World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள்: கலை விமர்சனம் French academic slanders surrealism பிரெஞ்சு கலைமாமன்ற உறுப்பினர் மிகை யதார்த்தவாத கலையியக்கத்தின் மீது பழிதூற்றுகிறார். By Paul Bond நவம்பர் 21 இல் லூ மொன்ட் பத்திரிகை ஆப்கான் யுத்தம் பற்றி பலவகைப்பட்ட புத்திஜீவிகளின் பார்வைகளைக் கொண்ட மேலதிகமாக ஒரு பிரத்தியேக வெளியீட்டை பிரசுரித்திருந்தது. யுத்த உண்மைகள், மேலதிக சந்தேகங்கள், பரந்துபட்ட கருத்துக்களையும் இது தொகுத்திருந்தது. அதில் பங்களிப்புச் செய்தவர்கள் அனைவரும் பிரெஞ்சு எழுத்தாளர்களாக இருக்கவில்லை. மிகையதார்த்தவாதமும் மேற்கின் சீரழிவும் என தலையங்கம் இடப்பட்ட ஒரு கட்டுரை அபூர்வமானதாக இருந்தது. இந்தக் கட்டுரை வரலாற்று ஆசிரியரும், கலை விமர்சகருமான Jean Clair ஆல் எழுதப்பட்டிருந்தது. 1929 இல் வெளியிடப்பட்ட மிகையதார்த்தவாதிகளின் உலக வரைபடத்தை குறிப்பிட்டுக் காட்டுவதன்மூலம் க்லேர் தொடங்குகிறார். அவர் குறிப்பிடுவதுபோல் இது ஒரு பூகோள யதார்த்தத்தை குறிப்பிடும் வரைபடமல்ல. மாறாக இது கற்பனை மற்றும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த கலாச்சார கருத்துக்கள் இவையிரண்டும் இணைந்த வரைபடம் ஆகும். பிரான்சையும் துருக்கியையும் வெளிப்படுத்திக்காட்டாமல் இதில் பாரீஸ் மற்றும் கான்ஸ்டாண்டி நோபிள் (Constantinople) இரண்டு நகரங்கள் மட்டும் தான் காட்டப்பட்டுள்ளன. ஐரோப்பா சின்னஞ்சிறிய ஜேர்மனி மற்றும் ஆஸ்ரோ-ஹங்கேரி மற்றும் மாபெரும் ரஷ்யாவுக்கு இடையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. பிரித்தானிய மையதேசம் விரிந்த அயர்லாந்துடன் ஒருபோதும் அளவிடமுடியாத அளவு சுருக்கப்பட்டிருக்கிறது. ஐக்கியமான ஆஸ்திரேலியா மற்றும் Tierra del Fuego வைவிட கிழக்குத் தீவு பெரிதாக இருக்கிறது. புதிய Guinea பெருவை ஒத்ததாக இருக்கின்றது. இந்த வரைபடத்தில் இரண்டு அம்சங்களையிட்டு க்லேர் கவலைப்படுகிறார். ஒன்று வட அமெரிக்கா அலஸ்கா, லாப்றொடர் மற்றும் மெக்சிகோ இவைகளுக்கிடையில் பிரிக்கப்பட்டிருக்கிறது (இருந்தபோதும், இரண்டு வித்திசமான பிராந்தியங்களாக முன்னர் இருந்து ஒன்றாக இணைந்த கனடாவை இவர் பிழையாக இனங்காணுகிறார்). ஐக்கிய அமெரிக்கா இதில் அறவேயில்லை. மற்ற பக்கத்தில் மாபெரும் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் பக்கத்தில் இரண்டு நாடுகள் மட்டுமே தொடர்புபட்டிருந்தன. ஒன்று மிகப் பரந்தளவில் சுருக்கப்பட்டிருந்த இந்தியா, மற்றது மிகப் பரந்தளவில் பெருப்பிக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான். க்லேர், இவை ஒரு தற்செயலான நிகழ்வல்ல என விவாதிக்கிறார். ''மிகையதார்த்தவாத கலைத்துவ போக்காளர்களின் கருத்தியல் ஒரு அமெரிக்காவின் மரணத்திற்கான விருப்பத்தை ஒருபோதும் இல்லாமல் செய்துவிடவில்லை. பொருள்முதல்வாத மற்றும் ஆக்கபூர்வமற்ற அதனது பார்வையால் கிழக்கினுடைய ஒரு வெற்றிக்கான ஆன்மாவின் மதிப்புடைய களஞ்சியமாக அது இருந்துவந்தது... ஆகையால் தான், பிரெஞ்சு புத்திஜீவிகளால் செப்டம்பர் 11 இல் நடந்ததை முன்னரே ஒரு நீண்ட பாதையில் பயணித்து முன்கூட்டியே பார்க்கக்கூடியதாக இருந்திருக்கிறது.'' 1925 இல் வெளிவந்த மிகையதார்த்தவாத கலைத்துவ போக்காளர்களின் புரட்சி என்ற படைப்பில் லூயி அறாகோனை (Louis Aragon) மேற்கோள் காட்டுவதன் ஊடாக இவர் இந்த கருத்தை நியாயப்படுத்துகிறார், ''ஆகையால் அன்பானவர்களே, நீங்கள் வைத்திருக்கும் இந்த நாகரீகத்தை நாம் அழிக்கப்போகிறோம், மேற்குலகமே உங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பாவின் தோற்கடிப்பாளர்கள் நாங்கள்தான்... இதோ இந்த மண் எப்படி காய்ந்து கிடக்கிறது பார், தீமூட்டுவதற்கு எப்படி பதமானதாக இருக்கிறது பார்'' அறாகோனின் இந்தக் கனவு நிறைவேற்றப்பட்டுவிட்டது, மிகையதார்த்தவாத கலைத்துவ போக்காளர்களுக்கு செப்டம்பர் 11 அவசியமானதாக இருந்திருக்கிறது என க்லேர் கூறுகிறார். மிகையதார்த்தவாத கலைத்துவ போக்காளர்கள் குறிப்பாக மிக ஆரம்பத்தில் அராஜக அழிப்புவாத நிலையில் இருந்ததுடன் இப்படியான பைத்தியக்கார விடயங்களை கூறியிருக்கிறார்கள் தான். 1920 களின் பிற்பகுதியில் இவர்களில் சிறந்தவர்கள் மார்க்சிசத்தை நோக்கி திரும்பியிருந்தார்கள், இறுதியில் இவர்களில் மிக முன்னேறிய பகுதியினர் ட்ரொட்ஸ்கியையும், நான்காம் அகிலத்தையும் நோக்கித் திரும்பினர். ஆனால் ஏகாதிபத்தியத்தாலும் அதன் அடிவருடிகளாலும் ஆப்கான் மக்கள் மீது மற்றும் அந்தப் பிராந்தியத்தின் மீதும் திணிக்கப்பட்ட பலாத்காரம், வறுமை, ஒடுக்குமுறை மற்றும் பயங்கரவாதத்திற்கான ஆதரவின் மூலத்திற்கு இறுதி ஆய்வுகளில் மிகையதார்த்தவாத கலைத்துவ போக்காளர்கள் எவரும் எந்த நிலையிலும் பொறுப்பானவர்களல்ல. வாஷிங்டன், லண்டன், பாரிஸ், பேர்லின் மற்றும் எங்கும் உண்மையான குற்றவாளிகள் அவரது சுயதிருப்தி கொண்ட முகத்திற்கு முன்னால் நிற்கும்போது, க்லேர் கற்பனைவாத அவமதிப்பாளர்களை வேட்டையாட முனைகிறார். வாஷிங்கடன் மற்றும் நியூயோர்க்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மிகையதார்த்தவாத கலைத்துவ போக்காளர்கள் தான் கருத்தியல் ரீதியாக பொறுப்பானவர்கள் என க்லேர் பழிசுமத்த முனைகிறார். அப்படியானால், மிகையதார்த்தவாத கலைத்துவ போக்கு தன்னால் முடிந்த எதைச் செய்தது, அதற்கு என்ன தேவையாக இருந்தது? புரதான சமூகத்தின் புகழ்பாடலும் மற்றும் கீழையுலக மரபின் ஒரு இழையோடலும் மிகையதார்த்தவாத கலைத்துவப் போக்காளர்களின் படைப்பெங்கும் இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை நாம் அந்த வரைபடத்திலே அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் எப்படித்தான் இருந்தபோதும், மிகையதார்த்தவாத கலைத்துவ போக்காளர் இயக்கம் அதனது ஆரம்ப காலங்களில் பிரத்தியேக விடயமான, ஏகாதிபத்திய உலகத்திற்கு ஒரு முடிவு கட்டுவதன் அவசியத்தை நோக்கி தன்னை முற்றுமுழுதாக திருப்பியிருந்தது. பிரான்ஸ் மொறோக்கின் மீது ஒரு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை செய்ததை எதிர்த்து 1925 இல் மிகையதார்த்தவாத கலைத்துவ போக்காளர்கள் வெளியிட்ட பிரகடனத்தில் இருந்து: "தேசியப் பற்றைவிட இன்னும் அதிகமாக -இப்படிப்பட்ட உணர்ச்சிப் பிதற்றல்கள் முற்றாக ஒரு பொதுவானதாக இருப்பதுடன் இதைவிட அதிகமாக வெறுமையும் குறுகிய உயிர்வாழ்வும் தான் அதற்கு இருக்கிறது- முற்றாக ஒரு நாட்டினைச் சார்ந்து இருக்கும் கருத்தால் நாம் அருவருப்படைகிறோம். இது நாம் சார்ந்திருக்கும் கருத்துருக்களுக்கு மிக அநாகரிகமானதும் அற்பமான அளவில் தத்துவத் தொடர்புடையதுமாகும். எங்கெல்லாம் மேற்கத்தைய நாகரீகம் ஆளுமை செலுத்துகிறதோ அங்கெல்லாம் பணத்தை உற்பத்தி செய்யும் உறவுகளைத்தவிர- ரொக்கப் பணமாக செலுத்தக்கூடிய அனைத்து மனித தொடர்புகளும் அழிந்துபோகும்.'' டாடாவுடன் முட்டுச் சந்துக்கு வந்திருந்த நிலையிலிருந்து வெளிவர மிகையதார்த்தவாத கலைத்துவ போக்காளர்கள் முயற்சித்தார்கள். முதலாவது உலக மகாயுத்தத்தினது நேரடி வெளிப்படாக தோன்றிய டாடா, பிரான்சின் இலக்கிய துறையினரால் பிரச்சாரப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த முடமான தேசியவாதத்தை எதிர்ப்பதற்கே அவரது பிரதான சக்திகள் அனைத்தையும் அர்ப்பணித்திருந்தார். இந்தக் காரணத்தினாலே ஜேர்மனது முன்னணி இலக்கிய போக்கிலிருந்து பாதிக்கப்பட்டிராத நபர்களுக்கு பாரீஸ் இப்படியான ஒரு காந்த சக்தி வாய்ந்த ஒன்றாக உருவானதுடன், ஜேர்மனியின் சார்புரீதியான அளவிற்கு ஒரு காரணமாக வரைபடத்தில் மறைமுகமாகக் கூட இருந்தது. (ஆப்கானிஸ்தான் போன்ற சில நாடுகள் ஏகாதிபத்திய வரலாற்றில் அவைகளது பாத்திரத்தால் முக்கியப்படுத்தப்பட்டிருந்தன என்பது அந்த வரைபடத்தில் இருந்து தெளிவாகிறது) தேசியவாதத்தையும் முதலாளித்துவத்தின் கருத்தியலையும் சாதாரணமாக எதிர்ப்பதுமட்டும் போதாது என்பது எப்படியிருந்தபோதும் மிகவிரைவில் தெளிவாக வந்தது. இருந்துவரும் அமைப்பை பதிலீடு செய்வதும், அதை தூக்கியெறியும் ஏதோவொன்றிற்காக போராடுவதும் ஆதரவளிப்பதும் அதற்கு அவசியமாக இருந்தது. ஆகையால்தான் முன்னணி மிகையதார்த்தவாத கலைத்துவ போக்காளர்கள் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டார்கள். அதனால் தான் முதல் சோசலிசப் புரட்சியின் தாயகமான ரஷ்யா அவர்களது கற்பனையான வரைபடத்தில் மத்திய இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டது. (பயங்கரவாதத்திற்கு மிகையதார்த்த வாதத்தின் ஆதரவு என்று கூறப்படுவதற்கு எதிராக சுட்டிக்காட்டும் க்லேர் இதை விளக்கத் தவறிவிட்டார்) ஆளும் வர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்ட சுயதிருப்தி மனப்பான்மையை ஆட்டங்காண வைப்பதற்கு மிகையதார்த்தவாதம் அதிர்ச்சி பிரகடனங்கள் மேலான டாடாவின் விருப்பத்திற்கு அடிபணிந்தது என்ற உண்மையை மறுப்பதற்கில்லை; இது சிலவேளைகளில் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் நிலைப்பாடுகளுக்கும் அவர்களை இட்டுச்சென்றது. எப்படியிருந்தபோதும், தனது விடயங்களின் சிந்தனை மீது ஆளும் வர்க்கம் கொண்டிருக்கும் மரணப்பிடியை உடைக்க மிகையதார்த்தவாதம் தனது பலத்தின் அதிர்ச்சியை பாவிக்க முயற்சித்தது. ''மேற்குக்கு மேலாதிக்கத்தன்மையை அளித்த அனைத்தையும் விரைந்து அழித்தல்தான் அவர்களுக்கு தேவையாக இருந்தது.'' என க்லேர் குறிப்பிடும்போது அவரில் பிழையேதும் இல்லை. முதலாளித்துவத்தை அரசியல் ரீதியாக தூக்கியெறியவேண்டும் என்ற அனைத்து முயற்சியையும் க்லேர் பயங்கரவாதத்துடன் சமப்படுத்துகிறார். (பரந்த உழைக்கும் மக்களை குழப்பவும், சிதறடிக்கவும் பயங்கரவாதத்தால் மட்டுமே முடியும் என்பதை இப்படியான ஒரு ஒருமைப்படுத்தல் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.) மொத்தத்தில், அவர் மேலும் எழுதுகிறார், ''இப்படியான கொலைகளுக்கான (தாக்குதல்) அழைப்புக்கள் நவீன-படைப்பியக்கங்களுக்கு (avant-gardes) பொதுவான விடயமாக இருந்தன.'' அவர் தனது மிக இழிவான திரித்தல்களை இந்தப் புள்ளியில் தான் கூறுகிறார். அவரது வாதத்திற்கு ஆதரவாக இத்தாலிய எதிர்காலவாத (Futurists) கலையியக்கப் போக்காளர்களின் உதாரணத்தையும், முசோலினிக்கான அவர்களது ஆதரவையும் மேற்கோள் காட்டுகிறார். ஆளுமைமிக்க சான்றாக அவர் பயன்படுத்த முயல்வது லியோன் ட்ரொட்ஸ்கியை, அவர் ''....(அவர் தான்) ...எதிர்காலவாத (futurism) கலையியக்கம் பாசிசத்திற்கான பாதையை திறந்து விட்டிருக்கிறது என்பதை முதல்முதலாக அறிந்துகொண்ட சிறப்பான நிபுணர்.'' உண்மையில் இவரது (க்லேர்) விவாதங்களின் கனத்தையிட்டு பல சந்தேகங்கள் இருக்கின்றன, Osip Brik, ரஷ்ய futurist-communists மற்றும் கவிஞரான விலாதிமீர் மயாகோவ்ஸ்கி போன்றவர்கள் ''Cheka மற்றும் GPU [இரகசிய பொலீஸ்] மூலம் செய்யப்பட்ட பாரிய படுகொலைக்கான மனநிலையை தயார் செய்தவர்கள்'' என பழி தூற்றுகிறார். உண்மையிலே, இதுமிக அதிகமானது. முசோலினியின் ஆதரவாளர்களாக வந்த பல இத்தாலிய பியூச்சரிஸ்ட்டின் பாத்திரத்தையும், இடது நோக்கி நகர்ந்த ரஷ்ய பியூச்சரிஸ்ட்டின் பாத்திரத்தையும் க்லேர் இலகுவான முறையில் இணைத்து பார்க்கிறார். பியூச்சரிசம் ஒரு உறுதியற்ற வெளிப்பாடாக இருந்ததுடன், அதனது 'ஆதரவாளர்கள்' பலவழிகளில் வியாக்கியானம் செய்துகொண்டார்கள். சோவியத் பியூச்சரிஸ்ட் இத்தாலிய பாசிச ஆதரவாளர்களுடன் முறித்துக்கொண்டதுடன், அவர்களை கண்டனம் செய்தனர். சோவியத்தின் பியூச்சரிஸ்ட் குழுவை அதனது ''இடது'' வரம்பு மீறல்களுக்காக விமர்சித்த ட்ரொட்ஸ்கி (கலையும் புரட்சியும்), அதனது ''கலை மற்றும் குறிப்பாக கவிதையில் நிகழ்த்திய சாதனை'' களுக்கும் அவர் மதிப்பளித்தார். சோவியத்தின் (avant-garde) நவீன-படைப்பியக்கம் அவர்களது புரட்சிகர உற்சாகத்தினால் ஸ்ராலினிசத்துக்கு பாதையை திறந்துவிட்டது என்ற வாதம் ரஷ்யாவின் கம்யூனிச எதிர்ப்பு கலை விமர்சகர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்களைக் கொண்ட முழுப் பாடசாலையாலும் முன்னெடுக்கப்பட்ட ஒரு பழியாக இருக்கின்றது. போல்ஷிவிசத்திற்கும் உலக புரட்சியின் வெற்றிக்கும் ஆதரவளிக்கும் எந்த கலைஞனும் அவர்களுக்கு மன்னிக்க முடியாத ஒரு துரோகியாக இருந்தான். ''உலகப் புரட்சிக்கான முன்னேற்றமும் கொதித்துக் குமுறும் மக்களின் பரந்த அடிப்படையும்'' இருந்தபோது மற்றும் ''கலைத்துவ பாடசாலைகளின் போராட்டம், தேடல்கள், பரிசோதனைகளையிட்டு அந்த அரசு பயங்கொள்ளாதிருந்த" பொழுது (காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி, இல் ட்ரொட்ஸ்கி) அக்டோபர் புரட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட அரசின் ஆரம்ப காலங்களில் மொழிக்கும், கலையின் உள்ளடக்கத்திற்கும் மற்றும் அதன் பின்னர், ஸ்ராலினிச அதிகாரத்துவம் வளர்ச்சியடைந்து இறுதியாக வெற்றிபெற்ற காலத்திற்கும் இடையிலான வித்தியாசங்களை அவர்கள் புறக்கணிக்க விரும்பினார்கள். இடதுசாரி கலைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள், மெளனமாக்கப்பட்டார்கள் அல்லது தற்கொலை செய்ய நிர்பந்திக்கப் பட்டார்கள். (கலைத்துவ துறையில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் நடவடிக்கையினது விவரத்திற்கு, அலெக்ஸ்சாண்டர் வொறன்ஸ்கியின், வாழ்க்கையை அறிதலாக கலை என்ற புத்தகத்தைப் பார்க்கவும்) இவை அனைத்தையும் பற்றி க்லேர் எதையுமே குறிப்பிடவில்லை. அவர் சோசலிசத்தை பாசிசத்துடன் இணைப்பதுடன், நேர்மையான கம்யூனிஸ்ட்டுகளை அதனது முன்நிபந்தனையாக ஒடுக்கி கொலை செய்த ஸ்ராலினிசத்துடன் கம்யூனிசத்தை சமப்படுத்த முனைகிறார். அவரைப் பொறுத்தவரை கம்யூனிசம் என்பது பயங்கரவாதத்திற்கு சமனாகும்: ''கவனத்தில் கொள்ளவேண்டிய வார்த்தைகள்... நவீன-படைப்பியக்கங்களின் வெறுப்புமிகுந்த வார்த்தைகள் தான் (avant-gardes) தனிநபர்களின் மரணத்திற்கு தயார் செய்தன.'' ''மிகையதார்த்தவாத கலைத்துவ போக்காளர்கள், கம்யூனிசத்துடன் வைத்திருந்த உறவானது, வலதுசாரி புத்திஜீவிகள் பாசிசத்துடன் வைத்திருந்த உறவைவிட நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக நீடித்திருந்தது. அந்திரே பிரெட்டன் [André Breton] ஸ்ராலினிசத்தில் இருந்து உடைத்ததற்கு முன்னர் 1935 இன் முடிவாக இருந்தது. அத்துடன், போல் எலுவார்ட் மற்றும் அறாகோன் [Paul Eluard and Aragon] பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது?'' ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர கம்யூனிசத்துடன் தொடர்பு கொள்வதற்காகத்தான் பிரெட்டன், ஸ்ராலினிசத்தில் இருந்து உடைத்துக்கொண்டார் என்ற உண்மையை க்லேர் இலகுவாக புறக்கணித்துவிடுகிறார். எலுவார்ட் மற்றும் அறாகோன் மொஸ்கோவின் சோசலிச யதார்த்தவாதத்தை ஏற்றுக்கொண்டதுடன், பிரெஞ்சு கம்யூனிசக் கட்சியின் ஸ்ராலினிச ஊழியர்களாய் வருவதற்காக மிகையதார்த்தவாதத்தில் இருந்து உடைத்துக்கொண்டார்கள். மிகையதார்த்தவாத கலைத்துவ போக்காளர்களின், இத்தாலிய பியூச்சரிஸ்ட்டின் படைப்புகள் வான்தொடும் கட்டிடங்கள், விமானங்களாலும் நிரப்பப்பட்டுள்ளது மற்றும் அவர்கள் முசோலினிக்கு ஆதரவளித்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டு காட்டிய, இத்தாலிய பியூச்சரிஸ்ட் போன்றில்லாது, 'நவீன'த்தை அணைத்துக் கொள்ளாததற்காக அவர் மிகையதார்த்தவாத கலைத்துவ போக்காளர்களை கண்டனம் செய்கிறார். க்லேரின் நம்பமுடியாத கருத்தின் படி, ''பயங்கரவாதிகள் செய்யவேண்டியதை முன்கூட்டியே சுட்டிக்காட்டிய!'' வான்தொடும் கட்டடமும், விமானமும் தான் ஒருவருக்கொருவர் எதிராக அழிவுகளை செய்வதில் முதன்மையானதாக இருக்கின்றதாக மிகையதார்த்தவாத கலைத்துவ போக்காளர்களின் கற்பனையில் மட்டுமே இருக்கிறது. எங்கே மிகையதார்த்தவாத கலைத்துவப் போக்காளர்கள் பிழையாக இருந்தனர் என்றால் Heidegger க்கு பதிலாக Freud ஐ புகழ்ந்ததில் தான் என அவர் எழுதுகிறார். இப்படியானதொரு பிற்போக்கு மற்றும் அர்த்தமற்ற புறக்கணிப்புகள் ஆக்கபூர்வமான விமர்சனமாக இல்லாமல் இருக்கலாம். க்லேர் கம்யூனிசத்திற்கு கடும் குரோதமான ஒரு கலை விமர்சகர் மட்டுமல்ல. மார்க்சிசத்திற்கு எதிரான ஒரு சக்தியாக பாசிசத்தை பேணிய Heidegger இக்கு அழைப்புவிடுவதன் மூலம் அவர் எந்தவொரு புதிய ஆதாரத்தையும் பற்றி பேசவில்லை. இது, அவரது கட்டுரைக்கான ஒரு பாதிப்பை இயல்பாக தன்னகத்தே கொண்டிருக்கும் மிகையதார்த்தவாதத்தின் சாத்தியப்பாடுகளின் மீதான அவரது பொய்மைப்படுத்தலாகும். ஜோன் க்லேர் இந்தத் துறையில் அறிவற்றவர் அல்ல. அவர் பிக்காசோ கலைக் கண்காட்சிக் கூடத்தின் இயக்குநர் ஆவார். இந்த அவரது இருப்பின் காரணமாக, மிகையதார்த்தவாதம் மற்றும் அன்றைய காலத்தின் அரசியல் இவை இரண்டினதும் ஒரு விரிவான அறிவை அவர் பெற்றுக் கொண்டிருக்கவேண்டும். (எலுவார்ட் [Eluard] ஆல் தேர்வு செய்யப்பட்ட பிக்காசோ மேற்கு ஐரோப்பாவிலே மிக வெளிப்படையான ஸ்ராலினிச கம்யூனிச கட்சிகளில் ஒன்றாக இருந்த பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியில் இறுதியாக இணைந்துகொண்டார்.) ஒரு புரட்சிகர கலையின் சிரத்தை மிகுந்த படிப்பானது ஆளும் வர்க்கத்திற்கு ஆபத்தை உண்டாக்கும் என்பதில் எவரையும் விட க்லேர் மிக நனவாக இருக்கிறார். அவர் தானே குறிப்பிட்டதுபோல், லண்டனைத் தொடர்ந்து பாரீசுக்கு வரவிருக்கும் மிகையதார்த்தவாத கலைத்துவ போக்காளர்களின் கலைப்படைப்புகளின் மிகப்பெரிய கண்காட்சியானது, இந்த இயக்கத்தினை பற்றி அறிந்து கொள்வதற்கும், முக்கியமான பாடங்களை உள்ளீர்த்துக் கொள்வதற்கும் கலைஞர்களுக்கு ஒரு சாதகத்தை வளங்கும் என்ற சூழ்நிலைப் பொருத்தத்தில்தான் இவரது தரம் குறைந்த இழிவான தாக்குதல் எழுகின்றது. எப்போதையும்விட ஒரு புரட்சிகர கலைக்கான அவசியம் இருக்கும் போதுதான், கலைத்துவ இயக்கத்தின் வரலாற்றை பொய்மைப்படுத்தவும், அப்படியான ஒரு தெளிவு பெறுதலைத் தவிர்க்கவும் முனைகின்ற க்லேரைப் போன்ற நபர்கள் அவர்களது படிப்பினைகளில் இருந்து தோன்றுகிறார்கள். பிரெஞ்சில் வெளிவந்த இதன் மூலக் கட்டுரையை இதில் பார்க்கலாம்:
Le
surréalisme et la démoralisation de l'Occident |