World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Bush's war at home: government censorship, secrecy, and lies

உள்நாட்டில் புஷ் இன் யுத்தம்: அரசாங்க தணிக்கை, இரகசியம், பொய்
By Patrick Martin
13 October 2001

Back to screen version

அக்டோபர் 19ல் பிரசுரிக்கப்பட்ட முதல் பாகத்துடன் இணைந்தவகையில் முழுக் கட்டுரையும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க்கினதும், வாஷிங்டன் மீதானதுமான தாக்குதலின் ஒரு மாதத்தின் பின்னர், அமெரிக்க அரசாங்கத்தின் நாளாந்த நடவடிக்கைகளில் பாரிய மாற்றங்கள் காணப்படுவதுடன், ஜனநாயக விரோத, சர்வாதிகார ஆட்சிமுறைகளை நோக்கிய பலம்வாய்ந்த போக்குகள் வெளிப்படையாக தோன்றுகின்றன.

புஷ் இன் நிர்வாகமானது இரண்டாம் உலக யுத்தகாலத்தில் இருந்தது போன்ற பாரிய இரகசிய நடைமுறைகளை அமுல்ப்படுத்த முனைகின்றதுடன், எதிராளிகளினது, மத்திய ஆசியாவின் மீதான யுத்த நடவடிக்கை தொடர்பானதுமான செய்திகளை தணிக்கைசெய்ய செய்திநிறுவனங்களை வலியுறுத்துவதுடன், 80 வருடங்களுக்கு மேலாக அமெரிக்கா கண்டிராத அளவிலான கண்மூடித்தனமான கைது செய்தல், நீதிமன்றவிசாரணை இல்லாது தடுத்துவைத்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளது.

ஜனநாயக உரிமைகள் மீதான இத்தாக்குதலுக்கு ஜனநாயக்கட்சி ஆர்வத்துடன் பங்காளியாகியுள்ளது. பயங்கரவாதத்தை தோற்கடித்தல் என்பதன் கீழ் புஷ் நிர்வாகத்தால் நோக்கப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கான சட்டத்திற்கு கடந்தவாரம் நீதித்துறைக்கான குழு 36க்கு 0 என்ற விகிதத்தில் வாக்களித்துள்ளது. அக்டோபர் 11ம் திகதி செனற் சபையானது இதேமாதிரியான சட்டத்திற்கு 96க்கு 1 என்ற விகிதத்தில் ஆதரவளித்துள்ளது. இதற்கான இறுதி நிறைவேற்றல் இரண்டு சபைகளிலும் எதிர்வரும் வாரத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்சட்டமானது கம்பியற்ற தொலைபேசிகளையும், மின்னஞ்சல் செய்திகளையும் FBI உளவறிதற்கான அதிகாரத்தை விரிவுபடுத்துவதுடன், அரசாங்க உளவாளிகள் மத்தியில் செய்திகளை பரிமாறிக்கொள்ளவும், குடிவரவாளர்களை நீதிமன்றத்தின் விசாரணை இல்லாது அரசாங்க வழக்குத்தொடுனரின் [சட்டமா அதிபரின்] உத்தரவின் பேரில் தடுத்துவைப்பதற்கான அதிகாரத்தையும் வழங்கும்.

இச்சட்டத்துடன் முரண்படும் ஒரேயொருவரான Wisconsin இன் செனற்டரான Russell Feingold ஆல் முன்மொழியப்பட்ட திருத்தங்களை பல பெரும்பான்மையான வாக்களிப்புகளால் தோற்கடித்த பின்னர் செனற்சபை அதனை ஏற்றுக்கொண்டது. இச்சட்டத்திற்கும் செப்டம்பர் 11ம் திகதி தாக்குதலுக்கும் எவ்வித தொடர்புமில்லை எனவும், இது அமெரிக்கர்களின் வாழ்க்கையில் பாரியளவு கண்காணிப்பை செய்வதற்கு FBI இற்கு அதிகாரத்தை வழங்கும் என Russell Feingold தெரிவித்தார்.

இச்சட்டத்தின் ஒரு பிரிவு ஒருவர் ''அனுமதியில்லாது'' வைத்திருக்கும் கணனி மூலமாக இணையத்துடன் தொடர்பு கொள்வதை FBI கண்காணிக்க அனிமதிக்கின்றது. இதன் வார்த்தைகள் மிகவும் பரந்தது. உதாரணமாக ஒருவர் ஒரு நிறுவனத்தின் அல்லது அரசாங்கத்தினது கணனி மூலமாக பொருட்களை வாங்கினால் அல்லது சிறுவர்கள் அனுமதியளிக்கப்படாத இணையப்பக்கமொன்றை நூலகங்களில் உள்ள கணனியை பாவித்து பார்ப்பதையும் கட்டுப்படுத்த பாவிக்கப்படலாம்.

இச்சட்டமானது FBI இனையும், ஏனைய உள்நாட்டு பொலிஸ் அமைப்புகளையும் இராணுவ மயப்படுத்துவதை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இரகசிய சேவைக்குழு ஒன்றின் தலைவரான புளோரிடாவின் ஜனநாயக் கட்சிகாரரான Bob Graham ''இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் உளவறியும் உள்ளடக்கத்தின் ஒரோ ஒரு நோக்கம் ஏற்கனவே நிகழ்ந்தவற்றிற்காக நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக அமெரிக்க குடிமக்களின் வாழ்க்கையை அச்சுறுத்தும் நடவடிக்கை எதையும் தடுப்பதாக மாற்றுவதாகும்'' என குறிப்பிட்டார். மேலும் ''நாங்கள் குற்ற வழக்குகளில் மட்டும் முக்கிமான தகவல்களை தொடர்ச்சியாக பயன்படுத்த முடியாது என குறிப்பிட்டார். நடைமுறையில் அவர்கள் வசதியாக வரையறுப்பதுபோல் ''சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு'' மட்டும் இவ் அமைப்புகள் ஈடுபடுத்தப்படமாட்டார்கள், மாறாக ''பயங்கரவாதத்துக்கு எதிரான'' பென்டகனின் கைகளாக செயற்படுவர் என்பதே.

இச்சட்டத்தின் இரு பிரிவுகளும் Orwellian தலையங்கத்தை கொண்டுள்ளன. செனட்சபையின் சட்டமானது ''அமெரிக்காவின் நடவடிக்கை ஒன்றுபடுத்தும், பலப்படுத்தும் நடவடிக்கை [USA] எனவும், கீழ்ச்சபையின் சட்டம்'' 2001 இன் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கவும் நிறுத்துவதற்குமான பொருத்தமான ஆயுதங்களை வழங்குதல்'' ["Provide Appropriate Tools Required to Intercept and Obstruct Terrorism Act of 2001,"] âù "PATRIOT" என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களை முதல் எழுத்துக்களை கொண்டு அழைக்கப்படுகின்றது.

இரண்டு சட்டங்களும் அமைதியான அரசியல் நடவடிக்கை, மறியல், சட்டத்திற்கு அடங்காமை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்களையும் பயங்கரவாதம் என அழைக்கும் அளவிற்கு பரந்து செல்வதுடன், எலக்ட்ரோனிக் கண்காணிப்பு, இணைய உளவுபார்த்தல், காலவரையறை அற்ற தடுத்துவைத்திருத்தல், இரகசிய நீதிமற்ற வழக்கு போன்றவற்றையும் நோக்கமாக கொள்ளலாம்.

ஒடுக்குமுறையும் மூடிமறைப்பும்

அரசாங்கத்தினது புதிய பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரங்கள் நடைமுறையில் எவ்வாறு இருக்கும் என்பதற்கு ஆயிரக்கணக்கான அராபிய-அமெரிக்கர்களும், இஸ்லாமியர்களும் கடந்த மாதம் அனுபவித்தவற்றை கொண்டு அனுமானிக்கலாம். FBI ஆலும் ஏனைய பொலிஸ் அமைப்புகளாலும் சிவில் உரிமைகள் திட்டமிட்டவகையில் மறுக்கப்பட்ட நிலைமையில் 600 இற்கு மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டோ அல்லது தடுத்துவைக்கப்பட்டோ உள்ளனர்.

ஒரு சில கைதுகள் அல்லது தடுத்துவைத்தலே நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அவர்களுக்கு ஒரு வழக்கறிஞரை வைக்கலாம் என்பது தொடர்பான அறிவிக்கப்படவில்லை அல்லது அதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. Mitchell Gray என்னும் வழக்கறிஞர் Washington Post பத்திரிகைக்கு Catch-22 எனப்படும் நிலைமை குறித்து தெரிவித்தார். அதன்படி அவரது கட்சிக்காரர் கையெழுத்திடப்பட்ட ஒரு பத்திரத்தை கையளிக்குமாறு சிறைக்காவலர்கள் கோரியுள்ளனர்.

அவர் மேலும் ''தான் Immigration and Naturalization Service இடம் பலதடவை கேட்டபோதும், தனது கட்சிக்காரர் எங்குள்ளார் என்பது தொடர்பாக ஒருவரும் கூறவில்லை'' எனவும் இம்மனிதனிடம் இருந்து G-28 பத்திரம் கையெழுத்து வாங்கி இருக்கிறீரா எனவும்? அது இல்லாது நாங்கள் பார்க்க அனுமதிக்கமாட்டோம் எனவும் அவர்கள் கூறியதாகவும் அவரைப்பார்க்காமல் நான் எவ்வாறு G-28 பத்திரத்தில் கையெழுத்துவாங்குவது என கேட்டார்?.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை பொலிசார் உண்மையாகவே மறைத்து வைத்திருந்தனர். ஒரு சில பெயர்களே வெளியிடப்பட்டதுடன், அவர்களின் குடும்பத்தனருக்கு அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையோ அல்லது அவர்கள் மீது என்ன குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது தொடர்பாகவோ தெரிவிக்கப்படவில்லை. ஒரு விடயம் தெளிவானது. அதாவது செப்டம்பர் 11ம் திகதி தற்கொலைத்தாக்குதலில் இந்த 600 பேரில் ஒருவராவது குற்றத்தில் தொடர்புடையவர்கள் என்பதற்கான குற்றம் சாட்டப்படவில்லை. பலர் சாதாரண குடிவரவு சட்டத்தை மீறியது அல்லது வீதி சட்டங்களை மீறியதற்காக தடுத்துவைக்கப்பட்டனர். உலக வர்த்தக மையத்தினதும், பென்டகன் மீதானதுமான தாக்குதலுக்கு முன்னர் இதற்காக ஒருவரும் சிறைக்கு சென்றதில்லை.

மேலதிகமான பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்த உறுதியற்றதும் அச்சுறுத்துகின்றதுமான எச்சரிக்கைகளுடன் புஷ் நிர்வாகம் குறுகியகால ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாது, மத்திய ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் அமெரிக்க இராணுவத் தலையீட்டுக்கு எதிரான உள்ளூர் அரசியல் எதிர்ப்பாளர்களை குறிவைத்து ஒரு முற்றுமுழுதான கட்டமைப்பை உருவாக்குவதற்கான பரந்த மனநிலைக்கான ஆதரவைத் தேடுகின்றது.

புதிதாக தாய் நாட்டுப் பாதுகாப்பிற்கான வெள்ளை மாளிகையின் அலுவலகத்தை உருவாக்கப்பட்டது இந்த பொலிஸ் அரசை கட்டியமைப்பதை காட்டும் ஒரு புள்ளியாகும். வெள்ளை மாளிகையின் உதவியாளனாக Governor Ridge இனை புஷ் நியமிக்கையில் காங்கிரசின் முடிவேதுமில்லாததுடன், அவரது நியமனம் தொடர்பாக செனட்சபையின் எவ்விதமான உறுதிப்படுத்தலோ அல்லது அவரின் நடவடிக்கையை கண்காணிப்பதற்கு காங்கிரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை.

இதேவேளை அமெரிக்காவின் வரலாற்றில் முதற்தடவையாக அமெரிக்காவிற்கான கட்டளையிடும் உயர் அதிகாரி [Commander-in-Chief] ஒருவரை உருவாக்குமாறு பென்டகனுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. அதன் தலைமையகம் western hemisphere இனதும் அமெரிக்க கண்டம் முழுவதுமான இராணுவ நடவடிக்கையை கட்டுப்படுத்தும். இது இலத்தீன் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கும், இராணுவ சதியை உருவாக்குவதற்கும் பொறுப்பான தெற்கு கட்டளையகத்தையும், அமெரிக்காவின் அணுசக்தியை கட்டுப்படுத்தும் மூலோபாய கட்டளையகத்தையும் உள்ளடக்கிய நான்கு இராணுவ கட்டளையகங்களை உள்ளடக்கும் .

இந்த இராணுவ மறுஒழுங்கமைப்பின் அரசியல் கடமைகள் என்பதை உதவி பாதுகாப்பு செயலாளரான Paul Wolfowitz இனால், கடந்தவாரம் காங்கிரஸ் குழு ஒன்றிற்கு அமெரிக்க உள்ளநாட்டு யுத்தத்தின் பின்னர் ஆயுதப்படையினரை உள்நாட்டு கண்காணிப்பில் ஈடுபடுத்துவதை தடைசெய்யும் சட்டமான posse comitatus இனை மீளாய்வு செய்ய விரும்புவதாக கூறியதில் இருந்து வெளிப்படுகின்றது.

புஷ் நிர்வாகமானது ஏற்கெனவே தேசிய பாதுகாப்பு படையினரை விமான நிலையங்களில் ஈடுபடுத்துவதை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நடவடிக்கையானது ஆகாயப் போக்குவரத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கத்திற்கு மாறாக நாளாந்தம் மக்கள் ஆயுதம் தரித்த படையினரை கண்டுகொள்ளவதை பழக்கப்படுத்துவதற்காகவாகும். அடுத்த நடவடிக்கை ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் முதல் தடவையாக இராணுவத்தை உள்ளூர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாகதான் இருக்கும்.

இந்நடவடிக்கைகளானது செப்டம்பர் 11ம் திகதி தாக்குதலின் பிரதிபலிப்பல்ல. இவை பென்டகனின் நான்கு ஆண்டுகளான பாதுகாப்பு மீளாய்வின் திட்டமிடப்பட்டது. இந்த நீண்டகால திட்டமிடும் முயற்சியானது இவ்வருட ஆரம்பத்தில் பாதுகாப்பு அமைச்சராக டொனால்ட் றும்ஸ்வெல்டும், உதவி பாதுகாப்பு செயலாளரான Paul Wolfowitz உம் பதவிக்கு வந்த பின்னர் வெளிப்பட்டது. இது நீண்டகால ஜனநாயக விரோத அரசியல் நோக்கத்தினை முன்கொண்டுவர புஷ் இன் நிர்வாகம் இப்பயங்கரவாதிகளின் தாக்குதலை பயன்படுத்திக்கொண்டதை எடுத்துக்காட்டுகின்றது.

செய்தித்துறையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல்

ஒடுக்குமுறை சக்திகளை கட்டியெழுப்புவதில் முக்கிய உள்ளடக்கமாக செய்தித்துறையை கடுட்ப்படுத்துதலும் ஒழுங்குபடுத்துவதுமாக உள்ளது. புஷ் இன் செய்தித்துறை செயலாளரான Ari Fleischer இன் நன்கு பிரசித்தமான அறிக்கையில் இதனை எடுத்துக்காட்டியுள்ளார். அவர் அதில் ''அமெரிக்கர்கள் அமெரிக்க இராணுவம், இரகசியசேவை, பொலிஸ் நடவடிக்கை தொடர்பாக அவர்கள் [செய்தித்துறை] கூறுவதை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். செய்தித்துறையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வெள்ளை மாளிகையின் பிரச்சாரத்திற்கு, தொலைக் காட்சியையும், பத்திரிகைத் துறையையும் கட்டுப்படுத்தும் பாரிய நிறுவனங்களிடமிருந்து குறைந்த அல்லது எவ்வித எதிர்ப்பும் கிடைக்கவில்லை.

New York Times பத்திரிகையில் அக்டோபர் 1ம் திகதி அறிக்கையில் ''மக்கள், அரசாங்கத்தின் அதிகமான இரகசியத்திற்கு எதிராக அல்லாது செய்தித்துறையின் மிதமிஞ்சிய விதத்தில் தேவையற்ற விடயத்தில் தலையிடுவதற்கு எதிராக ஆயுதம் தூக்கியுள்ளனர் எனவும் அது தான் பிரச்சனையென அரசாங்க அதிகாரிகள் கூறவில்லை, இப்படியான கேள்விகளை செய்தியாளர்கள் இது தான் பிரச்சனையென எழுப்புகின்றனர். செய்தித்துறை ஒரு தொகை கேள்விகளை கேட்கின்றனர். இப்படியானவற்றை அமெரிக்க மக்கள் கேட்கவோ அல்லது பதிலளிக்கவோ விரும்பமாட்டார்கள் என நான் நினைக்கின்றேன்'' என தெரிவித்தார்.

அக்டோபர் 10ம் திகதி தேசிய பாதுகாப்பு ஆலோசகரான Condoleeza Rice 5 செய்தித்துறையின் பிரதிநிதிகளுடனான ஒரு மாநாட்டில் நாடாக்களில் பதிவுசெய்யப்பட்ட ஒசமா பின் லேடனின் அறிக்கைகளை ஒளிபரப்ப வேண்டாம் அல்லது தணிக்கை செய்த பின்னரே வெளிவிடுமாறு கேட்டுக்கொண்டார். அவர் மேலும் பின் லேடனின் பிரச்சாரம் அமெரிக்காவின் யுத்த முயற்சிகளை தோல்வியடையச் செய்யும் என கூறுகையில், மற்றைய வெள்ளை மாளிகை அதிகாரிகள் இந்நாடாக்களில் பயங்கரவாதிகளின் நிலையங்களுக்கு சங்கேத பாஷையிலான செய்திகள் அடங்கியிருக்காலாம் என கூறினர்.

சுயதணிக்கை தொடர்பான இவ் அரசியல், இராணுவ விவாதங்கள் மிகவும் முட்டாள்தனமானது. உலக வர்த்த மையத்தின் அழிவை புகளும் ஒசமா பின் லேடனின் பதிவுசெய்யப்பட்ட நாடாக்களையோ அல்லது 5000 இற்கு மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்றமையையோ பார்க்கும் அமெரிக்க மக்கள் மத்தியில் முக்கிய அரசியல் ஆதரவை உருவாக்கும் என ஒருவரும் நம்பமுடியாது.

சங்கேத பாஷையிலான செய்திகள் தொடர்பாக அமெரிக்க தொலைக்காட்சி தணிக்கை பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. யாராவது பின் லேடனினது செய்தியை பெறவிரும்பினால் அதை இணையத்திலிருந்தோ அல்லது அராபிய மொழி ஒலிபரப்புகளிலிருந்தோ அல்லது ஏனைய கடல்கடந்த சாதனங்களில் இருந்தோ பெற்றுக்கொள்ளாலாம்.

வெள்ளைமாளிகை செய்தித்துறையின் அங்கத்தவர் ஒருவர் Ari Fleischer இடம் இந்நாடாக்களில் சங்கேத பாஷையிலான செய்திகள் அடங்கியிருப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இருக்கின்றதா கேட்டபோது அவர் அவ் அபாயம் ஒரு ஐயுறவின் அடித்தளத்தில் கருதப்பட்டதை ஏற்றுக்கொண்டார்.

அக்டோபர் 11ம் திகதி வியாழக்கிழமை 5 செய்தித்துறையின் நிறைவேற்று அதிகாரிகள் அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக இணைந்த அறிக்கை ஒன்றை விடுத்தனர். இதில் ஒருவர் வரலாற்றில் முதல் தடவையாக அனைத்து செய்தித்துறையினரும் இணைந்து செய்தியை கட்டுப்படுத்துவதாக உடன்பாட்டுக்கு வந்துள்ளது எனவும் இது ஒரு ''நாட்டுப்பற்றுமிக்க'' முடிவு என New York Times பத்திரிகைக்கு தெரிவித்தார். ஒரு CNN இன் உத்தியோகத்தர், ''யுத்தம் தொடர்பாக எவ்வித செய்தியை வெளிவிடுவது தொடர்பாக அனைத்து செய்தி நிறுவனங்களும் பொருத்தமான அதிகாரிகளிடமிருந்து வழிகாட்டலை பெறுவது தொடர்பாக கருத்திற் கொள்ளவேண்டும்'' என தெரிவித்தார்.

ஆனால் ஏற்கனவே பின்வரும் சுயதணிக்கைகள் நடைமுறையில் உள்ளன:

* Knight-Ridder என்னும் சஞ்சிகை ஒரு அறிக்கையை பிரசுரிக்க மறுத்தது. பின்னர் அது USA Today இனால் பிரசுரிக்கப்பட்டது. அவ்வறிக்கை குண்டுவீச்சு பிரசாரம் ஆரம்பிக்க முன்னரேயே அமெரிக்க விஷேட படையினர் ஆப்கானிஸ்தானில் தரையிறங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இச்செய்தி ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு இரகசியமாக இல்லாதிருந்தபோதும் அதை அமெரிக்க மக்களிடமிருந்து மறைக்குமாறு பென்டகன் அப்பத்திரிகையை கேட்டிருந்தது.

* Fleischer இடம் இருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பின் காரணமாக சகல 5 தொலைக்காட்சி நிறுவனங்களும், ஏனைய வானொலி பரப்பு நிலையங்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக புஷ் இனதும், உதவி ஜனாதிபதி சென்னியினதும் நாளாந்த நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டி அறிவிக்காது நிறுத்த ஒத்துக்கொண்டனர்.

* 17 அமெரிக்க தகவல் அமைப்புகள் அக்டோபர் 7ம் திகதி ஆரம்பமாக இருந்த தாக்குதல் குறித்து தெரிந்திருந்தபோதும் தாக்குதல் ஆரம்பமாகும்வரை அதனை வெளிவிடாதிருக்க ஒத்துக்கொண்டனர்.

* இத்தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவ படையினரின் பெயர்களை குறித்தும், ஆப்கானிஸ்தானிலிருந்து 2000 மைல் தூரத்தில் அராபியக்கடலில் நிலைகொண்டிருக்கும் போர்க்கப்பலில் உள்ள கடற்படையினர் குறித்தும் தகவல்களை வெளிவிடுவதில்லை என முழு அமெரிக்க செய்தித்துறையினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது தலைமை தாங்கும் அதிகாரிகளின் பெயர்கள் வெளிப்படையாக குறிப்பிட்டப்பட்ட நிலைமையில் ஒருவிதத்திலும் தாக்குதல் நடவடிக்கையின் இரகசியம் குறித்தோ அல்லது பயங்கரவாத எதிர்த்தாக்குதலில் இருந்து படைவீரர்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டதலல்ல. மாறாக இது அமெரிக்க மக்களை சாதாரண படைவீரர்களிடமிருந்தும், கடற்படையினரிடமிருந்தும், வான்படையினரிடமிருந்தும் அந்நியப்படுத்துவதன் மூலம் சண்டையில் இறக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இழப்புக்களினால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கவேயாகும்.

* செய்தி ஸ்தாபனங்கள் ஆப்கானிஸ்தான் இழப்புக்கள் குறித்ததும், குண்டுவீச்சின் பாதிப்புக்கள் குறித்ததுமான தகவல்களை வழங்க பென்டகன் மறுப்பதை சாதாரணமாக ஏற்றுக்கொண்டுள்ளன. இது பாரசீக வளைகுடா யுத்தத்தை முன்மாதிரியாகக் கொண்டு தொடர்கின்றது. அப்போதும் ஈராக்கியர்களின் இழப்புகுறித்து மதிப்பிட மறுத்தது. இத்தொகை பத்தாயிரக்கணக்காக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

இந்நடவடிக்கைகளுடன் அமெரிக்க இராணுவத்தலையீட்டுக்கு எதிரான எந்தவித எதிர்ப்பையும் திட்டமிட்டவகையில் தடுப்பதும் இணைந்துள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் தணிக்கையை நிறைவேற்றும் நடவடிக்கைக்கு அமெரிக்க மக்களையும் செய்தித்துறையையும் பழக்கப்படுத்த முனைகின்றது.

புஷ் காங்கிரசை தணிக்கை செய்துள்ளார்

புஷ் நிர்வாகமானது செய்திகளை கூடியளவு மக்களிடமிருந்து மட்டுமல்லாது காங்கிரசிடமிருந்தும் மறைக்க முயல்கின்றது. அக்டோபர் 5ம் திகதி 535 காங்கிரஸ் உறுப்பினர்களில் 8 பேருக்கு மட்டுமே தகவல்களை வழங்குமாறு தேசிய பாதுகாப்பு அமைப்பிடம் கட்டளையிட்டார். அவ் 8 பேரில் செனற்றின் பெரும்பான்மை, சிறுபான்மை தலைவர்கள், கீழ்ச்சபையின் பேச்சாளர், சிறுபான்மை தலைவர், தலைவர், உயர் அதிகாரி, செனற் உளவுத்துறைக்குழு என்பன அடங்கும்.

அரச வழக்குத் தொடுனரான John Ashcroft அமெரிக்காவில் இன்னும் பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்குகள் இருப்பதற்கான ''100 வீத சாத்தியக்கூறு'' இருப்பதாக தமக்கு கூறிய தகவலை வெளிவிட்டதற்காக காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதாக வெள்ளைமாளிகை அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதே வாரத்தில் John Ashcroft இப்படியான அறிக்கைகளை தொலைக்காட்சி பேட்டிகளுக்கு வழங்கியிருந்தார். ஆனால் இது காங்கிரசில் வழங்கும் அறிக்கைகளை மேலும் தடுப்பதற்கானதாக ஒரு காரணமாக நிர்வாகத்தால் பாவிக்கப்படுவதை பிரயோகிக்கப்படவில்லை. காட்டிக்கொடுத்ததாக காங்கிரஸ் உறுப்பினர்களை புஷ் ''எமது படையினர் ஆபத்தில் இருக்கையில் முக்கியமான தகவல்கள் வெளியேறுவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாத நடவடிக்கை என்பதை காங்கிரஸ் தெளிவாகவும், பலமாகவும் கேட்டுக்கொள்ளவேண்டும்'' என குற்றம் சாட்டினார்.

குடியரசுக் கட்சியினர் ஜனநாயக் கட்சியினருடன் இணைந்து விஷேட செய்திகள் பரவுவதை தடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்தும், அவர்களால் நிறைவேற்று துறையினருக்கான நிர்வாகத்திற்கும், தேவையான நிதி ஒதுக்குவதற்குமான சட்டமியற்றுவதையும் கருத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து புஷ் நிர்வாகம் மோசமான கட்டுப்பாடுகளை குறைத்துக்கொள்ள ஒத்துக்கொண்டது.

ஒரு இரகசிய அரசாங்கம்

புதிய அரசாங்கத்தின் மோசமான வெளிப்பாடுகளில் ஒன்று உதவி ஜனாதிபதியான Dick Cheney பகிரங்கமாக வெளிப்படுவது இல்லாது போனமையாகும். ஆப்கானிஸ்தான் மீது குண்டுத்தாக்குதல் தொடங்கிய அக்டோபர் 7ம் திகதியிலிருந்து ''பாதுகாப்பான இடத்திற்கு'' அகற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. அடுத்தநாள் Pennsylvania இன் ஆளுனரான Tom Ridge புதிதாக உருவாக்கப்பட்ட தாய்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் தலைவராக வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் பதவிப்பிரமாணம் செய்தபோது Dick Cheney சமூகமளித்திருக்கவில்லை. உத்தியோகபூர்வமாக அவர் அதனை செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தபோதும் உயர் நீதிமன்ற நீதிபதியான Clarence Thomas அவரை பதிலீடு செய்திருந்தார்.

உதவி ஜனாதிபதி அவரது உத்தியோகபூர்வ இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அவர் தேசிய பாதுகாப்பு சபையின் நாளாந்த கூட்டத்தில் இரகசிய வீடியோ மாநாட்டினூடாக (Video Conference) கலந்துகொள்வதாக கூறப்படுகின்றது. அக்டோபர் 12ம் திகதி வெள்ளிக்கிழமையின் பின் 6 நாட்களாக அவர் வாஷிங்டனில் காணப்படவில்லை.

இது Dick Cheney இன் பிரபல்யத்திற்கு புஷ் நிர்வாகம் வழங்கும் விஷேடமாக முக்கியத்துவமானதாகும். உதவி ஜனாதிபதி புஷ் இன் தலைமையிலான அமைப்பில் முக்கியத்துவமான பங்குவகிப்பதாக கூறப்படுகின்றது. அவர் நாளாந்த நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர் மட்டுமல்லாது, தேசிய பாதுகாப்பு விடயங்களில் முக்கியமான நபருமாவார். அவரின் வரலாறு 1990-91 வளைகுடா யுத்தத்தின்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்ததை காட்டுகின்றது.

பேச்சாளர் மேடையில் ஜனாதிபதியின் பின்னால் இருக்கும் Dick Cheney வழக்கமான உதவி ஜனாதிபதி பதிவியிலிருந்து காணமல்போயுள்ளதுடன், செப்டம்பர் 20ம் திகதி தேசிய தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி பேட்டிவழங்கியபோது, அரசாங்கம் எதிர்நோக்கும் பாதுகாப்பு அபாயம் காரணமாக அவர் வேறு இடத்திற்கு சென்றிருப்பதாக வெள்ளைமாளிகை அதிகாரிகளால் கூறப்பட்டது.

சில பத்திரிகை அறிக்கைகள் புஷ் இன் அரசியல் ஆதரவாளர்கள் வெளிநாட்டு கொள்கையின் பாரிய அனுபவம் காரணமாக Dick Cheney இன் திறமையை குறைத்துவைத்திருக்கவும், அவர் புஷ் இற்கு எதிராக அதிர்ச்சிகரமாக முக்கியமானவராக தோற்றமளிக்கலாம் என கருதின. ஆனால் Dick Cheney இன் மறைவில் அவரின் தனித்துவத்தை விட ஓரளவு பொறாமை மறைந்துள்ளது. அவரை மறைப்பதானது புஷ் நிர்வாகம் அதனது முக்கிய தீர்மானம் எடுப்பவரை பொது ஆய்விலிருந்தும், கணப்பீட்டிலிருந்தும் அகற்றியுள்ளது. Dick Cheney இன் தலைமையானது அரசாங்கத்தினுள் ஒரு இரகசிய பிரிவாகும்.

ஆப்கானிஸ்தானை தாக்குவதன் மூலம் அமெரிக்கா மத்திய ஆசியாவின் மூலோபாய முக்கியத்துவம் உடையதும், இயற்கை வளங்கள் நிறைந்ததுமான பகுதியினுள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயல்கின்றது. சோவியத் யூனியனின் உடைவுவரை அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்பிரதேசத்திற்கான பாதை இல்லாது இருந்தது. சோவியத் யூனியனின் கலைப்பின் பத்துவருடங்களின் பின்னர் பென்டகன், CIA, வெளிநாட்டு அமைச்சு, பாரிய எண்ணெய் நிறுவனங்களும் தமது நலன்களை பாதுகாத்துக்கொள்ள மிகவும் மூர்க்கமாக இயங்குகின்றன. உலக வர்த்தக மையத்தின் மீதான பாரிய கொலையானது நீண்டகாலமாக திட்டமிட்டதும், தயாரிக்கப்பட்டதுமான இப்பிரதேசத்தில் தலையிடுவதற்கான முன்நிபந்தனையாகியுள்ளது.

இதேபோன்று அமெரிக்காவின் உள்ளும், புஷ் நிர்வாகத்தின் யுத்த தயாரிப்பானது, அரசியலமைப்பு ரீதியானதும், ஜனநாயகப் போக்குகள் மீதானதுமான ஒரு நீடித்த தாக்குதலுக்காக திட்டமிட்டுள்ளது. அதிகரித்தவகையில் வலதுசாரிப்பிரிவினரின் ஆதிக்கத்திற்குள்ளான குடியரசுக் கட்சியானது 1990கள் முழுவதிலும் கிளின்டன் நிர்வாகத்தினை வெற்றிகொள்வதற்காக இயற்றப்பட்ட குற்றச்சாட்டுக்களையும், பொய்யான விசாரணைகள் மூலமாக பதவிவிலக்க முயன்றனர்.

இப்பிரச்சாரமானது அமெரிக்காவின் வரலாற்றில் முதற்தடவையாக உத்தியோகபூர்வமாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மீது பொய் வழக்கினை தொடுத்துடன், பின்னர் கிளின்டனை பதவியிலிருந்து அகற்றமுடியாது போனதுடன், அது ஜனநாயக் கட்சியின் இயக்கமற்ற தன்மையையும் தகமையின்மையையும் எடுத்துக்காட்டியது. பொய்வழக்கு முயற்சியானது ஜனநாயகப் போக்குடனான முற்றான உடைவிற்கும், 2000 இன் ஜனாதிபதித் தேர்தலை களவெடுத்துக் கொள்ளவதற்குமான நிலைமைகளை உருவாக்கியதுடன், புளோரிடாவில் வாக்கு எண்ணுதலில் அமெரிக்க உயர்நீதிமன்றம் தலையிட்டு ஜோர்ஜ். டபிள்யூ. புஷ் இனை வெள்ளை மாளிகையில் இருத்தியதற்கு காரணமானது.

பரந்துபட்ட வாக்கின் ஆதரவு இல்லாது ஜனாதிபதியாக உயர்த்தப்பட்ட ஒரு மனிதன், இன்று அமெரிக்க மக்களை, தெரியாத பரிமாணமுடையதும் காலவரையறை அற்றதுமான யுத்தத்தை நோக்கி இட்டுச்செல்வதுடன், இது ''சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்குமான'' யுத்தம் என கூறுவதுடன், உள்நாட்டில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான ஒடுக்குமுறையையும் வேண்டிநிற்கின்றார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved