World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : ஆப்கானிஸ்தான்US war crime at Masar-i-Sharif prison: new videotape evidence மெஸார்- இ- ஷாரீப் சிறையில் அமெரிக்க யுத்தக்குற்றம்: புதிய வீடியோ நாடா சாட்சி By Patrick Martin செப்டெம்பர் 11 பயங்கரவாத தாக்குதலுக்கு ஒசோமா பின் லேடன் பொறுப்பு எடுப்பதாக சொல்லப்பட்ட வீடியோ நாடாவை புஷ் நிர்வாகம் கையில் வைத்திருப்பதான அறிக்கைகளை அமெரிக்க பத்திரிகை தொடர்பு சாதனங்கள் கடந்த பல நாட்களாக வெளியிட நிர்ப்பந்திக்கப்பட்டன. வெள்ளை மாளிகை இவ் நாடாவையோ அல்லது ஓர் பிரதி மூலத்தை கூடவோ இன்னமும் வெளியிடவில்லை. ஆனால் தொலைத்தொடர்பு ஸ்தாபன திருடர் கூட்டம் அரசாங்கத்திற்கு சார்பாக கிளிப்பிள்ளை போல கூறுவதை நிறுத்தவில்லை. தேசிய தொலைக்காட்சியில் காட்டப்பட்டதும் மெஸார்- இ- ஷாரீப் சிறையில் நவம்பர் கடைசிக் கிழமை தலிபான் போர் சிறைக் கைதிகளை அமெரிக்கா செய்த கொடுமையின் பற்றி புதிய ஆதாரங்களை வழங்கியுள்ள உறுதிப்படுத்தப்பட்டதுமான இவ் இழைநாடா மீது குறைந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நாடாவினுடைய இருப்பு NewsWeek பத்திரிகையால் வெளிப்படுத்தப்பட்டதுடன், ஓர் பகுதி பிரதி மூலமும் வெளியிடப்பட்டது. Johnay Micheal Spann என்ற அமெரிக்க C I A ஏஜன்ட், 20 வயதுள்ள அமெரிக்க பிரஜையான John Walker Lindh இஸ்லாமிய மதத்திற்கு மாறிய இவர், பாகிஸ்தானுக்கு சென்று படித்தது பின்னர் ஆப்கானிஸ்தானில் தலிபான் படையினருடன் சேர்ந்து கொண்டவரை குறுக்கு விசாரணை செய்வதை இந்நாடா காட்டுகின்றது. நவம்பர் 23-24 இல் Kunduz இல் சரணடைந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டு தலிபான்களின் ஒருவரான இவர், பின்னர் Mazar-i -Sharif இல் உள்ள Jala- i - Qanghi சிறைச்சாலைக்கு வாகனத்தில் அனுப்பப்பட்டார். Walker என தன்னை அழைத்த இவர் சிறையில் உள்ள நிலைமையை NewsWeek பத்திரிகைக்கு பின்வருமாறு விபரித்துள்ளார். "அதிகாலையில் அவர்கள் எங்களை ஒருவரின் பின் ஒருவராக கூடாரத்தினுள் எடுத்துச் செல்ல தொடங்கினார்கள்......... எங்களுடைய கைகள் கட்டப்பட்டதுடன் அவர்கள் எங்களை உதைத்ததுடன் எங்களில் சிலரை தாக்கினார்கள். Mujahedin சிலர் பயத்தில் அழுதனர். நாங்கள் எல்லோரும் கொல்லப்படுவோம் என அவர்கள் நினைத்தார்கள்." ''ஓர் நவீன கமராவுடனும் (digital camera) ஓர் வீடியோ கமராவுடனும் இரண்டு அமெரிக்கர்கள் படம் எடுப்பதை Walker பார்த்தார். அவர்கள் எங்களை குறுக்கு விசாரனை செய்ய அங்கே வருகை தந்திருந்தனர்." இந்த இருவரில் Spnn ம், இண்டாவது CIA ஏஜண்ட் அவருடைய முதல் பெயர் Dave எனத் தெரிவிக்கப்பட்டது. வீடியோ நாடாவின் பிரதி மூலங்களின் பதிவுகள் பின்வருமாறு: Spann: எங்கிருந்து வந்துள்ளாய்? எங்கிருந்து வந்துள்ளாய்? இங்கே நீ செய்வது அதிகமானது என நினைக்கவில்லையா? இங்கே கொல்லப்படுவதற்கு உனக்கு விருப்பமா? CIA ஏஜன்ட் பின்னர் திடீரென Walker உடைய முகத்திற்கு முன்னால் தனது விரல்களை காட்டினார். ஆனால் Walker நிதானமாக இருந்தார். பின்னர் Spann ஓர் வடக்கு-கூட்டணியின் சிப்பாயை வரவழைத்து Walker உடைய தலைமயிரை முகத்திற்கு பின்பக்கம் விட்ட பின் Spann படம் எடுக்க கூடியதாகவிருந்தது. இரு CIA ஏஜன்ட்டுகளும் பின்னர் கலந்தாலோசித்தனர். ஆனால் அவருடைய கலந்துரையாடலில் சில பகுதிகளை மட்டுமே கேட்க கூடியதாக விருந்தது. அப்புறம் இரண்டாவது CIA ஏஜன்ட் Walker பற்றி கதைப்பது மிகவும் தெளிவாக கேட்டது, அத்துடன் அவர் சிறைக் கைதிகளுக்கு மிகவும் தெளிவாக விளங்கக்கூடியவாறு பயமுறுத்தினார். Dave: பிரச்சனை என்னவெனில் வாழ விருப்பமா, இல்லை இறப்பதா அத்துடன் இங்கு இறப்பதா என அவன் தான் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் அவனை விட்டு விடுவோம் அத்துடன் அவன் தனது குறுகிய வாழ்க்கையை இந்த சிறையிலேயே இருக்கட்டும். இது அவனுடைய தீர்மானம். நாங்கள் எங்களுடன் பேசும் நபர்களுக்கு மட்டுமே உதவி செய்ய முடியும். பலருக்கு உதவிசெய்ய நாங்கள் செஞ்சிலுவை சங்கத்தை மட்டும் தான் கூப்பிட முடியும். Walker தனது மெளனத்தை தொடர்ந்த பின் Spann இற்கு Dave "அதெல்லாம் சரி, அவனுக்கு ஓர் சந்தர்ப்பம் கொடுப்போம். அவனுக்கு சர்ந்தப்பம் கிடைக்கட்டும்'' என கூறினார். இப்படியான ஓர் கலந்துரையாடல் சந்தேகத்திற்கிடமில்லாததும் குற்றமான செயலுமாகும். இந்த இரு CIA ஏஜன்ட்டுகளும் Walker தங்களுடன் ஒத்துழைத்து தலிபானையும் AL Qaeda யும் பற்றி தகவல்களை வழங்காவிடில் உடனடியான கொலைப்பயமுறுத்தினர் (''இங்கேயே இறந்து போ..... அவனுடைய மிகுதி குறுகிய வாழ்க்கை"). செஞ்சிலுவை சங்கத்தின் உதவிக்கான கோரிக்கை போல, இப்படியான பயமுறுத்தல்கள் யுத்த சிறைக் கைதிகளுக்கான ஜெனோவா மாநாட்டின் உடன்பாட்டை நேரடியாக அத்து மீறுகின்றது. இதன் கருத்து உணவு, மருத்துவ கவனிப்பு அத்துடன் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள வழிவகுத்தல் போன்றன தங்களுடன் ஒத்துழைப்பவர்களுக்கு மட்டும் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு மிகவும் 24 மணித்தியாலங்களின் முன் சரணடைந்த தலிபான் போர்க்கைதிகள் எந்த சூழ் நிலையின் கீழ் பயத்திலும் பீதியிலும் எழுச்சியின் கட்டத்தை அடைந்து அவர்களை பிடித்தவர்களுக்கெதிராக திரும்பினர் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. 200 இற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் ஏற்கனவே விசாரணைக்கு உள்ளானதுடன், அவர்களின் கைகள் பின் பக்கம் கட்டப்பட்ட நிலையில் கலவரம் எழும்போது அவர்களுடைய மரண தண்டனைக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை நிச்சயப்படுத்தியுள்ளது. எழுச்சியின் முதல் கைகலப்பின் மத்தியில் Spann அரை டசின் சிறைக் கைதிகளால் அடித்து, சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய CIA கூட்டாளி அவ்விடத்தை விட்டு பறந்தோடியதுடன் பின்னர் கைத்தொலைபேசியில் சிறை கூடாரத்தின் மேல் ஆகாய தாக்குதல் நடாத்துமாறு கேட்டுக் கொண்டார். இதன் பின் நடந்த கொலைக் களத்தில் 800 சிறைக் கைதிகள் கொல்லப்பட்டனர். Mazar- i -Sharif இல் உள்ள சிறைக் கைதிகள் தங்கள் உயிருக்கு பயப்படுவதற்கு காரணங்கள் இருந்ததை உயர் நிர்வாக அதிகாரியான, பாதுகாப்பு உதவிச் செயலாளர் Paul Wolfowitz ன் ஞாயிறு அன்றைய தொலைக்காட்சி பேட்டியில் மறைமுகமாக நிச்சயப்படுத்தப்பட்டது. Wolfowitz அவர் "வேறு எவராலும்" கைது செய்யாமல் அமெரிக்கரால் கைது செய்யப்பட்டு இருப்பதையிட்டு Walker ம் அவருடைய குடும்பமும் சந்தோசப்பட வேண்டும். வடக்கு கூட்டணி சிப்பாய்களை குறிப்பிட்டு காட்டுகையில், அவர்கள் அவனை உடனையே கொலை செய்திருப்பார்கள் என குறிப்பிட்டுக் காட்டினார். இந்த இரத்தக்களரியின் பின்னர், புஷ் நிர்வாகம் இந்த CIA விசாரணைக்காரரை தேசத்தின் தலைவராக மாற்றுவதற்கு முனைந்ததுடன் ஆப்கானிஸ்தான் போரில் தனது நாட்டிற்காக உயிரையும் கொடுத்த முதல் அமெரிக்கர் என புகழ்ந்தனர். போர் வீரன் என்ற நிலையில் இருந்து கொடுமைக்காரனுக்கு கிட்ட மாறிய Spann னுடைய பாத்திரம் தொடர்பாக இப்படியானது, ஓர் ஏமாற்றும் முயற்சி கூட. Spann தனது வாழ்க்கையை ஓர் ஆயுத மேந்திய போர் வீரனுடன் மோதி இழக்கவில்லை மாறாக கைதிகளின் விருப்பங்களை பிழையாக மதிப்பிட்டு அவர்களை இழித்துரைத்து, பயமுறுத்தி, கொலைசெய்வதாக பயமுறுத்தியதனாலாகும். அமெரிக்க பத்திரிகைகளில் CIA யில் பல "பழைய கைகள்" Spann இனுடய பெயரையும் அவர் ஓர் CIA அதிகாரி என அடையாளம் காட்ட வேண்டுமென வெள்ளை மாளிகையின் தீர்மானத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்ததை குறிப்பிட்டிருந்தது. இது CIA தொடர்பான விபத்தில் முதல் முறை நடந்துள்ளது. இத்தகவல் பாதுகாப்பை சட்டரீதியாக பாதிக்கும் என்றோ, மற்றைய CIA நடவடிக்கைகளையும் ஏஜன்ட்டுகளையும் பாதிக்குமெனப்படுவதால் கோரப்படவில்லை. இது ஏனெனின் CIA இனுடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் வாஷிங்டனின் திட்டம் தீட்டுபவர்களுக்கும் இடையில் குறைந்த பட்சம் சில இடைவெளியை வைத்திருக்குமாறு முன்னய அமெரிக்க அரசாங்கங்களை CIA அனுமதித்திருந்தது. CIA அதிகாரிகள் கொடுமைகளை, ஆயுதம் ஏந்திய கொலைகுழுக்கள் அல்லது கொலைகள் செய்து முடித்தல் போன்றவற்றை மேற்பார்வை செய்யலாம். ஆனால் இவை அனைத்தும் "நியாயத்தை மறுப்பதால்" செய்யப்பட்டது என அழைக்கப்பட்டன. George W. Bush அல்லது Donald
Rumsfeld உம் Spann ம்,
Dave ம் மெஸார்- இ- ஷாரீப்
இல் நடாத்தியது சிறைக் கைதிகளை பராமரிப்பது பற்றிய அமெரிக்க கொள்கையிலிருந்து
அத்துமீறிய, விலகியதாக கோருவதற்கு சாத்தியம் இல்லை. தகாத முறையில்
ஆவணப்படுத்தப்பட்ட Walker ருடைய
வீடியோ நாடாவும், அதை தொடர்ந்து சிறைக் கைதிகளை குண்டுகள், ராக்கட்டுகள்
மற்றும் இயந்திர துப்பாக்கிகளால் பாரிய கொலைளை செய்வதும் இரண்டுமே ஒரேமாதிரியான மீறுதலை பிரதிதித்துவப்படுத்துவதுடன்,
இவ் யுத்தக்குற்றங்களுக்கு புஷ் நிர்வாகத்தின் தலைமை அதிகாரிகளே பொறுப்பு எடுக்க வேண்டும். |