A desire for what?
"ஷிuக்ஷீக்ஷீமீணீறீவீsனீ: ஞிமீsவீக்ஷீமீ ஹிஸீதீஷீuஸீபீ" கிஸீ மீஜ்லீவீதீவீtவீஷீஸீ ணீt ஜிணீtமீ
விஷீபீமீக்ஷீஸீ, லிஷீஸீபீஷீஸீ uஸீtவீறீ 1 யிணீஸீuணீக்ஷீஹ் 2002
ஆசை எதற்காக?
"மிகையதார்த்த வாதம்: ஆசை எல்லையில்லாதது "--1 ஜனவரி
2002வரை லண்டன், டேட் மொடேர்னில் நடைபெறும் கண்காட்சி
Review by Paul Bond
30 November 2001
Back to screen version
மிகையதார்த்த வாதம் என்பது நனவற்ற இயல்பு மற்றும் படைப்புடன் ஆன அதன் தொடர்பு
பற்றிய ஒரு கலை இயக்கமாகும்.
மிகையதார்த்த வாதிகள்
மரபு வழிப்பட்ட சிந்தித்தலின் முட்டுக்கட்டை நிலையை உடைக்க
விழைந்தனர்: புதிய சாத்தியங்களை படைக்கும் பொருட்டு படைப்பாற்றலில் நனவற்றதின் பாத்திரத்தை வெளிச்சம்போட்டுக்
காட்ட அவர்களின் பரிசோதனைகள் முயற்சித்தன.
நனவற்றதன் வெளிப்பாடு மற்றும் அது பற்றிய படைப்புக்களில் மிகையதார்த்த வாதிகளின்
ஆர்வத்தையும், மன ஆய்வியல் தத்துவத்தில் ஆசையின் தனி மேம்பட்ட இடத்தையும் எடுத்துக் கொண்டால், இறுதியில் ஆசை
பற்றிய கருத்து மீதான மிகையதார்த்த வாத படைப்பை ஒன்று சேர வைப்பதற்கான முயற்சி தவிர்க்க முடியாததாக
இருந்தது.
இந்தக் கண்காட்சி அத்தகைய முயற்சி ஆகும். இது ஒரு பெரும் பணியாகும்; குறிப்பிட்ட படைப்புக்களை
குவிமையப்படுத்தியும் தனிப்பட்ட கலைஞர்களை நன்கு புலப்படுத்தியும் தலைப்பின் அடிப்படையில் பதிநான்கு அறைகள் ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கின்றன. மிகையதார்த்த வாத இயக்கத்தின் பிரதானமானோர் பெரும்பாலும் இங்கு பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டனர்
மற்றும் பிரபல்யம் ஆகாதோரில் பலரும் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டனர்.
இடைக் கூடம் ஒரு காட்சியை வைத்திருக்கிறது. மார்க்ஸ் எர்னஸ்ட்டின் மனிதர்கள் இதைப்
பற்றி அறியார்கள் (Men
Shall Know Nothing of This) என்பதுடன் சேர்ந்து
ஒரு உயிரோட்டமான இடத்தை பிடித்துக்கொண்டன. காட்சிப் பொறுப்பாளரின் அறிமுகம் பின்வருமாறு விவரிக்கிறது. "மிகையதார்த்த
வாதத்தின் மையக் கருத்து ஆசையால் இயக்கப்படும் ஒரு படைப்பாக மனிதனை அது காண்பதுதான். மிகையதார்த்த வாதிகளைப்
பொறுத்த அளவில் ஆசை என்பது உள்மனத்தின் அதிகாரப்பூர்வ குரல் ஆகும். "அதுதானே சிக்கலானது அல்ல ஆனால்
அதுவே முழுவிஷயமும் அல்ல. ஆசையின் பிரதிநிதித்துவங்கள் பிரதானமாக வாழ்க்கை வரலாறு பற்றியது என்றுகூட அது
அர்த்தப்படுத்துகின்றது.
முதலாவது அறை சரியாக மார்சல் டுசாம்ப்
(Marcel Duchamp)
படைப்பின் நினைவாக பெயரிடப்பட்டிருக்கின்றது. மணப்பெண் அவளது
பிரம்மச்சாரிகளால் அம்மணமாகத் துகிலுரியப்பட்டாள், மேலும் மிகுதியன அளவில்
(The
Bride Stripped Bare by Her Bachelors, Even)
என்பது விஞ்சி நிற்கிறது (ரிச்சர்ட் ஹாமில்டனால்(Richard
Hamilton) மறுவடிவமைக்கப்பட்டது). டுசாம்ப்பை எந்தவிதத்திலும்
மதிப்பிடல் மிகையதார்த்த வாதத்தைப் பற்றிய மதிப்பீட்டினை ஆரம்பிப்பதற்கான சரியான இடமாகும். டாடாவின்
ஆரம்பகாலங்களில் இருந்து, டுசாம்ப்பின் உருவங்களால் பொருளை விளக்கும் வடிவத்தின் அழிப்பு கண்ணோட்டம் நவீன கலை
இயக்கத்தின் முன்னணியில் இருந்தது. அந்திரே பிரிட்டன் டுசாம்ப்பின் பெரும் செல்வாக்கைப்பற்றி எழுதுகிறார், "மணப்பெண்
அம்மணமாகத் துகிலுரியப்பட்டாள் போன்ற பூச்சோவியங்கள் ஒருபோதும் வரையப்படாதிருந்திருந்தால், தொடர்ந்து
இப்படி வரைவது எந்த மட்டத்திற்கு ஒருநாள் அதிகாரபூர்வமானதாகக் கருதப்படலாம் என ஒருவர் தன்னைக்
கேட்டுக்கொள்ள முடிந்து''.
பெரும் கண்ணாடி வேலையிலிருந்து அறை பாலியல் ஆசையின் எந்திரிக காட்சியை முன்வைக்கிறது.
மனிதனின் எண்ண வீச்சில் உடம்பின் பாகங்களைப் போல் உள்நாட்டுப் பொருட்களின் படங்கள், ஒரு வகைப் பிணைப்பை
பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய எந்திர கருவிகள் பற்றிய பிரான்சிஸ் பிக்காபியாவின் (Francis
Picabia) பூச்சோவியங்கள் பக்கத்தில் நிற்கின்றன. எடுத்துக்காட்டாக
மண உறுதி செய்யப்பட்ட ஆண் (TheFiancé),
பற்சக்கரமாகவும் அதேவேளை ஆசையின் வலிப்பு (Paroxysmof
Desire) என்பது துன்பியலைக் காட்டும் நூலிழை போன்ற கருவியாகக்
காட்டப்பட்டுள்ளது. டுசாம்ப்பின் ஆரம்பகால படைப்புக்களும் இங்கு உண்டு. எதிர்கால வாதிகளை உளவகையில் முன் ஈடுபடுத்திக்
கொள்ளும் தொழில்நுட்பத்தை விட தொடர்வண்டியில் மணப்பெண்ணும் துன்பகரமான இளைஞனும்
(The Bride and The Sad Young
Man on the Train) உணர்ச்சிகரமான மற்றும் பாலியல்
நிலைகளைப் பற்றிக் கூறியபோதிலும் அவை தெளிவாகவே கருத்துருக்களில் எதிர்கால வாதத்தைக் கொண்டிருக்கிறது.
குழந்தையின் மூளை
(The
Child's Brain) --ஜியோர்ஜியோ டு கிரிகோரியோ
(Giorgio de Chirico) வின் நினைவாகப் பெயரிடப்பட்டது--
பிராய்டியன் (Freudian)
ஆய்வு மற்றும் கற்பனை, சிறப்பாக எதிர்பாலராகிய பெற்றோரிடத்தில் (ஒடிப்ஸ்
மனச்சிக்கல் கருத்துப்பாடு) பிள்ளைகளுக்கு இருக்கும் உள்ளுணர்சிக் கூறு பற்றிய கருத்துக்கள் மற்றும் பெற்றோர் குழந்தை
உறவுகளைப் பயன்படுத்துவதைப் பற்றிக் காட்டுகிறது. வில்லியம் டெல்
(William
Tell) போன்ற சால்வடோர் டாலியின் படைப்புக்களை
ஒரு அறை காட்சிப்படுத்துகிறது. அது டெல்லை பழிவாங்கும் எண்ணமுடைய தந்தையாகக் காட்டுகின்றது. மிகையதார்த்த
வாதிகள் பற்றி மிக வெளிப்படையாக ஆய்வுசெய்வதற்கு டாலியினுடையதை கண்காட்சி பயன்படுத்தத் தொடங்கி உள்ளதை
அது குறிக்கின்றது.
கண்ணாடி முன் என்பது முன் அறியப்படாத மகிழ்ச்சிகளை வழங்கும் ஒரு பக்கவாட்டு
அறை. டுசாம்ப்பின் தாடி வைத்த மோனாலிசா (LHOOQ)
(--அவள் சூடான ஆயுதத்தை வைத்திருக்கிறாள்) மற்றும் டுசாம்ப் ரோஸ் செலவி
(Rose
Sélavy) எனும் கவிஞராக (--அன்பு அதுவே வாழ்க்கை)
இவை பால் பன்மைத் தன்மையைப் பார்க்கும் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. மோனோலிசா அவள் மீது மீசையை கிறுக்கிய
ஒரு இளைஞனுடைய பூச்சோவியமாக இருந்தது. இவற்றுடன் இணைந்ததாக குறைந்த அளவே அறிமுகமான மான் ரேயினால்
ஆன படைப்புக்கள் இருக்கின்றன. ஆனால் உயர் அம்சமாக ஜோசப் கொர்னலால் செய்யப்பட்ட பெட்டிகள் இருந்தன.
சில புகழ்பெற்ற நட்சத்திரங்களுக்குப் புகழுரையாக அமைந்தன. ஆனால் சிறந்த படைப்புகள், ஐஸ் கட்டிகள் உள்ள ஐஸிலிருந்து
மீண்டும் செப்பம் செய்யப்பட்ட நகைப் பேழை, டாகிலியானியின் நகைப் பேழை போன்ற வரலாற்று உண்மை மற்றும் கற்பனை
விளக்கத்துடனான மயக்குகின்ற கலவைகள் ஆகும்.
அடுத்த அறையில் உள்ள போல் டெல்வாக்ஸின் (Paul
Delvaux) நகரின் மீதான விடியல்
(Dawn
Over the City) நகரம் சாதாரண மோதல்களுக்கான
இடமாக (பாலியல், ஆனால் விதிவிலக்காக அல்ல), அது நனவிலியினுள் புதிய பார்வையை திறக்கக் கூடியதாக இருக்கிறது.
(அத்தகைய மோதல்களில் சாதகத்தை எடுக்க இயலாமையில் அனுதாபத்தின் அம்சம் உள்ளதாக விடியல்
கருத்துரைப்பதாக இருந்தபோதிலும், இங்கு டெல்வாக்ஸின் ஏனைய பகுதி, டிராம்களின் தெரு (Street
of Trams), அது பாலியலைக் கருக் கொண்டதாக அவர் செய்துள்ளார்
எனக் காட்டுகின்றது)
இதனுடன் ஒன்று கூடுவது சந்தர்ப்பம் பற்றிய கருத்துருவாகும். மிகையதார்த்த வாதிகள் இலக்கை
அகழ்ந்தெடுத்தலில் (objet trouvé)
டுசாம்ப்பினைப் பின்தொடர்ந்தனர். இங்கு மிகவும் ஈர்க்கும் பகுதியாக இருந்தது கோர்னெல்லின் (தலைப்பிடப்
படாத (மேரி குழந்தை) (Untitled
(BébéMarie), சுள்ளிக்குச்சிகளின் பின்னால் ஒரு
பெட்டியில் இருக்கும் விக்டோரியா பொம்மை ஆகும். கேட்காத அல்லது மறைந்திருப்பதை எதிரொலிக்க புலப்படும்
பொருட்களைப் பயன்படுத்தல் ரேயின்
Enigma of
Isidora Ducass -ல் முழுநிறைவை அடைதலை எட்டுகிறது.
தையல் எந்திரம் சாக்குத் துணியால் வைத்து போர்த்தப் பட்டிருக்கிறது. அது நாம் கேள்விப்பட்டிராத மனிதனின் ஆவலைத்தூண்டும்
நினைவாக இருக்கிறது. Comte de Lautréamont
தவிர அவர் போல், அவர் மிகையதார்த்த வாதிகளுக்காக முக்கிய உரைகளுள் ஒன்றை மோல்டோரர் (Maldoror)-
ஐ எழுதினார். மிகையதார்த்த வாதிகளால் அவர் தெய்வமாக்கப்படும் செயலுக்கான காரணங்களுள் ஒன்று துல்லியமாக
அவரது அநாமதேய (பெயர் தெரியாத) நிலைதான்.
