The strange case of Zacarias Moussaoui: FBI refused to investigate man
charged in September 11 attacks
Zacarias Moussaoui
இன் வித்தியாசமான வழக்கு: செப்டம்பர் 11ம் திகதி தாக்குதலுக்கு பொறுப்பானவர் மீதான விசாரணையை
FBI மறுத்துள்ளது
By Patrick Martin
5 January 2002
Back to screen version
Zacarias Moussaoui இன் வழக்கானது
செப்டம்பர் 11 இற்கு முன்னராக காலகட்டத்தில் FBI இனதும், ஏனைய
அமெரிக்க உளவு நிறுவங்களினதும் நடத்தை குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்த
மோசமான இரத்தம் தோய்ந்த பயங்கரவாதத் தாக்குதலை தடுக்கக் கூடிய எவ்வித நடவடிக்கையையும் இவ் அமைப்பினரின்
ஒரு பிரிவினர் நிராகரித்துள்ளமைக்கான தெளிவான உதாரணமாகும்.
Moussaoui ஜனவரி மாதம் 1ம் திகதி 6ம் நீதிமன்றத்தில்
கொலை செய்ததாகவும் செப்டம்பர் 11 திகதி பயங்கரவாத தாக்குதலுக்காகவும் சதிசெய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
மொரக்கோ நாட்டு அராபிய பின்னணியை கொண்டவரும் பிரான்சில் பிறந்தவருமான Moussaoui
''அல்லாவின் பெயரால்'' தனக்காக மன்னிப்புகேட்க வேண்டாம் எனவும், அவருக்கான
அரச வழக்கறிஞர் சார்பில் அவர் குற்றமற்றவர் என மன்னிப்புக்கு விண்ணப்பிக்கப்பட்டது.
Virginia இன் Alexandria
இல் உள்ள நீதிமன்றத்தில் 30 நிமிட விசாரணையின் பின்னர் அமெரிக்க பிராந்திய
நீதிபதியான Leonie M. Brinkema விசாரணையை பிரதிவாதியின்
சார்பிலான எதிர்ப்பின் மத்தியிலும் யூரிகளின் தெரிவானது உலக வர்த்தக மையத்தினதும், பென்டகன் மீதானதுமான தாக்குதலின்
ஒரு வருட நினைவு தினத்திற்கு அண்மையில் எதிர்வரும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்க முடிவு எடுத்தார்.
பிரதிவாதியின் சட்டத்தரணிகள் விசாரணை இடத்தை செப்டம்பர் 11ம்திகதி தாக்குதலில்
189 பேர்
கொல்லப்பட்ட
பென்டகன் கட்டிடத்திற்கு சில மைல்கள் தூரத்திலுள்ள
Alexandria வில்
இருந்து மாற்ற விரும்புவதாக கேட்டுக்கொண்டபோதும், நீதிபதியான
Brinkema தான் இடத்தை
மாற்ற அனுமதிக்கப்போவதில்லை எனவும் வடக்குVirginia
வில் உண்மையான யூரியினர் இருக்கின்றார்கள் என கூறினார்.
Moussaoui இற்கு எதிரான 6 குற்றச்சாட்டுக்களில்
4 மரண தண்டனையை கொண்டிருக்கின்றது. அவர் செப்டம்பர் 11 திகதிக்கு ஒரு மாதத்தின் முன்னரே கைது செய்யப்பட்டிருந்தமையும்,
பாரிய கொலையில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருக்குமுடியாது. வழக்குத்தொடுனர்களுக்கு மார்ச் மாதம் 29ம் திகதி
வரை மரணதண்டனைக்காக விண்ணப்பிப்பதற்கு காலம் வழங்கப்பட்டுள்ளது. 1976 இன் பின்னர் அமெரிக்க மேல் நீதிமன்றம்
மரணதண்டனையை அறிமுகப்படுத்திய பின்னர் மரணதண்டனை பெறும் முதலாவது பிரெஞ்சு பிரஜையாக
Moussaoui இருப்பார்.
FBI நடவடிக்கை எடுக்க மறுத்தமை
Minneapolis இன் புறநகரான
Eagan என்னும் இடத்திலுள்ள பான் அம் சர்வதேச விமான பயிலகத்தில் (Pan
Am International Flight Academy) போயிங் 747 விமானத்தில் பயிற்சி
பெற்றுக்கொள்ள Moussaoui முயற்சித்ததாக அவ்விமான பாடசாலையின்
அதிகாரிகளால் FBI இற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து
Minnesota என்னுமிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவருடைய நடத்தை சந்தேகத்தை உருவாக்கியது. அவரது நடைமுறை போரில் ஈடுபட்டவர்
போலிருந்தது. அவர் தனது தனிப்பட்ட பின்னணி தொடர்பாக போலியாக இருந்தது. அவர் பிரெஞ்சு மொழி தெரிந்து
ஒரு ஆசிரியருடன் பிரெஞ்சு மொழியை ஒழுங்காக பேசாததுடன், $6300 இன் கட்டணமாக செலுத்தியிருந்தார். அவர்
சிறிய விமானங்களை செலுத்தக்கூடிய தகமை இல்லாத போதிலும் ஜம்போ ஜெட் செலுத்த பயிலவிரும்புவதாக வலியுறுத்தினார்.
அம்மாணவர் விமானத்தை மேலெழும்ப செய்வது, தரையிறங்கச்செய்வது என்பதை பயின்றுகொள்ள விரும்பாது வானத்தில்
விமானத்தை எவ்வாறு செலுத்துவது என்பதை மட்டும் பயிலவிரும்புவதாக தெரிவித்ததாக அறிவிக்கப்பட்டது.
அவ்வாசிரியரும், பாடசாலையின் உதவி அதிபரும்
Minneapolis பிரதேசத்திற்குரிய
இரண்டு ஜனநாயக கட்சியின் காங்கிரஸ் அங்கத்தவர்களுக்கு நவம்பர்
Moussaoui இன்
விடயம் தொடர்பாக FBI
இற்கு திரும்ப திரும்ப அறிவிக்க எடுத்த முயற்சி தொடர்பாக அறிவித்திருந்தனர்.
அவர்களது விடயம் முதலாவதாக Minneapolis
Star-Tribune பத்திரிகையிலும், பின்னர் டிசம்பர் 22ம்
திகதி New York Times
இலும் அறிவிக்கப்பட்டது.
அப்பாடசாலையின் உதவி அதிபர்
Minneapolis இன் காங்கிரஸ் அங்கத்தவர்களான
James Oberstar, Martin Sabo
இற்கும் தாம் FBI
இற்கு 4 தொடக்கம் 6 தொலைபேசி அழைப்பு மூலம் ஒரு
FBI இன் உதவியை கேட்டதாக
தெரிவித்தனர். அவ்வாசிரியரும் ''ஒரு 747 விமானத் எரிபொருளுடன் குண்டாக பயன்படுத்தப்படலாம்'' என
FBI இற்கு வழங்கிய முக்கிய
எச்சரிக்கைக்கு அவர்களால் வழங்கப்பட்ட முக்கியத்துவமின்மையால் வெறுப்படைத்திருந்தார்.
வாஷிங்டனில் விசாரணைகள் தடுக்கப்பட்டது
Moussaoui குடிவரவு, குடியுரிமை வழங்கும் அலுவலகத்தால்
விசா தொடர்பான விதிகளை மீறியதாக தடுத்துவைக்கப்பட்டிருந்தார். Minneapolis
இன் உள்ளூர் FBI அதிகாரிகள்
உடனடியாக Moussaoui இனை பயங்கரவாத சந்தேகப்பேர்வழியாக
பார்த்ததுடன், அவரின் வீட்டிலிருந்த கணனியை பரிசோதிப்பதற்கான விசேட உளவுகண்காணிப்பு அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு
முயன்றனர். இது வாஷிங்டனில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. அவர்கள் அப்படியான அனுமதிப்பத்திரம்
வழங்கவதற்கான சட்டரீதியான போதிய சாட்சியங்கள் இல்லை என கூறினர்.
FBI அதிகாரிகள் Oklahoma
இல் உள்ள Airman Flight School இல்
Moussaoui இன் நடவடிக்கை குறித்து ஆராய்ந்தனர். அங்கு அவர் 2001 இன்
ஆரம்பத்தில் 57 மணித்தியாலம் பயிற்சி பெற்றுள்ளபோதும் போதிய தகமை இல்லாததால் விமானத்தை பறக்க அனுமதிக்கப்படவில்லை.
CIA இன் தலைமையகத்தின் மீதான தற்கொலை தாக்குலுக்கு காரணமான
அல் கொய்தாவின் ஆளான Abdul Hakim Murad இந்த பாடசாலையில்
பயிற்சி பெற்றுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டதில் இருந்தே இது அவர்களுக்கு எச்சரிக்கை மணியை ஒலித்திருக்கவேண்டும்.
Abdul Hakim Murad இத்திட்டங்கள் குறித்து 1993 உலகவர்த்தக
மையத்தின் மீதான தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான Ramzi Ahmed Yusef
இன் வழக்கில் 1996 இல் குறிப்பிட்டிருந்தார்.
செப்டம்பர் 11ம் திகதி தாக்குதலில் பங்குபற்றிய பலர்
Oklahoma இல் உள்ள
Airman Flight School
இல் பயிற்சி பெற்றிருந்தனர் அல்லது பதியப்பட்டிருந்தனர். இது தற்கொலை தாக்குதலின்
பின்னான தீவிர விசாரணைகளில் வெளிவந்தது.
ஆகஸ்ட் 26ம் திகதி பிரான்சின் உளவுப்பிரிவினரால்
FBI இன் தலைமையகத்திற்கு
Moussaoui
இற்கு அல் கொய்தாவிற்கும் பின் லேடனுக்கும் தொடர்பிருந்ததாக அறிவித்திருந்தது.
இவ் அறிவித்தல் கூட அவர்களை நடவடிக்கை எதுவும் எடுக்க தூண்டவில்லை.
FBI இனதும்
CIA இனதும் விசேட பயங்கரவாத
தடுப்பு பிரிவு Moussaoui
தொடர்பான தகவல்களை விசாரித்திருந்தது. ஆனால் பிரெஞ்சு தொடர்பு குறித்து
கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்திருந்தபோதும், போதிய சாட்சியங்கள் இல்லை என முடிவெடுக்கப்பட்டது.
செப்டம்பர் 11 ம் திகதி வரை அவர் உள்ளூர் தடுப்பிலிருந்து
FBI இன் காவலுக்கு கூட மாற்றப்படவில்லை.
பிரான்சின் எச்சரிக்கை தகவல்கள் முதல் இரண்டு தற்கொலை தாக்குதல்தாரிகள்
செப்டம்பர் 11ம் திகதிக்கான முதலாம் தர ஆசனங்களுக்கான ஒரு வழி பிரயாண சீட்டை வாங்கிய அடுத்தநாள் கிடைத்தது.
அதிகமான பிரயாண சீட்டுக்கள் ஆகஸ்ட் 26,27,28,29 இல் வாங்கப்பட்டுள்ளதுடன்,
FBI, Moussaoui
தொடர்பான ஆழமான விசாரணையையோ அல்லது அவரது கணனியையோ பரிசோதிப்பதையும் மறுத்திருந்தது.
New York Times டிசம்பர் 22ம் திகதி
''Moussaoui இன் வழக்கு FBI
உம் ஏனைய உளவு நிறுவனங்களும் விமானக்கடத்தலை ஏன் தடுக்கவில்லை என்பது
தொடர்பான புதிய கேள்விகளை எழுப்புகின்றது'' என விமர்சித்திருந்தது.
இவ்விமர்சனத்திற்கு மறைமுகமாக
FBI அதிகாரிகள் விமானப்பயிற்சி உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட
எச்சரிக்கையை முழுதாக நிராகரித்தனர். ஜனவரி 2ம் திகதி
Washington Post இற்கு
FBI இன் உயர் அதிகாரி
ஒருவர் ''கட்டிடத்தின் மீது விமானத்தை செலுத்துவதோ அல்லது அதனை ஒரு குண்டாக பயன்படுத்தவது தொடர்பாக
கருத்து வரவில்லை எனவும், அவர்கள் கவலைப்படுவது ஒரு நேரடியான விமானக்கடத்தலாகும்'' என குறிப்பிட்டார்.
இவ்விடயம் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் விமானப்பாடசாலையின் உத்தியோகத்தர்
FBI இனர்
போல் அல்லாது பொய் சொல்ல எவ்வித காரணமுமில்லை. செப்டம்பர்11ம் திகதி போது
FBI இன் தலைவரான
Robert Mueller
பயங்கரவாதிகள் கடத்தப்பட்ட விமானத்தை பறக்கும் குண்டுகளாக பயன்படுத்த முனைவார்கள்
என்பது தொடர்பாக ஒருவித அறிகுறிகளும் காணப்படவில்லை என குறிப்பிட்டார். அவரது உறுதிப்பாடு அமெரிக்க தொலைத்தொடர்பு
சாதனங்களால் விமர்சனமற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் விமானப்பாடசாலையால் வழங்கப்பட்ட தகவல்கள் அவரால்
வழங்கப்பட்ட உறுதிப்பாடு பொய் என்பதை நிரூபிக்கின்றது.
பாதுகாப்பு கவனமின்மை
Moussaoui இன் வழக்கானது அமெரிக்க அரசாங்கத்திற்கு
அமெரிக்காவில் பாரிய பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது என்பது தொடர்பாக ஒரு தொடர் எச்சரிக்கைகள்
கிடைத்திருந்தது என்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.
* செப்டம்பர் 11 திகதிக்கு முன்னர் ஆகக்குறைந்தது
ரஷ்யா, ஜேர்மனி, இஸ்ரேல், எகிப்து போன்ற 4 நாடுகள் கடத்தப்பட்ட விமானத்தை ஆயுதமாக பயன்படுத்தி அமெரிக்காவில்
பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக வாஷிங்டனுக்கு விசேட எச்சரிக்கை வழங்கியிருந்தன.
* ஒசாமா பின் லேடனினதும் அல் கொய்தாவினாலும்
செய்யப்பட்ட முன்னைய தாக்குதல்களின் தமது சொந்த விசாரணைகளில் கடத்தல் விமானத்தாக்குதல்கள் தொடர்பான
தகவல்கள் அமெரிக்க அரசாங்கத்திற்கு போதியளவு கிடைத்திருக்கின்றன.
* செப்டம்பர் 11 திகதி தாக்குலுக்கு ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு முன்னரே அமெரிக்கா பின் லேடனினதும் அவரது கூட்டத்தினரதும் தொலைத்தொடர்பு சாதனங்களை கண்காணித்து
வருகின்றது.
* செப்டம்பர் 11 திகதி தாக்குதலின் தலைவனான
Mohammed Atta உட்பட பல விமான கடத்தல்காரர்கள் 2000 இலும் 2001
இலும் அமெரிக்க உளவுத்துறையினரால் பயங்கரவாதிகளாக ஐயுறவிற்கு உள்ளாகியிருந்ததுடன், அவர்களின் நேரடி கண்காணிப்பிற்குள்ளாகியிருந்தனர்.
பின்னர் அவர்கள் அமெரிக்காவினுள் சுதந்திரமாக புகுவதற்கும், வெளியேறுவதற்கும் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களது திட்டத்தை
செய்யகூடியதாகவும் இருந்தது.
செப்டம்பர் 11 தாக்குதல்கள் பாதுகாப்பு படையினரினது பாதுகாப்பு கவனமின்மையில் நிகழ்ந்ததுடன்,
அதற்கான சாதாரண விளக்கம் எதுவுமில்லை. பயங்கரவாத தாக்குதல் இடம் பெற்ற சூழ்நிலை தொடர்பான ஒரு முக்கியமானதும்,
உணர்வுபூர்வமானதுமான விசாரணையை வேண்டிநிற்கின்றது. புஷ் நிர்வாகமும் குடியரசுக்கட்சியினரும், ஜனநாயக கட்சியினரும்
இப்படியான விசாரணையை நிராகரிப்பதுடன், FBI
இனதும் CIA
இனதும், ஏனைய உளவு சேவைகளினதும் பங்கு தொடர்பாக விசாரணைக்குள்ளாக்குவது
தேசப்பற்று அல்லாதது என கூறுகின்றனர்.
ஆனால் அறியப்பட்டுள்ள தகவல்களின் சுட்டிக்காட்டுவது என்னவெனில், இப்பாரிய பயங்கரவாத
தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கின்றது என்பதையும் அவர்கள் அதனை
தடுக்க எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது. அதன் அரசியல் நோக்கம் ஊகிக்கக்கூடியது.
அவர்கள் இத்தாக்குதலின் முழு அளவு தெரிந்திருந்தாலும் தெரிந்திராவிட்டாலும் அதனை நடாத்த அனுமதித்துள்ளதுடன், அதனை
வெளிநாடுகளில் தமது வலதுசாரி திட்டமான இராணுவத்தலையீட்டிற்கானதும், உள்நாட்டில் ஜனநாயக உரிமை மீதான
தாக்குதலுக்குமான முன்நிபந்தனையாக பாவித்துள்ளது.
|