SEP meetings in Australia
The war in Afghanistan: the socialist
perspective
ஆப்கானிஸ்தானில் போர்: சோசலிச முன்னோக்கு
Part 1
| Part 2 |Part
3
By Nick Beams
9 November 2001
Back to screen version
புதிய காலனித்துவ ஆட்சி வடிவங்கள்
கச்சாப் பொருட்களுக்கும் வளங்களுக்கும் ஏகாதிபத்திய வல்லரசுகளால் புதுப்பிக்கப்பட்ட
போராட்டம் அதனுடன் 19ம் நூற்றாண்டின் முடிவில் தோன்றிய ஆட்சி வடிவங்களைப் புதுப்பித்தலையும் அத்தியாவசியமாகக்
கொண்டு வருகிறது.
பேர்லின் மாநாட்டிற்காக அனைத்துலகக் குழு தயாரித்த தீர்மானத்தில் நாங்கள்
விளக்கினோம்: "ஏகாதிபத்தியத்தின் சந்தர்ப்பவாதிகளாலும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களாலும், கடந்த காலத்துக்கு
உரியது என்று கூறிக்கொள்ளப்பட்ட கைப்பற்றல்களும் இணைப்புக்களும் திரும்பவும் இன்றைய நாளின் நடப்பாக இருக்கின்றன"
என்று.
ஆச்சரியப்படுவதற்கு இடம் இல்லாமல், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்தம் புதிய காலனித்துவ
வடிவங்களை நிறுவுவதற்கான அழைப்பினால் இணைந்து கொள்கின்றது. வலதுசாரி பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் போல்
ஜோன்சன் வோல்ஸ்ட்ரீட் பத்திரிகையில் "பயங்கரவாதத்துக்கு விடை? காலனித்துவம்" என்று தலைப்பிடப்பட்ட
கட்டுரையில் விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஜோன்சன் படி, பிரிட்டிஷ் பேரரசை நிறுவியதற்கான காரணங்களுள்
ஒன்று கடற்கொள்ளையை தடுத்து நிறுத்துவதாகும். அதேபோல் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம், காலனிகளின்
புதிய வடிவங்களை நிறுவுவதற்கான தேவையைக் கொண்டிருக்கும்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கான பேச்சாளர் கடற்கொள்ளையைக் கண்டிப்பது ஒருவருக்கு
சற்று மிகையானதாகத் தோன்றலாம். எப்படியிருந்தபோதும் பிரிட்டிஷ் பேரரசினது, செல்வத்தின் "ஆதித்திரட்சி" மிகப்
புகழ்பெற்ற கடற்கொள்ளைக்காரர்கள், பிரான்சிஸ் ட்ரேக் போன்றோரது நடவடிகைகளில் இருந்துதான் வந்தது.
ஜோன்சன் எழுதினார்: "அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் வெறுமனே துருப்புக்களால்
ஆக்கிரமிப்பதுடன் அல்ல, மாறாக குறைந்த பட்சம் மூர்க்கமான பயங்கரவாத அரசுகளை நிர்வாகம் செய்வதுடன் தங்களைக்
கண்டுகொள்வன. இவை இறுதியாக ஆப்கானிஸ்தானுடன் மட்டுமல்லாமல் ஈராக், சூடான், லிபியா, ஈரான் மற்றும் சிரியா
ஆகியனவற்றையும் உள்ளடக்குவன. சர்வதேச சட்டத்திற்கு ஒத்துப்போக விரும்பும் ஜனநாயக ஆட்சிகள் எங்கு சாத்தியமோ
அங்கு நிறுவப்படும், ஆனால் சில நாடுகளில் மேலைநாடுகள் இருப்பது தவிர்க்கமுடியாததாகத் தோன்றுகிறது"
பின்னர் பைனான்சியல் டைம்ஸூக்கான பூகோளப் பொருளாதார விமர்சகர்,
மார்ட்டின் வொல்ஃப் ஆல் எழுதப்பட்ட கட்டுரை "புதிய ஏகாதிபத்தியத்திற்கான தேவை" எனத் தலைப்பிடப்பட்டிருந்தது.
வொல்ஃப் அவரது ஆய்வை "தவறிய அரசுகள்" என அழைக்கப்படுவதன் மீது மையப்படுத்தியிருந்தார். ஊழல் மிக்க ஆளும்
தட்டால் ஆளப்படும், இவ்வரசுகளால் பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை அடித்தளங்களை வழங்க முடியவில்லை
மற்றும் அவை பயங்கரவாதத்துக்கான மோட்சங்களாயின. இச்சுழற்சி உடைக்கப்பட வேண்டிய ஒரேவழி வெளியிலிருந்து
கட்டாயப்படுத்தும் ஒரு சாதனத்தை-- புதிய அரசை நிறுவுவதாக இருந்தது. திருவாளர் வொல்ஃப் பிரதான முதலாளித்துவ
வல்லரசுகளின் பொருளாதாரக் கொள்கைகள், வங்கிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் சேர்ந்து, வறுமையை ஆழப்படுத்தியதற்கான
சூழ்நிலைமைகள் எப்படி உண்டு பண்ணப்பட்டிருக்கின்றன என்பதைப்பற்றி ஆய்வு செய்ய அக்கறைப்படவில்லை. தவறிய அரசுகள்
எனக் கூறப்படுவதின் பல்வேறு யுத்தப் பிரபுக்களும் இராணுவத் தலைவர்களும் எப்படி ஒரு நேரத்திலோ மற்ற நேரத்திலோ
பிரதான முதலாளித்துவ வல்லரசுகளால் ஆயுதபாணி ஆக்கப்பட்டனர் மற்றும் நிதியூட்டப்பட்டனர் என்பதை விளக்குதற்கும்
அக்கறைப்படவில்லை.
வோல்ஸ்ட்ரீட்
பத்திரிகையின் கருத்துக்கள் பகுதி ஆசிரியர் மாக்ஸ் பூட், ஜோன்சனது பங்களிப்பினால்
உண்மையில் ஊக்கப்படுத்தப்பட்டார், தனது கருத்தைப் பரப்ப முடிவு செய்தார். "மூர்க்கமான அரசுகளை காலனியாக்கல்"
என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையில், ஐக்கிய அமெரிக்க அரசுகள் அதனது நோக்கங்களை நிறைவேற்ற மிக விரிவனதாகவும்
தன்னுறுதியுடன் செயலாற்றும் இயல்புடையதாகவும் இருக்க வேண்டும் என்று ஆதரிக்கிறார். பிரச்சினை மேலதிக அமெரிக்க
தன்முனைப்பு அல்ல மாறாக தேவைக்குக் குறைந்த தன்முனைப்பு ஆகும் என்று கூறுகிறார்.
"ஆப்கானிஸ்தானும் மற்றைய தொந்திரவுக்குள்ளான நாடுகளும் இன்று, ஒருசமயம் ஜோத்பூர்
உடையிலும் தொப்பியிலும் காணப்பட்ட, தன்னம்பிக்கை கொண்ட ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட அறிவொளி மிக்க நிர்வாகத்தின்
வடிவத்திற்காக அழைப்பு விடுக்கின்றன. ஏகாதிபத்தியம் நீண்ட கடந்துபோன காலத்து தூசுபடிந்த வரலாற்றுச் சின்னமா?
ஒருவேளை ஆகலாம். ஆனால், 1990களில் கிழக்கு திமோர், கம்போடியா, கொசோவா மற்றும் பொஸ்னியா ஐ.நாவின்
ஆட்சிக்குக் கீழ் வைக்கப்பட்டதுடன் ஆரம்பமானது என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. இந்த முன்னோடி, முதலாம் உலக
யுத்தத்தில் ஜேர்மனியும் ஒட்டோமான் பேரரசும் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நாடுகளின் கழகங்கள் அமைப்பால் அனுமதிக்கபபட்ட
ஆட்சிக்கட்டளை உரிமைக்கு உட்பட்ட பகுதிகளின் மேல் மாதிரியாக்கப்பட்ட ஐ.நா ஆட்சிக்கட்டளை உரிமையின் பொருத்தமான
அமைப்புக்கு எளிதாக நீட்டிக்கப்பட முடியும். தன்னிச்சையான அமெரிக்க ஆட்சி என்பது இனியும் தேர்வுக்குரிய வாய்ப்பாக
இல்லை. ஆனால் ஐக்கிய நாடுகள் அவையின் ஆதரவின் கீழ் சில முஸ்லிம் அரசுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச ஆக்கிரமிப்புப்
படைக்கு ஐக்கிய அமெரிக்க அரசுகள் தலைமை ஏற்கமுடியும்...."
பூட் இரண்டு உடனடி இலக்குகளை கருத்துரைக்கிறார் --ஆப்கானிஸ்தான் அடுத்ததாக ஈராக்.
செப்டம்பர்11 தாக்குதலுடன் ஈராக் தொடர்புடையதாக முற்றிலுமாய் ஆதாரங்கள் கண்டறியப்பட்டனவா என்பதைப்
பற்றிக் கவலை இல்லை, ஐக்கிய அமெரிக்க அரசுகள் 1991ல் முதலாவது புஷ் நிர்வாகத்தின் கீழ் முடிக்கப்படாமல்
இருந்த அந்த வேலையை எப்படியும் முடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள்
ஐக்கிய அமெரிக்க அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான இயக்கு சக்திகளை
வடிவமைக்கும் மறைந்து கிடக்கும் பொருளாதார மற்றும் சடரீதியான நலன்களை வெளியே கொண்டு வருவது ஒன்றும் கடினமான
காரியமல்ல. ஆனால் இந்த பொருளாதார அக்கறைகள் வெளிப்படையாக விவாதிக்கப்பட முடிவதில்லை. -அமெரிக்க வெளியுறவுக்
கொள்கையின் இதயம் அமெரிக்க பூகோள மேலாதிக்கத்தைப் பாதுகாத்தல் என்று தெளிவாகக் கூறும் பிரிஜேஜின்ஸ்கி,
பூகோள பேரரசின் நிர்வாகம் அரசியல் பிரச்சினைகளை முன்வைக்கின்றது என்ற உண்மையை எல்லோரையும் விட நன்கு
அறிவார்.
அவர் எழுதுகிறார்: "அமெரிக்கா உள்நாட்டில் அளவுக்கும் அதிகமான ஜனநாயகம் உடையதாக
வெளியில் ஏதேச்சாதிகாரம் உடையதாக இருக்கின்றது என்பது.... உண்மை. அமெரிக்காவின் அதிகாரத்தை, சிறப்பாக
அதன் இராணுவ அச்சுறுத்தலைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துகிறது. வெகுஜன ஜனநாயகம் சர்வதேச மேலாளுமையை
முன்னர் ஒரு போதும் அடைந்திருக்கவில்லை. ஆனால் அதிகாரத்திற்கான நாட்டம்,
உடனடி அச்சுறுத்தல், அல்லது உள்நாட்டு வாழ்க்கை நலனில் பொது மக்களின்
உணர்வுக்கு சவாலாக வருதல் ஆகிய சூழ்நிலைகள் தவிர்ந்தநிலையில்,
பொதுமக்களின் கோபத்தில் அதிகாரம் செலுத்தும் இலக்கு அல்ல."
(Brzezinski PP,
35-36, வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது)
இந்தக் குறிப்புக்கள் செப்டம்பர் 11 சம்பவங்கள் மற்றும் இப்போது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும்
யுத்தம் இவற்றுக்கு இடையிலான உறவு பற்றிய புரிதலை வழங்க உதவுகின்றது.
உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் இரண்டு விமானங்கள் செலுத்தப்பட்டபொழுது, இது ஐக்கிய
அமெரிக்க அரசுகளது நிர்வாகத்திற்கு இராணுவத் தாக்குதலை நடத்துதற்கான சாக்குசொல்லுதலை வழங்கியது. இந்த
சம்பவத்திற்கு இருபதாண்டுகளுக்குப் பின்னர், பிரிஜேஜின்ஸ்கி விவகாரம் போல மற்றும் ஆப்கானிஸ்தானில் முஜாஹைதீன்களுக்கு
ஆதரவு போல, பாதுகாப்பு இயக்குவிப்பாளரோ அல்லது நிர்வாகத்தில் முன்னர் இருந்த ஒருவரோ, எவரேனும்
செப்டம்பர் 11 சம்பவங்களின் உள் விஷயத்தை வழங்க முன்வரலாம்-- என்ன இடம்பெற இருந்தது என்பது பற்றி அமெரிக்க
உளவுத்துறை நிறுவனங்களுக்கு என்ன தெரியும் என்ற கேள்விக்கு ஒருவேளை விடை அளித்து உதவலாம்.
அது நடப்பது ஒருபுறம் இருக்கட்டும், "உடனடி அச்சுறுத்தல், அல்லது உள்நாட்டு சகஜ
வாழ்க்கை நலனில் பொது மக்களின் உணர்வுக்கு சவாலாக வருதல்" என்பதை முன்வைப்பதற்கான ஒரு வழிமுறையாக, பயங்கரவாதத்
தாக்குதலானது புஷ் நிர்வாகத்தால் விருப்புடன் பற்றிக் கொள்ளப்பட்டது என்பதை நாம் அறிவோம். பயங்கரவாதத்
தாக்குதலின் பாதிப்புக்கள் பதனழிந்து குறுக ஆரம்பிக்கையில், நாம் அந்த்ராக்ஸ் திடீர் வெறியாட்டத்தைத் தொடர்ந்து
பார்க்கின்றோம்.
பிரிஜேஜின்ஸ்கி சரியாகக் குறிப்பிட்டவாறு, ஜனநாயக சூழ்நிலைமைகளின் கீழே ஏகாதிபத்திய
யுத்தத்தைத் தொடுப்பது கடினமானதாக இருக்கின்றது. அதனால்தான், சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காக
என்று கூறப்படும்- "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுப்பதைக்
காண்கிறது.
ஒரு ஆண்டுக்கு முன்னர், புஷ்ஷை 5க்கு 4 என்ற உச்ச நீதிமன்ற வாக்குகள் மூலம் அமெரிக்க
ஜனாதிபதிக்கு உயர்த்தல் மற்றும் ஜனநாயகக் கட்சி சாதனத்தையும் சேர்த்து தாராண்மை பரந்த செய்தி ஊடகம் என்று
அழைக்கப்படுவதன் அனைத்துப் பகுதிகளாலும் இந்த சட்டம் மீறிய வலிந்த அரசியல் மாறுபாட்டில் ஒத்துழைப்பு ஆகியவற்றைச்
சுட்டிக்காட்டி, ஆளும் வர்க்கத்தின் எந்தப் பகுதிக்கும் ஜனநாயகத்தின் மிகக் குறைந்த பட்ச அம்சங்களைக் கூட
பாதுகாப்பதற்கு அக்கறை இல்லை என்று தெளிவுறுத்தினோம்.
வாக்களிப்பதற்கான உரிமையைப் பாதுகாப்பதில் முதலாளித்துவ வர்க்கத்துக்குள்ளே
வாக்காளர் தொகுதியில் ஒப்புமை இல்லை. இப்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டிருக்கின்றமையால், மற்றும் கோர் தேர்தலில்
வெற்றி பெற்றார் என்பது தெளிவு. எண்ணிக்கையை மேற்கொண்ட பிரதான செய்தி அமைப்புக்களால் முடிவுகள் அமுக்கப்பட்டிருக்கின்றன,
அவை அரசியல் நிகழ்ச்சி நிரலில் வேறு விஷயங்களை வைத்திருக்கின்றன.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட யுத்தமானது, சோவியத் ஒன்றியத்தின்
பொறிவிற்குப் பின்னர், 1990களில் விரைவாய் வளர்ந்து கொண்டிருந்த வெளிப்படையான நிகழ்ச்சிப் போக்குகளுக்குள்
கொண்டு வரப்படுகிறது. அதனால் பிரதான ஏகாதிபத்திய வல்லரசுகளால் உலகை பங்கீடு செய்யவும் மறுபங்கீடு செய்வதற்குமான
புதிய போராட்டம் ஆரம்பித்திருக்கிறது. இது மிகவும் தொலைநோக்கான அரசியல் பிரதிவிளைவுகளைக் கொண்டிருக்கிறது.
காலனித்துவத்திற்கு திரும்புவதற்கு பல்வேறு பொருளாதார விமர்சகர்களும் அரசியல்
பண்டிதர்களும் அழைத்திருக்கின்றனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். சுதந்திரம் மற்றும் ஜனநாயக முகமூடிகள் கிழித்தெறியப்பட்டிருக்கின்றன
மற்றும் உண்மையான நோக்கங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அதேபோல ஐக்கிய அமெரிக்காவுக்குள், ஈராக்கிற்கு
எதிரான யுத்தத்தை எப்பொழுது தொடுப்பது என்பதுபற்றி ஆளும் தட்டுக்கள் மத்தியில் வெறி ஆர்வச் சண்டை நிகழ்வதை
நாம் காண்கிறோம். செப்டம்பர் 11 சம்பவங்களுக்கு அதனைத் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பது
பற்றிக் கவலை இல்லை, அல்லது அந்தராக்ஸ் வெறியாட்டங்கள் பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்காவிற்குள்ளே உள்ள அதிவலதுசாரிக்
குழுக்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என்பது பற்றியும் கவலை இல்லை; ஈராக் கட்டாயம் தாக்கப்பட வேண்டும். தவறிய
அல்லது "மூர்க்க" அரசுகள் காலனித்துவ மேலாதிக்கத்துக்குக் கீழ்ப்பட வேண்டும்.
ஆனால் பிரிட்டிஷ் பேரரசின் புகழ்பூத்த நாட்களுக்கு மோப்பம் பிடித்துத் திரும்புபவர்கள் எப்போதும்
ஒரு கேள்வியை விட்டுச் செல்கின்றனர்: காலனிகளுக்கான போராட்டம் எங்கு இட்டுச் செல்கின்றது? அதன் வெளிப்பாடு முதலாவது
உலக யுத்த வெடிப்பாக இருந்தது. காலனிகளுக்கு, சந்தைகளுக்கு மற்றும் செல்வாக்கு மண்டலங்களுக்கான பிரதான முதலாளித்துவ
வல்லரசுகள் ஒவ்வொன்றாலுமான போராட்டம் இறுதியில் ஒன்றை ஒன்றுடனான மோதலில் கொண்டு வந்து விட்டன. இரு
உலக யுத்தங்கள் விளைவுகளாக இருந்தன. தற்போதைய மோதல் எதிர்கால ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்களின்
விதைகளைக் கொண்டிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் இன்றைய கூட்டாளிகள், நாளைய வெளிப்படையான
பகைவர்களாக ஆகக்கூடும்.
ஆஸ்திரேலிய தேர்தல்கள்
உலகை மறுபங்கீடு செய்வதற்கான போராட்டம் திறந்துவிடப்பட்டிருக்கிறது மற்றும் இந்த
நிகழ்ச்சிப் போக்கு அரசியலில் மேலாதிக்கம் செய்கிறது. இந்நாட்டின் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து வெளித்தோன்றவிருக்கும்
படிப்பினைகளுள் ஒன்றாக இது இருக்கின்றது. யுத்தம் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலைமைகளின் கீழ் ஆஸ்திரேலியாவில் தேர்தல்
நடைபெறுவது தற்செயலான விஷயம் என்று ஒரு அர்த்தத்தில் கூற முடியும்.
இரு பிரதான கட்சிகளின் இருகட்சி சார்ந்த தன்மை தற்செயலானதல்ல. நாம் நமது தேர்தல்
அறிக்கையில் விவரித்தவாறு, அரசியல் விதி இங்கு வேலை செய்கின்றது. மக்கள் தொகையினரின் பரந்த மக்களது தேவைகள்
மற்றும் நலன்களுக்கும் உத்தியோகப்பூர்வ சாதனங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க அவை தங்களுக்குள்
மிக நெருக்கமாக நகர்கின்றன.
அதிருப்தி அல்லது எதிர்ப்பு சகித்துக் கொள்ளப்பட முடியாதிருக்கின்றது. இது ஐக்கிய அமெரிக்க
அரசுகள் மீதான தாக்குதல் முந்தைய அமெரிக்க கொள்கையின் விளைபயன் என்று சர்ச்சைக்கிடமில்லாமல் குறிப்பிட்ட தொழிற்கட்சி
வேட்பாளர் பீட்டர் நாட்டால் வழங்கப்பட்ட கருத்துக்களுக்கான பதிலில் காணப்பட்டது. ஒசாமா பின் லேடனையும் ஏனைய
மதகுரு பாசிச மற்றும் பயங்கரவாதக் குழுக்களை ஆரம்பத்தில் அவர்களின் நோக்கங்களுக்குப் பொருந்திய பொழுது, அமெரிக்காவும்
அதன் கூட்டாளிகளும் அவர்களின் வளர்ச்சிக்கு அளித்த ஆதரவை எடுத்துக் கொண்டால், இது அந்த அளவுக்கு அரசியல் நிலைப்பாடு
அல்ல உண்மை பற்றிய சாதாரண கூற்று என ஒருவர் கூற முடியும். ஆனால் யுத்தத்துக்கும் ஆஸ்திரேலியத் துருப்புக்கள் தலையீடு
செய்வதற்கும் தான் ஆதரவளித்ததாக ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தியவர், ஏற்பிசைவு அளிக்க முடியாது என்ற அச்சுறுத்தலால்
சொன்ன சொல் மாறும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்.
இராணுவ வாதம் மற்றும் யுத்தத்தின் அரசியல் அர்த்தம் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின்
சமூக நிலை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது ஆழமாகிச் செல்லும் தாக்குதல் ஆகும். 1930 களுக்குப் பின்னர், மிக
சீரியசான நின்றுபிடிக்கக்கூடிய பொருளாதாரப் பின்னிறக்கத்தை நோக்கி திரும்பக் கூடியதாய் உலகப் பொருளாதாரம்
நகர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலைமைகளின் கீழ், பிரதான ஏகாதிபத்திய வல்லரசுகள் முடிவில்லாமல் யுத்தத்தைத்
தொடுத்துள்ளன.
இவ்விரு நிகழ்ச்சிகளின் முற்றிலும் பொருந்திய தன்மை எதிர்பாராததல்ல. மிகவும் அடிப்படை
மட்டத்தில் அது பூகோளப் பொருளாதாரத்துக்குள்ளேயே இருந்து எழும் நிகழ்ச்சிப்போக்கின் வெளிப்பாடாகும். கச்சாப்
பொருட்களுக்கு, வளங்களுக்கு மற்றும் செல்வாக்கு மண்டலங்களுக்கான ஓட்டம், இறுதி ஆய்வில் இலாப வீதத்தைத் தக்க வைப்பதற்கான
தொடர்ந்த அழுத்த்தில் வேரூன்றி இருக்கிறது. அதுபோல பெரும் கம்பெனிகளின் பொறிவு அல்லது ஒன்றிணைப்பு மற்றும்
ஈவிரக்கம் இல்லாமல் வேலைகளை அழித்தல் ஆகிய இவை -- கடந்த 10 ஆண்டுகளாக அனுபவப்பட்டு வரும்
பொருளாதார வளர்ச்சி அல்லது சூழ்நிலைகள் என்று சொல்லப்படும் காலகட்டத்திலும் சரி அல்லது இப்போது நாம்
நுழைந்து கொண்டிருப்பது போன்ற பொருளாதாரப் பின்னிறக்கக் காலகட்டத்திலும் சரி-- அதே மூலத்தையே
கொண்டிருக்கின்றன.
ஏகாதிபத்திய யுத்தத்தின் வெடிப்பு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள்
மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்கள் அதே நிகழ்ச்சிப் போக்கின் பகுதியாகும். முதலாளித்துவ ஆளும்
வர்க்கங்கள் இலாப அமைப்பு முறையின் தேவைகள் மற்றும் ஆணைகளின் நலன்களில் உலகை மறு ஒழுங்கு செய்ய
விரும்புகின்றன. தொழிலாள வர்க்கம் இருபதாம் நூற்றாண்டின் முழு அனுபவத்தின் படிப்பினைகளையும் கட்டாயம் உள்வாங்க
வேண்டும்.
19ம் நூற்றாண்டின் பிந்தைய தசாப்தங்கள், நாம் கடந்து வந்திருக்கின்ற காலகட்டம்
போல, முதலாளித்துவ ஒழுங்கின் பூகோள செயல் வரம்பின் அபரிமிதமான விரிவாக்கத்தைக் கண்டது. அது இப்பொழுது
பூகோளமயமாக்கல் என்று குறிப்பிடப்படுவதன் முதலாவது கட்டமாக இருந்தது. ஆனால் 19ம் நூற்றாண்டின் முடிவில் அதே
முதலாளித்துவ விரிவாக்கம் உற்பத்திச் சக்திகள் இலாப அமைப்பின் மட்டுப்பாடுகளுடனும் தேசிய அரசு கட்டமைப்புடனும்
மோதலுக்கு வந்ததன் காரணமாக, முதலாவது உலக யுத்தத்தின் வெடிப்புக்கு தவிர்க்க முடியாதபடி வழிவகுத்தது. அந்த
யுத்தத்தின் வெடிப்பின் பொழுது லியோன் ட்ரொட்ஸ்கி விவரித்ததாவது: "முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய குழப்பத்தை
பாட்டாளி வர்க்கம் சந்திக்கக்கூடிய ஒரே வழி உலகப் பொருளாதாரத்தை சோசலிச வழியில் ஒழுங்கமைத்தலின்
நாளாந்த செயல்முறை வேலைத்திட்டத்தால் எதிர்க்க வேண்டும். யுத்தமானது, முதலாளித்துவம், அதன் அபிவிருத்தியின்
உச்சக் கட்டத்தில், தனது தீர்க்க முடியாத முரண்பாடுகளைத் தீர்க்க முயலும் ஒரு வழிமுறையாகும். இந்த வழிமுறையை
பாட்டாளி வர்க்கம் அதன் சொந்த வழிமுறையில் சோசலிசப் புரட்சி வழிமுறையில் எதிர்க்க வேண்டும்." (போரும்
அகிலமும், ட்ரொட்ஸ்கி,பக்கம். x.)
இவ் வார்த்தைகள் அவற்றின் பலத்தை அல்லது பொருத்தத்தை இழந்துவிடவில்லை.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்தம் எதனை முக்கியத்துவப் படுத்துகின்றது? ஈராக்கிற்கு எதிரான தொடர்ச்சியான
பொருளாதாரத் தடைகளின், மத்திய கிழக்கில் நாள்தோறுமான பேரச்சங்களின் அர்த்தம் என்ன? கடந்த 10 ஆண்டுகளில்
மூன்று யுத்தங்கள்? அடுத்து யார் தாக்குதலுக்கு ஆளாகப் போகிறார்கள்? வளங்கள், சொத்துக்கள் மற்றும் செல்வாக்கு
மண்டலங்களுக்கான போராட்டம், கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இடம் பெற்றது போல், ஏகாதிபத்திய வல்லரசுகளை
ஒன்றை ஒன்று மோதும் நிலைக்கு எப்போது கொண்டு வரும்?
ஆளும் வர்க்கங்கள் உலகை மறு ஒழுங்கு செய்யத் திட்டமிடுகின்றன. ஆனால் அவற்றைச்
செய்வதற்கு அவர்களிடம் சரியான முன்னோக்கு இல்லை. இது ஏனெனில் அவர்களின் சமூக அமைப்பு, தனியார் இலாபக்
குவிப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது மற்றும் வரலாற்று ரீதியாக காலத்துக்கு ஒவ்வாததாகிப்போன போட்டி தேசிய
அரசுகளின் அரசியலைக் கொண்டுள்ளது. இறந்து கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ ஆட்சிகள் ஆரம்ப காலகட்டத்தில்
செய்ததைப்போல, அது இரத்தம் தோய்ந்த குழப்பத்தையும் அராஜகத்தையும் உருவாக்க முடியும்- மிகப் பெரிய அளவில்
மட்டுமே.
தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ ஒழுங்கின் குழப்பம், அழிவு மற்றும் அராஜகத்தை
எதிர்த்து அதனது சொந்த சுதந்திரமான முன்னோக்கை இரு அடிப்படைக் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டாயம்
முன்வைக்க வேண்டும். முதலாவது இடத்தில் அது சர்வதேசியத்தின் மீது கட்டாயம் தளப்படுத்தப்பட வேண்டும். இந்தத்
தேர்தல் எல்லாவற்றுக்கும் மேலாக தேசியவாதத்தைத் தட்டி எழுப்புதலால் பண்பிடப்படுகின்றது. பொது எதிரி என்று
கூறப்படுபவர் வெளியில் என்று சுட்டிக்காட்டுவதன் மூலம் நாட்டிற்குள்ளே அகலமாகிவரும் வர்க்கப்பிளவுகளை மூடி மறைக்கும்
முயற்சியாக தேசியவாதம் இருக்கின்றது.
தொழிலாள வர்க்கம் புதிய முன்னோக்கை முன்னெடுக்க இருக்கின்றது. குறிப்பாக அது
அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் பாகுபடுத்தல்களுக்கும் செயலூக்கத்துடன் எதிர்ப்பை வளர்த்தெடுப்பதை
அர்த்தப்படுத்துகின்றது. இந்தத்தேர்தலில் குடிவரவு மீது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் மற்றும் அகதிகள் மற்றும்
"சட்டவிரோதிகள்" என்று அழைக்கப்படுவோர் சிறையில் அடைக்கப்படவேண்டும், மற்றும் மிக அடிப்படை ஜனநாயக
உரிமைகளை மறுக்க வேண்டும் என்ற வகையில், அனைத்துக் கட்சிகளுடைய நிலைப்பாடுகளுக்கும் எதிர்ப்பில் அது அனைத்து
மக்களுக்கும் பூகோளம் முழுவதும் கட்டுப்பாடுகள் அல்லது பாகுபாடு காட்டல் இல்லாமல் சுதந்திரமாக செல்லும்
உரிமையை அங்கீகரித்தலை அர்த்தப்படுத்துகின்றது.
தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் தேசிய அரசின் தேசிய எல்லைகளைப் பாதுகாப்பதில்
மற்றும் பாதுகாப்பில் இருக்கவில்லை. இந்த ஆட்சி வடிவம் முற்றிலும் காலத்துக்கு ஒவ்வாததாகி உள்ளது. உலகம், உலக
மக்கட்தொகையின் அபரிமிதமான பெரும்பான்மையான தொழிலாள வர்க்கத்தின் நலன்களில் கட்டாயம் மறு ஒழுங்கு
செய்யப்பட வேண்டும். உலக உற்பத்தியாளர்களின் சரீர மற்றும் மூளை உழைப்பால் உருவாக்கப்பட்டிருக்கும் பரந்த
வளங்கள் அவர்களின் தேவைகளை கட்டாயம் நிறைவு செய்ய பயன்படுத்தப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின்
சுதந்திரமான அபிவிருத்தி இருக்கும் அரசியல் சாதனத்திலிருந்து முற்றிலும் முறித்துக் கொள்வதற்கு மற்றும் புதிய வெகுஜனக்
கட்சியைக் கட்டி அமைத்தலுக்கு குறையாத எதனையும் சம்பந்தம் கொண்டிருக்கவில்லை. இங்கு நாம் மிகத்
தொலைநோக்கான வரலாற்றுப் படிப்பினைகளைப் பெற வேண்டும். சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சி
19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி மற்றும் 20ம் நூற்றாண்டின் முதற் பகுதியில் இடம் பெற்றது. ஏகாதிபத்தியத்தின் அரசியல்
உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களைக் கல்வியூட்டுவதற்கான அடிப்படையை வழங்குகின்றது.
இந்த இயக்கத்தின் அபிவிருத்தியானது 1917 ரஷ்யப் புரட்சியுடன் முதலாளித்துவ ஆட்சியில்
முதல் முறிவைக் கண்டது. இருப்பினும், அந்தப் புரட்சி தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டது, அந்தத் தனிமைப்படலின்
உக்கிரமான அழுத்தம் ஸ்ராலினிசத்தின் வடிவில் கொடிய புற்று நோயின் வளர்ச்சியைக் கண்டது மற்றும் இறுதியில்
முதலாளித்துவத்தின் மீட்சியைக் கண்டது.
அந்த அனுபவத்தின் படிப்பினைகள் என்ன? சோசலிசம் தோல்விகண்டதா,
முதலாளித்துவத்துக்கு மாற்று அங்கு இல்லையா? இந்த விவாதங்கள், அங்கு மார்க்சிச இயக்கம், இடது எதிர்ப்பு மற்றும்
பின்னர் நான்காம் அகிலம் என்ற வடிவத்தில் அங்கு இருந்தது, அது ஸ்ராலினிசம் சோசலிசத்தை அல்லது கம்யூனிசத்தைப்
பிரதிநிதித்துவப்படுத்தவில்லை மாறாக அது முதலாளித்துவ மீட்சியின் முதற்படியைப் பிரதிநிதித்துப்படுத்தியது என்று விளக்கிய
உண்மையைப் பொருட்படுத்தாது இருந்தால், ஒருவேளை ஏதோ செல்தகைமை உடையதாகத் தோன்றலாம்.
சம்பவங்களின் சோதனைகளில் மார்க்சிச முன்னோக்கு புடம்போடப்பட்டு நிற்கின்றது.
இப்பொழுது பெரும் சவால்கள் முன்னே உள்ளன. அந்தப் பணி சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள
வர்க்கத்தை அரசியல் மறு கல்வியூட்டலாகும். முதலாளித்துவம் மனித குலத்தைக் காட்டுமிராண்டித் தனத்திலும் குழப்பத்திலும்
மூழ்கடித்துள்ளதிலிருந்து விடுவிப்பதற்கான வழியை இதனால்தான் அளிக்க முடியும். இந்தப் பணியை நிறைவேற்றுவதற்குத்தான்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் தம்மை அர்ப்பணித்துள்ளன. இதனை
உடனடியாகக் கருத்தில் கொள்ளுமாறு நாம் உங்களை வேண்டிக் கொள்கின்றோம்.
|