மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்தக் கட்டுரை முதலில் ட்விட்டரில் வெளியிடப்பட்டது.
651 அரசு அதிகாரிகள் மீது தேசத்துரோக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், உக்ரேனின் பாதுகாப்பு சேவைகளின் தலைவர் மற்றும் தலைமை வழக்குத்தொடுனர் செலென்ஸ்கியால் திடீர் பதவி நீக்கம், ஆட்சிக்குள் ஒரு பெரிய நெருக்கடியை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
போரைத் தொடர்வதில் உக்ரேன் முற்றிலும் ஒன்றுபட்டுள்ளது என்ற கூற்றுக்கு மாறாக, ரஷ்ய சார்பு துரோகம் பற்றிய குற்றச்சாட்டுகளின் பின்னணியில் பாரிய களையெடுப்பு, செலென்ஸ்கியின் உள் வட்டம் உட்பட அரசின் மிக உயர்ந்த மட்டங்களில் போருக்கு கணிசமான எதிர்ப்பு இருப்பதைக் குறிக்கிறது.
நியூ யோர்க் டைம்ஸ் பின்வருமாறு எழுதுகிறது: 'ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரேன் பெருமளவில் ஒன்றுபட்டிருந்தாலும், ரஷ்யாவுடனான அதன் ஆழ்ந்த கலாச்சார மற்றும் வரலாற்று உறவுகளால் நாட்டின் சில பகுதிகளில் மாஸ்கோவுக்கான ஆதரவு காணப்படுகின்றது'.
செலென்ஸ்கி 'தேசத்துரோகம் மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகள்' என்று அழைக்கும் 651 விசாரணைகளின் தொடக்கமானது, 'மாஸ்கோவுக்கான ஆதரவான இடங்கள்' மிகவும் ஆழமானவை என்பதை வலுவாக சுட்டிக்காட்டுகிறது.
ரஷ்யாவுடனான உறவுகள் 'குறிப்பாக தெற்கு உக்ரேனில் கிரிமியா பகுதிக்கு அருகில்... மற்றும் ரஷ்ய எல்லைக்கு அருகில் கிழக்கின் சில பகுதிகள்... படையெடுப்பிற்குப் பின்னர் ரஷ்ய படைகளுக்கு நடைமுறை ஆதரவாக மாற்றப்பட்டுள்ளன' என்று நியூ யோர்க் டைம்ஸ் கூறுகிறது.
உக்ரேனிய பாதுகாப்பு சேவை (Ukrainian Security Service - SBU) 27,000 பேரை பணியமர்த்ததியுள்ளது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய உளவுத்துறை நிறுவனமாக உள்ளது. இது ஒரு போலீஸ் அரசின் எந்திரமாகும். அதன் செயல்பாடுகளில் சிஐஏ ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
'அதிக அனுபவம் வாய்ந்த தலைவர்களை முக்கிய பாதுகாப்பு பதவிகளில் அமர்த்துவதற்கான திரு. செலென்ஸ்கியின் முயற்சிகளை இந்த நகர்வுகள் பிரதிபலிக்கின்றன' என்று நியூ யோர்க் டைம்ஸ், தெரிவித்துள்ளது. அது மேலும், 'அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தங்கள் உக்ரேனிய பங்காளிகளுக்கு பெரும் அளவிலான தகவல்களை வழங்குகின்றன' என்றும் தெரிவிக்கிறது.
சிஐஏ செலென்ஸ்கிக்கு பெயர்களை வழங்குவதுபோலவும், உக்ரேனிய அரசிற்குள் அரசியல்ரீதியாக நம்பகத்தன்மையற்றது என்று கருதும் கூறுகளை, அதாவது உக்ரேனிய உயிர்களின் இழப்பின் மத்தியிலும் அமெரிக்க-நேட்டோவின் பினாமிப் போரின் தொடர்ச்சியை எதிர்க்கும் கூறுகளை அகற்றுவதை மேற்பார்வையிடுகிறது போலிருக்கின்றது.