World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு Leveson whitewash of Murdoch’s UK media empire மேர்டோக்கின் ஐக்கிய இராஜ்ஜிய செய்தி ஊடகப் பேரரசினை லெவிசன் மூடிமறைத்தல் By Julie Hyland
Back to screen versionதிங்கள் அன்று ஐக்கிய இராஜ்ஜியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ் ப்ரையன்ட், News International’s Management and Standards Committee, இப்பொழுது நிறுத்தப்பட்டுவிட்ட ரூபர்ட் மேர்டோக்கின் News of the World தொலைப்பேசித் தகவல் திருடுதல் இன்னும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த விசாரணையில் ஒத்துழைப்பதை மே மாதம் நிறுத்திவிட்டது என்று கூறினார். இதற்குக் காரணம் கோடீஸ்வர தன்னலக்குழுக்காரரான மேர்டோக் மற்றும் அவருடைய மகன் ஜேம்ஸ் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றிய சான்றுகள் வெளிப்பட்டுள்ளதுதான் என தனது பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி கருத்துக்கூறியுள்ளார். பொலிஸ் விசாரணைக்கு உதவுவதில் மகிழ்ச்சி கொண்டு "முதலாளியின் கால்கள் நனையாத வரை" News Inernational “செய்தியாளர்கள் சிலரை படகை" விட்டு தூக்கிவீசிவிட்டனர் என்றும் ப்ரையன்ட் கூறினார். மேர்டோக்கின் 2005ம் ஆண்டு Sun செய்தித்தாள், முன்னாள் ஈராக்கிய ஆட்சியாளர் சதாம் ஹுசைன் தன் உள்ளாடைகளுடன் நின்றிருந்த புகைப்படங்களுக்காக சட்டவிரோதமாகப் பணம் கொடுத்ததை மறைப்பதற்கு News International மடிக்கணினி ஒன்றை அழித்துவிட்டது என்று ப்ரையன்ட் உறுதிபடக் கூறினார். கலிபோர்னியோவில் உள்ள அமெரிக்க இராணுவத்தினர் ஒருவரை தொடர்புபடுத்தும் இந்தச் சட்டவிரோதப் பணக்கொடுப்புக்கு, "ஒருகட்டத்தில் மூத்த இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வரும். அதில் ஜேம்ஸும் ரூபர்ட் மேர்டோக்கும் அந்நிறுவனத்தினர் என்ற முறையில் உள்ளடங்கலாம்" என்ற பொருளைக் கொடுத்தது" என்றார். இந்த ஒரு பிரச்சனைக்காக மேர்டோக் மற்றும் அவருடைய மகன் குற்றச்சாட்டிற்கு உட்படக்கூடிய சாத்தியம் இருந்தபோதிலும், தொலைபேசி ஒற்று, திருடல் ஊழலைத் தொடர்ந்து அமெரிக்காவில் நிறுவப்பட்ட லெவிசன் விசாரணை ஒரு மோசடியை நடத்தியது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட இந்த விசாரணை News International இன் "தொழில்துறை அளவில் குற்றங்கள்" என்பதற்கான சான்றுகளுக்கு பதிலளிப்பு என்று கூறப்பட்டது. மேர்டோக் செய்தி ஊடகம் சட்டவிரோதமாக தனியார் தொலைபேசிகளை நூற்றுக்கணக்கில், ஏன் ஆயிரக்கணக்கில்கூட, ஒற்றுக்கேட்டதுடன் மற்றும் தங்கள் குற்றங்களை மறைக்க பொலிசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இலஞ்சம் கொடுத்தது. ஆனால் இன்றுவரை 19 பேர்மீதுதான் ஏதேனும் ஒரு வகைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. News of the World இன் முன்னாள் ஆசிரியர்கள் ஆண்டி கௌல்டன் மற்றும் ரெபக்கா ப்ரூக்ஸ் உள்ளடங்கலான பெரும்பாலான செய்தியாளர்கள் செப்டம்பர் 2013 வரை விசாரணைக்கு உட்பட மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்ற நடவடிக்கைகளின் சாத்தியம் பற்றிய காரணம்தான் News International’s இன் தவறுகளில் இருந்த தனிப் பொறுப்பு குறித்த விசாரணை பற்றிய விசாரணையை நிராகரிப்பதற்கு ஒரு போலிக் காரணமாயிற்று. ஆனால் லெவிசன் இன் மூடிமறைப்பு அடிப்படையில் ஏற்கனவே வெளிப்பட்டுள்ள குற்றங்களில் தொடர்புடையவர்களை முற்றிலும் விடுவித்த வகையில் இன்னும் அப்பால் செல்கிறது. இவர்களுள் முக்கியமானவர்கள் மேர்டோக்குகள்தாம். கீழ்மட்ட ஊழியர்களின் புத்திகெட்ட மோசடியால் தான் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்த ரூபர்ட் மேர்டோக்கின் கபடமான கூற்று தங்க நாணயம் போல் மதிக்கப்பட்டது. விசாரணையில் ஜேம்ஸ் மேர்டோக்கின் சாட்சி குறித்து "சில கவலைகள்" இருந்தன என ஒப்புக்கொண்டாலும், அதாவது அவர் தொலைப்பேசி ஒற்று-தகவல் திருடல் பற்றி அறிந்திருந்தாரா என்பதில் பொய்ச்சாட்சியம் கூறினாரா என்பது குறித்து, நீதிப்பிரபு லெவிசன் வெற்றுத்தனமாக அவருடைய அறிக்கை குறித்து "எந்த முடிவிற்கும்" தன்னால் வரமுடியவில்லை என்று கூறினார். இந்த ஊழல், மேர்டோக்கிற்கும் பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ அமைப்புக்களுக்கும், முக்கிய நபர்களுக்கும் இடையே இருந்த கூலிக்கு வேலைசெய்யும் உறவுகளை வெளிப்படுத்தும் அச்சுறுத்தலைக் கொண்டிருந்தது. அந்த உறவுகள்தான் மேர்டோக் ஊடகம் இழைத்த குற்றங்களுக்கு பின்னணியாக இருந்தன. மார்கரெட் தாட்சரின் பழைமைவாத அரசாங்கம் தொடங்கி, இன்னும் முக்கியமாக தொழிற்கட்சி மற்றும் டோனி பிளேயர் காலத்திலும், தொடர்ச்சியான பிரித்தானிய அரசாங்கங்கள் மேர்டோக்கின் நீதிமன்றத்தின் முன் மண்டியிட்டு நின்றன. பிரித்தானியாவின் அரசியல் வர்க்கத்திற்கு லெவிசன்னினால் தடையற்ற சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளில் இருந்தும் அரசியல்வாதிகள் செய்தி ஊடகத்துடன் உறவை வளர்த்துள்ளனர், இது "பொதுநலனுக்கு உகந்தது அல்ல" என்பதை ஒப்புக் கொண்டு, அறிக்கை, "News International உடைய ஆதரவு கொள்கை அனுகூலங்களை எதிர்பார்த்து ஒரு ‘உடன்பாடு’ ஒன்றை ஒத்து இருப்பதற்கான சாட்சியம் ஏதும் இல்லை" என்று கூறியுள்ளது. பொதுவாக எதிர்ப்பு ஏதும் இல்லாமல் செய்தி ஊடகத்தால் ஏற்கப்படுகின்ற இத்தகைய நயமற்ற பொய்கள் முன்வைக்கப்படுகின்றன என்ற உண்மையே இந்த ஊழல், அமைப்புமுறையோடு முற்றாக இணைந்துவிட்டது என்பது விதிவிலக்கு என்பதை விட வழமையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. அரசாங்கம் வாடிக்கையாக முக்கிய பிரச்சினைகளை மேர்டோக்குடன் கலந்துரையாடுகின்றது, அவரோ கிட்டத்தட்ட தடுப்பதிகாரம் போன்றதை அரச கொள்கை மீது பயன்படுத்துகிறார் என்பது பகிரங்கமான உண்மையாக இருக்கும் நாட்டில்தான் இது நடக்கிறது. ஜனநாயகம் என்பது ஒரு போலிமறைப்பு, இதன் பின்னால் தன்னலப் பிரபுக்களும் அவர்களுடைய அரசியல் கூலிகளும் தாங்களே சட்டம் போல் செயல்படுகின்றர். ஒற்று குறித்து News of the World இலிருந்து இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு Coulson உட்பட்ட பின்னரே அவரை தன்னுடைய தொடர்புத்துறை இயக்குனராக பிரதம மந்திரி டேவிட் காமெரோன் 2007ல் பதவியிலிருத்தியதை லெவ்சன் உதறித்தள்ளுகிறார். கடந்த ஆண்டு பணம் கட்டி பார்க்கும் தொலைக்காட்சி நிலையமான BskyB ஐ மேர்டோக்கின் News Corporation’s பிரச்சனைக்குரிய முறையில் எடுத்துக்கொள்ள வசதியளித்த முன்னாள் கலாச்சாரத் துறை மந்திரி James Hunt இன் சாட்சியமும் உதறித் தள்ளப்பட்டது. BskyB ஏலத்தில் விடப்படுவதில் ஹன்ட் ஒரு "தீவிரப் பிரச்சினையை" தோற்றுவித்தார் என்றாலும், அவர் எந்த "பக்கச்சார்பையும்" காட்டவில்லை, "சிறப்புடன் செயல்பட்டார்" என்று லெவ்சன் கூறியுள்ளார். பொலிசால் பாதுகாப்பிற்கு உட்பட்டிருந்ததால் News International இன் தவறுகள் ஓரளவிற்கு இன்னும் தடையற்று தொடர்ந்தன. பொலிசார் News International இடம் இருந்து இலஞ்சம் வாங்கியதையும் மற்றும் முந்தைய தொலைபேசி ஒற்றுக்கள் பற்றிய விசாரணைகளை முன்னரே முடித்துவிடுவதற்கான பரந்த சாட்சியங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் லெவிசன் பொலிசார் இவை எதற்கும் பதிலளிக்க வேண்டியதில்லை என்றும் அவர்கள் "அனைத்து நேரத்திலும் நேர்மையுடன் நடந்து கொண்டனர்" என்றும் கூறியுள்ளார். பெரும் குற்றங்கள், முறையற்ற செயல்களில் தொடர்புடையவர்களை பாதுகாப்பது கடந்த ஆண்டு இங்கிலாந்தில் லண்டன் மற்றும் பிற நகரங்களில் கலகங்களில் தொடர்புடைய தொழிலாள வர்க்க இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட கடுமையான தண்டனைகளுக்கு முற்றிலும் எதிராக நிற்கிறது. அவர்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு, அவசர நீதிமன்றங்கள் முன் நிறுத்தப்பட்டு குறைந்த குற்றங்களுக்குக் கூட கடுமையான சிறைத் தண்டனைகளைப் பெற்றனர். அரசியல் உயரடுக்கு, மேர்டோக்கிடம் பணிந்த அடிபணிவுகள், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பகிர்ந்து கொள்ளப்படும் வர்க்க நிகழ்ச்சி நிரலில் வேர்களைக் கொண்டுள்ளன. இவை பெரும் செல்வத்தைத் தொழிலாளர்ளிடம் இருந்து அதிசெல்வந்தர்களுக்கு மாற்றும் செயலை மையமாகக் கொண்டவை. மேர்டோக் ஊடகம் இத்தாக்குதலுக்கு முக்கிய பிரச்சார அமைப்பாகச் செயல்பட்டு இப் பிற்போக்குத்தன தலைமை முதலாளி முக்கிய ஆதாயங்களை பெற்றார். தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பொலிஸ் நடந்துகொள்ளும் முறை மூலம் இது செயல்படுத்தப்பட்டது. அவர்கள் வன்முறையை காட்டி வேலைநிறுத்தங்களை முறிப்பதுடன் குடியுரிமைச் சுதந்திரங்களையும் மிதிக்கின்றனர். இத்தகைய ஒத்துழைப்பு தொடரலாம் என்பதற்கு லெவிசன் உடைய கண்டுபிடிப்புக்கள் பச்சை விளக்கு காட்டுகின்றன. News of the World இன் சட்டவிரோத நடவடிக்கைகள், பிரித்தானிய முதலாளித்துவத்தின் பல பிரிவுகளுக்குள் இருக்கும் போட்டித்தன்மையான வணிக, சொந்த நலன்களை ஒட்டித்தான் வெளிச்சத்திற்கு வந்தன. இந்த விரோதங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், அதே நேரத்தில் மேர்டோக் மற்றும் அவருடைய உயர் ஏவலர்களைச் சுற்றிப் பாதுகாப்பு வளையத்தைக் கொடுத்துள்ள லெவிசன், செய்தி ஊடகத்தைக் கட்டுப்படுத்த ஒரு "சுயாதீன" அமைப்பு தேவை என்னும் கருத்தை முன்வைத்துள்ளார். அதற்கு பாராளுமன்றச் சட்டம் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த அமைப்பு செய்தித்தாட்களுக்கு "செய்தி ஊடகத்தின் ஊடுருவலை ஒரு தனி நபர் வரவேற்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியபின்" செய்தித் தாட்களுக்கு எச்சரிக்கை கொடுக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். தகவல் பாதுகாப்புச் சட்டத்தின்படி விசாரணை நடத்தும் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் முக்கிய சட்டபூர்வ பாதுகாப்புக்கள் அகற்றப்படும், அதையொட்டி மீறுவோர் எனக் கருதப்படுவர் இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம். இத்தகைய நடவடிக்கைகள் சாதாரண மக்களை சக்திவாய்ந்த ஊடகப் பெருநிறுவனங்களிடம் இருந்து தங்கள் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள ஏதும் உதவாது. மாறாக, செல்வந்தர்கள் மற்றும் புகழ்பெற்றவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஊடுருவிலில் இருந்து காப்பாற்றுகையில், உண்மையான விசாரணைத் தகவல் வழங்குவதற்கு மற்றும் தடையற்ற பேச்சு உரிமைக்கு எதிராக கடுமையான தாக்குதல் கொடுக்கப்படும். ஜூலியான் அசாஞ், விக்கிலீக்ஸ் மற்றும் அமெரிக்க சிப்பாயான பிராட்லி மானிங் ஆகியோர் நடத்தப்படும் முறை எந்த அளவிற்கு இவை ஏற்கனவே சென்றுவிட்டன என்பதின் உறையவைக்கும் அடையாளமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நட்பு நாடுகள் நடத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியது ஒரு சதித்திட்டத்தால் எதிர்க்கப்பட்டது. அதில் பிரித்தானியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்வீடன் ஈடுபட்டு அசாஞ் மீது தயாரிக்கப்பட்ட பாலியல் குற்றத் தாக்குதலைக் கொண்டு வந்தன. இதனால் அவர் அமெரிக்காவிற்கு உளவு பற்றிய குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள அனுப்பிவைக்கப்படலாம். லெவிசன் இதற்காக முன்வைக்கும் சட்டம், ஆளும் உயரடுக்கின் இழிந்த செயல்களை அம்பலப்படுத்த முற்படும் எவருக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட முடியும். இந்த இழிந்த விவகாரத்தில் குறிப்பிட்ட "பிரித்தானியவிற்கு" மட்டும் உரிய தனித்துவம் ஏதும் கிடையாது. அதன் மையத்தானத்தில் உள்ள லெவிசன்னினால் கூடக் கையாளப்பட முடியாத மேர்டோக்கின் தொலைப்பேசி ஒற்று ஊழல், எவர் செய்தி ஊடகத்திற்குச் சொந்தம், அதைக் கட்டுப்படுத்துவது எவருடைய நலன்களுக்காக என்ற விடயத்தை எழுப்புகின்றது. பெருநிறுவன உரிமையும் செய்தி ஊடகத்தின் மீதான கட்டுப்பாடும் தொழிலாளர்களின் மிக அடிப்படையான நலன்களுடன் சிறிதும் பொருந்தாதவை ஆகும். செய்தி ஊடகத்தைப் பொது உடைமையின்கீழ், ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் இருத்துவது ஒன்றுதான் பெருநிறுவன-நிதியத் தன்னலக்குழு செய்யும் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தடையற்ற பேச்சு உரிமையை உண்மையாகக் காப்பாற்ற முடியும். இதற்கு முதலாளித்துவ அரசின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் அதன் அரசியல் கட்சிகளுக்கு எதிரான அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது. இதற்கு தொழிலாளர் அரசாங்கத்திற்கும், சமூகத்தின் சோசலிச மறுசீரமைப்பிற்கும் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரட்டப் போராட வேண்டும்.
|
|