World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆபிரிக்கா

FBI send agents to Kenya

FBI தனது அதிகாரிகளை கெனியாவிற்கு அனுப்புகின்றது

By Barry Mason
3 October 2001

Back to screen version

உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் தாக்குதல் தொடர்புடைய 200 சந்தேக நபர்களின் பட்டியல் ஒன்றினை FBI கெனிய அரசாங்கத்திற்கு கையளித்திருந்தது. சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கு FBI தனது அதிகாரிகளை கெனியாவுக்கு அனுப்பியிருந்ததோடு, அவர்களுடைய புலன் விசாரணைகள் பெரும்பான்மையாக முஸ்லீம் மக்கள் வாழுகின்ற மொம்பசா (Mombassa) என்ற இடத்திலேயே குறிவைக்கப்பட்டிருக்கிறது.

இதன் பாகமாக, கெனியன் அரசாங்கமானது அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலைப் பயன்படுத்தி ஒரு பொய்யான காரணத்தைக் காட்டி கடுமையான கட்டுப்பாடுகளை கெனிய அரபு மக்கள் மற்றும் ஆசிய நாடுகளைப் பிறப்பிடமாகக் கொண்ட மக்கள் மீதும் கொண்டுவந்துள்ளார்கள். பிறப்புச் சான்றிதழுக்கான விண்ணப்பம் அல்லது கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்திற்கோ விண்ணப்பதாரிகளுடைய பெற்றோரைப் பெற்றவர்களுடைய தேசிய ஆவணங்களை கட்டாயம் இணைத்துக்கொள்ள வேண்டும் என Mombassa வில் உள்ள குடிவரவு அலுவலகம் மக்களைக் கட்டுப்படுத்தியது. அவர்கள் உண்மையான விசுவாசம் உடைய கெனியன் பிரஜைகளாக இருப்பதற்கு இது மட்டும் தான் உத்தரவாதம் என கருதுகின்றது.

இப்படியான கட்டளை அரபு மக்களையும் மற்றும் ஆசிய முஸ்லீம்களையும் மட்டும் குறிவைக்கவில்லை, மேலும் இது எல்லா பழங்குடி அல்லாத கெனியர்களுக்கும் பொருந்துமென நைரோபி அரசு கருதுகின்றது. அரபு மற்றும் ஆசிய வம்சாவழியினர்களில் அனேகமானோர் கடற்கரைப் பிரதேசங்களிலேயே செறிந்திருக்கின்றார்கள், முக்கியமாக பெரிய கெனியன் துறைமுகமான மொம்பசாவில் ஆகும். இந்தக் கட்டளைக்கான ஆரம்ப அறிமுக முயற்சியானது, பரந்தளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை எதிர் கொண்டதில் தளர்ந்து போனது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கையில் இருந்து வந்த அகதிகளின் நாடாகவும் கெனியா இருக்கின்றது. மேலும் மிக நீண்டகாலமாக வாழுகின்ற ஆசிய பூர்வீகம் கொண்டவர்கள் வாழும் நாடுமாகும். FBI ஐயும் கெனியாவின் பாதுகாப்புப் படைகளும் மிக கவனமாக வங்கிப் பணப் பரிமாற்றங்களை பரிசோதிப்பதிலும் தேடுதல்களை செய்வதிலும் இவர்கள் மேல் மிக பிரத்தியேகமாக குறிவைத்து செயற்பட்டுவருகின்றது.

நைரோபி கலாசாலையின் சர்வதேசப் பாதுகாப்பு [Nairobi Institute of Diplomacy and International Studies] மற்றும் போர்த் திறன் சார்ந்த சிரேஷ்ட விரிவுரையாளரான டாக்டர் முஸ்தபா ஹசூனா (Dr Moustafa Hassouna) "சாம்பல் பிரதேச அகதிகள்" என்பது குறித்து அண்மையில் பேசினார். ஒரு கேடான பிரேரணையில் அவர், "சாம்பல் பிரதேச அகதிகள்.... என்பதை, அகதிகளை வரவேற்கும் நாடுகள் ஒரு அரசியல் அட்டவணையில் இடும் பொழுது அது அவர்களை பாதிப்படையச் செய்யும். அமெரிக்கா இதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் சந்தர்ப்பங்கள் உள்ள நிலையில், இவ் அகதிகள் இதனை திட்டமிடப்பட்ட அமெரிக்கத் தாக்குதல்கள் என உணருவார்கள். இதற்கு அவர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என இங்கு ஒருவருக்கும் தெரியாது. எமக்கு இங்கு அறிவு தேவைப்படுகின்றது...." என கூறினார்.

கிழக்கு ஆபிரிக்காவில் கடந்த காலங்களில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நிகழும் பொழுதில் எப்பொழுதும் ஆசியர்களே (Asian) அரசாங்க அடக்குமுறைக்கு உள்ளாகும் தலையாய இனமாக இருந்துவந்துள்ளனர். 1970ல் உகண்டாவிலிருந்து ஆசிய பூர்வீகம் கொண்ட 80,000 மக்கள் இடி அமீனால் வெளியேற்றப்பட்டனர். 1980ல் தன்சானிய அரசாங்கம் ஆசியர்களின் சொத்துக்களை அரசுடமை ஆக்கியதோடு ஆசிய எதிர்ப்பு சோவினிசத்தையும் தூண்டிவிட்டது. 1982ல் இராணுவ சதி முயற்சியின்போது ஆசியர்களினது வீடுகள் மற்றும் வியாபாரத்தளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.

கெனியா ஒரு முக்கியமான கேந்திர முக்கியத்துவமுடைய சொத்தாக அமெரிக்காவிற்கு இருக்கின்றது, நைரோபியிலுள்ள அமெரிக்கத் தூதரகமானது சூடான், The Great Lakes and the Horn of Africa ஐ கண்காணிப்பதில் முதன் முக்கியத்துவம் வாய்ந்தாக இருந்துவருகின்றது. 1970ன் பிற்பகுதியில் அமெரிக்காவும் கெனியாவும் ஒரு நுழைவுரிமை உடன்படிக்கையை கையெழுத்திட்டது. அத்தோடு வாஷிங்டன் அங்கு வான் மற்றும் கடல் தளங்களை அடிக்கடி பயன்படுத்திவருவதற்கு, அமெரிக்கப் படைகள் சோமாலியாவை 1992ல் ஆக்கிரமித்தது சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றது. வளைகுடாவிலோ அல்லது ஆப்கானிஸ்தான் மீதோ எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் கெனியாவிலுள்ள வசதிகள் ஒரு முக்கியமான பங்குவகிக்கின்றது. அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மொம்பசாவிலுள்ள துறைமுக வசதிகளை அடிக்கடி பயன்படுத்துகின்றது.

வாஷிங்டனில் அமைந்துள்ள ஆபிரிக்க அரசியல் நடவடிக்கை அமைப்பின் இயக்குனர் Salih Booker அமெரிக்காவிற்கு கெனியாவின் முக்கியத்துவம் என்ன என்பதுபற்றி அண்மையில் பேசினார்; அதாவது, "கெனியா ஒரு இடைதங்கு தளப் பிரதேசம் என்பதற்காக மாத்திரம் முக்கியமானதல்ல இதற்கப்பால் அது முழுப் பிராந்தியங்களுக்குமான எல்லாவகையான இராணுவத் திட்டமிடலுக்கும் உரியதாக இருக்கின்றது. அமெரிக்காவினது இராணுவப் பிரசன்னம் வளைகுடாப் பிராந்தியத்தில் தீவிரமயப்படுத்தப்படும்போது வாஷிங்டனுக்கு கெனியா மேலும் அதிகமான முக்கியத்துவம் உடையதாக இருக்கும்.

செப்டம்பர் மாதம் 28ம் திகதி மொம்பசாவில் ஒரு சிறிய யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது, வெள்ளிக்கிழமை வழிபாட்டின் பின்னர் கிட்டத்தட்ட 100 பேர் மாவட்ட அதிகாரி அலுவலகத்திற்கு அணிவகுத்துச்சென்று, FBI அதிகாரிகள் நகரத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டுமெனக் கோரும் ஒரு மனுவைக் கையளித்தனர். மொம்பசாவின் பள்ளிவாசல் தலைவர்களின் (Imams) சபையினர் அமைதியானதும் சாதாரணமானதுமான (low-key) ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை எதிர்த்தனர். அத்துடன் அவர்கள் கெனியாவின் அதிகாரிகள் FBI உடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வேண்டுதல் விடுத்துள்ளதுடன், 1998ல் நைரோபியில் அமெரிக்க தூதரகக் குண்டுவெடிப்பிற்கு பின்னர் நகரங்களில் தொடரப்பட்ட FBI இன் புலனாய்வு நடவடிக்கைகளினால் இதைப்போன்ற எதிர்ப்புகள் தூண்டிவிப்படக் கூடும் என்ற தமது பயத்தினை வெளிப்படுத்தினர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved