World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்:உலகப் பொருளாதாரம்

Globalisation, Jospin and the political program of Attac

பூகோளமயமாக்கலும் ஜொஸ்பனும் அற்றாக்கின் அரசியல் வேலைத்திட்டமும்

பகுதி 2

By Nick Beams
11 September 2001

Back to screen version

அற்றாக்கின் வேலைத்திட்டமான ''ரொபின் வரி'' [Tobin tax] யானது, 1971 ஆம் ஆண்டு தங்கத்திற்கான டொலரின் மாற்று நாணயத்திட்டத்தை ஜனாதிபதி நிக்சன் இல்லாது செய்த பின்னரும், உறுதிப்படுத்தப்பட்ட நாணய மாற்றுத்திட்டம் முடிவிற்கு வந்த பின்னரும், 1972 ஆம் ஆண்டு முதல் முதலாக முன்வைக்கப்பட்டது.

ரொபின் ஆங்கில பொருளியலாளரும், பிரெட்டன் வூட்ஸ் [Bretton Woods] உடன்படிக்கையினது ஆக்கதாரருமான ஜோன். மேனாட் கெய்ன்ஸ் [John Maynard Keynes] இன் ஆதரவாளருமாவார். கெய்ன்ஸ் இன் கொள்கைகள் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிந்திய காலகட்டத்தில் முதலாளித்துவ அரசாங்கங்களின் வழிகாட்டும் கொள்கையாக இருந்தன. சர்வதேச மூலதனத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு ஒழுங்கமைப்பு இல்லாது, சர்வதேச நிதிச்சந்தைகளின் கோரிக்கைகளுடன் முரண்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும் தேசிய அரசாங்கங்களின் கொள்கைகள் இல்லாது ஒழிக்கப்படுவதை அவர் கண்டுகொண்டார். இதன்படி அவர் சர்வதேச நாணய மாற்றீடு மீது 0.1% இற்கும் 1% இடையிலான வரிவிதிப்பதற்கு முன்மொழிந்தார். இவ்வரியானது நீண்டகால முதலீடுகளின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது, ஏனெனில் அம்மூலதனத்தின் செலவின் மீது இது சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தும். எவ்வாறிருந்தபோதிலும் பல சந்தர்ப்பங்களில் சில நாட்களுக்குள் நிகழும் மூலதனத்தின் ஊக இயக்கத்தின் போது ஒரளவுளவு குறைந்த வரிவிகிதம் கூட முக்கிய விளைவை ஏற்படுத்தக்கூடும். இது ''சர்வதேச மூலதன இயக்கத்தினை கட்டுப்படுத்தி'' சூடான நிதியின் [Hot money] மீது கட்டுப்பாட்டை உருவாக்கி தேசிய அரசுகளுக்கு ஏதாவது மாற்றீட்டுக்கான வழிவகுக்கும் என அவர் கருதினார்.

இவ் வரியானது முதலாவதாக முன்மொழியப்பட்டதிலிருந்து சர்வதேச நிதிச்சந்தையானது பலமடங்குகளாக அதிகரித்துள்ளது. சர்வதேச முதலீடுகளுக்கான வங்கி அறிக்கையின் படி சர்வதேச நிதிச்சந்தை பரிமாற்றப்படும் பணத்தின் அளவு 1970 இல் 18 பில்லியன் டொலராக இருந்தது, 1990 இல் 1,500 பில்லியன் டொலராக ஆக அதிகரித்துள்ளது.

முதலாவதாக குறிப்பிடப்படவேண்டியது என்னவெனில் இப்படியான தொகையான உலக மூலதன பாய்ச்சலில் இவ்வரியானது முற்றுமுழுதாக தாக்கமெதனையும் ஏற்படுத்தியிருக்கமுடியாது. இவ்வரியின் ஆதரவாளர்களின் கருத்தை கவனத்திற்கு எடுக்காவிட்டாலும், கடந்த காலத்தின் முக்கிய பொருளாதார நெருக்கடிகளான 1992 இன் ஐரோப்பிய நாணய மாற்றுவீதத்தின் சமனற்ற நிலைமையை, 1994-95 மெக்சிக்கோவின் பேசோ [PESO] அல்லது 1997-98 ஆசிய நெருக்கடியையோ எந்தவிதத்திலும் தடுத்து நிறுத்தியிருக்கமுடியாது.

இவ்வரியானது ஆகக்கூடியளவான 1% ஆக விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, தொடர்ந்த நாணயங்களின் பெறுமதி இழப்பின் முன்னர் இது முற்றுமுழுதாக பெறுமதியற்றாகவே இருந்திருக்கும். நிதிச்சந்தைகளின் அப்படியான ஒரு சமநிலையின்மையானது வங்கிகளையும், நிதிநிறுவனங்களையும், பூகோள முதலீட்டு நிதிகளையும் தமது இலாபத்திற்காக நிதியை இடம்மாற்ற செய்யும்.

வேறுவார்த்தைகளில் கூறுவதானால், இப்படியான ஒரு வரி தொடர்பாக போட்டி முதலாளித்துவ நாடுகளுக்கு மத்தியில் ஒரு உடன்பாடு ஏற்படும் என கருதினாலும், அவர்களுக்கு மத்தியிலிருக்கும் போட்டி நலன்களானது அதனை சாத்தியமற்றதாக செய்யுவதுடன், அது சர்வதேச சந்தைகள் ஓரளவு ஸ்திரமாக இருக்கும் காலகட்டங்களிலேயே இயங்கக்கூடியதாக இருக்கும். மூலதனத்தின் வேகமான இயக்கத்தின் மத்தியில் இது பலமற்றதுடன், எதனை தடுப்பதற்காக முன்மொழியப்பட்டதோ அந்த நெருக்கடியை தடுக்க இயலாதது.

அது குறிப்பிடும் இலக்கை அடையமுடியாதது மட்டுமல்லாது, ரொபின் வரி முன்னோக்கில் அடிப்படையான தன்மைகள் உள்ளன. இது நிதிச்சந்தைகளையும், நாணய அமைப்பையும் முற்றுமுழுதாக முதலாளித்துவப் பொருளாதாரத்திலிருந்து தனிமைப்படுத்த முயல்வதிலிருந்து எழுகின்றது. இப்படியான முயற்சிகளுக்கு ஒரு நீண்டவரலாறு உண்டு.

150 வருடங்களுக்கு முன்னர் குட்டி முதலாளித்துவ அராஜக வாதியான [anarchist] புருதோன் [Proudhon] முதலாளித்துவ சமுதாயத்தின் உறவுகளையும், பொருளாதார இயக்கமுறையையும் ''சிறந்தது'', ''கூடாதது'' என இரு பகுதிகளாக பிரிக்கமுயன்றதற்கு எதிராக மார்க்ஸ் தனது விமர்சனத்ததை எழுதியிருந்தார். அதில் மார்க்ஸ் ''கூடாததை'' அகற்றி ''சிறந்ததை'' பாதுகாப்பதை அடித்தளமாக்கொண்ட வேலைத்திட்டமானது அடிப்படையாக பிளவினை உடையது எனவும், அப்பிரிவுகள் ஒன்றுலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதது எனவும் குறிப்பிட்டார்.மார்க்ஸ் '' புருதோன் சகல நல்ல முதலாளிகள் செய்வதையே செய்கின்றார். அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட சிந்தனைகளான போட்டி, ஏகபோகம் போன்றவை தான் வாழ்க்கைக்கான உண்மையான அடித்தளம் என்கின்றனர். ஆனால் நடைமுறையில் அவர்கள் மேலும் கூடுதலானதை விரும்புகின்றனர். அவர்கள் அனைவருக்கும் போட்டி வேண்டும் ஆனால் அது தீயவிளைவுகள் அற்ற போட்டியாக இருக்கவேண்டும். அவர்கள் சாத்தியமற்றதை விரும்புகின்றார்கள். அதாவது அந்நிலைமைகளால் உருவாகிய அத்தியாவசியமான விளைவுகள் இல்லாத முதலாளித்து நிலைமைகளை விரும்புகின்றனர்'' என குறிப்பிட்டார்.

ரொபின் வரியின் ஆதரவாளர்களும் புருதோனின் வழியையே பின்பற்றுகின்றனர். அவர்கள் முதலாளித்துவ சமூக உறவுகளை தூக்கிவீச விரும்பவில்லை, மாறாக முதலாளித்துவ அமைப்பின் ''கூடாத'' பகுதியான ஊக வாணிப மூலதனத்தை ஒழுங்குபடுத்தவும், முதலாளித்துவத்தின் ''சிறந்த'' பகுதியான உற்பத்தி மூலதனத்தை செழிப்படைய அனுமதிக்கவும், இதன் மூலம் செல்வத்தை அதிகரிக்கவும் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கவும் அழைப்புவிடுகின்றனர்.

எவ்வாறிருந்தபோதிலும், முதலாளித்துவத்தின் வரலாற்று பரிமாணத்தை ஆராய்கையில், அது நிதிமூலதனத்தின் தோற்றமும், ஆதிக்கமும் ஒரு ஆரோக்கியமான அபிவிருத்தி அல்ல மாறாக அவ்வமைப்பினுள் ஆழ்ந்திருக்கும் அடிப்படையான முரண்பாடுகளின் வெளிப்பாடு என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

அம்முரண்பாடுகள் இன்றுபோல் அரசியல், பொருளாதார வாழ்க்கையின் மட்டத்திற்கு மேலெழுந்தபோது அவ்வடிப்படையான இயக்கத்திற்கு காரணமானவற்றை தடுப்பதற்காக நிதிமூலதனத்தினை கடுமையான நிராகரிக்கும் போக்கை எதிர்கொண்டது. கெய்ன்சின் பணி இது தொடர்பானதாகும். 1930 களின் அவரின் ஆய்வுகளானது முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கும், கூடிய மட்டத்திலான நிதியின் இயக்கத்திற்கு எதிரானதை உள்ளடக்கிய, இப்படியான ஒரு திட்டத்தை உருவாக்கும் நோக்கத்தை உணர்வுபூர்வமாக உள்ளடக்கியதாகும்.

அவர் ''ஊகவாணிபத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒரு நிலையான வர்த்தகத்தின் மீது குமிழியைப்போல் பாதிப்பை ஏற்படுத்தமுடியாது. ஆனால் நிறுவனங்கள் ஊகவாணிப சுழல்காற்றின் குமிழியாக மாறும் பட்சத்தில் நிலைமை பிரச்சனைக்குரியதாகின்றது. ஒரு நாட்டின் மூலதன அபிவிருத்தியானது சூதாட்டத்தின் உபவிளைவாக மாறுமானால், அங்கு பிழையாக கையாளப்பட்டுள்ளது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது'' என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னரான ஒழுங்கமைப்பின் மத்தியாக இருந்தது 1944 பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில் நிதி மூலதனத்தின் முக்கியமாக சர்வதேச ரீதியானதும் தேசிய ரீதியானதுமான ஒழுங்கமைப்பாகும்.

ஆனால் பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கையால் முன்கொண்டுவரப்பட்ட யுத்தத்திற்கு பின்னரான முதலாளித்துவப் பொருளாதாரத்தின் விரிவாக்கமானது புதிய முரண்பாடுகள் உருவாகுவதற்கு காரணமானது. 1958 இல் முக்கிய நாணயங்கள் உலகம் முழுக்க முற்றாக மாற்றிடு செய்யக்கூடியதாக இருந்தது. ஐரோப்பாவின் குறிப்பிடத்தக்க அமெரிக்காவின் முதலீடுகள் இடம்பெற்றது. பல்தேசிய நிறுவனங்களின் தோற்றமானது 1960 இல் யூரோ டொலர் சந்தையின் அபிவிருத்திக்கான அடித்தளமாக இருந்தது. இது பிரித்தானியாவினதும், அமெரிக்காவினதும் அதிகாரத்தின் கட்டுப்பாட்டை அதிகரித்தளவில் இல்லாது செய்தது.

மாறாக நிதிச்சந்தைகளின் வளர்ச்சியானது நிதி ஒழுங்கமைப்பிற்கு குழிபறித்ததுடன் 1971 ஆகஸ்ட் மாதம் பிரெட்டன் வூட்ஸ் உட்னபடிக்கையின் உடைவிற்கு இட்டுச்சென்றது. மூன்று தசாப்தங்களாக முதலாளித்துவத்திற்கு நன்றாக சேவை செய்த முன்னைய அமைப்பு முறையை பாதுகாக்கக்கோரி அந்நேரம் குரல்கள் எழுந்தன. ஆனால் பழைய அமைப்பு முறையை பாதுகாப்பதற்கு சர்வதேச முதலீட்டின் வளர்ச்சியை குறைக்கவும், அமெரிக்காவில் கடுமையான பணவீக்கத்தை குறைக்கும் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்துவது தேவையாக இருந்தது. சுருக்கமாக கூறினால், தேசிய ஒழுங்கமைப்பு ஒன்றை பாதுகாப்பது, நிரந்தரமான உலகப்பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தவற்றை சுமத்துவதன் மூலமே இயலுமானது.

இறுதி ஆய்வுகளில், கெய்ன்சியன் வாதிகளினதும் தேசிய ஒழுங்கமைப்பினதும் ஆதரவாளர்கள் புலம்பும் பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் அழிவானது ''சுதந்திர சந்தை'' கருத்தியலின் விளைவல்ல, மாறாக உற்பத்திச்சக்திகளின் சர்வதேசரீதியான வளர்ச்சியானது தேசிய எல்லைகளுக்குள் அடக்கிவைக்க முடியாமல் போனதிலேயே இது தனது வேர்களை கொண்டுள்ளது.

தொடரும்..........

See Also:

17 September 2001

பூகோளமயமாக்கலும் ஜொஸ்பனும் அற்றாக்கின் அரசியல் வேலைத்திட்டமும்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved