: வட
அமெரிக்கா: ஐக்கிய
அமெரிக்கா
As legal case against American Taliban POW unravels
Judge shows pro-government bias at
hearing for John Walker Lindh
அமெரிக்க தலிபான் யுத்தக் கைதிக்கு எதிரான வழக்கு சிக்கல் அவிழ்கிறது
ஜோன் வோக்கர் லிண்ட் க்கான வழக்கு விசாரணை அமர்வில் நீதிபதி அரசாங்க
சார்பை வெளிக்காட்டுகிறார்
By John Andrews
3 April 2002
Back to screen version
நான்கு மணி நேர பூர்வாங்க வழக்கு விசாரணையின் பொழுது, அரசாங்க வழக்குரைஞர்கள்
ஜோன் வோக்கர் லிண்ட் அல்கொய்தாவிலிருந்து பயங்கரவாதப் பயிற்சியைப் பெற்றார் என்பதற்கோ அல்லது அமெரிக்கத்
துருப்புக்களுக்கு எதிராகப் போராடினார் என்பதற்கோ தங்களிடம் சான்று எதுவும் இல்லை என ஏற்றுக் கொண்டனர்.
இருப்பினும், ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய சாத்தியங்களை கொண்ட குற்றச்சாட்டுக்களுடன் அதனை மேலும் முன்னெடுக்கப்
போவதாக அவர்கள் அறிவித்தனர்.
21 வயது நிரம்பிய வடக்கு கலிபோர்னியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட லிண்ட், கடந்த
இலையுதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான் சண்டையிடும் குழுவுடன் பிடிக்கப்பட்டார். அவர் படுகொலை செய்வதற்கு
சதி செய்ததாகவும் மற்றும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு உதவியதாகவும் அரசாங்கத்தால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருகிறார்.
ஏப்ரல் 1ம் தேதி வழக்கு விசாரணை நடைபெற்ற வர்ஜீனியாவின் கிழக்கு மாவட்டத்திற்கான
அமெரிக்க மாவட்ட நீதிமன்றம், பென்டகனிலிருந்து ஒன்பது மைல்கள் தொலைவில் அமைந்துள்ளமை, லிண்டுக்கு எதிரான
குற்றச்சாட்டுக்களை விளக்கமாக விவரித்தல் குற்ற வழக்குத் தொடர்வுக்கு தேவைப்படும் மற்றும் அவரது சட்டக் குழுவிற்கு
மேலும் ஆதாரம் கொடுப்பதாகத் திரும்பும் என்பது பற்றிய கவலையாகும். பெரும்பாலான பகுதியில், நீதிபதி டி.எஸ்
மூன்றாவது எல்லிஸ் எதிர்வாதத் தரப்பினரின் முறைமன்றக் கட்டளைக் கோரிக்கைகளை மறுத்தார். அவர் லிண்டின் வழக்குரைஞர்களுக்கு
சில குறுகிய வகையின தகவல்களை மட்டும் கூடுதலாகப் பெறுவதற்கு அனுமதித்தார் மற்றும் எதிர்காலத்தில் சாட்சியங்களைப்
பெறும் சாத்தியத்தினை தொடர்ந்து நீட்டித்திருந்தார்.
முறைமன்றக் கட்டளைக் கோரிக்கைகள் மீதான விவாதங்களின் போது, லிண்டின்
குற்றச்சாட்டுப் பத்திரத்தில் முக்கிய குற்றச்சாட்டுக்கள் நேரடியாக முரண்படுவதில் வழக்குத் தொடர்ந்திருப்பவர்கள் சலுகைககள்
பெற்றனர். மிகவும் முக்கியமாக, லிண்ட் தலிபானுடன் இராணுவ சேவைக்காகத் தயார் செய்த முகாமில் பயங்கரவாதப்
பயிற்சி பெற்றதற்கான அதன் ஆதாரத்தை அரசாங்கம் கையளிக்குமாறு எதிர்வாதத்தரப்பினரின் வேண்டுகோளுக்கு பதில்
விடுக்கும்முகமாக, குற்றம் சாட்டியுள்ள தரப்பினர் ஒன்றுமில்லை என்றனர். குற்றச்சாட்டுப் பத்திரத்தின் 12வது பந்தியின்
முகப்பில் முகத்தில் அடித்தாற்போல் காணப்படுகிறது, அது குற்றம் சாட்டுவதாவது: "2001 ஜூன் அல்லது ஜூலையில்
மற்றும் அந்த அளவில், அவரது அல்கொய்தா பயிற்சியின் ஒரு பகுதியாக, லிண்ட் பயங்கரவாத பயிற்சிகளில் பங்கேற்றது."
தட்டித்தடவி வழக்கை ஒன்றாகச்சேர்த்துக் கைப்பற்ற முனைந்து, உதவி அமெரிக்க அட்டர்னி
டேவிட் என். கெல்லி அறிவித்தார்: "அங்கு நீங்கள் கற்றுக் கொள்வது என்பது அல்ல; அது எப்படிப் பயன்படுத்துவது
என்பதாகும்." இருப்பினும், அரசாங்கமும் கூட லிண்ட் எந்த அமெரிக்கருக்கும் எதிராகப் போராடுதற்கு "அதனைப்
பயன்படுத்தியதற்கு" ஆதாரம் இல்லாதிருந்ததை ஏற்றுக் கொண்டது. குற்றம் சாட்டப்பட்ட வழக்கு லிண்டால் அமெரிக்கக்
குடிமக்கள் கொல்லப்படுவதற்கு அதுபற்றி முயன்றதாகக் கூறப்படுவதை உள்ளடக்கி இருக்கிறதா என்று கேட்டபொழுது,
கெல்லி "தற்போது எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார்.
குற்றச்சாட்டுப் பத்திரத்தின் 24வது பந்தி நவம்பர் 25, 2001 அன்று கிளர்ச்சி
எழுச்சியின் போது சி.ஐ.ஏ முகவர் மைக்கேல் ஸ்பான் கொல்லப்பட்டது, அது வடக்கு ஆப்கானிஸ்தானில் குவாலா-இ-ஜாங்கி
வளாகத்தினுள் இருந்த தலிபான் சிறைக்கைதிகள் மேல் அமெரிக்கா தலைமையிலான படுகொலையைத் துண்டிவிட்டது பற்றி
விவரிக்கின்றது. ஸ்பானின் விதவை மனைவி வழக்கு விசாரணைக்கு முந்தைய விசாரணை அமர்வுக்கு வருகைதந்து, அதன் பின்னர்
செய்தி ஊடகத்திடம் அவரது கணவரின் படுகொலையில் அவரது பாத்திரத்திற்காக லிண்ட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்பட
வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்த அமர்வில் ஸ்பானின் மரணம் பற்றிக் கேட்டபொழுது, உதவி அமெரிக்க அட்டர்னி
ஜோன் டேவிஸ், "வெளிப்படையாகச் செய்யப்பட்ட இந்த சதி நடவடிக்கையில் தனிப்பட்ட தொடர்பு பற்றிய
குற்றச்சாட்டு இல்லை மற்றும் இந்த நேரத்தில் ஆதாரம் இல்லை" என்று கூறினார்.
வழக்குத் தொடுத்து வாதிடும் தரப்பு அதன் சட்ட ரீதியான வழக்கின் பலவீனத்தை அதிகமாகக்
காட்ட, நீதிபதி எல்லிஸ் அதிகமாகவே வழக்குத் தொடுத்தோரின் பக்கம் சாய்ந்தார். லிண்ட் கொலை செய்ய சதிசெய்ததாகக்
கூறப்படும் அமெரிக்கர்களைப்பற்றி அரசாங்கம் விவரமாய் விளக்குமாறு கோரும் எதிர்வாதிகளின் முறைமன்றக் கட்டளைக்
கோரிக்கைகளை நிராகரித்து, எல்லிஸ் இடை மறித்தார்," மொகம்மது அட்டா உலக வர்த்தக மையக் கட்டிடத்தில்
இருந்த மக்களின் பெயர்களை அறிவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்று கேட்டார். குரலை உயர்த்தி அவர்
மேலும் குறிப்பிட்டதாவது," எந்த பயங்கரவாதியும் அவர்கள் கொல்லக் கூடிய நபர்களைப்பற்றி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்
என்று நீங்கள் நினைக்கிறீர்களா?"
இளைஞராக ஜெமனுக்கு முதலில் பயணம் செய்த மற்றும் பின்னர் இஸ்லாத்தைப் படிப்பதற்கு
20 வது வயதில் பாக்கிஸ்தானுக்குச் சென்ற லிண்டை, செப்டம்பர் 11 விமானக்கடத்தல்காரர்களின் குழுத்தலைவர் என்று
கூறப்படும் அட்டாவுடன் சேர்த்து மொத்தமாக சுமத்தும் வகையில், வழக்கு விசாரணை செய்யும் நீதிபதி, லிண்ட் கடுங்
கொடிய குற்றங்களை இழைத்த குற்றவாளி எனத் தாம் ஏற்கனவே எண்ணி இருப்பதாக வெளிக்காட்டினார். மேலும், வழக்கு
மன்ற அறை முழுதும் செய்தி ஊடகத்தினர் நிறைந்திருந்த நிலையில், அத்தகைய அறிக்கை பரவலாக செய்தி அறிவிக்கப்படும்
என்று அறிந்தும், நீதிமன்ற விசாரணைக்கு முந்திய
விளம்பரத்தால் உள்ளூர் நடுவர் குழாம் பாதிப்பு அடைவதிலிருந்து தடுப்பது பற்றி
அவர் அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதை எல்லிஸ் எடுத்துக்காட்டினார்.
வழக்குத் தொடுத்து வாதிப்போருக்கு ஆதரவான நீதிபதியின் திடீர் வெடிப்பு அது மட்டுமாக
இருக்கவில்லை. அமர்வின் இன்னொரு கட்டத்தில், எதிர்வாதி வழக்குரைஞர் ஜோர்ஜ். சி.ஹாரிஸ், "பிரதிவாதி அமெரிக்கர்களையோ
அல்லது குடிமக்களையோ கொல்வதற்கான சதியின் அங்கமாக இருக்க ஒருபோதும் எண்ணம் கொண்டிருந்ததில்லை என்று
வாதிடுகிறார்" என்று கூறிய பொழுது, எல்லிஸ் குறுக்கீடு செய்தார், "சரி அங்கே என்ன செய்து கொண்டிருந்தார்?"
தனது குற்றத்தை உணர்ந்ததும், நீதிபதி பின்னர் மேலும் கூறினார், "உங்களிடம் விடை இல்லை.... அது பொருத்தமான
கேள்வியாக இருந்தது" என்றார்.
முழுவதும், ஏற்றுக் கொள்ளப்பட்ட நீதிமன்ற வெளிநடத்தைகளின் தரங்களை எல்லிஸ் மதியாது
அசட்டை செய்தார். லிண்டுடன் "அளவுக்கு அதிகமாக பரந்த அளவில்" பேசிய இராணுவத்தினரை அடையாளம் காட்டுமாறு
வேண்டிக் கொண்டதை நிராகரிக்கும் பொழுது, அவர் மேலும் குறிப்பிட்டார்," அந்த வகையினத்தில் திரு. லிண்ட்
குறைபட்டுக் கொள்ளும் ஒவ்வொருவரையும் நான் ஊகம் செய்யமுடியாது." பின்னர், எதிர்வாதி தரப்பினர் அமெரிக்க இராணுவத்தால்
கியூபா, குவாண்டானமோ வளைகுடாவில் வைக்கப்பட்டிருக்கும் தலிபான் மற்றும் அல்கொய்தா சிறைக் கைதிகள் என்று கூறப்படுவோரை
சந்திக்க வகை செய்யுமாறு கேட்டபொழுது, எல்லிஸ் ஏளனத்துடன் கூறினார், "திரு.லிண்டுக்கு தெரிந்தவர்கள் குவாண்டனாமோவில்
இருக்கிறார்கள் என நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்றார்.
உலகின் மிகப் பெரியதும் மிகவும் மதிக்கத்தக்கதுமான சட்ட நிறுவனங்களுள் ஒன்றான சான்பிரான்சிஸ்கோவின்
மொரிஸன் & போயர்ஸ்டர் நிறுவனத்திலிருந்து வருகை தந்திருந்த லிண்ட்ஸின் எதிர்வாத வழக்கறிஞர் குழுவை எல்லிஸ் அவமதிப்புச்
செய்பவராக இருந்தார். வழக்கறிஞர்கள் தங்களின் கட்சிக்காரர் ஆயுள்தண்டனையை எதிர்நோக்குவதிலிருந்து பாதுகாத்த
போதிலும், எல்லிஸ் அவர்களின் "பல தொகுதிக் கணக்கான" மனுத்தாக்கல்களைப் பற்றிக் குறைபட்டுக் கொண்டார்,
மற்றும் அவர்கள் தங்களின் மனுக்களை மட்டுப்படுத்திக் கொள்ளாவிட்டால் வாய்வழி விவாதங்களை ரத்துச் செய்து விடுவதாக
அச்சுறுத்தினார்.
இன்னொரு புள்ளியில், யேல் சட்டப் பள்ளியின் பட்டதாரியும் இருபதாண்டு சட்ட அனுபவம்
கொண்டவருமான ஹாரிசிடம், உட்காரச் செய்யவும் அமைதியாய் இருக்கச் செய்யவும், "வழக்கமாய் நான்
பேசும்பொழுது நீங்கள் சிலவற்றை விரும்பத் தொடங்குகிறீர்கள், நீங்கள் விருப்பம் கொள்வதைப் போல நான் விவாதம்
செய்வேன்" என்றார்.
எதிர்வாதி வழக்கறிஞர்கள் குழுவின் தலைமை ஆலோசகர் ஜேம்ஸ் புரொஸ்னாகன் வழக்குத்
தொடுத்த தரப்பு லிண்டுக்கு எதிரான அதன் குற்றச்சாட்டுக்களது விவரங்களை விளக்குமாறு ஆணையிடக் கோரி எல்லிஸை
வேண்டிக் கேட்டுக்கொண்டார். "எனது கட்சிக்காரர் கொண்டிருந்ததாகக் கூறப்படும் சதி என்ன?" புரொஸ்னாகன்
கேட்டார். அவர் தொடர்ந்தார்: "யார் கொல்லப்பட இருந்தவர் என்று நமக்குத் தெரியாது..... சக -சதியாளர்கள்
எவரது பெயரும் எமக்குத் தெரியாது. அது நடு நிலையானதல்ல." முடிவில் வழக்கறிஞர் நாவன்மையுடன் கேட்டார்,
"இந்த வழக்கு உண்மையானதா?" எல்லிஸ் எதிர்வாதி வழக்குரைஞரின் முறைமன்றக் கட்டளைக் கோரிக்கையை மறுத்தார்.
குவாலா-இ-ஜாங்கி கோட்டையில் லிண்ட் மரண அச்சுறுத்தல் விடுத்தது பற்றிய ஒளிநாடாவை
(Videotape)
ஸ்பானுடன் சேர்ந்து கேட்ட சி.ஐ.ஏ முகவர் "டேவ்" -ஐ அடையாளம் காட்டுதல் உட்பட எதிர்வாதி வழக்குரைஞர்களது
பெரும்பான்மை கண்டுபிடிப்பு வேண்டுதல்களில் பெரும்பான்மையானவற்றை அவர் மறுத்திருந்த போதிலும், எல்லிஸ் வழக்குத்
தொடுத்தோரிடம் " டேவையும்" ஏனையோரையும் தொடர்பு கொண்டு அவர்கள் எதிர்வாதி வழக்குரைஞர் குழுவிடம்
தானே வந்து பேட்டி அளிக்க விரும்புகிறார்களா எனக் கேட்குமாறு அறிவுறுத்தினார். தானே வந்து அவர்களிடம் பேசுவதற்கு
விலகும் சாட்சிகளிடம் நேர்காணல் செய்வதை நிர்ப்பந்திக்குமாறு எதிர்வாதி வழக்கறிஞர் குழு வேண்டிக் கொண்டதன் மீதாக
தீர்ப்பளிக்கையில், அவர் மேலும் நீதிமன்ற விசாரணை அமர்வை மே 31-ம் தேதிக்கு குறித்தார்.
இவ்வமர்வுக்குப் பின்னர், புரொஸ்னாகன் பத்திரிகையாளர்களிடம், "எந்த அமெரிக்கருக்கும்
எதிராக திரு.லிண்ட் எதையும் செய்தார் என்பதற்கான ஆதாரம் முற்றிலும் தம்மிடம் இல்லை என அரசாங்கம் ஒப்புக்
கொண்டது கவனிக்கத்தக்கது என்று தான் நினைப்பதாக" குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "நல்ல உள்ளம்
கொண்டோர் இதுதான் அரசாங்கத்தின் வழக்கா என்று ஆச்சரியப்படுவார்கள் என நான் நினைக்கிறேன்" என்றார்.
புரொஸ்னாகன் ஆப்கானிஸ்தானில், ரினோ முகாமில், டிசம்பர் 7 அல்லது 8 வாக்கில்
பெரும்பாலும் எடுக்கப்பட்டிருக்கக் கூடிய, நெஞ்சை உறையவைக்கும் லிண்டின் நிழற்படத்தை விநியோகித்தார். அந்த நிழற்படத்தில்,
லிண்ட நிர்வாணமாக, கித்தான் துணியாலான தூக்கு கட்டிலில் உள்ளங்கையை மேற்புறமாய் மலர்த்தி இருக்குமாறு கிடத்தப்பட்டிருக்கிறார்.
அவர் கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன, மற்றும் அவரது கைகள் பிளாஸ்டிக்கினாலான விலங்காலும் ஏனைய பொருளாலும்
இறுகக் கட்டப்பட்டிருக்கின்றன. அவரது வெற்றுடம்பைச் சுற்றி பலதடவை சுற்றப்பட்டிருக்கும் (Duct
tape) நாடா காணப்படுவதுடன் அவர் தூக்குக் கட்டிலில் இறுக்கமாக
இணைக்கப்பட்டிருக்கிறார். லிண்ட் ரினோ முகாமில் உள்ள படமானது சில கேபிள் தொலைக்காட்சி செய்தி அலை வரிசைகள்
உட்பட பரவலாக எங்கும் பரவி இருக்கிறது.
லிண்ட் இருவாரங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூடால் துப்பாக்கி ரவை பாய்ந்து காயத்தால்
பாதிக்கப்பட்டிருந்த நிலையில், உறை பனி குளிர் நிலையிலுள்ள கப்பலில் உள்ள உலோகத்தாலான பெட்டகங்களில் குறைந்த
பட்சம் இரண்டு நாட்களாக அப்படியே வைக்கப்பட்டிருந்ததாக வழக்குத் தொடுத்தோர் ஒப்புக் கொண்டனர். லிண்ட் பின்னர்
அவரது பாதங்களில் "பனியினால் ஏற்படும் உடல் வீக்கத்திற்காக" மருத்துவம் பார்க்கப்பட்டார். "அமெரிக்கப் படைவீரர்களைப்
போல் ஜோன் மருத்துவப் பராமரிப்பு செய்யப்பட்டதாக
அரசாங்கம் கூறியிருந்தது" என்று புரொஸ்னாகன் கூறினார். "இந்த நிழற்படமானது
சாதாரணமாகப் பார்ப்பவர்களிடம் அதுவல்ல இது என்று குறிகாட்டும்."
ரினோ முகாமில் லிண்ட் கொடுமைப்படுத்தப்பட்டது தொடர்பான ஆதாரம் எதிர்வாதி வழக்குரைஞருக்கு
முக்கியமானது. இரண்டு நாட்களாக பெட்டகத்துக்குள் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பின்னர், அவர் அட்டர்னியை
சந்திக்க மற்றும் அமைதியாய் இருக்க தனது உரிமைகளை விட்டுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது, பின்னர் அவர் இரண்டு
நாட்கள் எப்.பி.ஐ விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. லிண்ட், உரிமை விட்டுக் கொடுப்பவராக பலவந்தப்படுத்தி
கையொப்பமிடச் செய்திருந்தால், அத்தகைய நடவடிக்கை அவரது சிறைவைப்பு நிலையை மேம்படுத்தும் என அவர் நம்பி
இருந்தால், பின்னர் எப்.பி.ஐக்கு கொடுத்த அவரது அறிக்கைகள் நசுக்கப்பட்டு குற்ற வழக்குத் தொடுத்தோர் ஆதாரம்
எதுவுமின்றி வழக்கை முன்னெடுக்க விட்டிருக்கும் என்று எதிர்வாதி வழக்குரைஞர்கள் நிறுவுகின்றனர். நசுக்குதல் பற்றிய முறைமன்றக்
கட்டளைக் கோரிக்கை ஆகஸ்ட்டு 26 வழக்கு தேதிக்கு சில நேரம் முன்னர் கருத்தில் கொள்ளப்படலாம்.
திங்கள் அன்று கூட, எதிர்வாதி தரப்பினரால் ஆதாரத்தை அரசாங்கம் அழிப்பதைத் தடுக்குமாறு
அரசாங்கத்திற்கு கட்டளை இடுமாறு முறைமன்றக் கட்டளைக் கோரிக்கை ஒன்று மனுச்செய்யப்பட்டது. எதிர்வாதி
தரப்பினரின் பத்திரங்களின்படி, வழக்குத் தொடுத்த தரப்பு அமெரிக்க இராணுவ அதிகாரிகள் லிண்டுடனான பேட்டி பற்றிய
மூலக் குறிப்புக்களை "அவர்களிடம் போதுமான சேமிப்பு வசதிகள் இல்லாத காரணத்தால்" அழித்து விட்டனர் என்று கூறும்
கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அழிக்கப்பட்ட குறிப்புக்கள் முக்கியமானவையாக இருக்கக் கூடும் ஏனெனில் குற்றத்தில்
சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அறிக்கைகள் பற்றிய லிண்ட்டின் எழுத்துக்கள் அல்லது நாடாக்கள் அங்கு இல்லை. லிண்ட்
பற்றி எடுக்கப்பட்ட ஒளிப் பேழைகள் மற்றும் நிழற்படங்கள், அவர் ரினோ முகாமை விட்டுப் போனதும் அமெரிக்க கடற்படைக்
கொமாண்டரால் ஆணையிடப்பட்டு அழிக்கப்பட்டதாக வழக்குத் தொடுத்தோர் தரப்பிலிருந்து வந்த தகவலை எதிர்வாதித்தரப்பினது
முறைமன்றக் கட்டளைக் கோரிக்கை குறிக்கின்றது.
குற்றவியல் வழக்கு முன்னெடுக்கப்பட்டு வருதலில் அதிகரித்த அளவில் தெளிவாகி வருவது
என்னவெனில் லிண்ட்டுக்கு எதிரான அரசாங்க வழக்கு மொத்தத்தில் சட்ட முறைமை உடைய வழக்கு அல்ல. மாறாக
இன்னும் சொல்லப்போனால், அரசியல் நோக்கம் கொண்ட வழக்குத் தொடுத்தோர் தரப்பு லிண்ட்டை மாதிரியாக ஏற்படுத்துதற்கு
உள்நோக்கம் கொண்டதும் உள்நாட்டு அதிருப்தியாளர் மீதான அரசாங்கத்தின் பரந்த அளவிலான தாக்குதலுக்கு ஒரு
முன்னோடியை அமைத்துக் கொடுப்பதுமாகும்.
|