World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

SEP meetings in Australia

The war in Afghanistan: the socialist perspective

ஆப்கானிஸ்தானில் போர்: சோசலிச முன்னோக்கு

Part 1 | Part 2 | Part 3

By Nick Beams
9 November 2001

Back to screen version

இது சிட்னியிலும் மெல்போர்னிலும் நவம்பர் 4 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் பகிரங்கக் கூட்டத்தில் நிக் பீம்ஸால் வழங்கப்பட்ட அறிக்கையின் முதல் பகுதி ஆகும்.

இன்றைய நமது கூட்டம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) நவம்பர் 1991ல் ஏகாதிபத்தியப் போரையும் காலனித்துவத்தையும் எதிர்த்து நடாத்தப்பட்ட மாநாட்டின் 10 வது ஆண்டு விழா நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த மாநாட்டிற்கான உடனடித் தூண்டுவிசை ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான யுத்தம் மற்றும் அதனை எதிர்த்து விரலைக் கூட உயர்த்தாத, உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் இயக்கத்தின் தலைமைகள் என்று கூறப்படும் தொழிற் சங்கங்கள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகள் எவரதும் திராணியின்மை மற்றும் விருப்பமின்மையாக இருந்தது.

மாநாட்டிற்காக அழைக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஈராக்கிற்கு எதிராக யுத்தம் தொடுப்பது ஒரு தனித்த அல்லது சூழ்நிலையில் இணைந்த சம்பவம் அல்ல என்று விளக்கியது. இதற்கான உடனடிச் சாக்குப் போக்கு ஈராக்கியத் துருப்புக்கள் குவைத்துக்குள் நுழைந்த நிகழ்ச்சியாக இருக்கும் அதேவேளை, அது முன்பு இருந்த நிலையை மீளக் கொண்டு வருவதற்கான நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை மாறாக தொலைநோக்கான வரலாற்று விளைபயன்களைக் கொண்டிருந்தது.

அந்த மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையின் ஒரு பகுதியை நான் வாசிக்கிறேன்: 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் எதிர்கொண்ட சகல மாபெரும் வரலாற்று அரசியல் பணிகளும் இன்று உறுதியான முறையில் எழுப்பப்பட்டுள்ளன. ஈராக் காட்டுமிராண்டித்தனமான முறையில் குண்டுவீச்சுக்குள்ளானமையும் அதன் கைத்தொழில் அடிக்கட்டுமானம் அடியோடு நாசமாக்கப்பட்டமையும் ஒரு புதிய ஏகாதிபத்திய காட்டுமிராண்டிச் சகாப்தத்தின் தொடக்கத்தை குறிக்கின்றது. முதலாளித்துவம், இலட்சோப லட்சம் மக்களை அடிமையாக்காமலும் அழித்தொழிக்காமலும் உயிர்வாழ முடியாது. இந்நூற்றாண்டில் இரு தடவைகள் 1914 இலும் 1939 இலும் ஏகாதிபத்தியம் மனித இனத்தை உலக யுத்தங்களுள் மூழ்கடித்தது. அது பலகோடி மனித உயிர்களை பலிகொண்டது. பாரசீக வளைகுடா யுத்தம் --அதில் இறந்தோரின் எண்ணிக்கை இன்னமும் கணக்கிடப்படாவிடினும்-- இன்னமும் பிரமாண்டமான உலகப் பேரழிவுக்கான தயாரிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன என்பதற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு பெரும் நாடகாசிரியர் மனித இனத்தினை தனது பார்வையாளர்களாகக் கொண்டு 20ம் நூற்றாண்டின் அரை இறுதிக் கால இரத்தம் தோய்ந்த சம்பவங்களை மீண்டும் மேடையேற்ற முடிவு செய்ததை போன்றது.

எவ்வாறு இந்த ஆய்வு சம்பவங்களின் சோதனைகளில் நின்று பிடித்தது? அனைத்துக்கும் முதலாவதாக நான்காம் அகிலத்தின் ஆய்வு முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் சித்தாந்த வாதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளின் ஆய்வுடன் வேறுபட்டதாக இருந்ததைப் பார்ப்போம்.

ஈராக்கிற்கு எதிரான யுத்தம், ஜனாதிபதி புஷ்ஷின் வார்த்தைகளில் கூறுவதானால், புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்துவதற்கானதாக இருந்தது. இந்தக் கருத்து வரவிருந்த நாட்களிலும் மாதங்களிலும் 1991ன் முடிவில் சோவியத் ஒன்றியத்தின் இறுதிப் பொறிவுடன் ஆர்வத்துடன் பற்றிக் கொண்டது, மற்றும் இந்த ஆய்வுக் கட்டுரை இருபதாம் நூற்றாண்டின் நீண்ட போராட்டம் முடிந்துவிட்டது என்று முன்னெடுக்கப்பட்டது. முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான மோதலானது சுதந்திரச் சந்தை மற்றும் பாராளுமன்ற ஜனநாயகம் இவற்றை அடித்தளமாகக் கொண்ட முதலாளித்துவத்தின் வெற்றியுடன் முடிவடைந்து விட்டது என்றது.

எமது எதிராளிகள் எப்போதும் நமக்கு, மார்க்சிஸ்டுகளுக்கு, நமது ஆய்வு யதார்த்தமில்லாமல் இருக்கிறது என்பார்கள் --உண்மையில் இடம் பெற்றுக் கொண்டிருப்பதுடன் சம்பந்தம் இல்லாததை அது கொண்டிருக்கிறது என்று சொல்வார்கள், புறநிலை யதார்த்தம் அதனோடு பொருந்துகிறாற்போல் தயாரிப்புச் செய்து வைத்திருக்கும் ஒரு வகைத் திட்டத்தை பிடிவாதமாகத் திணிப்பதை அடித்தளமாகக் கொண்டிருக்கின்றது அது என்பார்கள்.

கடந்த தசாப்தத்தின் வரலாறு பற்றிய ஆய்வு எதனை வெளிப்படுத்துகின்றது? -- நாம் நுழைவோம் என நமது எதிராளிகள் கூறுகிறவாறு நாம் அமைதி மற்றும் முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்தில் நுழைந்திருக்கிறோமா-- அல்லது இன்னும் சொல்லப்போனால் இருபதாம் நூற்றாண்டின் அனைத்து இரத்தம் தோய்ந்த சம்பவங்களும், உயர்ந்த மட்டத்தில், திரும்ப நடைபெறப் போவதைத்தான் எதிர்கொள்ளப் போகின்றோமா?

சில முக்கிய புள்ளி விவரங்களை சுருக்கமாக மதிப்பீடு செய்வோம்.

"சுதந்திரச் சந்தை" நிகழ்ச்சி நிரலானது மிகுந்த ஏழ்மை நாடுகளில் மட்டும் ஆழமான சமூக நெருக்கடிகளை உண்டு பண்ணவில்லை, மாறாக பிரதான முதலாளித்துவ நாடுகளிலும் கூட உண்டு பண்ணியுள்ளது. சமத்துவமின்மையானது பூகோள அளவில் பரந்திருக்கிறது. 1980ல், பத்து சதவீத செல்லவந்த நாடுகளின் சராசரி வருமானமானது மிக வறிய நாடுகளின் பத்து சதவீதத்தின் சராசரி வருமானத்தை விட77 மடங்கு அதிகம் ஆகும். 1999 அளவில் அந்த இடைவெளியானது 122 மடங்குகள் ஆகி விட்டன.

பிரதான முதலாளித்துவ நாடுகளினுள்ளேயும் வருவாய் மற்றும் செல்வம் பற்றிய துருவமுனைப்படல் அதிகரித்து வருகிறது. 1970களுக்குப் பின்னர் இருந்து மேல் மட்டத்தில் உள்ள ஒரு சதவீத நாடுகள் 20 சதவீதத்திற்கும் கீழானதில் இருந்து கிட்டத்தட்ட 39 சதவீதத்திற்கு செல்வத்தை இரட்டிப்பாக ஆக்கி உள்ளன. இந்த தட்டினரின் இணைந்த நிகர மதிப்பானது எஞ்சி உள்ள 95 சதவீத நாடுகளின் மொத்த செல்வத்தையும் விட அதிகம் ஆகும்.

ஏனைய நாடுகளில் உள்ள புள்ளி விவரங்கள் முற்றிலும் தெளிவானதாக இல்லை, இதே போக்கு காணக்கூடியதாக இருக்கிறது. 1986லிருந்து 1996 வரையான பத்தாண்டில், ஆஸ்திரேலியாவில் உயர் வருமானம் கொண்ட குடும்பங்கள் 30 சதவீதம் அளவில் உயர்ந்தன, அதேவேளை குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் 80 சதவீதம் அளவில் அதிகரித்தன. கடந்த தசாப்தத்தில் -10 ஆண்டுகள் பொருளாதார வளர்ச்சி- முழுநேர வேலைகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தவில்லை.

"சுதந்திர சந்தை" சகாப்தமானது சர்வதேசப் பொருளாதாரத்தின் மீதும் பூகோள நிதி அமைப்பின் மீதும் வரிசையாய் புயல்களைக் குவித்து வந்திருக்கின்றது. 1992 பண நெருக்கடி, ஐரோப்பிய நாணயமாற்றுவீத இயங்கு முறையின் பொறிவினைக் கண்டது மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகளில் வங்கி அமைப்பு முறைகளை நெருக்கடிக்குள் தள்ளியது. இது குறுகிய ஒழுங்கில் 1994-95ன் மெக்சிகன் நெருக்கடியால் தொடரப்பட்டது. அதற்கு பிணை எடுக்கத் தேவைப்பட்ட 50 பில்லியன் டாலர்கள் கிளிண்டன் நிர்வாகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டது. அதன் நோக்கம் மெக்சிகோவுக்கு உதவுவது அல்ல மாறாக அமெரிக்க வங்கி அமைப்பு முறையை முன்னிலைப்படுத்துவதுதான்.

1993ல் உலக வங்கியானது "ஆசிய பொருளாதார அற்புதம்", "சுதந்திர சந்தையின்" வரலாற்று ரீதியான மேலாதிக்கத்தை எடுத்துக் காட்டுகிறது என பறைசாற்றியது. இங்கு அது அதனை உயிர் வாழும் ஆதாரம் என்று விவாதித்தது. அந்த வெற்றி குறுகிய காலமே நீடித்தது. 1997-98 ஆசிய நிதி உருகிவழிதல் அக் கோரருதல்களை வீணாக்குவதற்கு வழிவகுத்தது, 1930 பொருளாதாரத் தாழ்வுக்குப் பின்னர் இந்தப் பிராந்தியத்தில் மிகக் கடுமையான பொருளாதார கீழிறக்கத்தைத் திணித்தது மற்றும் பூகோள நிதி நெருக்கடியை ஏற்படுத்திக் கொடுத்தது, அண்மைய ஒரு ஆய்வின் கூற்றுக்களில் பன்னாட்டு நிதியமானது (IMF) மிகவும் அப்பட்டமாகச் சொன்னால் குறிப்பற்றதாக இருந்தது.

அமெரிக்க பிசினஸ் வீக் இதழின்படி, 1997-98 சம்பவங்கள் பற்றிய அண்மைய புத்தகமானது, "வெளித் தோற்றம் பற்றி அனைத்து அறிதலிலும் அதன் நம்பிக்கையைக் கொண்டிருந்த போதும், பன்னாட்டு நிதியமும் பழம்பெரும் வகையில் பயிற்றுவிக்கப்பட்ட அதன் பொருளாதார வாதிகளின் சேனைகளும், நவீன முதலாளித்துவ சந்தைகள் மற்றும் ஆசிய அரசியலின் வெட்கம் கெட்ட சிக்கல்கள் மற்றும் கார்ப்பொரேட் நிதி இவற்றின் வேலைப்பாடுகள் பற்றி குறிப்பற்று இருந்தனர். ("Clueless at the IMF" , Business Week, November 5,2001)

1990களில் நிதிப் புயல்களை எழவைத்த உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் உள்ளேயான ஆழ வேரூன்றிய பிரச்சினைகள் ஒன்று கூட தீர்க்கப்பட்டிருக்கவில்லை. உண்மையில், போருக்குப் பிந்திய சகாப்தத்தின் மிக ஆபத்தான பொருளாதார கீழிறக்கத்தின் தோற்றத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த 11 மாதங்களில் அமெரிக்க நிதிப் பொறுப்பாளர்கள் பொருளாதாரத்தைப் பூரிக்க வைக்கும் முயற்சியில் 10 வட்டி வீத வெட்டுக்களை நடைமுறைப் படுத்தியதை நாம் கண்டோம் -பயன் எதுவும் இல்லை. வட்டிவீத வெட்டுக்கள் மற்றும் நிதி நடவடிக்கைகள் இரண்டினதும் சேர்க்கை அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை பூரிப்பு அடைய வைக்கும் என நம்பிக்கை இருக்கிறது. இருப்பினும், அவ்வாறான நடவடிக்கைகளில் நம்பிக்கை வைப்பவர்கள் ஜப்பானை நன்கு கவனிக்க வேண்டும். இங்கு உலக முதலாளித்துவத்தின் வரலாற்றில் பூரிப்பிற்காக அரசாங்கம் பெரும் செலவழிப்பு செய்தது மற்றும் பூச்சிய வட்டிவீதக் கொள்கையை நடைமுறைப் படுத்தியது. அது 10 ஆண்டுகளில் நான்காவது பொருளாதார கீழிறக்கத்தை தடுக்கத் தவறிவிட்டது.

ஒரு தசாப்தத்தில் மூன்றாவது யுத்தம்

பூகோள முதலாளித்துவ அமைப்பின் அதிகரித்துவரும் நெருக்கடிகளைச் சுட்டிக் காட்டும் பொருளாதார மற்றும் சமூகக் குறிகாட்டிகளை ஒருவர் பட்டியலிட்டுக் காட்டமுடியும். ஆனால் பலவழிகளில் அனைத்திலும் மிகக் குறைந்த அரசியல் அபிவிருத்தி என்னவெனில் கடந்த ஒரு தசாப்தத்தில், இப்பொழுது நாம் ஐக்கிய அமெரிக்க அரசுகள் தலைமையிலான ஏகாதிபத்திய வல்லரசுகளால் தொடுக்கப்பட்டுள்ள மூன்றாவது யுத்தத்தினுள் நுழைந்திருக்கிறோம் என்பதாகும்.

இந்த யுத்தங்கள் பல பொது அம்சங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. எல்லாவற்றுக்கும் முதலில் பொதுமக்களுக்கு அவர்களின் முன்வைப்பினைப் பொறுத்த மட்டில், இப்பொழுது பிரசித்தி பெற்ற பாணியைப் பின்பற்றி உள்ளனர். இம் மூன்று விஷயங்களிலும் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் முன்னாள் கூட்டாளி, ஹிட்லருக்கு இரத்த உறவினராக, அழித்தொழிக்கப்பட வேண்டிய பயங்கரமான தெய்வ தண்டனைக்குரிய கருவியாக திடீரென முன்வைக்கப்படுகிறது.

வளைகுடாப் போரை எடுத்துக் கொண்டால், 1980களில் ஈரானுக்கு எதிரான யுத்தத்தின் போது ஐக்கிய அமெரிக்க அரசுகளால் ஆதரிக்கப்பட்டிருந்த சதாம் ஹூசைன், இதன் அடிப்படையில், தான் குவைத்துக்கு எதிராக நகர்ந்தால் ஐக்கிய அமெரிக்க அரசுகள் அதனைக் கண்டு கொள்ளாது எனக் கருதியவர், தான் தப்புக் கணக்குப் போட்டுவிட்டதாக திடீரென்று கண்டு கொண்டார். வளைகுடாவுக்கு அமெரிக்கப் படைகள் போக ஹூசைன் புதிய ஹிட்லராக பேயாக்கப்பட்டார்.

யூகோஸ்லாவியாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்த பாணி திரும்பக் கொண்டுவரப்பட்டது. பன்னாட்டு நிதியம் வழியாக யூகோஸ்லாவியாவில் திணிக்கப்பட்ட சந்தைக் கொள்கைக்கு ஆதரவளித்ததன் காரணமாக 1980களில் ஒரு சொத்தாகக் கருதப்பட்டிருந்த சுலோபோடன் மிலோசிவிக், அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் இலக்கு மாறியதும் "புதிய ஹிட்லராக" மாறினார்.

ஐக்கிய அமெரிக்க அரசுகள் தொடக்கத்தில் யூகோஸ்லாவிய அரசை உடைப்பதற்கு எதிர்த்தது. சாதாரணமாக குளிர் யுத்தத்தின் போது யூகோஸ்லாவிய அரசுக்கு ஆதரவளிப்பு சோவியத் ஒன்றியத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் வழி முறையாக இருந்து வந்தது. ஆனால் ஜேர்மனி, அண்மையில், கிழக்கைச் சேர்த்து மறு ஐக்கியம் செய்யப்பட்டதுடன், தனது செல்வாக்கை மீள உறுதிப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அரசை உடைப்பதற்கான தளத்தை தொடங்கி விட்டது, ஐக்கிய அமெரிக்க அரசுகள் மாற்றத்தைச் செய்தது. ஆனால் அவ்வாறு செய்தாலும் கூட, அது இன்னும் மிலோசிவிக்கின் மீது நம்பிக்கையைத் தொடர்கிறது, மற்றும் அவர் பொஸ்னியாவில் ஐக்கிய நாடுகள் நிர்வாகம் செய்யும் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியை ஏற்படுத்திய டேற்ரன் ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படும் ஒப்பந்தங்களில் முக்கிய கையொப்பம் இட்டவராக இருந்தார். எவ்வாறாயினும், ஏற்கனவே கணித்தவாறு, கொசோவா மீதான சர்ச்சை வெடித்ததும், அமெரிக்கா தலையிட்டது மற்றும் மிலோசிவிக்கின் நடவடிக்கைகள் அடோல்ப் ஹிட்லரோடு மட்டும் ஒப்பிடத்தக்கதாய் அவர் யுத்தக் குற்றவாளி ஆனார்.

புதிய "தீங்கு செய்பவர்" ஒசாமா பின்லேடன், மற்றும் அவரைப் பாதுகாப்பவர்களான தலிபான் ஆட்சி ஆகியோருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்தத்தை இப்போது நாம் காண்கிறோம். சதாம் ஹூசைன் மற்றும் சுலோபோடன் மிலோசிவிக் போலவே ஒசாமா பின்லேடனும் ஒரு சமயம் சொத்தாக, 1980களில் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக முஜாஹைதீன்களால் நடத்தப்பட்ட யுத்தத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூட்டாளியாகவும் கூட இருந்தார். இந்த யுத்தம் 6 பில்லியன் டாலர்களுக்கும் 10 பில்லியன் டாலர்களுக்கும் இடையில் செளதி ஆட்சியாலும் அமெரிக்காவாலும் நிதியூட்டப்பட்டது. மேலும் அமெரிக்கா துடைத்துக்கட்ட தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அல்கொய்தா வலைப்பின்னல் அமெரிக்க நடவடிக்கையின் விளைவால் ஏற்படுத்தப்பட்டது.

1986ல் சோவியத் படைகளுக்கு எதிரான யுத்தத்தில் ஐக்கிய அமெரிக்க அரசிகள் பல முடிவுகளை எடுத்தது. சில முஜாஹைதீன்களுக்கு அமெரிக்கா ஸ்டிரிங்கர் ஏவுகணைகளை அளித்தது, இஸ்லாமிய மக்களைக் கொண்ட சோவியத் குடியரசுகளான தஜிக்கிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் ஆகியவற்றில் நடவடிக்கைகளை ஆரம்பிக்க, மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான யுத்தத்தில் போராட உலகம் முழுவதிலும் இருந்து தீவிர முஸ்லிம்களை ஆள் சேர்த்து மற்றும் பயிற்சிகொடுக்கும் பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு சேவையின் நீண்டகால முன்முயற்சிக்கு அது ஆதரவளித்தது.

அகமது ரஷீது எனும் ஆசிரியரின்படி: "1982 மற்றும் 92க்கு இடையில் மத்திய கிழக்கு, வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் தூரக் கிழக்கு பகுதிகளில் உள்ள 43 நாடுகளில் இருந்து சுமார் 35,000 தீவிரவாத முஸ்லிம்கள் ஆப்கானிஸ்தானின் முஜாஹைதீன்களைத் தோற்கடித்து ஞானஸ்நானம் செய்தனர். பத்தாயிரக்கணக்கான வெளிநாட்டு முஸ்லிம் தீவிரப் போக்கினர் ஜியா இராணுவ அரசாங்கத்தால் பாக்கிஸ்தானிலும் ஆப்கான் எல்லையிலும் நிதி கொடுத்து நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மதரஸாக்களில் (பள்ளிகளில்) பயில வந்தனர். இறுதியாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் தீவிரப் போக்கினர் பாக்கிஸ்தானுடனும் ஆப்கானிஸ்தானுடனும் நேரடித் தொடர்பு கொண்டிருந்தனர் மற்றும் ஜிஹாத்தால் ஈர்க்கப்பட்டிருந்தனர்.

"பெஷாவர் அருகே மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள முகாம்களில், இந்த தீவிரப் போக்கினர் முதல் தடவையாக ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர் மற்றும் கற்றனர், பயிற்சி எடுத்தனர் மற்றும் சேர்ந்து சண்டை இட்டனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு ஏனைய நாடுகளில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களை அறிந்து கொள்வதற்கு அதுதான் முதல் சந்தர்ப்பமாக இருந்தது மற்றும் எதிர் காலத்தில் அவர்களுக்கு நன்கு பயன்தரும் தந்திரோபாய மற்றும் சித்தாந்த இணைப்புக்களை அவர்கள் ஒன்று திரட்டிக் கொண்டார்கள். முகாம்கள் எதிர்கால இஸ்லாமிய தீவிரவாதத்திற்கான உண்மையான பல்கலைக் கழகங்களாயின. உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய தீவிரப் போக்கினர் ஒன்றாய் கொண்டுவரப்பட்டதன் விளைபயன்களை எண்ணிப்பார்க்க விரும்புவதில் ஒரு உளவு நிறுவனமும் ஈடுபடவில்லை. 'வரலாற்றின் உலகக் கண்ணோட்டத்தில் மிக முக்கியமானதாக என்ன இருந்தது? தலிபானா அல்லது சோவியத் பேரரசின் வீழ்ச்சியா? ஒரு சில கிளர்ச்சி ஊட்டப்பட்ட முஸ்லிம்களா அல்லது மத்திய ஐரோப்பாவின் விடுதலை மற்றும் குளிர் யுத்தத்தின் முடிவா?' என முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்பிக்னீவ் கூறினார். ஆப்கானில் பயிற்சி பெற்ற இஸ்லாமியப் போராளி 1993ல் நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தை தகர்த்தபொழுது, அது ஆறு பேரைக் கொன்று ஆயிரக்கணக்கானோரைக் காயப்படுத்திய பொழுது, அதன் விளைபயன்களுக்குத்தான் அமெரிக்க குடிமக்கள் விழித்தனர்." (Islam,Oil and the New Great Game in Central Asia, Ahmed Rashid, P.130)

இங்கு காணப்படும் பேயாக்கிக் காட்டும் நிகழ்ச்சிப் போக்கு தற்செயலானதல்ல மாறாக அத்தியாவசியமானது. பரந்த சமுதாயத்தின் வளர்ச்சி கண்ட சூழ்நிலைகளின் கீழ், நவீன யுத்தத்துக்கு, ஆயுதங்களைக் கையாளுவதற்கான காரணமாக பொது மக்கள் முன் வைக்கக் கூடிய உடனடி நிகழ்ச்சி, ஒரு சாக்குப் போக்கு தேவைப்படுகின்றது. இருப்பினும், யுத்தம் பற்றிய வரலாற்று ஆய்வு மேற்கொள்ளப்படும் பொழுது, உண்மையான காரணத்தை -அடிப்படை இயக்கு சக்திகளைக் காணமுடியும்- அவை அதிகாரபூர்வ பகிரங்க அறிவிப்போடு சம்பந்தம் கொண்டிருக்காது. குறைந்த பட்சம் கடந்த 100 ஆண்டுகளில் அதுதான் விஷயமாக இருந்து வருகிறது.

போயர் யுத்தத்துடன் (Boer War) தொடங்கிய கடந்த நூற்றாண்டை நினைவு கூருங்கள். அதனை நியாயப்படுத்த தொழுது வரவழைத்த காரணங்களை இன்று எவராவது அறிவார்களா? அது அந்நாளின் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஆங்கிலம் பேசும் குடியேற்றக் காரர்களின் தேர்தல் தொகுதி உரிமையைப் பாதுகாப்பதற்கான யுத்தம் மற்றும் கறுப்பின தென்னாபிரிக்கரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான யுத்தமாக முன்வைக்கப்பட்டது. யுத்தத்திற்கான உண்மையான காரணம் டிரான்ஸ்வால் (Transvaal) இல் பரந்த அளவிலான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக இருந்தது. இப்பொழுது 21ம் நூற்றாண்டு பயங்கரவாதத்துக்கு எதிரான பூகோள யுத்தத்துடன் திறந்திருக்கிறது.

பொருளாதார மற்றும் அரசியல் காரணிகள்

ஆகையால் இந்த யுத்தத்திற்கான உண்மையான காரணங்கள் யாவை? கடந்த தசாப்தத்தில் முந்தைய இரு யுத்தங்கள் சம்பந்தமாக பிரதான வல்லரசுகளின் அறிக்கைகளை ஆராய்வதன் மூலம் இந்தக் கேள்விக்கு விடை அளிக்க ஆரம்பிப்போம்.

வளைகுடா யுத்தம் தொடுக்கப்பட்டது, ஈராக்கை குவைத்திலிருந்து வெளியேற்றுவதற்கு என கூறப்பட்டது. ஈராக்கிய படைகள் சென்று நீண்டகாலமாகிவிட்டன மற்றும் குவைத் ஷேக்குகள் மீண்டும் ஆட்சியில் இருத்தப்பட்டு விட்டனர், ஆனால் அமெரிக்கப் படைகள் வளைகுடாவில் தொடர்ந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஈராக் பொருளாதார தடைகளின் பிடியில் தொடர்ந்து இன்னும் இருக்கும் அதே வேளையில், அவர்கள் நாளாந்த அடிப்படையில் அங்கு இராணுவ நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர்.

யூகோஸ்லாவியாவுக்கு எதிரான யுத்தம் மிலோசிவிக்கிடமிருந்து கொசோவர்களைப் பாதுகாக்க நடத்தப்பட்டது. அவர் போய்விட்டார், ஆனால் நேட்டோ படைகள் அங்கு இன்னும் இருக்கின்றன. இப்பொழுது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்தத்தை மற்றும் மத்திய ஆசியாவின் இதயப் பகுதிக்குள் அமெரிக்கப் படைகளின் உட்புகலைப் பார்க்கிறோம். ஒசாமா பின்லேடன் நாளையே பிடிக்கப்பட்டால், அல் கொய்தா வலைப்பின்னல் அழிக்கப்பட்டு தலிபான் ஆட்சி கவிழ்க்கப்பட்டால், ஐக்கிய அமெரிக்காவின் படைகள் வெளியேறிவிடும் என யாரேனும் சீரியசாக நம்புகிறீர்களா? இல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஆப்கானிஸ்தான் மீதான வெற்றி ஈராக்கிற்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தமாக பின் தொடரப்படும்.

இந்த யுத்தத்திற்கான உண்மையான காரணங்கள் அது இடம்பெறும் சர்வதேச மற்றும் வரலாற்று உள்ளடக்கத்துக்குள்ளேயான ஆய்வின் மூலம் மட்டுமே உறுதிப்படுத்தப்பட முடியும். நாம் வெறுமனே அண்மைய நிகழ்ச்சியை, மற்றும் அவை மீதான ஏகாதிபத்திய அரசில்வாதிகளின் பகிரங்க அறிவிப்புக்களை எண்ணிப்பார்க்கக்க கூடாது மாறாக 20ம் நூற்றாண்டின் வரலாற்று அனுபவங்களின் ஒட்டு மொத்த அலைவீச்சையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சமீப நாட்களில் அமெரிக்கப் பத்திரிகைகளிலும் மற்றைய செய்தி ஊடகங்களிலும் புஷ்ஷின் "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை'' சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான குளிர்யுத்தத்துடன் ஒப்பிடும் அநேக விமர்சனக் குறிப்புக்கள் காணப்பட்டன. நாம் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிட்ட அண்மைய கட்டுரையில் குறித்தவாறு, இந்த ஒப்புமையானது, பல முனைகளிலும் குறைபாடு உடையதாக இருக்கின்றது. தற்போதைய மோதலானது குளிர் யுத்தத்துடன் அதிக அளவில் ஒத்ததாக இல்லை மாறாக 1914ல் முதலாவது உலக யுத்தத்தையும் 1917 ரஷ்யப் புரட்சியையும் திறந்து விடுவதற்கு வழிவகுத்த தசாப்தங்களை ஒத்ததாக இருக்கிறது.

19ம் நூற்றாண்டின் கடைசி தசாப்தங்கள் உலக முதலாளித்துவ ஒழுங்கில் பரந்த அளவிலான உருமாற்றத்தைக் கண்டது. அந்நூற்றாண்டின் முதலாவது பகுதி பிரிட்டன் உலகைக் குத்தகைக்கு எடுத்த உலகின் முதலாவது தொழில்துறை வல்லரசாக எழுச்சியுற்றதால் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் 19ம் நூற்றாண்டின் கடந்த 30 ஆண்டுகள் முதலாளித்துவ தொழில்துறைப் பொருளாதாரம் வேர்விட்டதாக புதிய வல்லரசுகள் அரங்கத்துக்கு வந்ததைக் கண்டது. அந்நூற்றாண்டின் முடிவில், பிரிட்டன் ஏற்கனவே -ஜேர்மனியால் மற்றும் குறைந்த மட்டத்துக்கு பிரான்சால் சவால் செய்யப்பட்டிருந்தது- அதேவேளை மேற்கில் புதிய வல்லரசான ஐக்கிய அமெரிக்க அரசுகள் எழுநிலையில் இருந்தது.

இந்த மாற்றங்கள் பிரதான வல்லரசுகள் மத்தியில் பதட்டங்களில் அதிகரிப்பை விளைவித்தது. 1871ல் ஜேர்மன் அரசு உருவாக்கத்தைத் தொடர்ந்து, இதுவரையில் ஐரோப்பா மீது அதன் கவனத்தை ஒருமுகப்படுத்தியிருந்த ஜேர்மனி, 1890 களில் அதுவும் கூட உலக அரங்கில் அதன் இடத்தைப் பெற விழைவதாகப் பறைசாற்றியது. அந்த நேரம் வரை காலனித்துவம் தேய்வுறும் நிலையில் இருந்து வந்தது. ஆனால் 19ம் நூற்றாண்டின் பின்பகுதியில், காலனிகளுக்கும், சந்தைகளுக்கும் மற்றும் வளங்களுக்குமான போராட்டத்தில் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியன பிரிட்டனுடன் இறங்க, அது வெடித்தெழும் மீட்டுயிர்ப்பில் இறங்கியது. அந்நூற்றாண்டின் முடிவில், பின் வருகையாளர்களான ஐக்கிய அமெரிக்க அரசுகளும் ஜப்பானும் தங்களது சொந்த ஏகாதிபத்திய விரிவாக்கத்திற்காகப் புறப்பட்டன.

இந்தப் போராட்டம் இறுதியில் 1914ல் யுத்த வெடிப்புக்கு வழிவகுத்தது. ஏகாதிபத்திய வல்லரசுகள் இலட்சக் கணக்கானோரின் மரணத்தை விளைவித்த, ஐரோப்பாக் கண்டத்தில் இரத்தம் தோய்ந்த இயங்க முடியா நிலைக்கு செல்லும் வண்ணம் ஒருவரோடு ஒருவர் சண்டை இட்டனர். அதன் மிச்சம் 1917ல் ஐக்கிய அமெரிக்க அரசுகள் யுத்தத்தில் இறங்கிய திருப்பமாக இருந்தது, ஜேர்மனியின் தோல்விக்கு வழிவகுத்தது. ஆனால் ஜேர்மனியின் தோல்வியும் வெர்செயில்ஸ் உடன்படிக்கை திணிப்பும் ஒன்றையும் தீர்க்கவில்லை. பிரதான வல்லரசுகளுக்கு இடையிலான மோதல்கள் அப்படியே இருந்தன, முதலாவது பெரும் அழிவுக்குப் பின்னர் 25 வருடங்களிலேயே, மீண்டும் அவை வெடித்தன.

இரண்டாவது ஏகாதிபத்திய யுத்தத்தின் விளைபொருள் முதலாவதினின்று வேறுபட்டதாக இருந்தது. ஐக்கிய அமெரிக்க அரசுகள் தனது பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்கத்தின் அடிப்படையில், புதிய பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கைத் திணித்தது. பூகோள முதலாளித்துவ அமைப்புக்கு குறிப்பிட்ட அளவுக்கு சமநிலை மீட்டமைக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக, இந்த ஸ்திரத்தன்மையானது, ஐக்கிய அமெரிக்க அரசுகளில் நூற்றாண்டின் முதல் பகுதியில் அபிவிருத்தி செய்யப்பட்ட பரந்த அளவிலான அதிக உற்பத்தி முறைகளை எஞ்சி இருக்கும் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு விஸ்தரிப்பதில் தங்கி இருந்தது. அரசியல் ரீதியாக, சோவியத் ஒன்றியத்துடனான குளிர் யுத்தமானது பிரதான முதலாளித்துவ வல்லரசுகள் மீது ஐக்கிய அமெரிக்க அரசுகள் தனது மேலாளுமையை முயன்று செய்விக்கக்கூடியதாக வழிமுறைகளை வழங்கியது, நூற்றாண்டின் முதலாவது பாதியில் உலகைத் துண்டாக்கிய மோதல்களின் வெடிப்பினைத் தடுத்தது.

1950கள் மற்றும் 1960 களின் பொருளாதார விரிவாக்கம் உலக முதலாளித்துவத்தின் வரலாற்றில் மிகுந்த தாக்குப் பிடிக்கக்கூடிய வளர்ச்சிக் கட்டமாகும். நூற்றாண்டின் முதலாவது பகுதியில் வெடித்திருந்த அனைத்துப் பிரச்சினைகளும் --இரண்டு உலக யுத்தங்கள் மற்றும் பொருளாதாரத் தாழ்வு வடிவத்தில் வெடித்திருந்த அனைத்துப் பிரச்சினைகளும்-- எப்படியோ கடந்து வந்து விட்டதாக அது காணப்பட்டது.

ஆனால் முதலாளித்துவ வளர்ச்சிக் காலகட்டம் --மற்றும் அது உயர்த்திய வாழ்க்கைத் தரங்களின் விஸ்தரிப்பு-- முதலாளித்துவ ஒழுங்கின் அடிப்படை முரண்பாடுகளைத் தீர்க்கவில்லை. அந்த முரண்பாடுகள் 1970களின் பொருளாதார கொந்தளிப்பில் வெடிக்க இருந்தது. அமெரிக்கா டாலருக்கு தங்கத்தை ஆதாரமாகக் கொண்டிருந்ததை 1971ல், நிக்சன் வாபஸ் வாங்கிய பொழுது, போருக்குப் பிந்தைய பண அமைப்பு முறையின் பொறிவுடன் அந்த தசாப்தம் திறந்தது. பின்னர் 1974-75 பொருளாதாரத் தளர்வு வந்தது, 1930களின் பொருளாதாரத் தாழ்விற்குப் பின்னரான மிகவும் ஆபத்தான ஒன்றாக அது வந்தது, அது உயர் வேலை இன்மை மற்றும் உயர் பணவீக்கம் - 1970 களின் இறுதிப் பகுதியின் பொருளாதாரத் தேக்க வீக்கம் (stagflation) என்று அழைக்கப்படும் காலகட்டத்தால் பின் தொடரப்பட்டது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved