World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரித்தானியா

ஙிக்ஷீவீtணீவீஸீ: நிஷீஸ்மீக்ஷீஸீனீமீஸீt ஜீக்ஷீமீssமீs யீஷீக்ஷீ ா1 தீவீறீறீவீஷீஸீ ணீக்ஷீனீs பீமீணீறீ ஷ்வீtலீ மிஸீபீவீணீ

பிரிட்டன்: அரசாங்கம் இந்தியாவுடன் 1 பில்லியன் பவுண்ட்ஸ் மதிப்புடைய ஆயுத பேரத்தை வற்புறுத்துகிறது

By Richard Tyler
23 January 2002

Back to screen version

ஆயுத உற்பத்தியாளர்களின் லாபங்களை அதிகமாக்குவதற்கு மற்றுமொரு போர் மூளுவது போல நல்ல ஒரு வாய்ப்பு வேறொன்றுமில்லை. காஷ்மீரில் எல்லை தகராறினால் இந்தியாவுக்கும்- பாக்கிஸ்தானுக்கும் இடையே அதிகரிக்கும் பதட்டங்கள் நிலவுகின்றன. கார்டியன் (Guardian) நாளேடு மூத்த இங்கிலாந்து அரசியல்வாதிகள், ஹாக் (Hawk) ஜெட் விமானங்களை இந்தியாவிற்கு வினியோகிப்பதற்காக 1 பில்லியன் பவுண்ட்ஸ் ஆயுத ஒப்பந்தத்திற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதாகக் கூறியது.

Hawk போர் விமானங்களை தயாரிக்கும் BAE Systems இந்த ஆர்டரைப் பெறுவதில் நம்பிக்கை தெரிவித்தது. பிரிட்டிஷ் அமைச்சர்கள் இந்தியாவை இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு வற்புறுத்துவதாக கார்டியன் பத்திரிகை கூறிற்று. பாதுகாப்பு அமைச்சர் Ceoff Houn இந்த Hawk விமானத்தை வாங்குமாறு இந்தியாவை வற்புறுத்தி வருகிறார். துணைப் பிரதமர் John Prescott ஒரு இராணுவ பொருட்காட்சியின்போது இந்தியாவிற்கு அடுத்த மாதம் வருகிறார்.

லண்டனிலுள்ள பாக்கிஸ்தான் தூதரகம் பாக்கிஸ்தான் இந்த ஆயுதப் பெருக்கத்தைப் பற்றி கவலைப்படுவதாக தெரிவித்தது. "இந்திய போர் ஆயுத குவிப்பு நிலைமை மோசமடைய செய்யும். இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும் ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கும்.

"இந்திய ஜனத்தொகை 100 கோடிக்கும்" அதிகம் 14 கோடி ஜனத்தொகை உள்ள பாக்கிஸ்தானைவிட இந்தியா அதிக இராணுவ பலம் பொருந்தியது. இந்திய இராணுவம் 12 லட்சம் வீரர்களை கொண்டது. பாக்கிஸ்தான் இராணுவம் 620,000 வீரர்கள் அடங்கியது. இந்திய ஒரு ஆண்டுக்கு பாதுகாப்பிற்காக --9 பில்லியன் பவுண்ட்ஸ்கள் (13 பில்லியன் டாலர்கள்) செலவிடுகிறது. 3414 டாங்கிகளும் 738 போர் விமானங்களும் வைத்துள்ளது. பாக்கிஸ்தான் ஒரு ஆண்டுக்கு பாதுகாப்பிற்காக-- 1.7 பில்லியன் பவுண்ட்ஸ்கள் (2.4 பில்லியன் டாலர்கள்) செலவிடுகிறது. அது 2300 டாங்கிகளையும் 353 போர் விமானங்களையும் வைத்துள்ளது.

ஒரு பத்திரிகைக் கூற்றுப்படி, இந்தியா பாக்கிஸ்தானை முற்றிலுமாக வெற்றிக்கொள்ள இயலும் என்று பெருமையாந்ததாக கூறுகிறது. இரு நாடுகளும் போரில் இறங்கினால் இந்த போர் 1947-ல் இந்தியா பாக்கிஸ்தான் பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து நாலாவது போர் ஆக இருக்கும்.

சமீபத்தில் இரு நாடுகளிக்கிடையே காஷ்மீர் தொடர்பான தகராறுக்கு முன்னதாக 1998-ல் இரண்டு நாடுகளும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்ட பொழுது உறவு சிக்கலாயிற்று. Jane's பாதுகாப்பு வல்லுநர்களின் கூற்றுப்படி பாக்கிஸ்தான் 150 அணு ஆயுதங்களை வைத்துள்ளதுடன் ஒப்பிடுகையில் இந்தியா 200-250 அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. இரு நாடுகளும் நடுத்த மற்றும், தொலை தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணைகள் ஒரு அணு குண்டை மற்றவற்றின் எல்லைக்குள் வெகுதூரம் செலுத்தவல்லது.

ஆயுத வியாபாரத்துக்கு எதிரான பிரச்சாரத்தைச் சேர்ந்த (CATT) சார்ந்த Richard Bingley பிரிட்டனின் சமாதானத்தை உருவாக்குவது கடினமாக இருக்கும் அந்த இடத்தில் பிரிட்டனால் நடத்தப்படும் ஆயுத பேரம் பதட்டங்களை அதிகரிக்கும் என உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார்.

"டோனி பிளேயர் இந்தியாவில் சமாதானத்தை வலுப்படுத்தும் நேரத்தில், அவருடைய அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை நேர் எதிர்மாறான நடவடிக்கைகளுக்கு செலவிடுகிறது என்பது கொடுமையானது" என்று பத்திரிகையாளர்களுக்கு பிங்லி கூறினார்.

CATT கூற்றுப்படி, சென்ற ஆண்டு உலக ஆயுத வியாபாரம் 135 பில்லியன் டாலர் மதிப்புள்ளது. இது பெரும்பாலும் மரபுவழி ஆயுதங்கள் மற்றும் சிறிய ஆயுதங்களுக்காகும். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தியா - பாக்கிஸ்தானுக்கு --20 பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதப் பொருட்கள் விற்கப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கம் தனது ராணுவ பட்ஜெட்டை 28% அதிகப்படுத்தியுள்ளது. அதேவேளை பாக்கிஸ்தான் அணு ஆயுத சோதனைக்குப் பின்னர் 1992-ல் அமுலாக்கப்பட்ட தடை காரணமாக ராணுவ செலவினங்களை அதிகப்படுத்தவில்லை.

ஆனால், அமெரிக்கா பாக்கிஸ்தானை தனது ஆப்கான் போரில் ஒரு கூட்டணியாக சேர்த்துக்கொண்ட பின்னர், இந்த நிலை முற்றிலும் மாறுபட்டுவிட்டது. ஜனாதிபதி முஷராப் "பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு" தனது ஆதரவைத் தெரிவித்ததும் அமெரிக்க ஆயுதத் தடை சென்ற ஆண்டு விலக்கிக்கொள்ளப்பட்டது. இருப்பினும் பிரிட்டன் விதித்த ஆயுத தடை அமுலில் உள்ளது என பாக்கிஸ்தான் தூதரகப் பேச்சாளர் கூறுகிறார்.

இந்திய - பாக்கிஸ்தான் நடுவே நிலவும் பதட்ட நிலை ஒரேயடியான போராக உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. அண்டை நாடுகளான ரஷ்ய - சீனா தங்களது மத்திய ஆசிய படைத்தளங்களில் அணு ஆயுதங்களை குவித்துள்ளன.

இந்தியா அதன் முந்தைய பிரதான ஆயுத அளிப்பாளர் ரஷ்யாவுடன் பாரம்பரியமாக இருந்த நட்புறவை வைத்துக்கொண்டுள்ளது. ரஷ்யா சமீபத்தில் 40 உயர்ரக ஜி-90 டாங்குகளை சப்ளை செய்துள்ளது. இந்திய கடற்படைக்கு ஒரு Kilo Class நீர்மூழ்கி கப்பலை அளித்துள்ளது.

சீனாதான் பாகிஸ்தானுக்கு தன்னுடைய அணு ஆயுதத்தை செய்வதற்கான திறமையை அளித்தது என ராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்திய சீன உறவுகளை பலப்படுத்த, பத்தாண்டுகளில் முதன் முறையாக, சீன பிரதமர் ழு ரோங்ஜி ஜனவரி 14 அன்று புதுடெல்லி வந்து சேர்ந்தார். சீனா பாக்கிஸ்தானுக்கு ஐந்து கப்பல் நிறைய இராணுவ தளவாடங்களை சப்ளை செய்துள்ளது என்ற செய்திகளுக்கு மத்தியில் இது நடைபெற்றது. இதில் ஏவுகணையும், பலபோர் விமானங்களும் அடங்கும். பாக்கிஸ்தான் அரசாங்கம் இந்த செய்தியை மறுத்தது. ஆயினும் ஒரு செய்தித்தாளின்படி "மறுப்பு ஒப்பனைப் பூச்சாக இருக்கலாம் என வல்லுநர்கள் சொல்கிறார்கள்."

பிரிட்டனின் ஆயுத உற்பத்தியாளர்கள் இந்திய சந்தையை உடைத்து ஊடுருவ மிகுந்த ஆவலாக உள்ளனர். இதற்கு பிரிட்டீஷ் அரசாங்கம் முழு உறுதுனையாக உள்ளது. பிரிட்டன் தனது "நீதியான வெளியுறவு கொள்கை" என்று அழைக்கப்படும் பேச்சை பெரும்பாலும் கைவிட்டுவிட்டது. பதட்டமான நாடுகளுக்கு ஆயுத சப்ளை செய்வதில்லை என்பதே இந்த கொள்கை. 2000-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவிற்கு 700 ஆயுத ஏற்றுமதி உரிமங்களை வழங்கி உள்ளது. 64 மில்லியன் பவுண்ட்ஸ்கள் மதிப்புள்ள இது சென்ற ஆண்டைவிட கணிசமான அளவு அதிகமாகும். இந்த உரிமங்கள் ஏவுகணைகளுக்கும், போர் விமானங்களுக்கும், ஹெலிகாப்டர்களுக்கும் ஆகும்.

"அமெரிக்காவுக்கு வெளியே பிரிட்டனின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி சந்தை மத்திய கிழக்கு நாடுகளாகும். இவை பிரிட்டனின் ஆயுத ஏற்றுமதியில் 15-20 சதவீதம் ஆகும்" என்று CATT பேச்சாளர் ரிச்சர்ட் பிங்க்லி உலக சோசலிச வலைதளத்திடம் கூறினார். "1990களின் தொடக்கத்தின் 75% பிரிட்டிஷ் ஆயுத ஏற்றுமதி மத்திய கிழக்கு நாடுகளுக்கு செய்யப்பட்டது. அவை அங்கு சென்றதன் காரணம். அது ஒரு பதட்டமான இடமாகும். "இப்பொழுது பிரிட்டன் ஆசியாவில் அதே மூலோபாய உத்தியை கையாளுகிறது என்று மேலும் பிங்லி கூறினார்.

பிரிட்டனின் தொழிற் கட்சி அரசாங்கம் Hawk வியாபார பேரத்தை இதுவரை ரஷ்யாவினால் ஆதிக்கம் செய்யப்பட்ட சந்தையைக் கைப்பற்றும் ஒரு முக்கிய அடி எடுப்பு எனக் கருதுகிறது. இதற்காக, பிரிட்டிஷ் பாதுகாப்பு கம்பெனிகள் ஒரு மாபெரும் பிரமாண்டமான கண்காட்சி ஒன்றில் பங்கேற்கின்றன. இந்த கண்காட்சி Defexpo 2002, இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத கண்காட்சியாகும்.

கிட்டத்தட்ட ஒரு முப்பது ஆயுத பேர கம்பெனிகள் மிகப்பெரிய கூட்டணியாக இந்த கண்காட்சியின் முழு அரங்கிலும் பங்குபெறுகின்றன. பிரிட்டனில் "தேசிய அரங்கு" பாதுகாப்புத் தளவாட உற்பத்தியாளர் கூட்டமைப்பு (Defence Manufacturers Association (DMA)) என்ற அமைப்பின் ஆதரவின் கீழ் நடத்தப்படுகிறது. DMA பிரிட்டனின் ஆயுத தொழிற்சாலைகளினது அனைத்து துறைகளின் நலன்களையும், அயல்நாட்டு அரசு நிறுவனங்கள் மற்றும் ஆயுத ஒப்பந்தக்காரர்களது நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்வதாக அதன் இணையத்தில் விளக்கியது.

பிரிட்டனின் ஆயுத தொழில்துறை இந்தியா - பாகிஸ்தான் நடுவே உள்ள இப்போதைய பதட்ட நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது என்ற கூற்றை வன்மையாக மறுக்கிறது. "இது உண்மையாக இருக்க முடியாது" என்று DMA இணையம் குறிப்பாகக் கூறியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கண்காட்சியில் பங்கு பெறுவதாக பிரிட்டன் திட்டமிட்டது. பல மாதங்களுக்கு முன்பே Defexpo அரங்கத்தில் பிரிட்டனின் தேசிய அரங்கிற்கான அனைத்து இடங்களும், இந்திய - பாக்கிஸ்தான் பதட்ட நிலை ஆரம்பமாவதற்கு முன்பே விற்றுத் தீர்ந்தது என வலியுறுத்தல் செய்தது.

பிரிட்டனின் தொழிற்கட்சி அரசாங்கம் இந்தியாவிற்கு ஆயுதம் விற்கும் ஆயுத நிறுவனங்களுக்கு நிறைய ஆதரவு அளிக்கிறது என்பதை மறுக்க முடியாது. Trade Partners UK என்பது ஏற்றுமதி செய்யும் ஒரு அரசு நிறுவனம். இது வர்த்தகம் மற்றும் தொழிற்துறையின் ஒரு அங்கம் ஆகும்.

காட் ஆயுத வியாபார பொருளாதாரம் மானியம் பற்றிய உண்மை விவரம் (Catt Arms Trade Economics Subsidies Fact Sheet-) படி இராணுவ ஏற்றுமதிக்கு ஒரு வருடத்திற்கு அரசு மானியம் கிட்டத்தட்ட --827 மில்லியன் பவுண்டுகள் ஆகும் (1.2 பில்லியன் டாலர்கள்) ஏற்றுமதி கடன் உத்தரவாத அலுவலகம் (Export Credit Guarantee Dept) ஆயுத ஏற்றுமதிக்கு 227 மில்லியன் பவுண்டுகளை (326மில்லியன் டாலர்கள்) உதவியாக அளிக்கிறது. பிரிட்டனின் ஏற்றுமதியில் ஆயுதபேரம் 2 சதவீதம் என்றாலும், அது 30 சதவீதம் (ECGD) ஏற்றுமதி கடன் உத்தரவாத அலுவலகம் ஆதரவை பெற்றுள்ளது.

உலகத்தில் அமெரிக்காவுக்கு அடுத்தபடி, பிரிட்டனே இரண்டாவது மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளர் ஆகும். உலக ஆயுதங்களின் 20-25 சதவீதத்தை ஏற்றுமதி செய்கிறது. பிளேயர் அரசாங்கம் 1997-ல் பதவிக்கு வந்த உடனே பிரிட்டன் ஆயுத விற்பனையை அதிகரித்தது. இந்த ஆயுதத்துறை, சர்வதேச அளவில் லாபகரமாக இயங்க, பிரிட்டிஷ் அரசாங்கம் முயற்சிக்கிறது. கடுமையான ஆயுத ஏற்றுமதி நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது என்ற தொழிற்கட்சி அரசாங்கத்தின் கூற்றை அடுத்து, உத்தியோக பூர்வமான பாதுகாப்பு அமைச்சக அதிகாரியின் புள்ளி விவரப்படி, 1998 ஜூலை அளவில் பிரிட்டிஷ் ஆயுத விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒரு பில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய "பேரழிவுகரமான ஆயுதங்களான" பிரிட்டிஷ் ஆயுத விற்பனை ஒப்பந்தத்தை பெறும் மட்டில் தொழிற்கட்சி அரசாங்கமானது வெறும் விற்பனையாளராக இருக்க தயார் என்பதையே இந்தியாவிற்கான இந்த ஆயுதபேரம் கோடிட்டுக் காட்டுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved