நேட்டோ உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, பைடென் நியமனம் தொடர்பாக ஜனநாயகக் கட்சிக்குள் மோதல் தீவிரமடைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வாஷிங்டன் டி.சி.யில் நேட்டோ உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஜனாதிபதி ஜோ பைடெனுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையே ஏற்பட்ட பேரழிவுகரமான விவாதத்தைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சிக்குள் நெருக்கடிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த  நிலைமையில், ரஷ்யாவை அடிபணியச் செய்வதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகள், அமெரிக்க இராணுவத் தளபதியின் அறிவுத் திறன்கள் குறைந்து வருவது பற்றிய கிசுகிசுக்கள் மற்றும் சூழ்ச்சிகள் ஆகியவற்றில், நேட்டோ ஏகாதிபத்தியக் கூட்டணியின் 75 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் ஆதிக்கம் செலுத்தும்.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடனான ஜனாதிபதி தேர்தலுக்கான CNN ஆல் நடத்தப்பட்ட விவாதத்தின் இடைவேளையின் போது, ஜனாதிபதி ஜோ பைடென் மேடையை விட்டு வெளியேறுகிறார். Thursday, June 27, 2024, in Atlanta. [AP Photo/Gerald Herbert]

வேட்புமனுவில் பைடென் தனது மரணப் பிடியைத் தக்க வைத்துக் கொண்டாலும் அல்லது இல்லாவிட்டாலும், அமெரிக்க ஜனாதிபதிக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போர், இனப்படுகொலை மற்றும் சிக்கனக் கொள்கைகளை பைடென் நிர்வாகம் தொடரும். அரசியல் கட்சிகள் மற்றும் அவர்கள் பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டைத் தவிர, தற்போதைய நெருக்கடிக்கு “முற்போக்கான” தீர்வு எதுவும் இல்லை.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதாக உறுதியளிக்கும் கடிதத்தை திங்கள்கிழமை காலை வெளியிட்ட பிறகு, பைடென் MSNBC இல் தனது விருப்பமான தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியான மார்னிங் ஜோவில் ஒரு நீண்ட நேர்காணலில் தோன்றினார். அங்கு அவர் தெரிவித்த கருத்துக்களில், பைடென் நேட்டோ உச்சிமாநாட்டில் உலகளாவிய போரை ஒழுங்கமைப்பதில் தனது பங்கை வலியுறுத்தினார்.

“இந்த வெளிநாட்டுத் தலைவர்கள் அனைவரையும் நான் இங்கு வைத்திருக்கப் போகிறேன், எவ்வாறாயினும், புதிய பிரிட்டிஷ் பிரதமருடன் நான் தொடர்பில் இருந்தேன். நாட்டைப் பாருங்கள், உலகின் பிற நாடுகள், நமது நட்பு நாடுகள், அமெரிக்கத் தலைமையைத் தேடுகின்றன. வேறு யார் இங்கு வந்து இதைச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்? நான் நேட்டோவை விரிவுபடுத்தினேன்! நான் நேட்டோவை திடப்படுத்தினேன்” என்று பைடென் கூறினார். 

மார்னிங் ஜோ நிகழ்ச்சியின் இணை தொகுப்பாளரான மிகா ப்ரெஜின்ஸ்கியின் உடைய தந்தை ஜ்பிக்னியூ பிரேஜின்ஸ்கி, பனிப்போர் காலம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய புவிசார் அரசியல் மூலோபாயவாதிகளில் ஒருவராக இருந்தார். மேலும், அவரது சகோதரர் மார்க் இப்போது போலந்திற்கான அமெரிக்க தூதராக உள்ளார். பைடென் அவரிடம், “போலந்தில் உள்ள உங்கள் சகோதரரிடம் இதைப் பற்றி கேளுங்கள். சீனாவை, ரஷ்யாவை சமாளிக்க, உலகெங்கிலும் உள்ள மக்கள், நாடுகளின் கூட்டணியை கொண்ட ஒரு நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்பதை நான் உறுதி செய்துள்ளேன்“ என்று பைடென் கூறினார்.

“இஸ்ரேலில் காஸா பகுதிக்கு முன்வைக்கப்படும் பைடெனின் திட்டம்” மூலம் அங்கு “உண்மையான முன்னேற்றம்” அடைய இருப்பதாக ஜனாதிபதி கூறினார். இது ஏதோ ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று” என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க ஏகாதிபத்திய இலக்குகளை பாதுகாக்கும் திறனின் அடிப்படையில் தனது முறையீடுகளை செய்த பைடென், ஜனநாயகக் கட்சிக்குள் தனது நியமனம் தொடர்பாக எழுந்துள்ள முக்கிய மோதல், முதலாளித்துவ அரசியல்வாதிகள் அனைவரும் உறுதியாக, தாங்கள் இணைந்திருக்கும் போர் நிகழ்ச்சி நிரலை மிகவும் திறம்பட தொடரக்கூடிய ஒரு தந்திரோபாயப் போராட்டம் என்று அடிக்கோடிட்டுக் காட்டினார். 

இந்த யதார்த்தத்திலிருந்து திசைதிருப்பும் முயற்சியில், பைடென் தனது மில்லியனர் புரவலர்களிடம் பேசும் போது ஒரு ஆத்திரமூட்டும் ஜனரஞ்சக தொனியில் இதனைத் தாக்க முயன்றார். “கட்சியில் உள்ள உயரதிகாரிகளால் நான் விரக்தியடைந்துள்ளேன் (இல்லை, நான் உங்களைப் பற்றி பேசவில்லை) ஓ, அவர்களுக்கு இன்னும் நிறைய தெரியும்” என்று அவர் புலம்பினார்.

வார இறுதியில் கவனமாக எழுதி தயாரிக்கப்பட்ட சில பிரச்சார நிகழ்வுகள் “சராசரி வாக்காளர்கள்” அவரை ஆதரிப்பதை நிரூபித்ததாக அவர் கூறினார்.

“அங்குள்ள சராசரி வாக்காளர்கள் இன்னும் ஜோ பைடெனை விரும்புவதை, நான் சரியாகச் சொன்னேன் என்பதை உறுதிப்படுத்த விரும்பினேன். அவர்கள் அதனை செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று பைடென் கூறினார்.

உண்மையான ட்ரம்ப் பாணியில், “எங்களிடம் அதிக மக்கள் கூட்டம் இருந்தன, எங்களிடம் உற்சாகமான கூட்டங்கள் இருந்தன”, மேலும் அவர் “சராசரி வாக்காளர்களைப்” பற்றி மட்டுமே அக்கறை காட்டுவதாகவும், “கோடீஸ்வரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நான் கவலைப்படவில்லை” என்றும் பைடென் பொய்யாகக் கூறினார்.

இரண்டு நிமிடங்களுக்குள், பைடென் தனது போக்கை மாற்றினார்: “எனக்கு அவர்களின் மில்லியனர்களின்] ஆதரவு வேண்டும், ஆனால் அதனால் நான் ஓடவில்லை.” அவர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களுக்கு என்ன ஆர்வம் இருக்கிறது என்பதைப் பற்றி நான் பேசவில்லை. தவிர, அவர்களில் பலர் டிரம்பை நோக்கி வருவதை நாங்கள் காணவில்லை. டிரம்பிற்கு நிறைய தலைமை நிர்வாக அதிகாரிகள் வருவதை நாங்கள் காணவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

மார்னிங் ஜோ நிகழ்ச்சியில் பைடெனின் நேர்காணலுக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு வெளிவந்த ஒரு கட்டுரையில், “ஒரு தனிப்பட்ட அழைப்பில் பைடென் தனது சிறந்த நிதி திரட்டுபவர்களை அமைதிப்படுத்த முயற்சிக்கிறார்,” MSNBC நிகழ்ச்சியில் அவர் தோன்றிய பிறகு, பைடென் கிட்டத்தட்ட 20 நிமிட தனிப்பட்ட தொலைபேசி அழைப்பை நடத்தினார் என்று நியூ யோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அவரது மிகப்பெரிய நிதி திரட்டுபவர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் சிலரை அழைக்கவும், அதில் அவர் அவர்களின் ஆதரவிற்காகவும், டிரம்ப் மீது “காளையின் கண்களை” வைத்திருக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

டைம்ஸ், இந்த அழைப்பில் “கிட்டத்தட்ட ஒரு டசின் பேர்கள்”, பத்திரிகைக்கு விவரித்த கருத்துக்களை மேற்கோள் காட்டி, பைடென் முன் தயாரிக்கப்பட்ட நான்கு கேள்விகளை மட்டுமே எடுத்ததாக அறிவித்தது. அந்த அழைப்பில் இருந்தவர்களில், மேரிலாண்ட் கவர்னர் வெஸ் மூர் மற்றும் பிரச்சார மேலாளர் ஜெனிபர் ஓ’மல்லி தில்லன் ஆகியோர் அடங்குவர். கடந்த திங்கட்கிழமை, ஓ’மல்லி தில்லன், பைடெனின் உயர்மட்ட நன்கொடையாளர்கள் சுமார் 500 பேருடன் இதேபோன்ற நிதி அழைப்பை ஏற்பாடு செய்தார்.

பைடென், நிதிய தன்னலக்குழுவின் ஆதரவை விரும்பவில்லை அல்லது தேவையில்லை என்று பொய்யாகக் கூறினாலும், “நன்கொடையாளர்களின்” கருத்து, இந்த நிலைமைக்கு ஒரு தீர்க்கமான காரணியாகும் என்பதே உண்மை. வேறு வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் வரை கட்சிக்கு நன்கொடை வழங்குவதை நிறுத்தி வைப்பதாக பல மில்லியனர்கள் ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

கடந்த திங்களன்று NPR, விவாதத்தைத் தொடர்ந்து பைடெனின் நியமனத்திற்கு எதிராக ஏற்பாடு செய்த நிர்வாகிகள் மற்றும் ஜனநாயகக் கட்சி நன்கொடையாளர்களின் குழுவான “தலைமை இப்போது திட்டத்தின்” 400 உறுப்பினர்களில் ஒருவரான Weyco Group Inc. Tom Florsheim இடம்பெற்ற நேர்காணலை ஒளிபரப்பியது. ஒரு புதிய ஜனநாயகக் கட்சிக்கு “ஜோதியை அனுப்ப” பைடெனுக்கு இந்தக் குழு அழைப்பு விடுத்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பைடெனின் விலகலை ஆதரிப்பதாக அறிவித்த பின்னர், வாஷிங்டன் பிரதிநிதி ஆடம் ஸ்மித் திங்களன்று அதிகாரப்பூர்வமாக பைடெனை அதற்கு ஒப்புக்கொள்ளுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்த பிரதிநிதிகளின் சபையின் ஆறாவது ஜனநாயகக் கட்சிக்காரரானார். “தனிப்பட்ட முறையில், கமலா ஹாரிஸ் ஒரு சிறந்த மற்றும் வலுவான வேட்பாளராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன்,” என்று ஸ்மித் CNN இடம் கூறினார். ஸ்மித் பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் குழுக் கமிட்டியின் முக்கிய உறுப்பினர் ஆவர்.

பைடெனை நீக்குமாறு அவர் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், ஞாயிற்றுக்கிழமை மீட் தி பிரஸ் நிகழ்ச்சியில் ஸ்மித் தோன்றியபோது, ​​ பிரதிநிதிகளின் சபையின் உளவுத்துறை குழுக் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதியுமான ஆடம் ஷிஃப் (கலிஃபோர்னியா), பைடென், டொனால்ட் டிரம்புடன் சேர்ந்து தரையை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

“இது மிகவும் நெருக்கமாக இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது அதுதான் ஜனாதிபதியின் வயது” என்று ஷிஃப் கூறினார். ஜனநாயகக் கட்சியின் தேசிய பாதுகாப்பு ஸ்தாபனத்தில் உள்ள மிக மோசமான நபர்களில் ஒருவரிடமிருந்து வரும் இத்தகைய கருத்துக்கள் வேண்டுமென்றே திசைதிருப்பப்படுகின்றன. போர், இனப்படுகொலை, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், இவை அனைத்தும் 81 வயதான பைடெனுக்கும் அவரது 78 வயதான பாசிச எதிர்ப்பாளரான டொனால்ட் ட்ரம்புக்கும் இடையிலான மூன்றாண்டு முரண்பாட்டின் அடிப்படையில் வாக்காளர்களுக்குப் பொருத்தமற்றவை.

சிஐஏ மற்றும் வலதுசாரி ஜனநாயகக் கட்சியினர் பைடெனை ராஜினாமா செய்யுமாறு தொடர்ந்து அழைப்பு விடுக்கும் அதே வேளையில், கட்சியில் உள்ள இடது-பேச்சாளர்கள், முக்கிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் கூட்டணி வைத்து, போர்வெறி கொண்ட ஜனாதிபதியை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். 

திங்களன்று NBC இன் ரியான் நோபல்ஸுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவின் நியூ யோர்க் பிரதிநிதியும் மற்றும் ஜனநாயக சோசலிஸ்டுகள் கட்சியின் உறுப்பினருமான அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ் “இனப்படுகொலை ஜோ” க்கு தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார். வார இறுதியில் தான் பைடெனுடன் பேசியதாகவும், “அவரது எதிர்காலம் குறித்த ஊகங்களுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் இது” என்றும் அவர் கூறினார்.

அவர் நோபல்ஸிடம், “ஜோ பைடென் எங்கள் வேட்பாளர். அவர் இந்த போட்டியை விட்டு விலகப் போவதில்லை. அவர் இந்த பந்தயத்தில் இருக்கிறார், நான் அவரை ஆதரிக்கிறேன்” என்று ஒகாசியோ-கோர்டெஸ் கூறினார்.

திங்களன்று மின்னசோட்டாவில் ஒளிபரப்பத் தொடங்கிய ஒரு வீடியோ விளம்பரத்தில், சக “அணி” உறுப்பினர், பிரதிநிதி இல்ஹான் ஓமர், “இனப்படுகொலை ஜோ”வைப் புகழ்ந்து பாடுவதற்கு முடிவு செய்தார். 

காங்கிரஸ் பெண் உறுப்பினரான ஓமர், “இங்கே இருப்பதற்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்று பைடெனுக்கு பதிவிட்டார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

கடந்த திங்களன்று, காங்கிரஸின் முற்போக்குக் குழுவின் தலைவரான வாஷிங்டன் மாநிலத்தின் பிரதிநிதி பிரமிளா ஜெயபால் ஒரு அறிக்கையை வெளியிட்டார்: “ஜனாதிபதி பைடென் மற்றும் துணைத் தலைவர் ஹாரிஸ் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளனர், இது மக்களுக்காக நாம் ஒன்றாகச் சாதிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது” என்று அவர் தெரிவித்தார். 

Boston Globe க்கு ஒரு வழங்கிய கருத்துரையில், செனட்டர் எலிசபெத் வாரன் (மாசசூசெட்ஸ்) “ஜனாதிபதி பைடென் எங்கள் வேட்பாளர். அவர் ஒரு சிறந்த ஜனாதிபதி. அவர் ஒவ்வொரு நாளும் உழைக்கும் குடும்பங்கள் சார்பாக கடினமாக உழைக்கிறார்“ என்று அறிவித்தார்.

ஆளும் வர்க்கம் மற்றும் பெருநிறுவனங்களின் ஏஜெண்டுகள் என்று தங்களையும் அவர்கள் தலைமை வகிக்கும் அமைப்புகளையும் இவர்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர். ஜூலை 3 அன்று மின்சார தொழிலாளர்களின் சர்வதேச சகோதரத்துவத்தின் (IBEW) தலைவர் கென்னத் கூப்பர் மற்றும் AFL-CIO இன் தலைவர் லிஸ் ஷுலர் ஆகியோர் பைடென்-ஹாரிஸ் தேர்தலில் போட்டியிடுவதுக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டனர்.

இரண்டு அதிகாரத்துவவாதிகளும் உண்மையிலிருந்து முற்றிலும் விலகி, பைத்தியக்காரத்தனமான பாராட்டுக்களை வழங்கினர். “IBEW தொழிலாளர்களைப் பாதுகாப்பதிலும் அவர்களது குடும்பங்களைப் பாதுகாப்பதிலும் தீவிரமாக இருக்கும் தலைவர்களுடன் மட்டுமே பங்காளிகள். … அதனால்தான் 2024 இல் ஜனாதிபதி ஜோ பைடெனை ஆதரிப்பதில் IBEW பெருமிதம் கொள்கிறது” என்று கூப்பர் எழுதினார். “பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் போன்று, தொழிலாளர்களை எந்த வெள்ளை மாளிகையும் ஆதரிக்கவில்லை” என்று ஷூலர் கூறினார்.

Loading