World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

France: 5,000 Moulinex jobs slashed as workers end protest

பிரான்ஸ்: தொழிலாளர் போராட்டங்கள் முடிவிற்கு வந்ததும் முலினெக்ஸ் நிறுவனம் 5,000 வேலைகளை வெட்டித்தள்ளியது

By Gerard Naville
30 November 2001

Back to screen version

நவம்பர் மாதம் 23 திகதி, பிரான்சிலுள்ள முலினெக்ஸ் (Moulinex) நிறுவனத்திலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி அவர்கள் காதுகளில் வீழ்ந்தது. இது இரண்டரை மாதகால ஆர்ப்பாட்டங்கள், எதிர்பு ஊர்வலங்கள் மற்றும் அவர்களது தொழில்களை பாதுகாப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளினால் தொடரப்பட்டது. முலினெக்ஸ், வீட்டு உபகரணங்களை பெருமளவில் உற்பத்திசெய்வதும், பிரான்சிலும் மற்றும் வெளிநாடுகளிலுமாக கிட்டத்தட்ட 9,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள ஓர் நிறுவனமாகும். ஸ்திரிப்பெட்டி, மைக்ரோவேவ் ஓவன், பிறசர் குக்கர் மற்றும் இதர உபகரணங்களை அதிகமாக உற்பத்தி செய்யும் முலினெக்கஸ் தொழிற்சாலைகள் நோர்மன்டியில் உள்ளன, மேலும் இந் நிறுவனம் தனது உற்பத்திசாலைகளை சீனாவிலும் பிரேசிலிலும் கொண்டுள்ளது.

செப்டம்பர் மாத தொடக்கத்தில், முலினெக்ஸ் வங்குரோத்தான நிலையை அறிவித்தது. இதனைத் தொடர்ந்த வாரங்கள்; ஒருபக்கத்தில் தொழில் அழிப்புகள் (De-industrialisation) ஏற்கனவே நிகழ்ந்த பகுதிகளில் வேலைகளைப் பாதுகாக்கும் நோக்குடனான தொழிலாளர்களுக்கும், மறுபக்கத்தில் பெரும் வங்கிகள், போட்டி நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், அரசாங்கத்தினால் ஆதரவளிக்கப்பட்ட மத்தியஸ்த்தர் அலுவலகர்கள் மற்றும் நீதிமன்றம் என்பவற்றுக்கும் இடையில் ஓர் சமனற்ற மோதலை காண்பித்தன. வங்கிகளும் சில போட்டி நிறுவனங்களும் முலினெக்ஸ் நிறுவனத்தினால் கைவிடப்பட்ட கட்டுமானங்களை கைப்பற்றிக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளன, அதேவேளை தொழிலாளர்களின் எதிர்ப்புகளை குறைப்பதனை உறுதிப்படுத்துவதன் மூலம் ஏனைய அமைப்புகள் அவற்றிற்கு உதவ முயன்றன. பெருமளவில் வீட்டுப்பாவனை உபகரணங்களை உற்பத்தி செய்யும் முக்கியமான பிரெஞ்சு நிறுவனமான SEB முலினெக்ஸ் நிறுவனத்தினை கையேற்றுக்கொண்டது, இந்நிறுவனம் தொடர்ச்சியாக அதன் அளவினையும் அதனது முன்னேற்றத்திற்கான சாத்தியங்களையும் உலகச்சந்தையில் அதிகரிக்கச் செய்துவருகின்றது. இந் நிகழ்வுப் போக்கில் 8,800 அலுவலர்களில் 5,200 பேரளவில் நீக்கப்படவுள்ளனர், நோர்மன்டியில் குறைந்தது நான்கு தொழிற்சாலைகள் மூடப்படுவதால் 3,700 வேலைகள் அற்றுப்போகும் நிலை உருவாகியுள்ளது.

முலினெக்ஸ் தொழிற்சாலையை மூடுவதில் தொழிற்சங்கங்கள் ஒரு முக்கிய பாத்திரத்தினை வகித்தனர். இந் நிறுவனம் வங்குரோத்தினை அறிவித்ததை தொடர்ந்து தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அமைதியின்மை காணப்பட்டது. தொழிற்சங்கங்கள் நோர்மன்டி பகுதியில் பல தொழிற்சாலைப் பகுதிகளில் ஆர்ப்பாட்ட முற்றுகைகளை ஏற்பாடு செந்திருந்தபோதிலும் நிறுவனத்தின் நடவடிக்கைகளின் தேவைக்கு உகந்தவற்றை பாதுகாப்பதையே மைய வேலைத்திட்டமாக கொண்டிருந்தன, இந்நேரத்தில் நிர்வாகமும் (Management) நிறுவனத்திற்கு கடன்வழங்கியோரும் மற்றும் பிரெஞ்சு அரசும் வேறு பொருத்தமான புதிய "வாங்குவோர்களை (buyers)" தேடி நோட்டம்பார்க்கச் சென்றனர். இதில் இறுதியில் தேர்வுசெய்யப்பட்டவை SEB மற்றும் Fidei என்னும் நிதிநிறுவனம் இரண்டுமாகும், இதில் இரண்டாவது வங்குரோத்தாய் போயிருந்த AOM விமான நிறுவனத்தினை வாங்குவதில் சம்பந்தப்பட்டிருந்ததில் மட்டுமே பரவலாக அறியப்பட்டிருந்தது, இச் சம்பவமும் பெரும்வேலை இழப்புக்களுடனேயே முடிவடைந்தது.

தொழிற்சங்கங்கள் Fidei பொறுப்பேற்கவேண்டும் என்பதன் பின்னணியிலேயே தமது சக்தியினை உந்தித்தள்ளினர், இதன்பேரில் SEB வாங்குவதிலும் பார்க்க அதனால் 1,000 வேலைகள் பாதுகாக்கப்படும் என்னும் ஓர் தீர்வினை அங்கு அவர்கள் முன்வைத்தனர். பத்திரிகைகளின் அறிக்கைகளின்படி பார்க்குமிடத்து இது ஒருபோதும் ஓர் கருத்திற்கொள்ளப்படக்கூடிய மாற்றீடல்ல, ஆனல் தொழிற்சங்கங்கள் இதனை வேலைகளைப் பாதுகாப்பதற்கு என்னும் பேரில் "ஒப்பீட்டளவில் தேர்தெடுக்கக்கூடிய" ஓர் மாற்றீடாக முன்வைக்கின்றன. 1998 இல் அதனது தொழிலதிபர்களால் முலினெக்ஸ் வாங்கப்பட்டு, தொழிற்சங்கங்களாலும், நிர்வாகத்தினாலும் மற்றும் பெரும் பங்குதாரர்களாலும் நடாத்தப்பட்ட காலத்துடன் ஒப்பிடுகையில் இது ஒரு பெறுமதியற்ற நிலமையாகும்.

அக்டோபர் 23 ல் நொந்தெயர் நகரில் உள்ள வர்த்தக விவகார நீதிமன்றம் (Tribunal de Commerce) எதிர்பார்க்கக்கூடியவிதத்தில் SEB ஐ முலினெக்ஸ்சின் பாதுகாவலனாக நடந்துகொள்ளும்படி நியமித்தது. பின்னர் தொழிற்சங்கங்கள், உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் தொழிற்சாலைகளைவிட்டு நகரவிடமால் பாதுகாப்பதற்காக குறிப்பிட்டளவிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டன, அத்துடன் வேலைநிறுத்த ஆர்பாட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. தொழிலாளர்கள் வேலைகள் இழக்கப்படுவதனையும் தொழிற்சாலைகள் மூடப்படப்போவதனையும் உணரத்தொடங்கியவுடன் ஆர்ப்பாட்டங்கள் ஆத்திரகரமானதாகவும் மேலும் ஆக்குரோசமானவையாகவும் ஆகின. நவம்பர் 14 இல் நோர்மன்டி-யின் பெரும் நகரான Caen இல் மூடுகைக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அரச அலுவலர் கட்டிடங்களுக்கு முன்னால் டயர்களை (Tyres) கிழித்துபோட்டு தீ வைத்ததுடன் போலிசாரின் வாகனங்கள் மீது அழுகிய முட்டைகளை வீசியெறிந்து தாக்கினர்.

இப்போது தொழிற்சங்கம் கொடுப்பனவில் மேலதிகமாக ஏற்படுத்தப்படும் குறைப்பினை தமது "போராட்டத்தின்" மையப் பொருளாக எடுத்துக்கொண்டது. தொழிற்சாலைப் பகுதிகளை முற்றுகையிட்டதனை, புதிய தொழிலதிபர்களுக்கு பேச்சுவார்த்தை பேரத்தில் அழுத்தம் கொடுத்து அதனை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பயன்படுத்தியது, அனால் MEDEF எனப்படும் தொழிலதிபர்கள் சங்கத்தினால் ஆதரவளிக்கப்பட்டுவரும் SEB நிறுவனம், அரசே இதற்குப் பொறுப்பு எனக்கூறி கொடுப்பனவுகளை உயர்த்துவதை நிராகரித்துள்ளது.

