Print Version|Feedback
US releases Saudi documents: 9/11 coverup exposed
அமெரிக்கா சவுதி ஆவணங்களை வெளியிடல்: 9/11 மூடிமறைப்பு அம்பலம்
Bill Van Auken
16 July 2016
13 ஆண்டுகளாக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த 9/11 தாக்குதல்கள் தொடர்பான பாராளுமன்ற அறிக்கையின் ஒரு பகுதியை வெள்ளிக்கிழமை பிற்பகல் பகிரங்கமாக வெளிவிட்டதானது, சவுதி அரசாங்கம் அதில் வகித்த பங்கை மட்டுமல்லாது, தாக்குதல்களுக்கு வசதி செய்து கொடுத்ததில் மற்றும் அவற்றின் உண்மைக் காரணங்களை மூடி மறைத்ததில், அமெரிக்க முகவாண்மைகளுக்கு உள்ள பங்கைப்பற்றியும், வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு மூடிமறைப்புக்கான புதிய ஆதாரத்தையும் வழங்கியுள்ளது.
“2001 செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களுக்கு முன்னர் மற்றும் பின்னரான உளவுத்துறை பிரிவினரின் நடவடிக்கைகளுக்குள்ளான கூட்டு விசாரணையால்” வழங்கப்பட்ட அறிக்ககையிலிருந்து பெறப்பட்ட 28 பக்க தொகுதியானது, 9/11 விமானக் கடத்தல்காரர்களுக்கான சவூதியின் மிகுதியான ஆதரவு பற்றிய அபரிமிதமான மற்றும் கண்டனத்திற்காளாக்கும் சான்றை வழங்குகிறது. கிட்டத்தட்ட 3000 பேரை காவு கொண்டதாகக் கூறப்படும் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீதான தாக்குதல்களுக்கு இட்டுச்சென்ற காலகட்டத்தில், விமானக் கடத்தல்காரர்களில் 19 க்கு 15 பேர் சவூதி பிரஜைகளாக இருந்தனர்.
ஒபாமா, வெள்ளை மாளிகை, சிஐஏ, சவூதி முடியாட்சி மற்றும் பெருநிறுவன செய்தி ஊடகங்கள் அனைத்தும், இதுபற்றி குறைவாக வெளிப்படுத்திக்காட்டுவதை உறுதிப்படுத்தும் வண்ணம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஆவணங்களை 9/11 தாக்குதல்களுக்கு சவூதி ஆட்சி எந்தவிதத்திலும் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துக்காட்டும் வகையில் முயற்சித்தன.
“இந்த தகவல் சவூதி அரசாங்கம் அல்லது மூத்த சவூதி தனிநபர்கள் அல்கொய்தாவுக்கு நிதிவழங்கியதாக எந்த சான்றும் இல்லை” என்ற அமெரிக்க அரசாங்கத்தின் மதிப்பீட்டை மாற்றவில்லை. வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் ஜோஷ் ஏர்னெஸ்ட் வெள்ளிக்கிழமை அன்று, அவர்களின் வெளியீட்டின் பிரதான முக்கியத்துவம் “வெளிப்படைத்தன்மை”க்கு ஒபாமா நிர்வாகத்தின் செயற்பொறுப்புக்கான நிரூபணமாக இருந்தது என்று தம்பட்டம் அடித்துக்கொண்டார்.
உண்மையில், 28 பக்கங்கள் கொண்ட அறிக்கை கேப்பிடல் ஹில் அடித்தள காப்பறையில் 2002லிருந்து பூட்டுப் போடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது, காங்கிரசின் உறுப்பினர்கள் மட்டும் அவற்றை வாசிக்க அனுமதிக்கப்பட்டனர், அதேவேளை குறிப்பெடுப்பதிலிருந்து, உயர்மட்டத்தின் உறுப்பினர்களுக்கு அதை வெளிப்படுத்துவதிலிருந்து அல்லது அவற்றின் விஷயம் பற்றிய ஒரு வார்த்தையைக்கூட மூச்சுவிடுவதிலிருந்தும் தடைசெய்யப்பட்டிருந்தனர்.
