ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

As class struggle sharpens,
Indian Stalinists stump for right-wing bourgeois government

வர்க்கப் போராட்டங்கள் கூர்மையடைகின்ற நிலையில்,

இந்திய ஸ்ராலினிஸ்டுகள், வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கத்தை ஸ்தாபிக்க தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்

By Deepal Jayasekera and Keith Jones 
1 May 2019

உலகெங்கிலுமுள்ள நிலைமையைப் போல, இந்தியாவிலும் வர்க்கப் போராட்டம் வியத்தகு அளவில் உக்கிரமடைந்து வருவதானது, தொழிலாளர்களின் ஆட்சிக்கான போராட்டத்தின், மற்றும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் சர்வதேச ஐக்கியத்தின் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்கவாத பிஜேபி யின் அதிகார எழுச்சி மற்றும் சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ மூலோபாய தாக்குதலில் ஒரு முன்னணி நாடாக உருவெடுத்துள்ள இந்தியாவின் மாற்றம் போன்றவற்றில் முன்னுதாரணமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய முதலாளித்துவம், வகுப்புவாத பிற்போக்கு, எதேச்சதிகார ஆட்சி முறைகள், இராணுவவாதம் மற்றும் போர் ஆகியவற்றை தழுவி நிற்கும் வலதை நோக்கி அத்துமீறி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

ஆனால், இந்திய ஆட்சியாளர்கள், அதிகரித்தளவில் கிளர்ச்சி செய்யும் தொழிலாள வர்க்கத்தையும், அத்துடன் கிராமப்புற ஏழை மக்களிடையே பெருகிவரும் போராட்டங்களையும் எதிர்கொண்டுள்ளனர். 2017 முதல் இந்தியா எங்கிலும் எழுந்துள்ள வேலைநிறுத்த அலைகளும், விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களும் மோடி அரசாங்கம் செயல்படுத்திவந்துள்ள சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு எதிராக மட்டும் உருவானவை அல்ல. குறிப்பாக, பூகோள மூலதனத்தின் ஒரு மலிவு உழைப்பு உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு நோக்கம் கொண்டு, இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அளவிலான அனைத்து அரசாங்கங்களும் கடந்த மூன்று தசாப்தங்களாக பின்பற்றி வந்துள்ள சந்தை சார்பு மற்றும் முதலீட்டாளர் சார்பு திட்டநிரலுக்கு இது சவாலாக உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் அதன் பழைய, சிறு கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இந்தியாவின் ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகள், இந்திய முதலாளித்துவத்தின் கட்சிகளுக்கும் மற்றும் மோசமான அரசு நிறுவனங்களுக்கும் அரசியல் ரீதியாக தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதற்கான தமது முயற்சிகளை இருமடங்காக்குவதன் மூலம் இந்த வர்க்கப் போராட்டத் தீவிரமடைதலுக்கு பதிலிறுத்துள்ளன.

“ஜனநாயகத்தைக் காப்பாற்றுதல்” மற்றும் “குடியரசைக் காப்பாற்றுதல்” என்ற பெயரில், ஸ்ராலினிஸ்டுகள், மே 23 இல் நிறைவு பெறவுள்ள இந்தியாவின் பல கட்ட தேர்தல்களைத் தொடர்ந்து ஒரு மாற்று வலதுசாரி அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கான ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகளின் உந்துதலின் பின்னணியில், பிஜேபி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக பெருகிவரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை திசைதிருப்புவதற்கு முனைந்து வருகின்றனர். 1989 மற்றும் 2008 க்கு இடைப்பட்ட காலத்தில் பாராளுமன்றத்தில் அத்தகைய அரசாங்கங்களுக்கு - அவற்றில் பெரும்பாலானவை காங்கிரஸ் கட்சி தலைமையிலானவை - ஸ்ராலினிஸ்டுகள் தான் முட்டுக் கொடுத்து வந்தனர் என்ற நிலையில், அடுத்தடுத்த பெருவணிக அரசாங்கங்களின் வாரிசாக ஒத்துப் போகும் நிலை தான் அவற்றிற்கு ஏற்படும். இந்த அரசாங்கங்கள், நவ தாராளவாத சீர்திருத்தத்தை வேறுபாடின்றி செயல்படுத்தியதுடன், வாஷிங்டனுடன் முன்னொருபோதும் நிகழ்ந்திராத வகையிலான நெருங்கிய உறவுகளைப் பின்பற்றியும் வந்தன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம், அதன் தேர்தல் அறிக்கையில் இதை தெள்ளத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது சிபிஎம், தற்போதைய தேர்தல்கள் “சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமானதாகும்,” என்று அறிவித்து, அதன் பிரச்சாரம் மூன்று ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட இலக்குகளை கொண்டுள்ளது என்று தெரிவிக்கிறது: அவை, பிஜேபி தலைமையிலான கூட்டணியை தோற்கடிப்பது; “ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கத்தை மத்தியில் உருவாக்குவதற்கு உறுதியளிப்பது”; மேலும், சிபிஎம் மற்றும் சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் (MP) எண்ணிக்கையை அதிகரிப்பது; போன்றவையாகும்.

ஸ்ராலினிஸ்டுகள், “பிஜேபி அல்லாமல் வேறு எவருடனும்” கூட்டு என்றதொரு பிரச்சாரத்தை பெருமளவில் முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள், பிஜேபி ஐயும் மற்றும் குறிப்பிட்ட மாநிலம் சார்ந்த அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Alliance-NDA) பங்காளர்களையும் தோற்கடிப்பதற்கு சிறந்த வாய்ப்பைக் கொண்டுள்ள எந்தவொரு கட்சிக்கு அல்லது வேறுபட்ட கட்சிக் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் படி தொழிலாளர்களையும் உழைப்பாளர்களையும் வலியுறுத்தி வருகின்றனர். இது, முன்னர் பிஜேபியுடன் கூட்டணி வைத்திருந்த பெரும்பாலான பிராந்திய மற்றும் சாதி அடிப்படையிலான கட்சிகள், குறிப்பாக தெலுங்கு தேசக் கட்சி (Telugu Desam Party-TDP) அல்லது ஒடிசாவை தளமாகக் கொண்ட BJD போன்ற கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதை உள்ளடக்கியது.

இருப்பினும், மிக சமீபகாலம் வரை இந்திய முதலாளித்துவம் முன்னுரிமை கொடுத்த அரசாங்க கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக் கோரி இந்தியாவின் பெரும் பகுதிகளில் சிபிஎம் பகிரங்கமாக தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றது. தமிழ் நாட்டில், சிபிஎம் மற்றும் சிபிஐ (Communist Party of India-CPI) கட்சிகள், காங்கிரஸ் கட்சி மற்றும் வலதுசாரி பிராந்தியக் கட்சியும், மற்றும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியுமான திமுக (DMK) உடன்  நெருங்கிய கூட்டணி கட்சி என்று வாதிடக்கூடிய நிலையிலுள்ள காங்கிரஸ் போன்ற கட்சிகளை உள்ளடக்கிய தேர்தல் கூட்டணியில் தாமும் இணைந்து கொண்டுள்ளன.

மேற்கு வங்கத்திலும் காங்கிரஸ் உடனான அதையொத்த ஒரு கூட்டணியை அமைப்பதற்கு சிபிஎம் நம்பிக்கை கொண்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி அதன் பிரஸ்தாபத்தை கண்டித்ததுடன், பதிலாக கேரளாவில், (தற்போதைய இடது முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேரில் எட்டு பேரின் சொந்த தொகுதிகளில்) ஸ்ராலினிஸ்டுகளிடம் இருந்து வலிய இடங்களை பிடுங்கிக் கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது, அதன் படி கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியை ஒரு கேரள தொகுதியில் நிறுத்துவதற்கான வாய்ப்பை அது தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளது.

பிஜேபி க்கு ஒரு மாற்றாக ஒரு “ஜனநாயக, மதச்சார்பற்ற” கட்சி என காங்கிரஸ் கட்சியை ஊக்குவிக்கின்ற அல்லது காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்ற ஸ்ராலினிஸ்டுகளின் வழியில் இவை எதுவுமே நிற்காது என்பதை தெளிவாக்கும் நிலையில், சிபிஎம் இன் ஆங்கில மொழி வாரயிதழ் People’s Democracy அதன் தலையங்கத்தில், காங்கிரஸின் “சித்தாந்த ரீதியான மற்றும் அரசியல் ரீதியான சீர்குலைவு” அதை “பரந்த பார்வை”யை கொண்டிருப்பதில் இருந்தும், மற்றும் “தேசிய அளவில் பிஜேபி ஐ தோற்கடிக்க அனைத்து சக்திகளையும் அணிதிரட்டுவதில்” இருந்தும் தடுக்கிறது என்று புலம்புகிறது.

Scroll.in செய்தி வலைத் தளத்திற்கு அளித்த ஒரு பேட்டியில், சிபிஎம் இன் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, முந்தைய தேசியத் தேர்தல்களுக்குப் பின்னர் போட்டி எதிர் கட்சிகளினால் அரசாங்க கூட்டணிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். மேலும் அவர் தொடர்ந்து, “2019 இலும் கூட, தேர்தலுக்குப் பின்னர் ஒரு புதிய ஏற்பாடு ஒன்று வெளிப்படும்,” என்று சபதம் செய்தார் என்ற நிலையில், அத்தகையதொரு “மாற்று” பெருவணிக அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைந்திருப்பதில் ஸ்ராலினிஸ்டுகள் ஆர்வமாக உள்ளனர் என்பதை எப்போதும் தெளிவுபடுத்துகின்றனர்.

1989 முதல் 2008 வரையிலும், பிஜேபி அல்லாத அனைத்து அரசாங்கங்களையும் உருவாக்குவதிலும் தக்கவைப்பதிலும் ஸ்ராலினிஸ்டுகள் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளனர் என்று யெச்சூரி முன்னரே கூவி வந்துள்ளார். இது, 1991 இல் உலக ஏகாதிபத்தியத்துடன் ஒரு புதிய பொருளாதார மற்றும் மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குவதற்கான முதலாளித்துவ உந்துதலை முன்னெடுத்ததும், மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களின் “பெரும் விரிவாக்க” பரபரப்பின் ஊடாக காலம் தள்ளியதுமான நரசிம்ம ராவின் சிறுபான்மை காங்கிரஸ் அரசாங்கத்தை உள்ளடக்கியது; மேலும், 2004 தேர்தல்களில் பிஜேபி எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்ததற்குப் பின்னர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (United Progressive Alliance-UPA) பெரும்பாலும் சிபிஎம் உடன் ஒன்றாக இணைந்திருந்தது. அடுத்த தசாப்தத்தில், வாஷிங்டன் உடனான இந்தியாவின் “பூகோள மூலோபாய கூட்டாண்மை” பூரணபடுத்தப்படும் என்றாலும், மேலதிக சமூக தீங்கிழைக்கும் நவ தாராளவாத “சீர்திருத்தங்கள்” ஊடாகவே UPA யும் முன்னோக்கிச் செல்லும்.

தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடந்த மூன்று தசாப்தங்களாகவே, இந்து மேலாதிக்கவாத பிஜேபி இன் அதிகார எழுச்சியை தடை செய்வதற்கு இது அவசியமாக இருந்தது என்ற அடிப்படையில், காங்கிரஸ் மற்றும் ஏனைய வலதுசாரி முதலாளித்துவ கட்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தை முறையாக அவர்கள் கீழ்படித்து வைத்திருந்ததை சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் நியாயப்படுத்தி வந்துள்ளன. இதன் இறுதி முடிவு என்னவென்றால், பரந்த எதிர்ப்பு நிலவுகின்ற போதிலும், முதலாளித்துவ வர்க்கம், தொழிலாளர்களுக்கு எதிரான சுரண்டலை வியத்தகு அளவில் தீவிரப்படுத்த முடிந்தது என்பதுடன், பிரிட்டிஷ் இராஜ்யத்தின் காலத்தில் உச்சத்தில் இருந்த நிலைக்கு ஈடாக சமூக சமத்துவமின்மையின் மட்டங்களையும் உயர்த்தியது. மேலும் பிஜேபி முன்னெருபோதும் இல்லாதவாறாக சக்திவாய்ந்ததாக உள்ளது.

ஸ்ராலினிஸ்டுகள், தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக ஒடுக்கியதன்  காரணமாக, இந்து வலதுசாரி, முன்முயற்சியை கைப்பற்றியதுடன்  மேலும் பரவலான சமூக சமத்துவமின்மை, அதிகரிக்கும் வறுமை, மற்றும் இடைவிடாது துன்புறுத்தும் பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட  சமூக விரக்தியையும் சீற்றத்தையும் வெற்று வாய் வீச்சின் மூலமாக சுரண்டவும் ஏதுவானது.

ஸ்ராலினிஸ்டுகள், மோடி மற்றும் அவரது பிஜேபி யின் குற்றங்களை சுட்டிக்காட்டுவது, இந்திய முதலாளித்துவத்தை குற்றம்சாட்டவோ, தொழிலாள வர்க்கத்தை போராட்டத்திற்கு அழைக்கவோ இல்லை, மாறாக அதனை முதலாளித்துவ வர்க்கத்துடன் சங்கிலியில் கட்டிப்போடுவதற்குத் தான்.

இதில், “மதச்சார்பற்ற” என்ற சொல்லை ஸ்ராலினிஸ்டுகள் பயன்படுத்துவதானது குறிப்பாக அவர்கள் வகிக்கும் நயவஞ்சகமான பாத்திரத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும், பிஜேபி அதன் ஆர்எஸ்எஸ் வழிகாட்டியுடன் நஞ்சு நிறைந்த வகுப்புவாதத்தை ஊக்குவிப்பதானது, பாசிச சக்திகளுக்கு அது ஒரு காப்பகமாக உள்ளது என்பது நிச்சயம். ஆனால், பிஜேபி மற்றும் அதன் உள்நோக்கம் கொண்ட மதச்சார்பற்ற எதிர்ப்பாளர்களுக்கு இடையேயான வேறுபாடுகள் அளவேயன்றி, வகையல்ல. சாதிய, வகுப்புவாத மற்றும் பிராந்திய அடையாளங்கள் குறித்த மேல்முறையீடுகள் என்பது, வேறுபட்ட முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவப் பிரிவுகள் செல்வத்திற்காகவும், தனிச்சுதந்திரத்திற்காகவும் தங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொள்கின்ற, எல்லாவற்றிற்கும் மேலாக சமூக பதட்டங்களை பிற்போக்கு வழிகளில் திசைதிருப்புவதற்கு ஒரு இயந்திரநுட்பமாக செயல்படுகின்ற இந்திய முதலாளித்துவ அரசியல் சாக்கடையின் ஒட்டு மொத்தமாகும்.

காங்கிரஸ் கட்சி இந்து வலதுடன் ஒத்துப் போன மற்றும் சூழ்ச்சி செய்த ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 2019 தேர்தல்களுக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ள காங்கிரஸை பெருநிறுவன ஊடகங்கள் ஒரு இந்துத்துவ அல்லது இலகுவான (lite) இந்து மேலாதிக்கவாத அமைப்பு என்று வர்ணிக்கின்ற அளவுக்கு அது தனது பிரச்சாரத்தை அதிகரித்தளவில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. முற்றிலும் கேவலமான வகையில், ஸ்ராலினிஸ்டுகள் பிஜேபி அல்லாத எந்தவொரு கட்சிக்கும் “மதச்சார்பற்ற” என்ற அவர்களின் ஆசிர்வாதத்தை வழங்குவதை வழக்கமாக்கி கொண்டனர். சுமார் இரண்டு தசாப்தங்களாக பிஜேபி யின் மிக முக்கியமான கூட்டணிக் கட்சியாக இருந்து வந்த JD (U) கருத்துவேறுபாட்டினால் பிஜேபி யில் இருந்து பிரிந்து பின்னர் NDA வில் இருந்து விலகிய போது, “மதச்சார்பற்ற” எதிர்ப்பின் ஒரு முக்கிய அங்கம் என்று JD (U) ஐ முன்வைப்பதற்கு ஸ்ராலினிஸ்டுகள் விரைந்தனர்.

மோடியின் “துல்லிய தாக்குதல்” குறித்து ஸ்ராலினிஸ்டுகளின் கொண்டாட்டம்

1917 ரஷ்யப் புரட்சியின் ஸ்ராலினிச காட்டிக் கொடுப்பின் பாதுகாவலர்களாகவும், மேலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்புக்காக, சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் இறுதி காட்டிக் கொடுப்பில் ஒத்துப்போனவர்களாகவும், இரட்டை ஸ்ராலினிசக் கட்சிகள் பல தசாப்தங்களாக முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்பட்டு வந்துள்ளன.

இன்று, பாகிஸ்தான் உடனான அதன் பிற்போக்குத்தன இராணுவ மூலோபாய போட்டி, மேலும் - அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான அவர்களின் வாய்மொழி கண்டனங்கள் ஒருபுறமிருக்க - வாஷிங்டன் உடனான சீன விரோத கூட்டணியை உருவாக்குவதில் அவர்களது உடந்தை உட்பட, இந்திய முதலாளித்துவத்தின் பெரும் வல்லரசாகும் அபிலாஷைகளுக்கு அவர்களது ஆதரவை வழங்கி வருவதன் மூலம், அவர்களது எதிர்புரட்சிகர குணாம்சம் நிரூபிக்கிப்பட்டுள்ளது.

1930 களில் நிலவியதைப் போல, முதலாளித்துவ முறிவு, உள்நாட்டு ஏகாதிபத்திய மற்றும் வல்லரசு மோதல்களின் மறுஎழுச்சியை தோற்றுவிக்கும் என்ற நிலையில், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலையீடு இல்லாமல், தவிர்க்கவியலாமல் பூகோள பேரழிவிற்கு அது இட்டுச்செல்லும்.

இந்திய முதலாளித்து வர்க்கம் இந்த செயல்பாட்டில் தனது சொந்த தவறான பாத்திரத்தை வகிக்கிறது. அதன் காங்கிரஸ் முன்னோடிகள் வகுத்த பாதையை பின்பற்றி, மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கம், சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புகளுடன் இன்னும் முழுமையாக இந்தியாவை ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளது என்பதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்பு மற்றும் போர் நடவடிக்கைகளின் மூலம் அதன் பொருளாதார மேலாதிக்கத்தின் அரிப்புகளை ஈடுகட்ட அது முன்னெடுக்கும் பொறுப்பற்ற உந்துதலை ஊக்குவித்தும் வருகிறது. அதே நேரத்தில், வாஷிங்டன் அதன் கொள்ளையடிக்கும் நோக்கங்களை தொடர்வதற்கு தனது ஆதரவையும் மூலோபாய உதவிகளையும் வாரி வழங்க இந்திய முதலாளித்துவம் முனைந்து வருகிறது.

தெற்காசியா மற்றும் உலகிற்கு இது கொண்டுள்ள மாபெரும் ஆபத்துக்கள் மூன்று பெரும் போர் நெருக்கடிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன, 2016 வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்தியா அதில் -  இருமுறை பாகிஸ்தானுடனும் மற்றும் ஒருமுறை சீனாவுடனும் – சிக்கியுள்ளது.

போர் அபாயம் குறித்து தொழிலாள வர்க்கத்தையும், ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களையும் எச்சரிக்கை செய்வதற்கும் மற்றும் எளிதில் சமரசப்படுத்த முடியாத வகையில் இந்திய முதலாளித்துவத்தை கடுமையாக எதிர்த்து நிற்பதற்கு பாடம் கற்பிப்பதற்கும் பதிலாக, சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளின் மாநில மற்றும் “தேசியளவிலான முறையீடுகள்,” ஒரு மும்முனை அணுசக்தி மற்றும் நீல நிற கடற்படை ஆகியவற்றின் அபிவிருத்தி உட்பட, இந்தியாவின் விரைவான இராணுவ விரிவாக்கத்திற்கு ஆதரவளித்துள்ளன. மோடி உத்திரவின் படி, செப்டம்பர் 2016 இல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய இராணுவம் மேற்கொண்ட “துல்லிய தாக்குதல்கள்” குறித்து ஸ்ராலினிஸ்டுகள் கொண்டாடினர், மேலும் இத்தாக்குதல்கள், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் பல மாதங்கள் நீடித்த எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை துரிதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, பிப்ரவரி பிற்பகுதியில் பாகிஸ்தான் உள்ளே சென்று விமானத்தாக்குதல் நடத்துவதற்கு பிஜேபி அரசாங்கம் உத்திரவிட்டதை சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் பாராட்டின. சிபிஎம் பொதுச் செயலர் யெச்சூரி, அத்தாக்குதல்களுக்கு “அனைத்துக் கட்சி ஆதரவு” இருப்பதை நிரூபிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அதே வேளையில், அணுவாயுதம் தரித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் இடையேயான பதட்டங்கள் கொதி நிலையில் இருந்தமை, 1971 இந்திய பாகிஸ்தான் போருக்குப் பின்னர் ஒருபோதும் நிகழாத வகையிலான ஒரு ஒட்டுமொத்தப் போருக்கு மிக நெருக்கமாக இந்தியாவையும் பாகிஸ்தானையும் இட்டுச் சென்றது. அதன் பின்னரோ, சிபிஎம், – பிப்ரவரி 14 புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் பொறுப்பு என்றவர் அறிவித்ததற்குப் பின்னர் எப்போது வேண்டுமானாலும் அத்தகைய நடவடிக்கையை அவர் எடுப்பார் என்பது வெளிப்படையாக இருந்த நிலையில், சண்டையிடும் போக்கைத் தூண்டிவிடுவதற்கும் அவரது பிஜேபி க்கு ஆதரவை திரட்டுவதற்கும் சாதகமாக இந்த போர் நெருக்கடியை மோடி பயன்படுத்தி வருகிறார் என்ற வகையில் - விமானத் தாக்குதலை மோடி அரசியலாக்குவதாகவும், மேலும் “பயங்கரவாத”த்திற்கு எதிரான “ஐக்கிய இந்தியா”வின் நிலைப்பாட்டை “தொந்திரவு” செய்வதாகவும் உளறியது.

“அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு இளைய பங்காளியாக” அரசாங்கம் “இந்தியாவை கீழ்மைப்படுத்துகிறது” என்று சிபிஎம் விமர்சிக்கிறது. எனினும் இத்தகைய விமர்சனங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதில் எந்தவொரு வேலையும் செய்யாது என்ற நிலையில், போர் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பூகோள அளவிலான தொழிலாள வர்க்க இயக்கம் அபிவிருத்தி காண்பது பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. இந்நிலையில், இந்திய முதலாளித்துவ வர்க்கம், “மூலோபாய சுயாட்சியை” பராமரிப்பதன் மற்றும் பன்முக தன்மையை ஊக்குவிப்பதன் மூலமாக, அதாவது, ஐரோப்பா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய மற்றும் வல்லரசு நாடுகளுடனும், அத்துடன் வாஷிங்டனுடனும் இணைந்து சூழ்ச்சி செய்வதற்கு அதன் கைகளை திறந்து வைத்திருப்பதன் மூலமாக அதன் சொந்த நலன்களை முன்னெடுப்பது சிறந்ததாக இருக்கக்கூடும் என்று இந்திய முதலாளித்துவத்தை சமாதானப்படுத்த அவர்கள் வழிநடத்தப்படுகிறார்கள்.        

இது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தாலும் கூட முற்றிலும் இரண்டு முகம் கொண்டதாக உள்ளது. இந்த எதிர்ப்பால், 1990 களில் இருந்து தொடர்ச்சியான அரசாங்கங்களுக்கு சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் முட்டுக் கொடுத்து வருவதையும், மேலும் தற்போதைய நூற்றாண்டின் முதல் தசாப்த காலத்தில் வாஷிங்டனுடன் முன்னெப்போதையும் விட மிகுந்த நெருக்கத்தை தக்கவைத்துக் கொண்டிருந்ததையும் தடுத்து நிறுத்த முடியவில்லை; மேலும், 2008 இல் அமெரிக்க இந்திய அணுவாயுத ஒப்பந்தம் குறித்த ஒரு சர்ச்சையை அது உருவாக்கிய போது, அவர்களது காங்கிரஸ் கூட்டணி அதனை அபத்தம் என்று கூறி அவர்களை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக, சிபிஎம் உம் சிபிஐ யும், ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவுடன் புது தில்லியின் கூட்டாண்மை குறித்து சில சம்பிரதாயபூர்வமான கை பிசைதலை செய்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இந்திய முதலாளித்துவத்தின் பொறுப்பற்ற மற்றும் பிற்போக்கான இராணுவ-மூலோபாய கூட்டணியை தொடர்கின்ற மற்றும் விஸ்தரிக்கின்ற ஒரு “மாற்று” வலதுசாரி அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வரவும் அதை தாங்கிப் பிடிக்கவும் அவை உதவி செய்யும் என்பதை நன்றாக தெளிவுபடுத்தியுள்ளன.

தேசிய கட்சிகள்: ஸ்ராலினிஸ்டுகளும் இந்திய குடியரசும்

சிபிஎம் உம் சிபிஐ யும், தொழிலாள வர்க்க சமூக எதிர்ப்பை கட்டுப்படுத்தவும், திசைதிருப்பவும் மற்றும் நசுக்கவும், மேலும் அதன்மூலம் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்திற்குள் தங்களது செல்வாக்கை பன்மடங்காக்கவும், அவற்றுடன் இணைந்த தொழிற் சங்கங்கள் முறையே இந்திய தொழிற் சங்கங்களின் மையம் (Centre for Indian Trade Unions-CITU) மற்றும் அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (All India Trade Union Congress-AITUC) என்பனவற்றை பயன்படுத்துகின்றன.

இந்தியா எங்கிலுமிருந்து பல மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், பிஜேபி அரசாங்கத்தின் கொடூரமான சிக்கன மற்றும் முதலீட்டாளர் சார்புக் கொள்கைகள் மீதான அவர்களது எதிர்ப்பைக் காட்டுவதற்கு ஜனவரி 8-9 பொது வேலைநிறுத்தத்தில் இணைந்து கொண்டனர். ஆனால் ஸ்ராலினிஸ்டுகளைப் பொறுத்தவரை, அவர்களது பிரச்சாரத்துடன் தொழிலாள வர்க்கத்தை இணைத்து ஒரு மாற்று பெருவணிக அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வருவது சிறந்தது என்று அது கருதிய நிலையில் அவர்களது எதிர்கட்சி நற்சான்றுகளை மெருகேற்றுவதற்கு நோக்கம் கொண்ட சூழ்ச்சியாகவே அவ்வேலைநிறுத்தம் இருந்தது. அதனால், சிபிஎம் இன் People’s Democracy செய்தியிதழ், இந்த வேலைநிறுத்தம் வெறுமனே அடுத்து ஒரு “பெரும் போராட்டத்தை” முன்னெடுப்பதற்கான – அதாவது பொது தேர்தல்களில் பிஜேபி ஐ தோற்கடிப்பதற்கான - முன்னேற்பாடு என்று வெட்கமின்றி அறிவித்தது.

“ஜனநாயகம்” என்பது தேர்தல்களில் ஆபத்தில் இருக்கிறது என்று கூறி, சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள், தொழிலாளர்களும் இளைஞர்களும் காங்கிரஸ் கட்சிக்கும் மற்றும் ஏனைய மதிப்பிழந்த தொழிலாள வர்க்க விரோத கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்டுமென அச்சுறுத்த முனைகின்றன.

ஆனால், கடந்த மூன்று தசாப்தங்கள் நன்கு தெளிவாக எடுத்துக்காட்டியது போல், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பு மற்றும் இந்து வலதின் தோற்கடிப்பை, காங்கிரஸ் தலைமையிலான அல்லது சில “கூட்டாட்சி” அல்லது வலதுசாரி பிராந்திய கட்சிகளின் சேர்க்கையிலான “மூன்றாவது முன்னணி” போன்ற கூட்டணியில் உருவான மற்றொரு பெருவணிக அரசாங்கத்தைக் கொண்டு பிஜேபி ஐ பிரதியீடு செய்வதன் மூலமாக செய்ய முடியாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

அத்தகையதொரு அரசாங்கம் மே 23 க்குப் பின்னர் ஆட்சிக்கு வருமானால், அதன் முதலாளித்துவ எஜமான்கள், பொருளாதார “சீர்திருத்த” வேகத்தை முடுக்கிவிடவும், இராணுவ செலவினங்களை அதிகரிக்கவும், மேலும் வாஷிங்டனுடன் இந்தியாவின் கூட்டணியை வலுப்படுத்தவும் அதனை இலக்கு வைப்பார்கள். மேலும், இத்தகைய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அதனூடாக பெருகிவரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு, 1974 இரயில்வே துறை வேலைநிறுத்தத்தை தகர்த்து நசுக்க இராணுவத்தைப் பயன்படுத்தி, பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு அவசரகால ஆட்சியை திணித்த தேசிய காங்கிரஸ் அரசாங்கத்தின் மற்றும் 2012 இல் மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீது ஜோடிப்பு வழக்குகளை திட்டமிட்டு சுமத்திய ஹரியானா மாநில அரசாங்கத்தின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி, தவிர்க்கவியலாத நிலையில் எதேச்சதிகார ஆட்சி முறைகளை நோக்கி அது திரும்பும்.

இதற்கிடையில், பிஜேபி யும் இந்து வலதும், “இடது” மற்றும் தொழிற்சங்க ஆதரவிலான பெருவணிக அரசாங்கத்திற்கு எதிராக பெருகிவரும் பொதுமக்கள் சீற்றத்துடன் போராட வேண்டிய நிலை உருவாகும்.

சமூக பிற்போக்கு மற்றும் எதேச்சதிகாரத்துவம் நோக்கிய இந்திய முதலாளித்துவத்தின் திருப்பம், முதலாளித்துவ முறிவிற்கான அதன் பதிலிறுப்பாக உள்ளது. அந்த நெருக்கடிக்கான – முதலாளித்துவ சுரண்டல், வல்லரசாகும் தீவிரத்துவம் மற்றும் போர் போன்றவற்றின் மேலதிக தீவிரப்படல் குறித்த - இதன் தீர்வு பெரும்பான்மையினர் நலனுக்கு முரண்பட்டதாக உள்ளது என்ற நிலையில், பாரம்பரிய முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புத் தடைகள் ஆகியவற்றிற்கு இணங்கி செயல்படுவதன் மூலமாக கூட தீர்க்க முடியாத அதிகரித்தளவில் சாத்தியமற்ற நிலையையே அது உருவாக்குகிறது.

ஜேர்மனியில் தற்போது உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாகவுள்ள நவ-நாஜி கட்சியான AfD மற்றும் இத்தாலியில் லெகா கட்சியும் உட்பட, அதிவலது சக்திகளை ஊக்குவிக்கும் முதலாளித்துவம் மற்றும் இராணுவ புலனாய்வு எந்திரங்களுடன் இணைந்த இதையொத்த நடைமுறைகளை உலகெங்கிலும் காண முடியும். நீண்ட முதலாளித்துவ ஜனநாயக பாரம்பரியங்களைக் கொண்ட பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற மிகுந்த முன்னுரிமை பெற்ற ஏகாதிபத்திய நாடுகளில் கூட இது உண்மையாக உள்ளது. முந்தையதில், “தாராளவாத” மக்ரோன், நாஜிக்களின் ஆக்கிரமிப்பின் போது தெற்கு பிரான்சை ஆட்சி செய்த பாசிச Vichy ஆட்சியின் தலைவர் ஜெனரல் பீடெய்னை பாராட்டிய அதேவேளையில், சிக்கன வெட்டுக்களின் ஊடாக அழுத்தம் கொடுப்பதற்கு ஏகாதிபத்திய “அவசரகால” அதிகாரத்துவங்களை பயன்படுத்திக் கொண்டார். அமெரிக்காவில், பில்லியனர் ஜனாதிபதி ட்ரம்ப், பேரினவாதத்தையும் வகுப்புவாதத்தையும் தூண்டுவதன் மூலம் ஒரு பாசிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பகிரங்கமாக முனைந்து வருகின்ற அதே வேளையில், ரஷ்யாவிற்கு எதிராக இன்னும் மேலதிக ஆக்கிரோஷக் கொள்கையை பின்பற்றுவதற்கு நோக்கம் கொண்டு அவரை பதவியிறக்குவதற்கு இராணுவ புலனாய்வு எந்திரத்துடன் இணைந்து ஜனநாயகக் கட்சியினர் சதித் திட்டம் தீட்டி வருகின்றனர்.

முதலாளித்துவ எதிர்வினை வளர்ச்சிக்கான ஒரே முற்போக்கான பதிலாக, தொழிலாளர் அதிகாரத்திற்காக போராடுவதில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் நிகழ வேண்டும் என்பது மட்டும் தான் உள்ளது.

1930 களில், இன்றிருப்பது போல, முதலாளித்துவ ஜனநாயகம் அதன் காலடியில் பார்க்கும்படி அழுகிய போது, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முயற்சிகளுடனும், மேலும் முதலாளித்துவ சமூக ஒழுங்கின் சமரசமற்ற பாதுகாவலர்களாகவும் எழுச்சி பெற்ற “ஜனநாயக முதலாளித்துவம்,” உடன் இணைந்த மக்கள் முன்னணி (Popular Front) என்ற பெயரில், சிபிஎம் மற்றும் சிபிஐ இன் ஸ்ராலினிச அரசியல் முன்னோடிகள் நசுக்கப்பட்டனர். இது, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பிற்போக்குவாத மற்றும் பாசிசவாத வெற்றிக்கும் மேலும் இரண்டாவது ஏகாதிபத்திய உலகப் போருக்கும் வழிவகுத்தது.

இன்று, முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதற்கும் அதனை அரசுடன் பிணைத்து வைப்பதற்கும் முயற்சிக்கும் சிபிஎம் உம் சிபிஐ யும் தேசிய கட்சிகளாக இயங்கி வருகின்றன.

ஸ்ராலினிஸ்டுகள், பிஜேபி மற்றும் இந்து வலதிற்கு எதிரான “ஜனநாயக” அரணாக, பாராளுமன்றத்தில் இருந்து நீதித்துறை வரையில், பொலிஸ் மற்றும் இராணுவம் என இந்திய அரசையும் அதன் நிறுவனங்களையும் முன்னிறுத்துகின்றனர். இந்தியாவின் “மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு” என்று ஸ்ராலினிஸ்டுகள் எதை புகழுகின்றனரோ, அது, துணைக்கண்டம் வெளிப்படையாக முஸ்லீம் பாகிஸ்தான் என்றும் இந்து மேலாதிக்க இந்தியா என்றும் வகுப்புவாத பிரிவினைக்கு உள்ளானதன் ஊடாகவும், மேலும் தெற்காசியாவை விட்டுக் கிளம்புகையில் பிரிட்டிஷ் காலனித்துவ பிரபுக்கள் நாட்டின் சொந்த முதலாளித்துவ வர்க்கத்தினரிடம் அரசு எந்திரத்தின் கட்டுப்பாட்டை கைமாற்ற முனைந்த நிலையில், இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதிப் பகுதியில் தெற்காசியாவை கொந்தளிப்பிற்குள்ளாக்கிய மிகப்பெரும் ஏகாதிபத்திய விரோத இயக்கத்தை ஒடுக்குவதன் மூலமாகவும் உண்மையில் கண்டறியப்பட்டது.

இந்திய “ஜனநாயகம்” வெறுமனே வளர்ச்சி குன்றியதாக மட்டுமில்லை; பிறப்பில் இருந்தே சிதைக்கப்பட்டதாக இருந்தது. முதலாளித்துவ ஆட்சி மற்றும் அதன் குடியரசின் கீழ், சாதிய ஒடுக்குமுறையையும் நிலப்பிரபுத்துவத்தையும் ஒழிப்பது முதல், வகுப்புவாதத்தையும் மதச்சார்பு அறிவுப்பரப்புதலையும் ஒழிப்பது, மற்றும் இந்தியாவின் எண்ணற்ற இன மற்றும் மதம் சார்ந்த குழுக்களின் மத்தியில் உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டுவது வரையிலுமான பெரும்பான்மையினர் எதிர்கொண்ட கொழுந்துவிட்டு எரிந்த எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என்பதை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் தொடர்ச்சியான மூன்று கால் நூற்றாண்டுகள் நிரூபித்துள்ளன.

லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் திட்டத்திற்கு எதிர்மறையாக இந்தியா சான்றளிக்கிறது. ஏகாதிபத்தியம் மூலமாக வரலாற்று ரீதியில் ஒடுக்கப்பட்ட நாடுகளில், ஜனநாயகப் புரட்சியின் அடிப்படை பணிகள், தொழிலாள வர்க்கத் தலைமையிலான சோசலிச புரட்சி, மற்றும் சோசலிசத்திற்கான உலகப் போராட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த அங்கம் போன்றவற்றின் மூலமாக மட்டுமே தீர்க்கப்பட முடியும்.

ஸ்ராலினிஸ்டுகளின் பெரிதும் தம்பட்டமடிக்கப்பட்ட இந்திய குடியரசு என்பது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு அடிபணிந்த அரசாக உலக அரசியலில் தீங்கிழைக்கும் பாத்திரம் வகிக்கும் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் பேராசைகளின் மரபியம் மற்றும் குற்றவியல் தன்மை மூலமாகவும், மேலும் வகுப்புவாத மற்றும் சாதிய அரசியலின் நச்சுத்தன்மை மிக்க ஊக்குவிப்பு ஆகியவற்றின் ஊடாக காலனித்துவ பிரித்தாளும் கொள்கைகளில் அதன் நிலைப்பேறுடைமை மூலமாகவும் குணாம்சப்படுத்தப்படுகிறது.

இந்திய அரசை ஸ்ராலினிஸ்டுகள் முன்னிறுத்துவது என்பது ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். தொழிலாள வர்க்கம் பெரும் எழுச்சி காணும் நிலைமைகளின் கீழ், சிபிஎம் தலைமையிலான மேற்கு வங்க அரசாங்கம், பன்னாட்டு Salim Group சார்பாக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அதன் திட்டங்களுக்கு எதிராக 2007 இல் எழுந்த பெரும் ஆர்ப்பாட்டங்களை கையாண்டது போல், அரசு வன்முறை மற்றும் ஒடுக்குமுறைக்கு ஆதரவாக முன்வர ஸ்ராலின்ஸ்டுகள் சற்றும் பின்வாங்க மாட்டார்கள்.

முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள், மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயக கட்சிகள் மூலம் வர்க்கப் போராட்டங்கள் மேம்போக்காக ஒடுக்கப்பட்டு வந்து பல தசாப்தங்களுக்குப் பின்னர், கடந்த தசாப்தங்களின் பேராசைமிக்க முதலாளித்துவ அபிவிருத்தியின் விளைவாக எழுச்சி பெற்ற பூகோள அளவில் தொடர்புபட்ட இந்திய தொழிலாள வர்க்கம் உட்பட, உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள், சமூக சமத்துவமின்மை, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் ஆகியவற்றிற்கு எதிராக அவர்களது எதிர்ப்பை வலியுறுத்த முனைந்து வருகின்றனர். ஆனால், முதலாளித்துவ நெருக்கடிக்கு ஒரு சோசலிச தீர்வைக் காண்பதற்கான போராட்டத்தில், தங்களுக்குப் பின்னால் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உழைப்பாளர்களை அணிதிரட்டும் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக இந்திய தொழிலாளர்கள் உருவெடுப்பார்களானால் – உருவெடுக்க வேண்டும் – சிபிஎம் மற்றும் சிபிஐ உடனான, மற்றும் இந்தியா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கத்திற்கான ஸ்ராலினிச அரசியலின் பேரழிவுகர விளைவுகள் உடனான ஒரு அரசியல் கணக்கீடு அவர்களுக்கு விரைந்து தேவைப்படுகிறது.

இதன் அர்த்தம் என்னவென்றால் நான்காம் அகிலத்திற்கு திரும்புவதாகும். 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கி ஸ்தாபித்த இந்த நான்காம் அகிலம் உலக சோசலிச புரட்சித் திட்டத்தை பாதுகாத்தும் அபிவிருத்தி செய்தும் வந்துள்ளது, அது தான் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் அனைத்து முகமைகள், அனைத்திற்கும் மேலாக ஸ்ராலினிசத்திற்கு எதிராக ரஷ்யப் புரட்சிக்கான உயிரோட்டமாக இருந்தது. மேலும், 1953 முதல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) தலைமையில், கடந்த நூற்றாண்டிலும் மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களிலும் தான் கொண்ட வெற்றிகள் மற்றும் தோல்விகள் உட்பட, சர்வதேச தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் அனைத்து மூலோபாய படிப்பினைகளுக்கும் இது வடிவம் கொடுத்தது. மேலும், ஒரு புரட்சிகர சோசலிச திட்டத்துடன் தொழிலாள வர்க்கத்திற்கு கைகொடுப்பதற்கு மட்டும் அது முனையவில்லை, மாறாக, முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பூகோள அளவிலான தாக்குதலில் அதன் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் முற்படுகிறது.