மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மாக் ட்ரக்ஸ் வாகனத் தொழிலாளி வில் லெஹ்மன், ஐக்கிய ஆட்டோ தொழிலாளர்கள் (UAW) உயர்மட்ட தொழிற்சங்க அதிகாரிகளுக்கான தேர்தலில் வாக்களிக்கும் காலக்கெடுவை 30 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்த வழக்குக்கு தொழிலாளர்கள் உற்சாகமாக பதிலளித்துள்ளனர். ஊழல் நிறைந்த UAW எந்திரத்தை அகற்றுவதற்கும் அதிகாரத்தை சாமானிய தொழிலாளர்களுக்கு மாற்றுவதற்குமான ஒரு தளத்தின் அடிப்படையில் லெஹ்மன் UAW தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
டெட்ராய்டில் உள்ள பெடரல் நீதிபதி டேவிட் எம். லோசன் இந்த வழக்கை இன்று நவம்பர் 22 அன்று விசாரிக்கிறார். UAW, தேர்தலுக்கு பயனுள்ள அறிவிப்பை வழங்கத் தவறியதன் மூலம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான சாமானிய தொழிற்சங்க உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளை மீறுகிறது என லெஹ்மன் வாதிடுகிறார். இதுவரை, தகுதியான UAW உறுப்பினர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே வாக்குச் சீட்டுகளைத் திருப்பி அனுப்பியுள்ளனர். வாக்குகளை அனுப்புவதற்கான காலக்கெடு ஏற்கனவே கடந்துவிட்டது. பல தொழிலாளர்கள் வாக்குச்சீட்டுகளைப் பெறவில்லை அல்லது தேர்தலைப் பற்றிக் கூட அறிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
டெட்ராய்ட்டிற்கு வெளியே உள்ள ஃபோர்டு டியர்போர்ன் டிரக் ஆலையைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, வாக்களிக்க 30 நாட்கள் நீட்டிப்பு கோரிய வழக்கைப் பற்றிக் கேள்விப்பட்டதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.
“உண்மையில் தேர்தல் பற்றிய எனது தகவலை வில் லெஹ்மன் பிரச்சாரத்தில் இருந்து பெற்றேன், தொழிற்சங்கத்திலிருந்து அல்ல. நான் [WSWS Autoworker] செய்திமடலைப் படித்தேன். ஃபோர்டு தொழிலாளர்கள் வீடற்றவர்களாக இருப்பது மற்றும் அவர்களின் கார்களில் வாழ்வது பற்றிய கட்டுரையைப் படித்தேன். அது மோசமானது! இது போன்ற ஒரு வேலை செய்ய, நீங்கள் உங்கள் காரில் வாழ வேண்டியுள்ளது!
இத் தேர்தல், 'உள்ளாட்சித் தேர்தல்களைப் போலவே இருக்குமென்றுதான் முதலில் நினைத்தேன், அங்கு அவர்கள் எப்பொழுதும் ஆலைகளுக்கு வெளியே சென்று வாக்களியுங்கள் எனக் கூறி, தங்கள் வேட்பாளருக்கு வாக்களிக்க மக்களைத் தள்ளும் விளம்பரங்களை அனுப்புவார்கள்.” தற்போதைய UAW தலைவர் ரே கார்ரியின் ஆதரவாளர்களை இங்கே ஒருமுறை மட்டுமே பார்த்தேன்! அவர்கள் ஒரு நாள் மட்டுமே விளம்பரங்களை விநியோகித்துச் செல்வதை நான் பார்த்தேன், அவ்வளவுதான்.
