World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா

Lionel Jospin's "Euro speech": European integration process falters

லியோனல் ஜொஸ்பனின் ''ஈரோ பேச்சு'': ஐரோப்பிய ஐக்கியத்தில் தயக்கம்

By Peter Schwarz
13 June 2001

Back to screen version

ஒரே ஐரோப்பிய நாணயமாக ஈரோவை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு கடினமான முறையில் வழிவகுத்த மாஸ்ட்ரிச் ஒப்பந்தம் கையெழுத்திட்டு ஒரு சகாப்தத்திற்கு பின்னர், ஐரோப்பாவை அரசியல் ரீதியாக ஒன்றிணைக்கும் முயற்சி ஒரு இயக்கமற்ற தன்மையை அடைந்துள்ளது. ஜேர்மன் மற்றும் பிரான்சின் அரசாங்கத் தலைவர்கள் -இவர்களது நெருங்கிய உடன்பாடு மாஸ்ட்ரிச் உடன்படிக்கை வெற்றியடைய முக்கியமானது- கொள்கை பற்றிய பேச்சுகள் ஐரோப்பா எடுக்கவிருக்கும் உருமாதிரி பற்றி எந்தவொரு பொதுவான பார்வையும் இருக்கப்போவதில்லை என்பதை தெளிவாக்கியுள்ளது.

ஏப்பிரல் இறுதியில் நடந்த சமூக ஜனநாயக கட்சியின் கூட்டத்தில் நடந்த ஐரோப்பாவின் எதிர்காலம் பற்றிய விவாதத்தில் ஜேர்மன் அதிபர் Gerhard Schröder தனது திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். பேர்லினின் Humboldt பல்கலைக்கழகத்தில் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளிநாட்டு அமைச்சரான Joschka Fischer இன் பேச்சினைத் தொடர்ந்தாற்போல், ஷ்ரோடர் ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருத்தி ஒரு ''உண்மையான ஐரோப்பிய கூட்டமைப்பு அரசாக'' இருக்கவேண்டும் என அழைப்புவிட்டார்.

ஷ்ரோடரின் கருத்தின் படி, தேசிய அரசாங்கத்தின் செலவில்தான் ஐரோப்பிய அமைப்புகள் பலமாக்கப்படவேண்டும் என்பதாகும். ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு 'பலமான ஐரோப்பிய நிறைவேற்று அதிகாரமுடையதாக' விரிவாக்குவதுடன், ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்களை வளங்கவேண்டும் என்பதே அவரின் கருத்தாக இருக்கின்றது. அத்துடன் இதுவரை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பிரதானமான முடிவுகளை எடுப்பதில் பொறுப்பு வகிக்கும் தேசிய அரசாங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்டதுமான அமைச்சர்கள் அமைப்பை ஜேர்மனியினது (Bundesrat) மாநிலங்களின் பிரதிநிதியை கொண்ட இரண்டாவது அமைப்பு மாதிரியான வடிவமாக (Second parliamentary chamber modelled) மாற்றப்படவேண்டும் என்பதாகும்.

பிரேத்தியேகமாக வரவழைக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு முன்னால் மே மாதம் 28 திகதி பேசிய பிரெஞ்சு பிரதமர் லியோனல் ஜொஸ்பன் தனது பேச்சில் வெளிப்படையாக இந்தக் கருத்துப்பாட்டிற்கு எதிரான மறுப்பை தெரிவித்தார். ஐக்கிய அமெரிக்க அரசுகள் அல்லது ஜேர்மனைப்போல ஐரோப்பிய நாடுகளும் அதே தரத்தை கொண்டிருக்கும் ஒரு கூட்டரசு என்ற கருத்தை பிரான்சோ அல்லது ஏனைய ஐரோப்பிய நாடுகளோ ஏற்றுக்கொள்வது சாத்தியமற்றது என அவர் தெரிவித்தார். ''ஐரோப்பாவில் எனக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது ஆனால் நான் என் தேசத்திற்குள் தான் வசிக்கிறேன். பிரான்ஸ் அழிக்கப்படாமல் ஐரோப்பா கட்டப்படவேண்டும் என்பதுதான் எனது அரசியல் பார்வையாகும்'' என அவர் மேலும் தெரிவித்தார்.

