Nigerian soldiers carry out massacres
நைஜீரியா படையினர் படுகொலைகளை செய்து வருகின்றனர்.
By Trevor Johnson and Barbara Slaughter
27 October 2001
Back to screen version
இந்த வாரம் நைஜீரியாவில் நூற்றுக்கணக்கான கிராமத்து மக்கள் இராணுவத்தால்
படுகொலை செய்யப்பட்டுள்ளனர். Benue
விலுள்ள Tiv
கிராமத்தை சுற்றி வளைத்த இராணுவம் அங்கிருந்த நான்கு இனக்குழுக்களைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட நிராயுதபாணி
மக்களை கொன்று தள்ளினர். இருபதாயிரம் மக்கள் வசிக்கும்
Zaki Biam நகரம் முற்று முழுதாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.
எட்டு கவச வண்டிகளில் இராணுவக் குழுவினர் வந்ததாக நேரில் பார்த்த சாட்சிகள் கூறினர்.
Anyiin
என்னும் இடத்துக்கு முதலில் வந்த அவர்கள், கிராமத்தவர்களை
Gbeji மக்கள் சதுக்கத்துக்கு வந்து கூடும்படி அழைப்பு விடுத்ததுடன்
அவர்களுக்கு அங்கு அவசரச் செய்தியை விடுக்க வேண்டும் என்றனர்.
உடனடியாக அங்கு கூடிய கிராமத்தவர்களைப் பார்த்து பெண்களும் குழந்தைகளையும் அங்கிருந்து
விலகிப்போகும்படி கூறிய இராணுவத்தினர், அதன்பின் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களை பகிரங்கமாக சுட்டுக் கொன்றனர்.
இன்னுமொரு கிராமத்தில், அக் கிராமத்தின் தலைவரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான
General Victor Malu
வின் மாமனாருமாகிய கண்பார்வையில்லாத ஒருவரும் அவரது மனைவியும் கொலைசெய்யப்பட்டனர்.
அவர்களது உடல்களை வீட்டினுள் போட்டு எரித்தனர்.
DanIsaacs என்னும் BBC
யின் நைஜீரியா தொடர்பாளர் Zaki Biam
லிருந்து விடுத்த அறிக்கையின்படி ''அவர்கள் ஒவ்வொரு தனிக்கட்டிடத்தையும் உடைத்து
நொருக்கினர். எல்லாவற்றையும் எரித்துப் பொசுக்கினர். வீட்டின் சுவர்கள் எஞ்சியிருந்த போதும் மற்றைய பொருட்கள்
யாவும் நாசமாக்கப்பட்டன. அவர்கள் கட்டிடங்களை ரொக்கட்டுக்களினால் (Rocket propelled
grenades) சுட்டுத்தள்ளியதுடன் அதனது அடையாளங்களும் எல்லாவிடங்களிலும் தெரிந்தன''
எனக் கூறினார்.
நடந்து முடிந்த இப்படுகொலைகளுக்குப் பின்னரான குறுகிய காலத்தில்
Zaki Biam க்கு
சென்ற உள்ளூர் தொலைக்காட்சி குழுவினர் அங்கு வீதிகளில் வீழ்ந்து கிடந்த நூற்றுக்கும் மேற்பட்ட இறந்த உடல்களை படம்
பிடித்தார்கள். சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்ட மற்றைய கிராமத்து மக்களும் அங்கு கொல்லப்பட்டுஅவர்களது உடல்களை
எரித்துப் பொசுக்கியதற்கான உறுதியான சாட்சியங்களும் உள்ளன.
பத்தாயிரக்கணக்கான ரிவ் கிராமத்தவர்கள் இராணுவக் கெடுபிடியிலிருந்து காடுகளுக்குள்
தப்பிச் சென்றனர். Benue
விலுள்ள மீளக்குடியமர்த்தும் அதிகாரி ரொய்ட்டருக்கு ''எத்தனை பேர்கள் வெளியேறினார்கள்
என்பதை எம்மால் கணிப்பிட முடியாதுள்ளது. வெளியேறிய மக்களுக்கு எந்தவிதமான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளும்
கிடையாது'' எனத் தெரிவித்தார். இந்த வாரம் நடந்த கொலைகளுக்கு முன்பாக
Taraba வில் இருந்து
60.000 மக்கள் வெளியேறியதை பதிவுசெய்ததாகவும் தொடர்ந்தும் கூறினார்.
இச் சம்பவத்துக்கு இருவாரத்துக்கு முன்பு கடத்திக் கொல்லப்பட்ட 19 இராணுவத்தினரின்
மரணத்துக்கு பழிவாங்குவதற்காகவே இப்படுகொலைகள் செய்யப்பட்டன.
Tivs, Jukuns
என்னும் இனக்குழுக்களுக்கிடையே
நடந்த கலவரங்களை அடக்க இராணுவம் அனுப்பப்பட்டதாகவும் அதில் ரிவ்
ஆயுதக்குழுவினால்தான் தமது தரப்பில் மரணங்கள் ஏற்பட்டதாகவும் இராணுவம் கூறியது.
சர்வதேச மன்னிப்புச் சபை பத்திரிகைக்கு விடுத்த அறிக்கையில் ''துருப்புக்களின் இப்பழிவாங்கும்
தாக்குதல் நடவடிக்கையானது மூன்று நாட்களாக தொடர்ந்தன. இந்த இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினரின்
உயிர்களுக்கு எந்தவிதமான ஆபத்துக்களும் அங்கிருக்கவில்லை. வெறும்கொலை வெறியாட்டம் என்றே இதனை
விளக்கமுடியும்'' என்றது.
19 இராணுவத்தினரின் மரணத்துக்கு பொறுப்பானவர்களை கைது செய்வதற்கும், இனக்குழு
ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களைவதற்குமாக வேறுதுருப்புக்களை ஒழுங்கு செய்ததாகவும், கடுமையான
கட்டுக்கோப்புக்கு கீழ் இருந்த இராணுவம் குறைந்தளவுக்கு கூட துப்பாக்கிப் பிரயோகம் அங்கு மேற்கொள்ளப்படவில்லை
எனவும் வியாழக்கிழமை அன்று இராணுவ அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
நைஜீரியா இராணுவப் பேச்சாளரான
Colonel Felix Chukwuma
என்பவர், நேரில் பார்த்தவர்களையும் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகளையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு கிராமத்தவர்கள் இராணுவத்தினால்
படுகொலை செய்யப்பட்டதை நிராகரித்தார்.
19 இராணுவத்தினரின் கொலைகளுக்கு பின்புலமானவர்களை பிடிக்கும்படி அப்பகுதியில்
இருக்கும் துருப்புக்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி
Olusegun Obasanjo கட்டளை பிறப்பித்தார். நாட்டைச் சீர்குலைத்து
பயமுறுத்துவதே கொலைகாரர்களின் நோக்கம் எனவும் தெரிவித்தார். அன்றைய தினமே இப்படுகொலைகள் கிராமத்தவர்கள்மீது
ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சர்வதேசங்களிலிருந்து வந்த விமர்சனங்களால் மிரண்டுபோன
Obasanjo, அப்பகுதிகளில்
இராணுவ நடவடிக்கைகளை நிறுத்ததள்ளப்பட்டார். ஆனால்
General Alexander Ogomudia என்னும் இராணுவ அதிகாரி,
19 இராணுவத்தினரின் கொலைக்குக் காரனமாண ரிவ் ஆயுதக்குழுவை பிடிக்கும்வரை நடவடிக்கைகள் தொடரும் என்றார்.
Tiv மற்றும்
Jukun ஆகிய
இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளுக்கு இராணுவமானது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது அல்லது பக்கச் சார்பாகவிருப்பது
என்பதையும் நிராகரித்தார்.
நைஜர் ஆற்றுப் பகுதியின்
Bayelsa மாநிலத்திலுள்ள
Odi நகரில் இரண்டு வருடங்களுக்கு
முன்பு நடந்த படுகொலை சம்பவத்தை இது நினைவுபடுத்துகின்றது. ஒரு மாதத்திற்கு முன்பு 12 பொலீசார்கள் கொல்லப்பட்டதற்காக
இராணுவம் நகர்ந்து இந்த நகரத்தை நாசமாக்கி நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கொன்று தள்ளியது.
1990 களின் ஆரம்பத்திலிருந்து Benue
விலும் Taraba மாநிலத்துக்கு
அருகிலுள்ள பகுதிகளிலும் Tivs மற்றும் Junkuns
தீவிரவாதக் குழுக்களுக்கிடையே அங்குமிங்குமாக மோதல்கள் நடந்து வருகின்றன.
விவசாயத்தில் ஈடுபடுகின்ற அவர்களது பாரம்பரிய நடைமுறையினை இம்மாநில எல்லைகள் (இப்போது நடைமுறையிலுள்ள
எல்லைகள் 1996 இலேயே வகுக்கப்பட்டன) துண்டித்து செல்வது இச் சர்ச்சைகான ஒரு பகுதி காரணமாக இருக்கின்றது.
இந்த விவசாய உற்பத்தி முறை -வெட்டிச் சிதைப்பதும் எரிப்பதும்- என்பது யாதெனில் புதிய
பகுதிகளில் விவசாயம் செய்ய விவசாயிகளை தொடர்ச்சியாக இடம்பெயரச் செய்வதாகும். தற்போதய காலப்பகுதியில்
நிலத்துக்கான அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது ஏனெனில் Tiv
இன மக்கள் வடக்குப் பகுதியிலிருந்து இடம் பெயருவதனாலாகும். முஸ்லீம்
ஷாரிய (Sharia)
சட்டத்தின் கடுமையான தன்மைகளிலிருந்து தலைதப்பிக் கொள்வதற்காக அங்குள்ள நிலங்களை அவர்கள் கைவிடத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
நைஜீரியாவின் வட பிராந்தியத்தில் ஷாரியாச் சட்டம் நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த வருடம் வரை
அது கடுமையாக பாவிக்கப்படவில்லை. இந்த மதவாத ஆளுமையானது முஸ்லீம் அல்லாத சிறுபான்மை மக்களை பீதி
கொள்ள வைத்துள்ளது.
அறுபது வருடகால காலனித்துவ ஆட்சியின்போது, பிராந்திய மற்றும் இனக்குழு பிரிவுகளை
ஊக்குவித்து இம் மக்களை பிரித்தானியா கட்டுப்படுத்தி வைத்திருந்தது. 1960 களில் இந்த நாடு சுதந்திரத்தை
அடைந்தபோதும் இப்பதட்டமானது இன்னமும் அமைதியாகவில்லை. சுதந்திரமடைந்த நைஜீரியாலின் முழுக்காலகட்டமும் இன
முரண்பாடுகளும் மற்றும் பதட்டமும்நாட்டை பிறம்பாக அச்சுறுத்தி வருகின்றன. கொடுமையான இராணுவ நடவடிக்கைகளின்
மூலம் எப்போதும் அவர்கள் துவம்சம் செய்யப்படுகின்றார்கள்.
1999 ல் தேர்தல் மோசடி மூலம் ஜனாதிபதியாக
Obsanjano ஆட்சிக்கு
வந்தார். 1960 களிலிருந்து நைஜீரியாவில் ஆட்சியிலிருந்து வந்த இராணுவ ஆட்சியை அவர் பதிலீடு செய்தார். சர்வதேச
நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் பாரிய தலையீட்டுடன் இது செய்யப்பட்டது. நாடு கடந்த கூட்டுத்தாபனங்களின்
நேரடியான முதலீட்டுக்கு நாடு திறந்து விடப்பட்டதோடு இது "வெளிப்படையான
அரசாங்கம்'' எனவும் அழைக்கப்பட்டது.
பாரிய எண்ணெய் வளங்கள் நாட்டில் இருந்தும் நைஜீரியா மக்கள் முகம் கொடுக்கும் வாழ்
நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன. அங்கு துரிதமாக வளர்ச்சியடையும் வறுமையும் நம்பிக்கையீனமும் மற்றும் வேலையில்லாத்
திண்டாட்டமும் நகரங்களை பீடித்திருக்க கிராமப் பகுதிகளில் பஞ்சமும் வறுமையும் தலைவிரித்தாடுகின்றது.
Obsanjano தனது ஆட்சியை பாதுகாக்கும் முயற்சியாக
எண்ணெய் வருமானத்தின் மூலம் வரும் வருமானத்தை உள்ளூர் ஆளும் தட்டுக்களுக்கு வழங்கி வருகின்றார். பிராந்தியங்களை
சிறு சிறு துண்டுகளாக பிரித்துவரும் அவர், Benue பகுதியில்
Tiv மற்றும் Jukuns க்கு செய்வது
போன்று சிறிய இனக்குழு தலைவர்களுக்கு நிதி உதவிகளையும் வழங்கி வருகின்றார். இந்தத் தட்டுக்கள் அரசாங்கத்தின்
உதவிகளை மேலும் தமது கைகளில் பெற்றுக் கொள்ளும் முயற்சியாக இனங்களுக்குள்ளான முரண்பாடுகளை ஊட்டி வளர்த்து
வருகின்றனர் என்பதில் ஒரு சிறிய சந்தேகம் இருக்கின்றது.
ஜனாதிபதி Olusegun
Obasanjo க்கு
Tiv முன்னேற்ற இயக்கத்திலிருந்து
ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. General Wanteregh
Paul Unongo என்னும் அதனது இயக்கத் தலைவர் அதில்
கையொப்பமிட்டிருந்தார். அவர் Tiv
மற்றும் Jukun
முரண்பாட்டைப் பற்றிக் கூறுகையில் ''இந்த யுத்தமானது பிசாசுத்தன்மையானது,
இரத்தம் தோய்ந்த இச்சண்டையானது சுயநலமிகளால் மேலும் மோசமான விளைவுகளை உருவாக்குகின்றது. அல்லது
குறைந்தது இதை ஒத்தவிதத்தில் கொங்கோ ஜனநாயகக் குடியரசு, பொஸ்னியா மற்றும் ருவண்டாவில் நடந்த பேரழிவுகளின்
கோரமான காட்சிகளை இங்கே காணலாம்'' என்றார்.
இப்பிரிவிலுள்ள அடுத்த கன்னையிலிருந்து
Wukari யினுடைய
Aku Uka
வும், Jukun
னின் மரபுவழி ஆட்சியாளருமான டாக்டர்
Shekarau Angyu Masa-Ibi Kuvyo II
என்பவரும் இந்த முரண்பாடுகளுக்கான வேர்கள் ரிவ் இனத்தவரின் பரப்பெல்லைகளின்
விரிவாக்கப் போக்கேயாகும் என்றார். ''அவர்கள் (Tiv)
இங்கு விவசாயத்திற்கு வந்தனர். நாங்கள் அவர்களை அனுமதித்தோம். அவர்களுக்கு தலைமையையும் வழங்கினோம்.......
தற்போது அவர்களது சனத்தொகை அதிகரித்துள்ளது. எங்களை காலனித்துவம் செய்ய அவர்கள் போதுமானவர்களாக
இருப்பதாக நம்புகின்றனர்'' என மேலும் கூறினர்.
Benue மாநிலத் தலைநகரில் இப் படுகொலைகள்
கலவரத்துக்கான பொறிகளை வெடிக்கச் செய்துள்ளன. புதன்கிழமை Makurdi
என்னுமிடத்திலுள்ள இரண்டு பல்கலைக் கழகத்தின் ரிவ் இன மாணவர்கள் ஆத்திரத்துடன்
வீதிகளில் மூர்க்கமான வன்முறைகளில் இறங்கினர். இரும்புக் கம்பிகள், கத்திகள், பொல்லுக்கட்டைகள் என்பனவற்றை கைகளில்
வைத்திருந்தனர். மறுநாள் Makurdi யில் பத்து சடலங்கள் வீதிகளில்
இருந்ததாக செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் தெரிவித்தார்கள். இராணுவம் விதித்த ஊரடங்கிற்குப் பின் இப்பகுதி அமைதியாகியது.
அமெரிக்கா பிரித்தானியாவினால் ஆப்கானிஸ்தானுக்கு மேல் தொடுக்கப்படும் யுத்தமானது நைஜீரியா
ஆளும்தட்டுக்கு எந்தவகையான எதிர்ப்புக்களையும் கடுமையான நடவடிக்கைகளின் மூலம் மேற்கொள்ளும் துணிவைக்
கொடுத்துள்ளது. திட்டவட்டமான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும்படி கூட்டரசாங்கத்துக்கு சட்டசபை
உறுப்பினர்கள் கோரிக்கைவிடுத்தனர். 1999 ம் ஆண்டு ஆற்றுப் பகுதி நகரமான
Odi மீது மேற்கொள்ளப்பட்ட
அரசாங்கத் துருப்புக்களின் இராணுவ நடவடிக்கைகளின்போது இந்நகரம் நாசமாக்கப்பட்டு அங்கு டசின் கணக்கான மக்கள்
கொன்று குவிக்கப்பட்டனர். இந்தப் பிரதிநிதிகள் பின்பற்றுவது இந்த உதாரணத்தையேயாகும்.
|