WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா
:
பிரான்ஸ்
War in Afghanistan gives rise to tensions in
France
ஆப்கானிஸ்தான் மீதான யுத்தம் பிரான்சில் பதட்டத்தை அதிகரிக்கின்றது.
By Peter Schwarz
18 October 2001
Back to screen version
பிரித்தானியா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா போன்று அமெரிக்காவின் ''பயங்கரவாதத்திற்கு
எதிரான யுத்தம்'' என்பதற்கு எல்லையற்ற ஆதரவும், இராணுவ உதவிகளும் வழங்கும் நான்கு நாடுகளில் பிரான்சும்
ஒன்றாகும்.
பாரசீக வளைகுடாவிலும் ஆபிரிக்காவிலும் 4 ஆயிரம் பிரெஞ்சு படைகள் தரித்துநிற்பதுடன்
உத்தியோகபூர்வமான அறிக்கையின்படி, இந்தப் படையினர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்தத்தில் பங்கெடுக்கவில்லை. வெளிநாட்டமைச்சரான
Hubert Védrine
இன் அறிக்கையின் பிரகாரம், பிரான்சின் இரண்டு நவீன கப்பல்களான வினியோக்கிக்கும்
கப்பலான Var
மற்றும் யுத்தக் கப்பலான
Courbet
உம் யுத்தத்திற்கு தயார் நிலையில் உள்ளன. அதனிடம் போதுமான தூரத்தில் விமானம் தாங்கி யுத்தக் கப்பலும், அதற்கு
ஏற்ப ஏவுகணைகளும் இல்லாமையால் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலில் பிரெஞ்சு இராணுவத்தின் நேரடி தலையீடு சந்தேகத்திற்குரியதே.
பிரான்சின் ஒரேயொரு விமானம் தாங்கி யுத்தக் கப்பலான,Charles
de Gaulle பழுதுபார்ப்பு வேலைக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
எப்படியிருந்தபோதும் சூடான், சோமாலியா, தான்சானியா, யேமன் போன்ற நாடுகளுக்கு
யுத்தம் விரிவாக்கப்படுமானால் இந்நிலைமை மாற்றமடையலாம். கிழக்காபிரிக்காவில்,
Djibouti இல் 2500
படைகளுடன் ஒரு இராணுவ தளத்தை பேணிவருவதையும், அதேபோன்று
Dakar, Libreville, Ndjamena, Abidjan
போன்ற இடங்களிலும் மேலதிகமான இராணுவத் தளங்களை வைத்திருப்பதுடன், இவை பிரெஞ்சு படைகள் நிலைகொண்டுள்ள
இடங்களுக்குள் அடங்குகின்றது.
நேரடி இராணுவ ஆதரவைவிட பிரெஞ்சின் உளவுப்பிரிவு தற்போதைய யுத்தத்தில் மிக முக்கியத்துவம்
வாய்ந்ததாக இருக்கிறது. DGSE
மற்றும் DRM
(France's foreign and military secret service organisations,
பிரான்சின் வெளிநாட்டு மற்றும் இராணுவ உளவு நிறுவனம்) இனது குறிப்பிடும்படியான
எண்ணிக்கையிலான உளவாளிகள் தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்துவருவதுடன் அங்கு அவர்கள் வடக்கு ஐக்கிய எதிர்ப்பு படைகளுடன்
மிக நெருக்கமாக இணைந்து வேலைசெய்கின்றார்கள். இந்த அமைப்பின் தலைவரான
Shah Massud அண்மையில்
படுகொலை செய்யப்பட்டார். இவர் ஏப்ரல் மாதம் பிரான்சுக்கு வந்திருந்ததுடன் இணைந்து இயங்கவும் சம்மதித்திருந்தார்.
பிரெஞ்சு உளவு நிறுவனம் ஆப்கானிஸ்தானில் 20 வருட அனுபவத்தைக் கொண்டுள்ளது. நாளிதழான
Libération
''1970 களின் இறுதிவரை 'உளவு அமைப்பு... சோவியத்துகளுக்கு எதிராக
Mudjaheddin களுக்கு பலமான ஆதரவு அளிப்பதில் ஈடுபட்டது''
என எழுதியது. 1979 ஆண்டு சோவியத் ஆக்கிரமிப்பை புள்ளிவிபர அடிப்படையில் முதல்முறையாக அறிவித்ததுதான்
''நீச்சல் குளம்'' என பட்டப்பெயரைக்கொண்ட DGSE
இன் மிகப்பெரும் வெற்றிகளில் ஒன்றாகும். பிரெஞ்சு உளவாளிகள் உடனடியாக நாட்டுக்குள் ஊடுருவியிருந்தார்கள்
அல்லது மதிப்பற்ற முறைகளை உபயோகித்து NGOs [Non
Goverenmental Organisations] அரசு சார்பற்ற அமைப்புகளின்
கீழ் வேலைசெய்து வந்தனர். இவர்கள், அவர்களது அமெரிக்க உளவு சகாக்களைவிட ஆப்கானிஸ்தானை மிக சிறப்பாக
அறிவார்கள்.
சிறாக்குக்கும் ஜொஸ்பனுக்கும் இடையிலான
பதட்டங்கள்
ஜனாதிபதி என்ற வகையில் பிரான்சின் வெளிநாட்டுக்கொள்கையை தீர்மானிப்பவரும், இராணுவத்திற்கான
உயர் கட்டளைகளை பிறப்பிப்பவருமான கோலிசவாதியான ஜனாதிபதி ஜாக் சிறாக் ஐக்கியத்திற்கான பிரகடனத்துடனும்,
அமெரிக்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் தன்னை வித்தியாசப்படுத்திக்கொண்டார்.
நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான தாக்குதலுக்கு இரண்டு நாட்கள் கழித்து
CNN இற்கு அளித்த ஒரு
பேட்டியில் பிரான்சினது ''முழுமையான ஐக்கியம்'' உண்டு என உறுதியளித்ததுடன், இவர்தான் செப்டம்பர் 18 இல் ஜனாதிபதி
புஷ்சினை சந்தித்த முதல் வெளிநாட்டு அரசினது தலைவர்களில் ஒருவர் ஆவார். 7 அக்டோபர் மாலையில் காபூலில் முதலாவது
குண்டு விழுந்தவுடன், பிரெஞ்சு இராணுவப் படைகள் அமெரிக்காவினது பக்கத்தில் பலமான முறையில் பங்கெடுக்கும் என
அவர் ஒரு தொலைகாட்சியில் அறிவித்தார்.
சோசலிச கட்சி பிரதமர் லியோனல் ஜொஸ்பன், பசுமைக் கட்சியினர் மற்றும் கம்யூனிஸ்ட்
கட்சி உள்ளடங்கிய அரசாங்க பகுதியில் அமெரிக்க அரசாங்கத்துக்கான ஆதரவுக் கொள்கையில், குறிப்பிடும்படியான
பின்னடைவு தென்படுகின்றது. ''பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐக்கியம்'' உண்டு என அவர்கள் அழுத்தி
கூறியிருந்தபோதும், இது ஒரு தொடர் நிபந்தனைகள் மற்றும் வேறுபாடுகளையும் உள்ளடக்கியிருக்கிறது.
அமெரிக்காவுக்கு ஆதரவான இராணுவ பங்களிப்பு, ஒரு பாராளுமன்ற வாக்களிப்பின் மூலம்
மட்டுமே சாத்தியமாகும் என சிறாக் வாஷிங்கடனில் இருந்தபோது ஜொஸ்பன் பாரிசில் அறிவித்தார். அமெரிக்காவுடனான
பிரெஞ்சின் ஐக்கியம் என்பது ஒருவரின் சொந்த தீர்மானத்தையோ, சுயாதீனத்தையோ நிராகரிப்பதல்ல. பிரெஞ்சு ஜனாதிபதி
அக்டோபர் 7 இல் வழங்கிய உரையைத் தொடர்ந்து, ஒரு ''நிரப்பப்படாத காசோலையை'' சிறாக் அவரது அமெரிக்க
சகாவுக்கு வழங்கியதற்காக ஜொஸ்பன் அவர் மீது கோபமுற்றார் என்பதை பிரதமரின் நெருங்கிய சகாக்கள் தெரியப்படுத்தினார்கள்.
பாராளுமன்றத்தில் ஜொஸ்பன் பேசியபோது, நிகழ்வுகளின் தொடர் எதிர்விளைவுகளை எச்சரித்ததுடன், ''ஆப்கானிஸ்தான்
அபிவிருத்திகள் எமது நலன்களை அடித்துச்சென்று ஒரு சுழிக்குள் தள்ள பயமுறுத்துமானால், நான் அதில் கலந்துகொள்வதற்கு
ஆதரவளிக்கப்போவதில்லை.'' என அழுத்தமாக தெரிவித்தார்.
கடந்த வாரம் பிரெஞ்சு பாராளுமன்ற மேலவையில்
(Senate) ஜொஸ்பன்
பேசியபோது, அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையால் எடுக்கப்பட்ட திசையில் இருந்து தன்னை தெளிவாக வித்தியாசப்படுத்திக்
காட்டினார். அவர் ''உலகில் தீர்க்கப்படாத நெருக்கடிகள் இருந்துவருகின்றன, வறுமையும், அதிருப்தியின்மையும்
குறிப்பாக அரபு-இஸ்லாமிய உலக மக்கள் மத்தியில் இருந்துவருவதுடன் அங்கு பல சமத்துமின்மையான அபிவிருத்திகளும்
இருந்துவருகின்றன என்பது தொடர்பாக ஒருவர் எப்போதும் நனவுடன் இருக்கவேண்டும். அதற்கு நாம் கவனம் செலுத்தவில்லையானால்
அது மற்றவர்கள் மீதான வெறுப்பாலும், ஒரு மரண விருப்பத்தாலும் மட்டுமே உருவான தீவிர மற்றும் அழிவுகரமான சிறுபான்மை
இயக்கங்களை நோக்கி அவர்கள் ஐக்கியப்பட வழிவகுக்கும்.'' என அழுத்தி உச்சரித்தார்.
''இந்த நெருக்கடிக்கான பதிலளிப்பு தீர்க்கமான இலக்குகளின் பாகமாக இருக்கிறது. அராபிய
நாட்டு தலைவர்களுடன் மட்டுமல்ல ஏனையவர்களின் கருத்துக்களுடனும் மேலும் பேச்சுக்களை தொடர நாம் எமது சாத்தியப்பாடுகளை
கொண்டிருக்க வேண்டும்.'' என ஜொஸ்பன் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான
சமத்துவமின்மைகளை குறைப்பதும் ஒருபக்க சார்பானதற்கு பதிலாக பலபக்க சார்பான உடன்படிக்கையின் அடிப்படையில்
பிரச்சனையை தீர்ப்பதையும், கட்டுப்படுத்தமுடியாத பூகோளமயமாக்கத்தின் போக்கினால் ஒரு கட்டுபாடுடைய அமைப்பை
அறிமுகப்படுத்துவது அவசியமானதுடனும், இது இயல்பாக ஐரோப்பிய சகாக்களுடன் நெருக்கமான தொடர்புடனும், அப்படியான
அமைப்பு மற்றும் கருத்தின் மூலம் சர்வதேச நெருக்கடிக்கான தனது சொந்த செய்தியை பிரான்ஸ் கொண்டிருக்கிறது
என்பதுதான் ஜொஸ்பன் கூறுவதுபோல் பிரெஞ்சு இராஜதந்திரத்தின் பெரிய திட்டமாகும்.
சிறாக்காலும் ஜொஸ்பனாலும் அளிக்கப்பட்ட வித்தியாசமான தொனிகள் வரவிருக்கும் வசந்த
காலத்தில் நடக்கவிருக்கும் தேர்தலின் பாகமாக உண்டானவையாகும். அந்த தேர்தலில் இருவருமே ஜனாதிபதிக்கான தேர்தல்
போட்டியாளர்களாக இருப்பார்கள். அதுவரைகாலமும், உள்நாட்டு வெளிநாட்டு கொள்கை பற்றிய ஒவ்வொரு
கேள்விகளும் இரு போட்டியாளர்களுக்கு இடையிலான உடைவின் ஒரு ஊற்றாக இருந்துவரும்.
அரசின் உயர் ஸ்தானத்தில் தான் இருப்பதை சிறாக் வெளிப்படுத்திக்கொண்டு புஷ், பிளேயர்,
ஷ்ரோடர் சார்பாக உலக நிகழ்வுகளுக்கு பொறுப்பெடுக்கிறார். மக்களின் எதிர்ப்பு போக்களுக்கு ஜொஸ்பன் மிகவும்
கவனமாக பதிலளிக்கிறார். அதேநேரம் அவரது கூட்டரசாங்கத்திற்குள் இருக்கும் பதட்டங்களையும், தொடர்ச்சியாக
வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் அதனது செல்வாக்கையும் அவர் கவனத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது. இந்த யுத்தம் அவரது
இரண்டு முக்கிய கூட்டரசாங்க சகாக்களான, பசுமைக் கட்சியினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பிரமாண்டமான
பதட்டங்களை உண்டாக்கியிருக்கின்றது.
இந்த யுத்தம் பசுமைக்கட்சிக்குள் உடைவை உருவாக்கியிருக்கிறது. இந்தக் கட்சி மார்ச்
மாதம் நடந்த தேர்தலில் அரசாங்கத்தின் இரண்டாவது பலமான கட்சியாக உருவானது. கடந்த சனிக்கிழமை அது தனது
ஜனாதிபதி வேட்பாளரான Alain Lipietz
ஐ வாபஸ்பெற்றுவிட்டது. ஏனெனில் பொது ஜன அபிப்பிராயக் கணக்கெடுப்பொன்றில்
ஒன்றில் இரண்டுவீதத்தை மட்டுமே இவரால் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது. இவரது வீழ்ச்சி செப்டம்பர் 11ம்
திகதிக்கு முதலே தொடங்கிவிட்டது. யுத்த உணர்வை தூண்ட கவித்துவ மற்றும் உண்ர்ச்சிபூர்வமான வகையில்
Le Monde இல்
இவர் கட்டுரை எழுதியிருந்ததானது பசுமைக்கட்சி வேட்பாளர்
என்ற வகையில் அவர் வெளியேற்றப்படுவது ஒரு தீர்மானகரமான நிரூபணமாகியது.
மறுபக்கத்தில், Noel Mamère
என்பவர் Lipietz
இன் இடத்தை நிரப்புவராக கருதப்பட்டார். இவர் அமெரிக்காவின் நடவடிக்கையை
''ஆப்கான் மக்களுக்கு எதிரான யுத்த நடவடிக்கையாகும்'' என கண்டனம் செய்திருந்தார். இதன் பின்னர் தான் ஒரு
வேட்பாளராக நிற்கப்போவதையும் நிராகரித்தார். ஆகையால் தற்போது பசுமைக்கட்சியினர் எந்தவொரு தலைமையுமற்று
இருந்துவருகின்றனர். தான் ஒரு ''பார்வையாளன் போன்ற வேட்பாளராக இருப்பதில் தனக்கு விருப்பமில்லை என தனது
மறுப்புக்கான காரணத்தை இவர் நியாயப்படுத்தினார். இது இப்போது முற்றுமுழுதாக உடைந்த ஒரு கட்சியாக
இருக்கின்றது.
கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்
Robert Hue தனது கட்சியை ஜொஸ்பனுக்கு பக்கத்தில் இணைத்து வைத்திருக்க
கடுமையாக முயற்சி செய்துவருகிறார். ''இந்த விவகாரத்தில் எமது நாட்டு ஆட்சியாளர்கள் பொறுப்புணர்வை வெளிப்படுத்திக்காட்டியுள்ளார்கள்''
என இவர் அடிக்கடி புகழ்ந்துவருகிறார். ஆனாலும், குளிர்கால யுத்தத்தால் வடிவமைக்கப்பட்ட முழு அங்கத்தவர்களையும்
கொண்டிருக்கும் ஒரு கட்சி என்பதால் அமெரிக்காவுடன் நெருக்கமான கூட்டை பேணுவது கடினமானதாகும். ''கட்டுப்படுத்தமுடியாதவாறு
மேல்நோக்கிச் செல்லும் பலாத்காரத்தின் ஒரு ஆபத்து'' என தான் பார்ப்பதாக ஆப்கானிஸ்தான் மீதான யுத்தத்தை
இவர் விமர்சித்தார். ''முழுவுலகத்திற்குமான தீர்மானத்தை எடுக்கும் ஐக்கிய அமெரிக்காவினது வால்துண்டாக பிரான்ஸ்
இருப்பதுபோல் தோற்றமளிக்ககூடாது'' என கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான
Jean Pierre Brard மிக வெளிப்படையாக கூறியிருந்தார்.
மூலோபாய முரண்பாடுகள்
ஜொஸ்பனுக்கும் சிறாக்கும் இடையிலான பதட்டங்களுக்கு உள்நாட்டு அரசியல் விளைவுகள்
மட்டும் காரணம் அல்ல, மேலும் பிரெஞ்சு ஆளும் பிரிவுகளுள் ஏற்பட்டுள்ள ஆழமான மூலோபாய முரண்பாடுகளின் வெளிப்பாடுகளுமாகும்.
பிரச்சனைக்குரிய பிராந்தியமான மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் பிரான்ஸ்
குறிப்பிடும்படியான நீண்டகால அரசியல் பொருளாதார நலன்களை கொண்டிருக்கிறது. 19ம் நூற்றாண்டில் பிரான்ஸ்
ஒட்டோமான் பேரரசினது பிளவு மற்றும் கொள்ளையில் கலந்துகொண்டதுடன், முதலாவது உலக யுத்தத்தின் முடிவில் சிரியா
மற்றும் லெபனான் மீது ஒரு காலனித்துவ ஆட்சியை நிறுவியது. இந்த பிராந்தியத்துடனான பிரான்சின் நெருக்கமான
பொருளாதார, நிதியியல் உறவு இன்னும் இருந்துவருகிறது. ஐக்கிய அமெரிக்கா அதனது இராணுவத்தை இந்த பிராந்தியத்தில்
விரிவாக்குவதையும், முடிவு இன்னும் தெரியாது இருக்கும் ஒரு நிலையில் யுத்தத்தை கட்டவிழ்த்துவிட்டிருப்பதுடன், அந்த
யுத்தம் விரிவாக்கப்படுவதையும் பார்த்துக்கொண்டு பிரான்சின் ஆழும் பிரிவினர் வித்தியாசமான முறையில் இருக்க முடியாது.
அத்துடன், மத்திய ஆசியாவிலும் பாரசீக வளைகுடாவிலும் எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்கள் தீண்டப்படாமல் நிறைந்து
கிடக்கின்றது என்பதை உலகின் பலபாகங்கள் அறியும் என்பதால் இது இன்னும் சின்ன விடயமே.
அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான
Elf, ஜனாதிபதி மித்திரோனின் கீழ் இரண்டாவது வெளிநாட்டமைச்சகமாகத்தான்
இருந்துவந்தது, இதன் உதவியுடன், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் எரிவாயு மற்றும் எண்ணை வளங்களை சுரண்டுவதில்
பிரான்ஸ் அதனது சொந்த திட்டத்தையும் நீண்டகால நலன்களையும் கொண்டிருக்கிறது. இவைகள் பலவகையில் பிரித்தானியானதும்,
அமெரிக்க நிலைப்பாடுகளுக்கு நேரேதிரானதாகும். இதற்கு துருக்கி, ஈரான் மூலமாக மத்திய ஆசியாவை இணைக்கும்
எரிவாயு குழாய்த்திட்டம் ஒரு உதாரணமாகும். இது அமெரிக்காவால் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் முட்டாள்தனமான முறையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்தத்தில் நிற்க முடியாது
என்ற சிறு சர்ச்சை பிரெஞ்சு ஆளும் பிரிவினர்களுக்கு மத்தியில் இருந்துவருகிறது. இந்த பதட்டங்கள் கேள்வியை எழுப்புகிறது,
அதாவது பிரான்ஸ் எந்த வழிகளில் தனது சொந்த செல்வாக்கை நிலைநிறுத்த கூடியதாக இருக்கும் என்பதே? வலதுசாரி
முதலாளித்துவ கட்சிகள் இந்தக் கேள்வியில் சிறாக்கின் பக்கத்தில் நின்றுகொண்டுள்ளதுடன், அமெரிக்காவுடன் இணைந்து இராணுவ
நடவடிக்கையில் கலந்துகொள்வது மட்டும் தான் சாத்தியமானது என பார்க்கின்றது. சிறாக் இன்னும் நீண்டதூரம் செல்லவில்லை
என தாராண்மைவாத தலைவரான Alain Madelin
எண்ணுவதடன், ''எமது இன்றைய பங்களிப்பு ஒரு பரந்த பயமுறுத்தும் செயலுக்கு ஒத்ததானதல்ல'' என கூறினார்.
மாற்றீடானவகையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருக்கமான கூட்டுடன், அந்தப் பிராந்தியத்தினது
ஆளும் பிரிவுகளினுடைய அனுமதியுடன் பிரான்ஸ் தனது சொந்த கூட்டை ஸ்தாபிக்கவேண்டும் என ஜொஸ்பன் கருதுகிறார். அனைத்து
ஐரோப்பிய அரசாங்களினது மிக இறுக்கமான இராஜதந்திர நடவடிக்கைகளும், வடக்கு கூட்டுக்களினதும் வயது முதிர்ந்த
முன்னாள் அரசரான Zahir Shah
இனதும் ஆதிக்கத்திற்கான சீரழிந்த இழுபாடுகளும்,
இவர்களின் பாகமாக பிரான்ஸ் இருந்துவருவதை இந்த வடிவத்திற்குள்
தான் பார்க்கப்படவேண்டும். யுத்தத்தை தொடர்ந்து ஒவ்வொரு அரசாங்கமும் இந்த பிராந்தியத்தில் தனது சொந்த
பொம்மை அரசுகளை ஸ்தாபிக்க முயற்சி செய்து வருகின்றன.
பிரெஞ்சு அரசாங்கம் 2 அக்டோபரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டமைச்சர்கள்
மாநாட்டில் அளித்த ஆறுபுள்ளிகள் அடங்கிய திட்டத்தின் பின்னணியிலும் இந்த நோக்கம் இருந்தது. காபூல் மீது முதலாவது
குண்டு விழுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே பிரான்ஸ், தலிபானை விரட்டிய பின்னர் ஆப்கானிஸ்தானின் அரசியல் கட்டுமானத்திற்கான
ஒரு திட்டத்தை அமெரிக்காவின் கீழ் இல்லாமல் ஐக்கியநாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையின் கீழ்
அபிவிருத்தி செய்துவிட்டது.
