அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் இலங்கையில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற ”ட்ரொட்ஸ்கிசத்தின் நுாற்றாண்டு” பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த வியாழன் பிற்பகல், இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பலர் பங்குபற்றிய பொதுக் கூட்டத்தில், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் உரையாற்றினார்.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஜோ கிஷோர் இலங்கை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். டிசம்பர் 7, 2023.

இந்த பல்கலைக் கழகத்தின் அரசியல் விஞ்ஞான பீடத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக தமிழ் பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் குழுவொன்று தீவின் பிரதான தோட்டப் பிரதேசமான ஹட்டன் பகுதியில் இருந்து வருகை தந்தது. ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்ட கிஷோரின் உரை, மேடையில் இருந்து சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டதுடன், தமிழ் மொழி உரைவடிவம் காணொளித் திரையில் காட்சிப்படுத்தப்பட்டது.

“லியோன் ட்ரொட்ஸ்கியும் 21 ஆம் நுாற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும்” எனத் தலைப்பிடப்பட்ட பொதுக் கூட்டங்களில் உரையாற்றுவதற்காகவே கிஷோர் இலங்கைக்கு வந்திருந்தார். சோ.ச.க. மற்றும் சமூக சமத்துவத்திறகான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினரின் (IYSSE) ஏற்பாட்டில் கிஷோர், டிசம்பர் 10ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு கொழும்பில் உள்ள புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்திலும் இதே தொனிப்பொருளில் உரையாற்றியிருந்தார்.

கடந்த வியாழன் அன்று, தற்போதைய சர்வதேச நிலைமை குறித்து கருத்த தெரிவித்து தனது உரையை ஆரம்பித்த கிஷோர், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தமது போராட்டங்களை ஒரு சர்வதேச முன்னோக்கினை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

“எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிலும், அந்த நாட்டின் தேசிய தனித்தன்மையின் அடிப்படையில் ஒரு நோக்கு நிலையை உருவாக்குவது சாத்தியமற்றது” என்று அவர் கூட்டத்தில் தெரிவித்தார். “ஒரு தேசிய நோக்குநிலை சந்தர்ப்பவாத மற்றும் திவாலான முடிவுகளுக்கு வழிவகுக்கும், ஏனெனில் நாம் ஒரு உலகளாவிய முதலாளித்துவ அமைப்பின் கட்டமைப்பிற்குள் வாழ்கிறோம், மற்றும் போராடுகிறோம், மேலும் ஒவ்வொரு கட்டத்திலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உலகளாவிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்” என்று விளங்கப்படுத்தினார்.

அமெரிக்க மற்றும் அதன் நேட்டோ கூட்டணிகளின் தீவிர ஆதரவுடன் இஸ்ரேலின் வலது-சாரி நெதன்யாகு ஆட்சியால் காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன அழிப்புத் தாக்குதல்களை கிஷோர் விளங்கப்படுத்தினார்.

உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் ஆட்சியின் சர்வதிகார வடிவங்களை நோக்கித் தீவிரமாக அதிகரித்தவகையில் திரும்புவது பற்றியும் மற்றும் முற்றிலும் அழுகிய முதலாளித்துவ ஜனநாயகத்தை பற்றியும் விரிவாக கூறினார்.

அனைத்து சமூக சக்திகளின் மிகவும் அடிப்படையான மற்றும் சக்திவாய்ந்த தொழிலாள வர்க்கத்தின் மீள் எழுச்சியே தற்போதைய சூழ்நிலையில் மிக முக்கியமான காரணி என்று கூறிய அவர், சர்வதேச அளவில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் வளர்ச்சியடைந்து வருவதை விளக்கினார்.

அனைத்து இடங்களிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உலக அளவில் புரட்சிகரத் தீர்வுகளுக்கான அவசியத்தை எழுப்பும் சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர் என்று கிஷோர் கூறினார். ”இது அடிப்படையான அரசியல் மற்றும் வரலாற்றுக் கேள்விகளை அவசியமான முறையில் எழுப்புகின்றது. சோசலிசம் என்றால் என்ன? 20 ஆம் நுாற்றாண்டில் என்ன நடந்தது? அங்கே ஸ்ராலினிஸத்திற்கு ஒரு மாற்றீடு இருந்ததா?”

1923 அக்டோபரில் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் இடது எதிர்ப்பு இயக்கத்தின் உருவாக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 1938 ல் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகம், மற்றும் நான்காம் அகிலத்திற்குள் தோன்றிய கலைப்புவாத பப்லோவாதப் போக்கிற்கு எதிரான போராட்டம், 1953 ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஸ்தாகபம் என சர்வதேச சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத் திட்டத்திற்காக ட்ரொட்ஸ்கிச இயக்கம் நடத்திய 100 ஆண்டுகால போராட்டத்தை கிஷோர் விளங்கப் படுத்தினார்.

உலக சோசலிச வலைத் தளம் அடுத்த வாரம் பேராதனை பல்கலைக்கழக கூட்டம் பற்றிய விரிவான அறிக்கையை வெளியிடும்.

இலங்கை பேராதனை பல்கலைக்கழக கூட்டத்தின் ஒரு பகுதி, December 7, 2023.

சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.ஈ குழுவினர், காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் பல்கலைக்கழகம் மற்றும் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம், பல்வேறு வேலையிடங்கள் உட்பட இந்தக் கூட்டங்களுக்காக பரவலாகப் பிரச்சாரம் செய்தனர். இந்தக் குழுவினர், ”சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய செயலாளர் ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு மற்றும் இடது எதிர்ப்பின் ஸ்தாபகம் பற்றி பேசுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்” என்ற தலைப்பிலான உலக சோசலிச வலைத்தளத்தி்ன் கட்டுரைகளின் சிங்கள-தமிழ் பிரதிகளை விநியோகித்தனர்.

லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் ஸ்ராலின் பற்றியும், 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது, தனி நாட்டில் சோசலிசம் என்ற ஸ்ராலினின் கோட்பாட்டின் விளைவு என்றும் தான் அறிந்திருந்ததென கொழும்பு பல்கலைக் கழக அரசியல் விஞ்ஞான பீட மாணவர் ஒருவர் கூறினார். எவ்வாறாயினும், ட்ரொட்ஸ்கிச இயக்கம் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான அதன் போராட்டம் பற்றி அதிகமாகத் தெரியாது என அவர் ஏற்றுக்கொண்டார்.

ட்ரொட்ஸ்கி போன்ற முக்கியமான மனிதர் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம் ”அவர் அறியப்பட அனுமதிக்கப்படவில்லை என்பதால் ஆகும். பல்கலைக்கழகங்களில் கூட இந்த விடயங்கள் தொடர்பாக எங்களுக்கு கற்பிக்கப்படாமையால் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு பற்றி எங்களுக்குத் தெரியாது” என அவர் தெரிவித்தார்.

சுடிலா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளை பயின்று வரும் மாணவர், ”சோசலிசம் அவசியம், ஆனால் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துபவர்கள் அதை அனுமதிப்பதில்லை” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் சர்வதேசப் போர் மீது கருத்து தெரிவித்த அவர், ”அமெரிக்கா (போர்களைத் துாண்டுவதற்காக) ஆயுதங்களை விற்பனை செய்கின்றது. அமெரிக்கப் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக (பேரழிவு ஆயுதங்கள்) போலியான கூற்றுக்களின் அடிப்படையில் ஈராக்கை அழித்தது... ”

அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் உலக நெருக்கடியின் ஆழமான நெருக்கடிக்கான அடிப்படையான காரணங்களை பிரச்சாரகார்கள் தெளிவுபடுத்திய பிறகு சுடிலா இவ்வாறு கூறினார். ”முதலாளித்துவத்தின் கீழ் எந்த தீர்வும் இல்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. முதலாளித்துவத்தின் கீழ் பொருளாதாரத்தை காப்பாற்ற முடியாது“

காசா இனப்படுகொலை பற்றி குறிப்பிடுகையில், அவர் மேலும் கூறியதாவது “குழந்தைகள் உட்பட பல உயிர்கள் பறிக்கப்படுகின்றன, சமீபத்தில் ஒரு பல்கலைக்கழகம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இது பிரதானமாக அமெரிக்காவால் செயல்படுத்தப்படுகின்ற ஒரு விளையாட்டுத் திட்டம் ஆகும்.”

”இவை அனைத்தையும் நிறுத்துவதறகு நீங்கள் தெளிவுபடுத்தியது போல சோசலிசம் கட்டியெழுப்பபட வேண்டும், ஆனால் ரஷ்யப் புரட்சி போன்ற விடயங்கள் தொடர்பாக பாடசாலைகளில் எங்களுக்கு கற்பிக்கப்படவில்லை. நாம் தவறான பாதையில் இழுக்கப்படுகின்றோம் என்பது புரிகி்ன்றது. ஆனால் ரஷ்யத் தொழிலாளர் வர்க்கம் ஆட்சியைப் கைப்பற்றியதை நான் கேள்விப்பட்டிருக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகரர்கள் பிளோமந்தால் துறைமுக விடுதி குடியிருப்பில் உள்ள கொழும்புத் துறைமுகத் தொழிலாளர்களுடன் பேசினர். கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அடக்குமுறை நிலைமை காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பெண் தொழிலாளி, சோவியத் ஒன்றியம் கலைக்கபட்டமை குறித்து தான் ஆச்சரியப்பட்டதாகக் கூறினார்.

”அந்த நேரத்தில் சோசலிசம் அங்கே இருக்கின்றது என நான் நினைத்தேன். ஆனால், பின்னர் அது உடைந்துள்ளது. இவ்வளவு பெரிய பிராந்தியத்திற்கு இப்படி நடக்குமா என்று ஆச்சரியப்பட்டேன். எனது தந்தை சோவியத் சஞ்சிகைகளை வீட்டிற்கு எடுத்து வருவதுண்டு. நான் அவற்றைப படித்தேன், அதனால் ஏன் இந்தக் கலைப்பு நடந்தது குறித்து நான் ஆச்சரியப்பட்டதாக“ அவர் கூறினார்.

ஸ்ராலினித்தின் எழுச்சிக்கு எதிராக 1923ல் தொடங்கிய ட்ரொட்ஸ்கியின் அரசியல் போராட்டத்தின் விளக்கத்தை கேட்ட பின், “ஸ்ராலினிற்கு எதிரான ட்ரொட்ஸ்கி வெற்றிபெற்றிருப்பாரானால் 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கபடாதிருந்திருக்கும். அத்தோடு கிட்லர் போன்றவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கவும் மாட்டார்கள், இரண்டாம் உலகப் போரும் நடந்திருக்காது என நான் நினைக்கிறேன், ட்ரொட்ஸ்சிசம் வெற்றி பெற்றிருந்தால் நாம் இன்று பார்க்கும் காஸா பிரச்னை எழுந்திருக்காது, அமெரிக்கா கூட இவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்திருக்காது.” என அவர் கூறினார்.

“நான் லெனின் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அவருடைய படைப்புகளை வாசித்ததில்லை, அத்தோடு ட்ரொட்ஸ்கி மற்றும் ஸ்ராலினிசம் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. இந்த வரலாறு பற்றி ஏன் எங்களுக்கு சொல்லவில்லை? சகல மக்களின் பிரச்சனைகளுக்கும் சோசலிசம் மட்டுமே தீர்வு என்றால், இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என கொழும்பில் இருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பண்டாரவளையைச் சேர்ந்த இலங்கை மின்சார சபையில் வேலை செய்யும் இளம் ஊழியர் ஒருவர் கூறினார்.

பண்டாரவளை எஸ்லபி தோட்டத்தின் மல்வத்த பிரிவைச் சேர்ந்த ஒரு தோட்டத் தொழிலாளியான ஆர்.சுந்தரம், “சோசலிசத்தை பற்றி பேசும் ஒரே கட்சி சோ.ச.க. தான். ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க, நீங்கள் வரலாற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். நான், சோ.ச.க. இன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தமிழ் பத்திரிகையான தொழிலாளர் பாதையை வாசித்ததுண்டு. நான், உ.சோ.வ.த இன் தமிழ் பக்கத்தை சிலசமயங்களில் படிப்பேன். காஸாவில் இடம்பெரும் போர் பற்றி அதில் தெரிந்துகொண்டேன்“.

“தொழிற்சங்கத் தலைவர்கள் இது பற்றி எதுவுமே எமக்கு விளக்கியதில்லை. தொழிற்சங்கங்கள் எமது வேலைச் சுமைகளை அதிகரித்து, இலாபங்களை அதிகரிக்க கம்பனிகளுக்கு உதவுகின்றன. நான் போர்களை எதிர்க்கிறேன், மக்கள் கல்வியறிவு பெற்றால் அவர்கள் சோசலிசத்தை கட்டியெழுப்ப முன்வருவார்கள் மற்றும் அமைதியை உருவாக்குவார்கள்” என கூறினார்.

“எனது வாழ்கையில் முதல் முறையாக உங்கள் மூலமாகவே ட்ரொட்ஸ்கிசம் பற்றி அறிந்தேன் என பண்டாரவளையில் வசிக்கும் பல்கலைக்கழக மாணவி எம். ஏ சூரியராச்சி கூறினார். இந்த வரலாற்றை உங்களை போல வேறு யாரால் தெளிவுபடுத்தமுடியும்? இந்த வரலாறு தெரியாததால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதோடு அவர்கள் இலங்கை செய்திகளை மட்டும் பார்ப்பார்கள் என்றால், அரசியல் மீது உண்மையிலேயெ வெறுப்படைவார்கள்“ என அவர் கூறினார்.

காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலை குறிப்பிட்டு ”எவருமே இஸ்ரேலின் இன அழிப்புடன் உடன்படமாட்டார்கள்” மக்களை மிருகங்களாகப் பார்க்கும் உலகில் வாழ்கிறோம். இது மாற்றப்பட வேண்டும்.

Loading