World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள்:மார்க்கிச அரசியல் பொருளாதாரம் An Exchange on Wages under a Socialist Society சோசலிச சமுதாயத்தில் கூலிகள் பற்றி ஒரு கருத்துப் பரிமாற்றம் 8 January 2002அன்புள்ள WSWS: உங்களை நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். சோசலிச அரசில், எவ்வாறு கூலிகள் பற்றிய பிரச்சினைகள் தீர்க்கப்படும்? குறிப்பாக "அரசும் புரட்சியும்" என்ற புத்தகத்தில் லெனின் நெறிப்படுத்திய கோட்பாடுகளை மையமாக வைத்து சோசலிச பொருளாதாரம் அமைக்கப்படுமேயானால்: (1) ஜனநாயக ரீதியான மற்றும் நேர்மையான தேர்தலும் அனைத்து அலுவலர்களையும் திரும்பப் பெற வழிவகையும். (2) தேர்ச்சி பெற்ற தொழிலாளியின் கூலியைவிட அதிகாரி அதிகம் கூலி பெறாமை. (3) நிலையான இராணுவம் இல்லாமல் மக்களே ஆயுதபாணி ஆக்கப்படல். (4) படிப்படியாக அரசை நடத்தும் பணிகள் முறையே தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படும். எல்லோரும் அதிகாரத்துவத்தினராக இருக்கும் பொழுது, "அதிகாரத்துவத்தினன்" என்று தனிப்பட்ட முறையில் யாரும் கிடையாது. வேறுபட்ட வகையில் படித்தவர்களின்/தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களின் முரண்பாடு எவ்வாறு தீர்க்கப்படும்? நான் ஒரு மருத்துவன். எட்டாவது வரையே படித்துள்ள ஒரு வாயிற் காவலர் சரியாகக் கல்வி பெறாதவர்கள் பெறும் அதே அளவு பணத்தை நானும் பெறுவதா? இது இப்படியானால், யார் மேல்படிப்பு படிக்க முன்வருவார்கள்? அல்லது தேர்ச்சிபெற்ற துறைசார் தொழில்களுக்கு பல ஆண்டுகள் பயிற்சி தேவையா? இவ்வாறு என்னுடைய சந்தை ஆதரவு நண்பர்கள் சிலரால், சோசலிசம்/ கம்யூனிசம் தொழிலில் "மேம்பட்ட நிலைக்கு ஊக்கம் அளிப்பதில்லை" என்று விவாதம் முன்வைக்கப்படுகிறது. நான் மேற்கூறிய கருத்துக்களைப் பற்றி மேலும் அறிதலுக்கான சிந்தனைகளையோ அதேபோல வழிகாட்டுதலையோ வழங்குவீர்களாயின் அதனை நான் வரவேற்பேன். நன்றி . AH Arkansas 26 December 2001 அன்புள்ள வாசகருக்கு, சோசலிசத்தில் ஊதியம் (கூலி) பற்றிய உங்களது சமீப கடிதத்திற்கு நன்றிகள் பல. சோசலிச அரசாங்கமானது ஜனங்களின் ஒவ்வொரு பிரிவினர் மீதும் "வறுமையை சமத்துவமாக" பங்கீட்டு திணிக்கும் என ஒரு பொதுவான தவறான கருத்து சோசலிசத்தின் எதிரிகளால் தீவிரமாய் பரப்பப்பட்டு வந்தது. சோசலிசமானது பின்தங்கிய நிலையையும், தேக்கநிலையையுந்தான் அர்த்தப்படுத்துகின்றது என்ற வாதத்துக்கு ரஷ்யப் புரட்சியின் சீரழிவு சுட்டிக்காட்டப்பட்டது. லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி ஆகியோரது எழுத்துக்கள், முன்னணி புரட்சிகர சோசலிஸ்டுகள், முழுமையான சோசலிச சமத்துவம் என்ற அர்த்தத்தில், சோசலிசம் ஒரே நாளில் அடையக்கூடிய ஏதோ ஒன்றல்ல என்பதைப் புரிந்து கொண்டிருந்தனர் என்று காட்டும். முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறும் இடைக்காலத்தில் சட ரீதியிலான ஊக்கத்தொகை இருக்கும், ஆனால் அது முதலாளித்துவத்தில் இருப்பது போன்ற வடிவில் அல்ல. ஒப்பீட்டளவிலான பற்றாக்குறைக்கான சூழ்நிலைகள் தொடர்ந்து இருக்கும் வரை, தற்போதையதைவிட மிகக் குறைவாக வாழ்க்கைத் தரத்தில் வேறுபாடுகள் இருந்தபோதும், வாழ்க்கைத் தரங்களில் வேறுபாட்டுக்காக, பணத்திற்கான அதே விதமான தேவையும் நீடிக்கும். சோசலிசம் எல்லாரும் எல்லாமும் அபரிமிதமாய் பெறக் கூடிய சமுதாயத்தை எண்ணிப்பார்க்கிறது. வாழ்க்கையின் தேவைகளையும் ஆடம்பரங்களையும் பெறுவதற்கான சாதனமான பணத்திற்கான தேவையும் தற்போதைய உயிர் பிழைத்திருப்பதற்கான போராட்டத்தையும் சேர்த்து, இறுதியில் சமத்துவமின்மை மறையும். உற்பத்தி சக்திகள் மற்றும் தொழில் நுட்பத்தின் பெரும் அபிவிருத்தி இது கற்பனைக் கனவல்ல என்று காட்டுகிறது, ஆனால் அது பூகோளப் பொருளாதாரத்தை ஜனநாயக ரீதியிலும் திட்டமிட்ட வகையிலும் ஒழுங்கமைப்பதை தேவையாகக் கொண்டிருக்கிறது. உங்களது சந்தை ஆதரவு நண்பரின் விவாதங்கள், மாறா உலகம் மற்றும் மாறா மனித இயல்பு பற்றிய வரலாற்றுக்குப் புறம்பான கருத்துருவை முற்றிலும் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இன்றும் கூட, சிறந்த கலைஞர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் ஏனைய தொழில் துறையில் உயர்தேர்ச்சி உடையவர்கள் போன்றவர்கள் அதிக பணத்துக்கான சட ரீதியான ஊக்கத்தினால் செயல் நோக்கம் கொண்டவர்களல்ல. நீங்கள் மருத்துவராக இருப்பதால், கெட்டிகார, புத்திசாலி மாணவர்களை மருத்துவ கல்விக்கு ஈர்க்கவேண்டுமென்றால் அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் தேவை என்று நீங்கள் வாதிப்பீர்கள் என நான் நினைக்கவில்லை. இது ஒரு முக்கியமான முன் உதாரணம். தொழிலாளர்களும் நடுத்தர வர்க்க மக்களும் இலாப நோக்குள்ள மருத்துவமுறை, சிறந்த, கருணையுள்ள மருத்துவத்தை அமெரிக்காவில் கொண்டுவரவில்லை என்ற உண்மையுடன் முரண்படுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. மாறாக, எங்கும் நேர்மையுடனும் புறநிலைரீதியாகவும் பார்க்கும் நோக்கர்கள் பரிவுமிக்க, சிறந்த, உயர்தர மருத்துவ வசதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்துள்ளனர்; இது ஏழைகளுக்கு மட்டுமல்ல மற்றும் காப்பீடு செய்து கொள்ளாதவர்களுக்கும் பொருந்தும். இது HMO மற்றும் அதேபோன்ற பல நிறுவனங்களின் இலாப நலன்களினால் ஆணையிடப்படும் மருத்துப் பராமரிப்பால் கவனிக்கப்படும் பலருக்கும் கூட பொருந்தும். முடிவாக, சோசலிசப் பாதையில் பல தலைமுறைகள் அல்லது அதிகமான தலைமுறைகள் சம்பந்தப்பட்ட காலகட்டம் செல்லக்கூடும். மருத்துவரோ, அதிக தேர்ச்சி பெற்றவர்கள் குறைந்த தேர்ச்சி பெற்றவர் சம்பாதிக்கும் அதே ஊதியத்தை பெறமாட்டார். ஆனால் தற்போது சாதராரண தொழிலாளியைவிட அதிகம் சம்பளம் பெறுபவர், குறைந்த பட்ச சம்பளத்தை விட 20 முறை கூடுதல் சம்பளம் பெறும் அளவிலான தற்போது வளர்ந்து வரும்வேறுபாடு எதையும் காணமாட்டார்கள். (பெரிய தொழில் நிறுவனங்களின் உயர் மட்டங்களில் உள்ள தலைமை நிர்வாக இயக்குநர்கள் மீ வளி மண்டல அளவு சம்பளமும் போனஸூம் பெறுகின்றதைக் குறிப்பிடத் தேவை இல்லை). ஒரு சோசலிச அரசாங்கமானது சமூக ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும். இது மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை குறைப்பது மூலம் அன்று; மாறாக பெருவாரியான மக்களின் நிலைமைகளை மேம்படுத்துவதன் மூலம் செய்யும். வாழ்க்கைத் தரத்தையும் வாழ்க்கை நிலைமைகளையும் துரிதமாக உயர்த்துதல், நவீன முதலாளித்துவத்தைப் பண்பிட்டுக் காட்டும் சடரீதியாக பிறர்பொருளுக்கு ஆசைப்படுவதை வழிபடலும் அதற்கு போட்டியிடலும் தேய்ந்து போவதற்கு வழிவகுக்கும். விஞ்ஞான தொழில் நுட்ப பயன்கள் அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்கும், மற்றும் மிகவும் சமநிலைப்படுத்தப்பட்ட கலாச்சார மற்றும் அறிவார்ந்த வாழ்க்கையை சாத்தியமுள்ளதாக ஆக்கும். இது லெனின் "அரசும் புரட்சியும்" என்ற புத்தகத்தில் சக்தி மிக்க வகையில் கண்ட கருத்துருவுடன் பெரிதும் ஒத்திருக்கிறது. பின்தங்கியதும் தனிமைப்படுத்தப்பட்டதுமான சோவியத் ஒன்றியத்தில் இந்த சோசலிச இலக்கு எட்டப்படாமல் போயிற்று. ஆனால் இது சில திட்டவட்டமான வரலாற்றுக் காரணங்களால் அன்றி இலக்கு தவறானதால் ஏற்பட்டது அல்ல. இப்படிச் சொல்லலாம் என்றால், 1917-ல் உலக முதலாளித்துவம், அதன் பலவீனமான கண்ணியில் (சங்கிலியில்) உடைந்தது. ஒட்டுண்ணி சோவியத் அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை சோசலிசப் பாதையிலிருந்து விலக்கி திரும்ப முதலாளித்துவத்திற்கே திருப்பிவிட்டது. அதிகாரத்துவம், சோசலிசத்தைக் கட்டுவதாக போலியாக கூறிக்கொண்டாலும், அது சோசலிசத்தின் அடிப்படைக் கொள்கைகளையே மழுங்கடித்தது. அது முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தற்போதைய துன்பத்திற்கான அடிப்படைக்கே வழி வகுத்துக் கொடுத்தது. இன்று, சோசலிச நனவையும் உலக சோசலிச இயக்கத்தையும் மீள புதுப்பித்தலானது, ஸ்ராலினிசத்தின் காட்டிக் கொடுப்பின் படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் மனித முன்னேற்றத்திற்கு அவசியமான சர்வதேச ஐக்கியத்தை ஒன்றிணைக்கும். இவை உங்களுக்கு சில தகவல்களை வழங்கும், WSWS- ஐ படிப்பதோடு, 1920-1930 களின் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவற்றில் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு வரும் மாற்றத்தின் இயல்பு குறித்து மிகவும் விரிவாகவும் கருத்தாழமாகவும் அவர் எழுதுகிறார். Sincerely, Peter Daniels for the World Socialist Web Site and the Socialist Equality Party 1 January 2002 |