'நான் [UAW தலைவருக்கான] விவாதத்தைப் பார்த்தேன், அப்போதே இப்படி விவாதம் நடத்துவது புதிய விஷயமாக என்று நினைத்தேன். ஆனால் நான் பார்த்தபோது, அதில் பல ஏற்கனவே முன்னரே தீர்மானிக்கப்பட்டவை என்பதை உணர்ந்தேன். நீங்கள் கேள்விகளை கவனமாக அவதானித்திருப்பீர்களானால், எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நீங்களும் பெற்றிருப்பீர்கள், அந்தக் கேள்விகள் கார்ரி குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களின் ஆட்கள் நிறைய பேர் அவர்களுக்கே கேள்விகளை அனுப்பினார்கள். இந்த கேள்விகள் சர்வதே பிரதிநிதிகள் மற்றும் பலவற்றிலிருந்து அனுப்பியதாக நான் கருதுகிறேன்.
'விவாதத்தில் சாமானிய தொழிலாளர்களின் சார்பில் வில் இருந்ததை நான் விரும்புகிறேன், எனவே ஒவ்வொரு நாளும் நாங்கள் கையாளும் பிரச்சினைகளுக்கான பதில்களை அவர்கள் உண்மையில் சமாளிக்க வேண்டியிருந்தது.
'தொழிற்சங்கத் தலைமைதான் பிரச்சினை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் நீங்கள் எதையாவது கொண்டு வரும்போது அவர்களின் பதில், 'அவர்களால் அதைச் செய்ய முடியும், அவர்களால் அதைச் செய்ய முடியும்.’ என்பதே.
'இது TPT களுக்கு [தற்காலிக பகுதி நேர பணியாளர்களுக்கு] மிகவும் கடினமாக உள்ளது, ஏனெனில் வேலை குறைவான மாதத்தில் தொடர்ந்து அவர்களை பணிநீக்கம் செய்கிறார்கள். அது மிகப்பெரியது. நீங்கள் ஒரு நிரந்தர முன்னேற்றப் தொழிலாளியாக இல்லாவிட்டால், அவர்கள் உங்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வேலை கிடைக்கும்; எனவே, நீங்கள் இரண்டாவது வேலை செய்ய வேண்டும்.”
Ford's Chicago Assembly Plant (CAP) இன் ஒரு தொழிலாளி மற்றும் CAP சாமானிய தொழிலாளர் குழுவின் உறுப்பினர் ஒருவர் வில்லின் வழக்கை ஆதரித்து பேசினார். வாக்குகளை அனுப்புவதற்கான காலக்கெடு முடிந்து சில நாட்களுக்கு பின்னரும் தொழிலாளிக்கு இன்னும் வாக்குச்சீட்டு கிடைக்கவில்லை.
'வில்லின் வழக்கை நான் ஆதரிக்கிறேன்,' என்று தொழிலாளி கூறினார். “‘எங்கே வில் இருக்கிறாரோ,’ ‘அங்கே ஒரு வழி இருக்கிறது’ என்று நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.” இந்த வழக்கில் வில் வெற்றி பெறுவார் என நம்புகிறேன். நாளின் முடிவில், இது UAW இன் ஊழலைக் காட்டுகிறது. இது வேண்டப்படாதது, நாம் அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டும். யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இதுவரை 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே வாக்களித்துள்ளனர்... எத்தனை தொழிலாளர்கள் உள்ளனர்? ஒரு மில்லியன்? மேலும் 9 சதவீத வாக்குகள் மட்டுமே இருக்க வேண்டுமா? தேர்தல் இருப்பது கூட பலருக்குத் தெரியாது. இதில் நியாயம் எங்கே இருக்கிறது?
'நான் அவர்களை எனது வாக்குச்சீட்டுக்காக இரண்டு முறை அழைத்தேன், ஒன்றுமில்லை. அவர்கள், 'கோப்பில் உள்ள முகவரி சரிதானா?' அதை ஒரு தபால் பெட்டிக்கு எண்ணுக்கு அனுப்பச் சொன்னேன், அதை அவர்கள் செய்வார்கள் என்றார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு அழைத்தேன். மீண்டும் தபால் பெட்டிக்கு அனுப்புவதாக கூறினர். இதுவரை எதுவும் இல்லை. பூஜ்யம். எதுவும் இல்லை. நான் தினமும் சென்று பார்க்கிறேன். சிகாகோ பொருத்தும் ஆலையில் வாக்குச் சீட்டு கிடைக்காத பலரிடம் நான் பேசினேன்.”
தொழிலாளி மேலும் கூறுகையில், “வாக்கைப் பற்றித் தெரியாத நிறையப் புதியவர்கள் நம்மிடம் உள்ளனர். வருவாய் விகிதம் அதிகமாக உள்ளது. அவர்கள் சந்தா தொகையை செலுத்துகிறார்கள். தொழிற்சங்க நிர்வாகிகள் கட்டுப்பாட்டை கொண்டுள்ளனர். அடுத்த வருடம் ஒப்பந்த காலம் என்பதால் இந்த புதிய ஆட்களை எல்லாம் வேலைக்கு அமர்த்துகிறார்கள்.”
தொழிலாளி மேலும் கூறினார், “எங்கள் அதிகாரிகளில் சிலர் கார்ரியை விரும்புகிறார்கள். அது அவர்களின் மக்கள். எங்களுக்கு ஒரு வாக்கு இருக்கிறது என்றுகூட குறிப்பிட விரும்பவில்லை. எங்கள் பெரும்பாலான அதிகாரிகள் தாங்கள் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை எங்கள் முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளனர். சிலர் கார்ரி என்றார்கள், சிலர் [UAW அதிகாரத்துவ அதிகாரி ஷான்] ஃபைன் என்றார்கள்.
'நிறைய அதிகாரிகளுக்கு வில் பிடிக்காது, ஏனென்றால் அது அவர்களைக் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற்றுகிறது, அது அவர்களை பெட்டியிலிருந்து வெளியேற்றுகிறது. அவர்கள் எங்களுடன் இல்லை, அவர்கள் நிறுவனத்துடன் இருக்கிறார்கள்.”
CAP இல் உள்ள UAW Local 551 இந்த ஆண்டின் தொடக்கத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் Facebook பக்கத்தை மூடுவதன் மூலம் தணிக்கை பிரச்சாரத்தைத் தொடங்கியது. 'இந்த அதிகாரிகள் இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் எங்கள் பேஸ்புக் பக்கத்தை அகற்றினர். நாங்கள் நீண்டகால உறுப்பினர்கள், எங்கள் நாக்கை அடக்குவதில்லை. அதனால்தான் அவர்கள் அதைச் செய்தார்கள், அவர்களுக்குத் தெரியும். இதையெல்லாம் யாராவது எதிர்க்க வேண்டும். அதனால்தான் நான் எல்லா வழிகளிலும் வில் உடன் கூடி பயணிக்கின்றேன்.
CAP இன் தொழிலாளி குறிப்பிட்டார், UAW அதிகாரிகள், அவர் ஒரு சோசலிஸ்ட் என்பதால் லெஹ்மனை தாக்கினார், ஆனால் தொழிலாளர்கள் கம்யூனிச-எதிர்ப்பு முயற்சியை பின்னுக்குத் தள்ளிவிட்டனர். 'வில் ஒரு சோசலிஸ்ட் என்பதால் அவர்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை. நான் சோசலிஸ்டுக்கு வாக்களிக்கவில்லை' என்று ஒருவர் கூறினார். அவர் தொழிற்சங்க அதிகாரி என்று சொல்லலாம்.”
“கார்ரியும் ஃபைனும் எங்களைப் புரிந்து கொள்ளவில்லை. நிறுவனம் விரும்புவதை அவர்கள் செய்கிறார்கள். ஆனால் நம்மை நாமே பார்த்துக் கொள்கிறோம். எங்களுக்கு ஒரு சோசலிஸ்ட் தேவை, தொழிலாளர்களுக்காக இருக்கும் ஒருவர்.”
CAP தொழிலாளி, 1936-1937ல் சோசலிச எண்ணம் கொண்ட தொழிலாளர்கள் தலைமையில் போர்க்குணமிக்க GM உள்ளிருப்பு வேலைநிறுத்தங்களின் வரலாற்றைக் குறிப்பிட்டார். “எங்கள் தொழிற்சங்கம் ஒரு காலத்தில் வலுவாக இருந்தது; அது போராடியது. பெண்கள் வெளியே வந்து தங்கள் கணவர்களை ஆதரவளித்தனர். அவர்கள் போலீஸ் முன் நின்றார்கள், அது என்னை ஒரு பெண் என்பதில் பெருமை கொள்ள வைத்தது! அவர்கள் நடவடிக்கை எடுக்க உதவினார்கள். [GM உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தின் போது] நிறைய பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
“அவர்கள் சண்டையிட்டார்கள், காவல் துறையினர் அவர்களைச் சுட முற்பட்டபோது தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு தடுப்புகள் இருந்தன, அது உற்சாகமானது! இன்று தொழிற்சங்கம் அப்படி எதுவும் செய்யாது. இப்போது UAW நிறுவனம் தாங்கள் போராடியதை எடுத்துச் செல்ல அனுமதிக்கிறது.”
ஃபோர்டின் கன்சாஸ் சிட்டி பொருத்தும் ஆலையில் (KCAP) ஒரு தொழிலாளி, “வில் சிறப்பாக செயல்பட நான் வாழ்த்துகிறேன். வழக்கு வெற்றி பெறும் என்று நம்புகிறேன். தொழிலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இது மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
“வாக்குச்சீட்டுகள் மக்களுக்கு தபாலில் அனுப்பப்படவில்லை. எனது ஆலையில் உள்ள நிறைய பேருக்கு தங்களுக்கு வாக்கு இருக்கிறது என்பது கூட தெரியாது. இது உள்ளாட்சித் தேர்தல்களைப் போல் இல்லை, அங்கே தெரிவுக்குழுவினர் வாயிலுக்கு வெளியே நின்று கொண்டு, அவ்வாறு வாக்களிக்குமாறு கேட்பது போன்று இல்லை. நான் பலரிடம் பேசினேன், 'நாங்கள் தலைமைக்கு வாக்களிக்கிறோம் என்பது கூட எனக்குத் தெரியாதுள்ளது.’
'அதிகாரத்துவத்தினர் கவலைப்பட வேண்டிய ஒன்று இருப்பதை அறிவார்கள், அல்லது அவர்கள் வாக்குகளை அடக்க முயற்சிக்க மாட்டார்கள். மக்கள், 'நான் உங்களை தொடர்பு கொள்கிறேன் சகோதரா’ என்பதை கேட்டு சோர்வடைந்து போனார்கள், பின்னர் நீங்கள் அவர்களை பல மாதங்களுககு பார்க்கமுடியாது. தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை அழைப்பதில் சோர்வாக இருக்கிறார்கள், யாரும் அவர்களை திரும்ப தொடர்புகொள்வதில்லை.”
வில் லெஹ்மனின் பிரச்சாரம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, WillforUAWPresident.org ஐப் பார்வையிடவும் .
மேலும் படிக்க
- சென்னையில் ரெனால்ட்-நிசான் தொழிலாளர்கள் இந்தியாவின் முதல் சாமானிய தொழிலாளர்களின் வாகன தொழிலாளர் குழுவை உருவாக்குகிறார்கள்
- வில் லெஹ்மனின் வழக்குக்கு பதிலளிக்குமாறு அமெரிக்க தொழிலாளர் அமைச்சருக்கு மத்திய நீதிபதி உத்தரவிட்டார்
- UAW தொழிற்சங்க எந்திரம் ஜனநாயக விரோதமாக வாக்குப்பதிவை ஒடுக்குவதை எதிர்த்து வில் லெஹ்மன் வழக்கு தாக்கல் செய்கிறார்