தொழிலாளர்கள் வாக்கு அட்டைகளை கிழித்தெறியத் தொடங்கினர், இது அரசியல் கட்சிகளால் அவர்கள் "கைவிடப்பட்டுவிட்டதாக" உணருவதாகவும் அத்துடன் இனிமேலும் அவர்களுக்கு தாம் வாக்களிக்கமாட்டோம் என்பதையும் அடையாளப்படுத்திக் காட்டிற்று. அவைகளது போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு சுதந்திரமான அரசியல் மூலோபாயம் இல்லாவிடின் எப்படியாயினும் இத் தொழிலாளரது எதிர்ப்புகள் யாவும் விரக்திநிலை செயற் குலைவிற்கே இட்டுசசெல்லும். Caen நகருக்கு அருகில் Cormelles-le-Royal என்னுமிடத்தில் ஓர் தொழிற்சாலை மூடப்படும் ஆபத்திற்குள்ளானது, அக்கட்டிடங்களை சுற்றிலும் வெடிபொருட்களடங்கிய கொள்கலன்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை பற்றி எரியச் செய்யப்பட்டுவிடுமோ என்ற பீதி நிலவியது.

நிர்வாகமும் தொழிற்சங்கங்களும் இப்பிரச்சனையை தீர்த்துவைக்கும் நெருக்குவாரத்தில் இருந்தன, அத்துடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த எல்லா கன்னைகளுமே சம்பளக் கொடுப்பனவுகளில் மேலதிக வெட்டுக்களைச் செய்வதற்கு சம்மதித்திருந்தன. முலினெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு வருடங்களுக்கு குறைவான காலம் வேலைசெய்தவர்களுக்கு 30,000 பிராங்குகள் ($4,040) அளவும், ஆகக்கூடியது 25 வருடம் வேலையில் இருந்தவர்களுக்கு 80,000 பிராங்குகள் ($10,770) அளவும் வளங்கப்படும்-- இதனைக் கொண்டு ஒரு வருடம் வாழ்க்கை நடாத்துவதென்பதே மிகக் கடினமானதாகும். இத் தீர்மானம் ஆரம்பத்தில் தொழிற்சங்கங்களால் முனவைக்கப்பட்ட கோரிக்கையினைவிட குறைவானதாகும், இந்த உடன்பாடு நவம்பர் 23 ல் கையெழுத்திடப்படது; இதற்குப்பின் சில நாட்களில் தொழிலாளர்கள் வேலைநீக்கல் உத்தரவுக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

தொழிற்சங்கங்கள் சிலசமயங்களில் ஒரு தீவிர நிலைப்பாட்டினை எடுப்பதாக தோன்றினும், இத் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொழிலதிபர்களதும் அராசாங்கத்தினதும் நோக்கத்தினையே பகிர்ந்துகொள்கின்றன, இது உலக சந்தையில் பிரெஞ்சு முதலாளித்துவத்தினை பாதுகாப்பதற்கு இன்றியமையாததாகும். மிகப்பெரிய தொழிற்சங்கமான CGT யினுள் இப்பொழுதும் செல்வாக்குச் செலுத்தும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியினால் (ஸ்ராலினிச) பிரசுரிக்கப்படும் l'Humanite பத்திரிகையில் SEB பொறுப்பேற்பதனையிட்டு பின்வருமாறு குறிப்பிட்டது: "உண்மையில், SEB நிறுவனம், பிரான்ஸ் முன்நிலையில் நிற்கும் கண்டுபிடிப்புகளான மைக்ரோவேவ் ஓவன் மற்றும் பெரும் மின்சார உபகரணங்கள் போன்றவற்றின் உற்பத்தியினை, ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஒரு அபிவிருத்திக்கு ஏதுவாக கைவிடுமாயின், இது ஆசிய போட்டியாளர்களது தலையீட்டுக்கு வழிதிறந்துவிடும். "துர்ரதிஸ்ட்டவசமாக இது பிரெஞ்சு அரசாங்கத்தின் பங்களிப்புடனேயே நடைபெறும், ஐக்கிய அமெரிக்காவினைப் போலல்லாது, இங்கு, குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் நாடுகளின் உற்பத்திப் பொருட்களின் மேல் சுங்கவரி விதிப்பதனை தவிர்ப்பதுடன்." இது நடைபெறும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved