Chronology of a pogrom: How Sharon, US prepared assault on Palestinians
இனப் படுகொலையின் நிகழ்ச்சிப் பட்டியல்: ஷரோனும் அமெரிக்காவும்
பாலஸ்தீனியர்கள் மேல் எப்படித் தாக்குதலைத் தயார் செய்தனர்
By the Editorial Board
4 April 2002
Back to screen version
இஸ்ரேலிய துருப்புக்கள் மேற்குக்கரை முழுவதும் ரமல்லா, ஜெனின், பெத்லஹேம்,
துல்க்காம், கால்க்கிலா, சல்பீத் என பாலஸ்தீனிய நகரங்கள் மீது ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து விசிறி அடித்துக்
கொண்டு, நூற்றுக் கணக்கானோரைக் காயப்படுத்தியும் கொன்று குவித்துக் கொண்டும், ஆயிரக் கணக்கானோரைக் கைது
செய்தும் அடித்தும் சென்றனர். இந்தத் தாக்குதல்கள் சமீபத்திய தொடரான தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு உடனடி
எதிர்வினை அல்ல என்று இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அரசாங்கமும் மற்றும் அமெரிக்க செய்தி ஊடகமும் கூறுவதற்கு
மாறாக, ஷரோன் அரசாங்கத்தின் நீண்டகால மூலோபாயத் திட்டமிடலால் நடைமுறைப்படுத்தப்பட்டதனாலேயே நிகழ்ந்ததாகும்.
தற்கொலைத் தாக்குதல்களின் துன்பகரமான அதிகரிப்பு- அப்பாவி இஸ்ரேலிய குடிமக்கள்,
பாலஸ்தீனிய இளைஞர்களின் மிகவும் சுயதியாகம் கொண்ட பகுதிகள் இவை இரண்டினதும் உயிரிழப்பில் துயரம்- 1993ல் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய
ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னர் முழுக்கால அளவிலும் இல்லை என்றாலும், ஷரோன் அரசாங்கத்தைப் பொறுத்தவரை
பல ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்துள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நிகழ்ச்சி இதுவாகும்.
ஜோர்ஜ் டபிள்யு. புஷ் எண்ணெய் வளமிக்க மத்திய ஆசியாவில் அமெரிக்க இராணுவ ஆற்றலை
முதன்மைப்படுத்துவதற்காகவும் ஈராக்கிற்கு எதிரான புதிய யுத்தத்தைத் தயாரிக்கவும் ஒரு சாக்காக செப்டம்பர் 11 பயங்கரவாதத்
தாக்குதலைப் பற்றிக் கொண்டு, மேற்குக் கரையில் இஸ்ரேலிய ஆட்சியை மீண்டும் திணிக்கவும் பாலஸ்தீனிய நிர்வாகத்தின்
உள்கட்டமைப்பை நிர்மூலமாக்கவும் ஹைபா மற்றும் நெதன்யாவில் குண்டு வீச்சுக்களைப் பயன்படுத்தினார்.
செவ்வாய் கிழமை அன்று செய்தியாளர் விளக்க கூட்டத்தில் இஸ்ரேலிய இராணுவ கொமாண்டர்
ஷாகுல் மொபாஸ் ஷெரோனுக்கு மேலாக நின்று, பாலஸ்தீனிய நிர்வாகத்தையும் அதன் தலைவர் யாசிர் அரபாத்தையும்
தகர்க்க "இப்பொழுதுதான் நமக்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது" என்று கூறினார். அதற்கு ஷரோன் "எனக்குத் தெரியும்"
"கவனமாக இரு" என்று பதிலளித்தார்.
இஸ்ரேலிய படைகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தங்களின் தாக்குதலுக்கான
நோக்கம் என்று அறிவிக்கப்பட்டதுடன் நேரடியாக மோதுகிறது. ஒரே நேரத்தில் ஷரோன் அரபாத்தை பயங்கரவாதத்தை
ஒடுக்கத் தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டினார், அதேவேளை அந்தப் பணிக்காகத் தேவைப்படுகின்ற அதிகாரத்தின் கருவிகளை
உடைத்து நசுக்கிக் கொண்டிருந்தார். மின்சாரம், நீர் அல்லது வெளி உலகுடன் நேரடித் தொடர்பு எதுவும் இல்லாத
அவரது தலைமையகத்தில் அரபாத் சிக்கிக் கொண்டது, அவர்களுக்கு விடப்பட்டிருந்த ஒடுக்கு முறைக்கு எதிரான ஒரே
எதிர்ப்பையும் பயன்படுத்தப்படுவதிலிருந்து அவர்களைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஷரோன் மற்றும் புஷ் ஆகியோரின் கூற்றுக்கள் எடுத்த எடுப்பிலேயே அபத்தமானவையாக
இருக்கின்றன. செப்டம்பர் 2000 க்குப் பின்னர் வெடித்திருக்கும் மோதலில், 400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதை ஒப்பு
நோக்குகையில் 1,100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இருந்தும் மூன்று மடங்கு ஆண்களை, பெண்களை
மற்றும் குழந்தைகளை இழந்த பகுதியை ஆக்கிரமிப்பாளராக்க காட்டுவது அமெரிக்க மனநிலையாக இருக்கிறது,
அதேவேளை மொத்தமாகக் கொலை செய்யும்- மற்றும் டாங்கிகள், ஜெட் விமானங்கள், ஏவுகணைகள் போன்ற அனைத்தும்
அமெரிக்காவால் அளிக்கப்பட்டு அவற்றில் ஏகபோகமாக இருக்கும் பகுதி- "தற் பாதுகாப்புக்கு" செயல்படுவதாகக்
காட்டப்படுகிறது.
அமெரிக்க அரசு செயலாளர் கொலின் பாவெல் இஸ்ரேலிய நடவடிக்கைகள் பயங்கரவாதத்தைக்
குறைக்காது, அதனை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று ஒப்புக் கொண்டார். "எத்தனை கிராமங்களூடாக எத்தனை
டாங்கிகள் செல்கின்றன என்பது பொருட்டல்ல, இந்த நிகழ்ச்சிப் போக்கின் முடிவில் நீங்கள் இன்னும் தற்கொலை
குண்டுகளைக் கொண்டிருப்பீர்கள்", என்றார். "இறுதியில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள்... ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து
வாபஸ் வாங்க வேண்டி இருக்கும்.... அரசியல் நிகழ்வுப் போக்குகளுக்காக நாம் மீண்டும் சரியாக வரவேண்டி
இருக்கும்."
இஸ்ரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஷரோன் மற்றும் அவரது அரசியல்
போட்டியாளரும் முன்னாள் பிரதமருமான பெஞ்சமின் நெதன்யாகு இவர்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் அதிவலதுசாரி
சக்திகளின் அரசியல் ஒளியில் மட்டுமே புரிந்து கொள்ளப்பட முடியும். அவை பாலஸ்தீனிய அரசை நிறுவுதலுக்குப் பிடிவாதமான
எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைக்கான ஒத்தூதும் அதன் பாத்திரத்தின்
வரிசையில் நின்று அமெரிக்க செய்தி ஊடகம் மேற்குக் கரையில் இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் பற்றிய
அதன் விளக்கத்தில் அரசியல் பின்புலம் அல்லது வரலாறு எதனையும் புறக்கணிக்கிறது.
இஸ்ரேலிய வலதுசாரியின் நீண்டகால நோக்கம், பாலஸ்தீனிய தேசிய இயக்கத்தின் சமூக
மற்றும் அரசியல் கட்டமைப்பை படிப்படியாக அழிப்பதன் மூலம் பாலஸ்தீனிய அரசை நிறுவுதல் அரசியல் ரீதியாக சாத்தியமற்றது
என்பதை முன்னிலைப்படுத்துவதாக இருந்து வந்திருக்கிறது. அவர்களது வழிமுறை அரசியல் சூழலை மாற்ற இராணுவப் படைகளைப்
பயன்படுத்துவதன் மூலம் " புதிய உண்மைகளைத் தயாரித்தல்" ஆகும்.
ஷெரோனும் நெதன்யாகும் 1993 ஒஸ்லோ உடன்பாட்டை எதிர்த்தனர் மற்றும் அவர்களின்
விட்டுக் கொடுக்காத நிலையின் அரசியல் ஆதரவாளர், பாசிச எண்ணமுடைய மாணவன் அரபாத்துடனும் பி.எல்.ஓவுடனும்
உடன்பாட்டில் கையெழுத்திட்ட இட்சாக் ராபின் படுகொலையை 1995ல் மேற்கொண்டார்.
நெதன்யாகு அந்தப் படுகொலையில் அரசியல் இலாபம் பெற்றவராக, அடுத்து வந்த
ஆண்டில் அதிகாரத்துக்கு வந்தார் . ஷெரோனுடன் அமைத்த அவரது அரசாங்கத்தில் ஷெரோன் வீடு மற்றும் அபிவிருத்தித்
துறை அமைச்சராக, மேற்குக் கரையில் யூதக் குடியேற்றங்களை தீவிரமாய் ஊக்கம் கொடுத்து ஆதரித்தார். அது ஒஸ்லோ
நிகழ்ச்சிப்போக்கு தன்னில் குற்றச்சாட்டாகவும் இருக்கிறது- மற்றும் அரபாத்தின் சொந்தக் கொள்கையின் திவாலாகவும்
இருக்கிறது- உடன்பாடு ஏற்படுவதற்கு முன்நிகழ்வாய் அமைந்த 26 ஆண்டுகள் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருந்ததை விட
எட்டு ஆண்டுகளில் மேற்குக் கரைக்கு அதிகமான யூதக் குடியேற்றக்காரர்கள் வந்தனர்.
பாலஸ்தீனிய நிர்வாகத்தின் தோல்வியின் தவிர்க்க முடியாததன் விளைவே அலை அலையான தற்கொலை
குண்டு வெடிப்புக்களாகும். இந்த ஆட்சியானது குடியேற்றங்களின் விரிவாக்கத்தை சக்தி மிக்க வகையில் தடுக்கவும் முடியவில்லை
பாலஸ்தீனிய நிலத்தைக் கைப்பற்றவும் முடியவில்லை, அல்லது இஸ்ரேலால் பலமாகக் கட்டுப்படுத்தப்படும் எல்லைப் பகுதிகளின்
பொருளாதார சமூக வாழ்க்கையை முன்னேற்றவும் இல்லை.
சான்றுகள் காட்டுகிறவாறு, இஸ்ரேலுக்குள்ளும் சர்வதேச ரீதியாகவும் பொதுமக்களின்
கருத்தைக் குழப்பவும் ஆத்திரமூட்டவும் அரபாத் ஆட்சி மீது ஒருபோதும் முடிவுறாத கோரிக்கைகளுக்கான பொருத்தமான
அடிப்படையை வழங்குவதற்கு ஷெரோன் அரசாங்கமானது இந்த ஆற்றொணா நடவடிக்கைகளை வேண்டுமென்றே தூண்டிவிட்டு
வருகிறது. இந்த நிகழ்ச்சிப்போக்கு இப்போது 72 வயதுடைய பாலஸ்தீனிய தலைவரை பூதமாகப் பெருக்கிக்
காட்டுவதுடன் மற்றும் அவரை வெளியேற்ற அல்லது கொல்ல வெளிப்படையான விவாதத்துடன் முன்னனிக்கு வந்துள்ளது.
ஷரோன் மற்றும் புஷ் ஆகியோரிடமிருந்து வரும் கோரிக்கைகள் சியோனிச ஆட்சியின்
கட்டளையின் பேரில் பாலஸ்தீனிய மக்களைக் கண்காணிக்கும் ஐந்தாம்படை அரசு வடிவத்தில் அமைப்பதைத் தவிர்த்த பாலஸ்தீனிய
அரசு சாத்தியமற்றது என்று அர்த்தப்படுத்துகிறது. அரபாத்துக்குப் பின்னர் வருபவர் எவரும் இஸ்ரேலிய மொசாத்தின் நேரடி
முகவர் இல்லை எனில், கைப்பொம்மை ஆக இருப்பர் என உறுதிப்படுத்த விரும்புகின்றனர்.
கணக்கிடப்பட்ட ஆத்திரமூட்டல்கள்
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் மேற்குக் கரை மீளஆக்கிரமிப்புச் செய்யப்பட்டது அரபாத்திற்கும்
அப்போதைய பிரதமர் எகுட் பராக்கிற்கும் இடையில் அமெரிக்கா தரகராக இருந்து செய்த கேம்ப்-டேவிட் பேச்சுவார்த்தைகளின்
தோல்விக்குப் பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளாக திறந்துவிடப்பட்டு வருகின்ற வன்முறை மற்றும் ஆத்திரமூட்டல் பிரச்சாரத்தின்
உச்ச கட்டமாகும். பேச்சுவார்த்தைகள் 2000 ஜூலையில் பொறிந்ததுடன், அதேமாதத்தில் பராக் தனது பாராளுமன்றப்
பெரும்பான்மையை இழந்தார், இது அவரது அரசாங்கத்தின் முடிவின் தொடக்கமாக இருந்தது.
செப்டம்பர் 2000ல் பாலஸ்தீனிய இண்டிபதா எழுச்சியின் தொடக்கத்திலிருந்து தற்போது
வரையிலான காலகட்டம் முழுவதும் மூன்று காரணிகள் தொடர்ச்சியாக எதிரெதிர் செயல் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன:
இஸ்ரேலிய இராணுவத்தாலும் பாசிச சக்திகளாலும் ஆத்திரமூட்டப்படல், ஒடுக்குமுறைக்கு எதிரான பாலஸ்தீனியர் எழுச்சி
மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் செல்வாக்கு.
28 செப்டம்பர் 2000- ஏரியல் ஷரோன் டஜன் கணக்கில் நன்கு ஆயுதம் தரித்த மெய்க்
காவலர்களுடன் மலைக் கோவிலுக்கு இகழார்ந்த விஜயம் செய்தார் மற்றும் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய படைகளால்
பாதுகாக்கப்பட்டார். அப்போது ஷரோன் அரசாங்கத்திற்கு வெளியில் இருந்தாலும், லிக்குட் கட்சியின் தலைவரான இவர்
சட்டப்படி எவ்வாறாயினும் மெய் நடப்பில் சியோனிச அரசின் பிரதிநிதியாக நடத்தப்பட்டார். இந்த ஆத்திரமூட்டலுக்குப்
பதிலாக மேற்குக் கரையிலும் காசாவிலும் கலவரங்கள் வெடித்த போது பாராக் ஷரோனுடன் தனது ஐக்கியத்தைத் தெரிவித்ததுடன்,
எதிர்ப்புக்களை நசுக்காததற்காக அரபாத்தைக் கண்டித்தார், அடுத்த 18 மாதங்களுக்கான பாணியை வகுத்துக் கொடுத்தார்.
பாலஸ்தீனிய அரசின் சம்பிரதாயபூர்வ அறிவிப்பை மீண்டும் தாமதப்படுத்துவதற்கான அரபாத்தின்
முடிவால் பாலஸ்தீனிய தேசிய உணர்வுகள் பற்றி எரியத் தொடங்கி இருந்த பொழுது, ஷரோன் தனது உச்சக்கட்ட சீர்குலைக்கும்
பாதிப்பை ஏற்படுத்த கவனமாகத் திட்டமிட்டு தனது நகர்வைச் செய்தார். லிக்குட் தலைவர் தனக்கு எதிரான அமெரிக்கத்
தலையீடு நடைபெறாதவாறு கணக்குப் போடவும் செய்தார், நடைபெற்றுக் கொண்டிருந்த ஜனாதிபதி தேர்தலை எடுத்துக்
கொண்டால், அப்போது வாக்கெடுப்பில் முன்னனியில் இருந்த குடியரசுக்கட்சி வேட்பாளர், இஸ்ரேலிய- பாலஸ்தீனியர்
மோதலில் அதிகமான தலையீட்டிற்காக நிர்வாகத்தை விமர்சித்தது.
மலைக் கோவில் விஜய நேரமானது, பாலஸ்தீனிய நிர்வாகம், பாராக் மற்றும் கிளிண்டன்
நிர்வாகம் இவற்றுக்கிடையே பின்புறம் நடந்த பேச்சுக்களை சீர்குலைப்பதற்கான தேவையால் தீர்மானிக்கப்பட்டது.
கேம்ப் டேவிட் தோல்விக்குப் பின்னர் அது புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இஸ்ரேல் சார்புநிலையில் ஆர்வம் கொண்ட
நியூயோர்க் டைம்ஸில் அடுத்து வந்த அறிக்கையின்படி, இரகசியப் பேச்சானது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைச்
செய்தது. செப்டம்பர்27 அன்று கிளிண்டன் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோரை வாஷிங்டனுக்கு
வருமாறு அழைத்தார். ஷரோன் இந்த நடவடிக்கைகளை இஸ்ரேலிய இராணுவம் மற்றும் உளவுத் துறையில் உள்ள தமது
தொடர்புகள் மூலம் நிச்சயம் அறிந்திருப்பார். அடுத்த நாளே மலைக் கோவிலுக்கான அவரது விஜயம் கலவரத்தை ஏற்படுத்தியது,
அதற்கு கொடூரமாய் போலீஸ்-இராணுவ ஒடுக்கு முறையால் பதிலிறுக்கப்பட்டது. இண்டிபதா ஆரம்பமாகி இருந்ததுடன் அமெரிக்கா
இடைநின்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் வரைக்கும் புதுப்பிக்கப்படவில்லை, கிளிண்டன் நொண்டி வாத்தானார்
மற்றும் பாராக் நிலை சிறிது பரவாயில்லை.
அதிகாரத்தில் ஷரோன்
பிப்ரவரி 6, 2001 - அவரது பதவிக்காலம் முடிவதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னர்
பாராக்கால் அழைப்புவிடப்பட்ட பிரதமருக்கான சிறப்புத் தேர்தலில் ஷரோன் எளிதாக வென்று, பல வலதுசாரி அரசியல்
கட்சிகள் மற்றும் தொழிற்கட்சியின் பிரதான பகுதியுடன் சேர்ந்து, ஷிமோன் பெரஸ் வெளியுறவுத் துறை அமைச்சராகவும்
ஆனது உட்பட, லிக்குட் கூட்டு எனும் கூட்டரசாங்கத்தை நிறுவினார். கேம்ப் டேவிட் பேச்சுக்கள் தோல்வி அடைந்தது
மற்றும் மேற்குக்கரை மற்றும் காசாப் பகுதியில், நான்கு மாதங்களுக்குப் பின்னர், இறப்பு எண்ணிக்கை நூற்றுக் கணக்கில்
அதிகரித்த பாலஸ்தீனிய கிளர்ச்சி எழுச்சியின் பின்னர், ஷரோனின் வெற்றி, "இடது" என்று அழைக்கப்படுவது பொறிந்து
போய்விட்டதாக இஸ்ரேலில் வலதுசாரி உணர்வு அந்த அளவுக்கு அதிகம் வளர்ந்தது எனப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.
1982ல் லெபனான் ஆக்கிரமிப்பின் பொழுது பாலஸ்தீனிய அகதிகளைப் படுகொலை செய்ததன்மூலம் மத்திய கிழக்கு முழுதும்
இனங்காணப்பட்ட முன்னாள் படைத்தளபதி, மேற்குக் கரையில் நிலத்தைக் கைப்பற்றி சியோனிச குடியேற்றத்தை முன்னெடுப்பதற்கு
ஆதரவளித்த முன்னணி நபர், ஆட்சி அதிகாரத்துக்கு வருதல், இஸ்ரேலிய ஆட்சி பாலஸ்தீனியர்களுக்கு எதிராக மிகவும் கொடூரமான
வழிமுறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான தெளிவான அடையாளமாக இருந்தது.
20 மார்ச் 2001 - ஷரோன் வெள்ளை மாளிகையில் புஷ்சை சந்தித்தார், அமெரிக்காவுக்கு
இஸ்ரேலின் பயனுள்ள தன்மையை அவர் அங்கு வலியுறுத்தினார் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுதற்கான
அவரது விருப்பத்தையும் ஈராக் மற்றும் ஈரானுக்கு எதிரான கடும் நிலையை ஆதரித்தும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளிக்கும்
விதமாக புஷ் தான் "அமைதியை நிர்ப்பந்திக்க முயற்சிக்க" போவதில்லை என்று அறிவித்தார், அதேவேளை வெள்ளை
மாளிகைப் பேச்சாளர், "நாங்கள் இஸ்ரேலுடன் சிறப்பான உறவைக் கொண்டிருக்கிறோம்" என்றார். இந்த உறவின்
தன்மையானது மேற்குக் கரையிலும் காசாவிலும் ஐக்கிய நாடுகளது கண்காணிப்பு படையை அனுப்புவதைத் தடை செய்வதில்
புஷ் நிர்வாகம் இஸ்ரேலுடன் பக்கசார்பு எடுத்ததிலும் பாலஸ்தீனிய இலக்குகளைத் தாக்க அமெரிக்கா அளித்த ஜெட் விமானங்களைப்
பயன்படுத்துதற்கு இஸ்ரேலுக்கு அனுமதி வழங்கியதிலும் விரைவில் எடுத்துக் காட்டப்பட்டது. புஷ் தாமே அமைதிப் பேச்சுவார்த்தை
புதுப்பிக்கப்படுவது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான அனைத்து பாலஸ்தீனிய எதிர்ப்பையும் அரபாத் தடுத்து நிறுத்துவதையே
சார்ந்திருக்கிறது என்று அறிவித்தார். மூன்று வரங்களுக்குப் பின்னர், காசா பாலைவனப் பகுதியிலுள்ள கான் யூனூஸ் அகதி
முகாம் மீதான ஏப்பிரல் 13 ஆக்கிரமிப்பில், இண்டிபதாவுக்கு எதிரான முதலாவது பிரதான தரைவழித் தாக்குதலில் அது
வந்தது.
12 ஜூலை 2001- டெல் அவிவ் நடன விடுதியில் (discotheque)
தற்கொலை குண்டுத் தாக்குதல் போன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலாக மேற்குக் கரையில் ஆக்கிரமிப்புக்கு அழைப்பு
விடுக்கும் "நியாயப்படுத்தப்பட்ட பழிவாங்கல்" எனும் இஸ்ரேலிய இராணுவத் திட்டத்தின் நிர்வாக ரீதியான விவரத்தை ஒரு
பிரிட்டிஷ் வெளிவிவகாரத்துறைப் பத்திரிக்கை வெளியிட்டது. இத்தாக்குதலானது அடுத்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு
மேற்கொள்ளப்படும். அது ஒரு மாதம் நீடிக்கும், அது ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காயப்படல் மற்றும் கொல்லப்படலை
விளைவிக்கும், மற்றும் முடிவில் 40,000 பாலஸ்தீனிய இராணுவத்தினர் மற்றும் போலீஸ்காரர்களை நிராயுதபாணி
ஆக்கலுடன் முடியும், உண்மையில் பாலஸ்தீனிய நிர்வாகத்தின் முழு சாதனத்தையும் நிராயுதபாணி ஆக்கலுடன் முடிவுறும். பத்திரிக்கை
செய்திகளின் படி, தேவையான சாக்கினை உறதிப்படுத்துவதற்கான பிரதான வழிமுறை, பாலஸ்தீனிய தலைவர்களை
படிமுறை ரீதியாகப் படுகொலை செய்தலாகும், அது ஏற்கனவே முந்தையதின் வீழ்ச்சியை ஆரம்பித்து விட்டிருந்தது. நிகழ்வுகளின்
செய்ததைச் செய்தல் பாணி பின்வருமாறு இருந்தது: இஸ்ரேலிய படுகொலை, தற்கொலை குண்டுத் தாக்குதல், இஸ்ரேலிய
இராணுவ எதிர்வினையாகும். இதுதான் இஸ்ரேலிய அரசின் நீண்ட கால கொள்கையின் தொடர்ச்சி ஆகும். அது பாலஸ்தீனிய
தேசிய இயக்கத்தை அதன் தலைவர்களைக் சீர்குலைப்பதன் மூலம், கிட்டத்தட்ட அரபாத் தவிர்ந்த ஒவ்வொரு முக்கிய
பி.எல்.ஓ தலைவர்களையும் கொல்லுதல் ஆகும்.
படுகொலைக் கொள்கை உறுதிப்படுத்தப்பட்டது
1 ஆகஸ்டு 2001 - இஸ்ரேலிய யுத்த
அமைச்சரவை படிமுறை ரீதியில் பாலஸ்தீனியத் தலைவர்களை இலக்கு வைக்கும் கொள்கையை மீள உறுதிப்படுத்தியது. அடுத்த
நாள் இஸ்ரேலிய ஏவுகணைகள் நாபுலஸில் ஹமாஸ் எனப்படும் இஸ்லாமிய போராளி இயக்கத்தினால் பயன்படுத்தப்படும்
கட்டிடத்தைத் தாக்கி அழித்தன. கொல்லப்பட்ட எட்டு பேர்களில் இருவர் சிறுவர்கள் இருவர் ஹமாசின் உயர் அரசியல்
தலைவர்கள் ஆவர். இப்படுகொலைகள் இண்டிபதாவின் மிகப்பெரும் அரசியல் எதிர்ப்பினைத் தூண்டி விட்டது.
100,000க்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதுடன் அதன் மத்தியில் பழிக்குப் பழி வாங்குவதற்கான
கூக்குரல்கள் எழுந்தன. இப்படுகொலையானது அதிக பாலஸ்தீனிய பயங்கரவாதத் தாக்குதலை மட்டும் தூண்டிவிடவில்லை,
அது மோதலில் ஒரு தீர்வைத் திணிப்பதை இலக்காகக் கொண்ட ராஜிய செயல்பாடுகளின் புதிய சுற்று ஒன்றுக்கு ஏவுகனையாக
சேவை செய்தது. ஜூலை 21-22 ஜெனோவாவில் ஜி-8 உச்சி மாநாட்டில், மேற்குக் கரையிலும் காசாவிலும் இஸ்ரேலிய
இராணுவத்தையும் பாலஸ்தீனியர்களையும் தனியாகப் பிரிப்பதில் சர்வதேச மேற்பார்வையாளர்களை நிறுத்துவதற்கான தீர்மானத்தை,
அமெரிக்காவிடமிருந்து தயக்கமான ஒப்புதலுடன், ஐரோப்பிய அரசுகள் தீர்மானம் வழியாக கொண்டு வந்தனர். ஷரோன்
அரசாங்கத்தின் ஆணவத்துடனான, படுகொலையை ஒரு அரச கொள்கையாக பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளல் சக்தி மிக்க
வகையில் ஐரோப்பிய முன்முயற்சியைத் தடுத்துவிட்டது. அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஆறு நாட்கள் கழித்து, இஸ்ரேலிய
பாதுகாப்புப் படை எந்தவிதக் "கட்டுப்பாட்டையும்" கைவிட்டு விட்டதாகவும் முதலாவது தாக்குதல் வருகிறதா
என்றில்லாமல் பாலஸ்தீனியர்கள் மீது இராணுவத்தினர் வெளிப்படையாக சுடுவதற்கு அனுமதித்தது. ஷரோன் "சுறுசுறுப்பான
தற்காப்பு" என்ற ஆர்வெல்லிய பட்டம் பற்றிய கொள்கையை வழங்கினார்.
ஆகஸ்டு 28, 2001 - பாலஸ்தீன விடுதலை மக்கள் முன்னணியின்
(PFLP) தலைவர் அபு அலி முஸ்தபா மேற்குக் கரை நகரமான ரமல்லாவில்
இஸ்ரேலிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். பி.எல்.ஓவின் ஐந்து உயர் அலுவலர்களுள் முஸ்தபா உயர் வரிசையில்
வைத்து எண்ணப்படுபவர், அரபு தலைவர்களைக் கொல்லல் எனும் இஸ்ரேலியக் கொள்கையின் கீழ் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
அரசியல் எதிராளிகளை இஸ்ரேல் படுகொலை செய்யும் கொள்கைக்கு அமெரிக்க உதவி ஜனாதிபதி ரிச்சார்ட் செனி பகிரங்கமாகவும்
பேணவும் செய்த சில நாட்கள் கழித்து இந்தப் படுகொலை நிகழ்ந்தது. உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் பயங்கரவாதத்
தாக்குதலுக்கு நான்கு நாட்கள் முன்னர்- செப்டம்பர் 7ல் வெளியிடப்பட்ட கட்டுரையில், àôè சோசலிச
வலைத் தளம், படுகொலைக் கொள்கை "பாலஸ்தீனிய தேசிய இயக்கத்தின் அரசியல் உள்கட்டமைப்பை" அழிப்பதை
இலக்காகக் கொண்டது எனக் கூறி இருந்தது.. கட்டுரை பின்வருமாறு முடிந்தது. "அத்தகைய வழிமுறைகள் மூலம் பாலஸ்தீனிய
நிலங்கள் மீதான அதன் ஆக்கிரமிப்புக்கு எதிராக அரசியல் ரீதியாக அமைப்பு ரீதியாக வழி நடத்தப்படும் எந்த
போராட்டமும் சாத்தியமில்லை என்பதற்கு இஸ்ரேல் ஆதரவு நாடுவதாக இருந்தது......... இஸ்ரேலிய நிர்வாகத்திடமிருந்து
வரும் பதில் தெளிவானது: இஸ்ரேலிய அரசை அங்கீகரிக்கப்படுவதை உத்திரவாதப்படுத்தாத ஒருவரும் உயிரோடு பிழைத்திருக்கமாட்டார்கள்
என்பதாகும்."
செப்டம்பர் 11 தாக்குதலின் பாதிப்பு
21 செப்டம்பர் 2001- இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன நிர்வாகத்துக்கும் இடையில் அமெரிக்காவால்
சண்டை நிறுத்தம் ஒன்று திணிக்கப்பட்டது. உலக வர்த்தக மையத்தின் மீதான செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப்
பிறகு அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கொள்கைகளில் தற்காலிக விலகிச்செல்லல் ஏற்பட்டது. இஸ்ரேலிய அதிகாரிகள் அரபாத்தை,
ஒசாமா பின் லேடனுக்குச் சமமாக ஒப்பிட்டுக் கண்டித்தனர் மற்றும் ஷரோன் வெளிப்படையான யுத்தத்துக்கு நகர்ந்தது
சரியாக புஷ் நிர்வாகத்தால் மட்டுமே தடுத்து நிறுத்தப்பட இருந்தது. அது நடைபெற இருந்த ஆப்கானிஸ்தான் மீதான
அமெரிக்கத் தாக்குதலுக்கு அரபு அரசுகளின் ஆதரவை உறுதிப்படுத்துவதற்கு விருப்புக் கொண்டிருந்தது. இஸ்ரேலிய இராணுவ
உயர் அதிகாரி அரபாத்தைக் கொல்ல சதி செய்ததாகக் குற்றம் சாட்டிய தொழிற்கட்சித் தலைவர் ஷிமோன் பெரஸ்
பக்கம் சார்ந்து இருந்த அமெரிக்காவின் படி, அந்த நிகழ்வில் இன்னும் தீவிர தேசியவாதிகள் அல்லது இஸ்லாமியவாதிகள்
பாலஸ்தீனிய ஜனாதிபதியை பதிலீடு செய்வர் என எச்சரித்தது. அக்டோபர் 4 அன்று ஐக்கிய நாடுகள் அவையில் உரையாற்றுவதற்காக
நியூயோர்க்கிற்கு பயணம் செய்ய இருந்தார். அங்கு சுதந்திர பாலஸ்தீனம் நிறுவுதல் பற்றிய நிகழ்வுக்காக அவர் அங்கு
அழைக்கப்பட்டிருந்தார். அவ்வாறு செய்வதற்கிருந்த முதாலாவது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார். ஷெரோன் அரபாத்தை
ஹிட்லருடன் ஒப்பிட்டு வசைமாரி பொழிந்தார் மற்றும் அமெரிக்காவையும் புஷ்ஷையும் மியூனிச் பாணி "அமைதிப்படுத்தல்"
என்று குற்றம் சாட்டினார். ஷெரோன் மன்னிப்புக் கேட்குமாறும் மேற்குக் கரையில் இராணுவ நடவடிக்கைகளைக்
கட்டுப்படுத்துமாறும் நிர்பந்திக்கப்பட்டார். இராணுவத் தளபதி ஷால் மொபாஸ் இம்முடிவை பகிரங்கமாகக் கண்டனம் செய்தார்.
அத்தோடு ஷெரோனின் கூட்டரசாங்கத்திடமிருந்து அதிவலதுசாரி சியோனிசக் கட்சிகள் இரண்டு தமது ஆதரவைப் பின்னுக்கு
இழுத்துக் கொண்டன.
19 அக்டோபர் 2001- பி.எப்.எல்.பி தலைவர் அபு அலி முஸ்தபா
படுகொலைக்குப் பதிலடியாக சுற்றுலாத்துறை அமைச்சர் ரெகாவாம் ஜெவி ஜெருசலேத்தில் அவரது விடுதி அறையில் வைத்து
துப்பாக்கி ஏந்திய பாலஸ்தீனிய நபரால் படுகொலை செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது. ஜெவி அண்மையில்தான்
ஷரோன் அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பியதையும் அதனைக் கவிழ்க்க முயற்சித்ததையும் எடுத்துக் கொண்டால், அரசியல்
அரங்கிலிருந்து அவரது திடீர் அப்புறப்படுத்தம் ஒரே கல்லில் இரு பறவைகளைக் கொல்வதற்கு சேவை செய்தது- இன்னும்
இராணுவ ஆக்கிரமிப்புக்கான சாக்கை வழங்குதல், அதேவேளை அரசாங்கப்பக்கம் இருந்த முள்ளை அகற்றல் ஆகியன. ஜெவியின்
தேசிய ஒற்றுமைக் கட்சி, அது மேற்குக் கரையிலும் காசா பகுதியிலும் இருந்து முப்பது இலட்சம் பாலஸ்தீனியரை வெளியேற்ற
பகிரங்கமாக அழைப்பு விடுத்த பின்னர், ராஜீய அடிப்படையில் அதுவும் கூட தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகியது. ஜெவி
படுகொலைக்குப் பொறுப்பான அனைவரையும் கைதுசெய்ய அரபாத் ஆணையிடவேண்டும் என்ற கோரிக்கை ஷெரோன் எப்போதும்
முதற்கொண்டு பாலஸ்தீனிய நிர்வாகத்தின் மீது வைக்கும் பிரதான கோரிக்கையாக இருந்து வந்திருக்கிறது.
டிசம்பர் 5, 2001- இஸ்ரேலிய அமைச்சரவை பாலஸ்தீனிய நிர்வாகத்தை
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் தன்மையால் "அதன்படி அது கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்" என்று
சம்பிரதாயப்பூர்வமாக வரையறுத்தது. அமைச்சரவை அறிக்கையும் கூட தான்ஜிம் ஆயுதம் தரித்த
படைக்குழுவையும் அரபாத்தின் பாதுகாப்பு பிரிவான சிறப்புப் படை 17ஐயும் பயங்கரவாத இயக்கங்களாக
அறிவித்தது. தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் முன்னர் தொழில் அமைச்சர் வெளிநடப்புச் செய்தார்.
வெளிவிவகார அமைச்சர் ஷிமோன் பெரஸ் அரசாங்கம் "பாலஸ்த்தீனிய நிர்வாகத்தை அழிக்க'' முயற்சிக்கிறது
என்று குற்றம் சாட்டினார். இந்த நடவடிக்கைக்கான சாக்குப்போக்காக ஹமாசின் உயர் தலைவரான
மஹ்மூது அபு ஹனூத் படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடி என ஹமாஸால் கூறப்பட்ட தொடரான தற்கொலை
குண்டு வெடிப்புக்கள் இருந்தன. உண்மையான காரணம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க யுத்ததின்
ஆரம்ப இராணுவ வெற்றியாகும். மத்திய கிழக்கில் உள்ள அரபு ஆட்சிகள் குண்டுத் தாக்குதல்களுக்கு
தளமாக இனியும் தேவைப்படாத பின்னர், மற்றும் தலிபான் ஆட்சியின் விதியால் இந்த ஆட்சிகள் அச்சுறுத்தப்பட்டுள்ளன
என்பது மெய்யென ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் பாலஸ்தீனியருக்கு எதிராக இன்னும் வெளிப்படையாக நகர்தல்
சாத்தியம் என இப்போது உண்ர்ந்தன. நாட்டிற்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில், ஷரோன் திரும்பத் திரும்ப பாலஸ்தீனியருடனான
இஸ்ரேலின் மோதலை மற்றும்"பயங்கரவாத்தின் மீதான யுத்தம்" என்று ஒப்பிட்டார். ஒரு நாள் கழித்து புஷ் நிர்வாகம்
புனித இட நிறுவனம் (Holy Land Foundation)
மற்றும் மேற்குக் கரையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் மற்றைய அறநிறுவனங்களின் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கு
அதன் ஆதரவை சைகைகாட்டியது.
முடிவு அல்லது எல்லை இல்லா யுத்தம்
13 டிசம்பர் 2001- இனியும் அரபாத்துடன் தான் பேச்சுவார்த்தை நடத்த அல்லது
அவரை அங்கீகரிக்கப் போவதில்லை என ஷெரோன் பகிரங்கமாக அறிவித்தார். 1993 ஒஸ்லோ உடன்பாட்டினையும் பாலஸ்தீனியர்களுடன்
பேச்சுவார்த்தை மூலம் சாதித்தல் எனும் முன்னோக்கையும் சம்பிரதாயப் பூர்வமாக மறுப்பதாக இருந்தது. மீண்டும் ஒரு
தற்கொலை குண்டுத் தாக்குதல், முந்தைய நாள் ஒரு பேருந்து (பஸ்) மீதான குண்டுத் தாக்குதலில்10 இஸ்ரேலியர்களைக்
கொன்றது, ஒஸ்லோ உடன்படிக்கை கையெழுத்திட்ட நாள்முதல் திரும்பத் திரும்ப ஷெரோன் ஆதரித்து வரும் நடவடிக்கைகைகான
சாக்குப் போக்காக இது ஆனது. ஷெரோன் அவரது பாதுகாப்பு அமைச்சரவையில் "நமது கண்ணோட்டத்திலிருந்து அரபாத்
இனி இல்லாத காலம்" எனக் கூறினார். அரபாத் பலமான முறையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதுடன் அவர் மேற்குக்கரை
நகரமான ரமல்லாவிலுள்ள அவரது தலைமையக வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. மூன்று வாரங்கள்
கழித்து 3 ஜனவரி 2002 அன்று இஸ்ரேல் ஈரானிலிருந்து பாலஸ்தீனிய நிர்வாகத்திற்கு கப்பலில் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும்
கப்பலை கைப்பற்றியதாக அறிவித்தது. அது உண்மையாயின் அங்கு கணிசமான அளவு சந்தேகம் உள்ளது. கரைன்-ஏ -ல்
உள்ள ஆயுதங்களை ஒவ்வொரு வருடமும் இஸ்ரேலுக்கு அமெரிக்காவால் வழங்கப்படும் உயர் தொழில் நுட்ப இராணுவ சாதனங்களுடன்
இதனை அரிதாகத்தான் ஒப்பிடமுடியும்.
22 ஜனவரி 2002- இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் கவச வண்டிகள் ரமல்லாவில்
உள்ள அரபாத்தின் தலைமையகத்தை சுற்றி வளைத்தன. இது இந்த ஆண்டில் தொடராக ஆக்கிரமிக்கப்பட்ட
நகரில் மிகப் பெரிய பாலஸ்தீனிய நகரம் ஆகும். இஸ்ரேலியப் படைகள் பாலஸ்தீனத்தின்
குரல் என்ற வானொலி நிலையத்திற்குள் நுழைந்தனர். அங்கு வெடிபொருளைப் பயன்படுத்தி அதனைத்
தகர்த்தனர். கால்குய்ல்யா, ஜெனின், மற்றும் நாபுலஸ் உட்படல மற்றைய மேற்குக்கரை நகரங்கள் முற்றுகையின் கீழ்
வைக்கப்பட்டன மற்றும் துல்க்காரெம்மில் உள்ள பாலஸ்தீனிய அரசாங்கத்தின் கட்டிடங்களை ஜெட் விமானங்கள் தாக்கின.
இதற்கான உத்தியோக ரீதியான சாக்குப் போக்கு ஹதேராவில் யூதர் பருவத்திற்கு வந்த விழா ஒன்றில் ஆறு பேர்களைக்
கொன்ற பயங்கரவாதத் தாக்குதல் இருந்தது. இதனைத் தொடர்ந்து அரபாத்தின் பத்தா கட்சியுடனான தொடர்புடைய
அல் அக்சா பிரிகேட் என்ற படைக்குழுவின் தலைவர் ராயெட் அல் கார்மி படுகொலை செய்யப்பட்டார். ஷெரோன்
அரசாங்கம் தான் இப்படுகொலையைச் செய்யவில்லை என்று கூறியது ஆனால் நியூயோர்க் டைம்ஸ் "இஸ்ரேல்
இம்மரணத்தில் பங்காற்றி இருந்தது என்பதை உறுதிப்படுத்திய" உயர் அரசியல் அதிகாரியை மேற்கோள்காட்டிக் கூறியது.
5 பிப்ரவரி 2002- இஸ்ரேலிய பத்திரிக்கை மாரிவ்வுக்கு
ஷரோன் கூறுகையில், "லெபனானில் அரபாத்தை அழிக்்கக் கூடாது என்று உடன்பாடு இருந்து...
கொள்கை அளவில், அவரை நாம் அழிக்காமைக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்" என்றார். 1982ல் ஒரு
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சராக, ஷரோன் லெபனான் மீதான ஆக்கிரமிப்பையும் பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தை
அந்நாட்டிலிருந்து வெளியேற்றலையும் செய்தார். இப்பேட்டி மேற்குக் கரையிலிருந்து ஜெருசலேத்தை மூடிவிடுவதற்கான இஸ்ரேலிய
அரசாங்கம் அறிவித்த திட்டத்துடன் பொருந்துகிறது. கண்கானிப்புக் கோபுரங்களை அமைத்தல், மின்னனுவியல் கமராக்கள்,
பதுங்கு குழிகள், மேலும் இராணுவ சோதனைச்சாவடிகளை அமைத்தல் ஆகியன ஒரு அமைச்சர் அழைத்தவாறு சுற்றி உள்ள
"அரபுகள் செறிந்து வாழ்தலில்" இருந்து நகரை தடைவேலியிடலாக இருந்தது. ஷெரோனின் படுகொலை பற்றிய வெளிப்படையான
பேச்சு, புஷ் ஜனவரி 29 அன்று நாட்டிற்கு ஆற்றிய உரைக்கு எதிர் வினையாக வந்தது. அதில் அவர் "தீய அச்சுக்களை"
கண்டனம் செய்தார் மற்றும் மத்தியகிழக்கில் ஈவிரக்கமற்ற வகையில் அமெரிக்கா யுத்த்த்தை நோக்கி நகர்கிறது என்று தெளிவாகக்
கூறினார்.
8 மார்ச் 2002- இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனிய நகரங்களை மற்றும் அகதி
முகாம்களை சோதனை செய்வதில், கடந்த 17 மாதங்களாக நடைபெற்று வரும் வன்முறையில் இது மோசமான
ஒன்றாகும். இதில் 40 பேர்கள் அளவில் கொல்லப்பட்டனர். காயம்பட்ட மற்றும் இறந்து கொண்டிருந்தவர்களின் மருத்துவ
வண்டிகள் உதவிக்கு வரமுடியாதபடி டாங்கிகள் தடுத்தன. இஸ்ரேலிய பாதுகாப்புப்படை அகதி முகாம்களில் கிட்டத்தட்ட
தொடர்ந்து உள் நுழைந்து தாக்கியதில் ஒருவாரத்தில் மட்டும் 108 பாலஸ்தீனியர்களும் 36 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
இம்மோதல் அதிகரிப்பு அரபுகள் இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கு மாற்றாக இஸ்ரேலியர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப்புறங்களில்
இருந்து வெளியேற வேண்டும் என்று ஒரு முன்மொழிவை சவுதி அரேபியா வெளியிட்டதற்கான ஷெரோனின் எதிர்வினையாக
இருந்தது. பாலஸ்தீனிய தலைமை மீது தொடர்ந்து இராணுவ ரீதியில் அழுத்தத்தை" பிரயோகிக்கும் கொள்கையை
ஷெரோன் அறிவித்து "பாலஸ்தீனிய நிர்வாகம் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடாது ஏனெனில் அவர்கள் பயங்கரவாதிகளாக
இருக்கின்றனர், அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மட்டுமே தாம் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.... " என்பதை
வலியுறுத்தினார்.
28 மார்ச் 2002- இஸ்ரேலிய இராணுவம் ரமல்லாவை ஆக்கிரமித்து
அரபாத்தின் தலைமையகத்தை சுற்றி வளைத்தது. அடுத்தடுத்த நாட்களில் முடிவில்லாதவாறு அல்லது
வரையறை இல்லாதவாறு அதிகப்படியான மேற்குக்கரை நகரங்கள் இராணுவ நடவடிக்கைக்கு ஆளாயின,
ஆக்கிரமிப்பின் முதல் வாரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,
டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
ஷரோன் அரபாத் மேற்குக் கரையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் நாடு கடத்தப்பட வேண்டும்
என்றார். வலதுசாரி பத்திரிக்கை மற்றும் க்னெசெட்டில் உள்ள வலதுசாரி அரசியல்வாதிகளிடமிருந்து
மிகக் கடுமையான நடவடிக்கைகளுக்கான அழைப்புக்கள் வந்தன: தற்கொலைக் குண்டு
வெடிப்பாளர்களின் அனைத்து உறவினர்களையும் வெளியேற்றல்; எதிர்ப்பை இரத்தத்தத்தில் மூழ்கடிக்க
லட்சக் கணக்கில் பாலஸத்தீனியரைக் கொல்லல்; பல இலட்சம் பேரையும் மேற்குக் கரையின் முழு
மக்கள்தொகையையும் திருப்பி வெளியே அனுப்பல்; இஸ்ரேலில் உள்ள அரபுகள் மத்தியிலும் யூத
மக்கள் மத்தியிலும் இராணுவ அட்டூழியங்களுக்கு எதிராக அரசியல் ரீதியில் எதிர்க்கும் மற்றும்
அதிருப்தியுறும் நபர்களை ஒடுக்குதல் ஆகியனவாகும்.
|