World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Is the US preparing for action against Iran?

அமெரிக்கா, ஈரான் மீதான நடவடிக்கைக்கு தயாராகின்றதா?

By Peter Symonds
30 January 2002

Back to screen version

மூன்று வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஈரான், ஆப்கானிஸ்தானில் தலையீடு செய்வதாக ஆதாரமற்றவகையில் ஆத்திரமூட்டும் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை விடுத்தார். அவர் ''ஈரான் ஏதாவது ஒரு வகையில் ஆப்கானிஸ்தானின் அரசாங்கத்தை நிலைகுலையச் செய்யுமானால், எமது கூட்டு ஆரம்பத்தில் இராஜதந்திர வழிமுறைகளில் நடவடிக்கை எடுக்கும் என'' கூறினார்.

மேலும் ''பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தில் ஈரான் ஒரு பங்காளனாக இருக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியதுடன், எமது நாடும், எமது பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தமும் நீங்கள் எங்களுடன் இருந்தாலும், எங்களுக்கு எதிராக இருந்தாலும் அக்கொள்கையை தொடரும்'' எனவும் குறிப்பிட்டார். அவர் மேலும் ''பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் எமது நடவடிக்கையை எந்தவொரு நாடாவது குழப்புமானால் ஏதாவது ஒரு வகையில் அவர்களது இருப்பு எமது கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் ஈரான் தனது நாட்டிலுள்ள அல் கொய்தா போராளிகளை அமெரிக்காவிடம் கையளிக்கவேண்டும் எனவும் எனவும் வலியுறுத்தினார்.

புஷ் தனது குற்றச்சாட்டுக்கான எவ்வித சாட்சியங்களையும் முன்வைக்காததுடன், எது தொடர்பாக குறிப்பிடுகின்றார் என்பதையும் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் அவரின் செய்தி மிக தெளிவானது. ''ஆரம்பத்தில் இராஜதந்திர வழிமுறைகளில்'', ''ஏதாவது ஒரு வகையில்'' என்ற வார்த்தைகள் ஈரானிய அரசாங்கம் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிடின் அதுவும் இராணுவ நடவடிக்கையின் இலக்காகலாம் என்பதை தெளிவாக்குகின்றது.

ஜனவரி 10ம் திகதி புஷ் இன் உரைவெளிவந்த நாளன்று New York Times பத்திரிகை பெயர் குறிப்பிடவிரும்பாத அமெரிக்க இராணுவ, உளவுத்துறை அதிகாரிகளை சுட்டிக்காட்டி ''ஈரானிய கையாட்கள் இப்பிரதேசங்களுக்குள் ஊடுருவுவதாகவும், சில போட்டி குழுத்தலைவர்களை பயமுறுத்துவதாகவும், மற்றைய உள்ளூர் தலைவர்களுக்கு இலஞ்சம் வழங்குவதாகவும், அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் திட்டத்தினை குழிபறிப்பதாகவும்'' குறிப்பிட்டது. அப்பத்திரிகை மேற்கு ஆப்கான் மாநிலமான Herat இன் ஆளுனரான Ismail Khan இனை குறிப்பிட்டு இவர் ''ஈரானின் நெருங்கிய கூட்டாளி'' என குறிப்பிட்டது. மீண்டும் இக்குற்றச்சாட்டுக்கள் அமெரிக்க விஷேட படையினரதும், CIA இனதும் ''அறிக்கையை'' தவிர வேறு எவராலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆரம்பத்தில் புஷ் இன் அறிக்கை நிலையற்றதாக இருந்ததாக தோன்றியது. ஆனால் அதன் பின்னர் அமெரிக்க உயர் அதிகாரிகளால் குறிப்பிடப்பட்டவை ஈரான் மீதான அச்சுறுத்தலை வலியுறுத்துவதுடன், அமெரிக்க பத்திரிகைகள் ஆப்கானிஸ்தானில் ஈரானின் தலையீடு தொடர்பான ஒரு தொடர் கட்டுரைகளை வெளிவிட்டிருந்தன.

புஷ் இன் பேச்சினைத்தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரான டொனால்ட் ரும்ஸ்வெல்ட் பயங்கரவாதத்திற்கு உதவி செய்யும் நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் பட்டியலில் ஈரான் இன்னும் உள்ளதாகவும், ஈரான் அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புக்ளுக்கு அடைக்கலம் வழங்கக்கூடாது என வலியுறுத்தினார். Detroit Free Press பத்திரிகையின் ஜனவரி 11ம் திகதி ஆசிரிய தலையங்கம் ''பயங்கரவாதம் தொடர்பான இலக்கில் ஈரான் ஆப்கானிஸ்தானுக்கு பின்னர் ஈராக்குக்கு மேல் உள்ளதாக '' குறிப்பிட்டது.

ஒரு வாரத்தின் பின்னர் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தானுக்கான விஷேட பிரதிநிதியான Zalmay Khalilizad மேற்கு ஆப்கானிஸ்தானிலுள்ள பிரிவுகளுக்கு ஈரான் ஆயுதம் வழங்கவதாகவும், அதனது புரட்சிப் படையினரையும், அங்கு பயிற்றுவிக்கப்பட்ட தனது கையாட்களையும் எல்லை கடந்து அனுப்பியுள்ளதாவும், அமெரிக்க ஆதரவான அரசாங்கத்திற்கு எதிரான குழுக்களுக்கு பண உதவி வழங்குவதாகவும் குற்றம் சாட்டினார். அவர் மேலும் ஈரானின் கொள்கை ''ஆப்கானின் உள்விடயங்களில் தலையிடாததாக இருக்கவேண்டும்'' எனவும் வலியுறுத்தினார்.

Wall Street Journal பத்திரிகை ''அந்த பிரச்சனைக்குரிய அயத்துல்லாக்கள்: அமெரிக்காவின் சுதந்திரத்திற்கானதும், ஈரானுக்கு எதிரான பயங்கரவாத்திற்கும் எதிராக நிற்குமா? என்ற தலையங்கத்தின் கீழ் கருத்து தெரிவிப்பாளர் பகுதியில் கட்டுரை ஒன்றை வெளிவிட்டிருந்தது. அக்கட்டுரை ஆசிரியர் ஆயுதக்கப்பல் ஒன்றை இஸ்ரேலிய ஏஜன்டுகள் ஜனவரி 3ம் திகதி கைப்பற்றியதை தொடர்புபடுத்துகின்றார். அக்கப்பல் பாலஸ்தீனிய நிர்வாகத்திற்காக ஈரானிலிருந்து அனுப்பப்பட்டதாக கூறப்படுகின்றது. அவர் அமெரிக்க நிர்வாகத்தின் நடவடிக்கைக்காக ஒரு மூர்க்கமான திட்டத்தை வரைந்துள்ளார். அவர் ''திரு. புஷ் ஆப்கானிஸ்தானிலிருந்து மதத் தலைவர்களை களையெடுக்குமாறு ஏற்கெனவே அறிவித்துள்ளார். அடுத்ததாக கவனத்திற்கு வருவது பயங்கரவாத்திற்கான ஈரானின் ஆதரவாகும். இது ஈரான், பாலஸ்தீன விடுதலை இயக்கம், ஹிஸ்புல்லா ஆகியவை இஸ்ரேலின் இருப்பின் உரிமையை ஏற்றுக்கொள்ளச் செய்வதுடன், அல்லது அதனை நிராகரிப்பதால் வரும் விளைவுகளை ஏற்றுக்கொள்வதுடனும் ஆரம்பிக்கவேண்டும்'' என எழுதியுள்ளார்.

கடந்த வாரங்களில் அமெரிக்க பத்திரிகைகள் ஈரானுக்கு எதிரான அவதூறான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. கந்தஹார் (Kandahar) ஆளுனரான Gul Agha Shirzai இன் குற்றச்சாட்டான Herat இன் ஆளுனரான Ismail Khan ஈரானுடன் இணைந்து ஆப்கானிஸ்தானின் தென் மாகாணங்களை நிலைகுலையச் செய்வதை எடுத்துக்காட்டுகின்றன. Gul Agha Shirzai இன் பேச்சாளரான Yusuf Pashtun ஈரானிய ஏஜன்டுக்கள் தென்மாகாணமான Helmand இனுள் ஆயுதங்களை கடத்துவதாகவும், Ismail Khan இன் படையினருக்கு பயிற்சியளிப்பதுடன், ஆயுதம் வழங்குவதாகவும், Herat இல் வியாபாரம் செய்யும் பஸ்தூனிய இனத்தவரை தஜிக்கிஸ்தானிய இனத்தை சேர்ந்த Ismail Khan தொல்லைப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

கந்தஹார் ஆளுனரை ஆதரிக்கும் இனக்குழு தலைவர்களின் கூட்டத்தை தொடர்ந்து, Haji Gullalai என்னும் அவரின் உளவுத்துறை தலைவர் Ismail Khan உடன் கையாளுவதற்காக 20,000 பேரைக் கொண்ட படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார். Gul Agha Shirzai இவ் விடயத்தைப் பற்றி நன்றாக சிந்தித்த பின்னரும், இது தொடர்பான வதந்திகள் உலாவத்தொடங்கிய பின்னர் ''இது ஒரு தீர்வல்ல'' என கூறினார். Haji Gullalai தான் கூறியது பிழையாகக்காட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

Gul Agha அமெரிக்க இராணுவத்துடன், CIA உடனும் நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ளார் என்பது கட்டாயம் கவனிக்கப்பட வேண்டியதாகும். ஜனவரி 6ம் திகதி New York Times இன் அறிக்கையானது இந்த விலைக்கு வாங்கப்படக்கூடிய, மூர்க்கமான, பிற்போக்கான, பணத்திலும் அதிகாரத்திலும் மட்டுமே அக்கறையுள்ளவரின் விபரமான சுயசரிதை தொடர்பாக குறிப்பிட்டிருந்தது. Gul Agha அமெரிக்காவில் ஆயுதமும், பணமும் வழங்கப்பட்டு கந்தஹாரை கைப்பற்ற அமெரிக்க விஷேட படையினரது கட்டளையின் கீழ் இயங்கி வந்தவர். Ismail Khan இற்கு எதிரான Gul Agha இன் குற்றச்சாட்டு அமெரிக்க பணம் வழங்குபவர்களின் சார்பில் உருவாக்கப்பட்டது என்பதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயமாக இல்லாமல் போகவில்லை.

வெட்கங்கெட்ட போலித்தனம்

இதிலிருந்து ஒருவர் எந்தமுடிவிற்கு வரமுடியும்?

முதலாவதாக, ஈரான் ஆப்கானிஸ்தானில் ''தலையிடுவதாகவும்'', அதன் தற்போதைய நிர்வாகத்தை குழப்புவதாகவும் குறிப்பிடும் புஷ் இன் குற்றச்சாட்டுகளில் முழுமையான போலித்தன்மை காணப்படுகின்றது. தெகிரானுக்கு எதிரான வாஷிங்டனின் குற்றச்சாட்டுக்கள் உள்ளூர் தளபதிகளுக்கு ஆயுதம் வழங்கி, பயிற்சியளிப்பதுடன், நிதியுதவி வழங்குவதன் மூலமும் இராணுவ, உளவு நடவடிக்கைகள் மூலம் ஆப்கானிஸ்தானினுள் தனது நலன்களை பாதுகாத்துக்கொள்ளவதை நோக்கமாக கொண்டதாகும். அது உண்மை மட்டுமல்ல அமெரிக்காவின் பத்திரிகைகளில் வெளிப்படையாகவே புகழ்ந்துரைக்கப்படுகின்றது. அமெரிக்க விஷேட படையினரும், CIA இனது பிரிவினரும் தமது விருப்பப்படி அந்நாட்டினுள் இயங்க இடமளிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் அமைப்புக்களும் இதே மாதிரி செய்கின்றன.

இராஜதந்திர விடயங்களிலும் அமெரிக்கா இப்படியான ஒருதலைப்பட்டசமான அணுகுமுறையை எடுத்துள்ளது. ஆப்கானின் தற்காலிக அரசாங்கத்தை ஈரான் ''நிலைகுலையச் செய்வதாக'' புஷ் உரிமையின்றி எச்சரித்துள்ளார். அவர் பாதுகாக்க விரும்புவதாக கூறும் இந்த ஆப்கானிஸ்தானின் அரசாங்கம் கூட ஈரானுக்கு எதிரான குற்றச்சாட்டை வைக்காததுடன், இது கலந்து ஆலோசிக்கப்படவுமில்லை. கடந்த காலங்களில் தேசிய இறையாண்மை கொள்கைக்கு வாயளவில் சேவை புரிந்ததுடன், இதனுடன் இணைந்த இராஜதந்திர நடைமுறைகளையும் கவனித்துவந்ததுடன், தேவையேற்படின் தனது அதனது உள்ளூர் கூட்டாளிகளின் கைகளை முறுக்கி பொருத்தமான வார்த்தைகளை கூறச்செய்தது. புஷ் நிர்வாகம் இவை தொடர்பாக எவ்வித கவனமும் எடுக்கவில்லை.

மூன்று வாரங்கள்வரை அமெரிக்கா தனது குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரத்தை இன்னமும் வைக்கவில்லை. ஈரானிய அரசாங்கத்தாலும், Ismail Khan ஆலும் தாம் காபூல் அரசாங்கத்தை நிலைகுலையச்செய்ய இணைந்துள்ளோம் என்பதை மறுத்ததை வாஷிங்டன் மீண்டும் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவில் ஜேர்மனியின் Bonn நகரத்தில் நடைபெற்ற ஆப்கானின் தற்காலிய அரசாங்கம் உருவாக்கும் மாநாட்டில் தாம் கலந்து கொண்டதையும், ஆப்கானில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை தாம் ஆதரித்ததை ஈரானிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அது பாதுகாப்பிற்காக தரையிறங்கிய அமெரிக்க விமானிகளை காப்பாற்றியதுடன், அமெரிக்க கப்பல்களுக்காக தனது துறைமுகங்களை திறந்து விட்டது.

அமெரிக்காவின் குற்றங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையினதோ அல்லது அதனது ஐரோப்பிய கூட்டினரது ஆதரவோ கிடைக்கவில்லை. அதிகரித்துவரும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி ஆப்கானுக்கான ஐக்கிய நாடுகள் சபையினது பிரதி தூதுவரான Francesc Vendrell கடந்த வாரம் ''ஈரானிய தலையீடு தொடர்பாக உறுதியான சாட்சியங்கள் ஒன்றும் தன்னிடம் இல்லை எனவும், ஈரானிய அரசாங்கத்தால் இது ஈரானிலிருந்து இத்தலையீட்டுக்கான திட்டமிடப்பட்டது என்பதற்கான உறுதியான ஆதாரங்களோ இல்லை என'' தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான கொபி அனான் (Kofi Annan) அல்கொய்தா அமைப்பினரை ஈரான் அடைக்கலமளித்து வைத்துள்ளது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்ததுடன், அந்நாடு பலவருடங்களாக அக்குழுவினருக்கு எதிராக உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

ஆப்கானில் ஈரானின் தலையீட்டையோ அல்லது Ismail Khan தெகிரானிலிருந்து ஆயுதங்களையும் நிதியுதவியையும், ஏனைய உதவிகளையும் பெறுலாம் என்பதை இல்லை என்று ஒருவர் நிராகரிக்கமுடியாது. ஈரான் ஆப்கானிஸ்தானில் பல்வேறு குழுக்களை ஆதரித்ததற்கு நீண்டவரலாறு உண்டு. அண்மையில் அது தலிபானுக்கு எதிராக வடக்கு கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளனர். மேலும் Herat இனைவிட்டு தலிபானால் வெளியேற்றப்பட்ட Ismail Khan 1995 இல் இருந்து ஈரானில் கூடுதலாக வாழ்ந்துவந்துள்ளார்.

ஈரான் மட்டும் தனித்து நிற்கவில்லை. எவ்வாறிருந்தபோதிலும் பாக்கிஸ்தான், இந்தியா, ரஷ்யா, சவுதி அராபியா, மத்திய ஆசிய குடியரசிலுள்ள பலநாடுகளில் அமெரிக்கா தமது நலன்களை பாதுகாப்பதற்காக தலையிடுவதற்கான ஒரு பட்டியலை வைத்திருக்கின்றது. இந்நாடுகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் தமது ஆதரவான படைத்தளபதிகளை வைத்திருப்பதுடன், அவர்களின் வரலாறும் மிகவும் மூர்க்கமானது அல்லது Ismail Khan இற்கு சமமானது. Ismail Khan இனை ஆதரவளிப்பதாக ஈரான் எச்சரிக்கப்படவேண்டுமானால், உதாரணமாக, முன்னாள் ஆப்கான் ஜனாதிபதியான Burhanuddin Rabbani இற்கு ஆதரவான படைகளுடன் மோதலில் ஈடுபட்ட மோசமான உஸ்பேக்கிய இராணுவத்தின் தலைவரான Abdul Rashid Dostum உடனான தொடர்பிற்காக ஏன் உஸ்பேக்கிஸ்தான் எச்சரிக்கப்படவில்லை.

ஏன் ஈரான்?

ஒரு குறிப்பிடத்தக்க அமெரிக்க விமர்சகர்களும், ஆசிரியர் தலையங்கங்களும் ஆப்கானிஸ்தானில் ஈரானின் நடவடிக்கைக்கான காரணம் குறித்து ஊகங்களை தெரிவித்துள்ளன. எவ்வாறிருந்தபோதும், உண்மையான கேள்வி புஷ் நிர்வாகம் ஏன் ஈரானை விஷேட நடவடிக்கைக்காக தெரிந்தெடுத்துள்ளது என்பதுதான். அமெரிக்கா போரிடவுள்ள இலக்கிற்கு பொருத்தமான ஒரு சில காரணங்கள் காணப்படுவதுபோல் தோன்றுகின்றன.

* புஷ் தனது அறிக்கையை வெளிவிட்ட காலமானது ஆப்கானிஸ்தானைவிட இஸ்ரேலுக்கு பொருத்தமானதாக காணப்படுகின்றது. அவரது நிர்வாகம் ஷரோனினது அரசாங்கத்துடனும், பாலஸ்தீனியர்கள் மீதான அதனது தாக்குதலுக்கு மிகநெருக்கமாக செல்வதுடன், இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட ஆயுதக் கப்பலை இதற்கு ஒரு சாட்டாக பயன்படுத்துகின்றது. ஈரான் மீதான அமெரிக்காவின் பயமுறுத்தல் ''பயங்கரவாதத்திற்கு எதிரான பூகோளரீதியான யுத்தத்தின்'' ஒரு பகுதியாக தெகிரானை குறியாக வைக்கவேண்டும் என்ற இஸ்ரேலின் உள்ளிருந்து வந்த கோரிக்கை பூர்த்தி செய்வதாக உள்ளது.

Jerusalem Post பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம் ''சர்வதேச பயங்கரவாதத்திற்கான ஆதரவை நிறுத்தும்வரை ஈரானுடனான இராஜதந்திர, பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஆரம்பமாக பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கும் ஐரோப்பாவிலும் அரபு நாடுகளிலும் உள்ள அதன் ஒருபகுதி ஈரானியர்களின் பொருளாதார வலைப்பின்னலை உடைக்கவேண்டும். முக்கியமாக ஈரானிய 'முல்லா-பிரிவினர்' பயங்கரவாதத்திற்கான அவர்களின் ஆதரவு ஒரு மூலோபாய இருப்பல்ல, அவர்களது உயிர்வாழ்விற்கான நேரடி அபாயம் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்'' என குறிப்பிட்டது.

* மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கான எதிர்ப்பையும், அதிகரித்துவரும் அமைதியின்மையையும் உறுதியாக்கும் வகையில் இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈரான் திரைமறைவில் ஈடுபடுவது தொடர்பான தனது அதிருப்தியை வாஷிங்டன் வெளிப்படுத்தியுள்ளது. தெகிரான் தனது போட்டியாளனான ஈராக்கிற்கு, 1980-88 யுத்தத்தில் பிடிக்கப்பட்ட 700 ஈராக்கிய கைதிகளை விடுதலை செய்யும் திட்டத்துடனான சைகைகளை காட்டியுள்ளது. Asia Times வலைத்தள அறிக்கைகளின்படி, அமெரிக்காவின் கூட்டுகளான குவைத், சவுதி அராபியா, பாக்கிஸ்தானுக்கு எதிராக ஈரான் தனது குரலை உயர்த்தியுள்ளது.

* மிகவும் அடிப்படையாக, மத்திய ஆசிய பிரதேசத்திலுள்ள பாரிய நில எண்ணைய், நிலவாயு வளங்களை சுரண்டுவது உள்ளடங்கலான தனது நலன்களுக்கு ஈரானை ஒரு அச்சுறுத்தலாக அமெரிக்க நோக்குகின்றது. ஈரான், துர்க்மேனிஸ்தானுடன் ஒரு எண்ணைய் குழாய்வழியை உருவாக்கியுள்ளதுடன், இந்தியாவிற்கான ஒரு குழாய்வழியை அமைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. நில எண்ணைய், நிலவாயு தொடர்பான அதனது மேலதிக திட்டங்கள் வாஷிங்டனினதும், அமெரிக்க நிறுவனங்கள் கார்காஸிய பிரதேசத்தினூடாகவும், துருக்கியூடாகவும் அல்லது சிலவேளை ஆப்கானிஸ்தானூடாகவும் குழாய் வழிகளை அமைக்கும் மூலோபாயங்களுக்கு குழிபறிப்பதாகவுள்ளது. ஒரு சில விட்டுக்கொடுப்புகளுடன் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பத்தாண்டுகளாக பொருளாதார தடையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

புஷ் நிர்வாகம் ஈராக்கை தாக்குதலுக்குரிய இலக்காக தெளிவாக அடையாளம் கண்டுள்ளபோதும், அது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் வாஷிங்டன் எவ்வளவு தூரம் செல்லும் என்பதை கூறுவது சாத்தியமில்லை. அமெரிக்கா ஈரானை ஒரு உதாரணமாக பயன்படுத்துமானால் அது அதன் போட்டியாளர்களான ஐரோப்பாவிற்கும், ஜப்பானுக்கும், மற்றைய பிராந்திய சக்திகளான ரஷ்யா, இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானின் போக்கை தான் மட்டுமே தீர்மானிப்பேன் ஒரு தெளிவான செய்தியை அனுப்ப முயற்சித்துள்ளது.

ஈரான் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது ஆப்கானிஸ்தானில் உள்ள அதன் கூட்டான Ismail Khan இற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம். இந்த திசையில் முதலாவது எச்சரிக்கை வேட்டு தீர்க்கப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இரண்டு பிரித்தானிய பத்திரிகைகளான Guardian உம் Telegraph உம் அண்மையில் ஜனவரி 3ம் திகதி Herat இற்கு அண்மையில் உள்ள Ismail Khan இன் படைமுகாம்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினைப் பற்றி கட்டுரை வெளிவிட்டிருந்தன. அக் குண்டு வெடிப்பில் 18பேர் கொல்லப்பட்டதுடன், 5பேர் காயமடைந்ததுடன், 24 மணித்தியாலங்கள் அது எரிந்தது.

அமெரிக்கா ஏவுகணைகளை அல்லது வேறு ஆயுதங்களை பாவித்து தாக்கியதாக Herat இல் வதந்திகள் உருவாகின. இது தொடர்பான அமெரிக்காவுடனான கூரிய மோதல்கள் தொடர்பாக கவனம் கொண்ட Ismail Khan தனது அதிகாரிகளிடம் அச்செய்தியை மறுக்குமாறும், குண்டுவெடிப்பை ஒரு விபத்தாக கூறுமாறு பணித்தார். எவ்வாறிருந்தபோதிலும் உள்ளூர் படைத்தளபதிகள் பிரித்தானிய பத்திரிகையாளர்களிடம் ''இது எமது படைத்தளபதியுடனான வாஷிங்டனின் திருப்தியின்மையின் சைகையாகும்'' என தெரிவித்தாக Guardian பத்திரிகை தெரிவித்தது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved