World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்குIsraeli protestors speak out against Sharon's war இஸ்ரேலிய எதிர்ப்புஆர்ப்பாட்டக்காரர்கள் ஷரோனின் யுத்தத்திற்கு எதிராக பலமாக குரலெழுப்புகின்றனர்By Lena Sokoll ஏப்ரல் 6 ம் திகதி சனிக்கிழமை அன்று டெல் அவிவில் நடைபெற்ற யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கிட்டதட்ட 15 ஆயிரம் இஸ்ரேலியர்கள் கலந்துகொண்டனர். ஆர்பாட்டமானது மாலை 7.30 மணிக்கு தொடங்கியதுடன், இது பல அமைதிவாத மற்றும் யூத அடிப்படைவாதத்திற்கு எதிரான அமைப்புகளால் நடாத்தப்பட்டதுடன், டெல் அவிவின் மத்திய பகுதியான Yitzak Rabin Square இருந்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சகம் வரை சென்றது. ''இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் இருந்து வெளியேற வேண்டும், குடியேற்றத்தை காலிசெய்ய வேண்டும் மற்றும் ஒரு உறுதியான அமைதி உடன்பாட்டினை நோக்கி பேச்சுவார்த்தைக்கு திரும்பும்வரை இஸ்ரேல் மற்றும் பாலஸ்த்தீனத்திற்கு இடையிலான எல்லையொன்றினை நிறுவ வேண்டும்'' என அமைதிக் கூட்டு வலியுறுத்தியது என என்ற Peace Now அமைப்பின் இயக்குனரான Moria Shlomot கூறினார். எல்லா வயது மக்களும் இதில் கலந்துகொண்டபோதும் பெரும்பான்மையினர் 20-35 வயதுடைய இளைஞர்களாக இருந்தனர். ''ஆக்கிரமிப்பினை முடி --பிராந்தியங்களில் இருந்து வெளியேறு'', ''ஷரோனின் யுத்தத்தை நிறுத்து'', ''படுகொலையை நிறுத்து'', பாலஸ்தீனத்தை விடுதலை செய்'', ''ஷரோன் ஒரு யுத்தக் குற்றவாளி'', ''புஷ் அமெரிக்கா யுத்தத்தில் ஒரு பங்காளி'', ''இஸ்ரேலிய பாதுகாப்பு படை ஒரு பயங்கரவாத இயக்கம்'' போன்ற பதாகைகளை அவர்கள் தாங்கி சென்றனர். இந்த பத்திரிக்கையாளர் ஆர்ப்பாட்டத்தின் போது எந்தவொரு இஸ்ரேலிய கொடிகளையும் பார்க்கவில்லை. இது ஒரு வழமையற்ற ஒன்றாக இருந்தது. இவ் அமைதிக் கூட்டானது Peace Now, தாராளவாத Meretz கட்சி மற்றும் பல தொழில் கட்சி 'அமைதித் தூதர்கள்'', Kibbutz Ha'artzi இயக்கம் மற்றும் ஏனையவர்களால் உருவாக்கப்பட்டதே. அது தன்னை தேசபக்த மற்றும் யூத அடிப்படைவாதம் என்பனவற்றிற்கு ஆதரவானது என தெளிவாக வரையறுத்துக்கொள்கிறது. Peace Now தாம் இஸ்ரேல் கொடியினை கொண்டு செல்வது முக்கியமானது, இல்லையெனில் அது ''குடியேற்றக்காரர்களினதும் மற்றும் தீவிர வலதுசாரிகளினதும் சொத்தாக வந்துவிடலாம்'' என முதல் நிகழ்வில் விவாதித்தது. மேலும் Peace Now உம் Meretz உம் யூத அடிப்படைவாதத்திற்கு ஆதரவை காட்டுவதற்காக ஊர்வலத்தின் இறுதியில் தேசியகீதமான "Hatikva" பாடவேண்டும் எனவும் தெரிவித்தன. பேச்சாளர் மேடையும் தேசியகொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. யுத்தத்திற்கான எதிர்ப்பாளர்களின் அழுத்தம் காரணமாக, ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் சேவை செய்ய மறுத்து இராணுவ உத்தியோகஸ்தர்களால் எழுதப்பட்ட கடிதத்திற்கு முதலில் கையெழுத்திட்டவர்களில் முதல் நபர் இவ்ஆர்ப்பாட்டத்தில் பிரதிபலிக்கவேண்டியிருந்தது. அவர் யூத அடிப்படைவாதத்திற்கு எதிரானவராகவும் மற்றும் மேற்கு கரை மற்றும் காஸாவின் நிலைமை பற்றி விவாதிக்க ஆர்வமுடையவராக இருந்தார். அமைதி இயக்கத்தின் பல தலைவர்கள் பேட்டி கொடுப்பதை- குறிப்பாக வெளிநாட்டு பத்திரிக்கைகளுக்கு-- இன்னும் ஒரு நேரடி துரோகமாகவும் கருதிக்கொண்டிருக்கையில் மற்றும் refusenik அதிரடிப்படை மத்தியில் பத்திரிகையிடம் பேசுவது கூட அனுமதிக்கப்படாது இருக்கும்போது, தனது உண்மையான பெயரை உபயோகபடுத்தக் கூடாது என்ற நிபந்தனையின் கீழ் அவர் பேட்டி கொடுக்க சம்மதித்தார். ஆனால் அவரை பின்னர் சந்தித்தபோது refusenik இயக்கத்தின் எழுதப்படாத சட்டங்களுக்கு அடிபணிந்து பேட்டியளிக்க மறுத்துவிட்டார். பல எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களது பார்வையை வெளிப்படையாக தெரிவிப்பதில் ஆர்வம் உடையவர்களாக இருந்தார்கள்: ஒரு தாதியாக பணியாற்றும் 27 வயதாகும் மாயா, உலக சோசலிச வலைத்தளத்திடம் குறிப்பிட்டதாவது : ''யுத்தத்திற்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக எதிர்ப்பு தெரிவிக்க நான் இதில் கலந்துகொண்டுள்ளேன். அமைதியை அடைவதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தை மட்டுமே என நான் கருதுகிறேன். எப்படி அமைதி கிடைக்கப்போகிறது என்பது எனக்குத் தெரியாது ஆனால் இந்த யுத்தத்திற்கு முடிவு இருக்கிறது மற்றும் இந்த பாதை ஒருபோதும் அமைதிக்கு இட்டுச் செல்லாது என்பது உண்மையில் எனக்குத் தெரியும். இஸ்ரேலிய படை பிராந்தியங்களில் இருந்து வெளியேற வேண்டும் அத்துடன் இஸ்ரேல் குடியேற்றத்தினை நிறுத்தவேண்டும். எனது நண்பர்களும் சகோதரர்களும் இராணுவத்தில் இருக்கிறார்கள். அவர்கள் யாரையும் கொல்வதையோ அல்லது யாரும் அவர்களால் கொல்லப்படுவதையோ நான் விரும்பவில்லை. அவர்கள் அவசியமில்லாமல் இறப்பதில் எனக்கு விருப்பமில்லை. இந்த கொடூர யுத்தத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதும் இதில் கலந்துகொள்வதும் எனது கடமையாக நான் கருதுகிறேன்.'' ''கொலைகள் மற்றும் ஆக்கிரமிப்பின் முடிவினைக் கோருவதற்கு நான் இதில் கலந்துகொண்டுள்ளேன். நான் சொல்வதற்கு பல விடயங்கள் இருக்கின்றன ஆனால் எல்லாவற்றுக்கும் மேல் இந்த இடத்தில் கொலைகளையும் ஆக்கிரமிப்பினையும் நான் எதிர்க்கிறேன். அத்துடன் அரசாங்கத்தினை மாற்றுவதற்கு நாம் போராட வேண்டும். நாம் அதைச் செய்வதும் சாத்தியமாகலாம். அரசின் தலைமைப் பதவியில் ஷரோன் நீண்ட நாட்களாக இருந்துவருகிறார். அவரது அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இது இறுதி நேரமாகும். ஷரோன் ஆட்சியில் இருக்கும்வரை நிட்சயமாக நாம் அமைதியை அடைய முடியாது. அத்துடன் தற்போது நடைபெற்றுவரும் கொலைகளை நாம் நிறுத்தியாகவேண்டும். அதன் பின்னர் தான் நாம் பாலஸ்த்தீனயர்களுடன் அமைதியாக வாழமுடியும். ''எம்மை மாதிரி இன்னும் பல மக்கள் நம்புகிறார்கள் ஆனால் இதுவரை அவர்கள் தமது எதிர்ப்பை தெரிவிக்கவும் மற்றும் தெருவுக்கும் போகவில்லை. நாம் தேர்தல் வரை காத்திருக்க முடியாது. ஷரோனின் அரசியலுடன் உடன்படாதவர்களை தட்டி எழுப்புவதற்கும், அரசினை மாற்றுவதற்கும் மற்றும் யுத்தமானது பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழியென இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் நம்பவில்லை என்பதை உலகிற்கு காட்டுவதற்கும் எமது எதிர்ப்பு இன்று அவசியமாக இருக்கிறது. ''ஷரோனின் அரசியலுக்கு தொழில் கட்சியை மற்றும் (வெளிநாட்டு செயலாளர் சிமொன்) பெரஸ் ஆதரவளிப்பது கவலையளிப்பதாக இருக்கிறது. இது கவலையானது ஆனால் இனியும் தொழில் கட்சியாக இருக்க முடியாது. தம்மை தொழில் கட்சியாக இன்னும் அழைத்துக்கொள்கிறார்கள் ஆனால் உண்மையில் அவர்கள் அப்படியிருக்கவில்லை. இந்த அரசியலுடன் உடன்படாத தொழிற் கட்சி அங்கத்தவர்கள் பலர் இருப்பதுடன், தமது கட்சி அரசாங்கத்தினை விட்டு வெளியேற வேண்டும் என அவர்கள் விரும்புவதையும் நான் அறிவேன், ஆனால் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஷரோனின் அரசாங்கத்தில் இருக்கவே விரும்புகிறார்கள். ''அமைதியை அடைவதற்கு நாம் ஆக்கிரமிப்பினை நிறுத்தவேண்டும். அதுதான் ஒரே தீர்வாகும். ஆக்கிரமிப்பின் முடிவு, தற்கொலைக் குண்டுகளின் முடிவாக இருக்கும். ஒரு யூத அரசினுள் யூத மக்களுக்கு இருக்கும் சமமான சுதந்திரம் மற்றும் உரிமை பாலஸ்த்தீனியர்களுக்கு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை என்பதால் நாட்டினை பிரித்து ஒரு பாலஸ்த்தீன அரசினை உருவாக்கவேண்டும் எனவும் நான் கருதுகிறேன்'' என 25 வயது மாணவரான மாறம் கூறினார். ''அமைதி இல்லாவிட்டால் கூட இஸ்ரேலிய பாதுகாப்பு படை ஆக்கிரமிப்பினை முடிவுக்கு கொண்டுவருவதுடன், பிராந்தியங்களில் இருந்து வெளியேறவேண்டும், ஆக்கிரமிப்பு கொடூரமானதாக இருக்கிறது. இப்போது ஒரு அமைதி உடன்படிக்கையை செய்துகொள்ளவதின் சந்தர்ப்பத்தையிட்டு எனக்கு நம்பிக்கையில்லை ஆனால் ஆக்கிரமிப்பானது எந்த வகையிலும் தவறானது ஆகையால் எனது முதலாவது கோரிக்கை இராணுவத்தை வெளியே எடு என்பதுதான். ''ஷரோன் எதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் என்பதை நான் தெளிவாக தெரிந்திருக்கின்றேன் என நினைக்கின்றேன். அதாவது இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பாலஸ்தீனத்திற்கான ஒரு பொம்மை அரசாங்கத்தைத்தான் அவர் விரும்புகிறார். ''இது இந்த குறிப்பிட்ட தலைமையின் செயலாக மட்டும் இது இருக்கவில்லை, இதுதான் இஸ்ரேலினுள் இருக்கும் அரசியல் கட்டுமானமாக இருக்கிறது. இஸ்ரேலினுள் இருக்கும் சமூக அந்தஸ்த்தினை உடைப்பதற்கு சாத்தியமாக இருக்கும் மற்றும் உண்மையான ஒரு அமைதி உடன்படிக்கையை நடைமுறைக்கிடுவதற்கான ஒரு அரசியல் கட்சியையோ அல்லது ஒரு தலைமையையோ நான் பார்க்கவில்லை. இந்த இயக்கம் மட்டும்தான ஒரு லேசான நம்பிக்கையாக இருக்கிறது.'' என 38 வயதாகும் பல்கலைக்கழக பேரசிரியையான Lydia குறிப்பிட்டார். ''இஸ்ரேலின் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக நான் இங்கே ஆர்ப்பாட்டம் செய்கிறேன். இஸ்ரேல் தற்போது யுத்தத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது. ஷரோன் அரசாங்கம் அமைதியை நிலைநாட்டக் கூடியதாகவோ அல்லது ஒரு அமைதி உடன்படிக்கையில் கைச்சாத்திடும் என நான் பார்க்கவில்லை. ''ஜெனின் அகதிமுகாமில் நடைபெற்ற படுகொலையில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளதாக நான் இன்று கேள்விப்பட்டேன். தற்போது ஷரோன் அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தம் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது ஏனெனில் கட்டளையிடும் தலைமை அதிகாரி குறுகிய காலத்திற்குள் அவரது திட்டத்தை முடிக்க விரும்புகிறார், அதனால் அவருக்கு விரும்பியபடி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எந்த மருத்துவ வசதிகளும் முகாம்களில் இருக்கவில்லை. இது ஏற்கனவே ஒரு அழிவை உண்டாக்கியிருப்பதுடன், இது மோசமாகிக்கொண்டுள்ளது. ''இஸ்ரேல் மக்கள் இப்போது விழித்துக்கொண்டுள்ளார்கள் என நான் எதிர்பார்க்கிறேன். இஸ்ரேலிய வரலாற்றில் அவர்கள் பல தடவை பார்த்ததை மீண்டும் இந்த யுத்தத்தின் விளைவுகளை பார்த்துக்கொண்டுள்ளதுடன், யுத்தம் என்றால் என்னவாக இருக்கும் என்பதும் அவர்களுக்கு தெரியும். இந்த யுத்தத்தை முடிவுக்கு கொணரும் படி மக்கள் மத்தியில் இருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் உருவாகும் என்பதை மட்டும் நான் எதிர்பார்க்கிறேன். ''இந்த பிராந்தியத்தின் அனைத்து மக்களும் ஒன்றாக வாழும் ஒரு அரசை உருவாக்குவதே எனது தனிப்பட்ட விருப்பம், இருந்தும் அப்படி ஒரு அரசை உருவாக்க -50 வருடமாக இருக்கலாம்- நீண்ட காலம் பிடிக்கலாம். இதுவரை பாலஸ்த்தீன அரசை உருவாக்குதைத்தவிர வேறு பாதை எதுவும் கிடையாது என நான் கருதுகிறேன். பாலஸ்தீனிய மக்களுக்கு சுதந்திரம் தேவை. மனித வரலாற்றில் தமது சொந்த சுதந்திரத்திற்காக போராடும் மக்களை யாராலும் தோற்கடித்துவிட முடியாதிருந்தது. ஷரோனும் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் உயர் தளபதியும் இதை விளங்கிக்கொள்ளவில்லை. இஸ்ரேல் ஒரு முட்டாள்தனமான தலைமையை கொண்டிருக்கிறது. ''இல்லை, உண்மையில் அவர்கள் முட்டாள்கள் இல்லை மாறாக பயங்கரவாதிகள். இந்த நாட்டின் தலைமை பயங்கரவாதிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அவர்கள் சாதரண மக்களை சுட்டுக்கொன்று கொண்டிருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக நடந்துள்ளனர். அமைதி ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக அவர்கள் பலாத்காரத்தினை உபயோகப்படுத்தியுள்ளனர். இஸ்ரேல் சமூகத்தில் பாசிச மூலங்களை நீங்கள் ஏற்கனவே பார்த்துள்ளீர்கள் மற்றும் அவர்கள் வளர்ச்சியடைந்துகொண்டிருக்கிறார்கள் மற்றும் இது நடுக்கத்திற்குரியதாக இருக்கிறது என நான் கருதுகிறேன். ஆனால் யாரும் எம்மை நிறுத்த முடியாது. யாரும் எம்மை அமைதிப்படுத்த முடியாது. நாம் எதிர்ப்போம், எதிர்ப்போம் இங்கே அமைதி ஸ்தாபிக்கப்படும் வரை நாம் எதிர்ப்போம்.'' என மாணவரான 29 வயதாகும் Regeb கூறினார். ''இஸ்ரேல் அரசாங்கம்போன்று அனைத்து முக்கிய கட்சிகளும் மிக கடுமையான பிரச்சனையை குறைப்பதற்கு உடனடியாக அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதை சொல்ல வேண்டும். இராணுவம் அவர்களது நகரங்களையும் முற்றுகையிட்டும் வீடுகளுக்குள் முன்னேறிக்கொண்டிருப்பதும் தான் பாலஸ்தீனியர்களின் கடுமையான பிரச்சனை என்றால், இது நிறுத்தப்பட வேண்டும். நகரங்களில் இருந்து இராணுவத்தை வெளியே எடு, அதை இஸ்ரேலுக்கு கொண்டுவா. இது ஒரு தெளிவான விடயமாக இருக்கிறது'' என 58 வயதாகும் கணினி ஆய்வாளாரான டானியல் கருத்து தெரிவித்தார். ''மத்திய கிழக்கில் ஒரு அமைதியான இருப்பும், ஒரு அமைதியான வருங்காலமும் நீண்ட வருடங்களுக்கு முன்னர் இங்கே பார்த்தது போலான ஒரு பகுதியாக இருக்கிறது. அதை ஞாபகப்படுத்துவதற்கு எங்களில் பலர் மிக இளமையாக இருக்கிறார்கள். அராபியர்கள் யூதத் தெருக்களில் செல்வதும் அதேபோல் யூதர்கள் அராபியர்களின் கடைகளில் சாமான்கள் வாங்குவதும் வழமையான ஒன்றாக அன்று இருந்தன. ஒவ்வொருவரும் மாறி மாறி தங்களின் கதவுகளை தட்டிக்கொண்டு பக்கம் பக்கமாக வாழ்ந்துவந்துடன், நண்பர்களை உருவாக்கிகொண்டும் ஒன்றாக சினிமாவுக்கும் சென்று வந்தனர். இவை அனைத்தும் மீண்டும் நடைபெறும். அவையனைத்தும் மீண்டும் அதேபோல் இருக்கும். ''ஒரு மதசார்பற்ற அரசை கொண்டிருப்பது ஒரு சந்தோசமான விடயமாகும். அப்படியொரு நாட்டின் ஒரு குடிமகனாக இருப்பேனானால் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைவேன். அதை ஸ்தாபிப்பது மிக இலகுவானதா என்பது எனக்குத் தெரியாது. குறைந்த பட்சம் முதலில் அனைத்து சமூகமும் தனது சொந்த அமைப்பின் ஊடாகவும், ஒரு சுதந்திரமான மற்றும் நட்புடனான அமைதியான உறவு மற்றும் கூட்டுளைப்புடன் தன்னை சுயமாக ஒழுங்குபடுத்துமானால் இலகுவாக இருக்கும் போல் தெரிகிறது. நாம் ஒன்றாக எப்படி வாழவேண்டும் என்பது பற்றி பின்னர் தீர்மானிக்கலாம். ''இது இணைந்த ஒரு அராப் யூத அரசாக இருந்த போது இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமான Haifa இல் நான் பிறந்தேன். அந்த நகரத்தில் ஒவ்வொருதரும் அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்த போது நான் பிறந்தேன். 1948 இல் நெருக்கடி தொடங்கிவிட்டிருந்தது. நகரம் நீண்டகாலத்திற்கு ஐக்கியப்பட்டு இருக்கமுடியாததாக வந்துவிட்டதுடன், அராபியர்கள் வெளியேறினார்கள். மறுக்கப்பட்ட ஒரு ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்குள் இடம்பெற்றதுடன், அது மறுக்கப்பட்டபோது அனேகமாக அரபு மக்கள் வெளியேறினார்கள். அன்றில் இருந்து அது ஒரு இலகுவான விடயமாக இருக்கவில்லை. ''இப்போது எனக்கு 58 வயதாகிறது. இங்கு வழமையாக இருந்துவந்த அமைதியான விடயத்தை
நான் எனது ஓய்வு நேரத்தில் மீள ஸ்தாபிக்க முயல்கிறேன். அன்றிருந்த அமைதியான நிலைமை கட்டாயம் மீண்டும் திரும்ப
வரும்''. |