:உலகப்
பொருளாதாரம்
The World Economic Crisis: 1991-2001
உலகப் பொருளாதார நெருக்கடி:1991-2001
By Nick Beams
16 March 2002
Back to screen version
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரும் (ஆஸ்திரேலிய)
சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான நிக் பீம்ஸால் ஜனவரி 16, 2002 அன்று வழங்கப்பட்ட
சொற்பொழிவின் மூன்றாவது பகுதியை கீழே நாம் பிரசுரிக்கிறோம். ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியால் சிட்னியில்
ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேசப் பள்ளியில் இச்சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
முதலாவது பகுதி மார்ச்
22 அன்றும் இரண்டாவது
பகுதி மார்ச் 25 அன்றும் வெளியிடப்பட்டது.
கடைசி தசாப்தம் வளர்ந்துவரும் இராணுவ வாதத்தாலும் பூகோள முதலாளித்துவப்
பொருளாதாரத்தின் ஆழமாகிவரும் சமநிலை இன்மையாலும் பண்பிட்டுக் காட்டப்படுகின்றது. இவ்விரு இயல்நிகழ்ச்சிகளுக்கும்
இடையில் உள்ளார்ந்த தொடர்பு இருக்கின்றது. இதனை விளக்கிக் காட்டுதற்கு, இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது அரைப்
பாதியில் உலகப் பொருளாதாரத்தின் வரலாற்றுப் பரிணாமத்தை நாம் ஆய்வு செய்வது தேவையாக இருக்கிறது. இந்தக்
காலகட்டம் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் மேலாதிக்கத்தால் குறிக்கப்படுகிறது.
1970களின் மத்தியில் தொடங்கும் தற்போதைய காலகட்டத்திற்கும் 1870லிருந்து
1913வரை நீடித்த, முதலாவது உலக யுத்த வெடிப்புடன் முடிவடையும் சகாப்தத்திற்கும் இடையில் குறிப்பிட்ட இசைவுப்
பொருத்தம் இருக்கின்றன. 1870 லிருந்து 1913வரை பூகோளமயமாக்கலின் முதல் காலகட்டம் என-- உலகப்
பொருளாதாரத்தை தனித்த உள்ளார்ந்ததன்மையாக-- நாம் குறித்துக் காட்டலாம். தற்போதைய சகாப்தம் பூகோளமயமாக்கலின்
இரண்டாவது கட்டத்தைக் கொண்டிருக்கிறது, மூலதனம் பூகோளமயமாக்கல் பண்டம் மற்றும் பண வடிவங்களில்
மட்டுமல்லாமல், உற்பத்தி மூலதனமும் பூகோளமயமாக்கல்-- உற்பத்தி நிகழ்ச்சிப் போக்குகள்தாமே பூகோளமயமாக்கலைக்
கொண்டிருக்கிறது.
இந்த அபிவிருத்தி தொடர்பாக பல அம்சங்கள் இருக்கின்றன. நாம் குறிப்பாக பிரதான முதலாளித்துவ
வல்லரசுகளுக்கு இடையிலான உறவில் அக்கறை கொண்டிருக்கிறோம் மற்றும், சிறப்பாக, ஐக்கிய அமெரிக்க அரசுகளின்
பாத்திரம் பற்றி அக்கறை கொண்டிருக்கின்றோம்.
பூகோளமயமாக்கல் பற்றிய அதன் ஆய்வில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழுவானது, தேசிய அரசு பொருத்தமற்றதாக ஆகி இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு எதிராகவும், அதேபோல அடிப்படையில்
ஒன்றும் மாறவில்லை மற்றும் தேசிய-அரசு அடிப்படை பொருளாதார அலகாகவே நீடிக்கிறது
என்று கூறுபவர்களின் கருத்தையும் எதிர்த்திருக்கிறது.
பதிலாக, ஒவ்வொரு கட்டத்திலும், பூகோளமயமாக்கலின் இரண்டாவது சகாப்தம் உலகப்
பொருளாதாரத்திற்கும் தேசிய அமைப்பு முறைக்கும் இடையிலான முரண்பாட்டை எவ்வாறு உக்கிரப்படுத்துகின்றது என்பதை
நிலைநாட்ட விழைந்தோம். அது யுத்தங்களின் புதிய சகாப்தத்திற்கு மட்டும் வழி அமைக்கவில்லை, சோசலிசப் புரட்சியின்
அபிவிருத்திக்கான புறச் சூழ்நிலைகளையும் உருவாக்கி இருக்கிறது.
1991ல், நாம் எழுதினோம்: உள்நாட்டுச்
சந்தைக்கும் உலகச் சந்தைக்கும் இடையேயான பழைய வேறுபாடுகள் இத்தொடரில் இருந்து, மறைந்து வருகின்றன. நவீன
'டிரான்ஸ் நாஷனல்' கூட்டுத்தாபனங்கள் அதன் சொந்த உள்நாட்டு தளத்தின் புவியியல் இருப்பிடத்தைப் பாராமல், உலகச்
சந்தையில் மேலாதிக்கம் செய்வதற்கான வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் தேசிய
அரசு என்ற வகையில் அதன் புறநிலைப் பொருளாதார முக்கியத்துவத்தினை அது இழந்து கொண்டு வருகையிலும், போட்டி
தேசிய முதலாளித்துவக் கும்பல்களின் அரசியல்- இராணுவ கருவி என்ற வகையில், உலக மேலாளுமைக்கான போராட்டம்
பேரளவில் வளர்ச்சி காண்கின்றது. இந்த உண்மையானது, ஒரு புதிய உலகக் கிளர்ச்சிக்காக முடுக்கி விடப்பட்டுள்ள தயாரிப்புகளில்
நன்கு பலம் வாய்ந்த முறையில் வெளிப்பாடாகின்றது." [ஏகாதிபத்தியப் போரையும் காலனித்துவத்தையும் எதிர்ப்போம்,
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை, பக்கம் 16].
இரு உலக யுத்தங்கள்
ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான மோதல்களின் தோற்றம் பிரதான முதலாளித்துவ வல்லரசுகள்
மற்றும் உலகப் பொருளாதாரம் ஒட்டுமொத்தத்தின் அபிவிருத்திக்கும் இடையிலான சிக்கலான உறவுகளில் இருக்கின்றன.
19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி, புதிதாகத் தோன்றிக் கொண்டிருந்த முதலாளித்துவ அமைப்பு விரிவடைந்து
கொண்டிருந்தபொழுது, பிரிட்டனின் முழு மலர்ச்சிக் காலமாக இருந்தது. பிரிட்டன் உண்மையில் உலகின்
தொழிற்பட்டறையாக இருந்தது. ஆனால் 1871ல் ஜேர்மனி ஐக்கியத்துடன், 1870களின் நடுப்பகுதியில் இருந்து மாபெரும்
பொருளாதாரத் தாழ்வு தொடக்கம் மற்றும் உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர் அமெரிக்க தேசிய சந்தை விரிவாக்கத்தின்
ஏற்பாடானது, நீண்ட தொலைநோக்குள்ள மாற்றங்களை இயங்க வைத்தது. நூற்றாண்டின் முடிவில், அமெரிக்காவிலும் ஜேர்மனியிலும்
தொழிற்துறை மற்றும் கார்ப்பொரேட் அமைப்புக்களின் புதிய வடிவங்கள் அபிவிருத்தி அடைந்து இருந்தன மற்றும் புதிய
தொழிற்துறை சக்திகள் அரங்கத்திற்கு வந்தன. ஜேர்மனியின் எழுச்சி, நெப்போலிய யுத்தங்களின் போது ஆரம்பித்திருந்த
ஐரோப்பாக் கண்டத்தில் பிரிட்டனின் மேலாதிக்கம் சவால் செய்யப்பட்டது என்பதை அர்த்தப்படுத்தியது. அட்லாண்டிக்கு
குறுக்கே, தொழிற்துறை கார்ப்பொரேஷனின் தோற்றம் மற்றும் பரந்த உள்நாட்டுச் சந்தையினைத் தோற்றுவித்தல் அமெரிக்காவின்
எதிர்கால மேலாதிக்கத்தைச் சுட்டிக் காட்டியது.
ஏகாதிபத்திய அரசுகளுக்கு இடையிலான வளர்ந்து வரும் மோதல்கள் முதலாவது உலக யுத்தத்தில்
வெடித்தது. பிரிட்டன் ஜேர்மனியின் தோல்வியை உத்தரவாதம் செய்ய முடிந்தது, ஆனால் அது அதன் முந்தைய நிதி நிலைமையின்
இழப்பில் பெரும் செலவில்தான் இதனை செய்தது. 1914க்குப் பிந்தைய காலகட்டம், பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் சேமிப்புகள்
யுத்தத்திற்கு செலவழிக்க நீர்த்துப் போகச்செய்யப்பட்ட போது, அட்லாண்டிக்கின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு
பெரும் அளவிலான செல்வம் மாற்றப்பட்டதைக் கண்டது. சில ஆண்டுகள் கால இடைவெளியில், செல்வம் மாற்றப்பட்டது
ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஐரோப்பாவுக்கு கடன்பட்ட நிலையை மட்டும் அழிக்கவில்லை, அமெரிக்காவை கடன்வழங்கும்
நாடாகவும் மாற்றியது. 1914ல், வெளிநாடுகளில் மொத்த அமெரிக்கத் தனியார் முதலீடு 2.5 பில்லியன் டாலர்களாக
இருந்தது. 1919 அளவில் அது இரட்டிப்பாக 7 பில்லியன் டாலர்களானது. அதேகாலகட்டத்தில், அமெரிக்காவில் வெளிநாட்டு
முதலீடுகள் 7.2 பில்லியன் டாலர்களில் இருந்து 3.3 பில்லியன் டாலர்கள் ஆக வீழ்ச்சி கண்டது.
யுத்தத்தின் போக்கின்போது, பூகோள பொருளாதார சக்தியில் ஒரு அடிப்படை விலகல்
இடம்பெற்றது. லண்டனை மையமாகக் கொண்ட நிதி மையம் மற்றும் தங்க நிலையை அடித்தளமாகக் கொண்ட பூகோள
வர்த்தகத்தின் பழைய அமைப்பு முறை மீட்டமைக்கப்பட முடியவில்லை. இறுதி ஆய்வில், போருக்கு முந்தைய அமைப்பைத்
தக்கவைத்திருந்த பிரிட்டனின் நிதி அதிகாரம் மிகவும் கடுமையாகப் பலவீனம் அடைந்திருந்தது.
யுத்தத்திற்குப் பின்னர், ஐக்கிய அமெரிக்க அரசு, வில்சனின் தலைமையில் அவரது "பதினான்கு
அம்சங்களின்" கீழ் ஐரோப்பாவை மறு ஒழுங்கமைக்க முயற்சித்தது. ஆனால் அமெரிக்காவானது ரஷ்ய புரட்சியின் சவாலை
எதிர்கொண்டது. ஐரோப்பாவைப் பொருளாதார ரீதியாகத் திரும்பக் கட்டுதற்கு ஜேர்மனியிலும் மத்திய ஐரோப்பாவிலும்
பழைய வல்லரசுகளைத் துடைத்துக் கட்டுதல் தேவையானதாக இருந்திருக்கும். இருப்பினும், இறுதி வெற்றியாளர் அமெரிக்காவாக
இருக்கவில்லை, மாறாக போல்ஷிவிசமாக இருந்தது. அந் நிகழ்ச்சியின்போது, அமெரிக்கா வெர்செயில்ஸ் உடன்படிக்கையின்
கீழ் பழைய வல்லரசுகளுடன் அணி அமைத்தது. ஆனால் இது ஐரோப்பாவின் பொருளாதார வாழ்க்கை கடுமையாய் சுருக்கப்பட்டதை
அர்த்தப்படுத்தியது.
1926-27ல் மட்டும் --யுத்தம் ஆரம்பித்து சுமார் 13 ஆண்டுகள் கழித்து--
ஐரோப்பாவில் உற்பத்தி அதன் போருக்கு முந்தைய மட்டங்களை அடைந்தது. ஆனால் ஐரோப்பா மட்டும் பாதிக்கப்படவில்லை.
யுத்தமானது, பொருளாதார பலம் அட்லாண்டிக்கைக் கடந்தது என்பதையும் காட்டியது. மேலும் யுத்தத்துக்குள் அமெரிக்கா
நுழைவு, மற்றும் பழைய கண்டத்தை மறு ஒழுங்கு செய்வதற்கான அதன் அடுத்தடுத்த முயற்சிகள், அமெரிக்காவானது வெறுமனே
அதன் பரந்த உள்நாட்டுச் சந்தையை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. முதலாளித்துவ அமைப்புமுறை விரிவடைய
வேண்டுமென்றால் அமெரிக்க மூலதனமும், அமெரிக்க உற்பத்தி வழிமுறைகளும் சர்வதேச அளவில் அபிவிருத்தி அடைய வேண்டி
இருந்தது. ஆனால் அது சுருங்கப்பட்ட மற்றும் தேசிய எல்லைகளால், சுங்கவரிகளால், கார்ட்டெல்கள் மற்றும் ஏனைய
கட்டுப்பாடுகளால் நெருக்கடி சூழப்பட்ட ஐரோப்பாவுக்குள் சாத்தியமற்றதாக இருந்தது. இந்த முரண்பாடான விவகாரங்களின்
நிலைதான் 1930 களின் மாபெரும் பொருளாதாரத் தாழ்வுக்கு வழி வகுத்தது.
1930களில் தனிச் சிறப்புக்குரிய ஆய்வில், உலகப் பொருளாதாரத்தைப் பற்றிக்
கொண்டிருக்கும் மோதலை லியோன் ட்ரொட்ஸ்கி விவரிப்பதுடன் அபிவிருத்திகளின் எதிர்காலப் போக்கு பற்றி -- புதிய
உலக யுத்தத்தின் வெடிப்பும் அதற்குள் அமெரிக்கா ஆற்றக்கூடிய பாத்திரம் பற்றியும் சுட்டிக் காட்டுகிறார்.
அவர் எழுதுகிறார்: "முதலாளித்துவ அபிவிருத்தியின் மிகவும் சரியான பாணியை ஐக்கிய அமெரிக்க
அரசுகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அதன் உள்நாட்டு மற்றும் தீர்ந்து போகாததாகக் காணப்படும் சந்தை
ஐரோப்பா மீதாக உறுதியான பொருளாதார மற்றும் தொழில் நுட்ப விஞ்சு நிலைக்கு அமெரிக்காவுக்கு உத்தரவாதம்
கொடுத்தது. ஆனால் உலக யுத்தத்தில் அதன் தலையீடானது அதன் உள்நாட்டு சமநிலை ஏற்கனவே தொந்தரவுக்குள்ளாகி
இருந்தது என்ற உண்மையின் வெளிப்பாடாக இருந்தது. அமெரிக்கக் கட்டமைப்பினுள் யுத்தத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட
மாற்றங்கள், முறையே, அமெரிக்க முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை வாழ்வா சாவா பிரச்சினையில் உலக அரங்கிற்குள்
நுழைய வைத்தது. இந்த நுழைவு மிகவும் திடீர் திருப்பமுள்ள வடிவங்களை கட்டாயம் மேற்கொண்டது என்பதற்கு
போதுமான சான்று இருக்கிறது.
"உழைப்பின் உற்பத்தித்திறன் (Productivity
of labour) பற்றிய விதி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பரஸ்பர உறவுகளில்
தீர்க்கமான முக்கியத்துவம் உடையதாக இருக்கிறது மற்றும் பொதுவில் உலகில் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் எதிர்கால
இடத்தைத் தீர்மானிப்பதில் முக்கியத்துவம் உடையதாக இருக்கிறது. உழைப்பின் உற்பத்தித் திறனின் விதிக்கு யாங்க்கிகள் (வட
அமெரிக்க வாசிகள்) அளித்த உயர்ந்த வடிவம் கன்வேயர், தரப்படுத்தப்படல் (Conveyor,
standardised) அல்லது பேரளவான உற்பத்தி (Mass
production) என்றழைக்கப்படுகிறது. உலகத்தைப் புரட்ட ஆர்க்கிமிடிஸ்
நெம்புகோல் புள்ளியைக் கண்டு பிடித்திருந்ததுபோல் அது காணப்படும். ஆனால் பழைய கோள் புரள மறுத்தது. ஒவ்வொருவரும்
சுங்கச் சுவர்களாலும் துப்பாக்கி முனைக் கத்தியினாலும் ஒவ்வொருவருக்கும் எதிராக ஒவ்வொருவரும் தங்களைப்
பாதுகாத்துக் கொண்டனர். ஐரோப்பா சரக்குகளை வாங்குவதில்லை, கடன்களை செலுத்தவில்லை மற்றும் அத்துடன் கூட
தன்னை ஆயுதபாணி ஆக்கிக் கொண்டது. ஐந்து துன்பகரமான பகுதிகள் உள்ளடங்கலாக பட்டினி ஜப்பான் முழு நாட்டையும்
கைப்பற்றியது. உலகில் மிகவும் முன்னேறிய தொழில் நுட்பம் மிகக் குறைவான தொழில் நுட்பத்தை அடிப்படையாகக்
கொண்ட தடைகளின் முன்னே சக்தி அற்றதாக திடீரெனக் காணப்பட்டது. உழைப்பின் உற்பத்தித்திறன் அதன் சக்தியை இழப்பதாகக்
காணப்படுகிறது.