ஏனைய திட்டங்களுடன் உள்ளடங்கலாக, இந்த நடவடிக்கை திட்டம் மனிதாபிமான உதவிகள்,
ஜக்கிய நாடுகளின் மேற்பார்வையின் கீழ் புதிய அரசியல் கட்டுமானத்திற்கான வேலைகள் மற்றும், ''நெருக்கடியின் இராணுவ
நடவடிக்கையில் இருந்து தள்ளிவைக்கப்பட்ட ஐரோப்பா (விதிவிலக்காக, பெரியபிரித்தானியாவை தவிர்த்து) ஒரு
போட்டியில் மீண்டும் இறங்கவேண்டும். மாபெரும் சக்திகளின் தரிப்பிடமாக ஆப்கானிஸ்தான் இருக்கவேண்டும் என்பதை சர்வதேச
சமூகம் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது என்ற தோற்றப்பாட்டை உண்டுபண்ணக்கூடாது. நெருக்கடிக்கான தீர்வை ஐக்கியநாடுகளின்
வேலைத்திட்டத்தின் கீழ் மீழ் ஒழுங்கு செய்யவேண்டும், அயல் நாடுகளின் திட்டம் என்னவாக இருந்தாலும் ஆப்கானிஸ்தானை
அவர்களது வருங்காலத்தை வரையறுக்கும் படி வலியுறுத்த வேண்டும், மறுகட்டுமானத்திற்கு உதவிசெய்யக்கூடிய மாபெரும்
''துறைசார் நிபுணர்களை'' ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருப்பதால் அதற்கான பொறுப்பை அதனிடம் வழங்கவேண்டும்.''
என Le Monde
எழுதியதன் படி சில நோக்கங்களும் உள்ளன.
இதுவரை ஐரோப்பிய வெளிநாட்டமைச்சர்கள் இந்த திட்டத்திற்கு பின்னால் ஐக்கியப்பட
முடியாமல் இருந்துவந்தது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று, ஒரு உயர்மட்டத்திலான மிக நேர்த்தியான வடிவத்தில்
அமைந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரத்தியேக ஒன்றுகூடலில் மீண்டும் இந்த திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
பிரெஞ்சு ஆழும் பிரிவினரை பிரித்துவைத்திருக்கும் இன்னொரு கேள்வி, ஐரோப்பா பற்றிய
அவர்களின் வருங்காலப் பார்வையாகும். உலக வர்த்தக மையம் மீதான தாக்குதல் மற்றும் அமெரிக்காவினது ''பயங்கரவாதத்திற்கு
எதிரான யுத்தம்'' ஐரோப்பிய ஒன்றியம் ஒரு அனுகூலமற்ற நிலையில் இருப்பதை கண்டுகொண்டுள்ளது. ஐரோப்பாவினது
பொருளாதார, அரசியல் ஐக்கியத்திற்கான முயற்சி பெரும்பாலும் கடந்த வருடத்தைவிட சில முன்னேற்றங்களை
அடைந்துள்ளது. ஒரு பொதுவான வெளிநாட்டு கொள்கையை வகுப்பதிலும், அமெரிக்காவுக்கு போட்டியான முறையில்
இணைந்த இராணுவ பலத்தை தனியே கட்டுவதிலும் இது இன்னும் நீண்ட தூரத்தில் தான் இருந்துவருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின்
முதல்முதலான 60 ஆயிரம் பேர்களைக்கொண்ட பலமான அதிரடிப்படை 2003 இன் முடிவில்தான் தயார் நிலைக்கு வரவிருக்கின்றது.
அதற்கு முன்னரே, அமெரிக்காவின் ஆதரவைக்கொண்ட NATO
அங்கத்தவரான துருக்கியினால் அதுவும் தற்போது தடைப்பட்டுபோயுள்ளது.
இராணுவ ரீதியாக வாஷிங்டன் உடன் நெருக்கமான உறவை விரைவாக பிரித்தானியா அரசாங்கம்
ஏற்படுத்தியதானது இணைந்த ஐரோப்பிய எந்தவொரு நிலைப்பாட்டினதும் அடிப்படையை இல்லாது செய்த்துள்ளது. எவ்வாறு
இருந்தபோதும், ஒவ்வொரு ஐரோப்பிய அரசுகளும் அமெரிக்க நிர்வாகத்துடன் சுயாதீனமாக சுமூகமான உறவை ஸ்தாபிக்க
முயன்றுவந்தன. ''யார் ஐக்கிய அமெரிக்காவின் சிறந்த நண்பர்கள்? கடந்த வாரம் நடந்த அமெரிக்காவுக்கு சார்பான
ஐரோப்பிய நாடுகளின் ஓட்டப்பந்தயம் மீண்டும் ஒருமுறை ஐரோப்பியர்களை பிரித்துவிட்டது'' என ஜேர்மனின் வாரப் பத்திரிகையான
Der Spiegel அதனது அண்மைய பிரதியில் குறிப்பிட்டிருந்தது.
குறிப்பாக ஜேர்மனியில் ஐரோப்பிய ஐக்கியத்தினை புதுப்பிக்கும் விரைவாக்கப்பட்ட முயற்சியை
இது தள்ளிவைத்துள்ளது. ''நாம் பிரிந்து நிற்போமானால், ஐரோப்பியர்கள் புதிய உலக ஒழுங்கில் ஒதுக்கிவைக்கப்பட்டு
இருப்பார்கள்'' என வெளிநாட்டமைச்சரான Joschka
Fischer பாராளுமன்றத்தில் எச்சரிக்கை செய்தார். ''யுத்தத்திற்கு
பின்னர் சர்வதேச இராணுவ நடவடிக்கைகளில் ஜேர்மனி உதவியாளனாக மட்டும் இருந்த நிலைமை ''நினைத்துப்பார்க்கமுடியாத
கடந்தகாலத்திற்குரியது''. ஜேர்மனி தனது சர்வதேச கடமைகளை ஐரோப்பிய மற்றும் அட்லான்டிக்குக்கு அப்பாலும் ஒரு
முக்கியமான சகா என்ற முறையில் எமது பாத்திரத்திற்கு பொருத்தமான ஒரு பொறுப்பையும், ஐரோப்பாவின் இதயத்தில்
ஒரு பலமான ஜனநாயகத்தையும், பொருளாதாரத்தையும் ஜேர்மனி கொண்டிருப்பதுடன் ஒரு புதிய வழிமுறையில் சர்வதேச
பொறுப்புக்களை சந்திக்கும்'' என அதே பாராளுமன்ற ஒன்றுகூடலில் அதிபர்
Schroeder அறிவித்தார்.
றைன் (Rhine)
நதிக்கு அப்பால் இருந்து இப்படியான ஒரு பெரும் சக்தி கர்ஜிப்பதானது தவிர்க்க
முடியாதவாறு பிரெஞ்சு ஆளும் வர்க்கத்திற்கு தனது யுத்தத்தின் முன்னாள் எதிரிபற்றிய பழைய பயங்களை முன்கொண்டுவருகிறது.
வலதுசாரி முதலாளிள் மற்றும் பாரம்பரியமாக அமெரிக்காவை விமர்சித்து வந்த கோலிச வாதிகள் உள்ளடங்கலாக
நெருக்கமானமுறையில் அமெரிக்காவை நோக்கி அக்கறைப்படுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். மறுபக்கத்தில்,
ஐரோப்பாவை அமெரிக்காவுக்கு நிகரான ஒரு சக்தியாய் அபிவிருத்தி செய்யும் முன்னோக்கை ஜொஸ்பன் பலமாக
பிடித்துக்கொண்டுள்ளதுடன், முன்னாள் எதிர்ப்பு இயக்கங்களின் பிரிவுகளின் சமூக, கலாச்சார மரபுகள் என்பதற்கு அழைப்புவிடுப்பதன்
மூலம் முன்கொண்டுவர முனைகிறார். அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்துவரும் பாரிய
முரண்பாடுகள் ஒரு புதியதும் கூர்மையானதுமான சர்வதேச முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும்.
|