சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் கொழும்பில் "ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு" பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

10 டிசம்பர் 2023 அன்று கொழும்பில் நடைபெற்ற ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு கூட்டத்தில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஜோசஃப் கிஷோர் உரையாற்றுகிறார்.

டிசம்பர் 10 ஞாயிறன்று பிற்பகல், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) தேசிய செயலாளர் ஜோசஃப் கிஷோர், ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு நினைவாக கொழும்பில் உள்ள புதிய நகர மண்டபத்தில், “லியோன் ட்ரொட்ஸ்கியும் 21 ஆம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும்” என்ற தலைப்பில் நடந்த பகிரங்க கூட்டத்தில் உரையாற்றினார். அந்த கூட்டத்தில் அதிகளவானோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தை இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பு ஏற்பாடு செய்திருந்தோடு, டிசம்பர் 7 அன்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அதே கருப்பொருளில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, கொழும்பு கூட்டத்தில் கிஷோர் உரையாற்றினார்.

கொழும்பு மற்றும் இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் இருந்து வந்த குழுவினர் உட்பட பிற இடங்களில் இருந்தும் சோ.ச.க. உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உட்பட, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்கு சோ.ச.க. பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர தலைமை தாங்கினார். சிங்களத்தில் ஆற்றிய அவரது ஆரம்ப உரையை சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா தமிழில் மொழிபெயர்த்தார். ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட கிஷோரின் உரையை ஜயசேகரா சிங்களத்தில் மொழிபெயர்த்ததோடு அதை சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் ஶ்ரீஹரன் இணையவழி மூலம் பார்யைாளர்களில் தமிழ் பேசுவோருக்கு மொழிபெயர்ப்பு செய்தார்.

ஜெயசேகர, கிஷோரை அன்பாக வரவேற்று தனது உரையத் தொடங்கினார். நவம்பர் 28 அன்று தனது 73வது வயதில் திடீரென மரணமடைந்த அமெரிக்க சோ.ச.க. மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நீண்டகால உறுப்பினரான ஹெலன் ஹல்யார்டின் புரட்சிகர வாழ்க்கையின் மகத்தான முக்கியத்துவத்தைப் பற்றி அவர் விளக்கினார். உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்காக தனது வாழ்நாளில் 52 ஆண்டுகளை அர்ப்பணித்த ஹாலியார்டுக்கு, ஜெயசேகராவின் வேண்டுகோளுக்கு இணங்க பார்வையாளர்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு கூட்டத்தில் தீபால் ஜயசேகர உரையாற்றிய போது

கிஷோர், இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முன் உறையாற்றுவதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றில், அத்தகைய நீண்ட மற்றும் அத்தியவசிய வகிபாகத்தை ஆற்றிய தோழர்களை சந்திப்பதும் ஒரு பெரிய கௌரவம் ஆகும்” என கூறினார். இலங்கை சோ.ச.க. தலைவர்கள் “பலதடவை ஆளும் வர்க்கத்தின் வன்முறை எதிர்ப்பை எதிர்கொண்டு, ட்ரொட்ஸ்கிசத்திற்கான கொள்கை ரீதியான போராட்டத்தை முன்னெடுத்தமைக்காக சர்வதேச சோசலிச இயக்கம் முழுவதும் மாண்போடு மதிக்கப்படுகிறார்கள்” என்று அவர் மேலும் கூறினார். இலங்கைப் பிரிவின் மறைந்த தலைவர்களான 36 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த கீர்த்தி பாலசூரிய மற்றும் 2022 ஜூலை 27 அன்று காலமான விஜே டயஸ் ஆகியோரை அவர் விஷேடமாக நினைவு கூர்ந்தார்.

தொழிலாளர்கள் மற்றம் இளைஞர்கள் தேசிய அடிப்படையில் இல்லாது தமது போராட்டங்களுக்கு சர்வதேச முன்னோக்கின் அடிப்படையாகக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கிய கிஷோர், “எந்தவொரு குறிப்பிட்ட நாட்டின் தேசிய தனித்தன்மையின் நோக்குநிலையில் இருந்து அபிவிருத்தி செய்வது சாத்தியமற்றது” என்ற அடிப்படை மார்க்சிச கோட்பாட்டை சுட்டிக்காட்டினார்.

தொடச்சியான குண்டுவீச்சு, படுகொலை, பட்டிணி மற்றும் மருத்துவ சேவை நிராகரிப்பு மற்றும் மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றுதல் உட்பட இஸ்ரேலின் வலது-சாரி நெதன்யாகு ஆட்சியால் காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக கட்டவிழ்த்துவிடப்படும் இன அழிப்புப் போரை கிஷோர் கோடிட்டுக் காட்டினார்.

அமெரிக்கா மற்றம் அதன் நேடோ கூட்டாளிகள் இஸ்ரேல் போருக்கு எவ்வாறு தீவிரமாக ஆதரவளி்த்துள்ளன என்பதை விவரித்த கிஷோர், முழு உலகத்திலும் உள்ள மக்கள் தொகையைப் பாதிக்கின்ற அல்லது பாதிக்கவுள்ள அமெரிக்க-நேட்டோ கூட்டினால் கட்டவிழ்த்து விடப்படும் உலகப் போரின் பாகமாக மட்டுமே, இந்த இன அழிப்பு நடவடிக்கைக்கான வெளிப்படையான ஆதரவை புரிந்துகொள்ள முடியும்” என அவர் கருத்துரைத்தார்.

“இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு உலக மேலாதிக்கத்திற்கான வாஷிங்டனின் முயற்சியுடன் பிணைந்துள்ளது. மிக நேரடியாக, பைடென் நிர்வாகம் காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை மத்தியதரைக் கடலுக்கு பாரிய இராணுவ தளபாடங்களை நிலைநிறுத்துவதற்கும் வெளிப்படையாக ஈரானைக் குறிவைப்பதற்குமான வாய்ப்பாகப் பயன்படுத்தியது. ஈரானுடனான மோதல் என்பது ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனான அமெரிக்க மோதலுடன் தொடர்புடையதாகவே காணப்படுகிறது,” என அவர் தெரிவித்தார்.

உலகப் பூகோள அரசியல் பதட்டங்களுக்குள் தெற்காசிய எவ்வாறு தள்ளப்படுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய கிஷோர், “விரிவடைந்து வரும் இந்த மோதலில் சிக்காத எந்தப் பகுதியும் உலகில் இல்லை. குறிப்பாக, தெற்காசியாவும், இலங்கை உட்பட முழு இந்தியப் பெருங்கடல் பகுதியும், அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் அதன் பிரதான உலகப் போட்டியாளராக கருதப்படும் சீனாவை சுற்றி வளைப்பதற்கான அமெரிக்க பிரச்சாரத்திற்குள் இழுக்கப்படுகிறது,” என விவரித்தார்.

அமெரிக்க சோ.ச.க, யின் தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் 10 டிசம்பர் அன்று கொழும்பில் நடைபெற்ற ட்ரொட்ஸ்கிசத்தின் நுாற்றாண்டு கூட்டத்தில் உரையாற்றுகின்றார்.

அமெரிக்க குடியரசுக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம், நெதர்லாந்தில் கீற் வில்டர்ஸ், ஆஜன்ரீனாவில் ஜவீர் மிலேய், இந்தியாவில் நரேந்திர மோடி மற்றும் இத்தாலியில் ஜோர்ஜியா மெலொனி ஆகியோரை சுட்டிக்காட்டிய பேச்சாளர், எவ்வாறு சர்வதேசரீதியாக அதி-வலது மற்றும் பாசிச நபர்கள் அதிகரித்து வருகின்றார்கள் என்பதை தெளிவுபடுத்தினார்.

எவ்வாறாயினும், ”அனைத்து சமூக சத்திகளிலும் மிக அடிப்படையான மற்றும் சத்திவாய்ந்த தொழிலாளர் வர்க்க எழுச்சியின்” முக்கியத்துவமானது “தற்போதய நிலைமையில் மிக குறிப்பிடத்தக்க காரணி” என கிஷோர் வலியுறுத்தினார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட உலகம் முழுவதிலும் வளர்ச்சியடையும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த இயக்கங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைக்கு எதிராக இலங்கையில் தொழிலாளர்களின் போராட்டங்களை பற்றி அவர் விரிவாகக் கூறினார்.

“எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சமூக நெருக்கடியின் ஆழம் மற்றும் அமெரிக்காவிற்குள் உள்ள சமூக கோபத்தின் அளவைப் பற்றிய நனவைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது. அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் முன்னேறி, ஒவ்வொரு நாட்டிலும் அதன் நலன்களை வலியுறுத்துகிறது, ஆனால் உள்நாட்டில் அது ஆளும் உயரடுக்கின் அனைத்து திட்டங்களையும், வரைபுகளையும் கவிழ்க்கக் கூடிய மற்றும் தலைகீழாக்குகின்ற ஒரு அமைதியற்ற தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்கிறது.”

கிஷோர், 1923 ஒக்டோபரில் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமைத்துவத்தின் கீழ் இடது எதிர்ப்பை ஸ்தாபித்ததில் இருந்து தொடங்கி சர்வதேச சோசலிசத்திற்கான முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்திற்காக ட்ரொட்ஸ்சிச இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட 100 ஆண்டுகாலப் போராட்டத்தை விவரித்தார். இதனைத் தொடர்ந்து 1938ல் நான்காம் அகிலம் ஸ்தாபிப்பட்டு நான்காம் அகிலத்தில் தோன்றிய பப்லோவாத கலைப்புவாதத்திற்கு எதிராகப் போராடி 1953 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு உருவாக்கம் இடம்பெற்றது.

“1930களின் பிற்பகுதியில் ட்ரொட்ஸ்கிசத்திற்கு திரும்பி 1935 இல் லங்கா சம சமாஜக் கட்சியின் (ல.ச.ச.க.) ஸ்தாபிதத்தில் இருந்து பின்னர் 1942ல் இந்தியாவில் உள்ள பல அமைப்புக்களுடன் ல.ச.ச.க. ஏற்படுத்திக்கொண்ட இணைப்பின் ஊடாக 1942இல் உருவாக்கப்பட்ட இந்தியா, இலங்கை மற்றும் பர்மாவுக்குமான ஒரே கட்சியாக இந்திய போல்ஷிவிக்-லெனினிசக் கட்சி அமைக்கப்பட்டது உட்பட இலங்கையில் ட்ரொட்ஸ்கிசத்தின் வளமான வரலாற்றைப்” பற்றி விவரமான கணக்கை கிஷோர் வழங்கினார்.

அனைத்து மொழிகள், மதங்கள் மற்றும் இனங்களின் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கபட்ட மக்களை ஒன்றிணைத்து அனைத்து-இந்தியப் புரட்சிகர போராட்டத்திற்கான முன்னோக்கின் அடிப்படையில் ஏகாதிபத்திய-விரோத இயக்கத்தில் ……. சக்திவாய்ந்த தலையீடு” மற்றும் முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் இந்து-மேலாதிக்க இந்தியா என பிரிட்டிஷ் இந்தியாவின் 1947 வகுப்புவாத பிரிவினைக்குக்கும் அதே போல், முன்னர் சிலோன் என அறியப்பட்ட 1948 பெயரளவிலான இலங்கையின் சுதந்திரத்திற்குமான அதன் எதிர்ப்பு ஆகியன இந்த வரலாறு உள்ளடங்கும்.

“அனைத்து மொழிகள், மதங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் அகில இந்திய புரட்சிகரப் போராட்டத்திற்கான முன்னோக்கின் அடிப்படையில், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் பி.எல்.பீ.ஐ. சக்திவாய்ந்த முறையில் தலையிட்டதுடன்” பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை இந்து மேலாதிக்க இந்தியாவாகவும், முஸ்லிம் பாகிஸ்தானாகாவும் பிரித்ததையும், 1948ல் இலங்கையின் பெயரளவிலான “சுதந்திரத்தை” எதிர்த்தமையும் இந்த வரலாற்றில் அடங்கும்.

“1948 ஆகஸ்ட்டில் ஆற்றிய ஒரு உரையில், BLPI தலைவர் கொல்வின் ஆர். டி சில்வா, “அரசு தேசத்துடனும், தேசம் இனத்துடனும் இணையாக இருக்க வேண்டும்” என்ற அனுமானத்தை “ஒரு காலாவதியான யோசனை மற்றும் தகர்த்தெறியப்பட்ட தத்துவம்” என்று தாக்கினார்,” என்று பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார். “துல்லியமாக தேசம் இனத்துடன் இணையாக இருக்க வேண்டும், இனமானது அரசின் அமைப்பில் ஆளும் காரணியாக இருக்க வேண்டியது பாசிசத்தின் கீழேயே ஆகும்…” என்று டி சில்வா சுட்டிக்காட்டியதையும் கிஷோர் மேற்கோள் காட்டினார்.

”அமெரிக்க ட்ரொட்ஸ்கிசவாதியான ஜேம்ஸ் பி. கனனால் வெளியிடப்பட்ட பகிரங்க கடிதம் வெளியிடப்பட்டு எழுபது ஆண்டுகள்” மற்றும் 1950களின் தொடக்கத்தில் நான்காம் அகிலத்தில் தோன்றிய பப்லோவாத திருத்தல்வாதப் போக்கிற்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை பாதுகாக்கவும் தொடரவும் அந்த ஆவணத்தில் விரிவாக்கப்பட்ட ட்ரொட்ஸ்கிசத்தின் மிக அடிப்படைக் கோட்பாடுகளின் மீது 1953 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு அமைக்கப்பட்டமை பற்றியும், கிஷோர் பின்பு குறிப்பிட்டார்.

1964 இல் முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ கூட்டணிக்குள் நுழைந்துகொண்டு செய்த மாபெரும் காட்டிக்கொடுப்பில் உச்சகட்டத்தை அடைந்த ல.ச.ச.க.யின் தேசியவாத பாதையிலான அரசியல் சீரழிவை வெளிப்படையாக எவ்வாறு பப்லோவாத திருத்தல்வாதம் ஊக்குவித்தது என கிஷோர் விளக்கினார்.

”சோசலிச அனைத்துலகவாத வேலைத்திட்டத்தை பப்லோவாத ல.ச.ச.க. காட்டிக்கொடுத்தமையின் “உண்மையான படிப்பினைகளை கிரகித்துக்கொள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் அடிப்படையில்” 1968 இல் சோ.ச.க.யின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டதை கிஷோர் சுட்டிக்காட்டினார்.

உலகம் முழுவதிலும் போராட்டங்களுக்குள் நுழையும் தொழிலாளர்கள் மற்றும இளைஞர்கள் ”புரட்சிகர முடிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளதாக” கூறிய கிஷோர் பின்வருமாறு விளக்கினார்: “ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பணி, குற்றவியல் தன்னலக்குழுக்கள் மற்றும் போர்வெறியர்கள், இனப்படுகொலையை தூண்டுபவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றவும் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையை உலக அளவில் சமூக சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு மறுசீரமைக்கவும் போராடும் ஒரு உண்மையான சோசலிச இயக்கத்தை தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் கட்டியெழுப்புவதாகும். இந்தப் பணியை நிறைவேற்றுவதில், தொழிலாளர்களும் இளைஞர்களும் வரலாற்றை ஓரங்கட்ட முடியாது.”

“நிகழ்காலமானது கடந்த காலத்தால் உருவாக்கப்பட்டதும் வடிவமைக்கப்பட்டுள்ளதுமாகும், மேலும் இந்த கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், நிகழ்காலத்தின் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும் எதிர்காலத்தில் ஒரு சோசலிச சமூகத்தை உருவாக்குவதற்குமான சவால்களை ஏற்றுக்கொண்டவர்களாக நம்மை நிரூபிப்போம்,” என்று கிஷோர் முடித்தார்.

“நிகழ்காலம் கடந்த காலத்தால் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, அத்தோடு கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் நிகழ்கால பிரச்சசினைகளை எதிர்நோக்கவதற்கும் எதிர்காலத்தில் ஒரு சோசலிச சமுதாயத்தை கட்டியெழப்புவதற்கும் சவாலை நாம் நிரூபிப்போம்.” என கிஷோர் முடித்தார்.

கேள்வி-பதில் அமர்வில், சமானியத் தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை அமைக்க அனைத்துலகக் குழுவும்-சோ.ச.க.யும் விடுக்கும் அழைப்புக்கும், புரட்சிகர கட்சியை கட்டியெழுப்புவதற்கான அதன் போராட்டத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், அனைத்துலகக் குழு அல்லது சோ.ச.க., நடவடிக்கை குழுக்களில் இணையும் போது சோசலிசம் மற்றும் புரட்சிகர அரசியலை ஏற்றுக்கொள்ளுமாறு தொழிலாளர்கள் மீது எந்தவொரு கோரிக்கைகளையும் திணிப்பதில்லை, என கிஷோர் கூறினார். “மேலும், நாம் அரசியல் கேள்விகளின் முக்கியத்துவத்தை மறைப்பதோ அல்லது குறைத்து மதிப்பிடுவதோ இல்லை. தமது உரிமைகளுக்கான தொழிலாளர்களின் போராட்டம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்புகளுக்கு எதிரான போராட்டம் என நாம் தெளிவுபடுத்துகிறோம். இந்தப் போராட்டத்தின் அபிவிருத்தி இறுதியாக ஆளும் வர்க்கத்திற்கும் முதலாளித்துவ முறைமைக்கும் எதிரான போராட்டம் ஆகும். அதே போல, அடிப்படை உரிமைகளுக்கான இந்தப் போராட்டமானது ஏனைய பிரச்சினைகளில் இருந்து பிரிக்கமுடியாது. ஆகவே, இது ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.”

நடவடிக்கை குழுக்களுக்கு உள்ளேயான போராட்டங்களை பற்றி குறிப்பிட்ட கிஷோர், அரசியல் வேலைத்திட்டம் மற்றும் அரசியல் பிரச்சினைகள் மீதான தெளிவுபடுத்தலின் அடிப்படையில் பயற்றுவிக்கப்பட்ட மற்றும் கல்வியூட்டப்பட்ட தொழிலாளர்களாலேயே, தொழிலாளர் நடவடிக்கை குழுவில் உள்ள தொழிலாளர்களுக்கு அவர்களது உரிமைகளுக்கான போராட்டத்தில் அவசியமான அரசியல் வழிகாட்டுதலை வழங்கமுடியும். “இந்தச் சவாலான பணிகளில் கட்சியானது அரசியல் பிரச்சினைகளை கவனத்தில் எடுக்கின்றது. அமைப்பு ரீதியிலான பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் போது அது ”அமைப்பு ரீதியிலான சந்தர்ப்பவாதம்” என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. வரலாற்று பிரச்சினைகளை தெளிவுபடுத்துவதிலேயே நாம் பிரதானமாக கவனம் செலுத்துவதோடு அது ட்ரொட்ஸ்கிச வரலாற்றின் புரிதலின் அடிப்படையில் மட்டுமே செய்யப்படமுடியும்,” என அவர் தொடர்ந்தார்.

கிஷோர் மேலும் கூறியதாவது: “தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலைமைத்துவத்தை இந்த படிப்பினைகளின் மீதே கட்டியெழுப்ப முடிவதோடு, அதன் மூலம் மட்டுமே சோசலிசத்தை யதார்த்தமாக்க முடியும். புரட்சிகரப் போராட்டங்கள் உலகம் முழுவதிலும் அபிவிருத்தியடைவதோடு தொழிலாள வர்க்கப் போராட்டங்களும் அபிவிருத்தியடைகின்றன. தொழிலாள வர்க்கத்தின் தத்துவார்த்த மற்றும் அரசியல் அறிவுநிலை அவசியமான அளவிற்கு உயர்த்தப்பட வேண்டும், என்ற புரிதலே எமது இயக்கத்தின் அடித்தளம் ஆகும். இந்த வழிமுறை ஊடாக மட்டுமே நாம் வெகுஜனங்களை அணுகுகின்றோம்.”

காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி நூலின் முதலாவது தமிழ் பிரதியினை தீபால் ஜயசேகர கிஷோரிடம் கையளிக்கின்றார்

இந்தக் கூட்டத்தின் இடையில், 1936ல் எழுதப்பட்ட ட்ரொட்ஸ்கியின் மகத்தான படைப்பான காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி நூலின் தமிழாக்கம் வெளியிடப்பட்டது. இலங்கை சோ.ச.க.யின் வெளியீட்டகமான தொழிலாளர் பாதை வெளியீட்டாளர்கள் நூலை வெளியிட்டிருப்பதை ஜயசேகர அறிவித்தார். அவர், இந்த நூலின் மொழிபெயர்ப்பு, திருத்தம் மற்றும் கணனி பக்க-அமைப்பினை செய்தமைக்காக அனைத்துலகக் குழுவின் பிரான்ஸ் பிரிவிற்கு விஷேட நன்றியைத் தெரிவித்தார். அவர் இந்தப் நூலின் பிரதியை கிஷோருக்கு கையளித்தார்.

சோ.ச.க.யின் அபவிருத்தி நிதிக்கு பங்களிக்குமாறு கூட்டத்தின் தலைவர் விடுத்த வேண்டுகோளுக்கு ரூபா 16 ஆயிரத்துக்கும் மேலாக பார்வையாளர்கள் நன்கொடை வழங்கினர். சர்வதேசப் பாடலை பாடி இந்தக் கூட்டம் நிறைவுபெற்றது.

இலங்கையில் நடைபெற்று வருகின்ற ட்ரொட்ஸ்கிசத்தின் நுாற்றாண்டு கூட்டங்களுக்கான பிரச்சாரத்திற்கு உற்சாகமான பதில் கிடைக்கின்றது

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) அதன் உறுப்பினர்கள் மீது ஆளும் கட்சி குண்டர்கள் நடத்திய வன்முறைத் தாக்குதலைக் கண்டிக்கிறது

Loading