பிரான்சின் தெற்குப் பகுதியில் உள்ள வார் நிர்வாகப் பிராந்தியத்தின் கோலிச தலைவர் ஜோர்ஜ் கினெஸ்டா கோலிச வேட்பாளர்களின் எந்தவிதமான வாபஸ் பற்றியும் ஆணித்தரமாக மறுத்திருக்கிறார். இது தேசிய முன்னணியின் பல வேட்பாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கு வழி அமைக்க முடியும்.

இருப்பினும், UMP-ன் ஏனைய பிரதிநிதிகள் தேர்தலின் முதல் சுற்றுக்குப் பின்னர்தான் யு.எம்.பி அதன் தந்திரத்தை முடிவு செய்யும் மற்றும் லுபெலெட்டியே மற்றும் கினெஸ்டா தங்களது தனிப்பட்டமுறையில் மட்டும் பேசி இருக்கின்றனர் என வலியுறுத்தினார்கள்.

இடதுசாரிகளின் அரசியல் திவால்

முதலாளித்துவ வலதுசாரிகளுக்கு மாறுபாடாக, பாராளுமன்ற இடதுசாரிகள் வீழ்ச்சி மற்றும் சிதறுண்டுபோதல் காட்சிகளை முன்வைக்கின்றனர். ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் அழிவுகரமான தோல்விகளில் இருந்து எந்த படிப்பினைகளையும் பெறமுடியாதவர்களாய், இடதுசாரி அலுவலர்கள் உள்முக சண்டைகளிலும் போட்டி சச்சரவுகளிலும் ஒருவரை ஒருவர் பிளவுபட்டு பிரிந்து கொண்டுள்ளனர்.

சோசலிசக் கட்சிக்குள் கொள்ளை அடிக்கப்பட்ட செல்வம் பிரிக்கப்படுவதற்கு அதிகமாய் இல்லாவிட்டாலும் அதனைப் பங்குபோடுவது தொடர்பான போராட்டம் தொடங்கி விட்டது. ஜோஸ்பனின் வாபஸைத் தொடர்ந்து கட்சியின் தலைமையை பிரான்சுவா ஒலாண்ட் பொறுப்பெடுத்தார். அவர் ஒரு சோம்பித்திரியும் அதிகாரத்துவம் ஆவார், அவர் எப்பொழுதும் ஜோஸ்பனின் விசாவாசமான பின்பற்றாளராகக் கருத்தப்பட்டு வந்திருக்கிறார்.

எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக, இடதுசாரிகள் வென்றால் ஒலான்ட் அரசாங்கத்தின் தலைவராக ஆவார் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறார். முந்தைய அனைத்து முன்று கூட்டரசாங்க வாழ்க்கையிலும், பெரும்பான்மைக் கட்சியின் தலைவரை பிரதமராக ஜனாதிபதி நியமித்திருந்தார். ஆனால் ஜோஸ்பனின் அரசாங்கத்தில் முன்னாள் நிதி அமைச்சராக இருந்த டொமினிக் ஸ்ட்ரவுஸ்கான், இந்த மாத தேர்தலில் இடதுசாரிகள் வெற்றி பெறும் பட்சத்தில், ஒலான்ட் பிரதமராக உரிமை கோருவதை சவால் செய்யும் சந்தர்ப்பத்தை ஒருபோதும் தவறவிடமாட்டார். ஸ்ட்ரவுஸ்கான் ஒரு வானொலி பேட்டியில் "தானியங்கிமுறை (பிரதமரை நியமிப்பதில்) இல்லை, இது பொதுவாக உடன்பட்டது" என்றார்.

முன்னாள் ஜனாதிபதி மித்திரோனின் கீழ் பிரதமராக இருந்த, லோரண்ட் ஃபாபியுஸ், ஒலான்ட் க்காகக் காத்திருக்கும் இன்னொரு போட்டியாளர். இருப்பினும் அவர் பகிரங்கமாக அவரை சவால் செய்வதிலிருந்து விலகி இருக்கிறார். ஸ்ட்ரவுஸ்கான் மற்றும் ஃபாபியுஸ் அதிவலதுசாரி, புதிய தாராண்மைப் பொருளாதாரக் கொள்கைக்காக நிற்கின்றனர் மற்றும் சிராக்குடன் ஒத்துப்போவதில் கஷ்டத்தைக் காண்பதை அரிதாகவே கொண்டிருப்பர்.

சோசலிசக் கட்சியின் தலைவர் பாத்திரத்திற்கான இன்னொரு பாசாங்கை செய்பவர், முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஜாக் டுலோர் இன் மகளான மார்ட்டின் ஓப்ரி ஆவார். லீல் மாநாகரத்தின் மேயராக ஆவதற்கு வேண்டி சில காலங்களுக்கு முன்னர் அவர் அரசாங்கத்திலிருந்து கழன்று கொண்டார், அதற்கு பொதுவாக உயர் மட்டத்தில் பணி ஆற்றுதற்கான தயாரிப்பு என விளக்கம் கொடுக்கப்பட்டது. அவர் சோசலிசக் கட்சியின் தேர்தல் வேலைத் திட்டத்தை தயாரித்தார், அது ஜோஸ்பன் அரசாங்கத்தின் ஆரம்பகாலங்களில் இருந்து சில இடது ஒலி கொண்ட சொற்றொடர்களை திரும்பக் கூறுவதாக இருந்தது. வலதுசாரிக் கொள்கைகளுக்கான மூடுதிரையாக மட்டுமே இந்த சொற்றொடர்களை ஜோஸ்பன் பயன்படுத்தினார். ஜோஸ்பனுடனான அனுபவத்தைத் தொடர்ந்து, சிலர் அத்தகைய வாய்ச்சவடால்களை அக்கறையுடன் தொடர்ந்து எடுத்துக்கொள்கின்றனர்.

சோசலிசக் கட்சிக்குள்ளேயான சூழ்ச்சிகளைத் தொடர்ந்து கவனித்துவரும் லிபரேசன் நாளிதழானது, சோசலிஸ்டுகள் "தேர்தலில் வெல்ல விரும்பாத பாதிப்பை விட்டுச் செல்கின்றனர்" என முடித்தது. லிபரேசன் படி, அவர்கள் 2002 பாராளுமன்ற தேர்தலைவிடவும் 2007 ஜனாதிபதித் தேர்தலை குவிமையப்படுத்துகின்றனர்.

ஜோஸ்பன் அரசாங்கத்தின் முதலாவது வருடங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்திருக்கும் பசுமைக் கட்சியினர், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உள்ள பசுமைக் கட்சியினரின் தலைவரான டானியல் கோன் - பென்டிட் முன்வைக்கிறவாறு, இப்பொழுது "கலைப்பு நிலையில்" உள்ளனர். அவர்கள் வானொலி, தொலைக்காட்சிகளில் விளம்பரம் மற்றும் பிரச்சாரங்களுக்கு மனுச்செய்வதற்கான இறுதிக்கெடுவைக்கூடத் தவறவிட்டனர், மற்றும் பெரும்பாலும் அவை இல்லாமலேயே செய்வர். பெரும்பான்மை வாக்களிப்பு முறை இடதுசாரிகளுக்கு மற்றைய கட்சிகள் ஆதரவளிக்கும் சில தொகுதிகளில் சிறிதளவு வாய்ப்பையே நல்குகிறது.

இதற்கிடையில், கோன்-பென்டிட் வலதுசாரியினரிடமிருந்து புதிய கூட்டாளிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார் மற்றும் யு.டி.எப் தலைவர் பிரான்சுவா பேய்ரு (François Bayrou) க்கு அவரது ஆதரவுக் குரலை எழுப்பி உள்ளார். "இரண்டாவது சுற்றின்பொழுது அவரது சொந்த பாராளுமன்ற கூடலை நோக்கி பெய்ருக்கு உதவ வாய்ப்பு இருந்தால், நாம் அதனைப் பயன்படுத்துவோம்" என அவர் ராய்ட்டர் செய்தி முகவரிடம் தெரிவித்தார். "மொத்தத்தில் இடதுசாரிகள் வெல்ல வாய்ப்பில்லாத வெர்சாயில்ஸில், அந்தமாதிரி நிலையில் ஜனாதிபதி பெரும்பான்மையின் வேட்பாளர்களுக்கு எதிராக நாம் (யு.டி.எப் வேட்பாளரை) ஜெனரால் மொரியோனை ஆதரிக்க வேண்டும்."

பாராளுமன்ற இடதுகள் மத்தியில் உடன்பாடான ஒரே ஒரு விஷயம் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPF) எதிர்காலம் பற்றிய பொதுவான அக்கறை ஆகும். அதன் வேட்பாளர் றொபர்ட் ஹியூ துன்பகரமாக 3.4 சதவீதம் பெற்றதுடன் முடிவடைந்தது, கட்சியின் வரலாற்றில் மிக அழிவுகரமான தேர்தல் தோல்வி ஆகும்.

நிதிரீதியாக பலவீனம் அடைந்த அமைப்புக்கு, பாடகர் ஜூலியட் ஜெகோ மற்றும் நடிகர் ஜெரா டிபார்டியு உட்பட முக்கிய பிரபலங்கள் பலர் நன்கொடை அளித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் மேரி ஜோர்ஜ் அறிவிப்பதில் பெருமைகண்டவாறு, யு டி எப் தலைவர் பெய்ரு நன்கொடையாளருகளுள் ஒருவராக இருந்தார். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் சேவைகளை இழந்துவருவது கண்டு முதலாளித்துவ நிறுவனம் எச்சரிக்கையாக இருக்கின்றது.

அனைத்து இடதுசாரி கட்சிகளாலும் ஆதரிக்கப்படும் 34 கூட்டு வேட்பாளர்களுள் றொபர்ட் ஹியூவும் ஒருவர். ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அவர், பாரிசுக்கு அருகில் அமைந்திருக்கும், அவரது தொகுதியான அர்ஜென்ரை இல் 57 சதவீத வாக்க்களைப் பெற்றார். ஆனால் இன்று, கம்யூனிஸ்ட் கட்சியின் ஏனைய எம்பிக்களைப் போல தேசிய முன்னணியின் அழுத்தத்தின் கீழ் வந்திருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில், ஜோன் மேரி லுபென் 19 சதவீத வாக்குகளை வென்றார் முன்னாளைய கம்யூனிஸ்ட் கோட்டையில் முன்னணி இடத்தையும் பெற்றனர், அதேவேளை ஹியூ வெறும் 10 சதவீதம் பெறுவதில் அது முடிந்தது.

சோசலிசக் கட்சியின் தலைவரான ஒலான்ட் அவரது "நண்பர்" ஹியூவுக்கு பிரச்சாரம் செய்வதற்கு அர்ஜென்ரை க்கு சென்றார். அவர்கள் ஒருவரை ஒருவர் பாராட்டு மழைகளைப் பொழிந்து கொண்டனர், மற்றும் "ஐக்கிய இடதுகளுக்கு" சூளுரை செய்து கொண்டனர், அது "இடதுசாரி மற்றும் வலதுசாரி கருத்துக்களின் தேவையான மோதலுக்கு தவிர்க்க முடியாததாய் இருந்தது" என்று அவர்கள் கூறினர்.

பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கன்னையின் தலைவர் அலன் பொக்கே அவரது தொகுதியான வடக்கு பிரான்சில் தேசிய முன்னணியால் சவால் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார். அங்கு ஜனாதிபதி தேர்தலில் லுபென் 23 சதவீதத்தைப் பெற்றார், அது அவரை ஜோஸ்பனை விடவும் 7 புள்ளிகள் முன்னணியில் நிறுத்தியது. அதற்கு மாறாக, கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு 1995 க்குப் பின்னர், 20 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக வீழ்ச்சியுற்றது. தேசிய முன்னணியின் வேட்பாளர், கார் லாங், தான் "பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோல்வியை உறுதிப்படுத்துவதாக" வும் அது பன்மை இடதுகளின் அதிதாராண்மைவாத கொள்கையுடனும் பிரஸ்சல்ஸின் அதி பூகோளமய கொள்கைகளுடனும் ஒத்துழைத்து வருகின்றது" எனவும் அறிவித்தார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved