மத்திய
கிழக்கு
Bush administration confirms plans for war against Iraq
புஷ் நிர்வாகம் ஈராக்கிற்கு எதிரான யுத்தத்திற்கான திட்டங்களை உறுதிப்படுத்துகின்றது
By the Editorial Board
16 February 2002
Back to screen version
செனட் குழுவின் முன்னர் அரசு செயலர் கொலின் பாவெலின் பிரசன்னமும், அதேபோல பத்திரிகைகளுக்கு
தேர்ந்து எடுக்கப்பட்ட செய்திக் கசிவும், புஷ் நிர்வாகம் ஒரு சில மாதங்களில் ஈராக்குடன் யுத்தத்தைத் தொடுப்பதற்கான
திட்டங்களை உறுதிப்படுத்துகிறது.
செவ்வாய்க்கிழமை செனட் பட்ஜெட் குழுவின் விசாரணையின்போது வைக்கப்பட்ட பாவெலது
அறிக்கைகள், அரசு செயலாளர், பாதுகாப்பு செயலர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் மற்றும் அவரது துணை அதிகாரி
வோல்போவிட்ஸ் போன்ற மனநிலை திரிந்தவர் மீது கட்டுப்படுத்தும் சக்தியாக பாவெல் வேலைசெய்வார் என
---ஐரோப்பிய அரசாங்கங்களில் பொதுவாகக் கருதப்பட்டது போல்-- எந்த அமெரிக்க உயர் அதிகாரி பற்றியோ
எந்த பிரமைகள் பற்றியோ கொண்டிருக்கும் எண்ணத்தை மிகவும் ஐயத்திற்கு ஆளாக்கி உள்ளது.
புஷ் அவரது நாட்டின் நிலைமை தொடர்பான பேச்சில் "தீய அச்சு" பழிப்புரையில் சேர்த்துக்
கொண்ட ஈராக்கிற்கும் ஏனைய இரு நாடுகளுக்கும் இடையில் தெளிவாய் வேறுபடுத்தும் விதமாக, "ஈரான் மற்றும் வடகொரியா
தொடர்பாக இந்த நாடுகளுடன் யுத்தத்தைத் தொடங்குவதற்கு திட்டம் எதுவும் இல்லை" என்றார்.
ஈராக்குடன் யுத்தத்தைத் தொடங்குவதற்கு திட்டம் இருக்கிறது என்பதை தவறாதவகையில்
உய்த்துணர வைக்கிறது, மேலும் பாவெல் குறிப்பிட்டதாவது: "ஈராக் தொடர்பாக, ஆட்சி மாற்றம் இப்பிராந்தியத்தின்
சிறந்த நலனாக, ஈராக்கிய மக்களின் சிறந்த நலன்களாக இருக்கும் என்ற அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கை நீண்டகாலமாக,
இப்போதிருந்து பல வருடங்களாக இருந்து வருகிறது.... மற்றும் நாம் அதனைக் கொண்டுவரும் பல்வேறு தேர்வுகளைப்
பார்த்துக் கொண்டிருக்கிறோம்."
புஷ், "நாளை ஆயுத மோதலில் தலையிடுவதற்கான பரிந்துரையைக் கொண்டிருக்கவில்லை"
என்பதை அனுமதிக்கும் வண்ணம் அரசு செயலாளர் வெளிப்படையாக குறுகியகால எல்லை உடைய பகிரங்க யுத்தப்
பிரகடனத்தை நிறுத்தினார்.
முரட்டுத்தனமான ஆக்கிரமிப்புக் கொள்கை
மத்திய கிழக்கு மக்களுக்கு, ஐக்கிய அமெரிக்காவுக்கு மற்றும் உலகம் ஒட்டுமொத்தமாக
மிகத் தொலைநோக்கான மற்றும் உள்ளார்ந்த ரீதியாக அழிவுகரமான விளைபயன்களை ஏற்படுத்தக் கூடிய முடிவானது, யுத்தத்தைப்
பிரகடனம் செய்வதற்குத் தேவையான அமெரிக்க அரசியல் நெறிமுறைகளைக் கருத்தில் கொள்ளல் --அல்லது சர்வதேச
விதிகளைக் கருத்தில் கொள்ளல்-- என்ற பாசாங்கு கூட இல்லாமல் "தாக்குதல் யுத்தத்தைத் திட்டமிடுவது" ஒரு யுத்தக்
குற்றமாகும்.
ஆப்கானிஸ்தானில் குண்டு வீசியதிலிருந்து ஆக்கிரமிப்புச் செய்தது வரை, மற்றும் இப்பொழுது
ஈராக்கைக் குறிவைப்பதுவரை தவிர்க்க முடியாமல் மிக இரத்தவெறி கொண்ட பிரச்சாரமாக ஆனது --இதனை அமெரிக்க
இராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியானது முடுக்கி விட்டுள்ளது. யுத்தத்திற்கான இந்த உந்தலை செப்டம்பர் 11
தாக்குதல்களின் எதிர்வினை என்று சாதாரணமாக புரிந்துகொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால், உலக வர்த்தக
மையக் கட்டிடத்தின் மீதும் பென்டகன் மீதும் நடந்த தாக்குதல் பல ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வந்திருக்கும் இராணுவவாத
வேலைத்திட்டத்திற்கான சாக்காக பயன்பட்டு வருவது, வரவர கந்தல் கந்தலாகி வருகிறது.
ஈராக் அந்த விஷயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு கூறாகும். குவைத்தை ஆக்கிரமித்ததற்கு
பதிலாய் 1991ல் அமெரிக்கா, ஈராக்கிய இராணுவப் படைநிலைகள் மீதும் பெரும்பாலான மாநகர் மற்றும் நகர்களின்
மீதும் காட்டுமிராண்டித்தனமாகக் குண்டுகளை வீசியது. யுத்தம் முடிவுற்றது என்று கூறப்படுவதன் பின்னர் பத்தாண்டுகள் கழித்தும்
ஐக்கிய அமெரிக்க அரசுகளும் பிரிட்டனும் தொடர்ந்து குண்டு வீசி வருகின்றன. அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் ஐக்கிய
நாடுகள் அவையால் பொருளாதாரத் தடைகள் திணிக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, இத்தாக்குதல்கள் நவீன இன அழிப்புக்கு,
பத்து இலட்சம் ஈராக்கியர் அளவிற்கு, முக்கியமாய் குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் ஏழைகள்
ஆகியோரின் மரணத்திற்கு பொறுப்பாக இருக்கின்றன.
ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹூசைன் ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு அச்சுறுத்தலாக
இருக்கிறார் என கூறிக்கொண்டு ஈராக்கிற்கு எதிரான யுத்தம் --மியூனிச்சில் நேட்டோ மூலோபாய மாநாட்டில் கடந்தவாரம்
ஒரு அமெரிக்க அதிகாரி பிரகடனம் செய்தவாறு-- "சுயபாதுகாப்பு" என்ற தளத்தின் பேரில் நியாயப்படுத்தப்படுவது,
எரிச்சல் கொண்ட பொய்யாகும். செப்டம்பர் 11 தாக்குதல்களுடன் சதாம் ஹூசைனுக்கு ஏதும் தொடர்பு இருந்ததாக
ஆதாரம் எதுவும் முன்வைக்கப்படவில்லை, மற்றும் சி.ஐ.ஏ தானும் அத்தகைய கூற்றுக்களை இதுவரை முன்வைக்கவில்லை.
அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் முரட்டுத்தனம் உலகம் முழுவதும் வெறுப்பு அதிர்வுகளை
அனுப்பியிருக்கிறது, பெரும்பாலும் ஐரோப்பாவில், அங்கு ஆளும்வர்க்கத்தின் மத்தியில் கவலைகளை வளர்த்து வருகின்றது
--அதேபோல பரந்த மக்களின் மத்தியில்-- அவர்கள் புஷ் நிர்வாகத்தை புதிதான தீவிரமான ஒன்றாகவும் ஆபத்தானதாகவும்
காணும் விதத்தில் எதிர்முகப்படுத்தி இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத்துறைத் தலைவரும் முன்னாள் பிரிட்டிஷ்
டோரி கட்சியின் பொதுச்செயலாளருமான கிறிஸ்டோபர் பாட்டன், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ வெற்றியானது
"சில ஆபத்தான தூண்டல்களைக் கொண்டிருக்கின்றது: இராணுவ ஆற்றலை வெளிக்காட்டுவது ஒன்றுதான் உண்மையான
பாதுகாப்புக்கு அடிப்படை, அமெரிக்கா வேறொருவரின் மேலும் அல்லாமல் தன்மீதே நம்பிக்கை வைத்துள்ளது, மற்றும்
அந்தக் கூட்டாளிகள் தேர்வுக்கு உரிய மேலதிக சக்திகளாகப் பயன்படுத்தப்படலாம்" என்றார்.
சர்வதேச உறவுகளின் மொத்தக் கட்டமைப்பும் சீர்குலைந்திருக்கிறது. அமெரிக்க வெளியுறவுக்
கொள்கையுடன் மோதலுக்கு வரும் எந்த அரசாங்கமும் இப்பொழுது "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்ற பேரில்
இராணுவத் தாக்குதலுக்கு இலக்காகும் ஆபத்து நேர்வைக் கொண்டிருக்கின்றது.
யுத்தத்துக்கான நாடகக் காட்சிப் பட்டியல்
ஈராக்குடனான அமெரிக்க யுத்தத்திற்கான பல்வேறு காட்சிகளை விவரிக்கும் அறிக்கைகள்
கடந்த வாரம் மூன்று அமெரிக்கப் பத்திரிக்கைகளுக்கு கசிந்தன. லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பத்திரிகை பிப்ரவரி
10 அன்று வெளியான கட்டுரையில், புஷ் நிர்வாகமானது ஈராக்குடனான யுத்தத்திற்கான "சீரியசான திட்டத்தில்" இப்பொழுது
ஈடுபட்டிருக்கிறது எனவும் துணை ஜனாதிபதி ரிச்சர்ட் செனி அமெரிக்க முடிவுகளை தனது அடுத்தமாத ஒன்பது நாடுகள் சுற்றுப்
பயணத்தின்போது மத்திய கிழக்கில் உள்ள ஆதரவு நாடுகளுக்கு தெரிவிக்கப்போவதாகவும் கூறியது. செனி செளதி அரேபியா,
ஜோர்டான், துருக்கி, எகிப்து, இஸ்ரேல், அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், கட்டார் மற்றும் ஒமான் ஆகிய நாடுகளில்
சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இவை பாக்தாத்திற்கு எதிரான அமெரிக்க இராணுவ அட்டூழியத்தில்
பாத்திரம் வகிக்கக் கூடும்.
நிர்வாகம் "இரு மூலோபாய முடிவுகளை செய்தது.... முதலாவதாக, ஈராக்கியப் பிரச்சினை
தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது, முந்தைய இரு அமெரிக்க நிர்வாகங்களின் பொழுது நிர்வகிக்கப்பட்டது போல வெறுமனே
நிர்வகிக்காமல்... இரண்டாவதாக, வாஷிங்டனானது சர்வதேச உணர்வு, அரபு மக்களின் கருத்து மற்றும் 11 ஆண்டுகளுக்கு
முன்னால் எண்ணெய் வளம் மிக்க சிறு குவைத்திலிருந்து ஈராக்கை வெளியேற்ற பாலைவனப் புயல் நடவடிக்கைக்காக வழி
திறந்துவிட்ட, உண்மையான ஐ.நா தீர்மானங்கள் ஆகிய இவற்றால் திணிக்கப்பட்ட வரையறைகளுக்கு அப்பால் தள்ளுவதற்கு
தயாரிக்கப்பட்டிருத்தலை" செய்துள்ளது என டைம்ஸ் பத்திரிகைச் செய்தி அறிவித்தது.
அங்கு பயன்படுத்தப்பட்ட மொழி குறிப்பாக தீக்குறியாக (பயமுறுத்தலாக) இருக்கிறது.
"செக் பிரச்சினையை" அல்லது "போலந்து பிரச்சினையை" உடனடியாக இல்லாமற் செய்வதற்கான ஹிட்லரின் கோரிக்கைககளுடன்
--சர்வதேச கருத்தை அப்படி ஆரவாரமாக பொருட்படுத்தாமல் செயல்படும் அல்லது அத்தகைய வார்த்தைகளில் பேசும்
உலக வல்லரசு, நாஜி ஜேர்மனிக்குப் பின்னர் இருந்து-- இல்லை.
பிப்ரவரி 12 அன்று, பிலடெல்பியா இன்குய்ரர் (Philadelphia
Inquirer) பத்திரிகை மற்றும் அமெரிக்கா இன்று
பத்திரிகை ஆகியன ஈராக்குடனான யுத்தத்திற்கு வழிவகுக்கும் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தன. இன்குய்ரர்,
வெள்ளை மாளிகையில், பென்டகனில் மற்றும் அரசு துறையில் தற்போதுள்ள விவாதம் ஈராக் மீது தாக்குதல் தொடுப்பதற்கு
ஆதரவாகவும் எதிராகவும் உள்ள பண்புக் கூறுகள் பற்றியதல்ல மாறாக அதனை எவ்வாறு செய்வது என்பது பற்றியதாகும்
என பத்திரிகையிடம் கூறிய "ஒரு உயர் அதிகாரியை" மேற்கோள் காட்டியது. "இது சதாம் ஹூசைனிடம் இருந்து விடுவிப்பது
பற்றிய விவாதம் அல்ல" என்று அவர் கூறினார். "அந்த விவாதம் முடிந்து விட்டது" என்றார்.
எண்ணத்தை நிறைவேற்றுவதற்கான இராணுவ நடவடிக்கைகளுக்கான தயாரிப்பில், வடக்கு
மற்றும் தெற்கு ஈராக்கின் "தடை செய்யப்பட்ட வான் மண்டலத்தில்" அழிவைச் செய்ய, நிர்மூலமாக்க, சதிவேலைகள் செய்ய
மற்றும் குண்டுகளை வீச, முழு அளவிலான பிரச்சாரத்திற்கான திட்டங்களை சி.ஐ.ஏ, புஷ்ஷிடம் அளித்தது என்று இன்குய்ரர்
கூறியது.
செனியின் பயணம், மத்திய கிழக்கு தலைவர்களுடனான கலந்தாலோசனை என்று பகிரங்கமாக
உருப்படுத்திக்காட்டும் அதேவேளை இறுதிக் கெடு விதிப்பதற்காக இருந்தது என்று அதிகாரிகள் பத்திரிகையிடம் கூறினர். "அவர்
ஆதரவுக்கு கெஞ்சப் போவதில்லை" என்று ஒரு உயர் அதிகாரி பத்திரிகையிடம் கூறினார்." அவர் ஜனாதிபதியின் முடிவு
தீர்மானிக்கப்பட்டு விட்டது மற்றும் நிறைவேற்றப்படப் போகிறது, மற்றும் அவர்கள் சிலவற்றில் பங்கேற்க விரும்பினால் எப்படி
மற்றும் எப்பொழுது நிறைவேற்றுவது என்பதைத் தீர்மானிப்பதை, அவர்கள் பேசுவதற்கு இப்பொழுதுதான் நேரம் என்று
அவர்களுக்கு அறிவிக்கப் போகிறார்" என்றார்.
அமெரிக்கா இன்று பத்திரிகை, பாவெலின் மிக நெருக்கமான சகாவான, அரசு
துணைச் செயலாளர் ரிச்சர்ட் அர்மிடேஜ் உள்ளடங்கலான புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகளை, யுத்தத்துக்கான முடிவு எடுக்கப்பட்டிருந்தது
என்று அறிவிப்பதற்கான அதன் ஆதாரமாக மேற்கோள் காட்டியது. பாக்தாதைக் கையாளுவதற்கான ராஜதந்திர மற்றும்
அரசியல் தேர்வுகள் நல்லவிதமாக முன்னெடுக்கப்படும், ஆனால் பெரும்பாலும் இராணுவ நடவடிக்கைக்கான சாக்கை
உருவாக்குவதற்கான காரணத்திற்காக என்று பத்திரிகை கூறியது.
தற்போதைய ஆட்சி, ஐ.நா பாதுகாப்புச் சபையால் மே மாதத்தில் பொருளாதார
தடை புதுப்பித்தலுக்கு வரும்பொழுது, அதேபோல் 1998 முடிவில் வெளியேற்றப்பட்ட ஐ.நா ஆயுத சோதனையாளர்களை
மீண்டும் நுழைவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கைகளை வைக்கையில், நிர்வாகமானது இன்னும் கூடிய அளவில் இறுக்கமான
பொருளாதாரத் தடைகளை நாடும். இந்தக் கோரிக்கைகளின் உண்மையான காரணம் ஈராக்கிய நிராகரிப்பைத் தூண்டுவதற்கும்
அடுத்து சோதனை நிகழ்ச்சிப்போக்கில் ஏற்படும் முறிவை பின்னர் இராணுவத் தாக்குதலுக்கான இறுதிக் கெடுவாக நிர்ணயிப்பதற்கு
பயன்படுத்தப்பட முடியும் என்பதற்கும் ஆகும்.
அமெரிக்கா இன்று பத்திரிகையின் படி, இராணுவக் கிளர்ச்சியையைத் தூண்டிவிடும் முயற்சியில்,
பிரதான ஈராக்கிய தரைப்படையான குடியரசுக் காவற்படை (Republican
Guards) மீது குண்டுவீசுவதை இலக்காக வைப்பது முதல், வடக்கில்
குர்துகள் மற்றும் தெற்கில் ஷிஜாட்டுகள் போன்ற உள்ளூர் எதிர்ப்பு சக்திகளை ஆயுதபாணி ஆக்கல், 200,000 வரையிலான
அமெரிக்கத் துருப்புக்களால் முழு அளவிலான ஆக்கிரமிப்பைச் செய்தல் வரையான அளவில் இராணுவ நாடகக் காட்சிகள்
எண்ணப்பட்டு வருகின்றன.
துருப்புக்களும் உளவாளிகளும் நகர்வில்
ஈராக்கிற்கு எதிரான யுத்தத்திற்கான தயாரிப்புக்கள் இந்த அறிக்கைகள் குறிப்பிடுவதை விடவும்
மிக முன்னேற்றம் உள்ளதாக இருக்கின்றன என்று எண்ணிறைந்த குறிகாட்டல்கள் இருக்கின்றன.
* அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் யுத்த விமானங்கள் ஈராக்கிய வான் பாதுகாப்பு நிலைகள்
மீது குண்டு வீச்சுக்களை உக்கிரப்படுத்தி உள்ளன. மிக அண்மைய வான் தாக்குதல்கள் ஜனவரி 22 மற்றும் 24 அன்று,
பாக்தாதின் தென்கிழக்கே 170 மைல்கள் தொலைவில் உள்ள தலில் நகர் அருகே இடம் பெற்றன.
* ஆப்கானிஸ்தானில் இராணுவ நடவடிக்கைகள் கடுமையாய் வெட்டப்பட்டபோதும் ஆயிரக்
கணக்கான கப்பற்படையைச் சேர்ந்த நிலப்படை மற்றும் ஏனைய போரிடும் தயார் நிலைப் படைகள் பிராந்தியத்தை
நோக்கி நகருகின்றன.
* அரசுத் துறையின் பேராளர் குழுவும் சி.ஐ.ஏ அதிகாரிகளும் பாக்தாதுக்கு எதிரான இராணுவ
நடவடிக்கைக்கு தயாராக உள்ள படைகளை களத்தில் ஆய்வு செய்ய, கடந்த மாதம் வடக்கு ஈராக்கில் உள்ள குர்துகள்
கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு விஜயம் செய்தனர்.
* 1000க்கும் மேலான இராணுவ ஆணையக மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அமெரிக்க
தளங்களில் இருந்து பாரசீக வளைகுடாவில் உள்ள நிலைகளுக்கு மாற்றப்பட்டு இருக்கின்றனர், அங்கு அவர்கள் பெரிய அளவிலான
போரிடும் துருப்புக்களை வழிநடத்தும் நிலையில் இருப்பார்கள்.
* அமெரிக்க மைய ஆணையகத்திற்கான கப்பற்படையின்
நிலப் படைப்பிரிவின் கொமாண்டர் தனது தலைமையகத்தை புளோரிடாவிலிருந்து பஹ்ரைனுக்கு இடம் மாற்றி இருக்கிறார்.
இந்தப் பிராந்தியத்தில் ஏற்கனவே உள்ள விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவத்திற்கான கொமாண்டர்களுடன் சேர்ந்து
கொண்டார்.
இதற்கிடையில் ஈராக் மீதான அமெரிக்க யுத்தத்திற்கான மிக முக்கியமான மூலோபாய நிலைகளைக்
கொண்டிருக்கும் நாடுகளான ஈரான், செளதி அரேபியா மற்றும் துருக்கி ஆகியவற்றின் மேல் கடும் அழுத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
பாரசீக மொழி பேசுவோரை அதிகமாகக் கொண்டுள்ள மேற்கு ஆப்கானிஸ்தான் சம்பந்தமாக
அமெரிக்காவுடன் வளர்ந்துவரும் மோதல் காரணமாக அதன் ஒரு பகுதியாக ஈரான் ஆனது, "தீய அச்சில்" சேர்க்கப்பட்டது.
இருப்பினும், ஈராக் மீதான தாக்குதலின் பொழுது டெஹ்ரானை ஒரு ஓரமாக ஒதுக்கி வைப்பதே மிக முக்கியமான நோக்கமாகும்.
1991ல் ஈராக்குடனான யுத்தத்தை நிறுத்தியதில் முக்கியமான அக்கறை, ஈராக்கிய இராணுவ படைகள் முற்றிலும் அழிந்தால்,
பாரசீக வளைகுடாவில் ஈரான் மேலாதிக்க சக்தியாக வெளிப்படும் என்ற அச்சமாக இருந்தது என்பது அமெரிக்க அதிகாரிகளால்
மேற்கோள் காட்டப்பட்டது.
செளதி அரேபியா பத்திரிகைப் பிரச்சாரத்தின் விஷயமாக இருந்தது, குறிப்பாக வாஷிங்டன்
போஸ்ட் மற்றும் நியூயோர்க் டைம்ஸ் ஆகியவற்றில், ஈராக்கில் ஆக்கிரமிப்புக்கு ஒரு தளமாக சேவை செய்ய
செளதி அரேபியாவிற்கு உள்ள தயக்கத்தின் காரணமாக, அமெரிக்கா முடியாட்சிக்கான ஆதரவை திரும்பப் பெற்றுவிடும்
--அது அந்த ஆட்சிக்கு மரண தண்டனையாக இருக்கும்-- மற்றும் இராணுவ சர்வாதிகாரம் போன்ற ஏனைய ஆட்சி வடிவத்தை
ஆதரிக்கும் என்று அது குறிப்பிட்டது.
துருக்கி விஷயத்தில், அச்சுறுத்தலைக் காட்டிலும் லஞ்சம் கொடுப்பது அமெரிக்காவின் முக்கிய
தந்திரோபாயமாக இருக்கிறது. இந்த மாத ஆரம்பத்தில் அங்காரா ஆட்சியை முன்னிறுத்த சர்வதேச நாணய நிதியமானது
16 பில்லியன் டொலர்கள் கடனுதவி அளித்தது. ஆர்ஜெண்டினாவுக்கு அதேமாதிரியான நடவடிக்கைகள் எதற்கும் அதன் எதிர்ப்பு
இருப்பினும் இது அங்காராவை பிணையில் மீட்பதற்கான அமெரிக்க ஆதரவாக இருந்தது. அமெரிக்க மற்றும் சர்வதேச பத்திரிகைகளில்
யுத்தத்திற்கு துருக்கி அளிக்கும் ஆதரவுக்காக அதற்கு, ஈராக்கிய எண்ணெய் வளத்திலிருந்து மொத்த பங்கு முதல்
--மொசுல் எண்ணெய் வயல் துருக்கிய எல்லையிலிருந்து 100 மைல்களுக்கும் குறைவான தொலைவில் அமைந்துள்ளது-- காஸ்பியன்
கடலில் இருந்து மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள துருக்கிய துறைமுகமான செய்ஹானுக்கு ஒரு எண்ணெய் குழாய் வழிப்பாதை
அமைப்பதற்கான அமெரிக்க உதவி வரையிலான ஊக்க வெகுமதி அளிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனைகள் இருந்து
வருகின்றன.
பதிலுக்கு, ஈராக்குக்கு எதிரான யுத்தத்தில் வட பாதிக்கு தரைப்படைகளையும் டாங்கிகளையும்
துருக்கி அளிக்குமாறு கேட்கப்படலாம். துருக்கிய செய்தித்தாளான மில்லியெட் இல் பத்தி எழுத்தாளர் ஒருவர்
அண்மையில், சதாம் எதிர்ப்பு இராணுவ சதிக்கு காத்திருப்பதைக் காட்டிலும் அல்லது குர்துகளின் எழுச்சியை அனுமதிப்பதைக்
காட்டிலும் துருக்கிய இராணுவம் பாக்தாத்தில் அணிவகுத்துச் செல்ல வேண்டும் என்று அரசாங்கத்தை அழைத்தார்.
"நாங்கள் அறிந்திராத மற்றும் முன்முயற்சியால் வரும் அபிவிருத்தியை எங்களால் சகித்துக்
கொள்ள முடியாது, அந்நிகழ்ச்சிப் போக்கு நெருக்கமான பாதிப்பைக் கொண்டிருக்கும், எங்களது முன்னுரிமைகள்
தாழ்த்தப்படுவதை மற்றும் எங்களது தேசிய நலன்கள் மிதித்து நசுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது" என்று கூறி, தனது
பாராளுமன்றக் கூட்டத்திற்கான பேச்சில், துணைப் பிரதமர் மெசட் இல்மாஸ்
(Mesut Yilmaz)
ஈராக்கின் மீதான எந்த ஒரு ஒருதலைப்பட்சமான தாக்குதலுக்கும் எதிராக அமெரிக்காவை எச்சரித்தார்.
ஈராக்கில் நடக்கும் யுத்தம் வடக்கில் சுதந்திர குர்திஸ்தான் அரசை உருவாக்க வழிவகுக்கும்,
அது தற்போது தேசிய உரிமைகள் மறுக்கப்படுகின்ற தென்கிழக்கு துருக்கியில் உள்ள பத்துலட்சக் கணக்கான குர்துகளுக்கு
காந்த சக்தியாக மாறும் என்று துருக்கிய ஆட்சி அஞ்சுகிறது. ஒருவர் இல்மாஸின் இந்த ராஜதந்திரப் பிதற்றலை மொழி
பெயர்ப்பாராயின், முதலாவது உலக யுத்தத்தில் பிரிட்டனால் கைப்பற்றப்படும் வரை ஒட்டோமான், துருக்கியப் பேரரசால்
ஆளப்பட்ட எல்லைப் பகுதியான --துண்டாடப்பட இருக்கும் ஈராக்கில் கிடைக்கும் கொள்ளைப் பொருட்களில் அதன் பங்கை
துருக்கி பெறும் என்று இல்மாஸ் அந்த பிரச்சினையில் மேலும் ஐயம் தெளிவிக்கும் பொருட்டு, கோரினார்.
ஆக்கிரமிப்புக்கான கால அட்டவணை
ரஷ்ய செய்தித்தாளான
Nezavisimaya Gazeta-வில் பிப்ரவரி 6 அன்று வெளியான
ஒரு செய்தியின் படி, அமெரிக்க அரசாங்கம் ஈராக் மீது தாக்குதலை நடத்துவதுடன் "மத்திய கிழக்கில் தொடரான யுத்தங்களை
நடத்துதற்கு தயார் செய்து கொண்டிருக்கிறது." இது செப்டம்பரில் தொடங்க இருக்கிறது என ரஷ்ய இராணுவ
உளவுத்துறையை மேற்கோள்காட்டி, அதில் கூறப்பட்டது. ஆப்கானிஸ்தானில் யுத்தத்தை மூடுதிரையாகப் பயன்படுத்தி இந்தப்
பிராந்தியத்தில் தேவையான படைபலத்தில் அமெரிக்கா கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது என்று அச்செய்தித்தாள்
கூறியது. இத்திட்டத்திற்கு குர்திஸ் தலைவர்களை ஆள் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் கூட எடுக்கப்பட்டிருக்கின்றன மற்றும்
வட ஈராக்கில் குர்துகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இறங்கு தளங்கள் திருத்தப்பட்டு வருகின்றன.
ஒரு காட்சி, வான்வழித்தாக்குதல் மற்றும் ஆதரவுப் படைகளின் தரைவழித் தாக்குதல் இவை
இரண்டினதும் இணைந்த தாக்குதல் மூலம் எட்டு வார கால அளவில் ஹூசைன் அரசாங்கத்தின் அழிவை எதிர் நோக்குகிறது
என்று ரஷ்ய அறிக்கை கூறுகிறது. இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சிரியாவோ அல்லது ஈரானோ
எந்தத் தடையையும் ஏற்படுத்தினால் அவர்கள் மீது அதே மாதிரி தாக்குதல்கள் பின் தொடரப்படும்.
ரஷ்ய செய்தித்தாளில் குறிப்பிடப்பட்ட கால அட்டவணை துல்லியத்தை மெய்ப்பிக்கலாம், ஆனால்
அங்கு ஈராக்கிற்கு எதிரான தரைவழி நடவடிக்கையை கோடை இறுதி வரைக்கும் தாமதப்படுத்தும் நடைமுறைக்
காரணங்களும் இருக்கின்றன:
* சில நேரங்களில் மெசபடோமியன் பாலைவனப் பகுதியில் நிலவும் வெப்பநிலை அமெரிக்கத்
துருப்புக்களுக்கு தரைவழி நடவடிக்கைகளைக் கடினமானதாக ஆக்கலாம்.
* துருப்புக்களை அந்தப் பிராந்தியத்துக்கு அனுப்பவும் விமானப்படைத் தளங்களையும் தார்மீக
ஆதரவையும் முன்னேற்றுதற்கு பென்டகனுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது.
* கொசோவா யுத்தத்தாலும் இப்போது ஆப்கானிஸ்தான் யுத்ததாலும் ஆற்றல் குறைக்கப்பட்டுள்ள
துல்லியம் மிக்க ஆயுத இருப்பை திரும்பக் கட்டி எழுப்ப அமெரிக்க ஆயுதத் தொழிற்துறைக்கு சில மாதங்கள் தேவைப்படுகின்றன.
* கடும் குண்டு வீச்சுக்கள் கொண்ட
காலப் பகுதி தரை நடவடிக்கைக்கு முன் நிகழ்வாக அமையும், அது தேவையான ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கு ஆயத்தமாக
இருந்ததும் ஆரம்பிக்கப்படக்கூடும்.
ஆயினும், அமெரிக்க நடவடிக்கை என்று சொல்லப்படுவது கோடை இறுதிக்கும் பின்னர்
போகாமலும் மற்றும் முன்னதாகவும் கூட ஆரம்பிக்கப்படுவதற்கு மேலும் அடிப்படைக் காரணம் உள்ளது. அது போர்வீரர்களை
அணிவகுத்து நடத்தும் கலை, புவி இயல் அல்லது, உண்மையில் எந்த விதமான இராணுவ ரீதியான கருதிப் பார்த்தலுடனும்
ஒன்றும் சம்பந்தம் கொண்டிருக்கவில்லை. ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க யுத்தம் 2002 தேர்தல் பிரச்சாரத்தின் நடுவில்
பின்னர் அவிழ்க்கப்பட்டு, புஷ் நிர்வாகமும் குடியரசுக் கட்சியும் கொடியைப் போர்த்திக் கொள்வதற்கும் உள்நாட்டு எதிர்ப்பை
உண்மையான துரோகமாக உருவகப்படுத்திக் கொள்வதற்கும் சூழ்நிலைமைகளை உருவாக்குதலாக இருக்கும்.
புஷ்-ஐ அரசியல் ரீதியாக சக்தி மிக்கவராகவும் பெருமளவு செல்வாக்கு கொண்ட ஜனாதிபதியாகவும்
காட்டும் ஊடகங்களின் முயற்சிகள் இருப்பினும், அவர் தலைமை தாங்கும் நிர்வாகமானது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின்
5க்கு 4 பெரும்பான்மையால் நடத்தப்பட்ட ஜனநாயக விரோத கவிழ்ப்பு சதியின் நன்றிக்கடனாக மட்டுமே நிர்வாகத்தைப்
பொறுப்பெடுத்தது, மற்றும் அவரது உள்நாட்டுக் கொள்கைகள் --செல்வந்தர்களுக்கு பெரும் வரிச்சலுகைககள், சமூக செலவினங்களை
வெட்டல், கிறிஸ்த்தவ அடிப்படைவாத வலதுசாரிகளின் நிகழ்ச்சி நிரலை முன்னிலைப்படுத்தல் ஆகியன-- பரந்த அளவிலான
பெரும்பான்மை உழைக்கும் மக்களால் கடுமையாய் எதிர்க்கப்படுகின்றது.
அது, ஆழமாகி வரும் பொருளாதாரப் பின்னடைவு, பரந்த அளவிலான கதவடைப்புகளின்
தொடர்ச்சியான அலை மற்றும் என்றோன் போன்ற அதன் மிக நெருங்கிய முதலாளித்துவ ஆதரவாளர்களின் குற்ற நடவடிக்கைகள்
ஆகியனவற்றுக்குப் பொறுப்பாக இருப்பதால், செப்டம்பர் 11 தாக்குதல் மற்றும் ஆப்கானிஸ்தானில் அடுத்து நடந்த
யுத்தம் ஆகியன இல்லாதிருந்தால் இந்த நிர்வாகம் அதிகரித்துவரும் மக்கள் எதிர்ப்பை இன்று சந்தித்திருக்கும். பயங்கரவாதிகளின்
தாக்குதல்களினால் உண்டு பண்ணப்பட்ட குழப்பநிலைகள் மற்றும் காங்கிரசிலுள்ள ஜனநாயகக் கட்சியினரின் முழு ஆதரவுடன்
--புஷ்ஷின் 2000 -ம் ஆண்டு எதிராளி அல் கோர் புதன்கிழமை அன்று தனது உரையில், ஈராக்குடனான "இறுதி கணக்குத்
தீர்ப்பு" க்கு அழைப்பு விடுத்தார்-- இது ஆட்சி நெருக்கடியில் இருப்பதாலாகும்.
யுத்தமானது, எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் மேலாதிக்க
நிலையை நாட்டுவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறையாக இருக்கிறது. ஆனால் மிக
அடிப்படையாக, யுத்தத்தை நோக்கிய உந்தலானது அமெரிக்காவுக்குள்ளே ஆழமாகி வரும் வர்க்கப் பகைமைகளின் வெளிக்காட்டலாக
இருக்கிறது. புஷ் நிர்வாகம் தப்பிப் பிழைப்பதற்கு யுத்தமானது ஒரு அரசியல் தேவையாக இருக்கிறது. இந் நிர்வாகத்திற்கு
வக்காலத்து வாங்கும் பிரதான ஊடகம் சார்ந்த மனிதர்களுள் ேவால்ஸ்ட்ரீட் பத்திரிகையின் ஆசிரியர் றொபர்ட்
பார்ட்லியும் ஒருவர். இவர் புஷ் நாட்டின் நிலைமை தொடர்பான பேச்சிற்குப் பின்னர், தொலைக்காட்சியில் தோன்றி,
"நாம் ஈராக்கை ஆக்கிரமித்தால் இந்த என்ரோன் கதை நீண்டகாலம் நீடிக்காது" என்று நம்பிக்கையுடன் அறிவித்ததார்.
அமெரிக்க நிர்வாகமானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின், குற்றமயமாக்கப்பட்ட, குண்டர்கள்
சக்தியின் உச்சக்கட்ட மட்டங்களின் தோற்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது. ஜனநாயகம் தொடர்பான அதன் மனப்பாங்கு
புளோரிடாவில் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது, உழைக்கும் மக்கள் தொடர்பான அதன் மனப்பாங்கு என்ரோனில் எடுத்துக்
காட்டப்பட்டிருக்கிறது, உலகு தொடர்பான அதன் மனப்பாங்கு ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் காட்சியாகக் காட்டப்பட்டுக்
கொண்டிருக்கிறது. புஷ் மற்றும் அவரது கூட்டத்தினர் அதிகமாக யுத்த அச்சுறுத்தல் விடுக்க விடுக்க, அதன் விளைவுகளைப்
பற்றிக் கவலைப்படாமல் அவர்கள் அதனை சொல்லில் இருந்து செயலுக்கு மாற்றும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் ஆழமாகிவரும் நெருக்கடி உலகை அழிவை நோக்கி இழுத்துச் செல்லுகின்றது.
|