"ஆனால் அது அவ்வாறு மட்டுமே காணப்படுகிறது. மனித வரலாற்றின் அடிப்படை விதி
ஒன்றிலிருந்து பெறப்பட்ட மற்றும் துணைநிலை இயல்நிகழ்ச்சி மீது தவிர்க்கமுடியாத வகையில் கட்டாயம் பழிவாங்கும். விரைவிலோ
அல்லது பின்னரோ அமெரிக்க முதலாளித்துவம் நமது முழு புவிக்கோளின் நீள அகலம் வழியாக தனக்கான வழியைக்
கட்டாயம் திறந்து கொள்ளும். என்ன வழிமுறைகளால்? அனைத்து வழிமுறைகளாலும். உற்பத்தித்திறனின் உயர்ந்த
அளவிலான கூட்டுத்திறன் (Coefficient of
productivity) ஒரு உயர்ந்த அளவிலான அழிவு சக்தியின் கூட்டுத்திறனை
கூட குறிக்கிறது. நான் யுத்தம் பற்றி போதனை செய்கின்றேனா? இல்லவே இல்லை. நான் எதையும் போதிக்கவில்லை.
நான் உலக நிலையை ஆய்வு செய்ய மட்டுமே முயற்சிக்கிறேன் மற்றும் பொருளாதார இயங்குமுறையின் விதிகளில் இருந்து
முடிவுகளைப் பெற முயற்சிக்கிறேன்." [Trotsky, "Nationalism
and Economic Life," Writings 1933-34, pp. 161-162].
அமெரிக்க முதலாளித்துவத்தால் அபிவிருத்தி செய்யப்பட்ட மேம்பட்ட உழைப்பின் உற்பத்தித்திறன்
அதனை யுத்தத்துக்கு மட்டும் அல்லாமல் அதன் வெற்றியை உத்திரவாதப்படுத்தவும் இயக்கியது. இந்த வெற்றியின் அடிப்படையில்,
ஐக்கிய அமெரிக்க நாடுகள் புதிய பூகோள பொருளாதார மற்றும்
அரசியல் கட்டமைப்பை நிறுவியது, அதனுள் முதலாளித்துவ அமைப்பு மொத்தமாகவும் விரிவடையக் கூடியதாக நிறுவியது.
பிரெட்டன் வூட்ஸ் அமைப்பு
நிதி மற்றும் பண இயங்கு முறைகளுக்கு 1944ல் நியூஹாம்ஷெயர், பிரெட்டன் வூட்ஸில்
நடைபெற்ற மாநாட்டில் வேண்டிய உருக்கொடுக்கப்பட்ட, போருக்குப் பிந்தைய ஒழுங்கினைக் கட்டமைப்பதைக் கருத்தில்
கொள்கையில் இரு புள்ளிகள் அங்கு வலியுறுத்திக் கூற வேண்டி இருக்கின்றன. முதலாவது ஐக்கிய அமெரிக்க அரசுகளின் மேலாளுமையின்
கீழ் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, அது நிச்சயமாக அமெரிக்க முதலாளித்துவத்திற்கு நன்மை பயப்பதை நோக்கமாகக்
கொண்டதாக இருந்தது, எவ்வாறாயினும், பிரெட்டன் வூட்ஸ் அமைப்பு ஏனைய பிரதான முதலாளித்துவ அரசுகளின் தேவைகள்
சேர்த்துக் கொள்ளப்பட விருந்ததை அங்கீகரித்தலை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இது அமெரிக்க முதலாளித்துவம்
ஏனைய வல்லரசுகளின் செலவில் ஆதாயமடையும் "பூச்சியம்- கூட்டல் விளையாட்டு" அல்ல. இன்னும் சொல்லப்போனால்,
மூலதனம் மொத்தமாகவும் விரிவடைவதை உறுதிப்படுத்தும் தொடரான பொருளாதார மற்றும் அரசியல் இயங்கு முறைகள்
கட்டி அமைக்கப்பட்டன. நவீன வழக்கு மொழியில், அது "வெற்றி-வெற்றி" சூழ்நிலைக்குப் பிறகு மிகவும் நாடக்கூடியதாக
இருந்தது.
இறுதி ஆய்வில், ஐயத்துக்கிடமின்றி, இது போருக்குப் பிந்தைய அமைப்பு முறையின் அமெரிக்கச்
சிற்பிகளின் பொதுநலப் பண்போ அல்லது தொலைநோக்குப் பார்வையின் காரணமாகவோ அல்ல, மாறாக இணைவு வரிசை
உற்பத்தி முறை (assembly-line production) --
ட்ரொட்ஸ்கி அழைத்தவாறு கன்வேயர் அல்லது தரப்படுத்தப்பட்ட பெரிய
அளவிலான உற்பத்தி முறை என்ற உண்மையின் காரணமாக ஆகும். அது உழைப்பின் உற்பத்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.
அது தொழிலாள வர்க்கத்திலிருந்து கறந்தெடுக்கப்படும் உபரிமதிப்பின் திரளை அதாவது மூலதனம் திரளுவதற்கான
அடிப்படையை உறுதிப்படுத்தியது.
மிக முக்கியமாக, அமெரிக்க உற்பத்தி முறைக்கு புதிய பொருளாதார மற்றும் அரசியல்
நிலைகள் தேவைப்படுகின்றன, அனைத்துக்கும் மேலாக ஐரோப்பாவில் என்று அமெரிக்க திட்டவல்லுநர்கள் அங்கீகரித்தனர்.
உலகம் 1920கள் மற்றும் 1930களின் நிலைகளுக்கு மீண்டும் சீர்கேடு அடைவது மாற்றாக இருந்தது. மேலும் இப்பொழுது,
ஆளும் வர்க்கம் சோசலிசப் புரட்சியைத் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
போருக்குப் பிந்தைய ஒழுங்கின் இரண்டாவது பெரிய அம்சம், நிதிமூலதனத்தின் மீது திணிக்கப்பட்ட
கட்டுப்பாடுகளாக இருந்தது. பிரெட்டன் வூட்ஸை வடிவமைத்தவர்கள் சர்வதேச வர்த்தகத்திற்கான வளம்பெறக் கூடிய
கட்டமைப்பு மீளக்கட்டியமைக்கப்பட வேண்டும் என்பதை அங்கீகரித்திருந்தார்கள். உலக முதலாளித்துவத்திற்கு எதிர்காலம்
இருக்க வேண்டுமென்றால், 1920களை பண்பிட்டுக் காட்டிய சுங்கவரித் தடைகள் மற்றும் போட்டி மிக்க மதிப்பிறக்கங்கள்
ஆகியவற்றின் அமைப்பு முறை அகற்றப்பட வேண்டி இருந்தது. ஆனால் போருக்குப் பிந்தைய அமைப்பு முறை எந்த விதத்திலும்
1914க்கு முந்தைய சகாப்தத்தைத் திரும்பக் கொணர முடியாது. உண்மையில், மாறுபாடாக, நாணயங்களுக்கு இடையில்
சமநிலையின்மை நிகழாதிருக்கும்படி நிதி மூலதனத்தின் இயக்கம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டது, அது சுங்கவரித் தடைகளுக்கும்
ஏனைய கட்டுப்பாடுகளுக்கும் வழிவகுத்தது அல்லது தேசிய அரசாங்கங்களின் பொருளாதார வேலைத்திட்டங்களைக் கீழறுத்தது.
பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் இவ்விரு சிறப்பியல்புகளை வலியுறுத்த விரும்புகிறேன், ஏனெனில்
அதன் நிலைமுறிவு அவற்றின் மீதுதான் மையப்படுத்தப்பட்டு இருக்கிறது.
போருக்குப் பிந்தைய ஒழுங்கின் பொறிவு
போருக்குப் பிந்தைய ஒழுங்கு முறையின் பொறிவு புறநிலை பொருளாதாரப் போக்குகள்
மற்றும் அவற்றுக்கு அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் கொள்கை ரீதியான பதில்களுக்கும் இடையிலான
பரஸ்பர வினையிலிருந்து விளைந்தது. யூரோ டாலர் சந்தையானது நிலையான நாணயங்களின் அமைப்பின் அழிவில் தீர்க்கமான
பாத்திரம் ஆற்ற இருந்தது. அது அதன் மூலத் தோற்றத்தை 1958ல் முழு நாணயமாற்றுக்கு பிரிட்டனால் எடுக்கப்பட்ட
நகர்வில் கொண்டிருந்தது. நாணயத்தின் மீதான ஓட்டத்தைத் தடுப்பதற்காக, பிரிட்டிஷ் நிர்வாகிகள் மூலதன நகர்வுகள்
மீது கட்டுப்பாடுகளைத் திணித்தனர். ஆனால் பிரிட்டிஷ் வங்கிகள், சர்வதேச சந்தைகளில் தங்களின் நிலைகளைப் பராமரிக்க
ஆர்வம் கொண்டிருந்தனர், சர்வதேச கடன் வழங்கலை மேற்கொள்ள அவர்களின் டாலர் மீதங்களைப் பயன்படுத்துவதன்
மூலம் இந்த ஒழுங்கு முறைகளைச் சுற்றி வழிகளைக் கண்டனர். 1960 களின் பின்பகுதியில், அமெரிக்க அரசாங்கம்
கட்டுப்பாடுகளைத் திணித்தபொழுது, அமெரிக்க நிதி நலன்கள் அதுபோல அவற்றைச் சூழ்ந்து கைப்பற்றுவதற்கு யூரோ டாலர்
சந்தை ஒரு பயனுள்ள இயங்குமுறை என்று கண்டன.
பிரெட்டன் வூட்ஸ் முறையானது இறுதியில் அதனைப் பொறிவுக்குக் கொண்டு வந்த
முரண்பாட்டின் மீது நிறுவப்பட்டது. அது முதலாளித்துவப் பொருளாதார விரிவாக்கத்தை முன்னெடுப்பதை நோக்கமாக்
கொண்டது. அது சர்வதேச பணநகர்வின் வளர்ச்சியைச் சார்ந்து இருந்தது, பிரதானமாக டாலர் வடிவில். ஆனால் டாலர்
பொதுச் சேர்மத்தின் வளர்ச்சியானது நாணயத்திற்கு தங்க ஆதரவு பின்புலம் கீழறுக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்பதை
அர்த்தப்படுத்தியது. இது அதிக இராணுவ செலவினங்கள் மற்றும் இப்பொழுது விரைவாய் பெருகி வரும் ஐரோப்பியப்
பொருளாதாரத்துக்கு முதலீடு பாய்வதன் விளைவாக, 1960களில் அமெரிக்காவிலிருந்து டாலர் வெளியேறுவது அதிகரித்தபோது
இது முதலாளித்துவ வர்க்கத்தின் பிரச்சினை ஆனது. தங்கத்திற்கும் டாலருக்கும் இடையிலான சமநிலையைப் பராமரிக்கும்
நோக்கத்துடன், அமெரிக்க நிர்வாகமானது மூலதன நகர்வின் மீது கட்டுப்பாடுகளைத் திணித்தது. ஆனால் மேல் நோக்கிய
எய்தலானது யூரோ டாலர் சந்தையைத் தூண்ட மட்டுமே செய்தது.
அரசாங்க ஒழுங்கமைப்பின் கட்டுப்பாட்டுக்கு வெளியே இந்த மூலதன சந்தையின் உதயமானது,
பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் ஸ்தாபகர்கள் எச்சரித்த அதே விளைவுளுக்கு --நாணய சீர்குலைவுக்கு -- வழிவகுத்தது.
1967ல் பவுண்ட்ஸ் அழுத்தத்தின் கீழ் வந்தது, அதனைத் தொடர்ந்து 1968ல் டாலர் அழுத்தத்தின் கீழ் வந்தது. இருந்தும்
நெருக்கடி தொடர்ந்தது. அதனது செலுத்துகைச் சமநிலைக் கணக்கில் அமெரிக்கா பற்றாக்குறையை அனுபவித்தது
மட்டுமல்லாமல், 1960 களின் இறுதியில் வர்த்தக சமநிலை பற்றாக்குறைக்கு நகர்ந்தது.
பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் கட்டமைப்புக்குள்ளே, வளர்ந்து கொண்டிருக்கும் நெருக்கடிக்கு
ஒரே தீர்வு அமெரிக்காவைப் பொறுத்தவரை வெளியில் அதன் செலவினங்களை வெட்டுவதாக இருந்தது -- அனைத்துக்கும்
மேலாக இராணுவ செலவினங்களை குறைப்பதன் மூலமாக-- மற்றும் இறக்குமதிகளை வெட்டுதற்கும் ஏற்றுமதிகளை
ஊக்குவிப்பதற்கும் உள்நாட்டில் பொருளாதாரப் பின்னடைவைத் திணிப்பதாக இருந்தது. வேறுவார்த்தைகளில் சொன்னால்,
பிரெட்டன் வூட்ஸ் அமைப்பைத் தொடர்தல் அமெரிக்காவின் சர்வதேச நிலையை பலவீனப்படுத்துவதை அர்த்தப்படுத்தி
இருக்கும். இதனை, செய்வதற்கு அமெரிக்கா நிச்சயமாய் தயார் செய்யாதிருந்தது. மேலும் உள்நாட்டு பொருளாதாரப்
பின்னடைவைத் திணித்தல் தொழிலாள வர்க்கத்துக்குள் எதிர்ப்பைத் தூண்டி விட்டது, மேலும் வியட்னாம் யுத்தம் மீதாக
வளர்ந்து வரும் அரசியல் நெருக்கடியைக் கூட்டியது.
இறுதி ஆய்வில், பிரெட்டன் வூட்ஸ் பொறிவானது உலகப் பொருளாதாரத்தின் வளர்ந்து
கொண்டிருக்கும் சர்வதேச மயமாதலின் பிரதிபலிப்பாக இருந்தது. அது சர்வதேச மூலதனச் சந்தையின் அபிவிருத்தி மற்றும்
அமெரிக்க நிர்வாகம் உள்பட, தேசிய அரசாங்கங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியே, உலகைச்சுற்றிலும் பண மூலதனத்தின்
(Money-Capital)
நகர்வு இவற்றின் அழுத்தத்தின் கீழ் அது நிலை முறிவுற்றது.
அண்மைய ஆய்வு ஒன்றின் வார்த்தைகளில்: "[பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின்] உடலுறுப்பு
முழுவதும் சார்ந்த சிதைவு எவ்விதத்திலும் சிலவேளை நிகழும் என்று சிறிது ஐயம் அங்கு உள்ளது. தேசியக் கொள்கைகளில்
இணக்குவித்து ஒருநிலைப்படுத்தல் அர்த்தத்தில் அதற்கு அதிகம் தேவைப்படுகிறது. நாடுகள் உள்நாட்டு வளர்ச்சிக்கு மேலும்
மேலும் தம்மை ஒப்படைத்துக் கொண்டிருந்தன, அதேவேளையில் தொழில் நுட்ப சக்திகள் இயக்கும் பொருளாதார
வளர்ச்சிக்கு சரக்குகள் சந்தைகள் மற்றும் மூலதனத்தைக் கூட சர்வதேசியமயமாக்குவது தேவைப்படுகிறது. பிரெட்டன்
வூட்ஸ் அமைப்பு முறையின் நெருக்கடி தேசியப் பொருளாதார ஒழுங்குமுறை சர்வதேசியவாத தர்க்கத்துடன் மோதும் திடீர்
மற்றும் குறிப்பிட்ட எடுத்துக்காட்டில் காணப்பட முடியும். 1971 சூழ்நிலைகளில், அமைப்பு முறையின் தொத்திரவுக்காளாகுதல்
ஐக்கிய அமெரிக்க அரசுகளின் கொள்கைகளில் இருந்து மிகவும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் பின் தொடர்ந்தது."
[Harold James, International Monetary
Cooperation Since Bretton Woods, p. 207].
அந்தக் கொள்கைகளின் அத்தியாவசிய உள்ளடக்கம் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் மேலாதிக்க
நிலையைப் பராமரிப்பதாக இருந்தது.
"ஐரோப்பியர்களிடம் பேசுகையில், [அமெரிக்க கருவூல செயலாளர் ஜோன்] கொன்னாலி
அமெரிக்க நிலையைப் பின்வரும் மொழிகளில் முன்வைக்கிறார்: 'டாலர் எங்களது நாணயமாக இருக்கலாம் ஆனால் அது
உங்களது பிரச்சினை'. அமெரிக்கப் பார்வையாளர்கள் முரட்டுத்தனமான பதிப்பைப் பெற்றனர்: 'வெளிநாட்டவர்கள்
எம்மைக் கசக்கிப் பிழிவதற்கு இருக்கின்றனர். எமது வேலை அவர்களை முதலில் கசக்கிப் பிழிவதாக இருக்கிறது.' " [
அதே மேற்கோள், பக்கம் 210].
"துணைநிலை அமைச்சரவை மட்டத்து உள் முகவர் குழு, 'வோல்க்கர் குழு' என்று
பொதுவாக அறியப்படும் அதில் கருவூலம், பொருளாதார ஆலோசகர்கள் அவை, அரசுத்துறை, தேசிய பாதுகாப்பு
ஆலோசகர் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர், அது 'சர்வதேச நாணய விவகாரங்களில் அடிப்படை தேர்வுகள்'
பற்றி ஒரு ஆய்வு அறிக்கை தயாரித்தது. அது கடந்ததைப் பற்றிய மீளாய்வை உள்ளடக்கி இருந்தது: "எமது பற்றாக்குறைகளுக்கு
இருக்கின்ற நிதி ஏற்பாடானது ஐக்கிய அமெரிக்க அரசுகளை அதிகமான வெளிநாட்டு இராணுவ செலவினத்தை மேற்கொள்வதற்கும்
ஏனைய வெளிநாட்டு கட்டுப்பாடுகளை பொறுப்பெடுத்துக் கொள்வதற்கும், உள்நாட்டு பொருளாதாரக் கொள்கைகளில்
கணிசமான அளவு நெகிழ்ச்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் அனுமதிக்கிறது.' ஆனால் அது கொள்கையின்
முக்கியமான இலக்கு 'நிதி அமைப்புமுறை பலவீனத்தால் திணிக்கப்பட்ட நிர்ப்பந்த நிலைகளிலிருந்து வெளிநாட்டுக்
கொள்கையை விடுவிப்பதாக' இருந்தது என்பதை மேலும் சேர்த்தது. குறிப்பிட்ட பண அமைப்பு முறைக்கு வெளிநாட்டுக்
கொள்கையை சரிசெய்து கொள்வது பொருத்தமற்றதாக இருந்தது. பின்னர், 1990களின் முன்னோக்கிலிருந்து திரும்பிப்
பார்த்து வோல்க்கர், 'ஜனாதிபதிகள் --நிச்சயமாக ஜோன்சன் மற்றும் நிக்சன்-- அவர்களின் தேர்வுகள் டாலரின் பலவீனத்தால்
மட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பதைக் கேட்க விரும்பமாட்டார்கள்.' இந்த நிர்ப்பந்த நிலைகளின் காரணமாக, சர்வதேச
நாணய அமைப்பு முறையின் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு ஐக்கிய அமெரிக்க அரசுகள் போதிய அளவுக்கு அதன்
கொள்கைகளைப் புதுப்பிக்க முடியவில்லை." [அதே மேற்கோள், பக்கம் 210-211].
அமெரிக்காவிற்குள்ளே, அமெரிக்காவின் நிலையைப் பராமரிக்கும் வழி, மற்றும் சாத்தியமான
அளவில் மேம்படுத்தும் நிலை கூட மூலதனத்தின் மீது கட்டுப்பாடுகளைக் கைவிடுவதாகவும் சர்வதேச நிதி அமைப்பு முறைக்கு
சுதந்திர சந்தைக்கோட்பாடுகளை அறிமுகப்படுத்துவதாகவும் இருந்தது என்ற நம்பிக்கை கொள்ளச் செய்தல்
வளர்ந்தது. இந்த வாதத்திற்குப் பின்னால் உள்ள காரணம் நிதி அமைப்பு முறை தொடர்ந்து டாலரை அடிப்படையாகக்
கொண்டிருக்கும், மற்றும் ஏனைய பங்காளர்கள் டாலர்களைப் பற்றிக் கொள்ள விரும்புவர் என்பதாக இருந்தது. அமெரிக்காவைப்
பொறுத்தமட்டில் சாதகமானது அதன் நாணயம் சர்வதேச நாணயமாகத் தொழிற்படும் என்பதாக இருந்தது.
போருக்குப் பிந்தைய ஒழுங்கின் கீழ், அரசியல் அதிகாரமானது பூகோளப் பொருளாதாரத்தை
ஒழுங்கமைக்க, அனைத்துக்கும் மேலாக நிதிச் சந்தைகளை ஒழுங்கமைக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் போருக்குப்
பிந்தைய ஸ்திரத்தன்மை தன்னால் உண்டுபண்ணப்பட்ட, உற்பத்தி சக்திகளின் அதே அபிவிருத்தி புதிய முரண்பாடுகளை எழ வைத்தது.
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு சர்வதேச நிதி அபிவிருத்தி, நிதி மூலதனத்திற்கான பெரிய அளவிலான சுதந்திரமான இயக்கத்தை
அவசியமாகக் கொள்ளல் தேவைப்பட்டது --இவ்வாறு அது பழைய ஆட்சியுடன் மோதலுக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்தப்
புதிய சூழ்நிலையில், அமெரிக்கா தனது போட்டியாளர்களுக்கு எதிராக தனது பொருளாதார நிலையை பழைய ஒழுங்கை
அகற்றுவதன் மூலம் மட்டுமே பேணமுடியும் என்று அமெரிக்கா உணர்ந்தது.
எவ்வாறாயினும், இங்கு உள்ளடங்கி இருப்பது முழு அழிவு இன்னும் இல்லை என்றாலும்,
போருக்குப் பிந்தைய சமநிலையின் மையத் தூண்களுள் ஒன்றினது கீழறுந்து போதலாக இருந்தது. நாம் குறிப்பிட்டவாறு,
அமெரிக்கா அதனது சொந்த நலன்களுக்காக போருக்குப் பிந்தைய ஒழுங்கைக் கட்டியமைத்தது, அதேவேளை, ஏனைய முதலாளித்துவ
அரசுகளின் நிலையை மேம்படுத்தியது. இப்பொழுது அமெரிக்காவின் நலன்களை அதன் போட்டியாளருக்கு எதிராக
முன்னெடுத்தல் என்ற பெயரில் போருக்குப் பிந்தைய நாணய அமைப்பு முறை கிழித்து எறியப்பட்டிருந்தது.
நிலையான நாணய உறவு முறைகளின் அமைப்பு ஒரு முறை அகற்றப்பட்டதும்,
சொல்வதென்றால், மூலதனத்தின் பூதம் புட்டியை (போத்தலை) விட்டு வெளியே வந்தது. மூலதனப் பாய்ச்சலின் மீதான
கட்டுப்பாடுகள் இனியும் பராமரிக்கப்பட முடியாது மற்றும் அது நிதிச் சந்தைகளின் ஒத்துழைப்பு இல்லாமல் தேசிய
பொருளாதார நிகழ்ச்சி நிரலை மேற்கொள்வதென்பது அதிகரித்த அளவில் கடினமானதாக ஆகிவிட்டது. கடைசியாக முயற்சித்த
அரசாங்கம் 1980களில் பிரான்சில் மித்திரோண்ட் அரசாங்கமாக இருந்தது. பின்நிகழ்வான நிதி நெருக்கடியை எதிர்கொள்கையில்
அது அம்முயற்சியை கைவிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டது.
இராணுவ வாதத்துக்குத் திரும்புதல்
பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் பொறிவு, 1970களின் ஆரம்பத்தில் பூகோள பொருளாதாரக்
கொந்தளிப்புக்களின் காலகட்டத்தை முன்னறிவித்தது. அது பூகோள முதலாளித்துவ ஒழுங்கின் வரலாற்றுப் பரிமாணத்தில்
ஒரு திருப்புமுனையைக் குறித்தது. 1972-73ல் விரைவான பணவீக்கமானது குறுகிய காலத்தில் 1974-75ல் பொருளாதாரப்
பின்னடைவால் தொடரப்பட்டது. போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், அந்தப் புள்ளியில் மிக ஆழமானதாக இருந்தது.
பொருளாதாரப் பின்னடைவானது ஆழமாகப் போய்க் கொண்டிருக்கும் கட்டமைப்பு மாற்றங்களின் விளைபொருளாக அல்லது
வெளிப்பாடாக இருந்தது.
இறுதி ஆய்வில், போருக்குப் பிந்தைய விரிவாக்கம் அமெரிக்க முதலாளித்துவத்தின் மிகுதியான
உற்பத்தி வழிமுறைகள் ஏனைய வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளுக்கு நீட்டிப்பதன் மேல் தங்கி இருந்தது. இந்த
வழியில், 1920கள் மற்றும் 1930 களின் நெருக்கடிக்கு அடி ஆதாரமாக இருக்கும் இலாபவீதத்தில் வீழ்ச்சி வெல்லப்பட்டது
மற்றும் தலைகீழாகத் திருப்பப்பட்டது. ஆனால், 1960கள் அளவில், போருக்குப் பிந்தைய விரிவாக்கத்தால் சாத்தியமானதாகச்
செய்யப்பட்ட அதே மூலதனத் திரட்சி, இலாபவீதம் வீழ்வதற்கான போக்கு மீண்டும் தோன்ற ஆரம்பிப்பதை உறுதிப்படுத்தியது.
ஒரு மதிப்பீட்டின்படி, இலாபவீதம் 1940 களில் 22 சதவீதத்திலிருந்தும் 1970 களில் 12 சதவீத்ததிலிருந்தும் கிட்டத்தட்ட
50 சதவீதம் அளவில் வீழ்ச்சி அடைந்தது.
1974-75 பொருளாதாரப் பின்னடைவு சீரடைதலால் பின்தொடரப்பட்ட அதேவேளை, அங்கு
1960 களின் நிலைமைகளுக்கு திரும்பவில்லை. 1970களின் இறுதிப் பாதி "தேக்க வீக்கம்" என்று அறியப்படும் இயல்நிகழ்ச்சியால்
--அதிகரித்த பணவீக்கத்துடன் இணைந்த உயர்ந்துவரும் வேலையின்மையால் குறிக்கப்பட்டது. தேக்கவீக்கமானது, மற்ற
விஷயங்கள் மத்தியில், கீன்சிய குறிப்புக்கள் என்று அழைக்கப்படுவதன் முடிவினை அறிவித்தது. கீன்சிய குறிப்புக்களில்,
அதிகரித்த அரசாங்க செலவு, வேலையின்மையைக் குணப்படுத்தும் என கூறப்பட்டது. புதிய பொருளாதார நிலைமைகளில்
அதிகரித்த அரசாங்கச் செலவு கூடிவரும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தணிப்பதைக்காட்டிலும் கிளறிவிடுவது மட்டுமே
காணப்படுகிறது. இது தற்காலிக மற்றும் சூழ்நிலைகளின் இணைவுகளின் காரணிகளில் இருந்து எழவில்லை என்பதன் காரணமாக
ஆகும். பதிலாக பிரச்சினைகள் உற்பத்தி முறையின் அதே கட்டமைப்பில் வேரூன்றி இருந்தன.
கார்ட்டர் ஆட்சி பொருளாதார வளர்ச்சியில் அதிகரிப்பை உருவாக்குதற்கான அதன் முயற்சிகள்
முற்றிலும் தோல்வி அடைந்தன, அமெரிக்க டாலரைப் பொறுத்தமட்டில் பிரதான நெருக்கடிக்கு வழிவகுத்தது. அது
1978க்கும் 1979க்கும் இடையில் மதிப்பில் (பெறுமதியில்) அழுத்து சுமையானது. டாலர் நெருக்கடி 1979ல் அமெரிக்க
மத்திய ரிசேர்வ் வாரியத்தின் தலைவராக போல் வோல்க்கரை நியமித்ததுடன் அமெரிக்கக் கொள்கையில் கூர்மையான
திருப்பத்திற்கான தூண்டுதலாக ஆனது.
வோல்க்கரின் வேலைத்திட்டம், மற்றும் அவருக்குப் பின்னால் உள்ள நிதி நலன்கள், ஈவிரக்கமற்று
ஒளிவு மறைவற்றதாக இருந்தன. நிதிவழங்குதலில் வெட்டுக்கள் மற்றும் வட்டி வீதத்தில் அதிகரிப்பு வழியாக அமைப்பு முறையிலிருந்து
பணவீக்கம் இல்லாதொழிக்கப்பட இருந்தது. சாராம்சத்தில், அவரது வேலைத்திட்டம் அமெரிக்கப் பொருளாதாரத்தை
முற்றிலும் மறு சீரமைப்பதற்கான நிதிமூலதனத்தின் கோரிக்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தியது. இப்பொழுது போட்டித்திறன்
அற்றதாக இருக்கும் மூலதனத்தின் மொத்த பகுதிகளும் துடைத்துக் கட்டப்பட இருந்தது. அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியாகவும்
தொழிற்துறை மறு ஒழுங்கமைக்கப்பட இருந்தது. இது "பூகோளமயமாக்கலின்" ஆரம்பமாக இருந்தது --வெறுமனே
நாட்டுக்கு வெளியில் உள்ள பகுதியில் உற்பத்தியை நிறுவுவதாக இல்லை, மாறாக உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கின் பிரிந்து
போதல் மற்றும் மலிவான கூலி உழைப்பு நாடுகளில் உயர் உழைப்பு பகுதிப்பொருட்கள் உற்பத்தியாக இருந்தது.
1970களின் இறுதியில் உண்மையான வட்டி வீதங்கள் எதிர்மறையாக மாறிவிட்டிருந்ததன் பின்னர்
அதன் திரும்பப் பெறும் வீதத்தை அதிகரிக்க நிதி மூலதனத்தை அனுமதித்தல் தொழில்துறை மூலதனத்தை சக்தி மிக்கவகையில்
மறு ஒழுங்கு செய்தல் ஆகிய இரண்டிற்காகவுமான வழிமுறைகளாக உயர் வட்டி வீதங்கள் இருந்தன.
மார்க்ரெட் தாட்சரின் பிரிட்டிஷ் டோரி அரசாங்கத்தால் பின்பற்றப்பட்ட வோல்க்கர்
வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரேயடியான தாக்குதலை அர்த்தப்படுத்தியது. 1981ல் றேகன்
நிர்வாகம் 12,000 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை வேலைநீக்கம் செய்தது மற்றும் அவர்களின் தொழிற்சங்கமான
PATCO- வை
அழித்தது. பிட்டனில் தாட்சர் அரசாங்கம் எஃகு இரும்பு தொழிலாளர்கள் மீதும் பின்னர் சுரங்கத் தொழிலாளர்கள் மீதும்
தொடரான தாக்குதல்களைத் தொடுத்தது.
போருக்குப் பிந்தைய காலத்து கீன்சிய சீர்திருத்தவாத வேலைத்திட்டம், மற்றும் நிதி
மூலதனத்தின் சுதந்திர சந்தை வேலைத்திட்டத்தால் அதனை பதிலீடு செய்தது சர்வதேச ரீதியாக மிகவும் பாரதூரமான
ஆக்கிரமிப்புக் கொள்கைகளுக்கு விலகுதலைக் கண்டது. இந்த விலகலின் முதலாவது வெளிப்பாடுகளுள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத்
தலையீடு ஒன்றாக இருந்தது. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜ்பிக்னீவ் பிரிஜேஜென்ஸ்கியின் தூண்டுதலின் பேரில் கார்ட்டர்
ஆட்சியானது, சோவியத் ஒன்றியத்தை நீண்ட கால யுத்தத்துக்கு இழுத்ததன் மூலம் அதனைப் பலவீனப்படுத்தும் விரைவான
நோக்கத்துடன் கம்யூனிச எதிர்ப்பு இஸ்லாமிய முஜாஹைதீன் படைகளுக்கு மறைமுக உதவிக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்தது.
அதிகமாய் இராணுவ வாதத்துக்குத் திரும்பும் விதமாய், ஐக்கிய அமெரிக்க அரசுகள்
லெபனானில் தலையீடு செய்தது, கிரெனடாவை ஆக்கிரமித்தது மற்றும் தாட்சர் அரசாங்கத்தின் மால்வினாஸ் யுத்தத்துக்கு
ஆதரவளித்தது. சோவியத் ஒன்றியம் தொடர்பாக, சீர்குலைக்கும் பொதுவான கொள்கை அங்கு இருந்தது. றேகன் நிர்வாகம்
சோவியத் அதிகாரத்துவத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடன் மறு ஆயுதமயப்படுத்தல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தது.
பணவீக்கத்தை சரிசெய்து கொண்ட பின்னர், 1985ல் ஆயுதங்களுக்கு செலவிடும் பொழுது றேகனின் இராணுவ வரவு- செலவுத்
திட்டம் அதன் உச்சிக்கு சென்றது. அது கொரிய மற்றும் வியட்னாமிய யுத்தங்கள் உள்ளடங்கலாக முந்தைய பதிவுச் சான்றுகளை
மிஞ்சியது. ஐரோப்பாவில் இராணுவ அழுத்தங்களும் கொண்டு வரப்பட்டன. அக்கண்டத்தில் க்ரூஸ் ஏவுகணைகளை நிறுத்தி வைப்பதற்கான
வேலைத்திட்டத்தின் நோக்கங்களுள் ஒன்று சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்துக்கும் ஐரோப்பிய அரசுகளுக்கும்
இடையில் நெருக்கமான உறவுகளைத் தடுப்பதற்காக இருந்தது.
வளர்ச்சி பின்தங்கிய நாடுகள் என்று அழைக்கப்படுவனவற்றை கவனத்தில் கொள்கையில்,
1982ல் வெடித்த கடன் நெருக்கடி, அதனுடன் பெரிய திருப்பத்தைக் கொண்டு வந்தது. சர்வதேச நாணய நிதியம் (IMF)
மூலம் பல்வேறு தேசிய முதலாளித்துவத்தினது கொள்கைகளின் தேசிய அபிவிருத்தி மீது அமெரிக்கா தாக்குதலை
ஆரம்பித்தது. சர்வதேச நாணய நிதியத்தின் புதிய "கட்டமைப்பு சரிசெய்துகொள்ளல்" வேலைத்திட்டங்கள் சந்தைகள் திறப்பதை,
அரசாங்க செலவினங்களை வெட்டலை, பண மதிப்பிறக்கங்களை (பெறுமதி குறைப்புக்களை) உலக சந்தைக்கான பணப்பயிர்
உற்பத்தியை மற்றும் பொதுவான அரசாங்கக் கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்தல்களை தரைமட்டமாக்கவும் கோரியது.
1991ல், சோவியத் ஒன்றியத்தின் பொறிவானது புதிய சூழ்நிலையை உண்டு பண்ணியது. பிரதான
முதலாளித்துவ அரசுகளுக்கு தசாப்தங்களாக மட்டுப்பாடுகளாக இருந்து வந்த, உலகின் அனைத்துப் பகுதிகளும் இப்பொழுது
திறந்திருந்தது. முன்னணி அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை வட்டாரங்களைப் பொறுத்தவரை, அப்போதிருந்து வேறு
எந்த வல்லரசும் அல்லது வல்லரசுகளின் குழுவும், இந்த சூழ்நிலையை சாதகமாக எடுத்துக் கொள்ளக்கூடியதாக மற்றும்
அதன் மூலம் பூகோள மேலாதிக்கத்திற்காக ஐக்கிய அமெரிக்க அரசுகளை சவால் செய்யாமலிருப்பதை உறுதிப்படுத்துவதாக
இருந்தது.
1990களில், தசாப்தகாலம் ஈராக்கிய ஆட்சியை ஆதரித்த பின்னர், அமெரிக்க நிர்வாகமானது
வளைகுடாவில் இராணுவ அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த சாக்குப் போக்கினைப் பற்றிக்
கொண்டது. அவ்வாறு செய்வதன் மூலம் அமெரிக்காவின் எந்த சாத்தியமான போட்டியாளர்களுக்கும் அதன் இராணுவ ஆற்றலை
எடுத்துக் காட்டுவதைத் தெளிவாக வழங்கியது.
யூகோஸ்லாவியா மீதான குண்டு வீச்சில் கூட அமெரிக்க யுத்த நோக்கங்கள் தெளிவாக
இருக்கின்றன. அவையாவன சுதந்திர சந்தைக் கோட்பாடுகளின் அடிப்படையில் உலகப் பொருளாதாரத்தை மறு ஒழுங்கமைப்பதற்கான
அனைத்துத் தடைகளையும் அகற்றுதல், அமெரிக்க கார்ப்பொரேஷனின் மேலாதிக்கத்தை உத்திரவாதம் செய்தல் ஆகியனவாகும்.
கிளிண்டன் அதனை முன்வைத்தவாறு: "நாம் பலமான பொருளாதார உறவைப் பெறவிருக்கிறோம் என்றால் அது, உலகம்
முழுவதும் நாம் விற்கக்கூடிய திறமை உட்பட, ஐரோப்பா முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது... அதுதான் இந்தக்
கொசொவோ பற்றிய விஷயம் எல்லாம்." அல்லது தோமஸ் பிரைட்மேன் முன்வைத்தவாறு: "சந்தையின் மறைவான கரம்
மறைவான முஷ்டி இல்லாமல் ஒருபோதும் வேலை செய்யாது-- மக்டொன்னால் டக்ளஸ் இல்லாமல் மக்டொனால்ட் பூத்துக்
குலுங்காது."
வளர்ந்துவரும் தன்னிச்சைவாதம்
கடந்த தசாப்தத்தில் அமெரிக்கா மூன்று பிரதான யுத்தங்களை நடத்திய விதத்தில் முக்கிய
வேறுபாடுகள் இருக்கின்றன. அனைத்துக்கும் மேலாக, அவை தன்னிச்சைவாதம் நோக்கிய வளர்ந்து வரும் போக்கை
விளக்குகிறது. வளைகுடா யுத்தம் இன்னும் சில மட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் அவை கட்டமைப்புக்குள் நடத்தப்படுகிறது.
கொசோவாவுக்கு எதிரான யுத்தம் நேட்டோவின் ஆதரவின் கீழ் நடத்தப்பட்டது. ஆனால் ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா
சில நேரங்களில் பிரிட்டிஷ் மற்றும் ஏனையவர்களை வற்புறுத்தி ஒரு புறமாக ஒதுக்கித்தள்ளும் என்பதுடன் அதன் சொந்த
நிபந்தனைகளின் பேரில் யுத்தத்தை நடத்தும் என்று வலியுறுத்தியது.
ஆப்கானிஸ்தானுக்குப் பிறகு கொள்கை என்னவாக இருக்கும்? இன்னொரு யுத்தத்தை மேற்கொள்ளும்.
புஷ் குறிப்பிட்டவாறு: 21ம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான் முதலாவது யுத்தமாக இருக்கும். அல்லது, அவரே பின்னொரு
நிகழ்ச்சியில் குறிப்பிட்டவாறு, 2002ம் ஆண்டு யுத்த ஆண்டாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இந்தக் கொள்கை அமெரிக்காவை
அதன் போட்டியாளர்களுடன் மோதுவதற்கு வழிவகுக்கும்.
கடந்த 25 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால்-- பிரெட்டன் வூட்ஸ் பொறிவுக்குப் பின்னரும்
1974-75 பின்னடைவுக்குப் பின்னரும்-- இணைந்த சூழ்நிலைகளினால் ஆணையிடப்படும் அனைத்து திருகு மற்றும் திருப்பங்கள்
வழியாக, அமெரிக்கக் கொள்கையுடன் தொடர்ச்சியான நூலிழை அங்கு இருக்கிறது: அதன் நலன்கள் பற்றிய என்றுமில்லாத
அளவு வலியுறுத்தல் மற்றும் முதலாளித்துவ பொருளாதாரம் ஒட்டு மொத்தமாக எந்த விதமான நீண்டகால நிர்வாகத்தையும்
கைவிடுவதாகத்தான் இருக்கும். இங்கு, பூகோள அமைப்பு முறையின் அதே அடிப்படையை அச்சுறுத்திய தசாப்தகால
நிதிப்புயல்கள் வழியாக கடந்து இருப்பினும், பிரதான வல்லரசுகள் பூகோள நிதியின் ஒழுங்குபடுத்தல் பற்றிய ஒழுங்குமுறை
மீது எந்த உடன்பாட்டிலிருந்தும் மேலும் விலகி இருக்கின்றன.
கடந்த தசாப்தத்தின் பொழுது உண்மையில் எதிர்பாரா சூழ்நிலை வெளிப்பட்டிருக்கிறது.
உலகின் ஏனைய பகுதியின் மீது மேலாதிக்கம் உடைய நிதிச் சக்தி சார்ந்திருக்க ஆரம்பித்திருக்கிறது. இரண்டாவது உலக யுத்தத்தின்
முடிவில் அமெரிக்கா உலகின் ஏனைய பகுதிக்கு முதன்மை மூலதன அளிப்பாளராக இருந்தது. இப்பொழுது அது உலகின் ஏனைய
பகுதி மீது சார்ந்திருக்கிறது, கடன் தீர்வுத் திறமுடையதாக இருக்க மட்டும் ஒருநாளைக்கு 1 பில்லியன் டாலர்கள் உள்பாய்வது
தேவைப்படுகிறது. மீண்டும், ஒரு குறிப்பிட்ட புள்ளியில், இது ஏனைய வல்லரசுகளுடன் மோதல்களை எழ வைக்கும்.
அமெரிக்கா ஒருவகை பாஸ்டியன் பேரத்தில் நுழைந்திருக்கிறது. 1970களில், அது
பிரெட்டன் வூட்ஸ் அமைப்பு ஒழுங்கை அகற்ற முடிவு செய்தது மற்றும் ஜப்பானிலும் ஐரோப்பாவிலும் அதன் போட்டியாளர்கள்
மீது அதன் மேலாதிக்கத்தைப் பராமரிக்க வேண்டி சுதந்திர சந்தையைத் தள்ளியது. இது அமெரிக்கா மீதான ஒப்பீட்டு மேலாதிக்கத்தைப்
பராமரிக்க சேவை செய்தது. ஆனால், அதேவேளை அமெரிக்கா, அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு அல்லது முதலாளித்துவ
அரசுகளின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் வளர்ந்திருக்கும் இன்னொரு பலமான சக்திக்கு --உலக நிதிச் சந்தைக்கு கீழடக்கி
வைக்கப்படுவதாக ஆனது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அமெரிக்கா, அதன் மேலாதிக்கத்தை நிலைநாட்ட பெருமுயற்சி
கொள்வதில், பூகோள முதலாளித்துவ பொருளாதாரத்தின் அனைத்து முரண்பாடுகளுக்கும் தன்னையே கீழ்ப்படுத்திக் கொள்வதைச்
செய்தது. அதுதான் வருகின்ற காலகட்டத்தில் விரைவான மற்றும் அதிரவைக்கும் பொருளாதார மற்றும் எல்லாவற்றுக்கும்
மேலாக, அரசியல் விலகலை தோன்ற வைக்க இருந்தது.
உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கு
முடிவாக, நான் இரு விஷயங்களை வலியுறுத்த விரும்புகிறேன். முதலாவதாக, இராணுவவாதத்தின்
வெடிப்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பலத்தின் வெளிப்பாடாக இல்லை, மாறாக இன்னும் சொல்லப்போனால் அதன்
ஆழமான சிதைவு மற்றும் சீரழிவு ஆகும். உண்மைகள் மற்றும் விவரங்கள் அடிப்படையில் இதனை நாம் பத்திரமயப்படுத்தி
இருக்கிறோம்.
இந்த சீரழிவு மக்களின் மனோதத்துவம் மற்றும் அரசியல் நனவின் அபிவிருத்தியில் தீர்க்கமான
பாத்திரம் வகிக்க இருந்தது. அவரது யுத்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் புஷ் ஆதரவை வெல்வதற்கு முயற்சித்த புள்ளியில்,
இராணுவவாதத்தை உதயமாக வைத்த அதே சிதைவு என்ரோன் ஊழலில் அதன் வெளிப்பாட்டைக் கண்டது. இந்த நெருக்கடி
புஷ் நிர்வாகத்தின் சமூக ஆதரவாளர்கள் ஏமாற்றுக்காரர்கள் மற்றும் மோசடிக்காரர்களின் கும்பல் என்று வெளிப்படுத்தியது.
மேலும் அது பாரதூரமிக்க விளைபயன்களைக் கொண்டிருக்கிறது, ஏனெனில் என்ரோன் விதிவிலக்கானதாக இருக்கவில்லை.
அது "புதிய பொருளாதாரம்" என்று அழைக்கப்படுவதின் அடையாளமாக இருந்தது. அதன் மையச் செயல்பாடானது,
ஒட்டுமொத்த நிதி சூறையாடலை சாத்தியமாக்க, பங்கு வைத்திருப்போரின் மதிப்பை (பெறுமதியை) உயர்த்தும் முயற்சியில்
நோக்கம் கொண்டு, மிகவும் போலித்தனமான நிதி செயல்முறைகளாக மாறிவிட்டிருக்கிறது.
இரண்டாவது அம்சம் எது முன்னோக்கு தொடர்பானது. எமது மூலோபாயம் உலக சோசலிசப்
புரட்சி ஆகும். இது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை எண்ணிப்பார்த்தல் அல்லது மீள எண்ணிப்பார்த்தல் தேவைப்படுகிறது.
உலக சோசலிசப் புரட்சி என்பது பல்வேறு தேசிய புரட்சிகளின் ஒரு வகை அளவு ரீதியான கூட்டல் என்று கருதப்படும்
அபாயம் அங்கு இருக்கிறது. ஆனால் எமது மூலோபாயமான உலக சோசலிசப் புரட்சியின் அர்த்தம், நாம் உலக சோசலிசத்தின்
முன்னோக்கை --முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தின் ஆழமாகிவரும் முரண்பாடுகளில் இருந்து விளையும் பொருளாதாரப்
பெருங்குழப்பங்களுக்குள் மூழ்குதல் மற்றும் ஏகாதிபத்திய யுத்தத்தின் வளர்ந்துவரும் ஆபத்துக்களுக்கு ஸ்தூலமான விடையாக--
தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம்; சந்தையின் அராஜகமல்ல, பகுத்தறிவு விதிகளுக்கு ஏற்ற உண்மையான சர்வதேச
திட்டமிடல்; உற்பத்தி சக்திகளின் மீது உண்மையான ஜனநாயகக் கட்டுப்பாட்டை சாத்தியமாக்கும் சமூக உடைமை ஆகியவற்றை--
முன்னெடுக்கிறோம் என்று வலியுறுத்த வேண்டும்.
போரும் அகிலமும் என்ற தனது புகழ்பெற்ற சிறு நூலில் ட்ரொட்ஸ்கி எழுதினார்: "முதலாளித்துவத்தின்
ஏகாதிபத்திய சிக்கல் நிலையை பாட்டாளி வர்க்கம் எதிர் கொள்ளக்கூடிய ஒரேவழி உலகப் பொருளாதாரத்தை சோசலிச
ஒழுங்கில் அமைக்கும் நாளாந்த செயல்முறை வேலைத்திட்டத்தால் எதிர்ப்பது மூலமே ஆகும்." அது இன்று இன்னும் கூடுதலான
பலத்துடன் பொருந்துகின்றது.
ஆனால் வாய்ப்பு வசதிகள் யாவை? நான்காம் அகிலமானது புறநிலை அபிவிருத்திப் போக்குகளின்--உலகப்
பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு முறைக்கும் இடையில் ஆழமாகிவரும் மோதலின்-- நனவான வெளிப்பாடுதான் அதன்
முன்னோக்கு என்ற புரிந்துணர்வின் மீது தளப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மோதல்தான் சோவியத் ஒன்றியத்தின்
பொறிவைக் கொண்டு வந்தது மற்றும் இப்பொழுது அதன் வெளிப்பாட்டை வளங்களுக்கான பூகோளப் போராட்டத்திலும்
என்றும் இல்லாத அளவு அதிகரித்து வரும் யுத்த அபாயத்திலும் காண்கிறது.
ஆனால் இந்த புரிதல் தாமே வெட்டி அகற்றிக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் நனவுக்கான
பாதையைக் கண்டறியுமா? புறச் சூழ்நிலையின் பகுதியாக நாம் ஆற்றும் பாத்திரத்துக்கு வெளியே இந்தக் கேள்விக்கு விடை
அளிக்கப்பட முடியாது.
மார்க்ஸ் முன்வைத்தவாறு: " புறநிலை உண்மை மனித சிந்தனைக்கு பங்களிக்கமுடியுமா என்ற
பிரச்சினை தத்துவப் பிரச்சினை அல்ல மாறாக நடைமுறைப் பிரச்சினை ஆகும். மனிதன் உண்மையை கட்டாயம் நிரூபிக்க
வேண்டும், அதாவது, நிலவும் நிலைமையை மற்றும் சக்தியை, நடைமுறையில் சிந்தனையின் இப்பக்கத் தன்மையை நிரூபிக்கவேண்டும்.
யதார்த்தமான அல்லது யதார்த்தமற்ற சிந்தனை, நடைமுறையில் இருந்து அந்நியப்பட்டது என்ற விவாதம் முற்றிலும் புலமைவாத
பிரச்சினையாக இருக்கிறது."
இந்த ஆராய்ச்சிமுறைஇயல் மற்றும் தத்துவார்த்த ரீதியாக பார்க்கும் முறையானது, செயலூக்கத்துடனான
தலையீடு இல்லாது வெளியில் அமைப்பின் நிலையை தீர்மானிப்பது என்பது நவீன இயற்பியலில் (Modern
physics) அபிவிருத்திகளில் சாதாரணமாய் இயலாதுள்ளதுடன் மற்றும்
அரசியல் கோளத்தில் அபிவிருத்திகளிலும், இயலாது என்பது இவ்விரண்டின் மூலமும் நிரூபணமாக்கப்பட்டிருக்கிறது.
சோசலிசப் புரட்சி முன்னோக்கு, தொழிலாள வர்க்கத்தில் பரந்த ஆதரவை வென்றெடுக்கக்
கூடியதாக இருந்தது. இது எந்த சூழ்நிலைமைகளின் கீழ்? ஏகாதிபத்தியப் பகைமைகளின் வெடிப்பு மற்றும் இறுதியான
1870லிருந்து 1913 வரையிலான பூகோளமயமாக்கலின் முதலாவது சகாப்தத்துடன் தொடர்புடையதாக இருந்த யுத்தம்,
மற்றும் அதனைப் பின்தொடர்ந்த நிலைமைகளின் கீழான ஆழமான சமநிலையின்மையின் காலகட்டமாகும். பூகோளமயமாக்கலின்
இரண்டாவது சகாப்தத்தில் உள்ள எமது முன்னோக்கு, இந்த வரலாற்று அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
(முற்றும்)
|