The US extends "war on terrorism" into the Philippines
அமெரிக்கா "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை" பிலிப்பைன்ஸினுள் நீட்டித்துள்ளது
By Peter Symonds.
21 January 2002
Back to screen version
பிரிவினைவாத அபு சயாவ் (Abu
sayyaf) கொரிலா குழு தளமாக கொண்ட தெற்கு தீவான பாசிலியான்
(Basilian)
இல் 160 விசேட சிறப்புப் படைகள் உட்பட, 650 இற்கும் மேலான அமெரிக்க இராணுவத்தினர், பிலிப்பைன்ஸ் ஆயுதப்படைகளுடன்
சேர்ந்து ஓர் கூட்டுப் பயிற்சி ஆரம்பிப்பது என்ற போர்வையின் கீழ் தரையிறங்க தொடங்கியுள்ளனர். இவ் அபிவிருத்தி புஷ்
நிர்வாகத்தால் பயங்கரவாதத்திற்கு எதிரான பூகோளப்போர் என அழைக்கப்பட்டதை நீட்டித்துள்ளதையும், தனது முன்னய
காலனியிலும், பரந்தளவில் தென்கிழக்கு ஆசியாவிலும் அமெரிக்கா தனது இலாபங்களை ஆக்கிரமிப்பான முறையில் நிலைநிறுத்த
முனைவதின் முக்கியத்துவத்தை குறிக்கின்றது.
ஜனாதிபதி Gloria
Macapagal Arroyo கடந்த வெள்ளியன்று ''அமெரிக்க படைகள்
பயிற்சியளிப்பதற்கே வந்துள்ளார்களே தவிர கலகக்காரர்ளை ஒழிப்பதற்கு உதவி செய்வதற்கு அல்ல'' என கூறியுள்ளார்.
எப்படியிருந்தாலும் எல்லா சாட்சியங்களும் இதற்கு மாறாகவே காட்டுகின்றன. இப் "பயிற்சி" அபு சயாவின் ஆதிக்கத்திலுள்ள
பிராந்தியத்தில் தொடங்கப்பட்டதுடன் யூன் வரை நீடிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ''உண்மையான பயிற்சிக்காக''
அமெரிக்க படைகள் பிலிப்பீனோவின் படைகளுடன் இணைந்து அபு சயாவின் போராளிகளை வேட்டையாடுவதற்கான அவதானங்களையும்,
மதிப்பீடுகளையும் செய்வதோடு, ''தம்மை பாதுகாத்துக்கொள்ளும்'' உரிமையையும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பேச்சாளரான
Rigoberto Tiglao இதை புரியக்கூடிய வகையில் கூறுகையில் "பயிற்சி"
உண்மையிலேயே பிரிவினைவாத குழுவை அகற்றுவதன் நோக்கிலே அமைந்த ஓர் இராணுவ நடவடிக்கை என தெரிவித்தார்.
மேலும் அவர் ''எமது பாரிய பிரச்சனை அபு சயாவ் ஆகும். இது இராணுவ ரீதியிலான பயமுறுத்தலில்லை, மாறாக அபு
சயாவ் தாங்கள் ஓர் ஆப்கானிஸ்தான் என்னும் விளக்கத்தை உருவாக்கியுளார்கள். இக்கூட்டுப் பயிற்சி அபு சயாவை அழித்தொழிப்பதில்
முடியுமானால், நாங்கள் உண்மையிலேயே சந்தோசப்பட வேண்டியது தான்"
பாதுகாப்பு செயலாளரான
Angelo Reyes இதைவிட மேலும் வெளிப்படையாக கூறியிருந்தார்.
அவர் குறிப்பிட்டதாவது அவர் மேலும் ''இக்கூட்டு நடவடிக்கை பிரிவினைவாதக் குழுவை இல்லாது ஒழிக்கும் நோக்கத்தையுடையது''
என தெரிவித்தார். இப் பயிற்சி இவ்வருட முடிவுவரை நீடிக்கலாம். அவர் தொடர்ந்தும், இந்த கூட்டு முயற்ச்சியின் திட்டத்தில்
அபு சயாவ்வை இல்லாதொழிப்பதுடன் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவர்'' என தெரிவித்தார். ஏப்பிரல் 2000ல் மலேசிய
முத்துக்குழிப்பு உல்லாச இடமான சிபாடனில் (Sipadan)
வெளிநாட்டு சுற்றுலா குழுவினர் உட்பட வேலை செய்பவர்களையும்
கடத்தி சென்றதற்கு அபு சயாவ் பொறுப்பாக இருத்தனர். இவர்கள் தற்பொழுது அமெரிக்க மதப்பிரச்சார
தம்பதிகளான மார்ட்டினையும் கிராசியா போர்ன்காமையும் (Martin
and Gracia Burnham), ஓர் பிலிப்பீனிய தாதியான டேபோரா
யாப்யும் (Deborah Yap)
காவலில் வைத்துள்ளனர்.
அமெரிக்க இராணுவம் பிலிப்பைன்ஸில் ஈடுபட்டுள்ள நடவடிக்கை ஓர் மோதல்களின் விஸ்தரிப்பை
எடுத்துக்காட்டுகின்றது. 1981இற்கும் 1995 இற்கும் இடையில் முன்னைய கூட்டுப்பயிற்சி நடைபெறுகையில் கிட்டத்தட்ட
3000 அமெரிக்க இராணுவப் படைகளும் பிலிப்பீனோபடைகளும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் 1996ல் இது நிறுத்தப்பட்டிருந்தது.
1999ல் வாஷிங்டனுடன் படைகளுக்கான ஒப்பந்தத்தை (Visiting
Forces Agreement) பிலிப்பைனஸ் கையெழுத்திட்டதிலிருந்து 20
அமெரிக்க படையினருக்கு மேல் எந்தவொரு நேரத்திலும் பயிற்ச்சியளிப்பதில் ஈடுபடவில்லை. அண்மைக்கால பயிற்சிகளில்
பாரிய எண்ணிக்கையுள்ள அமெரிக்க படைகள் ஈடுபட்டிருந்தனர். ஆனால் பாதுகாப்பான பிராந்தியங்களிலும், ஒரு குறுகிய
காலத்திற்கும் மட்டுமல்லாது தற்போது இரண்டு கிழமையிலிருந்து ஓர் மாதம்வரையில் ஈடுபட்டிருந்தன.
கடந்த நவம்பரில் வாஷிங்டனுக்கு விஜயம் செய்தபோது அபு சயாவிற்கு எதிராக அமெரிக்கப்
படைகளை ஈடுபட அனுமதிக்குமாறு ஜனாதிபதி புஷ் தன்னை கேட்டுக் கொண்டதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஆரயோ (Arroyo)
ஒப்புக் கொண்டார். பிலிப்பீனோ படைகள் கொரிலாக்களுடன் சமாளிக்க
தகுதியானவர்கள் என புஷ் இற்கு கூறி தான் அக்கோரிக்கையை நிராகரித்ததாக தெரிவித்தார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி
ஓர் பகிரங்கமான அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு சம்மதிப்பது சம்பந்தமாக பீதியடைவதற்கு இரண்டு காரணங்கள்
உள்ளன: முதலாவது இது நாட்டினுடைய சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது, அத்துடன் இரண்டாவது பிலிப்பைன்ஸ்
விவகாரங்களில் அமெரிக்காவினுடைய தலையீடுகளின் நீண்டபதிவுகள் எதிர்ப்பை உருவாக்கிவிடும் என்பதாலாகும்.
பல அரசியல் தலைமைகள் ஏற்கனவே
Arroyo வை விமர்சித்ததுடன் தற்போதய "கூட்டுப்பயிற்சி" பிலிப்பைன்சினுள்
புஷ் தனது "பயங்கரவாதத்திற்கு மேலான போர்" ஐ விஸ்தரிப்பதற்கான ஓர் சதி என குறிப்பிட்டுக்காட்டினார். முன்னைய
மந்திரியான Francisco Tatad
இம்முடிவு ஓர் "ஏமாற்றுத்தனமானதும் துரோகத்தனமானதுமான நகர்வு எனவும், இது உண்மையில் பிலிப்பைன்ஸை ஆப்கானிஸ்தானாக
மாற்றுவதன் தொடர்ச்சி" என விபரித்தார். மற்றைய பல விமர்சகர்களைபோல் அவர் பாசிலியானிற்குள் அமெரிக்க படைகளின்
புகுவு சட்டத்திற்கு மாறானதும் Arroyo
அரசியல் குற்றம் சுமத்தப்படுவார் எனவும் எச்சரித்தார்.
"அமெரிக்க படைகள் பிலிப்பீனோ படையினரை பயங்கரவாத எதிர்ப்பு போரிற்கு பயிற்றுவிப்பதற்காக
இங்கே வந்துள்ளார்கள் என Arroyo
கூறும்போது CNN
அதனை கருத்தில் கொள்ளாது," என Tatad
கூறினார். "ஆனால் எங்களை மடையர்கள் போல அனுசரிப்பதும் இப்படியான முறையில்
பொய் கூறுவதையும் நாங்கள் மிகவும் கவனத்தில் கொள்கின்றோம்". தனது 2004 ஜனாதிபதி தேர்தல் நோக்கத்திற்கு
வழி கோலுவதற்காக Arroyo
அரசாங்கத்தை "ஒரு பெண் ஆட்சியாக" திருப்புகின்றார் என அவர் குற்றம்
சாட்டினார்.
அமெரிக்க இராணுவ தலையீட்டின் பிரதிபலிப்புகள் ஆளும் வட்டாரங்களுக்கிடையேயுள்ள கவலையை
Tatad ம்
மற்றவர்களும் பிரதிபலிக்கின்றனர். அவர்கள் அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகளை ஒன்று திரட்டவும் முயற்சிக்கின்றனர். தகவல்
வங்கி நிறுவனமும் ஆய்வு நிலையமுமான Ibon
இனால் எடுக்கப்பட்ட ஒர் கணிப்பின்படி பெரும்பான்மையான பிலிப்பீனியர்கள்
(52.73 வீதம்) கூட்டுப்பயிற்சியை நிராகரித்துள்ளனர். மந்திரி
Rodolfo Biazon
அரசியல் ஆபத்துக்களை எச்சரித்து கூறுகையில்: "ஆப்கானிஸ்தானில் நடந்தது போல, அமெரிக்கப் படையினரால் சுடப்படும்
குண்டு ஒன்றினால் ஓர் பிலிப்பைன்ஸ் பிரஜை கொல்லப்படுவாரானால் நாட்டின் அரசியல் திடநிலை விரோதமாக
மாறிவிடும்."
அமெரிக்க இராணுவ தயார் நிலைக்கான ஆயத்தத்தை இடதுசாரி குழுக்கள் கூட எதிர்த்துள்ளனர்.
தலைமறைவாக வாழும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான
Jose Maria Sison
வெளியிட்ட அறிக்கையில், பிலிப்பைன்சினுடைய மக்களினதும் அவர்களுடைய புரட்சிகர சக்திகளுக்கும் எதிராக "போருக்கான
தலையீடும் சாத்தியமான ஓர் ஆக்கிரமிப்பு போருக்கான" மன்னிப்பாக அபு சயா பாவிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
ஒரு வருடத்தினுள் Arroyo
வை "அமைதியான முறையில் அகற்றுவதற்கு" அமெரிக்க இராணுவத்தின் வருகை துரிதமாக
உதவி புரியும் என அவர் முன்னதாக கூறுகின்றார்.
Arroyo
உடன் அதிருப்தி
Jose Maria Sison ம் மற்றய "இடது"
தலைவர்களும் தற்பொழுது ஆணித்தரமாக Arroyo வை குற்றம் கூறலாம்
ஆனால் அவரின் நிர்வாகத்திற்கான நேரடிப்பொறுப்பை இவர்கள்தான் ஏற்கவேண்டும். இம்மாதம் Joseph
Estrada வை துாக்கியெறிந்து Arroyo
வை பதவி ஏற்கச் செய்த "மக்கள் சக்தி II"
என கூறப்பட்டதன் ஒரு வருட பூர்த்தியை குறிக்கிறது. Joseph
Estrada வை இலஞ்ச ஊழல்களின் பெயரில் குற்றச்சாட்டுகள் செய்ய தவறிய ஓர்
பகுதி இராணுவம், அரசியல் மற்றும் வியாபார சிறப்பு பிரிவினர் உயர் நீதிமன்றத்தின் உதவியுடன் Arroyo
வை ஜனாதிபதியாக்குவதற்கு தங்களுடைய உதவியை வழங்கியதுடன்
Estrada வை வெளியே தள்ளினர். இந் நடவடிக்கைகளுக்கு முக்கிய திறவு
கோலாக பங்களித்து ஜனநாயக அளவுகோலை வழங்கிய நபர்களான Jose Maria Sison
போன்றவர்கள் Arroyo அரசியல்
நிறுவனத்தின் வம்சத்தில் உதித்தவர், Estrada வை விட எப்படியோ
மக்களுக்கு கூட நன்மை கிடைக்கும் என்ற மாயையை உருவாக்கினர்.
Arroyo பதவிக்கு வந்த ஒரு வருடத்தின் பின்னர்
வாழ்கைத்தரத்தின் மேலும், தொழிலாள மக்களின் ஜனநாயக உரிமைகள் மேலும் இவருடைய தாக்குதல்கள்
Estrada வைப் போல கொடூரமாகவே உள்ளது. ஆப்கானிஸ்தானிற்கு எதிராக
புஷ் ஆல் நடாத்தப்பட்ட போரிற்கு உதவி வழங்குவதாலும், இராணுவ ஒழுங்கமைப்பிற்கு பங்களிப்பதாலும் தனது திடமற்ற
அரசியல் நிலையை பலப்படுத்த முனைகிறார். நவம்பரில் புஷ் உடனான இவருடைய சந்திப்பு குறிப்பிட்ட அளவு அமெரிக்க
பொருளாதார உதவியும், சீரழிந்து கொண்டிருக்கும் நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு முதலீடு செய்வதிலும்
முடிவடைந்தது. இதில் $4.6 பில்லியன் வழங்குதல், இராணுவ தளவாடங்கள் உட்பட ஆயுத படைகளை பலப்படுத்துதல் உள்ளடங்கும்
.
மேலும், "பயங்கரவாதத்திற்கு மேலான போர்" ஐ பாவித்து வளர்ந்து வரும் தனது நிர்வாகத்துடனான
அதிருப்தியை திசைதிருப்ப Arroyo
முனைந்து கொண்டார். Ibon
நிறுவனத்தால் அண்மையில் எடுத்த வாக்கெடுப்பின்படி முழுத்திருப்தி 8.27% எதிர்மறையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக
கண்டுள்ளனர். இவரின் நிர்வாகத்தை ஏற்றவர்களை விட அதிகமானவர்கள் நிராகரித்துள்ளாகள். 2001 ன் இறுதி கால்
ஆண்டுப் பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அதற்கு முன்னருள்ள பகுதியில் 19.2% சாதகமாக இருந்தது.
Arroyo பதவிக்கு வந்தபோது லஞ்ச ஊழல்களை
முடிவுக்கு கொண்டு வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்த கோரிக்கைகளை அமுல் செய்வதன் மூலம்
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார். எப்படியிருந்தபோதிலும், பொருளாதார
வளர்ச்சியை ஒப்பிட்டுப்பார்க்கையில் முன்னைய வருடம் இதே பகுதியில் 4.1 வீதமாக இருந்தது 2001 ன் முதல் ஒன்பது
மாதங்களுக்கு 3.1 வீதத்தால் மந்தமடைந்துள்ளது. இதன்விளைவாக, 60,000 தொழிலாளர்கள் தங்களது வேலையை
இழந்ததுடன் குறைந்தது 500 நிறுவனங்கள் பூட்டப்பட்டன.
மணிலாவிலுள்ள (Manila)
ஏழைகள் மத்தியில்,
Arroyo விற்கு ஓர் பகிரங்கமான
பகைமை உள்ளது. கடந்த மே மாதம் பெரிய அரசாங்க- எதிர்ப்பு ஊர்வலத்தை வர்ணித்த, ஓர் உள்ளூர் தலைவர் பத்திரிகைக்கு
கூறுகையில் "நாங்கள் Gloria
வுடன் மூன்று தடவை ஆத்திரமடைந்துள்ளோம் என்றால், அடுத்தமுறை எங்களுடைய
ஆத்திரத்தை மூன்று மடங்காக பெருப்பித்து அவர் உணரக்கூடியதாக செய்வோம்" என்றார். ஓர் குடும்பப் பெண் தனது வெறுப்பை
வெளிக்காட்டி கூறுகையில் "Gloria
பணக்காரர்களுடன் ஒட்டிக் கொள்ள கூடாது, ஏனெனில் அவர்களுடைய வயிறு ஏற்கனவே
நிரம்பியுள்ளது. அவர் எங்களைப் போன்ற மக்களின் வயிறு சத்தம் போடுகிறதா என்பதை அவர்களை கவனத்தில்
கொள்ளவேண்டும்" என்றார்.
கிட்டத்தட்ட 40 வீதமான நாட்டினுடைய சனத்தொகை உத்தியோகபூர்வமான வறுமைக்கோட்டின்
வருமானத்தின் கீழ் வசிக்கின்றனர். அபு சயாவ் அடித்தளமாக கொண்ட தெற்கு பகுதி மின்டானாவே
(Mindanao)
பிலிப்பைன்ஸ்லுள்ள பிராந்தியங்களில் மிகவும் ஏழ்மையான இடங்களில் ஒன்றானதும் வாழ்கைக்கு வசதி குன்றிய இடங்களில்
ஒன்றானதுமாகும். மணிலாவில் தொடர்ச்சியான வந்த அரசாங்கங்களினால் ஒடுக்கப்பட்டும் அலட்சியப்படுத்தப் பட்ட நிலையிலும்
பாரிய மூஸ்லீம் சனத்தொகையின் மத்தியிலே ஆத்திரம் கொளுந்து விட்டு எரிந்ததுடன் பிரிவினை வாத மோரே தேசிய விடுதலை
முன்னணியை (MNLF)
அமைக்க வழி கோலியது. இரண்டு தசாப்தமாக MLNF
ற்கு எதிரான இராணுவ நடவடிக்கையினால் இதனுடைய பல கிளைகளில்
அபு சயாவ் உட்பட, 120,000 உயிரிழப்புக்களுடன் பரந்த அளவில் துன்பத்தையும் உருவாக்கியுள்ளது.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்த தவறிய
Arroyo ஆளும் வட்டங்களில்
இருந்தும் கூட எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார். இவரின் கணவரான யோஸ் மைகுல்
"மைக்" ஆரேயோ (Jose Miguel "Mike" Arroyo),
ஓர் செல்வந்தரான சட்டத்தரணியும் வியாபாரியும், ஏற்கனவே லஞ்ச ஊழலுக்கான குற்றச்சாட்டுகளுக்கு சிக்குப்பட்டுமுள்ளார்.
அவர் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் கொடுக்கல்வாங்கலில் ஜனாதிபதி தலையிட்டு தடையை நீக்கியதற்காக $1
மில்லியின் இலஞ்சம் வாங்கியதன் பேரில் செனற் குழு ஒன்றால் விசாரிக்கப்பட்டுள்ளார்.
கடந்த கிழமை முன்னைய ஜனாதிபதி
Fiedel Ramos ன்
அறிக்கையில் ஆளும் பிரிவினரிடையே Arroyoவிற்கு
ஆதரவு மறைவதை சுட்டிக் காட்டினார். அவர் கூறுகையில் ''Arroyo
அடுத்த தேர்தலுக்கு ஆயத்தப்படுத்துவதை விட பொருளாதாரத்தை கட்டுவதை மையமாக கொள்ள வேண்டும். மேலும் குறிப்பிடுகையில்
இவர் Erap (Estrada
வினுடைய புனை பெயர்) என்ன செய்தாரோ அதை தவிர்க்கிறார் என நான்
நினைக்கிறேன். ஆனால் இது ஓர் பெரிய பிழை." Estrada
வை வெளியகற்றுவதில் மத்திய பங்கு வகித்த
Ramos குறிப்பிடுகையில்
இவருடைய விமர்சனம் சக்தி வாய்ந்த அறிவிப்பை Arroyo
விற்கு அனுப்புகின்றது. அதாவது ஒன்றில் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்து இல்லையேல்
Eraps இன்
மாதிரியான விதியை சந்திக்க நேரிடும் என்பதாகும்.
அமெரிக்க இராணுவத்தை பாசிலியானில் செயற்படுவதற்கு
Arroyo அனுமதித்ததற்கான
முடிவானது வாஷிங்டனின் உதவியை தொடர்ச்சியாக பெறுவதை நிச்சயப்படுத்தும் நோக்குடனும், ஆளும் வட்டாரங்களிடையே
தனது நிர்வாகத்திற்கு முலாம் பூசுவதற்காகவும் சரியாக கணிக்கப்பட்ட ஓர் சூதாட்டமாகும்.
அபு சயாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவின் ஈடுபாட்டை ஏற்றுக்
கொள்ளுமாறு பிலிப்பைன்ஸை அமெரிக்க நிர்வாகம் வெளிப்படையாகவே அழுத்தத்திற்குள்ளாக்கியது. புஷ் இரு அமெரிக்க பணயக்கைதிகளின்
விடுதலையால் சிலவேளை குறுகியகால புகழ் அடையலாம் என நம்பக்கூடும். அதேவேளை அமெரிக்காவினுடைய நகர்வு
பரந்த நோக்குள்ளதாகும். பிலிப்பைன்ஸ்சினை அமெரிக்கத் தளமாக அப்பிராந்தியத்தினுள் ஒழுங்கமைப்பதற்கும், குறிப்பாக
தென்கிழக்கு ஆசியாவில் இதேபோன்ற தலையீடுகளை தொடங்குவதற்கு முன்னேற்பாடாக அமைப்பதற்குமாகும். ஏனைய பிராந்தியங்களில்
போல், பிலிப்பைன்ஸை சீர்குலைப்பதால் உருவாகும் விளைவுகளைப்பற்றி கவனத்திற்கு எடுக்காது தனது நோக்கங்களை
முன்கொண்டுசெல்கின்றது.
|