World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : ஆப்கானிஸ்தான்

Oil company adviser named US representative to Afghanistan

ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதியாக எண்ணெய் கம்பெனி ஆலோசகர் நியமனம்

By Patrick Martin
3 January 2002

Back to screen version

ஆப்கானியரான ஜல்மாய் கலீல்ஜாத் (Zalmay Khalilzad) என்பவரை ஆப்கானிஸ்தானுக்கு தூதராக அதிபர் புஷ் நியமித்துள்ளார். இவர் அமெரிக்க எண்ணெய் நிறுவனமான யூனோகாவில் அதிகாரியாக பணிபுரிந்தவர். ஹமீத் கர்ஜாயின் (Hamid Karzai) இடைக்கால அரசு காபூலில் பறிவியேற்ற ஒன்பது நாட்களுக்குள் டிசம்பர் 31-ந் தேதி இது அறிவிக்கப்பட்டது. இந்த முன்மொழிவு மத்திய ஆசியாவில் அமெரிக்க இராணுவத் தலையீட்டில் உண்மையான பொருளாதார மற்றும் நிதி நலன்கள் பணயம் வைக்கப்பட்டுள்ளன என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முயற்சிகள் இப்பிராந்தியத்து எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களுடன் நேரடிதொடர்பு கொள்ள நீண்டகாலமாக முயன்று வரும் அமெரிக்க முயற்சிகளில் கலில்ஜாத் மிக நெருக்கமாக சம்பந்தப்பட்டவர். மேலும் இந்த எண்ணெய் எரிவாயு வளம் இதுவரை தோண்டி எடுக்கப்படாதது மற்றும் பாரசீக வளைகுடாவைவிட உலகத்திலேயே இரண்டாவது பெரியது என நம்பப்படுகிறது.

யூனோகால்க்கு ஆலோசகராக இருந்தபொழுது கலீல்ஜாத் துர்க்மேனிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்திய பெருங்கடலுக்கு ஒரு எண்ணெய் குழாய் போடுவது குறித்து ஆய்வு செய்தார். 1997-ல் இவர் தலிபான் அதிகாரிகளுக்கும் ஓயில் கம்பெனிகளுக்கும் நடந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றார். இது மேற்கு ஆப்கானிஸ்தான் வழியாக ஒரு குழாய் அமைப்பதை பற்றிய 1995-ன் உடன்பாட்டை நிறைவேற்றுவதைப் பற்றிய பேச்சுவார்த்தையாகும்.

யூனோகால் கம்பெனி சென்ட்காஸ் கூட்டுகம்பெனிகளில் முக்கியமானது ஆகும். இது உலகத்திலே மிகப் பெரியதான தென் கிழக்கு துர்க்மேனிஸ்தானிலுள்ள தெளலத்தாபாத் வயலில் கிடைக்கும் எரிவாயுவை வெளிக்கொணரும் முயற்சியாகும். இந்த 2 பில்லியன டொலர்கள் மதிப்புடைய திட்டம் ஆப்கன்-துர்க்மேனிஸ்தான் எல்லையிலிருந்து ஹொரத் காந்தஹார் நகரங்கள் அருகாக ஒரு 48 அங்குல குழாயை பாக்கிஸ்தானிலுள்ள குவெட்டா நகருக்கு அருகில் கடந்து முல்ட்டானில் தற்போது இருக்கும் குழாய்களுடன் இணைப்பதாகும். மேலும் 600 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய இந்தியாவிற்கு நீட்டிக்கும் இணைப்பும் கூட பரிசீலனையில் இருந்து வந்தது.

தலிபான்பால் அமெரிக்க அரசின் மிக ஆதரவு காட்டும் கொள்கைக்காக காலில்ஜாத் பகிரங்கமாக முயற்சி செய்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர் வாஷிங்டன் போஸ்ட்டு க்கு எழுதிய கட்டுரையில், "தலிபான் அரசு ஈரான் அரசைப்போல அமெரிக்க நாட்டிற்கு எதிராக தீவிரவாதத்தை செயல்படுத்தவில்லை" என்று எழுதி, தலிபான் ஆட்சியை பயங்கரவாதத்தை ஆதரித்தது என்ற குற்றச்சாட்டிற்கு எதிராக அதனைப் பாதுகாத்தார். "நாம் அங்கீகாரத்தை, மனிதாபிமான உதவியை வழங்க மற்றும் சர்வதேச பொருளாதார புனரமைப்புக்கு அடிகோல விருப்புக்கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தானோடு "அமெரிக்கா மீண்டும் உறவு கொண்டாட இதுவே தருணம்." இந்த உறவு யூனோகாலுக்கு மிகவும் லாபகரமாக இருக்கும். துர்க்மேனிஸ்தான் நிலத்தால் நாலாபக்கமும் சூழப்பட்டுள்ளது. அதனால் துர்க்மேனிஸ்தான் எண்ணெய் எரிவாயுவை உலக சந்தைக்கு கொணர இயலவில்லை.

கலீல்ஜாத் அமெரிக்க அரசு ஆகஸ்ட் 1998-ல் ஆப்கன் மீது க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு தன்னுடைய நிலைமையை மாற்றிக்கொண்டார். கென்யா, தான்சானியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்களின் மீது நடத்திய தாக்குதலுக்கு ஆப்கானைத் தளமாகக்கொண்ட ஒசாமா பின் லேடனால் வழிகாட்டப்பட்ட பயங்கரவாதிகள் காரணம் என்று கூறி அமெரிக்க மேற்குறிப்பிட்ட ஏவுகணைகள் தாக்குதலை நடத்திற்று. இந்த அதிரடிதாக்குதலுக்கு மறுநாள், யூனோகால் சென்ட்காஸ்- ஐ நிறுத்தி வைத்து, இரண்டு மாதங்கள் கழித்து ஆப்கான் மூலமாகசெல்லும் அனைத்து குழாய்ப்பாதை திட்டத்தையும் கை விட்டுவிட்டது. எண்ணெய் கம்பெனிகளும், அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்தில் இவர்களது பிரதிநிதிகளும் தலிபானுக்கு பிறகு அமையப்போகும் ஆப்கனிஸ்தானை குறித்து எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

முஸ்லீம் கொரில்லாக்களுக்கு பின் தொடர்பு

கலீல்ஜாத் மஜார்-இ-ஷரீப்பில் 1951-ல் பிறந்த ஆப்கான் அரச குடும்பத்தை சேர்ந்தவர்.1973 வரை ஆட்சி புரிந்த மன்னர் ஜாஹிர்ஷா இடம் இவருடைய தந்தையார் அமைச்சராக பணிபுரிந்து வந்தார். கலீல்ஜாத் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மாணவராக இருந்தார். 1979-ல் சோவியத்நாடு ஆப்கானை ஆக்கிரமித்தப்போது அமெரிக்க வலதுசாரி அறிஞர்களுக்கு பாசறையாக சிகாகோ பல்கலைக்கழகம் திகழ்ந்தது.

கலீல்ஜாத் அமெரிக்க பிரஜையாக மாறினார். இஸ்லாமிய அடிப்படை மதவாதிகளான முஜாஹீதின் க்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இவர் முக்கிய இணைப்பாகத் திகழ்ந்தார். ரஷ்ய ஆதரவு பெற்ற காபூல் அரசை எதிர்த்து இந்த முஜாஹீதின் போராடியது- இந்தச்சூழலில் இருந்துதான் தலிபான் மற்றும் பின் லேடனின் அல் கொய்தா அமைப்புகள் தோன்றிற்று. றேகன் அமெரிக்க அதிபராக இருந்தபோது இவர் சிறப்பு ஆலோசகராக பணியாற்றினார். யுத்தத்தில் முக்கிய பாத்திரம் வகித்த, கையால் எடுத்துச் சென்று இயக்கக்கூடிய ஸ்டிங்கர் ஏவுகணை போன்ற யுத்த தளவாடங்களை முஜாஹிதீனுக்கு வெற்றிகரமாக கிடைக்கச் செய்ய இவர் ஆதரவு திரட்டினார்.

புஷ் இன் அப்பா அமெரிக்க அதிபராக இருந்தபோது அவர் துணைப் பாதுகாப்பு செயலராக இருந்தார். அப்போது ஈராக்குக்கு எதிராக அமெரிக்கா போர் நிகழ்த்திற்று. பின்னாளில் ராண்ட் கார்ப்பொரேஷன் என்ற இராணுவ ஆலோசனைக் குழுவில் பணியாற்றினார்.

அமெரிக்க சூப்ரீம் கோர்ட் 5-4 வாக்குகள் மூலமாக புஷ்-ஐ ஜனாதிபதியாக நியமித்தது. கலீல்ஜாத் அமெரிக்க பாதுகாப்புதுறைக்கான புஷ்-செனி இடைக்கால குழுவின் ஆலோசகராக பணிபுரிந்தார். இவர் பின்னர் புதிய பாதுகாப்பு செயலராக வர இருந்த டோனால்ட் ரம்ஸ்பீல்ட்-க்கு ஆலோசகராக விளங்கினார். ஆனால் இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இவருக்கு துணை அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை. ஏனென்றால் இதற்கு செனட் சபையின் உறுதிப்படுத்தல் தேவைப்படும். இது இவர் மத்திய ஆசியாவில் எண்ணெய் கம்பெனிகளுக்கு ஆலோசகராகவும் தலிபான் தூதராகவும் விளங்கியது பற்றிய வீணான சர்ச்சையை கிளப்பியிருக்கும். ஆகையால் இவர் செனட் ஒப்புதல் தேவைப்படாத தேசிய பாதுகாப்பு சபைக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

தேசிய பாதுகாப்புக் கழகத்தில் கலீல்ஜாத் கண்டலீஸா ரைஸ் கீழ் பணிபுரிகிறார். கண்டலீஸாரைஸ் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஆவார். இவரும் கூட மத்திய ஆசியாவில் எண்ணெய் கம்பெனிகளுக்கு ஆலோசகராக பணிபுரிந்தார். 1989-92-ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த முதலாவது புஷ் கீழ் பணிபுரிந்த பிறகு, ரைஸ் செவ்ரான் கார்ப்பரேஷன்-ல் இயக்குனர் குழுவில் நியமிக்கப்பட்டார். கஜக்கஸ்தானில் அதன் முதன்மை நிபுணராக ரைஸ் பணியாற்றினார். புஷ் மற்றும் சேனி இவர்களின் எண்ணெய் கம்பெனிகளின் தொடர்பு அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் மத்திய ஆசியாவில் எண்ணெய் கம்பெனிகளுக்கு ஆலோசகராக பணிபுரிந்துள்ள, ஆப்கன் கொள்கையில் முக்கிய பங்காற்றும் அதிகாரிகளைப் பற்றி செய்தி ஊடகம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

அமெரிக்க இராணுவப் பிரச்சாரத்தின் இந்த அம்சம் பற்றி அமெரிக்க ஊடகத்தில் மிக சொற்பமாகவே இடம் பெற்ற தகவல்களுள் ஒன்று கடந்த செப்டம்பர் 26 அன்று சான்பிரான்ஸிஸ்கோ கிரானிகிள் என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அதன் எழுத்துப் பணியாளரான பிராங்க்விவியானோ என்பவர் பின்வருமாறு கூறுகிறார்: பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் மறைவாகப் பணயம் வைக்கப்பட்டிருப்பதை ஒரே ஒரு வார்த்தையில் சுருங்கக் கூறிவிடமுடியும்: எண்ணெய். மத்திய கிழக்கு நாடுகளிலும் மத்திய ஆசியாவிலும் தீவிரவாத, பயங்கரவாத சரணாலயங்களும் இலக்குகளும் உடையவரை படமானது, அசாதாரண அளவில் 21ம் நூற்றாண்டில் முக்கிய எரிபொருள் ஆதார நிலைகளின் வரைபடமாகும்.... பல பார்வையாளர்களினாலும், பல நோக்கர்களினாலும் இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்பது பல நூறு கோடிடாலர்கள் முதலீடு செய்துள்ள அமெரிக்காவின் செவ்ரான், எக்ஸன், ஆர்கோ: பிரான்ஸின் டோட்டல் பினாவெல்ப், பிரிட்டிஷ் பெட்ரோலியம், ரோயல் டச் ஷெல் ஆகிய பன்னாட்டு எண்ணெய் கம்பெனிகள் பேரிலான யுத்தம் என்று தவிர்க்க முடியாத வகையில் பார்க்கப்படும்.

செய்தி ஊடகத்தின் அமைதி

மேற்கூறியவற்றைப் பற்றி அமெரிக்க அரசு நன்று புரிந்து வைத்துக்கொண்டிருக்கிறது, ஆனால் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட செய்தி ஊடக சாதனங்கள் - தொலைக் காட்சி மற்றும் பெரிய தேசிய செய்தித் தாள்கள் இது குறித்து மெளனம் சாதிக்கின்றன. இது வேண்டுமென்றே அரசியல் நோக்குடன் செய்யப்படும் சுய-தணிக்கையாகும். ஆனால் டிசம்பர் 15 நியூ யோர்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை இதற்கு விதிவிலக்கு. "யுத்தம் கூட்டணியை மாற்றுகிறவாறு, எண்ணெய் பேரங்கள் தொடரும்" எனத் தலைப்பிட்ட கட்டுரை வர்த்தகப் பகுதியில் இடம்பெற்றது. டைம்ஸ் செய்தி கூறியதாவது "அமெரிக்கா தலிபானுக்குப் பிந்தைய எரிசக்தி திட்டங்களுக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது". இந்தப் பகுதி உலக எண்ணெய் வளத்தில் 6 சதவிகிதத்திற்கு மேற்பட்டதாகவும் எரிவாயு வளத்தில் கிட்டத்தட்ட 40% சதவிகிதமும் அடங்கியது.

கஜக்கஸ்தானிற்கு டிசம்பர் மாதத்தில் சென்றபோது, "அமெரிக்க அரசு செயலாளர் கொலின். எல். பவல் அமெரிக்க கம்பெனிகள் பண முதலீடுசெய்வது தம்மை 'பெரிதும் கவர்ந்ததாக' குறிப்பிட்டார். இம்முதலீடு ஏறத்தாள கஜக்கஸ்தானுக்கு 200 பில்லியன் டொலர்கள் அடுத்த 5 முதல் பத்து ஆண்டுகளுக்குள் செய்யப்பட இருக்கிறது" என்று டைம்ஸ் நாளேடு குறிப்பிட்டது.

எரிசக்தி அமைச்சர் ஸ்பென்சர் ஆபிரகாம் ரஷ்யாவிற்கு நவம்பர் மாதம் சென்றபோது அமெரிக்க எண்ணெய் முதலீடுகளை ஊக்குவித்தார். செவ்ரான் டெக்ஸாகோவின் தலைவர் டேவிட் ஜெ.ஓரிலீ இவருடன் சென்றார்.

பாதுகாப்பு அமைச்சர் ரம்ஸ்பீல்டும் கூட நடைபெற்றுக்கொண்டிருந்த குழாய்வழிப்பாதை பற்றிய கையாளுதல்களில் ஒரு பங்கு வகித்தார். அஜர்பெய்ஜான் தலைநகர் பாக்குக்கு டிசம்பர் 14 விஜயம் செய்தபோது, அவர் எண்ணெய் வளம் மிக்க கேஸ்பியன் அரசின் அதிகாரிகளிடம் அமெரிக்க அரசு 1992-ல் திணிக்கப்பட்ட தடைகளை நீக்கும் எனக் கூறினார். இது 1992-ல் நாகர்னோ காராபாக்கில் வேற்று நாட்டவர் எல்லைப் பகுதி தொடர்பாக அர்மீனியாவுடன் நடந்த போரால் விதிக்கப்பட்டது.

அஜர்பெய்ஜானும் ஆர்மீனியாவும் மத்திய ஆசியாவில் அமெரிக்க இராணுவத்துடன் ஒத்துழைக்கின்றன. இவை பென்டகனுக்கு இந்நாடுகளை கடந்து செல்லும் வசதியும் விமான தரையிறங்கும் தளங்களின் வசதிகளும் செய்து தருகின்றன. இதற்கான பரிசே ரம்ஸ்பீல்ட் பயணமும் அறிக்கைகளும். அதிபர் ஹைதர் அலியேவ் இடம் ரம்ஸ்பெல்ட் அமெரிக்க அரசு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களோடு தடைகளை நீக்குவதற்கு ஒப்பந்தம்செய்து கொண்டதாக குறிப்பிட்டார்.

நவம்பர் 28 அன்று வெள்ளை மாளிகை புதிய எண்ணெய்க் குழாய் ஒன்றை திறப்பதை குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தது. இந்த காஸ்பியன் குழாய் வழிப்பாதை கன்ஸார்ட்டியம் பின்வரும் அங்கத்தினர்களை தன் உறுப்பினர்களாகக் கொண்டது. அவை ரஷ்யா, கஜக்கஸ்தான், ஓமன் முதலிய நாடுகள், செல்வரான்டெக்சாகோ, எக்ஸான் மோபில் முதலிய பல எண்ணெய் கம்பெனிகள் ஆகும். இந்த எண்ணெய்க் குழாய் வழி வடமேற்கு கஜக்கஸ்தானில் உள்ள டெங்கிஸ் எண்ணெய் கிணற்றையும் நோவரோசியிஸ்க் என்ற ரஷ்ய கருங்கடல் துறைமுகத்தையும் இணைக்கிறது. இந்த துறைமுகத்தில்தான் எண்ணெய்க் கப்பல்களில் எண்ணெய் உலகச் சந்தைக்காக நிரப்பப்படுகிறது. 2.65 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள இந்தகட்டுமான செலவில் அமெரிக்க கம்பெனிகள்1 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்துள்ளன.

புஷ் அறிக்கை மேலும் கூறியதாவது "Baku-Tibilisi-Cheyhan,Baku-Supsa, Baku-Novorossiysk ஆகியன உள்ளடங்கிய கேஸ்பியன் பல்குழாய் வழி வலைப்பின்னலை மற்றும் Baku-Tibilisi -Erzurum எரிவாயு குழாய்வழிப் பாதையை அபிவிருத்தி செய்வதன் மூலம் சிபிசி திட்டம்கூட எனது அரசின் தேசிய எரிவாயு கொள்கையை மேம்படுத்துகிறது."

இந்த அறிவிப்புப்பற்றி அமெரிக்க பத்திரிகைகள் சிறிதளவே செய்தி வெளியிட்டன. Baku--Cheyhan திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள இந்த குழாய் வழிப்பாதைகள் சோர்ட்டியம் பிரிட்டிஷ் எண்ணெய்க் கம்பெனி BP ஆல் தலைமை வகிக்கப்படுகிறது மற்றும் இது பேகர்& பாட்ஸ் என்ற சட்ட நிறுவனத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது என்ற உண்மையை ஒரு செய்தி ஊடகமும் குறிப்பிடவில்லை. இந்த நிறுவனத்தில் பிரதான சட்ட வழக்கறிஞர் மூன்றாம் ஜேம்ஸ் பேக்கர், இவர் புஷ்-ன் தந்தை காலத்தில் அரசாங்க செயலாளராகவும் 2000-ம் ஆண்டு புஷ் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது புளோரிடா வாக்கு எண்ணிக்கையை மூடச்செய்வதற்கு அதன் வெற்றிகரமான முயற்சிக்கான தலைமைப் பேச்சாளராகவும் இருந்தார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved