WSWS :செய்திகள்
& ஆய்வுகள்: வட
அமெரிக்கா:
ஐக்கிய
அமெரிக்கா
Anti-Americanism: The "anti-imperialism" of fools
அமெரிக்க எதிர்ப்புவாதம்:
முட்டாள்களின் ''ஏகாதிபத்திய எதிர்ப்புவாதம்''
By David North and David Walsh
22 September 2001
Back to screen version
நியூயோர்க் நகரத்தினதும், வாஷிங்டன் மீதானதுமான பயங்கரமான தாக்குதலுக்கு
மத்தியதர வர்க்கத்தின் விமர்சகர்களின் ஒரு பிரிவு வெறுப்பு மனப்பான்மையுடனும், இரக்கமற்ற தன்மையுடனும் பிரதிபலித்துள்ளனர்.
செப்டம்பர் 11 திகதி என்ன நிகழ்ந்தது? உலகத்திலுள்ள மிகவும் பிற்போக்கான கருத்தியலைக்கொண்ட
இஸ்லாமிய அடிப்படை வாதத்தினால் ஊக்குவிக்கப்பட்டதாக தோற்றமளிக்கும் ஒரு குழு தனிமனிதர்கள் இரண்டு விமானங்களால்
உலக வர்த்தக மையத்தையும், இன்னொரு விமானத்தால் பென்டகனையும் தாக்கியழித்தனர். கடத்தப்பட்ட நான்காவது
விமானம் பென்சில்வேனியாவில் விபத்திற்குள்ளானது. இப்படுகொலையின் விளைவாக 6000 இற்கு மேற்பட்ட மனித உயிர்கள்
பலியாகினர். இதனுள் பெரும்பாலானோர் சாராதண மக்களாவர். இச்சம்பவமானது அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின்
பின்னர் அமெரிக்க மண்ணில் நிகழ்ந்த ஆக்கூடிய இழப்பாகும்.
இது ஒரு கொடிய அரசியல் குற்றம் மட்டுமல்லாது, இதன் எதிர்விளைவுகள் முதலாளித்துவ
அரசினை பலப்படுத்துவதுடன், வலதுசாரி தேசியவாதத்தை கொழுந்துவிட்டெரிய செய்வதுடன், மத்திய ஆசியாவிலான அமெரிக்க
இராணுவ தலையீட்டிற்கான பாதையையும் உருவாக்கியுள்ளது.
மனித சமுதாயத்தின் சோசலிச எதிர்காலமானது, உலகத்திலுள்ள உழைக்கும் மக்களின்
உயர்மட்டத்திலான மனிதாபிமானத்தையும், சுயநலமற்ற மனப்பான்மையையும் உயிரூட்டி எழுப்புவதில்தான் தங்கியுள்ளது.
ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களினதும், உத்தியோகத்தர்களினதும், தீயணைக்கும் படையினரினதும், வாசல் காப்போரினதும்,
வர்த்தகர்களினதும் தாங்கமுடியாத இறப்பே செப்டம்பர் 11 திகதி நிகழ்ந்தது. இது இவ் உள்ளுணர்ச்சிகளை ஆழமான
கோபத்திற்குள்ளாக்குகின்றது.
இத்துயரமான சம்பவம் தொடர்பான எமது முதலாவது அறிக்கையில்
[நியூயோர்க்
மற்றும் வாஷிங்டன் நகரங்களின் மீதான பயங்கரவாத தாக்குதல்களின் அரசியல் மூலங்கள்-12.09.2001] இல்
உலக சோசலிச வலைத்தளம் இந்நிகழ்வின் ஆழமான அரசியல் வேர்கள் தொடர்பான ஆய்வு ஒன்றை முன்வைத்திருந்தது. இப்பயங்கரவாத
தாக்குதல் மீதான எமது வெறுப்பானது அமெரிக்க அரசாங்கத்தின் மீதான எமது எதிர்ப்பினை ஒருபோதும் குறைத்துவிடாததுடன்,
இஸ்லாமிய அடிப்படைவாதிகளை கட்டிவளர்ப்பதில் அமெரிக்க அதிகாரிகளின் வகித்த பொறுப்பை மன்னிப்பதையோ நோக்கமாக
கொண்டதில்லை. நாங்கள் இதைக்கூறுகையிலும், எவ்வாறிருந்தபோதிலும் இச்சம்பவம் தொடர்பான குறிப்பிட்ட குட்டிமுதலாளித்துவ
கருத்தியலுக்கு பொறுப்பானவர்களின் கண்டனத்திற்குரிய பொறுப்பானது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சோசலிச எதிர்ப்பினையும்,
சாதாரண அமெரிக்க எதிர்ப்பு வாதத்தினையும் பிரிக்கும் இடைவெளியை குறைத்து மதிப்பிடுகின்றனர்.
இது தொடர்பாக பிரித்தானிய நாளிதளான
Guardian
செப்டம்பர் 18ம் திகதி, மிலிட்டன் பிரிவினரின் [இவர்களும் தம்மை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என கூறிக்கொண்டவர்கள்]
முன்னாள் உறுப்பினரும், தற்போது வெளிவராத Modern
Review இன் ஆசிரியரும், தற்போது ஒரளவு பிரபல்யமான
நன்மைகளை விரும்பாத Charlotte Raven
ஆல் எழுதப்பட்ட கட்டுரையை வெளிவிட்டிருந்தது. அதற்கு பின்வருமாறு தலையங்கமிடப்பட்டிருந்தது
''இரத்தம் தோய்ந்த மூக்கை உடைய கொடுங்கோலன் இப்போதும் ஒரு கொடுங்கோலன்தான்'', இதில் குறிப்பிடப்படும்
கொடுங்கோலன் அமெரிக்காதான். முதலாவதாக செப்டம்பர் 11 இன் துயரமான நிகழ்வு ''இரத்தம் தோய்ந்த
மூக்கல்ல'' விமானங்கள் அக்கட்டிடங்களை மோதியபோது உடனடியாக ஆயிரக்கணக்கானோர் அதனுள் தகனம் செய்யப்பட்டதுடன்,
பின்னர் தொன் கணக்கான இடிபாடுகள் உடைந்து கொட்டியபோது மேலும் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இப்பயங்கரத்தால்
உணர்வியலாகவும், இத்தாக்குதலால் ஆயிரக்கணக்கானோர் அனுபவித்த துன்பத்தாலும் பாதிக்கப்படாதவர்கள் தம்மை சோசலிசவாதி
என அழைக்க அருகதையற்றவர்கள்.
Charlotte Raven ''இப் பயங்கரவாதத்
தாக்குதலை கண்டிப்பதும், உலக வர்த்த மையம் உடைவதற்கு முன்னர் வெறுத்தது போல் அமெரிக்காவை வெறுப்பது மிகச்
சரியானது. புதன்கிழமை காலை பலர் ஒரு கலைந்த உணர்வுடன் விழித்தெழுந்திருப்பர். அமெரிக்கா செப்டம்பர் 11ம்
திகதிக்கு முன்னர் இருந்துபோலவே இருந்தது. நீங்கள் அப்போது அதை விரும்பியிருக்கவில்லையானால், நீங்கள் அதற்கு இப்போது
உரிமை கொண்டாடுவதற்கான காரணம் எதுவுமில்லை. Raven "அமெரிக்கா''
என எழுதிய பின்னர் அதற்கு பின்னர் ஒரு முற்றுப்புள்ளி வைத்ததானது அவரின் பேனை தவறியதால் வந்ததல்ல. இது அவரது
கட்டுரையில் பலதடவை மீண்டும், மீண்டும் வருகின்றது. அவர் ஒருதடவையேனும் ''அமெரிக்க அரசாங்கம்'' அல்லது
''அமெரிக்க ஆளும்தட்டு'' என்பதையோ அல்லது அதற்கு ஒத்தசொல்லையோ பயன்படுத்தவில்லை. தேசிய அடையாளத்தை
[Nationality] ஒரு பண்புப்பெயராக பயன்படுத்துவது எப்போதுமே
பிற்போக்கானது. வரலாற்றில் மிகவும் மோசமான அரசாங்கமான கிட்லரின் நாஜிகளின் அரசாங்கத்தை எதிர்நோக்கையில்
சோசலிஸ்டுக்கள் ஒருபோதும் அதனை ''ஜேர்மனிக்கோ'' அல்லது ''ஜேர்மன் மக்களுக்கோ'' ஒப்பிட்டு தாக்கவில்லை.
Raven மற்றவர்களும் செய்வது போல் ''அமெரிக்கா''
என்பதை ஒரு கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய உருவமாக காட்டுவது குழப்பத்தை உருவாக்குவதும், திசைதிருப்பலுமாகும்.
இது உண்மையான சர்வதேசியவாத்தை தடுக்க சேவை செய்வதுடன், அமெரிக்க வரலாற்றினதும், சமூகத்தினதும்
முரண்பாடான தன்மையை கவனத்திற்கு எடுக்காதுள்ளது. ''அமெரிக்காவை வெறுப்பது'' என்பதன் கருத்தென்ன? எப்படியான
சமூகத்தட்டு இப்படியான வார்த்தைகளை பயன்படுத்துகின்றது?
அமெரிக்கா சிக்கலான வரலாற்றை கொண்டதும், வெளிப்படையான மதிப்பற்ற பிரிவுகளையும்,
மிகவும் ஆழமான மதிக்கத்தக்க பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது. அமெரிக்கா ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமான
அமெரிக்க புரட்சியையும், சிவில் உரிமைக்கான உள்நாட்டு யுத்ததையும் கடந்து வந்துள்ளது. இந்நாட்டின் உருவாக்கத்திற்கு
அடித்தளமான ஜனநாயக கருத்துகளுக்கும் புரட்சிகர கொள்கைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளும், அதனது சமூக,
பொருளாதார யதார்த்தங்களும் எப்போதும் அமெரிக்காவில் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கான ஆரம்பப் புள்ளியாக
இருந்தது.
ஒருவர் தத்துவத்திற்கும், அரசியலுக்கும் உள்ள உறவுகளை கருத்திற்கு எடுத்தால் அமெரிக்காவானது
உயர்ந்த புத்துயிர்ப்பியக்கத்தின் [Enlightenment]
உருவாக்கமாகும். அது மதத்தையும், இனத்தையும் அல்லாது அரசியல் கொள்கைகளை உருவாக்கியதுடன், சுதந்திரத்திற்கான
பிரகடனத்தையும், அரசியலமைப்பையும் தேசிய அடையாளாமாக கொண்டிருக்கின்றது. இச்சாதாரண கருத்தியல்களுக்கான
ஜனநாயகத்திற்கும், குடியரசு வாதத்திற்குமான போராட்டத்திற்குமான இந்நாட்டின் மூலமானது உலகம் முழுவதும் குறைத்து
மதிப்பிடப்படுகின்றது. அமெரிக்க புரட்சியானது ஒரு நூற்றாண்டின் பின்னர் பிரான்சினை மாற்றிய நிகழ்வுகளை தூண்டிவிடுவதில்
குறைந்தளவான பங்கினை வகிக்கவில்லை.
200 ஆண்டுகளுக்கு பின்னரும் கூட அமெரிக்கா தனது அடிப்படை கொள்ளகைகளுக்கான
அரசியல், வரலாற்று கடமைகளுக்காக தொடர்ந்தும் போராடிவருகின்றது. வித்தியாசமானதும், பலவிதமாக பிரிந்ததுமான
அமெரிக்க மக்கள் சித்தாந்தப் பிரச்சனைகளால் பீடிக்கப்பட்டுள்ளதுடன், சிலவேளை அதன் அணுகுமுறை முட்டாள்தனமான
நடைமுறைவாதமாகவும் இருக்கின்றது. புஷ் ஆல் 2000 ஆண்டின் தேர்தல் களவாடப்பட்டதற்கு எதிரான பரந்த எதிர்ப்பு
எடுத்துக்காட்டியது என்னவெனில், அடிப்படையான ஜனநாயக கொள்கைகளை பாதுகாப்பதற்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பு அங்கு
உள்ளது என்பதையாகும். வர்க்க உணர்வின்மையும், தமது அனுபவங்களை பொதுமைப்படுத்திப் பார்ப்பதிலிருந்து அமெரிக்க
மக்கள் தவறியமையும், முக்கியமாக இவ் ஜனநாயக கருத்துக்களால் உண்மையான தனது நோக்கங்களை மக்களின் கண்களில்
இருந்து தற்காலிகமாக மறைப்பதற்கு ஆளும் தட்டினருக்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. புஷ் இற்கும் அவரது ஆதரவாளருக்கும்
''சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதானது'' உலகம் முழுவதும் அமெரிக்காவின் ஆளும் பிரிவினர் தமது
உரிமைகளை அடைவதற்கான மாற்று வார்த்தைகளாகும். சாதாரண மக்களுக்கு இவ்வார்த்தைகள் முற்றிலும் வித்தியாசமான
அர்த்தமுடையன. அமெரிக்க அரசாங்கத்தினது புதிய ''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்'' வஞ்சனைமிக்க உண்மையானது,
உலகம் முழுவதையும் அமெரிக்காவின் பூகோள அரசியல் நலன்களின் அடித்தளத்தில் மறு ஒழுங்கமைப்பதாகும். இது சர்வதேச
சோசலிசவாதிகளால் செய்யப்படும் முக்கியமான பணிகளுக்கான பரந்த உணர்மையை வழங்குவதற்கான பாதையை
உருவாக்கும்.
சோசலிசத்திற்கான போராட்டத்திலுள்ள சகல முக்கிய பிரச்சனைகளும் பல வழிகளில் அமெரிக்காவில்
மிக சிக்கலான முறையில் வெளிப்படுகின்றன. இது வேறு எவ்வாறாக இருக்க முடியும்? ஒரு உயர் சமூக அமைப்பிற்கான
ஆரம்ப புள்ளியை அமெரிக்காவில் ஒருவர் காணமுடியாவிட்டால் உலகின் எந்த மூலையில் அவை கண்டுபிடிக்கப்படலாம்?
மேலும் அமெரிக்காவில் சோசலிசத்திற்கான அடித்தளத்தை ஒருவர் காணவில்லையானால், அவர் உலக சோசலிச
முன்னோக்கையே தெளிவாக கைவிட்டுள்ளார் என்றே அர்த்தப்படுகின்றது. மார்க்சிஸ்டுக்கள் எப்போதும் பொதுவான, பலதரப்பட்ட
மத்தியதர தீவிரவாதிகளின் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர உள்ளடக்கம் தொடர்பான ஆழ்ந்த நம்பிக்கையிலிருந்து
தம்மை வித்தியாசப்படுத்தி வந்துள்ளார்கள். அமெரிக்காவின் சமூகத்தின் உண்மையான உள்ளடக்கம் தொடர்பாக இக்குருட்டு
தீவிரவாதிகளை விட அமெரிக்க ஆளும்வர்க்கம் ஆழமான பார்வையை கொண்டுள்ளது. அமெரிக்க முதலாளித்துவம் இரவும்
பகலும் சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் எதிராக வசைபொழிவதுடன், ஆகக்குறைந்தது அமெரிக்காவில் தற்போது
சோசலிச இயக்கத்தால் அபாயம் உடனடியாக இல்லாதபோதும், அது கூடுதலான அபிவிருத்தியடைந்த முதலாளித்துவ நாடுகளில்
சகலதும் சமமாக உள்ள நிலைமைகளில் சோசலிசம் ஒரு சாத்தியமான, கவர்ச்சிகரமான மாற்றீட்டை வழங்குகின்றது
என்பதை அது விளங்கிக்கொண்டுள்ளது அல்லது உள்ளுணர்வுகளால் ஒரளவிற்கு உணர்கின்றது.
அமெரிக்கா ஒரே நேரத்தில் மிகவும் வளர்ச்சியடைந்ததும், மிகவும் பின்தங்கியதுமான
சமூகத்தை கொண்டுள்ளது. அதனது கலாச்சாரம் கவருவதுடன் வெறுப்பூட்டுவதாக இருந்தாலும் அது எப்போதும் வசீகரமானதாகவுள்ளது.
உத்தியோகபூர்வமான சமுதாயமும், சாதாரண அமெரிக்கர்கள் பலரும்
வித்தியாசமான சமூக வர்க்கங்கள் இருப்பதை நிராகரிக்கின்றனர். தற்போது நாடு மிகமுக்கியமானதும், மிகவும் ஆழமான
சமூக முரண்பாடுகளால் பிளவடைந்துள்ளது. கடந்த வாரத்தின் பொருளாதார அபிவிருத்திகள் எடுத்துக்காட்டியதுபோல் யுத்த
நோக்கம் முன்தள்ளப்படுகையில் இச்சமூக முரண்பாடுகள் மிகவும் மோசமடையச் செய்யப்படும்.
அமெரிக்கா பிராங்ளின் [Franklin],
வாஷிங்டன் [Washington],
ஜெவ்வெர்சன் [Jefferson],
லிங்கன் [Lincoln]
போன்றவர்களை மட்டுமல்லாது, குறிப்பிடத்தக்க தொழிலாள வர்க்கத் தலைவர்களையும், சோசலிசத் தலைவர்களையும்
உருவாக்கியுள்ளது. அதனது பாரிய முரண்பாடானது அடிமை உடைமையாளரான ஜெவ்வர்சன் மனித விடுதலைக்கான சிறந்த,
மிகவும் உண்மையான பாடலை எழுதியதன் மூலம் சிலவேளை வெளிப்படுத்தப்படலாம்.
Raven தொடர்ந்தும் பின்நவீனத்துவ காலத்திற்குரிய
[Postmodernist] பிதற்றல்களை பின்வருமாறு மேற்கோள்காட்டுகின்றார்
''அமெரிக்கா தனது இதயத்திலிருந்து பேசுகையில், அது அதனது உண்மையான பிரஜைகள் மட்டும் விளங்கிக்கொள்ள
ஆரம்பிக்கும் ஒரு மொழியை நோக்கி திரும்புகின்றது. இதன் அடித்தளத்தில் இருப்பது அதன் அர்த்தத்தை கட்டுப்படுத்தக்
கூடிய தேவையாகும். அமெரிக்கா தனக்காக உலகத்தை பேசவிட முடியாது. கடந்த செவ்வாய் கிழமை எதிர்பாராதவிதமாக
ஒரு அதிர்ச்சியினுள் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதுடன், அவ் அதிர்ச்சியின் நிகழ்வானது மொழிபெயர்க்க நேரமில்லாததால்
அச்செய்தியை செவிமடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்த ஆத்திரத்தின் கத்தலானது, மற்றவிடயங்களுடன்
இணைந்து தனது வரலாற்றை கட்டுப்படுத்தும் உரிமைக்கான மீண்டும் பெற்றுக்கொள்ளமுயலும் போராட்டத்தின் குரலாகும்''.
Raven ஜோர்ஜ். புஷ் இற்காகவும், அமெரிக்க
ஏகாதிபத்திய நலன்களின் ஏனைய சேவகர்களுக்காகவும் பேசினால், அவரது முதல் வார்த்தை அர்த்தமற்றதாகின்றது. அப்படியானவர்கள்
இந்த நிகழ்விலோ அல்லது வேறு நிகழ்வுகளிலோ மனதிலிருந்து பேசுவதில்லை. அவர்கள் பொய்சொல்லிலும், ஏமாற்றும்
வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் இந்த புள்ளியை குறிப்பிடுவதற்காக மன்னிக்கவும். அதாவது ''அமெரிக்கா'',
அதனது பாரிய அரசியல் கலாச்சார பிரதிநிதிகளின் வடிவத்தில் அதன் ''மனதிலிருந்து பேசுமானால்'', 1776 யூலை
4ம் திகதிக்கு பின்னரைப்போல் உலகம் முழுவதுமுள்ள இலட்சக்கணக்கானோர் அதை கேட்பதுடன், விளங்கிக்கொள்வர்.
1863 ஜனவரி 1ம் திகதியின் சுதந்திர பிரகடனத்தை பிரித்தானியாவின் முற்போக்கான தொழிலாளர்கள் கட்டாயமாக
கவனமெடுத்திருந்தனர். Sacco வினதும் Vanzetti
இனதும், ஏனைய பல உதாரணங்களிலும் இவர்களின் சார்பில் சர்வதேச தொழிலாள
வர்க்கத்தை நோக்கி அழைப்புவிடப்பட்டதை ஒருவர் ஞாபகப்படுத்தி பார்க்கலாம். இப்படியான நிகழ்வுகள் எதிர்காலத்திலும்
நிகழும் என்பதை நாம் துணிவாக முற்கூட்டி கூறுகின்றோம்.
அமெரிக்க கலாச்சாரத்தினது உயர்வான உற்பத்திகள் உலகம் முழுவதும் உள்ள மக்களை
கவர்ந்திழுத்தது என்பதையும் ஒருவர் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். அவர்களுள் 19 ஆம் நூற்றாண்டின்
Poe, Whitman, Melville, Hawthorne
போன்றோரும், 20 ஆம் நூற்றாண்டின் Dreiser,
Fitzgerald, Richard Wright ஆகியோரும், மற்றும் பலரும்
குறிப்பிடத்தக்கவர்கள். அமெரிக்க இசையினையும் ஏனைய பிரபல்யமானவற்றையும் ஒருவர் மறந்துவிடமுடியாது. சிலர்
மனதிலிருந்து பேசுவதற்கு கஸ்டப்படுகின்றார்கள் என ஒருவர் கற்பனை செய்துபார்க்கலாம். ஆனால் இது திரைப்படத்துறையில்
சர்வதேச தன்மைகளுக்கான பணிப்பையும், படவரைவு, சிற்பக்கலை, நாட்டியம், கட்டிடக்கலை தொடர்பாக எதையும்
குறிப்பிடவில்லை. Raven
அகநிலையான மனக்காழ்ப்பினுள் ஊறியவர்களையும், தமது சொந்த நலன்களுக்காக
முக்கியமான வரலாற்று, கலாச்சார யதார்த்தங்களை கவனமெடுக்காதவர்களையுமே தனது வாசகர்களாக கணக்கெடுப்பதாக
தோற்றமளிக்கின்றது.
அமெரிக்க மக்களிடத்தே ஆழமாக அடங்கியுள்ள சாதகமான, செழிப்பான உள்ளுணர்வுகளை
தட்டியெழுப்புவதே சோசலிசவாதிகளின் முக்கிய கடமையாக இருந்துவருகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக இரு அமெரிக்கா
உள்ளது. ஒன்று புஷ் இனதும், கிளின்டனினதும், ஏனைய மோசடியாளர்களினதும், மற்றையது அதன் உழைக்கும் மக்களினது.
புரட்சிகர சர்வதேசவாதிகள் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார்கள். அமெரிக்க ட்ரொட்ஸ்கிச தலைவரான
ஜேம்ஸ். பி. கனென் இது தொடர்பாக 1948 யூலை மாதம் ஒரு உரைநிகழ்த்தியுள்ளார். அவர் ''இரண்டு அமெரிக்கா
உள்ளது, சிறிய குழு முதலாளித்துவ வாதிகளும், நிலவுடமையாளர்களும், இராணுவ வாதிகளினதும். ஏகாதிபத்தியவாதிகளின்
அமெரிக்காவானது உலகத்தை மிரட்டி பயமுறுத்திக் கொண்டிருக்கின்றனர். இதுதான் உலகத்திலுள்ள மக்கள் வெறுக்கும், பயப்படும்
அமெரிக்கா. மற்றையது தொழிலாளிகளினதும் விவசாயிகளினதும் ''சிறிய மக்களின்'' அமெரிக்கா. இவர்கள் தான் மக்களில்
பாரிய பெரும்பான்மையானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நாட்டுக்காக வேலை செய்கின்றனர். அவர்கள் அதனது
முன்னைய ஜனநாயக பாரம்பரியங்களுக்கும், அரசர்களுக்கும் கொடுங்கோலர்களுக்கும் எதிரான அவர்களின் போராட்டத்தில்
மற்றைய நாட்டு மக்களுடனான தமது நட்புரிமையின் முன்னைய சாதனைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு சுயாதீனமாக
வழங்கப்பட்ட தாராளமனமுடைய அடைக்கலத்திற்கும் மரியாதை செலுத்துகின்றனர்''.
அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் கொள்கைகளுக்கும், வடிவங்களுக்கும்
முதல் தேவையானது, அது தான் மக்களின் உண்மையான குரலும், பிரதிநிதியும் என்று கூறுவதை அம்பலப்படுத்துவதாகும்.
அமெரிக்க ஆளும் வர்க்கமானது ஜனநாயக எதிர்ப்பு, பேராசைமிக்க கொள்கைகளை மிகவும் தவிர்க்கமுடியாத பாரதூரமான
விளைவுகளுடன் நடைமுறைப்படுத்துகின்றது என்பதை விளங்கப்படுத்துவதற்கு சோசலிசவாதிகள் கடமைப்பட்டுள்ளனர். அது
இதற்காக அமெரிக்க மக்களின் பெயரை பிழையாக பயன்படுத்துகின்றனர்.
இவை அனைத்தும் இந்த அற்பமான மத்திய வர்க்க பிலஸ்தீனியர்களுக்கும், போலிகளுக்கும்
ஒரு மூடிய புத்தகமாகும். இவர்கள் இலகுவாக தமது கைக்கு வரும் பதங்களை பாவிப்பதன் மூலம் திருப்தியடைகின்றனர்.
Raven இன்
வகைப்பட்ட அமெரிக்க எதிர்ப்புவாதம் உண்மையானதது அல்லாததோடு உள்ளடக்கம் இல்லாததுமாகும். இவை பிரித்தானியாவிலும்,
பிரான்சிலும், ஜேர்மனியிலும், அமெரிக்காவிலும் உள்ள பரந்தளவிலான மத்தியதர வர்க்கத்தினரின் மத்தியில் மிகவும்
சுலபமாக கிடைக்கின்றன. இது வீடுகளுக்கு இலகுவாக விநியோகிக்கப்படுகின்றது என்று கூட கூறலாம். இப்படியானவற்றிற்கு
உள்ள சாதகமான தன்மை என்னவெனில் அது எதிர்ப்பதாக தோற்றமளித்தாலும், அதனது ஆதரவாளர்களை எவ்வித அரசியல்
நடவடிக்கைகளையும் எடுக்க பணிக்காததால் மிகவும் வசதியானதாகும். இது ஒரு போலி சோசலிசம் மட்டுமல்லாது, நேர்மையற்றவர்களினதும்
முட்டாள்களினதும் பொய்யான ''ஏகாதிபத்திய எதிர்ப்புமாகும்''.
|