மேலும் முக்கியமாக, இந்த 28 பக்க அறிக்கை 9/11 தாக்குதல்களை வசதியாக பயன்படுத்திக் கொண்டதில் மற்றும் பின்னர் அவற்றின் மூலம் பற்றி பொய்கூறி, முதலில் ஆப்கானிஸ்தானிலும் பின்னர் ஈராக்கிலும் இழிவான ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்த அவற்றைப் பயன்படுத்திக் கொண்டதிலும் அமெரிக்க அரசாங்கத்தின் இழிவான குற்றத்தன்மையை மேலும் அம்பலப்படுத்துமே என அது கவலை கொண்டது. இந்த யுத்தங்கள் மில்லியனுக்கும் மேலானோரை பலியெடுத்திருக்கின்றன. செப்டம்பர் 11 தாக்குதல்களைச்சூழ உருவாக்கப்பட்ட இந்த பொய் விளக்கம் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் நடத்தப்பட்ட உலகளாவிய இராணுவவாதம் பற்றிய அமெரிக்க பிரச்சாரத்தின் கருத்தியல் தூண்களாக தொடர்ந்தும் உள்ளன.
28 பக்கங்கள் பற்றிய ஊடக அறிக்கையானது, நியூயோர்க்கையும் வாஷிங்டனையும் தாக்குவதற்கு சவூதி அரசரால் கையெழுத்திடப்பட்ட ஆணை பற்றி அதிமாய் ஊகிக்கும் “புகைக்கும் துப்பாக்கி” இல்லாமை பற்றி கிட்டத்தட்ட எப்போதும்போல குறிப்பிட்டது, சான்றானது “தீர்ந்த முடிவாகக் கொள்ளமுடியாத” ஒன்றாக விவரிக்கப்படுகிறது. “சவூதி” என்ற வார்த்தைக்குப் பதில் அந்த ஆவணங்கள் ஈராக்கிய, சிரிய அல்லது ஈரானிய நடவடிக்கைகளக் குறித்திருந்தால் பதில் என்னவாக இருந்திருக்கும் என்பதை ஒருவர் கற்பனை பண்ணி மட்டுமே பார்க்க முடியும். இதே ஆதாரம் யுத்தத்திற்கான வலுவான ஆதாரமாக பறைசாற்றப்பட்டிருந்திருக்கும்.
இந்த அறிக்கை தயாரிப்பில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தவர்களுள் ஒருவரான முன்னாள் கடற்படை செயலர் ஜோன் லெஹ்மான், முன்னர் தணிக்கை செய்யப்பட்டிருந்த பகுதி வெளிவருவதற்கு உத்தியோகபூர்வரீதியாக கொடுக்கப்பட்ட பதிலுடன் நேரடியாக முரண்பட்டார். “கடத்தல்காரர்களை ஆதரித்ததில் சவூதி தனிநபர்களின் மோசமான பங்களிப்பு இருந்தது மற்றும் அவர்களுள் சிலர் சவூதி அரசாங்கத்தில் வேலை செய்தனர்” என்று அவர் குறிப்பிட்டார். மேலும் “எமது அறிக்கை சவூதி அரேபியாவிற்கு குற்றச்சாட்டிலிருந்து ஒரு விடுவித்தலாக ஒருபோதும் இருக்காது” என்றார்.
அதேபோல, புலனாய்வு விசாரணையை மேற்கொண்ட குழுவிற்கு தலைமைதாங்கிய முன்னாள் ஃபுளோரிடா செனெட்டர் போப் கிரஹாம், வெள்ளியன்று வெளியிடப்பட்ட தகவல் ஆரம்பம் மட்டுமே என்று குறிப்பிட்டார். ”28 பக்கங்கள் வைன் புட்டியை மூடியிருக்கும் உள்ள ஒருவகை தக்கை போன்றது, ஒருமுறை அது வெளி வந்ததும், மீதமுள்ள வைனும் வெளியில் கொட்டத் தொடங்கிவிடும்” என்றார் அவர்.
சில முக்கியமான பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பாக “கண்டறிதல், கலந்துரையாடல் மற்றும் விளக்கம்” என்று தலைப்பிடப்பட்ட, புதிதாக வெளியான ஆவணத்தில் தெளிவாக வெளிப்படுவது என்னவெனில், 9/11 கடத்தல்காரர்கள் மற்றும் பொதுவாக அல்கொய்தாவுக்கு நிதிவழங்கியதை ஆதரித்ததற்கும் பல அறிகுறிகள் அங்கு இருந்தன, ஆனால் அந்த விசாரணைகள் ஒன்றில் மூடப்பட்டன அல்லது ஒருபோதும் முன்முயற்சி எடுக்கப்படவில்லை, ஏனெனில் வாஷிங்டனுக்கும் சவூதி முடியாட்சிக்கும், அமெரிக்க மற்றும் சவூதி உளவுத்துறைக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருந்தன.
“அமெரிக்காவில் இருக்கையிலே, செப்டம்பர் 11 கடத்தல்காரர்கள் தனிநபர்களிடமிருந்து ஆதரவையும் உதவியையும் பெற்றனர், அவர்கள் சவூதி அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களாகவும் இருக்கலாம்” என ஆவணம் ஆரம்பிக்கிறது. இந்த தனிநபர்களில் சிலர் “சவூதி உளவுத்துறை அதிகாரிகளாக” இருந்தனர் என்று எஃவ்பிஐ தகவல்கள் சுட்டிக்காட்டியதை அது மேற்கோள் காட்டியது.
இந்த தொடர்புகள் பற்றிய எஃவ்பிஐ மற்றும் சிஐஏ விசாரணைகள், பாராளுமன்ற விசாரணைக்கு பதிலளிப்பதிலேயே முற்றிலும் முன்னெடுக்கப்பட்டன என்று அது சுட்டிக்காட்டிச் செல்கிறது. “செப்டம்பர் 11க்குப் பின்னரே அமெரிக்க அரசாங்கமானது இந்தப் பிரச்சினை பற்றி தீவிரமாய் விசாரிக்கத் தொடங்கியது” என அறிக்கை கூறுகிறது. சவூதி அரேபியா அமெரிக்க “கூட்டாளி” என்ற அந்தஸ்தின் காரணமாக, செப்டம்பர் 11க்கு முன்னர் எஃவ்பிஐ அமெரிக்காவிலுள்ள (உரை திருத்தப்பட்ட) சவூதி அரேபியர்கள் மீது புலனாய்வுகளை வெளியில் தெரியும்படி கவனக்குவிப்புக்கு உள்ளாக்கவில்லை.
எஃவ்பிஐ ஆல் சவூதி உளவுத்துறை அதிகாரி என விவரிக்கப்படும் ஒமார் அல்-பயூமி இன் பாத்திரம் பற்றி அறிக்கையானது பகுதி அளவில் கவனக்குவிப்பு செய்தது, எஃவ்பிஐ கோப்பின் படி, “பிப்ரவரி 2000-ல் அவர் (San Diego) சான்டியேகோ வந்து சேர்ந்த பின்னர் விமானக் கடத்தல்காரர்கள் காலித் அல்-மிதார் (Khalid al-Mihdha) மற்றும் நவாப் அல்-ஹஸ்மி (Nawaf al-Hazmi) ஆகியோருக்கு கணிசமான உதவியைச் செய்தார்.”
இந்த விசாரணை அறிக்கை, அல் ஹஸ்மி மற்றும் அல் மிதாரை அவர்கள் கலிஃபோர்னியாவுக்கு வந்த பின்னரே அது பற்றி கவனம் செலுத்துகின்றது. முதலில் நாட்டுக்குள் எந்த சூழ்நிலைமைகளின் கீழ் அவர்கள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டனர் என்று ஒன்றும் கூறவில்லை. இருவரும் 2000ஆம் ஆண்டிலேயே மலேஷிய, கோலாலம்பூரில் அல்கொய்தா திட்டமிடல் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தபோதே சிஐஏ இன் கண்காணிப்பின் கீழ் இருந்தனர். அவர்கள் அமெரிக்காவிற்குள் வந்தால் எஃவ்பிஐ கண்காணிப்பில் இருப்பதற்காக “கவனிப்பு பட்டியலில்” வைக்கப்பட்டனர். இருப்பினும், அவ்விருவரும் ஜனவரி 15, 2000 அன்று அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர், லாஸ் ஏஞ்சலஸ் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, இறுதியில் சண்டியேகோ சென்றனர். அப்போதிருந்து அவர்கள் செயல்படுவதற்கு சுதந்திரமாக விடப்பட்டனர், செப்டம்பர் 11, 2011ல் அன்று கடத்தப்பட்ட விமானங்களின் விமான ஓட்டிகளாக தங்களின் பாத்திரத்தை நன்கு ஆற்றுவதற்கான தயாரிப்பில் விமான பயிற்சிப் பள்ளியில் சேர அனுமதிக்கப்பட்டனர்.
அறிக்கையானது, அல்-பயூமி “சவூதி பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்துள்ள ஒரு சவூதி நிறுவனத்திலிருந்து உதவிபெற்றார்” செய்யாத வேலைக்காக சம்பளம் பெற்றார் என நிலைநாட்டுகிறது. மேலும் அது, அந்நிறுவனம் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லாடனுடன் உறவும் வைத்திருந்தது என்றும் கூறுகிறது.
அறிக்கையின்படி, அல்-பயூமி முன்னர் சவூதி சிவில் விமான போக்குவரத்து கழகத்தில் வேலை செய்திருந்தார் மற்றும் 9/11க்கு இட்டுச்சென்ற காலகட்டத்தில் விமானக் கட்டுப்பாட்டுக்கு பொறுப்பான சவூதி பாதுகாப்புத்துறையில் எமிர் உடன் அடிக்கடி தொடர்பில்” இருந்தார். தொலைபேசிப் பதிவுகள் அவர் 2000ம் ஆண்டு ஜனவரிக்கும் மே க்கும் இடையில் சவூதி அரசாங்க முகவாண்மைகளை 100 தடவைகள் அழைத்திருந்ததாக காட்டியது.
எஃவ்பிஐ ஆவணங்கள் சவூதி இராணுவ ஒப்பந்தக்காரர் மூலம் பெற்று வந்த “உதவித்தொகை” 465 டாலர், அல்-ஹஸ்மியும் அல்-மிதரும் வந்து சேர்ந்த பின்னர் விரைவில் 3,700 டாலருக்குமேல் தாண்டியது என்பதை உறுதிப்படுத்தின. இந்தக் காலக்கட்டத்தில் அல்-பயூமி இந்த இரு எதிர்கால விமானக்கடத்தல்காரர்களும் சண்டியேகோ எஃவ்பிஐயின் தகவலாளுடன் இணைந்து தங்களுக்கென்று சொந்த தங்கும்இடத்தைக் பெற்றுக்கொள்ளும் வரை அவர்களின் வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடலுடன், அவர்களுக்கு முன்பணத்தைப்போடல் மற்றும் முதல்மாத வாடகையை கட்டல் போன்றவற்றை செய்யும் முன்னர் தனது தங்குமிடத்தில் அவர்களை தங்க அனுமதித்தார்.
9/11 ஐ அடுத்து எஃவ்பிஐ விசாரணையானது, அல்-பயூமி “பயங்கரவாத சக்திகளுடன் சில தொடர்புகளை” வைத்திருந்தார் என்று அறிக்கை கூறுகிறது. இதற்கிடையில் அவரது மனைவி, அப்போது அமெரிக்காவிற்கான சவூதி தூதுவராக இருந்தவரும் பின்னர் சவூதி உளவுத்துறையின் தலைவராக இருந்தவருமான இளவரசர் பண்டரின் மனைவியாகிய இளவரசி ஹைஃபா பின்ட் சுல்தான் இடமிருந்து மாதம் 1,200 அமெரிக்க டாலர்கள் உதவித்தொகையை பெற்றுக்கொண்டிருந்தார்.
ஆவணத்தில் சவூதி உளவுத்துறை முகவராய் இருக்கலாம் என பெயரும் குறிப்பிடப்பட்டுள்ள ஒருவர் ஒசாமா பஸ்னான், இவர் சண்டியேகோவில் இருந்த கடத்தல்காரர்களின் தெருவின் எதிர்ப்பக்கத்தில் வசித்து வந்தார் மற்றும் இந்தக் காலகட்டத்தில் அல்-பயூமியுடன் ஒருநாளக்கு பலமுறை தொலைபேசித் தொடர்பில் இருந்தார். எஃவ்பிஐ அறிக்கையின் படி, அவர் வெளிப்படையாகவே சவூதி வணிக விமானத்தின் விமான ஓட்டி ஒருவருடன், “போயிங் ஜெட் விமானத்தை பறக்க கற்றுக்கொள்ளல்” தொடர்பான கலந்துரையாடலுக்கு வைக்கப்பட்டார். பஸ்னான் மனைவியும் கூட சவூதி தூதுவர் இளவரசி ஹைஃபாவிடமிருந்து மாதம் 2,000 டாலர் உதவித்தொகை பெற்றார். அதேபோல, 1998ல் பன்டரால் பாஸ்னானுக்கு எழுதப்பட்ட 15,000 டாலர்கள் காசோலை பற்றி எஃவ்பிஐ கண்டறிந்தது. அறிக்கையானது பாஸ்னான் “ஒரு தீவிரவாதி மற்றும் உசாமா பின் லேடன் ஆதரவாளர் என்று எஃவ்பிஐ தகவல் கூறியதாக கூறுகிறது. அவர் அல்கொய்தா தலைவரை “அவர் கடவுளாய் இருந்தாற்போன்று” பேசினார் என்று அறிக்கை கூறுகிறது.
9/11 விமானக் கடத்தல்காரகளில் சம்பந்தப்பட்டிருந்த இரு பேர்பெற்ற உளவுத்துறை முகவர்களின் மனைவியருக்கு சவூதி தூதுவரின் மனைவியிடமிருந்து பணம் வழங்கப்பட்டது தொடர்பாக, 2002ல் காங்கிரஸ் விசாரணையின் முன் தோன்றிய, பயங்கரவாத எதிர்ப்பு எஃவ்பிஐ நிர்வாக துணை இயக்குநர் Pasquale D’Amuro இடம் கேள்வி கேட்டபொழுது, சிடுமூஞ்சித்தனத்துடனும் இழிவாகவும் பதிலளித்தார்.
“அவர் பல்வேறு குழுக்களுக்களுக்கும் உலகெங்கிலும் உள்ள நபர்களுக்கும் பணம் அளிக்கிறார்.” என அவர் கூறினார். இந்தவகையான பலவற்றை கண்டுபிடிப்பதற்கு எம்மால் முடிந்திருக்கிறது…… 20 வேறுபட்ட தீவிரவாத பிரிவினருக்கு அவர் கொடுப்பதை கண்டுபிடிக்க எம்மால் முடிந்திருக்கமானால் நல்லது, இங்கு ஒரு கட்டமைப்பு இருக்கலாம்” என்று அவர் அணுகமுடியாதவர் என்று தெளிவாகப் பார்க்கின்ற ஒரு பிரமுகர் பாதுகாப்பு சட்டத்திற்கு மேலானதாக இருப்பதாக நம்பும் மனிதனைப்போல் பேசினார்.
அறிக்கையின் இதர விஷயதானங்கள் மத்தியில், சவூதி உள்துறை அமைச்சக முக்கிய அதிகாரி ஸாலே அல் குஸாயேன் பற்றிய எஃப்பிஐ விசாரணையை திரும்ப நினைவுபடுத்தல் இருந்தது. அவர் 9/11 தாக்குதல்களுக்கு முந்தைய நாள் இரவு மூன்று கடத்தல்காரர்களுடன் அதே வேர்ஜீனிய விடுதியில் தங்கியிருந்தார். அவர் கடத்தல்காரர்களைப் பற்றி தெரியாது என்று கூறும்பொழுது, எஃப்பிஐ முகவர்கள் “அவரை ஏமாற்றும் இயல்புடையவராக இருந்ததாக” நம்பினர்.
அறிக்கையின்படி, அல் குஸாயேன் “உடல்நலக்குறைவாக இருப்பதாய் பற்றிக் கொண்டு” மருத்துவமனைக்கு விடுவிக்கப்பட்டநிலையில், அங்கு விடப்பட்டு பலநாட்களுக்குப் பின்னர், மேற்கொண்டு எந்த கேள்விகளும் கேட்கப்படா நிலையில் ஒரு விமானத்தின் மூலம் சவூதி அரேபியாவுக்கு திரும்பினார். அதேகாலகட்டத்தில், தாக்குதல்களுடன் எந்த தொடர்பும் இல்லாத, கிட்டத்தட்ட 1200 பேர், அவர்கள் அராபியர்கள் அல்லது முஸ்லிம்களாக இருந்தார்கள் என்பதற்கு மேலாக அதிகமாய் எதுவும் இருந்திராத நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு தொடர்புகள் ஏதுமற்று தனிக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அந்த அறிக்கையில், சிஐஏ இன் தீவிர சித்திரைவதைகளுக்கு பின்னர், குவான்டனாமோ குடாவில் வைக்கப்பட்டுள்ள, அல்கொய்தா செயல்பாட்டாளர் அபு சுபையதாவுக்கு சொந்தமான ஒரு தொலைபேசி புத்தகம் என கண்டெடுக்கப்பட்டதில் பட்டியலிடப்படாத நிறுவனங்களின் எண்கள் காணப்பட்டன என்ற உண்மை இருந்தது, அந்நிறுவனங்கள் கொலோரோடோவில் உள்ள சவூதி தூதுவர் இளவரசர் பாண்டர் வசிப்பிடத்திற்கு பாதுகாப்பு வழங்கியது, அதேபோல சவூதி தூதரகத்திலுள்ள மெய்க்காப்பாளர் “எப்படியோ ஒருவராக (வார்த்தைகள் திருத்தப்பட்ட) இருப்பதாக கூறப்படுகிறது என்று கூறுகிறது.”
சவூதி தனிநபர்கள் தொடர்பான இந்தவகை வார்த்தைகள் திருத்தல் ஆவணம் முழுவதும் காணப்படுவதானது, தொடர்ந்து அவர்களின் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படாதிருக்கின்ற ஏதாவதொரு இரகசிய சேவைகளின் அவர்களது அங்கத்துவம் பற்றி கூறுகிறது. இரகசிய ஆவணம் இன்னும் மறைக்கும் ஒரே பகுதி இதுதான். விசாரணைக்குழுவின் பணியாளர்களின் உறுப்பினர்கள், சவூதி சம்பந்தப்பட்டுள்ளமையின் ஆதாரத்தை தெளிவாக வைக்க தவறியது தொடர்பாக கோபப்பட்டு எதிர்ப்புத்தெரிவிக்க, குறைந்த பட்சம் ஒரு பணியாளரை நீக்கும் நிலைக்கு இட்டுச்சென்றதாக கூறப்படுகிறது.
அரசாங்கமானது அத்தகைய சவூதி தொடர்புகளை தொடர்ந்து மறைப்பதற்கு தீர்மானகரமாக இருக்கிறது என்றால், அது ஐயத்திற்கிடமின்றி 9/11 நிகழ்வுகளில் அமெரிக்க உளவுத்துறை முகவாண்மைகள் சம்பந்தப்பட்டுள்ளதை அவை அம்பலப்படுத்தும் என்பதனாலாகும்.
அத்தகைய மூடிமறைப்பு தேவைப்படுகின்றதென்றால், அது அமெரிக்க அரசாங்கத்தின் உள்ளே உள்ள சக்திகள் அல்கொய்தா அமெரிக்க மண்ணில் நடவடிக்கைகளுக்கு தயார் செய்துவந்தது பற்றி அறிதுள்ளனர் மற்றும் அதை கண்காணாமல் இருந்து அதற்கு வசதி செய்து கொடுத்தனர், ஏனெனில் மத்திய கிழக்கில் தீவிரப் போருக்கான நீண்டகால திட்டத்தை மேற்கொள்வதற்கான ஒரு சாக்குப்போக்காக அதனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதனால் ஆகும்.
9/11-சவூதி-அமெரிக்க தொடர்புகள் மீதான மட்டுப்படுத்தப்பட்ட விஷயதானங்கள் வெளியிட்டமை கூட, அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள குற்றவாளிகள், ஜோர்ஜ் டபிள்யு. புஷ்-இலிருந்து கீழ்வரை, மில்லியன் கணக்கானோரின் வாழ்வைச் சீரழித்த யுத்தங்களை செயற்படுத்த அவர்கள் பயன்படுத்திய பொய்களை பற்றிய ஒரு அழிவுகரமான வெளிப்படுத்தல் ஆகும்.
இந்த புதிய உண்மைகள் ஒரு முழுமையான, பாரபட்சமில்லாத மற்றும் சர்வதேச விசாரணையைக் கோருகிறது, அதேபோல அமெரிக்க மற்றும் சவூதியின் இரு உயர்மட்ட அதிகாரிகளையும் குற்றப்பத்திரம் சுமத்தி, கைது செய்யவும் கோருகிறது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சக்திமிக்க தலையீடு மட்டுமே, இந்த போர்க்குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதைக் காணும்.