''தேசிய அரசுகளின் ஒரு கூட்டமைப்பு'' என்ற வடிவத்தில் ஜொஸ்பன் ஐரோப்பா பற்றிய அவரது சொந்தக் கருத்தை தெரிவித்தார். அத்துடன், தேசிய அரசாங்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட அமைச்சர்கள் கவுன்சிலை முக்கிய முடிவுகளை எடுக்கும் மைய அமைப்பாகவும் அதை இன்னும் சக்தி வாய்ந்ததாக உருவாக்கவும் அவர் விரும்புகிறார். அவரின் கருத்தின்படி, மறுபக்கத்தில் குழுவானது ஒரு தூய நடைமுறைக்கிடும் வடிவமாக இருப்பதுடன், பாராளுமன்றம் ஒரு ஆலோசகர் பாத்திரத்தை வகிக்கும்.

ஷ்ரோடரின் கருத்துக்கு வேறுபட்டமுறையில், ஜொஸ்பனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதித்துறையை இன்னும் விரிவாக்குவது அவசியமாகவிருக்கிறது. ஆகையால் வரிவிதிப்பில் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு மற்றும் பொருளாதார கொள்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சகாக்களுக்கு பொருத்தமானதாக இருக்கவேண்டும் என்பதாகும். இந்த எல்லைக்குள் ஒரு ''ஐரோப்பிய பொருளாதார அரசாங்கம்'' பற்றி ஜொஸ்பன் பேசுகிறார். சுதந்திரமான ஐரோப்பிய மத்திய வங்கிக்கு எதிரான தாக்குதலாக ஜேர்மன் இதை பார்ப்பதுடன், இதை நிராகரிக்கிறது. குறிப்பாக நிதியியல் பத்திரிகை ஜொஸ்பனின் கருத்துப்பாடு பற்றிய கோபத்தை வெளிப்படுத்தியிருந்தது. ''ஐரோப்பிய ஒன்றிய(த்தின்) திட்டத்தினது ஒரு தாராளவாதத்திற்கு எதிரான ஒரு விலாவாரியான வேலைத்திட்டமாகும்'' என அவரது திட்டத்தை Handelsblatt பத்திரிகை வர்ணித்திருந்தது.

அங்கு விவசாயம், கட்டுமான கொள்கைக்குமான உறவு பற்றிய வித்தியாசமான கருத்துப்பாடுகள் இருக்கின்றன. இவை நிதிப்பிரச்சனைகள் பற்றியதில் இருந்தே உருவாகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நிதிப்பட்டியலின் பெரும்பாகம் மானியங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டுவரும் அதே நிலையில், ஷ்ரோடர் இதற்கான பொறுப்பை, ஐரோப்பாவில் இருந்து தேசிய மட்டத்திற்கு நகர்த்த விரும்புகிறார். இது ஜேர்மனியினது தேசிய வரவுசெலவுத்திட்டத்திற்கு பாதுகாப்பை அளிக்கலாம். மிக அதிகமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்தப்படும் பணம் மானியங்களாக ஜேர்மனிக்கு திரும்ப போகும். அதே நேரம் கிழக்கு ஐரோப்பிய அங்கத்தவர்களுக்கு வழங்கப்படும் நஸ்டஈடுகள் குறைக்கப்படலாம். ஆனால் ஜொஸ்பன் பிரான்சில் விவசாயத் துறையில் பாரிய நிதிஉதவிகளை இழக்க நேரிடும் என பயம்கொள்வதுடன், இந்த துறைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதித்துறை மற்றும் கட்டுப்பாடுகளை பேணிக்கொள்ளவிரும்புகிறார்.

ஷ்ரோடர் மற்றும் ஜொஸ்பனது பரிந்துரைகள் பிரித்தானியாவில் கடுமையான எதிர்ப்பை சந்தித்தன. பிரதமர் டோனி பிளேயர், ஒரே நாணயத்திற்கு ஆதரவாக முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளார். இவர் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிய நீதித்துறை அதிகாரத்தை விரிவாக்குவது அல்லது மத்தியமயப்படுத்தலுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராகவுள்ளார். இரண்டு மாதத்தில் நடக்கவுள்ள தேர்தல் பிரச்சாதரத்தில் அவரது கட்சி மற்றும் எதிர்கட்சியான பழமைவாதிகள் மட்டத்தில் இருந்து வரும் தனக்கு எதிரான எந்தவொரு வாதங்களையும் தவிர்ப்பதற்காக அதுவரைகாலமும் ஜொஸ்பனது பேச்சை தேர்தல்வரை பின்தள்ளிப்போட சம்மதிக்க வைக்கலாம் என பிளேயர் இதுவரை நம்பியிருந்தார்.

ஷ்ரோடருக்கும் ஜொஸ்பனுக்கும் இடையிலான உடன்பாடின்மைகளில் ஐரோப்பிய அமைப்பின் வருங்கால வடிவம் மற்றும் கொள்கை பற்றியதே முதன்மையானதாக இருக்கின்றது. இதைப்போன்ற கருத்து வேற்றுமைகள் கடந்த காலத்திலும் இருந்து வந்தது. எப்படியிருந்தபோதும் சிலநேரங்களில் ஒரு வருடத்தின் பின்னாவது கடுமையான சமரசங்கள் மூலம் அவைகளில் இருந்து கடந்து வரக்கூடியதாக இருந்தது. இந்தத்தடவை கூச்சல் சமரசங்களின் மூலம் சுமூகமான முறையில் தீர்த்துவிடமுடியாத அடிப்படையான பிரச்சனைகளால் மறைக்கப்பட்டுள்ளன.

இன்னொரு பக்கத்தில், ஜொஸ்பனின் நிலைப்பாடானது ஐரோப்பாவில் ஜேர்மனியினது மேலாதிக்கத்தின் மேலான பிரான்சின் பாரம்பரிய பயத்தினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டுள்ளது. மறு இணைப்பில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கை நோக்கிய திட்டமிட்ட விரிவாக்கமும் ஜேர்மனியின் பொருளாதார மூலோபாய மற்றும் மக்கள் எண்ணிக்கையும் பிரமாண்டமாக அதிகரித்துள்ளது. புதிதாக பெற்றுக்கொண்ட இந்த அந்தஸ்த்தின் அனுகூலங்களை ஜேர்மனி தனக்கு சாதகமாக பாவிப்பதன் மூலம், எதிர்கால கூட்டமைப்பு உருமாதிரிகளின் ஒன்றாய் இருக்கக்ககூடிய அது ஒரு ஆளுமையான பாத்திரத்தினை வகிக்கும். ஜொஸ்பனது தேசிய அரச உருமாதிரியின் அறிமுகமானது பிரான்ஸ், ஜேர்மனியினது மேலாதிக்கத்திற்கு எதிராக செயல்படுவதற்கான ஒரு சிறிய சந்தர்ப்பமாகவே இருக்கிறது. பிரான்சும், ஜேர்மனியும் அமைச்சர்கள் அமைப்பில் வாக்குகளை பெற்றுக்கொள்வதில் உடன்பாடுகாணமுடியாது போனமையால், நீஸ் (Nice) இல் நடந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டத்தில் பெரும்பாலும் இந்தக் கேள்வியில் பிளவுபட்டுக்கொண்டார்கள்.

எப்படியிருந்தபோதும், ஐரோப்பாவின் சமூக துருவமுனைப்படுத்தலே, ஐரோப்பிய ஐக்கியத்தை நோக்கிய முயற்சியினது தடைப்படுத்தலுக்கான ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது. மாஸ்ட்ரீச்சில் ஏற்றுக்கொண்ட ஐக்கியம் மற்றும் கடுமையான நடவடிக்கைகள் ஒரு கூர்மையான சமூக நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளதுடன் மற்றும் பதட்டங்கள் பல அரசாங்கங்களின் உறுதிப்பாட்டினை ஆட்டங்காணவைத்துள்ளன. குறுகியகால தேசிய பிரச்சனைகள் முக்கிய இடத்தினை ஆக்கிரமிப்பதை தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டுள்ளதுடன், ஒன்றன் பின் ஒன்றாக இது மத்திய விடயமாக இருப்பதில் இருந்து நழுவிப்போகும் போக்குகளை ஐரோப்பாவுக்குள் அதிகரித்துக்கொண்டுள்ளது.

ஜேர்மனியினது ஐரோப்பிய திட்டத்திற்கான ஜொஸ்பனின் வெளிப்படையான மறுப்பானது ஒரு வருடத்திற்கு முதல் நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் உருவான அவரது சொந்த கூட்டரசாங்கத்தினுள் அதிகரித்துகொண்டிருக்கும் நெருக்கடிகளுடன் தொடர்புபட்டிருப்பதுடன், அவை உடைத்துவிடுவதாகவும் பயமுறுத்திக்கொண்டுள்ளன.

நிதி வெட்டுக்கள் சமூக சேவைகளின் அழித்தல், வேலை நிலைமைகளின் சீரழிவு மற்றும் வேலைகளை இல்லாமல் செய்வது இவைகளினால் மக்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டிருக்கும் பதட்டங்களுக்கு எதிர்நோக்குவதால் யாவற்றையும் விட பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சி தாங்கமுடியாத அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இது மிகவிரரைவாக செல்வாக்கை இழந்துகொண்டிருப்பதுடன், உட்பிரிவு முரண்பாடுகளால் அது பல பிரிவுகளாக உடைந்துகொண்டிருக்கிறது. பிரான்சில் நீண்டகாலத்திற்கு ஒரு முக்கியமற்ற தீவிரவாத குழுவாக மட்டும் இருந்துவந்த பசுமைக்கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினை முந்திக்கொண்டு இரண்டாவது பலமான கட்சியாக கூட்டரசாங்கத்தில் வந்திருக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி பலதசாப்தங்களாக நிர்வாக பதவிகள் மற்றும் நகரபிதா பதவிகளை தக்கவைத்திருந்த அவர்களது பல முக்கிய இடங்களை கடந்த மார்ச் மாத உள்ளூராட்சி தேர்தலில் இழந்துபோயுள்ளனர்.

மறுபக்கத்தில் ''தீவிர இடதுகள்'' என அழைக்கப்படும் இதனது போட்டியாளர்கள் முக்கியத்துவமான முறையில் வளர்ச்சியடைந்துள்ளார்கள். தற்போது சில வருடங்களாக Lutte Ouvrière (தொழிலாளர் போராட்டம்) கழகம் மற்றும் (LCR) புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கிட்டதட்ட நிலையான முறையில் 5 வீத வாக்குகளை தேர்தலில் பெற்றுள்ளன. ஆனால் 7, 8 வீதமாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சியினது வீதம் இதுவரை இருக்கிறது. 1999 இல் இருந்து, LO மற்றும் LCR ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஆறு பிரதிநிதிகளை கொண்டுருப்பதுடன், அவர்கள் மார்ச் மாத நகர சபைத்தேர்தலில் 62 இடங்களை பெற்றுக்கொண்டார்கள். சராசரி 6.2 வீதத்துடன் இருப்பதுடன், சில நகரசபைகளில் இறுதிக்கட்டத் தேர்தலில் 19 வீதம் வரை பெற்றிருக்கின்றார்கள்.

LO மற்றும் LCR இரண்டும் -தவறான முறையில்- தம்மை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என அழைத்துக்கொள்கிறார்கள். தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அணிதிரள்வையும் அதனது சர்வதேச ஐக்கியத்தையும் தனது நோக்கமாக கொண்டிருக்கும் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் முன்னோக்கை நீண்டகாலத்திற்கு முன்னரே இந்த இரண்டு இயக்கங்களும் நிராகரித்ததுவிட்டன. சோசலிச கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னர் செய்த அதே சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தைத்தான் பிரெஞ்சு தீவிர குழுக்கள் இன்று பேணிவருகின்றன. இவர்கள் முக்கியமாக தொழிற்சங்கத்திற்குள் வேலைசெய்வதுடன், அதிகாரத்துவத்தின் முக்கியமான ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்றார்கள்.

எப்படியிருந்தபோதும், இவர்களது வாக்குகளின் அதிகரிப்பானது, தற்போதைய ஜொஸ்பனின் அரசாங்கத்தினால் பிரமாண்டமான கஸ்டங்களுக்கு உள்ளாகியிருக்கும் பரந்துபட்ட மக்களின் தீவிரமயப்படுத்தலின் அறிகுறியாகும். தம்மை மிகவும் தீவிரமானமுறையில் காட்டிகொள்வதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி அதனது புதிய போட்டியாளர்களுக்கு பதிலளித்துள்ளது. முதற்கட்ட விவாதத்தில் ஆதரவளித்துவந்த அரசாங்கத்தின் பரிந்துரைக்கப்பட்ட சமூக சட்டத்திற்கான பாராளுமன்ற வாக்களிப்பில் ஒரு பகுதியை இது உள்ளூராட்சி தேர்தலுக்குப் பின்னர் தடை பண்ணியுள்ளது. இரண்டு வாரகாலமாக வாக்கை தாமததப்படுத்தியதன் மூலம் மட்டுமே தமது கூட்டின் ஒரு உடைவினையும், இந்த விடையத்தில் தனது தோல்வியை ஜொஸ்பன் தவிர்க்கக் கூடியதாக இருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் விடயம் கூட, கூட்டரசாங்கத்தை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அந்த விடயத்தில் ஆழமானமுறையில் இவை முரண்பட்டுப்போயுள்ளன. அளவுக்கு மீறிய சுயாதீன அதிகாரத்தை அவர் கோர்சிகாவுக்கு அளிக்கப்போனதாலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அவரது சலுகைகளாலும் ஜொஸ்பன் அவரது கூட்டின் ஒரு சகாவான தீவிரமான தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பொதுஜன இயக்கத்தின் ஜோன் பியர் செவனுமோவை ஏற்கனவே இழந்துவிட்டார். பசுமைகட்சியினர் உற்சாகமான முறையில் அதனது பலத்தை அதகரித்து கொண்டிருக்கும் அதேவேளை கம்யூனிஸ்ட் கட்சியும் கூட ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய விடயத்தில் எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டுள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரான்சுக்கான பேச்சாளரும், பிராங்போர்ட்டில் அவர்களது தீவிர இளமைக்காலத்தில் இருந்து ஜேர்மன் வெளிநாட்டமைச்சரான Joschka Fischer இன் நெருங்கிய நண்பனுமான டானியல் கோன்பண்டிட் ஜேர்மனது கருத்துப்பாடான ஐரோப்பிய கூட்டரசினை மூர்க்கமான முறையில் வக்காலத்து வாங்குகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கை நோக்கிய திட்டமிட்ட விரிவாக்கமானது ஐரோப்பிய ஒன்றியத்தினுள் சமூக பதட்டங்களை மோசமானமுறையில் கூர்மையாக்கியுள்ளது. 2000 இல் இருந்து 2006 வரைக்கான ஒதுக்கப்பட்ட நிதிப்பட்டியலுடன், 80 பில்லியன் ஈரோ ($68bn) அடுத்த ஐந்து வருடத்தினுள் ஐரோப்பிய ஒன்றியத்தினுடன் இணையவிருக்கும் புதிய 10 அங்கத்துவ நாடுகளின் ஆதரவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த எண்ணிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு நிதிப்பட்டியலின் பத்தில் ஒன்றை உள்ளடக்கியிருக்கிறது.

விவசாயத்துறைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நேரடி கொடுப்பனவான ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றிலொரு பங்கு முன்னய அங்கத்தவர்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இது பின்தங்கிய கிழக்கைரோப்பிய நாடுகளின் விவசாயத்துறைக்கு ஒரு மரண அடியாக இருக்கும். ''இதன் ஒரு விளைவாக, ஒரு பொதுவான அரசியல் அமைப்பை கொண்டிருக்கும் இரண்டு வர்க்க சமூகமாக உருவாவதை வருங்கால ஐரோப்பிய ஒன்றியம் அச்சுறுத்துகிறது, இதனால் ஒன்றினுடைய சமூக பொருளாதார ஸ்தாபித அடித்தளம் நொருங்கிப்போவதாக இருக்கும்'' என ஜேர்மனியினது Süddeutsche Zeitung பத்திரிகை முடித்திருந்தது.



Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved