World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்குIsraeli massacre in the city of Jenin ஜெனின் நகரத்தில் இஸ்ரேலிய படுகொலைஇஸ்ரேலில் இருந்து டேவிட் கொகன்By David Cohen in Israel கீழ்காணும் கட்டுரை ஏப்ரல் 10 இல் பிரசுரிக்கப்பட்டது. இந்தக் கட்டுரையின் பெரும் பகுதி பாலஸ்தீன செய்தி ஊடக மையத்தினால் (PMC- Palestine Media Centre) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பதாக ஒரு வாசகர் எமக்கு தெரிவித்துள்ளார். முதல் இந்தக் கட்டுரை பிரசுரிக்கையில், PMC இடம் இருந்த பெற்றதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை. உலக சோசலிச வலைத் தள கட்டுரையின் ஆசிரியரான டேவிட் கொகனுக்கு PMC இன் அறிக்கை ஒரு மின்னஞ்சல் வடிவத்தில் ஒரு செய்தி குழுவினால் அனுப்பப்பட்டிருந்தது. அது அனுப்பப்பட்டபோது அதில் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை மற்றும் ''தயவு செய்து சாத்தியமெனில் இந்தச் செய்தியை உலகெங்கும் பரப்பவும்'' என்ற ஒரு அழைப்பின் அடிப்படையில் தலையங்கம் இடப்பட்டிருந்தது. இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரத்திற்கு கவனம் செலுத்துவதன் பாகமாக கொகன் அவரது கட்டுரையில் அந்த மின்னஞ்சல் செய்தியை உள்ளடக்கிக்கொண்டார். அத்துடன் டேவிட் கொகனின் உலக சோசலிச வலைத் தள கட்டுரை அதன்பிராகாரம் திருத்தியமைக்கப்பட்டுள்ளதுடன், தவறுதலாக நடைபெற்ற பிழைக்கு பாலஸ்தீன செய்தி மையத்திற்கு எமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம். ஏப்ரல் 9 ம் திகதி செவ்வாய்க் கிழமை ஜெனினில் இருக்கும் அகதிமுகாமில் பாலஸ்தீன அப்பாவி மக்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை டசின் கணக்கில் கொன்று குவித்துள்ளது என இன்று பாலஸ்தீன Red Crescent Society உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய புல்டோசர்கள் குடும்பங்கள் உள்ளே இருக்கத்தக்கவே அகதிமுகாமின் வீட்டின் முன்பகுதியை இடித்து தள்ளியுள்ளதே கண்ணால் கண்ட சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒரு அகதி முகாமின் ஒரு தெருவில் 30 பேர் கொல்லப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது, அத்துடன் மொத்த எண்ணிக்கை நூறுக்கு மேலாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஏனையவர்கள் கவசவாகனங்களின் குண்டுகளால் துண்டு துண்டுகளாக சிதைந்துகொண்டிருந்தபோது, இறந்தவர்களில் பலர் கட்டிடக் சிதைவின் கீழ் சமாதியாகினர். டசின் கணக்கான மக்கள் அவர்களது வீட்டினுள்ளேயும் மற்றும் அதிர்ச்சியைடந்த உறவினர்களின் முன்னாலும் இரத்தம் சிந்தி இறந்துகொண்டிருந்தனர். ஆறு பாலஸ்த்தீனியர்கள் அதிகாலையிலே முகாமுக்குள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன், இனம்காணப்பட்டிருக்கிறது. இறந்தவர்களில் மிகுதிப்பேர் இனம்காணப்பட முடியாமல் இருப்பதுடன், காயப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என உறுதிப்படுத்துவது சாத்தியமற்று இருக்கிறது. அது நூற்றுக்கணக்காக இருக்கலாம் என அச்சம் கொள்ளப்படுகின்றது. அதிகாலையில் இருந்து, மக்கள் வசிக்கும் அகதிமுகாம்கள் இஸ்ரேலிய அபாஷ் ஹெலிகாப்டர்களினதும், கவசவாகனங்களின் பாரிய குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அங்கு 150,000 ஆயிரம் மக்கள் வசிப்பதுடன், ஆகக்கூடியது ஒரு சதுர கிலோமீற்றரைக் கொண்ட இடமாகும். அதனது ஆக்கிரமிப்பின் வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலிய F-16 போர் விமானங்கள் ஜெனின் முகாமின் மீது குண்டுத்தாக்குதல் செய்துள்ளது. இது கூடியபட்ச மக்கள் அழிவினை உருவாக்குதை நோக்மாக கொண்ட திட்டமிட்ட ஒரு தாக்குதலாகும். கடந்த ஒன்றரை வருடமாக பாலஸ்தீனிய இலக்குகளுக்கு எதிராக உபயோகப்படுத்தப்பட்ட அனைத்து தாக்குதலையும் விட கடந்த இரண்டு நாட்களாக இம்முகாம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளின் அதிகமான கவசவாகன குண்டுகள் மற்றும் ஏவுகணைகளின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என உத்தியோகபூர்வ செய்திகள் கணிப்பிடுகின்றன. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை எந்த முதலுதவி வாகனங்களையும் முகாமிற்குள் அனுமதிக்க மறுப்பதுடன் இறந்து உடல்களை எடுப்பதற்கும் தொடர்ந்து மறுத்து வருகிறது. முகாமில் குடியிருப்பவர்கள் கடந்த பெப்ரவரியில் இடம் பெற்ற இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தாக்குதலின் போது அவர்களது உறவினர்களை தகனம் செய்வதற்காக தற்காலிகமாக உருவாக்கி வைத்திருந்த தகனம் செய்யும் இடத்தையும் இரண்டு நாட்களுக்கு முன்னர் புல்டோசர்கள் அழித்துள்ளன. அவர்களது தகனம் செய்யும் இடங்களில் இருந்து உடல்கள் வெளியேற்றப்பட்டிருப்பதுடன், தெருக்களில் தூக்கியெறியப்பட்டுக்கிடந்தன. இஸ்ரேலிய கவசவாகனங்கள் தெருக்களை இடித்து நாசமாக்கியுள்ளதுடன் பல எண்ணிக்கையிலான உடல்களை மருத்துவ குழு எடுக்க முடியாத படி சிதைத்து எறிந்துள்ளன என நேரடிச் சாட்சிய கணக்கெடுப்பு கூட உறுதிப்படுத்துகிறது. ''செல்லடித்தல் இன்னும் நிறுத்தப்படவில்லை. நாம் அனைவரும் வீட்டினுள்ளே தான் அடைபட்டுக்கிடக்கிறோம். தூங்கவோ, நகரவோ அல்லது முகாமின் தெருக்களில் இரத்தம் வடிந்துகொண்டிருப்பவர்கள் உதவி செய்யும்படி கோரியபோதும் உதவி செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். எந்த எச்சரிக்கையையும் அறிவிக்காமல் மற்றும் குடியிருப்பவர்களின் தலைக்கு மேலால் அவர்களது வீடுகளை இஸ்ரேலிய புல்டோசர்கள் இடித்துக்கொண்டிருக்கின்றன. உதவி கேட்டு நாம் மருத்துவ உத்தியோகஸ்த்தர்களுக்கு அழைப்புவிட்டபோது, ஆக்கிரமிப்பு படைகள் தம்மை பலகீனப்படுத்துவதன் பாகமாக ஆம்புலன்ஸ் (மருந்து இயங்கு) வண்டிகளின் சாவிகளை எடுத்துச் சென்றுவிட்டனர் என அவர்கள் எமக்கு கூறினார். உதவிசெய்ய முடியாத எமது கண்களுக்கு முன்னால் இறந்துகொண்டிருக்கும் எமது குழந்தைகளை காப்பாற்றுவதற்கு யாரும் தலையீடு செய்யப்போவதில்லை என்ற வர்ணிக்க முடியாத அவநம்பிக்கை மற்றும் துயரங்களில் ஒன்றாக எமது இன்றைய நிலை இருக்கிறது.'' என Al-Jazeera தொலைக்காட்சியுடனான ஒரு தொலைபேசிப் பேட்டியில் ஒரு அகதி முகாமில் வசிப்பவரான Umm Jihad ஆபத்தான நிலைமையை வர்ணித்தார் என்றுமில்லாத முறையிலான மனித உரிமை மீறலில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் செவ்வாய்க் கிழமை மதியம் போல் தாம் முதியோர்களும் பெண்களும் தண்ணீர் எடுப்பதற்கு அனுமதிப்பதற்காக தாம் யுத்தநிறுத்தத்தை அமுல்படுத்துவதாக அறிவித்தார்கள். இது மனிதகேடயங்களாக அவர்களை பயன்படுத்துவதற்கும், கைதுசெய்வதற்கு மட்டுமேயாகும். பல நாட்களாக தண்ணீர் கிடைக்காததால் முதிய ஆண்களும், ஒரு சில பெண்களும் அவர்களது வீட்டிற்குள் இருந்து வெளியே வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் முகாமின் நுளைவாயிலுக்குள் வந்தபோது, இஸ்ரேலிய கவசவாகனங்கள் மற்றும் அலுவலகர்களும் அங்கே நின்றிருந்தடன், அவர்கள் அனைவரையும் கைதுசெய்தார்கள். அதற்கு சிறிது பின்னர், கைதுசெய்யப்பட்ட மக்கள் உயிருடன் இருக்க வேண்டுமானால் எதிர்க்கும் போராளிகளை சரணடையும் படி ஒலிபெருக்கியின் மூலம் அழைப்புவிட்டார்கள் என அங்கே குடியிருந்த மக்கள் கூறினர். கைதுசெய்யப்பட்டவர்கள் கவசவாகனங்களின் மற்றும் அலுவலகர்கள் அருகில் பிணைக்கப்பட்டிருந்தது காணக்கூடியதாக இருந்ததுடன், சரணடைவதற்கான அவர்களது அழைப்பிற்கு சிறிது பின்னர் அவர்களது குண்டுத்தாக்குதலினை மீண்டும் தொடங்கினர். ஜெனினின் மறு ஆக்கிரமிப்பு தாக்குதலுக்கு இதற்கு முன்னர் தலைமை வகித்த இஸ்ரேலிய உத்தியோகஸ்த்தர் கடந்த நான்கு நாட்களில் முகாமினை முற்றுகையிடுவதற்கு தவறிவிட்டார் என குற்றம் சாட்டப்பட்டு அவரது பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டார். இஸ்ரேலின் தலைமை அதிகாரியான Shaul Mofaz தனிப்பட்ட முறையில் கொடூரமான நடவடிக்கைக்கு தற்போது தலைமை வகிக்கிறார். இடம் பெற்றுக்கொண்டிருக்கும் கொடூரங்களுக்கு நேரடியாக அவர் தான் பொறுப்பு என பாலஸ்தீன அதிகாரிகள் கருதுகிறார்கள். மின்சார ஜெனரட்டர்கள் இயங்குவதற்கு அவசியமாக அவர்களிடன் இருந்த எண்ணெய்கள் தீர்ந்துவிட்டதாகவும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் நுழைந்தன் பின்னர் நான்கு நாட்களாக நகரம் இருட்டுக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெனினின் மூன்று உருக்குலைந்த மருத்துவமனைகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. அத்துடன் மருத்துவமனைகள் தண்ணீர் கூட இல்லாமலே இயங்குகின்றன. மீண்டும் ஒரு இரண்டாவது Sabra மற்றும் Shatila படுகொலை இந்தத் தடவை ஜெனினில் இடம்பெறலாம் என பல எண்ணுக்கணக்கற்ற அழைப்புகள் மூலம் பாலஸ்தீன தலைமை எச்சரித்து இருந்தது. ''பாலஸ்தீன தலைமை அவசரமாக சர்வதேச சமூகம் மற்றும் அராபிய தலைவர்களுக்கும் உடனடியாக தலையீடு செய்யும் படியும், இஸ்ரேலின் தலைமை அதிகாரியான Shaul Mofaz ஆல் வழிநடத்தப்படும் கொடூரமான யுத்த நடவடிக்கையின் பலிக்கடாக்களாக இருக்கப்போகும் ஜெனினின் அகதிமுகாமில் வசிப்பவர்களை பாதுகாக்க உதவிசெய்யவும் கோருகிறது'' என ஒரு தலைமைத்துவ அறிக்கையில் எழுதப்பட்டிருந்ததுடன், ''அகதிமுகாமில் வசிக்கும் மக்களை குறிப்பிட்ட படுகொலையிலிருந்து தப்பிக்க வைப்பதற்கு எந்தவிதமான தலையீட்டினையும் பின்தள்ளிப்போடுவதற்காக சர்வதேச சமூகம் பதிலளிக்கவேண்டும் என நாம் நம்புகிறோம்'' என அதில் மேலும் எழுதப்பட்டிருந்தது. ''நான்கு வெடிச்சத்தங்களின் சத்தம் தொலைபேசிக்குள்ளால் வந்தன. 'வந்து எம்மைக் காப்பாற்றுங்கள்' என ஒரு பெண் கத்தியது பின்னணியில் கேட்கக் கூடியதாக இருந்தது.'' ஒரு பேட்டியின் மத்தியில் ஒரு Red Crescent ambulance உத்தியோகஸ்த்தரை அதனது பத்திரிகையாளர் தொடர்புகொண்டிருந்தபோது இது இடம் பெற்றது: ''ஒரு இஸ்ரேலிய ஹெலிகப்டரின் இருந்து சுடப்பட்ட ஒரு ஏவுகணைக் குண்டினால் பெண்ணின் வீடு தாக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.'' என Independent பத்திரிகை தனது செய்தியில் விபரித்திருந்தது. உலக சோசலிச வலைத் தள பத்திரிகையாளருக்கு வந்த செய்தியில் இருந்து, இஸ்ரேலிய அதிகாரத்துவத்தினர் காயப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்க முதலுதவி வண்டியை அனுமதிக்க மறுத்தார்கள் என்பது தெளிவாகிறது. ஜெனிவா தீர்மானத்தின் பிரகாரம் இப்படியான நடவடிக்கைகள் ஒரு யுத்தக் குற்றமாகும் என சர்வதேச சட்டம் வரையறை செய்கிறது. காயப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்க இஸ்ரேலிய பாதுகாப்பு படை அனுமதியளித்திருந்தபோதும் ஏப்ரல் 8 இல் ஜெனின் மற்றும் நாபுலுஸ் (Nablus) இல் ஐந்து முதலுதவி வண்டிகள் தாக்கப்பட்டன என செஞ்சிலுவை சங்கம் கூறியதாக IMC-Israel செய்தியில் விபரித்தது. ''ஜெனினில் இருந்து உதவிக்கான அழுகைக்குரல்'' என்ற தலையங்கத்தின் கீழ் பாலஸ்தீனரான Issa Samandar தொலைபேசியின் ஊடாக கீழ்காணும் பேட்டியினை அளித்தார்: ''பல பழுவான இராணுவத்தின் கவச புல்டோசர்கள் முகாமினை இரண்டு பக்கங்களாக துண்டாடுவதற்கு மேற்கில் இருந்து கிழக்கு வரை ஒரு பரந்த தெருவினை 8-10 மீற்றர் அளவில் தோண்டிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு தாக்குதலின் போதும் நூற்றுக்கணக்கான குண்டுகளாலும், 2-7 கோப்ரா மற்றும் அபாஸ்சிலிருந்து வான் தாக்குதலாலும் இது செய்யப்பட்டது... இது கடந்த இரவு 8 மணி வரை தொடரப்பட்டது, இப்போதும் கூட. ஹெலிகாப்டர் தாக்குதல் செய்வதற்காக சில நேரங்களில் இராணுவம் பின்வாங்கியது... இராணுவம் ஒரு வீட்டினுள் நின்றுகொண்டிருந்தபோது அவர்கள் பாலஸ்த்தீனியர்களாக இருக்கலாம் என்று ஹெலிகாப்டர் எண்ணிக்கொண்டு தாக்கிய பின்னர்தான் இது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது... துப்பாக்கி சூடுகளும், குண்டுத்தாக்குதலும் கடுமையாக இருப்பதுடன், மிக கொடூரமானமுறையில் வீடுகளை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளது. மொத்த அழிப்பில் மூன்றில் ஒரு பகுதி முகாம் மனைகள் அழிக்கப்பட்டுள்ளன. இப்படியான முறையில் பத்துப்பேர் பலியாகியுள்ளனர்.'' ''முகாமின் குறுகிய பாதைகளிலும், தெருக்களிலும் 100 இருந்து 150 வரையிலான உடல்கள் இன்னும் இருப்பதாக சாட்சியங்கள் கூறுகின்றன. இன்று ஐந்தாவது நாளாக முதலுதவி வாகனங்கள் காயப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கோ அல்லது உடல்களை மீட்பதற்கோ போகமுடியாது இருக்கின்றன. மருத்துவ உதவி தொழிலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் செய்தி ஊடகங்கள் மூலம் உதவி செய்யும் படி அவசர அழைப்பு விட்டிருக்கிறார்கள். நேரடியாக.... தளத்தில்.... இன்னும் பதில் இல்லை... கடந்த 36 மணிநேரத்தில் இரண்டு உடல்களும் ஒரு காயப்பட்டவரும் தான் மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டிருக்கின்றன.. வாழ் நிலைமையும் சுகாதார நிலைமையும் மிக மோசமாக இருக்கின்றன. மக்கள் இப்போது அழுக்கு நீரினை அருந்துவதுடன், மரங்களின் இலைகளை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். வீடுகளின் இடிபாடுகளுக்குள் நூற்றுக்கணக்கான உடல்கள் இருப்பதாக ஒரு சாட்சியத்திடம் இருந்து இப்போது நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.... தம்மை காப்பாற்றிக்கொண்ட மக்கள் பல்கலைக்கழகத்தினுள் அணிதிரண்டுள்ளனர்'' அவர் தொடர்ந்தார், ''34 வயதுக்காரரின் மகன் ஒருவரை ஒரு இராணுவவீரர் சுட்டுக் கொன்றிருக்கிறார். பின்னர் ஏனைய இராணுவ வீரரும் இன்னொரு செயலாக 62 வயதான தந்தையை அவர்களது மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் முன்னால் சுட்டுக்கொன்றனர். -கிட்டதட்ட 64 மற்றும் ஒருவர் 45 வயதையுடைய இரண்டு முதியவர்கள் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். குற்றவாழி ஷரோனின் கட்டளையின் பிரகாரம் அதிகப்படியான முறையில் அவர்கள் பல மக்களை சுட்டுக்கொன்றிருக்கின்றனர் என வைத்தியர் கூறினார். இந்த நாட்களில் பலியானவர்களுக்காக ஆய்வு செய்வது தகுந்ததல்ல... அத்துடன் இந்த வரிகளை சில அரசியல்வாதிகள் படிப்பார்களானால் இந்த கொடூரங்களுக்குப் பின்னால் இருக்கும் குணாம்சத்தை விளங்கிக்கொள்ள முடியாது போகலாம்... அதேநேரம் மனிதாபிமானமும் நனவும் தொலைந்துபோயுள்ளன.'' Shimon Peres இன் அமைதிக்கான நோபல் பரிசினை
பறித்துவிடும் படி ''அமைதி சார்பான'' ("Peace Block") இயக்கத்தின்
ஒரு நடவடிக்கையாளரான Yehudit Harel ஒரு பகிரங்க அழைப்பினை
மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். அவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறியதாவது, ''Shimon
Peres எமது சகாப்தத்தின் மிக ஒழுக்கமற்ற, சிடுமூஞ்சித்தனமான அரசியல்வாதியாவார்.
தற்போதைய அழிவு நடப்பதை சாத்தியமாக்கிய முக்கியமான பாத்திரத்தினை வகித்த அவர் ஒரு உண்மையான
Machiavelli வழிவந்தவராவார். ஒரு நோபல் பரிசினை பெற்றவர் என்ற
முறையிலும் அவரது அனைத்து சர்வதேச உறவுகள் மற்றும் ஐரோப்பாவில் அவரது பிரேத்தியேக சமூக அந்தஸ்த்துடன்
Shimon Peres நீண்டகாலமாக ஷரோனின் அரசாங்கத்திற்கான
ஐரோப்பிய ஆதரவை பாதுகாத்துள்ளார். இந்த வழியில், இந்த குற்றவாளி அரசாங்கம் இதை இவ்வளவு தூரம் செய்வதற்கு
அவர் சாத்தியமாக்கியிருக்கிறார். அவருக்கு ஒரு பாடத்தை புகட்டுவதற்கு இதுவொரு உயர்ந்த தருணமாகும்''. |