The media and Mr. Bush
செய்தி ஊடகமும் திருவாளர் புஷ்ஷும்
By Barry Grey
16 October 2001
Back to screen version
«ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷை சாத்தியமானவகையில்
எல்லாம் மிகப் புகழ்ந்து படம்பிடித்துக் காட்டும் தமது முயற்சியில், அமெரிக்காவில் உள்ள தாராண்மைவாத பத்திரிக்கைகள்
அவை கடந்த காலத்தில் தக்கவைத்திருந்த பத்திரிக்கை ஒருமைப்பாடு மற்றும் நயத்தக்க நாகரிகம் இவற்றில் என்னென்ன
மிச்சசொச்சங்கள் இருந்தனவோ அவை அனைத்தையும் தூக்கி எறிந்தன. கடந்த மாதத்தின் பொழுது, சாதாரண திறமையிலிருந்து
பெரும் புகழுக்கு புஷ்ஷின் வியப்பூட்டும் பண்புரு மாற்றம் பற்றிய சான்றிதழ்கள் நியூயார்க் டைம்ஸ் மற்றும்
வாஷிங்டன் போஸ்ட் போன்ற பத்திரிகைகளின் பக்கங்களில் கிட்டத்தட்ட சர்வசாதாரணமாக இடம் பெற்றிருந்தன.
கடந்த வாரம் புஷ் தேசியரீதியாக ஒளிபரப்பப்பட்ட அதிகப் பார்வையாளர் பார்க்கும் நேர
(Prime-Time)
செய்தியாளர் மாநாட்டினை நடாத்திய பொழுது மோசடி மற்றும் சுய ஏமாற்று இவற்றிலான செயல்பாடுகள் விசித்திரமான
விகிதாசாரங்களைப் பெற்றன. புஷ்ஷின் சுற்றி வளைப்பு அவர் யார் என்பதைப் பிரதிபலித்தது: கடுமையாக மட்டுப்படுத்தப்பட்ட
மனிதன், நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இருந்து வெளிப்பட்ட சிக்கலான
சூழலை அரசியல் ரீதியாகவும் அறிவார்ந்த முறையிலும் புரிந்து கொள்வதற்கு ஆற்றல் குறைவாகப் பெற்றவர்.
அதனைத் தொடர்ந்து நியூயோர்க் டைம்ஸ், "திருவாளர் புஷ்ஷின் புதிய ஈர்ப்பு"
என்று தலைப்பிடப்பட்ட சாகசம் ஊட்டும் ஆசிரியத் தலையங்கத்தை வெளியிட்டது. "கடந்த ஆண்டு ஜனாதிபதியாக வெளிப்படையாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட" மனிதனின் உருமாற்றம் என்று கூறப்படுவதை வியந்து டைம்ஸ் பிரகடனம் செய்தது: "அவர்
நம்பிக்கையுடையவராக, உறுதிமிக்கவராக அவரது நோக்கத்தில் நிச்சயம் உள்ளவராக மற்றும் செப்டம்பர் 11 கொடூரமான
பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அவர் எதிர் கொண்டுள்ள அரசியல் மற்றும் இராணுவ சவால்களின் சிக்கலான
வரிசைகளை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராக காணப்பட்டார். அது அமைதி குலைந்த தேசத்திற்கு நிம்மதியை
அளிக்கும் மீள் உறுதி அளிக்கும் செயலாக இருந்தது."
விழாத்தொடக்கம் மிச்ச வர்ணணையின் தொனியை அமைத்தது. அது பின்வரும் குறிப்புரையுடன்
முடிந்தது: "எல்லாவற்றிலும், தங்களின் ஜனாதிபதி இந்த புதிய பூகோள நெருக்கடியின் சிக்கல்களில் ஆளுமை பெற நிறைய
செய்திருக்கிறார் என்ற உணர்வைக் கொடுக்க வேண்டிய ஆளுமை செய்யும் தோற்றமாக அது இருந்தது...... (புஷ்)
இந்த நெருக்கடியான நேரங்களில் தேசம் பின்பற்றக்கூடிய ஜனாதிபதியாகக் காணப்படுகிறார்."
இது வியப்பூட்டும் மதிப்பீடாக இருந்தது. அக்டோபர் 11 அன்று வெள்ளை மாளிகை செய்தியாளர்
மாநாட்டை வழங்கிய அந்த மனிதனுக்கும் ஜோர்ஜ்.டபிள்யு. புஷ்க்கும் உண்மையில் எந்த ஒப்புமையும் இல்லை என்று விவரிக்கப்பட்டார்.
அந்த மனிதன் உண்மையில் மனதால் தன்னகப்படுத்திக் கொள்ளாத துண்டு துணுக்கான எண்ணங்களை ஒன்றாய்த் தொடுக்க
முனையும் மனிதன், அற்பம் மற்றும் மழுப்பல்கள் ஆகியவற்றின் அலங்கோலத்தை விளைவிப்பதாக இருந்தது. டைம்ஸ் ஆசிரியத்
தலையங்கம் எழுதுபவர்கள் அதே செய்தியாளர் மாநாட்டைத்தான் கவனித்தார்களா?
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செய்தித் தொடர்பு உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தான் மீதான
யுத்தத்தை நியாயப்படுத்த மற்றும் அமெரிக்காவுக்குள் சிவில் உரிமைகள் மேலான தாக்குதல்களை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும்
நேர்மையற்ற கோரல்களை சவால் செய்யும் எந்த கேள்விகளையும் கேட்பதிலிருந்து விலக்கி, தங்களால் முடிந்த அளவில்
ஜனாதிபதியை கேள்வி கேட்பாடு அற்றவராக விட்டனர்.
எப்படி பயங்கரவாதிகளின் குழு கண்டுபிடிக்கப்பட முடியாமலோ அல்லது முறியடிக்கப்பட
முடியாமலோ பெண்டகன் மீது குண்டுபோடவும் உலக வர்த்தக மையத்தை அழிக்கவும் ஆயிரக்கணக்கானோரைக் கொல்லவும்
ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்க முடியுமென விளக்குமாறு ஒருவரும் புஷ்-ஐக் கேட்கவில்லை. இந்நாளில் ஒசாமா
பின் லேடனின் குற்றத்திற்கான ஆதாரத்தை வெள்ளை மாளிகை வழங்கத் தவறியமைபற்றி ஒரு செய்தியாளர் கூட குறிப்பிடவில்லை.
அதன் கூட்டான கோழைத்தனத்தில், பத்திரிகைக் குழுவினர் பத்திரிகைகளின் வாயை மூடப்பண்ணும் புஷ்ஷின் முயற்சிகளைப்
பற்றி கேள்விக்குள்ளாக்கக்கூட மறுத்தனர். பெட்ரோலியம் வளம்மிகுந்த மத்திய ஆசியாவில் யுத்தத்தின் பின்னே இருக்கும்
பொருளாதார மற்றும் மூலோபாய இலக்குகளைப் பற்றி அங்கு ஒரு குறிப்புக் கூட இல்லை. "O"
வில் தொடங்கி "L"-
ல் முடியும் அந்த மூன்றெழுத்து வார்த்தை ஒருபோதும் உச்சரிக்கப்படவில்லை.
இருப்பினும், அரசாங்க நடவடிக்கைப் போக்கிற்கான ஒத்திசைவான தன்மையைச் செய்யத்
தகுதி அற்றவர் என்பதை புஷ் நிரூபித்தார். "நம்பிக்கையுடையவராக, உறுதிமிக்கவராக அவரது நோக்கத்தில் நிச்சயம்
உள்ளவராக" காணப்படுவதிலும் பார்க்க புஷ் தற்காலிகமானவராக, உறுதி அற்றவராக மற்றும் மனம்போனபடி உரையாடுபவராக
இருந்தார். "அரசியல் மற்றும் இராணுவ சவால்களின் சிக்கலான வரிசைகளை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்"
அவரது ஆற்றலைப் பொறுத்தவரை, அவரது ஆலோசகர்களால் சூத்திரப்படுத்தப்பட்ட மந்திரங்களை தொடர்ச்சியாகக்கூட
ஜனாதிபதியால் உச்சரிக்க முடியவில்லை.
அவர் ஆரம்பத்தில் குறிப்பிட்ட "முதலாவது, மற்றும் இருபத்தோராம் நூற்றாண்டின் ஒரே
ஒரு (யுத்தம்), என நாம் நம்பும், என்பது இரண்டாவது முறையாக, "இருபத்தோராம் நூற்றாண்டின் யுத்தத்தில் முதலாவது
யுத்தம் " என ஆனது, மற்றும் சில நிமிடங்களுக்குப் பின்னர், "இருபத்தோராம் நூற்றாண்டின் புதிய யுத்தங்கள்" என ஆனது.
யுத்தம் நிகழும் காலம் மற்றும் இலக்குகள் என யுத்தத்தின் இயல்பைப் பொறுத்த மட்டில்,
அவர் பலதடவை திரும்பத்திரும்பக் கூறிய "வேறுபட்ட வகையிலான ஒரு யுத்தம்" என்று வலியுறுத்திய சொற்றொடருக்குப்
பின்னால் புஷ்ஷால் சிறிய அளவில் உள்நோக்கை வழங்க முடிந்தது. மீண்டும் மீண்டும் புஷ் அத்தகைய சுலோகங்களைப்
பற்றிக் கொண்டார். "அவரது குகையிலிருந்து புகை அடித்து வெளியேற்றல்" எனப் பேசலும் மற்றும் பின் லேடனை "தீங்குவிளைப்பவர்"
என்ற குறிப்புக்களும் அங்கு அதிகம் காணப்பட்டன.
புஷ்ஷின் குறிப்புக்கள் தெளிவான முரண்பாடுகளைக் கொண்டிருந்தன. ஒரு செய்தியாளர், பின்
லேடன் ஆப்கானிஸ்தானில்தான் இன்னும் இருக்கிறாரா என்பதை அமெரிக்க அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியாதிருக்கிறது
என்று குறித்து, பிரதான இலக்கு கண்டு பிடிக்கப்படாது போனால் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் வெற்றியடையுமா
என்று கேட்டார். புஷ் "வெற்றியோ அல்லது தோல்வியோ பின் லேடனில் தங்கியிருக்கவில்லை" என்று பதிலளித்தார்.
அவர் தொடர்ந்தார்: "வெற்றி அல்லது தோல்வி உலகம் முழுவதும் இருக்கின்ற பயங்கரவாதத்தை துடைத்து அழிப்பதில்
(அப்படியா) தான் தங்கி இருக்கின்றது. அவர் அந்த வலைப்பின்னலின் ஒரு அங்கம், ஒரு மனிதர் தான்" என்றார்.
ஐக்கிய அமெரிக்க அரசுகள் விளக்காமலிருக்கும் உலகின் ஒப்புயர்வற்ற பயங்கரவாதி என்று
அழைக்கும் மனிதனைப் பிடிக்காமல் அல்லது தீர்த்துக் கட்டாமல் உலகம் முழுவதிலும் எப்படி பயங்கரவாதம் "துடைத்து அழிக்கப்பட"
முடியும். பின் லேடனின் முக்கியத்துவத்தை ஒரே மூச்சில் குறைத்துக்கூறும் முகமாக-, மேலும், புஷ் அடுத்து அவர் பரந்த
ஆற்றலைப் பெற்றிருப்பதாக அவருக்கு சான்றளித்தார், சவுதி புலம்பெயர்ந்தோன் "நாட்டைப் பணயமாகக் கடத்தி"
இருந்தான் மற்றும் "நாட்டை அவனது தீவிரவாத சிந்தனைகளை ஏற்க நிர்ப்பந்தித்தான்" என்று அறிவித்தார்.
இன்னொரு செய்தியாளர் புதிய பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிய அன்றைய நாளின்
FBI எச்சரிக்கையைச்
சுட்டிக் காட்டி அதை முழுவதையும் நியாயமான கேள்விக்கு உட்படுத்தினார்: "அந்த எச்சரிக்கையின்முழு பொதுவான
தன்மையையும் எடுத்துக்கொண்டால் மக்களை செய்ய வேண்டி நீங்கள் வலியுறுத்தும்- இயல்பான வாழ்க்கைக்குத்
திரும்புதலை, அவர்கள் செய்யாத வண்ணம் அவர்களை பீதியுற வைப்பதற்கு அப்பால், அது உண்மையில் எதனை நிறைவேற்றப்போகிறது?
இந்தப் புதிரை அவிழ்க்க முடியாமல் புஷ் வெளிப்படையாகவே என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார்.
அது "அமெரிக்கா மீதான பொது அச்சுறுத்தலாக" இருந்தது என்றார் அவர், மேலும் கூறுகையில்,
"அது குறிப்பான அச்சுறுத்தலாக இருந்திருக்குமாயின், அச்சுறுத்தலுக்கு ஆளானோரை நாம் தொடர்பு கொண்டிருக்க
முடியும். "அவர் மேலும் அமெரிக்க மக்களிடம் கூறுகையில், வர இருக்கும் தாக்குதல்கள் பற்றிய உத்தியோகபூர்வ எச்சரிக்கைகள்
அரசாங்கம் "முழுவிழிப்புடன்" இருந்ததாகக் காட்டுவதன் காரணமாக, அவற்றிலிருந்து "திருப்திப் படமுடியுமா" என்றார்.
பின்னர் அவர் வணிகரீதியான விமானங்களின் சுமை பற்றிய காரணிகளில் அதிகரிப்பு மற்றும் விடுதிகளில் தங்குவதன் கட்டண
அதிகரிப்பு அவை பற்றிய "சாதகசெய்திகளை" மேற்கோள் காட்டினார். "நாங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி
விட்டோம்" என புஷ் அறிவித்தார்.
இது வழமையான புஷ்ஷின் முரண்பாடு கொண்ட அறிக்கையாகும் .
FBI - ன் எச்சரிக்கை
அவரது யுத்தக் கொள்கை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்குப் பின்னால் பொதுமக்களை முண்டியடித்துச்
செல்லவும் பதட்டமடையச் செய்யவுமான சதித்திட்டம் என எழும் சந்தேகங்களை எதிர்ப்பதற்கு விரும்பினார். ஆகையால்
அவர் வர இருக்கும் தாக்குதல் பற்றிய அச்சுறுத்தலை உண்மையானது என்று வலியுறுத்தினார். ஆனால் கிலியூட்டும் இந்தவாத
மூலக்கூறிலிருந்து அமெரிக்க மக்களின் பொருத்தமான பதில் "இயல்பு நிலைக்குத் திரும்புதல்" ஆக இருந்தது என அவர் எப்படியோ
முடித்தார்.
மக்களும்கூட விழிப்புடன் இருக்கவேண்டும் என அவர் பிரகடனம்செய்தார். ஆனால் துல்லியமாக
இந்த விழிப்புணர்வு எதைக் கடப்பாடாகக் கொண்டிருக்கிறது மற்றும் சாதாரண மக்கள் எப்படி தங்களைக் காத்துக்கொள்வது
என்று இருமுறை கேட்டபொழுது புஷ் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். "அமெரிக்க மக்கள் உண்மையில்,
சந்தேகத்திற்கு இடமுள்ளதாக எதையேனும் பார்த்தால், வழமைக்கு மாறானதாக சந்தேகப்படும்படியாக எதையேனும்
பார்த்தால், அவர்கள் உள்ளூர் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பானவர்களிடம் குறிப்பிட வேண்டும்" என அவர் சொன்னார்.
செய்தியாளர் மாநாட்டின் இறுதிக் கேள்விக்கு-- "அமெரிக்கர்கள் எதைப் பார்க்க
வேண்டும் மற்றும் எதை போலீசுக்கு அல்லது FBI
-க்கு அறிவிக்க வேண்டும்?" என்பதற்குப் பதிலளிக்கையில்-- புஷ்ஷால் இதைக்
காட்டிலும் சிறப்பாய் செய்ய முடியவில்லை: "நீங்கள் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனங்களைச் சுற்றி சந்தேகப்படும்படியான
நபர்கள் முழித்துக் கொண்டிருந்தால், அதனை சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பானவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்."
ஜனாதிபதி இப் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சி பற்றி எப்படி டைம்ஸ்
விளக்குகிறது என்பது இங்கு இருக்கிறது: திருவாளர் புஷ் அமெரிக்க மக்களிடம் அவர்களின் பயத்தைப் பற்றி சிறப்பாக
நன்றாகப் பேசக்கூடியவராக இருந்தார். அவர் கூடுதலான பயங்கரவாதத் தாக்குதல்கள் எந்த நேரமும் வரலாம் என்ற
புதிய எச்சரிக்கைகள் பற்றி கபடின்றிப்பேசினார். ஆனால் உள்நாட்டு அணியைப் பாதுகாக்க அரசாங்கம் எடுக்கும் பல
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி விளக்கினார். தேசத்தைப் பாதுகாப்பதைத் தீர்ப்பதில் அவர் ஒருமித்த உறுதியாக
இருந்தார் மற்றும் அவர் தனது அமைதியான அறிவுரையில் ஒரு தந்தையைப் போல, மக்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு
நாட்டின் வழமையான வாழ்வை நடத்த வேண்டும் என்றார்."
இந்த கால் வருடும் மற்றும் புனை சுருட்டுக்கலவையில், ஒரு கூற்று முனைப்பாய் இருந்தது
ஏனெனில் அது ஆசிரியர்கள் செய்தியாளர் மாநாட்டை பாத்திருக்கவாவது செய்தார்களா என்று கேள்விக்குள்ளாக்கியது. "உள்நாட்டு
அணியைப் பாதுகாக்க அரசாங்கம் எடுக்கும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி" புஷ் விளக்கியது என்பது உள்ளது
உள்ளபடி உண்மை அல்லாததாகும். அவர் அத்தகைய செயலைச் செய்யவில்லை.
டைம்ஸ் தொடர்ந்தது: "நேரான பேச்சு, அரசியல் மேதகைமை மற்றும் அங்கும் இங்குமாக
நகைச்சுவை உணர்வு இவற்றின் கலவையைப் பயன்படுத்தி, பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் பற்றிய அநேக முக்கிய
விஷயங்கள் மீதான தனது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தவும் கூர்மைப்படுத்தவும் புஷ் செய்தியாளர் மாநாட்டைப் பயன்படுத்தினார்.
"பத்திரிகை புகழ்ந்து தள்ளிய "தெளிவூட்டல்" மற்றும் "கூர்மைப்படுத்தல்" ஆகியன யுத்தம் பற்றிய காலவரையறை
இடம்பெறச் செய்ய மறுத்தலை மற்றும் சட்ட ரீதியான பாசாங்கை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் அவையை அழைப்பது
என்பதுடன், ஆப்கானிஸ்தானில் கைப்பொம்மை ஆட்சியை நிறுவுதற்கான மறை சூழ்ச்சிகளைக் கொண்டிருந்தது. பாக்தாத்தில்
வரவிருக்கும் தாக்குதலை நடத்துவதற்கு அமெரிக்கா அர்ப்பணித்துக் கொள்ளாமலேயே ஈராக்கை அச்சுறுத்தியதற்காக
டைம்ஸ் புஷ்-ஐ புகழ்ந்தது-- ஆசிரியத்தலையங்க வார்த்தைகளில் "நடவடிக்கையை எடுக்க நாடு இன்னும்
(வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது) தயார் செய்திருக்காத ஒரு அடி எடுப்பு" எனப்பட்டது.
"வறுமை பீடித்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு" மனிதாபிமான உதவி பற்றிய புஷ் பேச்சு
கண்டு குறிப்பாக டைம்ஸ் மகிழ்ச்சியுற்றது. அது புஷ்ஷின் மிக நோய்பீடித்த போலிப் பாசாங்கை-- அமெரிக்கக்
குழந்தைகள் ஆப்கான் குழந்தைகளுக்கு நன்கொடைகளை அனுப்பக் கோரும் அவரது வேண்டுகோளை-- "இதயம் கனிந்த
பரிவுணர்ச்சி என விவரித்து, தனது குறிப்புரையை முடித்தார்.
போகிற போக்கில் புஷ் வாஷிங்டன் கொண்டிருந்த "ஆப்கான் பிராந்தியத்தில் முந்தைய ஈடுபாடு"
பற்றிக் குறிப்பிட்டார் மற்றும் "இராணுவ இலக்கு நிறைவேற்றப்பட்ட பின்னர் நாம் வெறுமனே சும்மா விடமுடியாது" என்று
அனுபவத்திலிருந்து தனது நிர்வாகம் கற்றுக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். மிகவும் கண்டனத்திற்கு உரியதை ஒத்துக்கொள்வதை,
இது தொடர்பானதில் டைம்ஸ் மெளனமாக தாண்டிச் சென்றது.
1980களில் சோவியத் ஆக்கிரமிப்பின்போது இஸ்லாமிய முஜாஹைதீன்களுக்கு ஐக்கிய அமெரிக்க
அரசுகள் ஆதரவளித்ததை புஷ் குறிப்பிட்டார். அது நன்றாக அறிந்தவாறு, சி.ஐ.ஏ-ஆல் அநதக்காலகட்டத்தில் ஆயுதம்
மற்றும் நிதியூட்டப்பட்ட கெரில்லாக்களுள் ஒசாமா பின் லேடனும் தாலிபான் முன்னோடிகளும் உள்ளடங்குவர். ஆப்கானில்
இந்த பிற்போக்கு சக்திகளை பேணி வளர்த்ததில் ஐக்கிய அமெரிக்க அரசுகளைவிடவும் பெரும் பாத்திரத்தை வேறு எந்த
அரசாங்கமும் ஆற்றவில்லை, மற்றும் சோவியத் இராணுவம் வெளியேறியதும், வாஷிங்டன் தன்னைப் பின்னுக்கு
இழுத்துக்கொண்டு மக்களை போட்டி யுத்தப் பிரபுக்களின் மற்றும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் படைகளின் கருணைக்கு
விட்டுச் சென்றது. விளைவு நாட்டை உண்மையில் அழியவைத்த ஆண்டுக்கணக்கான உள்நாட்டு யுத்தமாக இருந்தது.
இவ்வாறு, அந்நேரம் புஷ் ஆப்கானிஸ்தான் குழந்தைகள் எதிர்கொள்ளும் கொடுமையான
சூழ்நிலைகளை விவரித்து, பரிவுணர்ச்சியை நாடகத்துடன் தனது குறிப்புரையை முடித்தார். அவர் ஏற்கனவே இதே சூழ்நிலைகளுக்கு
குற்றத்திற்குரியதாக அமெரிக்காவை கவனக்குறைவாகக் குறிப்பிட்டிருந்தார்.
வியட்னாமில் அனுமதித்த பிரதான தவறு இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட
அதிகாரிகளை அனுமதித்ததுதான் என்ற குற்றச்சாட்டு, செப்டம்பர் 11 சம்பவங்களில் இருந்து பெறவேண்டிய படிப்பினை "உலகில்
தீயது இருக்கின்றது" என்ற அவரது அறிவற்ற அதிகார அறிவிப்பு மற்றும் அரபு மற்றும் முஸ்லிம் உலகில் ஐக்கிய அமெரிக்க
அரசுகளுக்கு பரந்த அளவிலான வெறுப்பில் ஆச்சரியப்படும் அவரது தகுதி போன்ற, டைம்ஸ் திட்டமிட்டு கவனிக்காதிருப்பதற்கு
குறிப்பிடத்தக்க ஏனைய அறிக்கைகளும் அங்கு இருந்தன.
அறியாமை மற்றும் நேர்மையின்மையை அடுத்தடுத்துக் காட்டுவதற்கு என்ன காரணத்தைக்
கூறுகிறது? அவரது வாழ்நாளில் கருத்தூன்றிய புத்தகம் எதையும் படித்திருக்காவிட்டாலும், கடந்த இருபது ஆண்டுகளாக படித்திருக்காதவராக
புஷ் இருக்கிறார். அவருக்கு வரலாறு பற்றி எதுவும் தெரியாது மற்றும் மத்திய ஆசியா பற்றி கொஞ்சம் கூடத்தெரியாது.
அவர் அதைப் பற்றிய விஷயம் எதுவும் தெரிந்திராத உலகத்தோடு அவர் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
செப்டம்பர்11 க்கு முன்னர் ஆப்கானிஸ்தானுடன் எல்லையில் உள்ள நாடுகளைப் பற்றி பெயர் குறிப்பிட்டிருப்பாரா என்பது
சந்தேகம்தான்.
வரலாற்றிலும் நேர்வுகளிலும் வேரூன்றி உள்ள பரந்த பொதுமைப்படுத்தலை வடிவமைக்கும்
திறம் என்பது ஒருபுறம் இருக்கட்டும், அது இல்லாமல் அக்கறை கொண்ட அரசியல் எதுவும் செய்யமுடியாது, அவருக்கு
உண்மை விவரங்கள் பற்றிய ஆளுமை பற்றாக்குறையாக இருக்கிறது. அவர் ஆழங்காண முடியாத அளவுக்கு அவரது ஸ்தானத்திற்கு
தகுதியற்றவராக இருக்கிறார். இவை எல்லாம் ஆளும் வர்க்கத்தின் அரசியல் மற்றும் செய்தி ஊடக வட்டாரங்களில் நன்கு
அறியப்பட்டுள்ளன.
புஷ் செய்தியாளர் மாநாடு அவர்களின் பல்லை இளிக்கும் மதிப்புரையுடன் ஒப்புவமையைப்
பெற்றிருக்கவில்லை என்பதை டைம்ஸ் ஆசிரியர்கள் அறிவர். பின் ஏன் அவர்கள் அத்தகைய வெட்கங்கெட்ட
பகுதியை வெளியிட்டனர்?
வியட்னாம் - சகாப்த "நம்பிக்கை- இடைவெளி" திரும்ப இடம் பெறல் இருக்காது
என்பதில் செய்தி ஊடகமானது உறுதியுடன் உள்ளது ஏன் என்றால் அரசாங்கத்தின் கோரல்களுக்கு அவர்களின் வட்டாரத்திலிருந்து
சவால் எதுவும் இருக்கப் போவதில்லை. பத்திரிகை அரசின் கொள்கைப் பிரச்சார உறுப்பாக ஆன இந்த வெளிப்படையான
உருமாற்றம் அமெரிக்காவில் உள்ள ஜனநாயக அமைப்புக்களின் கூடிய ரீதியிலான சீரழிவின் அடையாளம் ஆகும்.
நியூயோர்க் டைம்ஸின் கட்டுரைகள் வர்ணணைகள் போன்றவை, பெரும் எண்ணிக்கையில்
இருப்பது, பொதுமக்களை அமெரிக்க ஆளும் தட்டு அவமதிப்பதைப் பிரதிபலிக்கிறது. செய்தி ஊடகமானது வெறுமனே
பொதுஅபிப்பிராயத்தில் செல்வாக்கு செலுத்துவதில் ஈடுபட்டிருக்கவில்லை. பொதுஜன அபிப்பிராயம் தன்னும் முற்று முழுதாக
செயற்கையானதாக இருக்கும் கட்டத்தை அமெரிக்க அரசியல் அடைந்திருக்கிறது.
பொய்களும் அரைகுறை உண்மைகளும், நேர்வுகளுடன் அற்பமாகவே தொடர்புடைய சூழ்ச்சிகளைக்
கையாளும் முழுநிறைவாக்கப்பட்ட அமைப்பின் ஆக்கக்கூறாக ஆயுள்ளன. மற்றும் அவை மக்களின் பரந்த பகுதியினரின் அக்கறைகளையோ
மற்றும் மனப்பாங்குகளையோ உண்மையில் குறிப்பதில்லை. பொதுஜன அபிப்பிராயம் என்பது காார்ப்பொரேட் நிறுவனங்களின்
ஒரு சிலரது ஆதிக்கமும் அவற்றின் அரசாங்க ஏஜண்டுகளும் தங்களின் சொந்தக் கண்ணோட்டத்தைப் பொதியப்படுத்தி வைத்திருப்பதைவிட
எதுவும் இல்லை.
முழு செய்தி ஊடக நடவடிக்கைகளும் பரந்த அளவிலான மோசடியில் மட்டுமல்ல மாறாக சுயஏமாற்றிக்
கொள்ளலிலும் செயலாட்சி செய்திருக்கிறது. பொதுமக்களிடம் இருந்து அரசியல் அமைப்பு அதிக அந்நியப்பட்டிருத்தலைப்
பிரதிபலிப்பது தமக்குள் மூடப்பட்ட நெருக்கமான வட்டமாகும்.
யுத்தத்துக்கு மிதமிஞ்சிய ஆதரவை கருத்துக் கணிப்புகள் காட்டியிருப்பினும், அமெரிக்க மக்களின்
ஆழமான மனப்பாங்கு மோதலானது திருகுப்புரி போல் கட்டுப்பாட்டினை மீறி விலகிச்சென்று விடுமோ என்ற பயமும்
பதட்டமும்தான். தள்ளாடும் மட்டத்தில் சமூக சமத்துவமின்மை மற்றும் அரசியல் அந்நியப்படலைப் பண்பிட்டுக் காட்டும் அமெரிக்க
சமூகமானது பெரும் எழுச்சிகளில் அதன் வெளிப்பாட்டைக் காணும் என்பது தவிர்க்க இயலாதது, அதற்கு தனிமைப்படுத்திக்
கொண்டுள்ள ஆளும்தட்டும் அதன் செய்தி ஊடக பிரச்சாரவாதிகளும் தயாரிப்பில்லாது இருக்கிறார்கள்.
|