ஆசைகளின் முத்திரை (Imprint
of Desires)
என்பது இங்கு காட்டப்படும், மிகவும் பழக்கப்பட்ட படிமங்களில் சிலவற்றைக்
கொண்டிருக்கும் அறை ஆகும். ஜோன் மிரோவின் படைப்புக்கள் --நத்தைகளின் பால்களில் உள்ள நட்சத்திரங்கள்
(Stars in the sexesof snails)
மற்றும் நடிகர் ஒரு நீக்ரோ பெண்ணின் மார்பகத்தை முத்தமிடல்
(A
star caresses the breast of a negress)--
மிகையதார்த்த கவிகள் ஏற்கனவே சோதித்த தானியக்கத்தை, அடுத்த அறை விளக்குவது போல, அண்ட்ரே மார்சன்
மற்றும் ஜோன் ஆர்ப் (André Masson and Jean Arp)ஆகியோர்
அதனை பூச்சோவியத்தில் கொண்டுவர விழைகின்றனர்.
அன்பு, கவிதை அறையானது மிகையதார்த்தவாதம் ஒரு இலக்கிய மற்றும்
சர்வதேச இயக்கமாகக் கொண்டுள்ள கலை உண்மைகளைக் கொண்டுள்ளது. வெளியீடுகள் மற்றும் கையெழுத்துப்படிகள் அங்கு
இருக்கின்றன, மிகவும் பாராட்டுதற்குரியனவாக இருப்பது சிறிய துண்டறிக்கைகள் ஆகும்-- "நீ அன்பை நேசிப்பதாக
இருந்தால், நீ மிகையதார்த்த வாதத்தை நேசி", "பெற்றோர்களே உங்கள் கனவுகளை குழந்தைகளுக்குக் கூறுங்கள்",
மேலும் மிக முக்கியமாக, "மிகையதார்த்தவாதம் என்பது இலக்கிய உலகால் மறுக்கப்பட்டது" போன்றவை ஆகும். இங்கு
சர்வதேச அணிசேர்தல் பற்றிய நிழற்படங்கள் மற்றும் சந்திப்புக்களுடன், மிகையதார்த்த வாதத்துக்குள்ளே ஏதாவது
ஒருவகை அமைப்பு இருந்ததா என்பது பற்றிய முதலாவது கருத்துருவும் கூட இருந்தது.
அடுத்த அறையில் உள்ள டாலியின் ஆசையின் குடியிருப்புகள் (Accommodations
of Desire)
பாலியல் ஏக்கத்தைப் பற்றிக் கூறுகிறது. கலா எலுவர்டுடனான தனது உறவை தந்தையின்
அங்கீகார மறுப்பு பற்றியதாக அவர் உணர்கிறார். டாலியின் எதிர்வினை அதிகமாய் புனித விஷயங்களுக்கு "அதிர்ச்சி"
கொடுத்தது. "மனித வாழ்வில் அன்பு மட்டுமே மதிப்புள்ளதாக நான் கருதுகிறவாறு, முரணிய பாலுணர்ச்சி, தீயொழுக்கம்
மிகவும் புரட்சிகர சிந்தனை மற்றும் செயல்பாட்டின் மிகவும் புரட்சிகர வடிவங்களாக நான் கருதுகிறேன்" என அவர்
கூறினார். மற்றொரு அறை பொருட்களை வழிபடல் பற்றி பதிவு செய்கிறது. மெரட் ஓபன்ஹய்ம்மின் (Meret
Oppenheim)
பொருள் (Object)
(கப், சோசர் மற்றும் கரண்டியை மூடிய தோல்) புகழ் பெற்றதாக இருக்கிறது, ஆனால், எனது தாதி (My
Nurse) என்றதில் குதிக்கால் உயர்ந்த ஒரு ஜோடி
--ஷூக்கள் (காலணிகள்), வளர்ப்புப் பறவை ஒன்று பாலியல் நாட்டத்தைக் காட்சிப்படுத்துவது போல் உடை அணிந்துள்ளது.
இங்கிருந்து மிகவும் தலைகீழான உள்ளுறையான கற்பனை கொண்ட அறைக்கு குறுகிய அடியே
உள்ளது-- அது அல்பேர்ட்டோ ஜியோகாமெட்டின்(Alberto
Giacometti) தொண்டை அறுபட்ட பெண் (Woman
With Her Throat Cut) எனும் படைப்பை மையத்தில்
கொண்டுள்ளது மற்றும் அந்த அறை ஹான்ஸ் பெல்மரின் பொம்மைகளுக்கு (Hans
Bellmer's dolls) ஒதுக்கப்பட்டிருந்தது. பெல்மரின்
பொம்மைகள் வன்முறையான மற்றும் நேர்மைக் கேடான உருத்திரிபுகளைக் கையாளுமாறு இருந்தன. பெண் உடம்பால்
அமைக்கப்பட்ட இப்பிம்பங்கள், Eros (காதல்
தேவதை) அறையினுள் இருந்த ஆபாசப் படைப்புகளை விட அதிகமாகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஜோர்ஜ் பட்டாயின்
(Georges Bataille)
கண்ணின் கதை (Story of the Eye)
மேசனால் (Masson)விளக்கப்படுறது.
இங்கு செக் குழுவின் சிற்றின்ப அம்சங்களும் இருக்கின்றன. அதன் பக்கத்தில் ஜோர்ஜஸ் ஹக்னெட்டின்(Georges
Hugnet) ஓனான் (Onan)
உள்ளது. இந்த அறை ரதோவான் இவிசெக்கின் 1959 Eros
கண்காட்சியின் ஒலித் தொகுப்பை எதிரொலிக்கிறது, இது பெண்ணின் பாலியல்
ஏக்கப் பெரு மூச்சு மற்றும் புலம்பல்களின் ஒலிநாடா ஆகும்.
நன்றாக விளக்கப்படாவிட்டாலும் அறையின் முக்கிய பகுதியாக இருப்பது மார்க்குஸ் டு சாட்
(Marquis de Sade)
ஆகும். அவரது படைப்புக்களுக்கான மேசன் மற்றும் பெல்மரின் (Masson
and Bellmer) விளக்கங்கள், அவரது வாழ்வைப் பற்றியும்
சிந்தனையைப் பற்றியும் சுருக்கமாகக் காட்டுகிறது. டு சாட் ஐ சுயவிடுதலை பற்றிய தத்துவவாதியாக காட்டும் வழமையான
மேற்கோள்கள் இருக்கின்றன ஆனால் இந்த அறை, குறிப்பாக இந்தக் கண்காட்சி ஒட்டு மொத்தமாக உள்ள பிரச்சினையை
வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. நான் இதற்கு திரும்பவும் வருவேன்.
கடைசி இரண்டு அறைகள் பெண் கலைஞர்களால் செய்யப்பட்ட படைப்புக்களை
அதிகமாகக் கொண்டுள்ளது. எர்னஸ்டின்(Ernst)
மணப்பெண்ணை கொள்ளை கொள்ளல் (The
Robing of the Bride) எனப் பெயரிடப்பட்ட
அறை, அது மையமாக இல்லாத போதிலும், மேலோட்டமாக பெண் கலைத் தேவதை பற்றியது. இங்கு டோரோதியா
டானிங்கின் (Dorothea Tanning)
பிறந்தநாள் (Birthday)
(ஒரு கலைஞரின் சுய உருவப்படுத்தலாகும்) மற்றும் பிரிடா காலோவின்
(Frida Kahlo) சுய
உருவப்படங்களில் உருவப்படுத்தல் இருக்கிறது, அதன் அருகே எய்லீன் அகரின் (Eileen
Agar) அராஜகத்தின் தேவதை (Angel
of Anarchy) மற்றும் ரோலண்ட் பென்ரோசின் சிறகு
விரித்த முகமூடி (Winged Domino)
ஆகியன இருக்கின்றன.
கடைசி அறை மிகவும் குறைந்த அக்கறை உடையதாக இருப்பினும் தெளிவாகப் புரிந்துகொள்ளுமாறு
இருந்தது. மார்ஷல் டுசாம்ப்பின் கடைசி வேலையின் பகுதியாக சிற்றின்ப விஷயங்கள் (Erotic
Objects) இருந்தது. இது ஒரு நிர்வாணப் பெண் உடலின் யதார்த்தமான
மாதிரி, ஒரு துளையின் வழியாக மட்டுமே காணக்கூடியதாய் அமைந்திருந்தது. டோரோதியா டான்னிங்கின் சிற்பம் --
பெண் உடம்பாலான இருக்கை வியப்பில் ஒன்றிணைக்கிறது (மற்றும் எனக்குப் புதிதானது). கடைசிப்பகுதி லூயி பூர்ஷூவாவின்
(Louise Bourgeois)
தலைக்கட்டு (Fillette),
ஆண் பெண் மூலகங்களின் இணைந்த லிங்க உருவான படைப்பாற்றல் பொருள் ஆகும்.
அதிக அளவு பொருட்கள் இங்கு இருக்கிறது, அவற்றில் சில பிரபல்யமாகாதவை. அது ஈர்க்கும்
வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது மற்றும் இவ்விஷயம் மிகையதார்த்தத்தில் அங்கீகாரமானதாக இருக்கிறது. அப்படியானால்
இறுதியில் ஏன் ஏமாற்றமாக இருக்கிறது? அங்கு பல காரணங்கள் இருக்கின்றன.
ஒருவர் ஆசைகொள்ளும் பொழுதிலேயே என்பது மிகையதார்த்த வாதத்துக்கு மையமான
கருத்து "--அது இங்கு கிட்டத்தட்ட மிகையதார்த்த வாதத்தை ஒரே பொருளுடைய பல சொல்லாகக் காட்டுகிறது. இங்கு
ஒரு கேள்வி எழுகிறது: ஆசை எதற்காக? இங்கு ஆசை மனோ ஆய்வுகளின் பதங்களாகவே மட்டும் பார்க்கப்படுகிறது.
மிகையதார்த்த வாதத்துக்கும் மனோ ஆய்வுக்கும் இடையிலான தொடர்பைக் குறைத்துக் கூற முடியாது. பிரெட்டன் (Breton)
பிரொய்டுடன் (Freud)
தொடர்புபடுத்துகிறார், மற்றும் வியன்னாவில் பாசிஸ்டுகளின் தாக்குதலுக்கு அவர் ஆளானபொழுது மிகையதார்த்த வாதிகள்
அவரைப் பாதுகாத்தனர். இருப்பினும், அனைத்து மிகையதார்த்த வாதிகளும் மனோ ஆய்வையும் மனித மனத்தின் விடுதலையையும்
அதற்குள்ளேயான முடிவாகப் பார்க்கவில்லை.
பிரச்சினை மிகையதார்த்தவாத இயக்கங்களின் வரலாற்றுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
டாடாவின் மறுப்பியத்திலிருந்து தோன்றி, மிகையதார்த்தவாதம் கலைத்துவ கலகத்தை கட்டமைக்க மற்றும் கையாள முயற்சித்தது.
டாடாவில், அதன் சொந்தக் காரணத்திற்கான கலகம் தவிர்க்க முடியாமல் முட்டுச்சந்தினை வந்தடைந்தது. அதனால்
கலைக்குள்ளே உள்ள நனவிலி அம்சத்தின் பண்புக்கூறுகளை மதிப்பிடுவதற்கான முறைப்படியான முயற்சி அதிகரித்தது. அதனால்தான்
மிகையதார்த்த வாதத்தின் உள்ளே உள்ள மிகவும் முன்னேற்றம் அடைந்த மனிர்கள் பலர் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர்
மற்றும் அதன் பின்னர் மூன்றாம் அகிலத்தினுள் ஸ்ராலினிச சீரழிவிற்கான எதிர்ப்பில் லியோன் ட்ரொட்ஸ்கியால் முன்னெடுக்கப்பட்ட
நிலைப்பாட்டிற்காகப் போராடினர். மிகையதார்த்த வாதிகளால் எடுத்துக் கொள்ளப்பட்ட தத்துவவியல் ஆய்வுகளில் பல
புரட்சிகர இயக்கத்துக்கு உதவுவதை இலக்காகக் கொண்டிருந்தன. (டாலி உடனான முறிவு அவரது ஹிட்லருக்கு ஆதரவை
நியாயப்படுத்துவதற்கான அறிவுப் பிறழ்ச்சி- விமர்சன வழிமுறையின் அபிவிருத்தியுடன் வந்தது.) மிகையதார்த்த வாதிகளுக்கான
தலைமை வாகனம் "மிகையதார்த்த வாதம் புரட்சிக்கான பணியில்" என்று தலைப்பிடப்பட்டிருந்தது தற்செயலானதல்ல.
சமமான அளவில், மிகையதார்த்தவாதம் ஒரே ஒரேபடித்தான (இயல்பான) இயக்கமாக
அல்ல. அங்கு சர்ச்சைகளும் உடன்பாடின்மைகளும் இருந்தன. சில பிளவில் முடிந்தன, அவற்றில் சில அதிகமாய் அரசியல்
தன்மை உடையதாக இருந்தன. (அரகான் மற்றும் எலுவர்ட் ஆகியோர் ஸ்ராலினிச அதிகாரத்துவத்துக்குள் கொள்கைகளைக்
கைகழுவுதல் அவர்களைக் கலை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அழித்தது). சில பிளவுகள் கலை ரீதீயாக இருந்தன,
இருந்தும் முக்கிய பாத்திரங்கள் (protagonists)
அரசியலாகவே நீடித்திருந்தன. (றொபேர்ட் டெஸ்னோஸ் (Robert
Desnos) தெரிசியன் ஸ்டாட் கடூழியச் சிறை முகாமில் இறந்தார்).
சில விளிம்பு நிலை அடி மட்டத்து மனிதர்கள் கலை ரீதியாகவோ (லியனோ ராகாரிங்டன் (Leonora
Carrington) போன்று) அல்லது அரசியல் ரீதியாகவோ (ஜெர்ஸி
(Jersey)
எதிர்ப்புக்கு உதவியதற்காக சிறையிடப்பட்ட க்ளோட் காகன் (Claude
Cahun) போன்று ஆதரவாக இருந்தனர்.
இந்த வேறுபாடுகள் கருப்பொருளாக இருக்கின்றன. டாலியின் விஷயத்தில், 1930களில்
அவரது படைப்பிற்கும் 1936ல் அவரது படைப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை தெளிவாகவே அறிவது சாத்தியமாயிருக்கிறது.
சிறிதே அறியப்பட்டிருந்த மற்றும் நன்கு பிரதிநிதித்துவம் செய்த ஜாக்- அந்த்ரே புவாபார்ட் (Jacques-André
Boiffard) போன்ற கலைஞர்களை ஒத்தவகையில்,
Bataille குழுவிலிருந்து
புறப்பட்ட பின்னர், அவரது கட்டுரைக்கான விளக்கத்திற்கு, அதிகமான பின்புலம் கொண்டிருப்பது உதவியாய் இருக்கிறது.
மிகையதார்த்த வாதிகள் நனவிலியை அகழ்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர் ஆனால் அவர்கள் நனவாக அப்படிச் செய்தனர்.
இது முற்றிலும் இங்கு தவறவில்லை. இருப்பினும் அது இரண்டாம் பட்சமானதாக மற்றும் எப்படியோ
முக்கியமற்றதாக நடத்தப்படுகிறது. நனவிலியில் உள்ள ஆசைக்கும் நனவில் உள்ள ஆசைக்கும் இடையிலான உறவு அகழ்ந்தெடுக்கப்படவில்லை.
காட்சிப் பொறுப்பாளர் சரியாகச் சொல்கிறார், "மிகையதார்த்த வாதிகள் தாங்கள் பார்த்த சமுதாயத்தின் ஒடுக்குமுறை
மற்றும் பயனற்ற அம்சங்களை எதிர்த்தனர், மனிதர்களின் கற்பனைகளையும் ஆசைகளையும் சுதந்திரமாய் வெளிப்படுத்தும்
உலகின் பார்வையை கொண்டாடினர்." இருப்பினும், அவர்கள் ஏன் இது ஆசைப்படுவதற்குரியது அல்லது ஏன் இது போதுமானதாக
இருக்கவில்லை என்பது பற்றிய முடிவுகளுக்கு வரவில்லை. இங்கு ஏதாவது சமூக சிந்தனை பற்றி சிறிதளவு கருத்து இருக்கிறது,
இருப்பினும் மிகையதார்த்த வாதத்தின் இயக்கத்திற்கான அடித்தளத்தின் முழு அம்சத்திற்கும் துல்லியமாக இடமளிக்க வேண்டி
இருந்தது.
இதனால்தான் டு சாட் (De
Sade) இக் கண்காட்சியில் விவரிக்கப்படாத முக்கிய நபராக இருக்கிறார்.
முதலாளித்துவ சிந்தனை பாணிகளில் இருந்து முறித்துக் கொள்ளும் சிந்தனை முறையைக் கண்டறிவதற்காக நோக்கம்
இருப்பின், புதிய கருத்துக்களுக்கான சாத்தியங்கள் திறக்கிறது மற்றும் (பொறுப்பாளர்களை மேற்கோள் காட்டுவதாயின்)
"கற்பனை செய்ய, கனவு காண மற்றும் கண்டுபிடிப்பதற்கான மனித மனத்தின் எல்லையில்லா திறமையின் உள்ளுறை ஆற்றலை
அகழ்ந்தெடுப்பதற்கு மரபு வழியிலான நம்பிக்கை ஆதாரங்களை மற்றும் பகுத்தறிவைக்" கடந்து செல்கிறது, அவ்வாறெனில்
டு சாடி அதிகூடிய ஆரம்பஸ்தானமாக இருக்கிறது. ஆரம்ப ஸ்தானமாக முன்வைப்பதற்கு பயன்படுத்துவது பற்றி விமர்சன
ரீதியான கேள்வி இருக்கின்றது. அவர் ஒன்றில் அந்தக் கதவைத் திறப்பதற்கான கருவியாக (ஒருமுறை அது திறந்ததும்
ஏதோ மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது) அல்லது அவரில் நிறைவு கொண்டவராக இருக்கிறார். இது மாசனின் விளக்கத்தில்
கண்கூடாக இருக்கிறது. அவர் டு சாடியில் இருந்து ஆரம்பிப்பதைக் காட்டிலும் அவரிலேயே அமிழ்ந்து போகிறார். கலை
அழகியலைக் காட்டிலும் காமத்தைப் புகழ்தல் காணப்படுவதிலும் சிந்தனைமுறையில் இருக்கும் ஏதாவது விடுதலைப்போக்கு
அழிதலிலும் இதுதான் இருக்கிறது. மிகையதார்த்த வாதத்தில் ஒரு கருத்தை பரிசோதிப்பதிலிருந்து, காட்சிப் பொறுப்பாளர்கள்
எல்லாவற்றையும் பாலியலுடன் முழுக்கவனத்தையும் தனதாக்கிக் கொண்ட மனிதர்களின் வரலாறுகளில் கரைத்து உயிர்ப்பொலியைக்
கெடுத்து விடுகிறார்கள்.
இக் கண்காட்சியின் அளவுக்கதிகமானவை மிகையதார்த்தவாதத்தில் உள்ள பலவீனமான
அம்சங்களைப் புகழ்கின்ற அதேவேளை பலமான அம்சங்களைப் பற்றி ஒன்றும் கூறாமல் நழுவிச் செல்கின்றன.
தொலைக்காட்சியிலும் விளம்பரப்படுத்துவதிலும் மிகையதார்த்தவாத கற்பனை பிரபல்யம் அடையுமாறு பார்வையாளர்களுக்கு
கடைவிரிக்கப்படுகிறது. இது ஒரு 1930களில் முன்னெடுக்கப்பட்ட மிகையதார்த்த வாதத்துக்கு எதிரான தேசியவாத விவாதங்களின்
மிகவும் நவீனப் பதிப்பாக சற்றே இருக்கிறது (எடுத்துக் காட்டாக கலை வரலாற்றாசிரியர், விமர்சகர் மற்றும் கவிஞரான
ஹெர்பர்ட்ரீடின் பிரிட்டனுக்கு மிகையதார்த்தவாதம் தேவைப்படுவதில்லை ஏனெனில் அது அபிவிருத்தி அடைந்த கற்பனைக்
கலையைப் பெற்றிருக்கிறது என வாதித்தார்). பாலியல் பண்பை அதிகம் கூறுவது, கையாளுவது மற்றும் அவாவை அடக்கி
வைப்பது ஆகியன மூலம் "இந்த அசிங்கத்தைப் பூச" விழைகின்றது. மிகையதார்த்தவாதம் ஒரு விஷயத்தில் --ஆசை--
முழுக் கண்காட்சியையும் ஒரு மட்டத்திற்கு சுருக்குவதை மனதிற்கு பிடித்ததாகச் செய்வதில் -- ஒரே இயல்பானதாக இருக்கிறது.
மிகையதார்த்தவாதம் அதன் உச்சகட்டப் புள்ளியாக முழு உலகத்தையும் தனது விஷயமாகப் பார்த்தபொழுது, அது மிகையதார்த்த
வாதத்தை ஒற்றைக் கருத்தாகக் குறைக்கிறது.
Tate Modernwebsite:
http://www.tate.org.uk/modern/default.htm
|