Behind the "anti-terrorism" mask: imperialist powers prepare new forms of
colonialism
"பயங்கரவாத- எதிர்ப்பு" முகமூடிக்குப் பின்னால்: ஏகாதிபத்திய வல்லரசுகள்
புதிய வடிவங்களிலான காலனித்துவத்திற்கு தயார் செய்கின்றன
By Nick Beams
18 October 2001
Back to screen version
ஆப்கானிஸ்தானிற்கு எதிரான இராணுவத் தாக்குதலின் தொடக்கத்திலிருந்தே, உலக
சோசலிச வலைதளமானது இதனை பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு அல்லது அதற்கு நீதி வழங்கும்
யுத்தம் அல்ல, மாறாக அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள-அரசியல் நோக்கங்களுடன் கட்டுண்டிருக்கும் யுத்தம்
என விளக்கியிருக்கிறது.
இந்த பரந்த நோக்கங்கள், சில சர்வதேச பத்திரிகைகளில் விவாதத்திற்கு தோன்றுவதற்கு
நீண்ட காலம் எடுக்கவில்லை. கடந்த நாட்கள் ஆப்கானிஸ்தானுக்கும் அப்பால் யுத்தத்தை விஸ்தரித்தல் மற்றும் பல நாடுகளில்
நவீன-காலனித்துவ வடிவங்களை நிறுவுதல் இரண்டையும் ஆதரிக்கும் வரிசைக்கிரமமான கட்டுரைகளைக் கண்டிருக்கின்றன.
அக்டோபர் 8 அன்று, ஐக்கிய நாடுகள் அவைக்கான அமெரிக்கத் தூதர், ஜோன்
நெக்ரோபாண்டே, ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு ஒரு கடிதத்தை விடுத்தார். அது புஷ் நிர்வாகமானது ஆப்கானிஸ்தானுக்கு
அப்பால் யுத்தத்தை விஸ்தரிக்கப் போகிறது அது அதனை அவசியமானது என கட்டாயம் கருதுகின்றது என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல்
விட்டுச் சென்றது. நெக்ரோபாண்டே கடிதத்தின்படி, அமெரிக்க இராணுவ நடவடிக்கை "தற்காப்பு" நடவடிக்கையாக எடுக்கப்பட்டிருந்தது
மற்றும் செப்டம்பர் 11 தாக்குதல் பற்றிய விசாரணை "அதன் ஆரம்பக் கட்டங்களிலே" யேதான் இருந்தது.
அடுத்து பரந்த இராணுவ நடவடிக்கை பற்றிய எச்சரிக்கை வந்தது. "எமது தற்காப்புக்கு"
மற்றைய அமைப்புக்கள் மற்றும் மற்றைய அரசுகள் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் தேவைப்படுகிறது என்பதை
நாம் காணலாம்" என்று கடிதம் விளக்கியது.
பரந்த யுத்தத்தின் ஆதரவாளர்கள்-- குறிப்பாக ஈராக்கின் மீது இராணுவத் தாக்குதல்
தொடுத்தல்--ஆர்வத்துடன் கடிதத்தில் பற்றிக் கொண்டிருந்தது, மற்றும் செப்டம்பர் 11 சம்பவங்கள் தொடர்பான விசாரணை
ஆரம்பமாகி மட்டுமே இருந்தது என்ற வலியுறுத்தலும் பற்றிக் கொண்டிருந்தது. நியூயார்க் போஸ்ட் அக்டோபர்
ஒன்பதாம் தேதி பதிப்பில், கட்டுரையாளர் ஜோன் போதர்ட்ஸ் அதனை வைத்தவாறு, "உள்ளடக்க அம்சம்: விசாரணை
'ஆரம்ப கட்டங்களை' தாண்டிச் செல்லும் பொழுது, ஐக்கிய அமெரிக்க அரசுகள் அல்கொய்தாவிற்கும் ஏனைய அமைப்புகளுக்கும்
ஏனைய அரசுகளுக்கும் இடையிலான உறவை அகற்றும். மற்றும் நாம் அவ்வாறு செய்கையில், 'தனிநபர் மற்றும் கூட்டு தற்பாதுகாப்பின்
உள்ளார்ந்த உரிமையுடன் பொருந்தும் வகையில் பொருத்தம் என்று நாம் கருதுவதற்கு ஏற்ப' செயல்படுவோம் ".
அக்டோபர் 10-ம் தேதி ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட,
புரூக்கிங் நிறுவனத்தின் முதுநிலை பேராசிரியர்கள் ஐவோடால்டர் மற்றும் ஜேம்ஸ் லிண்ட்ஸே ஆகியோரால் எழுதப்பட்ட
கட்டுரையில் அதே கருத்து, சற்று மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட மொழியில் கோடிட்டுக் காட்டப்பட்டது.
நெக்ரோபாண்டின் குறிப்பான" ஏனையஅமைப்புக்கள் மற்றும் அரசுகள்" என்பதைமேற்கோள்
காட்டி அவர்கள் குறிப்பிட்டார்கள்:"பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தின்இலக்கை அளவுக்கு அதிகமாக வளைப்பதற்குபுஷ்
நிர்வாகத்திற்குள்ளே விரிசல் என்று கூறப்படுவது பற்றி அண்மைய வாரங்களில் நிறையவேசெய்யப்பட்டிருக்கிறது.ஆரம்ப நாட்களில்,அரசாங்க
செயலாளர் கொலின் பாவெல்மற்றும் துணை செயலாளர் பால் வோல்போவிட்சால் வழிநடத்தப்பட்ட பெண்டகனில்உள்ள
சிலர், ஆரம்பத்திலேயே ஆப்கானிஸ்தானைகுவிமையப்படுத்துவதா அல்லது ஈராக்மற்றும் ஏனைய அரசு ஆதரவு பயங்கரவாதத்திற்கு
எதிரான தாக்குதல்கள் உள்பட்டபரந்த அளவிலான இராணுவ நடவடிக்கையுடன் ஆரம்பிப்பதா என்பது பற்றியதில் உடன்பாடின்றிஇருந்தார்கள்.திருவாளர்
புஷ் ஆப்கானிஸ்தான்முதல் எனும் மூலோபாயத்தின் பேரில்தீர்த்து வைத்தார்.ஆனால் இதனை ஆப்கானிஸ்தான் - மட்டும்
எனும் மூலோபாயத்துடன் குழப்பிக் கொள்ளல் தவறாகும். "ஆகையால்திரு புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கு எதிரானயுத்தம் வெறுமனே
திரு பின்லேடனையும்தாலிபானையும் குவிமையப்படுத்துவதைவிடவும் மிக அகன்றதாகும்.அது ஆப்கானிஸ்தானுக்குவெளியில் அல்
கொய்தா வலைப்பின்னலை,ஹிஜ்பொல்லா, ஹாமாஸ் மற்றும் 'பூகோளஎட்டும்தொலைவின்' ஏனைய குழுக்கள்அதேபோல
அவற்றுக்கு தொடர்ந்துஆதரவளிக்கும் அரசுகள் -- ஈரான், ஈராக்மற்றும் சிரியா போன்றவற்றையும் சேர்க்கக்கூடும் -
ஆகியவற்றைச் சூழ்ந்துள்ளது."
இந்த விவாதமானது இராணுவத் தாக்குதலுக்கான மற்றைய இலக்குகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை,
மாறாக இராணுவத் தலையீட்டின் முடிவில் ஏகாதிபத்திய வல்லரசுகளால் என்ன வடிவிலான ஆட்சி அமைக்கப்படும் என்ற
பரந்த அளவிலான கேள்விக்குப்போகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, ஈராக்கிற்கு
எதிராக அமெரிக்காவால் வழிநடத்தப்பட்ட யுத்தம் ஏகாதிபத்தியத்தின் மற்றும் காலனித்துவத்தின் புதிய சகாப்தத்தைத்
திறந்து விட்டுள்ளதைக் குறிக்கிறது என்று எச்சரித்தது. 1991 நவம்பரில் பேர்லினில் நடைபெற்ற ஏகாதிபத்திய யுத்தத்திற்கும்
காலனித்துவத்திற்கும் எதிரான மாநாட்டிற்கான அதன் அறிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, "நடப்பில்
துண்டாடப் பட்டுக்கொண்டிருக்கும் ஈராக, ஏகாதிபத்திய வாதிகளால் உலகம் புதிய பகுதிகளாகப் பிரிக்க ஆரம்பிக்கப்பட்டு
விட்டதைத்தான் சைகை காட்டுகிறது. முன்னாளைய காலனிகள் மீண்டும் அடிமை நிலைக்கு கொண்டுவரப்பட இருக்கின்றன.
ஏகாதிபத்தியத்தின் சந்தர்ப்பவாதிகளாலும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களாலும், கடந்த காலத்துக்கு உரியது என்று
கூறிக்கொள்ளப்பட்ட கைப்பற்றல்களும் இணைப்புக்களும் திரும்பவும் இன்றைய நாளின் நடப்பாக இருக்கின்றன" என்று எச்சரிக்கை
செய்தது.
அந்த எச்சரிக்கைகள் அதன் பின்னர் இருந்துவரும் அனைத்து சம்பவங்களிலும் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு
எதிரான யுத்தம் காலனித்துவத்தின் பழைய வடிவங்கள் திரும்புதலைக் கட்டாயம் காணும் என்று சர்வதேசப் பத்திரிக்கைகளில்
வெளிப்படையாகப் பிரகடனம் செய்வதிலும் சரிபார்க்கப்பட்டிருக்கிறது.
புதிய வடிவிலான காலனித்துவம்
வால்ஸ்ட்ரீட் பத்திரிகையின் அக்டோபர் 9-ம் தேதி பதிப்பில் வெளியிடப்பட்ட, வலதுசாரி
பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் போல் ஜோன்சனால் எழுதப்பட்ட, "பயங்கரவாதத்திற்கு பதில்? காலனித்துவம்" என்று தலைப்பிடப்பட்ட
கட்டுரையில் இதுதான் கருத்தாக இருக்கிறது.
ஜோன்சன் எழுதுகிறார், பயங்கரவாதிகளுக்கு வழக்கமாக உதவும் அரசுகளுக்கு எதிரான யுத்தத்தை
நடத்துவதைத் தவிர அமெரிக்காவுக்கு வேறு மாற்று இல்லை. ஜனாதிபதி புஷ் இந்த யுத்தம் நீண்டகாலம் நீடிக்கலாம் என
எச்சரிக்கிறார் ஆனால் ஒருவேளை அவர் அமெரிக்கா நீண்டகால அரசியல் கடப்பாடுகளையும் கூட ஏற்றுக் கொள்ளநேரும்
என்பதை அவர் இன்னும் கிரகித்துக்கொள்ளவில்லை. இதற்கு மிக நெருக்கமான வரலாற்று ரீதியான இணைநிகழ்வாக
--19ம் நூற்றாண்டில் கடற் கொள்ளைகளுக்கு எதிரான யுத்தம்-- காலனிய விரிவாக்கத்தின் முக்கிய அம்சமாக இருந்தது.
அது, முன்னாள் பயங்கரவாத அரசை மேற்கத்திய நாடுகளால்- நிர்வகிக்கப்படும் புதிய வடிவிலான காலனியாக
இருக்கக்கூடும் என்பது தொடுவானத்திற்கு மேல் தெரிகிறது."
பின்னர், ஜோன்சன் 19-ம் நூற்றாண்டின் பெயர்த்தெடுக்கப்பட்ட வரலாற்றைப் பற்றி
சொல்லும் முகமாக மேற்செல்கிறார். பிரதான ஏகாதிபத்திய வல்லரசுகளின் காலனித்துவ விரிவாக்கம், எல்லாவற்றுக்கும்
மேலாக பிரிட்டிஷ் பேரரசு, கடற் கொள்ளையை தடுத்து நிறுத்துதற்கு நோக்கம் கொண்டிருந்தது என்று அதில் அவர் வலியுறுத்துகின்றார்.
வரலாற்றை இவ்வாறு திருப்பி எழுதும் நோக்கம் எல்லாம் நன்கு தெளிவானது. 19ம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய கைப்பற்றல்
"கடற்கொள்ளை" யுடன் ஒன்றும் சம்பந்தம் கொண்டிருக்கவில்லை, மாறாக இலாபங்கள், சந்தைகள் மற்றும் வளங்களுக்கான
பூகோளப் போட்டியில் தங்களின் நிலையை உறுதிப்படுத்துவதற்கான போட்டியில் பிரதான முதலாளித்துவ வல்லரசுகளினால்
ஆன போராட்டத்தின் விளைவாகவே இருந்தது, அதே நோக்கங்களைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் "பயங்கரவாதத்துக்கு"
எதிரான இன்றைய யுத்தத்தைப் போல.
தாக்குதலுக்கான மற்றைய இலக்குகளை மட்டும் உச்சரித்து ஜோன்சன் தனது கட்டுரையை
முடிக்கவில்லை, மாறாக ஏற்படுத்தப்படவேண்டிய புதிய வடிவங்களிலான ஆட்சியையும் காட்சிக்கு வைக்கிறார்.
அவர் எழுதுகிறார்: "அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் வெறுமனே துருப்புக்களால் ஆக்கிரமிப்பதுடன்
அல்ல, மாறாக குறைந்த பட்சம் மூர்க்கமான பயங்கரவாத அரசுகளை நிர்வாகம் செய்வதுடன் தங்களைக் கண்டுகொள்ளுவன.
இவை இறுதியாக ஆப்கானிஸ்தானுடன் மட்டுமல்ல மாறாக ஈராக், லிபியா, ஈரான் மற்றும் சிரியா ஆகியனவற்றையும் உள்ளடக்குவன.
சர்வதேச சட்டத்திற்கு ஒத்துப் போகவிரும்பும் ஜனநாயக ஆட்சிகள் எங்கு சாத்தியமோ அங்கு நிறுவப்படும், ஆனால் சில
நாடுகளில் மேலை நாடுகள் இருப்பது தவிர்க்கமுடியாததாகத் தோன்றுகிறது" சிறந்த இடைக்கால தீர்வானது பழைய
நாடுகளின் கழகங்களின் கட்டுப்பாட்டு உரிமை அமைப்பைப் புதுப்பிப்பதாக இருக்கும் என்பது பற்றி ஐயப்படுகிறேன். அது
யுத்தத்திற்கு இடையிலான காலனித்துவத்தின் "கெளரவமான வடிவமாக" வேலை செய்தது. சிரியா மற்றும் ஈராக்
ஒருசமயம் வெற்றிகரமான அனைத்து நாட்டுக் கழகத்தின் ஆட்சிக் கட்டளை உரிமையின் கீழ் இருந்தன. அதுபோல் சூடான்,
லிபியா மற்றும் ஈரான் சர்வதேச ஒப்பந்தத்தின் மூலம் சிறப்பு ஆட்சிகளின்கீழ் வைக்கப்பட வேண்டும்.
அண்டை நாடுகளுடன் அமைதியாக வாழமுடியாத மற்றும் சர்வதேச சமூகத்திற்கு எதிராக யுத்தத்தைத்
தொடுக்கும் நாடுகள் முழு சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியாது. இப்போது பாதுகாப்புச் சபையின் அனைத்து நிரந்தர
உறுப்பினர்களும், அளவில் வேறுபட்டாலும், அமெரிக்கா தலைமையிலான முன்முயற்சியை இப்போது ஆதரிக்கின்றனர், புதிய
வடிவிலான ஐக்கியநாட்டு ஆட்சிக்கட்டளை உரிமைப் பகுதியில் பயங்கரவாத அரசுகளை பொறுப்பான கண்காணிப்பின் கீழ்
வைக்க திட்டமிடுவது கடினமாக இருக்காது."
ஜோன்சன், புஷ் நிர்வாகத்தை நோக்கி தனது கூற்றுக்களை செலுத்துகின்ற அதேவேளை,
அட்லாண்டிக் கடந்து, ஃபைனான்ஷியல் டைம்ஸின் பூகோளப் பொருளாதார பத்தியாளர் மார்ட்டின் வொல்ப்,
அதே அழைப்பை பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளேயருக்கு விடுத்தார்.
அக்டோபர்10ல் வெளியிடப்பட்ட, "புதிய ஏகாதிபத்தியத்திற்கான தேவை" எனத் தலைப்பிடப்பட்ட
கட்டுரையில் அவர் எழுதுகிறார்: "திரு பிளேர் இன்றைய சம்பவங்களை உலகை மறுஒழுங்கு செய்வதற்கான சந்தர்ப்பமாகப்
பார்க்கிறார். இருப்பினும் அந்த கட்டாயமாக மறுஒழுங்கு செய்தல் என்பது எவ்வளவு தீவிரமானது என்பதை
அவரே உணரமாட்டார். அந்த இலக்கு தேசிய இறையாண்மை பற்றிய நமது அணுகுமுறையில் உருமாற்றத்தை --இன்றைய
உலகின் அணி கட்டுதலைத் தவிர்க்க முடியாததாக்கி உள்ளது- ."
"தவறிய அரசுகள்"
வொல்ப் புதிய ஏகாதிபத்தியத்திற்கான தனது அழைப்பை "தவறிய அரசு" என்று அழைக்கப்படும்
கருத்துருவை, ஆனால் ஆப்கானிஸ்தான் அதன் அதிகூடிய எடுத்துக்காட்டு, அடிப்படையாகக் கொள்கிறார். அவர் கூறுகிறார்,
அத்தகைய "தவறிய அரசுகள்" உலகின் ஏனைய பகுதிக்கு அச்சுறுத்தலை மட்டும் முன்வைக்கவில்லை- நோய்களின் பிறப்பிடத்தை
அளிக்கின்றன, அகதிளுக்கான ஊற்று மூலத்தை, குற்றவாளிகளுக்கான மோட்சத்தை மற்றும் கடும் போதைப்பொருட்களின்
அளித்து-- ஆனால் தங்கள் சொந்த மக்களின் வாழ்வைக் குறைக்கின்றன.
வொல்ப் பிரிட்டிஷ் ராஜதந்திரி றொபேர்ட் கூப்பரின் எழுத்தை மேற்கோள் காட்டுகிறார்,
அவர் ஆப்கானிஸ்தான் உட்பட்ட" குழப்ப மண்டலத்தின்" தோற்றத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அத்தகைய பகுதிகள் புதியன
அல்ல, ஆனால் அவை முன்னரே உலகின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டன" என கூப்பர் எழுதினார்.
இன்று அப்படி அல்ல........ நிறுவப்பட்ட அரசுகள் பொறுக்க முடியாத அளவுக்கு அவை மிகஆபத்தானதாக
மாறிவிட்டால், பாதுகாப்பு ஏகாதிபத்தியம் தொடர்பாக கற்பனை செய்து பார்த்தல் சாத்தியமானதாக இருக்கிறது."
"தவறிய அரசுகள்" இருப்பானது ஏகாதிபத்திய ஆட்சிக்கான நியாயப்படுத்தலை அளிக்கிறது
என்ற வாதம் ஜோன்சனின் கடற்கொள்ளையை வழிபடல் போல் போலியான மற்றும் கபடத்தனமானது. "தவறிய அரசு"
என்று அழைக்கப்படுவது ஏகாதிபத்திய வல்லரசுகளின் தலையீடுகளின் நேரடி உற்பத்தியாக இருக்கிறது-- ஆட்சிக் கவிழ்ப்புகளை
ஒழுங்குசெய்தல், தங்களது சொந்த நோக்கங்களுக்காக இனக்குழு மோதல்களை மற்றும் உள்நாட்டு யுத்தங்களை ஊட்டி
வளர்த்தல் மற்றும் ஒடுக்குமுறை ஆட்சிகளை ஆயுத ரீதியாகப் பலப்படுத்தல்-- பொருளாதாரக் கொள்கைகளைத் திணிப்பு
இந்நாடுகளின் மக்களுக்கான சமூக அழிவுகளை உண்டுபண்ணுகின்றன.
எடுத்துக்காட்டாக, ஆபிரிக்க கண்டத்தின் முழு சஹாரா துணைப்பிராந்தியத்தின் ஏழ்மை-அத்தகைய
"தவறிய அரசுகளின்" பிராந்தியம்-- பிரதான மேற்கத்தய வங்கிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற உறுப்புக்களுக்கு
கடன்களைத் திருப்பிச்செலுத்தலும் அதன் வட்டியும், அவற்றின் சுகாதாரம் மற்றும் கல்விக்கான முழு பட்ஜெட்டையும் விட
எந்த வருடத்திலும் மிகப் பெரியதாகும் என்ற உண்மையிலிருந்து தோன்றுகிறது.
ஆனால் வொல்ப், ஏகாதிபத்தியத்தின் ஆரம்பகால ஆதரவாளர்கள் போல, அவரது அரசியல்
நிகழ்ச்சி நிரலின் வழியில் உண்மைகளை நிற்கவிட்டு வைப்பவர் அல்ல. "தவறிய அரசுகளை" எதிர் கொள்ள அவர்
பேணுகின்ற மையப்பிரச்சினை, நாகரிக வாழ்க்கைக்கு முன்நிபந்தனையான, ஒழுங்கை வலிந்து ஏற்கவைக்கும் ஆற்றல் உள்ள
ஒழுங்கு செய்யப்பட்ட அரசு சாதனம் இல்லை என்பதாகும். அவை சுற்றிச் சுற்றி ஒரே இடத்தில் கொண்டுவந்துவிடும் வட்டத்தில்
சிக்கிக் கொள்கின்றன, அதில் ஏழ்மை சட்ட ஒழுங்கின்மையைத் தோற்றுவிக்கிறது சட்ட ஒழுங்கின்மை அதிகம் ஏழ்மையைத்
தோற்றுவிக்கிறது.
அவர் தொடர்கிறார், "அத்தகைய தவறிய அரசின் எடுத்துக்காட்டு ஆப்கானிஸ்தான்: அது
பரஸ்பரம் சந்தேகப்படும் பழங்குடி குழுக்களாகப் பிளவுபட்டுள்ளது; அது வறுமையால் ஆற்றொணா நிலையில் உள்ளது;
யுத்தம் வாழ்க்கையாக ஆகி இருக்கிறது; ஆளும் ஆட்சி மோசமான போதைப் பொருட்களை ஏற்றுமதி செய்து அதிலிருந்து
வரும் பணத்தை தனக்கு நிதியூட்டிக் கொள்கிறது; மற்றும் ஒசாமா பின் லேடன் ஞானத்தந்தை ஆக இருக்கிறார்." அமெரிக்க
ஐக்கிய அரசுகளின் பாத்திரம் பற்றிய உண்மைகள், சவுதி ஆட்சி மற்றும் பாக்கிஸ்தானின் உதவியுடன் குறைந்த பட்சம் 10
பில்லியன் டொலர்கள் அளவில் போரிடும் பிரிவுகளுக்கு நிதியூட்டியது, தலிபானும் ஒசாமா பின் லேடனும் ஏகாதிபத்திய வல்லரசுகளின்
நலன்களுக்கு சேவைசெய்த பொழுது அவர்களுக்கு ஆதரவுஅளித்தது, இவை முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டது.
நேற்றைய குற்றங்களால் விளைவிக்கப்பட்ட குழப்பம் புதிய ஒன்றுக்கான தயாரிப்புக்கு
தொடக்கப் புள்ளியை அமைத்தது, காலனித்துவ வடிவிலான ஆட்சியை நிறுவுவதுடன் ஆரம்பித்தது.
வொல்ப் எழுதுகிறார், "தவறிய அரசு காப்பாற்றப்பட வேண்டுமானால் நேர்மையான
அரசின் அத்தியாவசியப் பகுதிகள்-- அனைத்துக்கும் மேலாக ஒருங்கிசைவான சாதனம்--வெளியிலிருந்து அளிக்கப்பட
வேண்டும். அதைத்தான் முன்னாள் யூகோஸ்லாவியாவில் இன்று மேலைநாடுகள் செய்கின்றன. தவறிய அரசின் சவாலை எதிர்கொள்வதற்குத்
தேவையானது கடமை பேணும் அபிலாஷைகள் அல்ல மாறாக நேர்மையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பலாத்காரமான
சக்தி.
இந்தக் கருத்து அச்சத்தை ஏன் விளைவிக்கிறது என்பதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன:
ஏகாதிபத்தியம் சந்தேகத்திற்குரியதாக இன்னும் இருக்கிறது; மற்றும் முயற்சிக்கு பெரும் விலை கொடுக்க வேண்டியதாக
இருக்கக்கூடும். இருப்பினும் இந்த ஆட்சேபனைகள் எதிர்கொள்ளப்பட முடியும். சிலவகையான ஐக்கிய நாடுகள்
அவையின் தற்காலிக பாதுகாக்கப்பட்ட பகுதி, உறுதியாக உருவாக்கப்படக் கூடும்."
அமெரிக்க ஐக்கிய அரசுகளின் பெரும் தன்முனைப்பு
"ஒரு டோஸ் அமெரிக்க ஏகாதிபத்தியம்" என்பதைப் பயன்படுத்தலுடன், "மூர்க்கமான தேசங்களை
காலனித்துவப்படுத்துங்கள்" என்பதற்கான அழைப்பு அக்டோபர் 15ம்தேதி ஆஸ்திரேலியன் இதழில் வெளியிடப்பட்டது.
வால்ஸ்ட்ரீட் பத்திரிக்கையின் கருத்துப் பகுதியின் ஆசிரியர் மாக்ஸ் பூட்டால் எழுதப்பட்ட கட்டுரை செப்டம்பர்11
தாக்குதல் ஒருவகையான "அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான திருப்பிக் கொடுத்தல்" ஆக இருந்தது என்ற கருத்துரைப்புடன்
விஷயத்தை எடுத்தது.
பூட் பிரகடனம் செய்தார், "உண்மையில் இந்த ஆய்வு சரியாக பின்நோக்கியதாகும்:
செப்டம்பர் 11தாக்குதல் தேவைக்குக் குறைந்த அமெரிக்கத் தலையீடு மற்றும் இலட்சியத்தின் விளைவாக இருந்தது. தீர்வு
அமெரிக்க ஐக்கிய அரசுகளின் இலக்குகளில் விரிவானதாக இருக்கவேண்டும் மற்றும் அவற்றை நிறைவேற்றலில் பெரும் தன்முனைப்பு
ஆக இருக்க வேண்டும்."
பூட்டின் படி, ஆப்கானிஸ்தானில் உள்ள பிரச்சினை, 1980களின் பொழுது சோவியத் ஒன்றியத்துக்கு
எதிரான மறைமுக யுத்தத்தைத் தொடுக்கும் பொருட்டு ஆப்கானிஸ்தானில் முஜாஹைதீன்களை அமெரிக்கா ஆயுதபாணியாக்கியது
அல்ல மாறாக 1989ல் சோவியத் துருப்புக்களின் பின்வாங்கலுடன் அமெரிக்கா தன்னை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றிக்
கொண்டதுதான். பூட், கிளிண்டன் நிர்வாகத்தினால் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை--18 அமெரிக்கத் துருப்புக்கள்
இறந்த பின்னர் அவற்றை வாபஸ் பெற்றது மற்றும் 1998ல் ஒசாமா பின் லேடனின் பயிற்சி முகாம்களுக்கு எதிராக படைவீரர்களை
அனுப்பாமல் க்ரூஸ் ஏவுகணைகளை செலுத்தியதை-- தேவைக்குக் குறைவானது மற்றும் "எமது பகைவர்களை இன்னும் பெரிய
ஆக்கிரமிப்பு அழிவு நடவடிக்கைகளை இழைப்பதற்கு தைரியமூட்டும்" வகையான "பலவீனங்களின் காட்சிகள்" என்று தாக்கினார்.
"பிரச்சினை சுருக்கமாக, மேலதிக அமெரிக்க தன்முனைப்பு அல்ல மாறாக தேவைக்குக்
குறைந்த தன்முனைப்பு ஆகும். பிரச்சினை இப்போது தாக்கப்பட்டுள்ளதன் பின்னர், அமெரிக்கா பெரும் வல்லரசு என்ற
வகையில் செயல்பட வேண்டிய முறையில் செயல்படப் போகிறதா என்பதாகும்.."
பூட் தனது எண்ணத்தில் வைத்திருக்கும் "பெரும் வல்லரசின்" நடவடிக்கையின் மாதிரியாக-19ம்
நூற்றாண்டின் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைத்தான் வைத்திருக்கிறார் என்பதில் எந்த ஐயப்பாட்டிற்கும் இடம் விட்டு வைக்கவில்லை.
அவர் தொடர்கிறார், "அது பளிச்செனத் தெரிகிறது --பிரிட்டிஷ் காலனித்துவ படைவீரர்களின்
தலைமுறைகள் ஆக்கிரமித்துச் சென்ற அதே நிலங்களில் பெரும்பாலானவற்றில் ஐக்கிய அமெரிக்க அரசுகள் இப்பொழுது இராணுவ
நடவடிக்கைகளின் சாத்தியக்கூறை எதிர் கொண்டுள்ளன. ஆப்கானிஸ்தான், லிபியா, எகிப்து, அரேபியா, மெசபடோமியா
(ஈராக்), பாலஸ்தீனம், பெர்சியா, வடமேற்கு எல்லைப்புறங்கள் (பாக்கிஸ்தான்)-- 19ம் நூற்றாண்டில், புராதன
முடியாட்சி நிர்வாகம், அது ஒட்டோமான், மொகல் அல்லது சபாவிட் ஆக இருக்கட்டும், அவர்களால் அது துண்டுகளாகிக்
கொண்டிருந்தது, மற்றும் மேற்கத்திய இராணுவங்கள் அதன் விளைவான ஒழுங்கின்மையை அடக்கவேண்டி இருந்தது.
"ஆப்கானிஸ்தானும் மற்றைய தொந்திரவுக்குள்ளான நாடுகளும் இன்று, ஒருசமயம் ஜோத்பூர்
உடையிலும் தொப்பியிலும் காணப்பட்ட, தன்னம்பிக்கை கொண்ட ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட அறிவொளி மிக்க நிர்வாகத்தின்
வடிவத்திற்காக அழைப்பு விடுக்கின்றன."
போல் ஜோன்சன் போலவே, அவர் யுத்தங்களின் இடைப்பட்ட காலகட்டத்தின் நாடுகளின்
கழகங்களின் ஆட்சி உரிமைக்குக் கட்டுப்பட்ட எல்லைப் புறங்களை மாதிரியாக வழங்க தனக்கு துணையாகக் கொள்கின்றார்
மற்றும் நிகழ்ச்சிப்போக்கு 1990களில் கிழக்கு திமோர், கம்போடியா, கொசோவா மற்றும் பொஸ்னியா ஐ.நாவின்
ஆட்சிக்குக் கீழ் வைக்கப்பட்டதுடன் ஆரம்பமானது என்று குறிப்பிடுகின்றார்.
"தன்னிச்சையான அமெரிக்க ஆட்சி என்பது இனியும் தேர்வுக்குரிய வாய்ப்பாக இல்லை. ஆனால்
ஐக்கிய நாடுகள் அவையின் ஆதரவின் கீழ் சில முஸ்லிம் அரசுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச ஆக்கிரமிப்புப் படைக்கு ஐக்கிய
அமெரிக்க அரசுகள் தலைமை ஏற்கமுடியும்."
இந்த புதிய வடிவிலான ஆட்சியைத் திணித்தலை ஆரம்பிக்கக்கூடிய இரண்டு அரசுகள் என்று
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கை பூட் பிறிதாகக் காட்டுகிறார் மற்றும் வளைகுடாப் போரின்போது அமெரிக்கா
பாக்தாதுக்குள் படை எடுத்துச் செல்லவில்லை, தவறு விட்டது என்ற அமெரிக்க ஆளும் வட்டாரங்களில்- பரவலாக நிலை
கொண்டிருக்கும் கருத்தை ஒலிக்கிறார். இப்பொழுது "இந்த வரலாற்றுத் தவறை திருத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை"
அது பெற்றிருக்கிறது. மற்றும் எந்தவிதமான சட்டரீதியான சொல்விளையாட்டும் விரைவில் ஒரு பக்கமாக ஒதுக்கிவைக்கப்பட
வேண்டும்.
"ஹூசைன் செம்பம்பர் 11 தாக்குதலில் குறிப்பாகச் தலையிட்டாரா எனும் வாதம் விஷயத்தைத்
தவறவிடுகிறது. இந்த குறிப்பிட்ட காட்டுமிராண்டித்தனத்தில் அவர் சம்பந்தப்பட்டாரா என யார் கவலைப்பட்டார்கள்?
அவர் வருடக்கணக்கில் பல்வேறு காட்டுமிராண்டித்தனங்களில் ----குர்துகளை நச்சு ஆவி கொண்டு நஞ்சூட்டுதல் முதல் குவைத்திகளை
கற்பழித்ததுவரை--சம்பந்தப்பட்டிருக்கிறார். அவர் ஏற்கனவே ஆயிரம் மடங்கிற்கும் மேலாக மரணதண்டணையைச் சம்பாதித்திருக்கிறார்."
அமெரிக்கா ஆப்கானிஸ்தானைக் கவனித்த பிறகு அதன் கவனத்தை ஈராக் பக்கம் திருப்ப
வேண்டும் என பூட் வாதம் செய்கிறார். "ஹூசைன் ஒரு முறை கழிக்கப்பட்ட பிறகு (அமெரிக்க ஆக்கிரமிப்பு ஊடுருவல்
மூலம்) பாக்தாதில் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச பொம்மை ஆட்சியாண்மை, காபூலிலும் அதனுடன் ஒத்த முறையிலான
ஒன்று, திணிக்கப்படவேண்டும்."
இக்கட்டுரைகளின் சாரம் என்ன வென்றால், ஐக்கிய அமெரிக்க அரசுகள் தலைமையிலான பயங்கரவாதத்திற்கு
எதிரான பூகோளரீதியான போராட்டம், இராணுவ அதிகாரத்தைத் திணிப்பதன் மூலம் உலகை மறுஒழுங்கு செய்வதற்குக்
குறைவான வேறு ஒன்றும் அல்ல. இது உடனடி விளைபயன்களைக் கொண்டிருக்கிறது. சர்வதேச உறவுகளின் இராணுவமயப்படுத்தல்
தவிர்க்கமுடியாத வகையில் உள்நாட்டில் அரசியலை இராணுவ மயப்படுத்தலை அர்த்தப்படுத்துகிறது: ஏகாதிபத்தியம் ஜனநாயக
ஆட்சி வடிவங்களுடன் பொருந்திவராது.
மேலும் அவை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் "புகழ் பூத்த நாட்களை" நினைவு
கூரும்பொழுது, அவை அனைத்தும் குறிப்பிடத்தக்க ஒன்றைக் கூறாது விடுகின்றன. 19ம் நூற்றாண்டின் பின்பகுதியிலும் 20ம்
நூற்றாண்டின் முதற்பகுதியிலும் உலகைக் கூறுபோடல் அமைதியையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரவில்லை. இன்னும் சொல்லப்போனால்
அது இரு ஏகாதிபத்திய யுத்தங்களுக்கு வழிவகுத்தது, பிரதான முதலாளித்து வவல்லரசுகள்-- அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி,
பிரான்ஸ் மற்றும் ஜப்பான்-- வளங்கள், சந்தைகள் மற்றும் செல்வாக்கு எல்லைகளுக்கான பூகோளப் போட்டியில் ஒன்றை
ஒன்று தவிர்க்கமுடியாமல் மோதலுக்கு வந்ததால் கோடிக்கணக்கான மரணங்களை விளைவித்தது.
இந்த எழுத்தாளர்கள், ஏகாதிபத்திய கைப்பற்றல்களின் புதிய சகாப்தத்தைத் திறந்துவிடுவதற்கான
நியாயப்படுத்தலாக இந்த அனுபவங்களை கருத்தில் கொள்ளாது கடந்து செல்கின்றனர். ஆனால் தொழிலாள வர்க்கமானது,
இந்த வரலாற்றுப் படிப்பினைகளை அதன் அழிவில்தான் உதாசீனம் செய்யமுடியும். ஏகாதிபத்திய வல்லரசுகளின் வேலைத்திட்டத்திற்கு
எதிராக அது அதனது சொந்த சுதந்திரமான முன்னோக்கை --சர்வதேச அளவில் அதன் போராட்டங்களை ஐக்கியப்படுத்தலை
மற்றும் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் ஒரே அடிப்படையான சோசலிச அடித்தளத்தின் மீது உலகை மறுஒழுங்கு செய்தலை--
கட்டாயம் முன்னெடுக்கும். அந்த வேலைத்திட்டம்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாலும் உலக சோசலிச
வலைத் தளத்தாலும் முன்னெடுக்கப்படுகின்றது.
|