ஆசியா
:
ஆப்கானிஸ்தான்
Was the US government alerted to September 11 attack?
அமெரிக்க அரசாங்கம் செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட்டதா?
பகுதி 2: விமானக் கடத்தல்காரர்களைக் கண்காணித்தல்
By Patrick Martin
18 January 2002
Back to screen version
இந்தக் கட்டுரைத் தொகுதியின்
முதலாவது பகுதி தமிழில் ஜனவரி21 ம் திகதி புதன்கிழமை வெளியிடப்பட்டது.
அமெரிக்க அரசாங்கமானது உளவுத்தகவல்களைத் திரட்டவும் தொலைத் தொடர்பு செய்திகளை
கண்காணிக்கவும் உலகின் மிகப்பெரிய நிறுவனத்தை பராமரித்து வருகிறது. இது சி.ஐ.ஏ, எப்.பி.ஐ, தேசிய பாதுகாப்பு
நிறுவனம், பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம், பாதுகாப்பு சமிக்ஞைகளை இடையீடு செய்யும் நிறுவனம் முதலிய பல அமைப்புக்களைக்
கொண்டிருக்கிறது. இது ஒரு ஆண்டுக்கு 30 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய, ரகசியமான, மாறிமாறி அமைக்கக்கூடிய
வரவு- செலவுத் திட்டத்தால் நிதியூட்டப்படுகிறது.
புஷ் நிர்வாகத்தின் கூற்றுக்கள் இருந்தபோதும், இந்த பெரிய தேசியப் பாதுகாப்பு
நிறுவனமானது, கிட்டத்தட்ட இரண்டு டஜன் பேர்கள் வணிக விமானங்களைக் கடத்தி உலக வர்த்தக மையக் கட்டிடத்தின்
மீதும் பென்டகன் மீதும் மோதத் தயாரிப்பு செய்துகொண்டிருந்தார்கள் என்பது பற்றி மிகச்சிறிய அறிகுறியைக்கூடக்
கொண்டிருக்கவில்லை என்பது பற்றி கீழ்ப்படியும் மனோபாவம் கொண்ட அமெரிக்கப் பத்திரிகைகளிடமிருந்து அதிருப்தி
எதுவும் இல்லை. அது கிட்டத்தட்ட 3000 அமெரிக்கக் குடிமக்களின் உயிரைக் குடித்தது என்ற உத்தியோக ரீதியிலான
அறிவிப்பு நம்பப்படுமானால், தகுதிக்கேடாகப் பார்க்கப்படும் அவர்களை அகற்றுவதற்கு அங்கு எந்தவிதமான பகிரங்கமான
உரத்த குரலும் இல்லாதிருக்கிறது.
இருப்பினும், கடந்த நான்கு மாதங்களாக வெளிப்பட்டவை, செப்டம்பர் 11 நிகழ்வுகளில்
இருந்தும் அவற்றுக்கு அமெரிக்க இராணுவ உளவுத்துறையின் சிக்கலான நிலை தொடர்பாகவும் மிகவும் வேறுபட்டதாக
இருக்கின்றன. முந்தைய பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி வெளிநாட்டு உளவுத்துறை மற்றும் அமெரிக்க புலனாய்வுத் துறையிடமிருந்து
தொடர்ந்த முன்கூட்டிய எச்சரிக்கைகள் அங்கு இருந்தது மட்டுமல்ல, (அமெரிக்க அரசாங்கம் செப்டம்பர் தாக்குதல்
தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட்டதா? பகுதி 1: முன்கூட்டிய எச்சரிக்கைகள்) ஒசாமா பின் ்லேடனையும்
அல் கொய்தாவில் உள்ள அவரது உதவியாளரையும் சரீரரீதியாகவும் மின்னணுவியல் ரீதியாகவும் சமகாலத்தில்
கவனக் கண்காணிப்பு செய்ததிலிருந்து கணிசமான அளவுக்கு தகவல்களை அமெரிக்க அரசாங்கமே
கொண்டிருந்தது.
பின் லேடனை மின்னணுவியல் முறை மூலம் கண்காணித்தல்
தேசிய பாதுபகாப்பு முகவான்மை (ஏஜென்சி) பின் லேடனதும் அவரது கூட்டாளிகளதும்
மின்னணுவியல் செய்தித்தொடர்புகளை உண்மையில் ஒரு சமயம் முற்றிலும் பெறக்கூடியதாக இருந்தது என்பது நன்கு அறிந்ததே.
1998 ஆகஸ்டில் கென்யாவிலும் தான்சானியாவிலும் அமெரிக்கத் தூதரகங்களில் குண்டு வெடிப்பிற்கு இட்டுச்சென்ற காலகட்டத்தில்
கண்காணிப்பானது, தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் பின் லேடனுக்கும் அவரது தாயாருக்கும் இடையிலான
தொலைபேசிக் கலந்துரையாடலை திரும்பப் போட்டுக் காட்டி உயரதிகாரிகளை ஈர்க்கும்படி செய்தது மற்றும்
அவர்களது நாடாளுமன்ற மசோதாக்களுக்கு உதவியாகவும் இருந்தது -அந்த அளவுக்கு கண்கானிப்பு தீவிரமாக இருந்தது.
ஒரு கணக்கின்படி, தேசியப் பாதுகாப்பு முகவான்மை ஆப்கானிஸ்தானில் பின் லேடன்
பயன்படுத்திய செயற்கைக் கோள் தொலைபேசியில் உண்மையில் ஒவ்வொருநிமிட கலந்துரையாடலையும் பதிவு செய்திருந்தது.
அல் கொய்தா தலைவருக்கு நியூயோர்க் நகரத்தில் லாப்டாப் (சிறு பெட்டி வடிவிலான கணினி) பொறி ஒன்று வாங்கப்பட்டது,
அதில் அவர் டஜன் நாடுகளில் உள்ள ஆதரவாளர்களுடன் 2000க்கும் மேற்பட்ட, முன்னரே பணம்செலுத்தப்பட்ட நிமிடங்களை
தொலைபேசிக்கு செலவிட்டிருக்கிறார்- அந்த உண்மை அவர் உலகின் மாபெரும் சதியாளருக்கு சற்று குறைவானவராகக்
கருத்துரைக்கிறது. (Source: Los Angeles
Times, September 21, 2001, "Hate Unites an EnemyWithout an Army," by Bob
Drogin; Chicago Tribune, September 16, 2001,"Bin Laden, associates
elude spy agency's eavesdropping," by ScottShane)
ஜனாதிபதி கிளின்டனால் ஆணையிடப்பட்ட குரூஸ் ஏவுகணைத் தாக்குதலுக்கு கிழக்குப் பாக்கிஸ்தானில்
உள்ள பயிற்சி முகாம்களை பென்டகன் இலக்கு வைக்க, கண்காணிக்கப்பட்ட செய்தித் தொடர்புகள் பென்டகனுக்கு
உதவுகிறது என்று பின் லேடன் அறிந்த பின்னர், இந்த வாய்ப்பானது முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது என்று அமெரிக்க
அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தனர். அல் கொய்தா தலைவர்கள் தொலைபேசிகளையும் ஏனைய மின்னணுவியல் சாதனங்களையும்
பயன்படுத்துவதை நிறுத்தினர், எளிதில் கண்காணிக்க முடியாத ஏனைய தொடர்புச் சாதன வடிவங்களையும் தனியார்
அஞ்சல்களையும் நாடினர் என்று அவர்கள் கூறினார்கள்.
அத்தகைய கூற்றுக்கள் பல துறைபோகிய கண்காணிப்பாளர்களால் அமெரிக்காவின் பொய்யான
தகவல் என நிராகரிக்கப்படுகின்றன. நீண்டகால எகிப்திய பத்திரிகையாளரும் முன்னாள் அரசாங்கப் பேச்சாளருமான
முகம்மது ஹெய்க்கல், பிரிட்டிஷ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், பின் லேடனும் அவரது அல் கொய்தா அமைப்பினரும்
அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்குத் தெரியாமல் செப்டம்பர் 11 தாக்குதலை நடத்தி இருக்க முடியாது என்று நம்பிக்கையின்மையைத்
தெரிவித்தார்: " பின் லேடன் பல ஆண்டுகளாக கவனக்கண்கானிப்பின் கீழ் இருந்தார்: ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும்
கண்காணிக்கப்பட்டதுடன் அல் கொய்தா அமைப்பு அமெரிக்க உளவு நிறுவனம், பாக்கிஸ்தானிய உளவு நிறுவனம், செளதி
உளவு நிறுவனம் மற்றும் எகிப்து உளவு நிறுவனத்தால் ஊடுருவல் செய்யப்பட்டது. அந்த அளவு நவீனமயமும் ஸ்தாபன பலமும்
தேவைப்படும் நடவடிக்கையை அவர்களால் ரகசியமாக வைத்திருக்க முடியாது."
(Source: Heikal interview with the Guardian,
October 10, 2001)
பின் லேடனின் நடவடிக்கைகள் பற்றிய உயர்ந்த மட்டத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் பூகோள
செயல்பரப்பு பற்றி அமெரிக்க அரசாங்கம் பெருமிதமாய்க் கூறிக் கொள்ளுகையில் மின்னணுவியல் கண்காணிப்பு பலன்களைத்தரவில்லை
என்ற கூற்று குறைவாக நம்பக்கூடியதாக இருக்கிறது. மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க
ஐக்கிய அரசுகளில் தாக்குதலை நடத்தக் கூடிய உலக ரீதியான வலைப்பின்னலை இயக்குவதில் தகவல்களை மின்னணுவியல்
ரீதியாக பரிமாறிக்கொள்வது எதையும் தவிர்த்தல் நடைமுறையில் இயலாததாக இருக்கும்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தலைவர் இல்லை என்றால், பின் லேடனின் கூட்டாளிகள்
மின்னணுவியல் தொடர்புச் சாதனங்களைப் பயன்படுத்தி இருக்கின்றனர் மற்றும் இவை அமெரிக்க முகவான்மைகளால்
கண்காணிக்கப்பட்டிருக்கிறது என்று கூறும் சிதறிய தகவல்கள் பத்திரிகையில் இடம் பெற்றிருக்கின்றன.
கடந்த ஆண்டு நியூயோர்க் நகரத்தில் பின் லேடனின் ஆதரவாளர்களின் வழக்கு பற்றிய செய்திகளைத்
தொகுத்து வந்த யு.பி.ஐ செய்தித்தொடர்பாளர் ரிச்சர்ட்சேல், தேசியப் பாதுகாப்பு முகவாண்மை பின் லேடனின்
இரகசிய மொழியில் அனுப்பப்பட்ட செய்தித் தொடர்புகளை உடைத்திருந்திருந்தது என்று செய்தி அறிவித்திருந்தார். அமெரிக்க
அதிகாரிகள் "செப்டம்பர்11 தாக்குதல்களுக்கான திட்டமிடல் பெரும்பாலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமானது
என நம்புவதை" ( New York Times, October 14,
2001) எடுத்துக் கொண்டால், செப்டம்பர் 11க்கான தயாரிப்புக்கள்
பற்றிய தகவல்களில் சில மின்னணுவியல் இடைமறிப்பு இருந்தது என்று இது கருத்துரைக்கிறது.
(Source: United Press International, February
13, 2001)
அல் கொய்தா செய்தித் தொடர்புகளை மற்றும் செப்டம்பர்11 தாக்குதல்களுக்கு நெருக்கமானவற்றை
-வெற்றிகரமாக அமெரிக்கா கண்காணித்து வருவது பற்றிய தெளிவான கருத்துரைப்பு-- தேசிய பாதுகாப்பு அமைப்பில்
பழமைவாத குடியரசுக் கட்சிக்காரர், உட்டா செனட்டர் ஒரின் காட்சால் வழங்கப்பட்ட அறிக்கையாக இருந்தது. அவர்
செப்டம்பர் 11ல் அசோசியேடட் செய்தி நிறுவனத்திடம், அமெரிக்க அரசாங்கம் பின் லேடனின் செய்தித் தொடர்புகளை
மின்னணுவியல் ரீதியாக கண்காணிப்பு செய்தது மற்றும் பின் லேடனின் இரு உதவியாளர்கள் வெற்றிகரமான பயங்கரவாதத்
தாக்குதலைக் கொண்டாடியதைக் கேட்டிருந்தனர் என்று கூறினார். பின் லேடனுடன் தொடர்புடையவர்கள் உள்ளடங்கலான
சிலரின் தகவல்களை அவர்கள் இடைமறித்ததாகவும் அவர்கள் சில இலக்குகள் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தினர்" என்றும்
அவர் செய்தி நிறுவனத்திடம் கூறினார். (Source:
Associated Press, September 11, 2001, "World Trade Centercollapses in
terrorist attack," by David Crary and Jerry Schwartz)
அதேநாள் ஏபிசி செய்திகளுக்கு அளித்தபேட்டியின் போது, சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐஅதிகாரிகள்
இருவரும் அதே செய்தியைக் கூறினார்கள் என்று திரும்பவும் இதனை வலியுறுத்தினார். அவரது கூற்று சரி என்பது புஷ் நிர்வாகத்தின்
எதிர்வினையால் எடுத்துக்காட்டப்பட்டது. பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் பாதுகாப்பை முன்னிட்டு மறைத்து
வைக்கப்பட்ட தகவல் அதிகாரபூர்வமல்லாத வெளிப்படுத்தல் என பகிரங்கமாகக் கண்டனம் செய்தார். புஷ் பின்னர் விரல்விட்டு
எண்ணக்கூடிய காங்கிரஸ் தலைவர்களுக்கு அதன் சுருக்கமான விவரத்தை திரும்பவும் எடுத்துரைக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட
போதிலும், வெள்ளை மாளிகையானது பின்னர் இந்த செய்திக்கசிவை, காங்கிரசிலிருந்து அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு
நடவடிக்கைகள் பற்றிய விவரமான தகவல்களை நிறுத்தி வைப்பதற்கு காரணமாக மேற்கோள் காட்டியது.
அல் கொய்தா செய்தித் தொடர்புகளை அதேவிதமாய் வெற்றிகரமாக கண்காணித்தது பற்றி
ஏனைய பல ஊடக செய்தி அறிவிப்புக்களும் அங்கு இருந்தன. ஜேர்மன் இதழான
Der Spiegel ஜேர்மன்
உளவு நிறுவனமான BND-
ன் அதிகாரிகள் இரண்டு பின் லேடன் ஆதரவாளர்களுக்கு இடையில் தொலைபேசியில் நடைபெற்ற கலந்துரையாடலை இடையீட்டு
மறித்துக் கேட்டதாகக் கூறியது. என்.பி.சி செய்திகள் அக்டோபர் 4 அன்று, உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் மீது
தாக்குதல் நடைபெறுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர், பின் லேடன் தனது தாயை அழைத்து "இன்னும் இரு நாட்களில்
நீங்கள் ஒரு பெரியசெய்தியைக் கேட்கப் போகிறீர்கள், மற்றும் கொஞ்ச காலத்திற்கு என்னிடமிருந்து செய்தியைக் கேட்கமாட்டீர்கள்"
என்று அவரிடம் சொன்னார் என செய்தி அறிவித்தது. வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்று இந்த தொலைபேசி அழைப்பைப்
பதிவு செய்ததாகவும் மற்றும் அமெரிக்காவிற்கு அதனை ஒளிபரப்பியதாகவும் என்.பி.சி கூறியது. அத்தகைய செய்தி அறிவிப்புக்கள்
கவனமாக, சிறப்பாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானத் தாக்குதலின்பொழுது வந்துகொண்டிருந்தது போல் கட்டாயம்
கருதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பின்வரும் முடிவுக்கு வருதலைத் தவிர்க்கமுடியாதிருக்கிறது: செப்டம்பர் 11க்குப் பின்னர்
அமெரிக்க உளவு முகவாண்மையினர் அத்தகைய தகவலைப் பெறக்கூடும் எனில், அந்த தேதிக்கு முன்னதாகவே அவர்களால்
அவ்வாறு செய்திருக்க முடியும். (Source: Toronto
Globe & Mail, October 5, 2001)
விமானக் கடத்தல்காரர்களுக்கும் அவர்களின் சக- சதியாளர்களுக்கும் மத்தியிலான உண்மையான
செய்தித் தொடர்புகளுக்கு அப்பால், செப்டம்பர் 11 பற்றி அங்கு இன்னொரு மின்னணுவியல் சிறு துப்பும் கிடைத்தது. தற்கொலை
விமானக் கடத்தல்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்னால், அங்கு அமெரிக்கன் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸின் பங்குகளில்
திடீரென்ற மற்றும் விவரிக்க முடியாத ஊகவாணிகம் இருந்தது என்று பரவலாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரு ஏர்லைன்ஸ்களின்
பங்குகளின் விலைகள், இரு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் இருயுனைடெட் ஜெட்டுகள் கடத்தப்பட்டு மோதப்பட்டதன் பின்னர்
நிகழ்ந்ததுபோல், கீழிறங்கிப் போகும் என்று பெரும் அளவிலானபணம் பந்தயப் பணமாக வைக்கப்பட்டிருநதன. வேறு
எந்த ஏர்லைன்ஸ் நிறுவனமும் அத்தகைய ஊக வாணிபத்தைக் காணவில்லை, மற்றும் பங்கு கீழ் இறங்கும் என்று பந்தயங்
கட்டி, ஆயிரங்களை "வைத்தல்" தேர்வில் வைத்திருந்த அவர்களை இனங்காணல்-- வெளிக்காட்டப்படவில்லை.
குறைந்த அளவு தெரிந்திருந்த உண்மை என்னவெனில் ப்ராமிஸ் எனும் நவீன மென்பொருளை
சி.ஐ.ஏ பயன்படுத்தி இயக்குகிறது. அது குறிப்பிட்ட தொழிற்சாலை அல்லது கார்ப்பொரேஷன் பயங்கரவாதத்
தாக்குதலுக்கு ஆளாகலாம் என முன்கூட்டி எச்சரிக்கை வழங்குவதற்கான குறிப்பிட்ட நோக்கத்திற்கான அத்தகைய திடீர்
விலை இயக்கத்தைக் கண்காணிக்கும். இந்த மென்பொருளானது நாள் முழுதும் கண்காணித்துவரும். எனவே சி.ஐ.ஏ அதிகாரிகள்
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைட்டெட் ஏர்லைன்ஸ் ஆகியன தாக்குதலுக்கு சாத்தியமான இலக்குகள் என்று செப்டம்பர்
7க்கு முன்னதாகவே எச்சரிக்கை அடைந்திருக்கமுடியும். வலதுசாரி மற்றும் கடுமையான புஷ் ஆதரவு பாக்ஸ் செய்திகள்
வலைப் பின்னலின் படி, எப்.பி.ஐ மற்றும் நீதித்துறை ஆகியன அமெரிக்க உளவுத்துறையின் ஒன்று கூடலில், கடந்த கோடையில்
ப்ராமிஸ் பயன்படுத்தப்பட்டது என்று உறுதிப்படுத்தி இருக்கின்றன. ஏர்லைன்ஸ் நிறுவனங்களையும் சரி அல்லது உள்நாட்டுப்
பாதுகாப்புக்குப் பொறுப்பான அமெரிக்க முகவாண்மைகளையும் சரி சி.ஐ.ஏ எச்சரித்ததாக எந்த குறி காட்டலும் அங்கு
இல்லை.
எத்தனை விமானக் கடத்தல்காரர்கள் அறியப்பட்டனர்?
பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிய புஷ் நிர்வாகத்தின் உத்தியோக ரீதியான கணக்கின்படி,
19 தற்கொலை விமானக் கடத்தல்காரர்கள் என்று கூறப்பட்டவர்களில் 2பேரை மட்டுமே செப்டம்பர் 11க்கு முன்னர்
அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரியும். கலில் அல்மிதாரென்பவர் மலேசியாவில் பின் லேடனின் இயக்கிகளுடன் தொடர்புபடுத்தப்பட்ட
பின்னர், கலில் அல்மிஹ்தார் மற்றும் நவாப் அல் கம்ஸி ஆகிய இவ்விருவரும் சி.ஐ.ஏ வேண்டுகோளின்பேரில் எப்.பி.ஐ
"கண்காணிப்பு பட்டியலில்" வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சிகளின் பதிப்புக்களால் தவிர்க்க முடியாத வகையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு
அமெரிக்க ஊடகத்தில் கணக்கற்ற வகைகளில் விடை சொல்வதற்கு முயற்சிக்கப்பட்டன. அமெரிக்க அரசாங்கம் உலகிலேயே
மிகவும் ஆபத்தான பயங்கரவாதி என்று முத்திரை குத்தி இருந்த மனிதனுடன் இந்த இரு மனிதர்களும் தொடர்பு கொண்டிருந்ததாக,
மிகச் செலவு மிக்க முதல் வகுப்பு ஒருவழி பயணச் சீட்டை வாங்கி, பின்னர் செப்டம்பர் 11 அன்று விமானத்தில் ஏறி
ஜெட் விமானத்தைக் கடத்த இருந்தார் என்றும் எப்.பி.ஐ மற்றும் சி.ஐ.ஏ வால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது எப்படி
சாத்தியமாகியது?
அல்மிஹ்தாரும் அல்ஹம்ஸியும் தெற்கு கலிபோர்னியாவில், சண்டியாகோ பகுதியில் கிட்டத்தட்ட
இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர், அமெரிக்காவை விட்டு ஒரு முறை வெளியேறி ஒரு முறை-- "கண்கானிப்பு
பட்டியல்" எச்சரிக்கை வழங்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் மட்டுமே மீண்டும் நுழைந்துள்ளனர். ஒரு பத்திரிகைச்
செய்தியின்படி, அல்ஹம்ஸி சாண்டியாகோ தொலைபேசி புத்தகத்தில் கூட குறிக்கப்பட்டுள்ளார் --இந்த தற்கொலை விமானக்
கடத்தல் காரர்களை தங்களின் தடங்களை அடிப்படையில் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு மறைத்திட்ட நிபுணத்துவம் பெற்ற
சதியாளர்கள் என்று ஊடகம் உருவகித்துக் காட்டியதை, அந்த உண்மை நிச்சயம் கேள்விக்குள்ளாக்கும்.
(Source: Washington Post, December 29, 2001)
இந்த இரு எதிர்கால விமானக் கடத்தல்காரர்கள் கண்டு பிடிப்பதில் இருந்து தப்பித்த
சூழ்நிலைகள் எதுவாக இருப்பினும், செப்டம்பர் 11க்கு முன்னர் இருவரும் சந்தேகத்துக்குள்ளான பயங்கரவாதியாக இனங்காணப்பட்டவர்கள்
என்ற உத்தியோக ரீதியிலான கதையின் அடிப்படை விஷயம் அனைத்தும் பொய்யானவை. இப்பொழுது அவர்களின் கூட்டாளிகள்
என நம்பப்படும் மனிதர்கள் அல்லது விமானக் கடத்தல்காரர்கள் உலக வர்த்தக மையத்தின் அழிப்புக்கு முன்னரே அமெரிக்க
போலீஸ் மற்றும் உளவு முகவாண்மைகளின் கவனத்துக்கு வந்திருந்தனர், ஆனால் அவர்கள் அவர்களது வழியில் போக அனுமதிக்கப்பட்டனர்.
யுனைட்டெட் ஏர்லைன்ஸின் ஜெட் விமானத்தில் ஏறி அதனைக் கடத்தி பென்சில்வேனியாவில்
மோதச்செய்தவர்கள் என சந்தேகத்திற்குள்ளானவர்களுள் ஒருவரான சியாட் சமிர் ஜாராவின் விசித்திரமான வழக்கு ஒன்று
அங்கு இருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் அதிகாரிகள், ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் இரண்டு மாதங்கள்
கழித்த பின்னர் ஜாரா ஜனவரி 30, 2001 அன்று ஐக்கிய அரபு எமிரேட்டுகளை வந்து அடைந்தபொழுது, அமெரிக்க
அரசாங்கத்தின்பேரில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பலமணி நேரங்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
பின்னர் அவர் ஆம்ஸ்டர்டாம் வழியாக ஹம்பேர்க் பயணிக்க அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அமெரிக்காவுக்கு பறந்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் தடுத்து வைத்திருக்க போதுமான அளவு உத்தியோக ரீதியான
அமெரிக்க அக்கறை இருந்தபோதும், அவர் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் மற்றும் பின்னர் விமானப் பயிற்சிப்
பள்ளியிலும் அவர் சேர்ந்தார். ஜாரா விமானக் கடத்தலுக்கு இரு நாட்களுக்கு முன்னர், செப்டம்பர் 9 அன்று மெரிலாண்டில்
இண்டர் ஸ்டேட் 95ல் வேகமாக சென்றதற்காக நிறுத்தப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். மெரிலாண்ட்
மாநிலப் போலீசார் வெளிப்படையாகவே அவரது பெயரைக் கணினியில் பதிவுசெய்து பார்த்தனர் மற்றும் அவர் பற்றி
ஒன்றும் காணப்படவில்லை. எட்டு மாதங்களுக்கு முன்னாள் துபாயில் அவரைத்தடுத்து வைத்திருக்கும்படி சில அமெரிக்க அரசாங்க
முகவாண்மை நாடியிருந்தபோதும், செப்டம்பர் 11க்குப் பிந்தைய விசாரணைகளுக்கு பதிலிறுக்கும் முகமாக, எப்.பி.ஐ
மற்றும் சி.ஐ.ஏ அதிகாரிகள் ஜாரா ஒரு உளவு முகவாண்மையாலும் கவனத்திற்குள்ளாகாதிருந்தார் அல்லது எந்த விதமான
கவனிக்கப்பட வேண்டிய பட்டியலிலும் வைக்கப்படாது இருந்தார் எனக் கூறினர்.
(Sources: Chicago Tribune, December 14,
2001; BaltimoreSun, December 14, 2001)
நியூஸ் வீக் இதழானது, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் உடனடியாக வெளியிட்ட
சிறப்புப் பதிப்பில், விமானக் கடத்தல்காரர்களுக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு சாதனத்திற்கும் இடையில் உள்ள பிணைப்புபற்றி
அதிர்ச்சி தரத்தக்க கூற்றைக் கூறியது. அமெரிக்க இராணுவ தகவல்களை மேற்கோள்காட்டி நியூஸ் வீக் இதழானது,
"செவ்வாய்க்கிழமை பயங்கரவாதத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானத்தின் கடத்தல்காரர்கள் என்று கூறப்படுபவர்களில்
ஐவர் 1990 களில், பாதுகாப்பான அமெரிக்க இராணுவ நிலையங்களில் பயிற்சி எடுத்தார்கள்" என்று செய்தி வெளியிட்டது.
அவர்கள் கார் பதிவு அல்லது ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்திருந்தபோது புளோரிடாவில்
பென்சாகோலாவில் உள்ள கடற்படை விமானதளத்தில் மூவர் முகவரியுடன் குறிக்கப்பட்டிருந்தனர்.
இன்னொருவர் அலபாமாவில் உள்ள மோண்ட்கோமரியில் உள்ள விமான யுத்தக் கல்லூரியில் பயிற்சி எடுத்தார் அதேவேளை
ஐந்தாமவர் டெக்ஸாஸில் சான் அன்டோனியாவில் உள்ள லாக்லாண்ட் விமானப் படைத்தளத்தில் மொழி செயல் துறைக்
கட்டளை கற்றார். பென்சாகோலாவில் பயிற்சி எடுத்தவர்கள் சயீத் அல்கம்தி மற்றும் அஹ்மது அல்நாமி என்ப் பெயர்
குறிக்கப்பட்டுள்ளார்கள், இருவரும் பெனிசில்வேனியாவில் மோதிய யுனைட்டெட் விமானம் 93ல் ஏறியவர்கள், மற்றும் அஹ்மது
அல் காம்தி யுனைடெட் விமானம் 75 ல் ஏறியுள்ளார், அது உலக வர்த்தக மையத்தின் தெற்குக் கோபுரத்தில் மோதியது.
எப்.பி.ஐ அதிகாரிகள், செனட்டர் பில் நெல்சனிடம் (டி-புளோரிடா) உலக வர்த்தக
மையம்/ பென்டகன்
விவகாரங்களுக்குப் பணிக்கப்பட்ட முகவர்கள் "இராணுவ வசதி வாய்ப்புகளுடன் எந்தவிதமான தொடர்பையும் வைத்திருந்தவர்களா
என விசாரணை செய்து கொண்டிருந்தார்கள், ஆனால் விமானக் கடத்தல்காரர்கள் அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு விஜயம்
செய்த மத்திய கிழக்கு ஆட்களிடமிருந்து, குறிப்பாக செளதி அரேபியாவிலிருந்து வந்தவர்களின் அடையாள அட்டையை
திருடிவிட்டார்களோ என்பதை உறுதிப்படுத்த முடியாததன் காரணமாக தீர்மானம் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறினர்.
பென்சாகோலா மத்திய கிழக்கில் உள்ள ஏனைய அமெரிக்க ஆதரவாளர்கள் மற்றும் செளதி அரேபியாவிலிருந்து வந்த பலர்
உள்ளடங்கலான வெளிநாட்டு விமானப் பயிற்சியாளர்களுக்கு இராணுவப் பயிற்சி கொடுக்கும் பகுதியாக இருந்தது.
19 விமானக் கடத்தல்காரர்களுள் 15 பேர் சவுதி குடிமகன்களாக இருந்தனர் என்ற செய்தியுடன்
செளதி அதிகாரிகள் சர்ச்சையிலும்கூட இறங்கி உள்ளனர். நியூஸ் வீக்கிலும் சரி ஏனைய பெரிய பத்திரிகை வெளிப்படுத்தல்களிலும்
சரி பென்சாகோலா விவரம் பற்றி மேலதிக பத்திரிகை செய்தி அறிவிப்பு இருக்கவில்லை, நியூஸ்வீக் தன்னும்
அதனைத் தொடர்ந்து எழுதவில்லை.
முகமது அட்டாவின் வழக்கு
மிகவும் அசாதாரணமாகக்கூட இருப்பது விமானக் கடத்தல்களின் குழுத்தலைவன் எனக் குற்றம்
சாட்டப்பட்ட முகமது அட்டாவை நடத்திய விதம் ஆகும். அட்டா எகிப்திய, ஜேர்மனிய மற்றும் அமெரிக்கப் போலீசாரால்
கவனத்திற்குரியவன் என்று செய்தி அறிவிக்கப்பட்டது மற்றும் இருந்தும் எந்த இடையூறும் இன்றி அவன் 2000 மற்றும் 2001
முழுவதும் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் பயணம் செய்தான்.
ஜேர்மன் பொதுதொலைக்காட்சி ஒளிபரப்பு
ARD-ல் வந்த செய்தியின்படி,
அட்டா எகிப்திய உளவு நிறுவனத்தால் தொலைபேசி கண்காணித்தலுக்கு உட்படுத்தப்பட்டார், அவர் ஜேர்மனியில்
ஹம்பேர்க்கில் வீட்டிலிருந்து குறைந்தபட்சம் ஒரு தடவை ஆப்கானிஸ்தானுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தார். நவம்பர்
23 அன்று ஒலிபரப்பாகிய ஜேர்மன் நிகழ்ச்சி நிரல், 2000ம் ஆண்டில் பலமாதங்களாக அமெரிக்க எப்.பி.ஐ நிறுவனம்
அட்டாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்திருந்தது, அவர் ஹம்பேர்க்கிலிருந்து பிராங்போர்ட்டுக்கு பல தடவைகள்
பயணம் செய்து வெடி குண்டுகளில் பயன்படத்தக்க பெரும் அளவிலான வேதிப்பொருட்களை வாங்கிய போது கண்காணித்து
வந்திருந்தது என்று கூறியது. 1999-ல் ஜேர்மன் போலீசாரால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு இடையிலான
தொலைபேசிச் செய்தி கண்காணிக்கப்பட்டதில் அட்டாவின் பெயர் ஹம்பேர்க்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜேர்மன் செய்தி
அறிவிப்பு பற்றி பிபிசி குறிப்பிட்டதாவது, "முன்பு நினைத்திருந்ததைவிட சர்வதேச உளவு சமூகமானது செப்டம்பர் 11க்கு
முன்னரே அட்டா பற்றி நிறையத் தெரிந்திருந்திருக்கலாம் ஆனால் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்ற கவலைகளுக்கு
சான்றானது வலுசேர்க்கிறது." (Source:British
Broadcasting Corporation report, November 26, 2001)
2001-ன் போது பல சம்பவங்களில் அட்டா அமெரிக்க அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தார்.
அவரது நுழைவு இசைவு (விசா) விதிமுறையில் அத்துமீறி இருந்தார் என்ற உண்மை இருந்தபோதிலும் அட்டா ஜேர்மனிக்கும்
பயணம் செய்தபின்னர் ஜனவரியில் அமெரிக்காவுக்குள் திரும்ப நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டார். அவர் குடிவரவு அதிகாரிகளிடம்
அமெரிக்காவில் விமானத்தில் பறப்பது பற்றிய பாடங்களை எடுத்துக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார், அதற்கு எம்-1
நுழைவு இசைவு தேவைப்பட்டது, இருப்பினும் அவர் சுற்றுலா நுழைவுஇசைவு (விசாவின்) பேரில் மாட்ரிட்டிலிருந்து வந்த
விமானத்தில் ஜனவரி10ல் மியாமியில் இறங்கினார். ஜீன் பட்டர்பீல்ட் என்ற அமெரிக்க குடிவரவு வழக்குரைஞர்கள் சங்கத்தின்
நிர்வாக இயக்குநர் வாஷிங்டன் போஸ்டிடம் கூறினார்: "பத்தில் ஒன்பது தடவை, அவர்கள் அவருக்கு
திரும்பப்போய் (அந்த நிலைக்காக) வெளியில் இருந்து விண்ணப்பிக்குமாறு கூறியிருப்பர். நீங்கள் உல்லாசமாய் கழிக்க வந்தவர்போல்
மற்றும் வேலைக்கு அல்லது பள்ளிக்கு (பாடசாலைக்கு) போகிறவர் போல் வரவில்லை." இந்த விதமான சலுகைபெறுபவர்,
முன்னர் வெடி குண்டு செய்ய பொருட்களை சேகரித்தற்காக எப்.பி,ஐ-ன் கீழ் கவனக்கண்காணிப்பிற்கு ஆளானவர்! என்பது
இங்கு வலியுறுத்தப்பட வேண்டும். (Source:
Washington Post, October 28, 2001)
கனேடிய தொலைக்காட்சி செய்தி அறிவிப்பின்படி, அட்டா இஸ்ரேலில் பயங்கரவாத
குண்டுவெடிப்பில் குறிப்பாகச் சுட்டப்பட்டிருந்தவர் அவருக்கு முதலாவது அமெரிக்க சுற்றுலா நுழைவு இசைவு வழங்குவதற்கு
முன்னரே அத்தகவல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருந்தது.
(Source: Canadian Broadcasting Corporation, September 14, 2001,reported by
Diana Swain from Vero Beach, Florida)
அட்டா ஐரோப்பாவிற்கு மற்றைய பயணங்களைச் செய்தார், மேமாதம் ஜேர்மனிக்குத்
திரும்பினார் மற்றும் ஜூலையில் ஸ்பெயினுக்குச் சென்றார் ஒவ்வொருமுறையும் அமெரிக்காவிற்குத் திரும்பினார் மற்றும் அவர்
அமெரிக்க சுங்கத்துறை மற்றும் குடிவரவு அதிகாரிகளிடம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். "அட்டா மேலெழுந்தவாரியாக
வெடிகுண்டுகளை உற்பத்தி செய்யவும் உயிரி யுத்தத்திற்காகவும் பிராங்கபோர்ட்டில் பெரும் அளவு வேதிப்பொருட்களை
வாங்கினார் என்பது கண்டறியப்பட்டதன்பின் அதற்காக கடந்த ஆண்டு ஜனவரிக்கும் மே க்கும் இடையில் அவர் கவனக்கண்காணிப்பிற்கு
ஆளானார் என்று இன்னொரு பிரிட்டிஷ் பத்திரிகை செய்தி குறிப்பிட்டது. அமெரிக்க முகவர்கள் அட்டாவைப் பின்தொடர்ந்தது
ஜேர்மன் அதிகாரிகள் அவர்களின் விசாரணையை அறிவிக்கத் தவறியது என்று கூறப்படுகிறது. செப்டம்பர் 11க்கு நீண்ட
காலம் முன்னரே அட்டா போலீசாரால் பின்தொடரப்பட்டார் என்ற செய்தி வெளியானது, அவரின் கைதுடன் ஏன் அந்தத்
தாக்குதல் தடுத்து நிறுத்தமுடியாதிருந்திருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது."
(Source: The Observer, September 30,
2001)
2001 கோடையின் பொழுது, பாக்கிஸ்தானில்
ஒசாமா பின் லேடனது பிரதிநிதியால் நடத்தப்படுவதாகக் கூறப்படும் கணக்கிலிருந்து 100,000 அமெரிக்க டாலர்களை
கம்பி இழை மாற்றல் மூலம் அட்டா பெற்றார். இந்த மாற்றல் திரும்பத் திரும்ப அமெரிக்க அதிகாரிகளால் பின் லேடன்
செப்டம்பர் 11 தாக்குதல்களை தூண்டிவிட்டிருப்பார் என்பதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது, ஆனால்
அவர்கள் அத்தகைய பெரும் அளவு பண அனுப்புகை ஒருவருக்கு எப்.பி.ஐ கவனக்கண்காணிப்பிலிருந்து தண்டனை விலக்கீட்டு
உரிமையை அளித்தது என்று விளக்க வில்லை. இன்னொரு குறிப்பிட்ப்படவேண்டிய உண்மை: இந்திய செய்தித்தாளின்படி
அட்டாவுக்கு கம்பி இழை பணம் அனுப்புகைக்கு உண்மையில் பொறுப்பாக இருந்தவர் பாக்கிஸ்தானிய உளவு நிறுவனத்தின் தலைவர்
ஜெனரல் மெஹ்மூது அஹ்மத். இது ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பிரதான புரப்பாளராக இருந்தது. இந்தியா அவரது
பாத்திரத்தை பகிரங்கப்படுத்தியதற்காக அவர் அஹ்மது பதவியைத் துறக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார், இது எப்.பி.ஐ
ஆல் உறுதிப்படுத்தப்பட்டது. தற்செயலாகவோ அல்லது இல்லாமலோ செம்டம்பர்11 அன்று அஹ்மது, அமெரிக்க
உளவுத்துறை அதிகாரிகளிடம் கலந்துரையாடுவதற்காக வாஷிங்டன் மாவட்டத்தில் இருந்திருக்கிறார்.
(Source: CNN report, October 1, 2001; The
Times of India , October 11, 2001).
(தொடரும்...)
|