World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

New York City protest opposes war in Afghanistan

ஆப்கானிஸ்தான் மீதான யுத்தத்தை எதிர்த்து நியூயோர்க் நகரில் கண்டன ஊர்வலம்.
By our reporter
12 October 2001

Back to screen version

அக்டோபர் 7 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அன்று புஷ் நிர்வாகத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை எதிர்த்து 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் நியூயோர்க் நகரில் கிளர்ந்துவந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலமானது அமைதிவாத மற்றும் நடவடிக்கைக் குழுக்களால் பல வாரங்களாக திட்டமிடப்பட்டிருந்தது. இவர்கள் ஒரு சில நூறுபேர்களைத்தான் எதிர்பார்த்திருந்தார்கள் ஆனால் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா குண்டுகளை வீசத்தொடங்கியவுடன் இது இன்னும் அதிகரித்தது.

உலக வர்த்தக மையத்தில் நடந்த தாக்குதலில் இறந்தவர்களுக்கு தன்னெழுச்சியாக அஞ்சலி செலுத்தப்பட்ட இடமான Union square இல் ஊர்வலக்காரர்கள் கூடினார்கள். இந்த தாக்குதலில் இறந்த Gregory Rodriguez வின் பேரனார் Ruben Schaffer அங்கு கலந்துகொண்டு பேசியதுடன் அவரது பெற்றோர்கள் புஸ்க்கு எழுதிய கடிதத்தையும் வாசித்தார், ''இத் தாக்குதலுக்காக உங்களுடைய பதில் தாக்குதலானது என் மகனை இழந்த உணர்வுகளை மீட்டுத்தராது. உங்களுடைய இந்த தாக்குதல் எமக்கு மிகவும் கவலையைத் தருகின்றது. எமது மகனுடைய மரணத்தின் ஞாபகார்த்தத்தை ஏனைய தேசத்து மகன்களின், பெற்றோர்களின் துயரத்திற்கான நியாயப்படுத்தலாக எமது அரசாங்கம் பாவிப்பது எமக்கு கவலையளிக்கிறது.'' இந்த பேரணியில் Rita Lasar உம் கலந்துடன் உரைநிகழ்த்தினார், இந்தத் தாக்குதலில் ஊனமுற்றோர் நாற்காலியுடன் வந்திருந்த தனது நண்பனுக்கு உதவிசெய்துகொண்டு அவர் அருகில் இருந்தபோது இவரது சகோதரன் இறந்துபோனார்.

ஒழுங்கமைத்து அழைப்புச் செய்யப்பட்ட இவ் ஐக்கிய ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர் வெள்ளை உடைகளை உடுத்தியிருந்ததுடன், இறந்தவர்களிற்கான துயரத்தையும் அமைதியையும் வெளிப்படுத்த வெண்புறா வடிவான அட்டைகளை சுமந்தும் சென்றனர். எப்படியிருந்தபோதும் பெரும்பான்மையான மக்கள் சாதாரணமாக அன்றாடம் உடுத்தும் உடைகளுடன் கலந்துகொண்டதைப் பார்க்குமிடத்து, அவர்கள் தம்மை வழமையான தீவிர நடவடிக்கைவாதிகளிற்கு நெருக்கமானவர்கள் இல்லை என்பதை வெளிக்காட்டினார்கள்.

ஊர்வலக்காரர்கள் நியூயோர்க் திரையரங்குப் பகுதியான Broadway நோக்கிச் சென்றதுடன் ஒரு இடத்தில் 15 தடைகளாக விரிவுபடுத்தியதுடன், Times Square இன் தென்பகுதியில் பேரணியை நிறுத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் நியூயோர்க் பல்கலைக்கழகம் மற்றும் Hunter College மாணவர்களும் மற்றும் ஏனைய கல்லூரிகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். ''நியூயோர்க், எமது பெயரில் அல்ல'', ''இஸ்லாம், அராபியர்கள், வெளிநாட்டவர்கள் எமது எதிரிகளல்ல'', ''எமது துயரம் யுத்தத்திற்கான அவலக்குரலல்ல'', என எழுதப்பட்ட பதாகைகளை இவர்கள் சுமந்து சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது. பிராட்வேயில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நோபல் பரிசு பெற்றவர்களான அர்ஜென்டினாவில் இருந்து வந்த Adolfo Perez Esquive மற்றும் அயர்லாந்தில் இருந்து வந்த Mairead Maguire கலந்துகொண்டதுடன் அதன் பேச்சாளர்களாகவும் இருந்தனர். அங்கே சென்று கொண்டிருந்த ஒருவர் இந்த ஊர்வலக்கார்களுக்கான ஆதரவை அமைதியான கரகோசம் மூலம் காட்டினார், அதே நேரம் இவ்வூர்வலத்துக்கு எதிரான ஒரு சிறு குழு ஒன்று தொந்தரவு செய்துகொண்டிருந்தது.

புஷ் நிர்வாகத்திற்கும், ஜனநாயகவாதிகளுக்கும் இவ் இராணுவ நடவடிக்கையை கைவிடும்படி அழைப்புவிட்ட இப்பேரணியை ஒழுங்குபடுத்தியவர்களின் முன்னோக்கு குறுகியதாக இருந்ததுடன், அது ஒரு ''புதிய பிரத்தியேகமான, பயங்கரவாதக் குற்றம் பற்றிய உத்தியோகபூர்வமான சர்வதேச நீதிமன்றத்திற்கு'' முன்னால் பயங்கரவாதிகளை கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே அழைப்புவிட்டிருந்தது.

எப்படியிருந்தபோதும், பயங்கரவாத தாக்குதலால் மோசமாக பாதிக்கப்பட்ட நகரத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தொலைத்தொடர்பு சாதனங்களின் தேசியவாத கூச்சல்களுக்கு முகம்கொடுத்த நிலையிலும் அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்புக்கான சக்திவாய்ந்த எதிர்ப்பில் கலந்துகொண்டதில் தான் இந்த ஆர்ப்பாட்டத்தினுடைய முக்கியத்துவம் இழையோடியிருக்கிறது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் நடந்த யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 7 ஒக்டோபரில் நடந்ததது மட்டுமே மிக அண்மையில் நடந்த ஆர்ப்பாட்டமாகும். 29 செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் (Washington DC) 20 ஆயிரம் பேர் கொண்ட மக்களில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள அதில் அணிதிரண்டு இருந்தனர்.

ஆர்ப்பாட்டங்கள் ஏனைய நாடுகளிலும் அண்மையில் இடம்பெற்றதுடன், பாரிசில் Place de la Republique இருந்து Place de Nation வரை அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐய்யாயிரம் பேர் நடந்து சென்றனர்.

முக்கிய தொலைத்தொடர்புச் சாதனங்களில் ஒவ்வொரு துறைசார்ந்த யுத்தத்திற்கான முடிவற்ற அறிக்கைகளை வேலையில் இருந்து நீங்கிய பழை ஜெனரல்கள் ஒருவர் மாறி ஒருவர் அறிக்கைகளை தொகுத்து வழங்குபவர்களாக தோன்றியதுடன் ஒப்பிடும் போது, யுத்த எதிர்ப்புகள் குறைந்த மட்டத்திலாவது நடந்ததாகக்கூட இந்த தொலைதொடர்பு சாதனங்கள் காட்டவில்லை. யுத்தத்திற்கான பரந்த ஆதரவு இருக்கின்றது என கோரிக்கைகள் திரும்பத் திரும்ப ஒளி, ஒலிபரப்பப்பட்டபோதும், New York Times தனது முதல் பக்க ஆய்வுச் செய்திகளில் ஒக்டோபர் 8 ம் திகதி, குண்டுதாக்குதலுக்கான மக்களின் பரந்த ஆதரவு உறுதியற்று இருப்பதை உறுதிப்படுத்த, ''உள்நாட்டு முன்னணி : எரிச்சலடைந்த ஞாயிறு, விளைவுகளையிட்டு உறுதியற்ற கவலைகள்'' ( "Home Front: Edgy Sunday, Nagging Uncertainty About Consequences.") ''என்ற தலையங்கத்தைத் தீட்ட நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது. உண்மையில் அமெரிக்க இராணுவ அடாவடித்தனத்தின் விளைவுகளாக, ஒரு பக்கத்தில் மில்லியன் கணக்கான உழைக்கும் மற்றும் நடுத்தர அமெரிக்க மக்களுக்கும் மறுபக்கத்தில் ஆழும் கன்னைகளுக்கும், தொலைதொடர்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் மோதல் மேலெழும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved