World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : ஆப்கானிஸ்தான்Afghan POWs at Guantanamo base: bound and gagged, drugged, caged like animals குவாண்டனாமோ தளத்தில் ஆப்கான் போர்க்கைதிகள்: கட்டுப்படுத்தப்பட்டு, அடக்கப்பட்டு, மருந்து கொடுக்கப்பட்டு, விலங்குகள் போல் சிறையில் அடைக்கப்பட்டனர். By Patrick Martin ஆப்கானிஸ்தானிலிருந்து கியூபாவிற்கு 24 மணிநேர விமானப் பயணத்திற்கு பின்னர் முதல் தலிபான் மற்றும் அல்கொய்தா கைதிகள் கட்டப்பட்டு மற்றும் முக்காடிடப்பட்டு கியூபாவில் உள்ள குவாண்டனாமோ அமெரிக்க கடற்படைத்தளத்திற்கு வந்து சேர்ந்தனர்; அங்கு அவர்கள் சட்ட விரோதமாகவும் மனிதாபிமானம் இன்றியும் சிறையில் கால வரையறை இன்றி அடைக்கப்பட்டனர். ஜனவரி 10 அன்று சி-17 ஜெட் விமானத்தில் காந்தஹார் விமானத் தளத்தில் இருபது கைதிகள் கொண்டுவரப்பட்டனர்; ஒருவர் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் இருந்தார்; அனைவரும் கை கால் கட்டப்பட்டு இருந்தனர்; விழி பிதுங்குமாறு இறுக முகப்பு அணிவிக்கப்பட்டிருந்தனர்; அவர்கள் முகத்தை மூடிவிட்டபடியால் பயணத்தின்போது அவர்களால் எதையும் பார்க்க முடியாது; அத்தோடு ஒவ்வொரு கைதியும் இருக்கையோடு சேர்த்து கட்டப்பட்டனர். அவர்களை இராணுவ போலீஸ் இருவருக்கு ஒருவராக இருமடங்காக காவல் காத்தனர். ஆப்கானிஸ்தானிலிருந்து விமானம் ஐரோப்பாவில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் தளத்திற்கு பறந்தது. அங்கிருந்து போர்க்கைதிகள் அமெரிக்க விமானப்படை சி-141 விமானத்தில் கியூப குவாண்டனமோ குடா சென்றடைந்தனர். பல கைதிகள் இந்த கொடிய பயணத்தால் மிகவும் பலவீனமடைந்திருந்தனர். களைப்படைந்திருந்தனர். அவர்களால் நகரக்கூட முடியவில்லை. பலரை தூக்கிக்கொண்டு போகவேண்டியிருந்தது. அதில் ஆறுபேர் சிறிது எதிர்ப்பு தெரிவித்தனர் என கூறப்படுகிறது. விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, இருபது போர்கைதிகளும் இரண்டு பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். அங்கிருந்து கடற்படை படகில் குவாண்டானமோ குடாவைத் தாண்டி, எக்ஸ்ரே முகாம் என்று இராணுவ அதிகாரிகளால் அழைக்கப்பட்ட சிறை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மயக்கமுற்ற இந்த போர்க்கைதிகள் ஒப்பீட்டளவில் சிறிய எண்ணிக்கையிலும் நிராயுதபாணிகளாகவும் இருந்த போதிலும் எதிர்த்து போரிடக்கூடும் என நினைத்து, இந்த மொத்த நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. விமானம் தரை இறங்கியவுடன் இயந்திர துப்பாக்கி தாங்கிய, கையெறி குண்டுகளை தாங்கிய இராணுவ டாங்கிகள் சூழ்ந்து கொண்டன. 40 ராணுவ போலீஸ் துப்பாக்கிகளுடன் காவல் நின்றனர். ஒரு கடற்படை ஹெலிகாப்டர் மேலே பறந்தது. வியட்நாம் போரில், கொன்சோன் தீவில் பயன்படுத்தப்பட்ட, இழிபுகழ்பெற்ற புலிக்குகைகள் போன்றே எக்ஸ்ரே முகாம் அமைந்துள்ளது. தென் வியட்நாமில் அமெரிக்க ஆதரவுபெற்ற சர்வாதிகார ஆட்சியின் கீழ் அரசியல் கைதிகள் மிகவும் கொடூரமான வகையில் வைக்கப்பட்டிருந்தனர். குவாண்டானமோவில் ஒவ்வொரு கைதியும் 6' க்கு 8' அடி என்ற அளவில் கான்கிரீட், இரும்புச் சங்கிலியால் இணைக்கப்பட்ட வேலி கூண்டில் அடைக்கப்பட்டனர். ஒவ்வொரு கூண்டும் மனிதன் எழுந்து நிற்பதற்குப் போதுமான அளவு பெரிதாக இருந்தது. சிறைக்கைதிகள் அடிக்கடி விசாரணை செய்யப்படுவர். நீதிமன்றம் ஒன்று இராணுவத் தளத்தில் நிறுவப்பட்டபிறகு இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு போடப்படுவர். சென்ற மாதம் குவாண்டானமோவிற்கு ஆயிரம் அமெரிக்க இராணுவ வீரர்கள் ஒரு தற்காலிக சிறையை கட்டுமானம் செய்வதற்கு அனுப்பட்டனர். இறுதியில் இக்கட்டிடம் 2000 சிறைக்கைதிகளுக்கு இட வசதி அளிக்கும் நிலையான சிறைக் கட்டிடத்தால் பதிலீடு செய்யப்பட இருக்கிறது. சிறைக்கைதிகளை இரவும் பகலும் கண்காணிக்க எல்லாப்புறங்களிலும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட மற்றும் முட் கம்பிகள் அடங்கிய வேலிகள் உள்ளன. கூண்டுகளுக்கு சுவர்கள் கிடையாது. எனவே கைதிகள் கரிபியன் பகுதிகளில் அடிக்கடி வீசும் புயல்களினால் காற்றாலும் மழையானாலும் பாதிக்கப்படுவர். பணியில் உள்ள பெண் சிறைக்காவலர்கள் முன் இஸ்லாமிய தீவிரவாதிகள் உடை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும், இது மோதலை தூண்டிவிடக்கூடும். ஆப்கானிஸ்தானில் கைப்பற்றப்பட்ட கைதிகளை சிறையிடுவதற்கும் புலன் விசாரணை செய்வதற்கும் அமெரிக்காவிற்கு வெளியே மிகவும் பாதுகாப்பான இடமாக, பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் றும்ஸ்பெல்ட்டால் இந்த கடற்படைத்தளம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்க அடிவருடி ஆட்சியுடன் கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தம் மூலம் குவாண்டானமோ கடற்படைத்தளம் (கியூபாவில் அமைந்துள்ளது) அமெரிக்காவால் பயன்படுத்திக்கொள்ள முடியும். காஸ்ட்ரோ அரசு இந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அதற்கு அமெரிக்காவை எதிர்க்கும் இராணுவ பலம் இல்லை. ஒரு சிறைமுகமாக இத்தளத்தைப் பயன்படுத்துவதை கியூபா சிறிய அளவில் ஆட்சேபித்து இருக்கிறது. கைதிகளா அல்லது கடத்தப்பட்டவர்களா? புஷ் அரசு பிணைக்கைதிகளை அமெரிக்காவிற்கு அழைத்து வர விரும்பவில்லை. அமெரிக்க கோர்ட்டுகளில் அவர்கள் நடத்தப்படுவது பற்றி சட்ட சவால் எதுவும் எழாமல் பாதுகாக்கவே இந்த முயற்சி. குவாண்டானமோ இராணுவ நீதிமன்றங்களின் இருப்பிடமாக அமையக்கூடும். அதிபர் புஷ் இன் அதிகாரபூர்வமான உத்தரவின் பேரில் மூன்று இராணுவ அதிகாரிகள் அடங்கிய நீதிமன்றத்தை நியமித்தார். இந்த நீதிமன்றம் போர்க் குற்றங்களுக்கு அல்லது பயங்கரவாத செயல்களுக்கு கடுமையான மரண தண்டனை போன்றவற்றை விதிக்கக்கூடும். தைதிகள் தங்கள் தரப்பில் வாதாட வக்கீல்களை அமைத்துக்கொள்ள முடியாது. இந்த நீதிமன்றத்தில் நீதிபதிகளும் வாதி வழக்கறிஞரும் பிரதிவாதி வழக்கறிஞரும் கூட அமெரிக்க இராணுவ அதிகாரிகளேயாவர். நீதிமன்றத்தில் தலைமைதாங்கும் அதிகாரிகள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அமெரிக்க அதிகாரிகள் ஜெனிவா ஒப்பந்தத்தை தாமாகவே பின்பற்றுவதாகக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் அக்கைதிகள் போர்க்கைதிகள் அல்லர். மற்றவைகளுக்கு மத்தியில் அவர்களது சட்டரீதியான அந்தஸ்து அவர்களை கைப்பற்றிய நாட்டிலிருந்து வெளியேற்றுவதை தடைசெய்கிறது மற்றும் அவர்களை அதிகமாகவும் குற்ற விசாரணை செய்யமுடியாது, பெயர், வகிக்கும் பதவி, தொகுதி எண் ஆகிய மூன்றை மட்டுமே அவர்களிடம் கேட்க முடியும். சில கைதிகள் ஆப்கான் நாட்டவர்; சிலர் மத்திய கிழக்கு அரபு அரசுகளின் குடிமக்கள்; மற்றும் பலர் பிரிட்டன் ரஷியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்; அனைவரையும் "சட்டவிரோத போரில் ஈடுபடாதவர்" என்று அமெரிக்க இராணுவம் அழைக்கிறது. ஜெனிவா உடன்படிக்கை இவ்வாறு எந்தவிதமான தரத்திற்கும் உண்மையான அளவுகோலை ஏற்படுத்தாதபோதிலும் அவ்வாறு கூறினர். றும்ஸ்பெல்ட் பத்திரிகையாளர்களிடம் ஜெனிவா உடன்படிக்கையின் கீழ் இந்த சட்ட விரோத போரில் ஈடுபடாதவர்களுக்கு எந்தவித உரிமைகளும் இல்லை. நாங்கள் முடிந்தவரை அவர்களை நல்ல மாதிரியாக நடத்துகிறோம். ஒரு பத்திரிகையின் கூற்றுப்படி, அமெரிக்க அரசின் நிலைப்படி பிணைக்கைதிகள் போராளிகளாக கருதப்படவேண்டுமென்றால் பின்வருமாறு இருத்தல் வேண்டும். "கைதிகள் சீருடை அணிந்திருத்தல், ஒரு அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டிருத்தல், கையில் ஆயுதங்களை வைத்திருத்தல் என்பனவாம்". ஆனால் ஆப்கன் போரில் ஈடுபட்டுள்ள எந்த பகுதியினரும் தலிபானாக இருந்தாலும் சரி வடக்கு கூட்டணியினராக இருந்தலும் சரி, சிறைபிடிக்கப்பட்டால், மிகச்சில போர்வீரர்களே மேற்கூறியவாறு போர்க்கைதிகள் அந்தஸ்துக்கு கருதப்படுவார்கள். சாதாரணமாக வைத்துப் பார்த்தால் போர்க்கைதிகளுக்கான அந்தஸ்து சீருடைகளும் அதிகாரக்கட்டுப்பாடும் முறை சார்ந்ததாக அவர்களிடம் இருக்கவில்லை. இதைப்போன்றே வடக்கு கூட்டணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய அமெரிக்க சிறப்பு படைகளும் இவ்வாறே இருந்தனர். அவர்கள் சீருடை அணியவில்லை. அவர்கள் ஆயுதங்களை பார்வையில் படாமல் வைத்திருந்தனர். கைப்பற்றக்கூடிய சிறப்புப் படைகள் தலிபான் சிறைப்பிடிப்பில் முடிந்திருந்தால், ஆற்றும் பாத்திரம் தலைகீழாக இருந்திருக்கும், அமெரிக்க அரசு அவர்களுக்கு போர்க் கைதிகள் அந்தஸ்து அளிக்கக் கோரி உரத்த கோரிக்கை எழுப்பியிருக்கும். உண்மை என்னவென்றால், தலிபான் கைதிகள் குவாண்டானமோவிற்கு அமெரிக்க அரசால் அழைத்து செல்லப்பட்டனர், அமெரிக்க அரசிற்கு சக்தி இருந்ததன் காரணமாக. சட்டபூர்வமாக பார்க்கப்போனால் கைதிகள் "பயங்கரவாதிகள்" என்பதைவிட, துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டவர்களாகவே கருதப்படவேண்டும். அமெரிக்க அரசு பிணைக்கைதிகளை நடத்துவதில் சர்வதேச சட்டத்தை மீண்டும் ஒருமுறை மீறியுள்ளது Vienna Convention on Consular Access- ä பின்படுத்தவில்லை. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது. இதன்படி மற்ற வெளிநாட்டு அரசு பிரதிநிதிகளுக்கு அமெரிக்கா தெரியப்படுத்தவேண்டும். அந்த நாட்டு குடிமக்களை அமெரிக்க அரசு காவலில் வைத்திருந்தால் மேற்படி தெரியப்படுத்தவேண்டும். இவ்வாறு குவாண்டானமோவுக்கு வந்த முதல் அணியில் வந்த ஒரே ஒரு பிணைக் கைதியான பிரிட்டிஷ் குடிமகன் விஷயத்தில் மட்டும் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்துக்கு தெரியப்படுத்தியது. பல அமெரிக்க மாநிலங்கள் வியன்னா உடன்படிக்கையை பின்பற்றுவதில்லை. பிறநாட்டு குடிமக்கள் காவலில் வைக்கப்படும்போது அந்நாடுகளுக்குத் தெரியப்படுத்துவதில்லை. தங்களது அரசுப் பிரதிநிதிகளை சந்திக்காமலேயே பல அயல்நாட்டு குடிமக்கள் அமெரிக்க மாநிலங்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க உச்ச நீதிமன்றமும் இத்தகைய செயல்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. புஷ், டெக்சாஸ் மாநில கவர்னராக இருந்தபோது அவரது மாநில அரசு வியன்னா ஒப்பந்தத்தை மீறியுள்ளது. இது அமெரிக்க நாட்டுக்குத்தான் பொருந்தும்; மாநில அரசுகளுக்கு பொருந்தாது என விபரீதமான சட்ட வாதத்தை அவர் முன் வைத்தார். மேலும் வியன்னா ஒப்பந்தத்தில் டெக்சாஸ் மாநிலம் கையெழுத்திடவில்லை என வாதாடினார். மனித உரிமைகளும் செய்தி ஊடகமும் அகில உலக மனித உரிமை இயக்கங்கள் தலிபான் மற்றும் அல்கொய்தா கைதிகளுக்கு எதிராக இருக்கும் அமெரிக்க கொள்கையை வெளிப்படையாகவே விமர்சித்து வந்துள்ளன. ஆனால் அவர்களின் எதிர்ப்புக்கள் சத்தமின்றி அமுக்கப்பட்டது இவற்றுக்கு அமெரிக்க செய்தி ஊடகத்தால் குறைந்த அளவே விளம்பரமும் கொடுக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமைக் கழகம் காந்தஹார் விமான நிலையத்திலும் விமானப் பயணத்தின் போதும் கைதிகள் நடத்தப்பட்ட விதத்தை குறை கூறி றும்ஸ்பீல்டுக்கு கடிதம் அனுப்பியது. "கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்கு உரியவர்களுக்கு முகமூடி அணிவித்தது கொடுமையாகும்" என்றும் கூறியது. மருத்துவ காரணங்கள் தவிர்ந்த காரணங்களுக்கு மருந்து கொடுக்கப்பட்டதைக் கூட அக்குழு கவனித்தது: பொறுப்பில் வைத்திருப்பதற்காக அவர்களை உணர்ச்சி அற்றவராகச்செய்ய கைதிகளுக்கு மயக்க மருந்து அளித்ததும்கூட சர்வதேச மனித உரிமை விதிமுறைகளை மீறியதாகும் என கூறிற்று. மனித உரிமைக் கண்கானிப்புக் குழுவின் ஜெமி பெல்னர் கம்பி கூண்டுகள் மனிதாபிமான நடத்தைக்கு கருதத்தக்கதல்ல என்றார், அது அவர்கள் உத்தியோக பூர்வமாக போர்க்கைதிகளாகக் கருதப்பட்டாலும் சரி அல்லது அதற்கும் தாழ்ந்த நிலையில் கருதப்பட்டாலும் சரி, கைதிகளுக்கு தேவைப்படுவதாகும். ஐக்கிய அமெரிக்க அரசுகள் 'சட்டவிரோத போரில் ஈடுபடாதவர்கள்' என்ற நிலையின் கீழ் சிறைப்பிடிக்கப்பட்ட அனைவரையும் ஒன்றாய் குவித்தது. அமெரிக்க செய்தி ஊடகமானது, தலிபான் மற்றும் அல்கொய்தா கைதிகளை விமானத்தில் அழைத்துச் சென்றதையும் சிறைப்படுத்தியதையும் செய்தி உள்ளடங்கப்படுத்துவதற்கு முன்னர் எதிர்பார்த்திரா அளவில் கொண்ட பத்திரிகை கட்டுப்பாட்டுடன் அமைதியாய் ஒத்துப்போனது. பத்திரிகைகளிலும் பெண்டகன் செய்தி ஊடக குழாத்தின் உறுப்பினர்கள் தற்காலிகமாக விமானம் இறங்கப் பயன்படும் திட்டிலிருந்து 400 கஜத்திற்கு அப்பாலிருந்த ஒரு மலையுச்சியிலிருந்து குவாண்டானமோ-வில் சிறைக்கைதிகள் விமானத்தில் வந்து இறங்கியதை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். நிழற்பட, வீடியோ சாதனங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஜெனிவா விதிமுறைகளை திரித்துக் கூறும் வகையில் பெண்டகன் பத்திரிகை நிறுவனங்கள் காந்தஹார் விமான நிலையத்தில் முகமூடியிட்டு கைதிகள் ஏற்றப்பட்ட புகைப்படங்களை தொலைக்காட்சியில் காட்டவேண்டாம் என்று ஆனையிட்டன. இந்த புகைப்படங்கள் சர்வதேச சட்டத்தின்படி கைதிகளின் கெளரவத்தை பாதிக்கக்கூடும் என்று கூறின. மேற்கூறிய ஆணைக்கு அனைத்து அமெரிக்க செய்தி நிறுவனங்களும் உடன்பட்டன. றும்ஸ்பெல்ட் இந்த தணிக்கை கட்டுப்பாட்டை நியாயப்படுத்தினார். "நீங்கள் கைதிகளை படம் எடுக்கக்கூடாது. அது அவர்களைப் பொறுத்த மட்டில் தர்ம சங்கடமாக இருக்கும். ஜெனிவா உடன்படிக்கையின்படி மேலும் அவர்களை பேட்டி காண முடியாது" என்றார். இது நடவடிக்கைகளுக்கு அப்பாலான சிடுமூஞ்சித்தனமான நடவடிக்கை, ஜெனிவா உடன்படிக்கை சிறைக்கைதிகளை எதிரிகளான பொது மக்களின் பார்வையில் நிற்க வைக்காமல் அவர்களை திட்டுவதற்கு வாய்ப்பில்லாமல் இருக்க செய்ய கட்டுப்பாடுகளை விதிப்பதால், தணிக்கைச் சுவர்களின் பின்னால் தங்களின் சொந்த இழிவுபடுத்தலைச் செய்வதற்கு அவர்களை கைதிகளாக வைத்திருப்பதற்கு அரசாங்கத்தை அனுமதிக்கவில்லை. அமெரிக்கப் பத்திரிகை ஆசிரியர்கள் கழகம் றும்ஸ் பீல்டை நிழற்படங்களை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டது, அது பெண்டகனுக்கு அனுப்பிய கடிதத்தில், "இந்த நிழற்படங்களை நசுக்குவதற்கு என்ன காரணங்கள் கூறப்பட்டாலும் பிரச்சினை கைதிகளை கையாள்வதைப் பொறுத்ததே அன்றி செய்தி உள்ளடக்கல் அல்ல" என்றது. அமெரிக்கப் பத்திரிகைகள் தலிபான் மற்றும் அல்கொய்தா கைதிகளை மிருகத்தனமாக நடத்தியது குறித்து அமெரிக்க அரசு கூறிய காரணத்தை விமர்சிக்கவில்லை. மஜார்-இ-ஷெரிப்பிலும் பாகிஸ்தானிலும் முன்னர் நடந்த கிளர்ச்சி எழுச்சிகள், இந்த கைதிகள் தற்கொலை செய்து கொண்டும் கூட வன்முறை எதிர்ப்பைக் காட்டுவதில் வெறிபிடித்தவராக தீர்மானகரமானவர்களாக இருக்கின்றனர் என்பதைக் காட்டுகின்றன என்பதே காரணம். இதற்கு நேர்மாறாக, மஜார்-இ-ஷெரிப்பில் அமெரிக்க சிஐஏ மற்றும் விசேஷ படையினர்
கைதிகளை குறுக்கு விசாரணை செய்ததால் கிளர்ச்சி ஏற்பட்டது. அமெரிக்கன் மற்றும் வடக்கு கூட்டணி படை வீரர்கள் கைதிகளை
கொன்றுவிடுவார்கள் என்று அவர்கள் பயந்தனர். மஜார்-இ-ஷெரிப்பில் 800 கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பல
நூற்றுக்கணக்கான கைதிகள் சுடப்பட்டும், அடித்துக்கொல்லப்பட்டும் மற்றும் ஆப்கானிஸ்தானில் வழக்கமாக சிறைகளாக
பயன்படுத்தப்படும் காற்றில்லாத லாரி கண்டயினர்களில் இறக்கும்படி விடப்பட்டனர். |