மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்த கட்டுரை முதலில் ட்விட்டரில் வெளியிடப்பட்டது.
ஒரு கட்டுரை, இன்று இணையத்தில் வெளியிடப்பட்டு, நியூ யோர்க் டைம்ஸ் இன் Sunday Magazine இல் அச்சிடப்பட்டிருந்தது. இது பேராசிரியர் திமோதி ஸ்னைடரின் வரலாற்றை திரிபுபடுத்தும் மற்றும் உக்ரேனிய பாசிசத்திற்கு ஆதரவளிப்பதில் வகிக்கும் பாத்திரத்தின் மற்றொரு இழிந்த உதாரணமாகும்.
இரண்டாம் உலகப் போரின்போது போலந்து மக்கள் மற்றும் யூதர்களை உக்ரேனிய தேசியவாதிகளால் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றிய ரஷ்ய குறிப்புகளை 'ஒருபோதும் நடக்காத ஒரு கடந்த காலம்' மற்றும் 'வரலாற்றின் முட்டாள்தனமான மற்றும் விசமத்தனமான கதைகள்' என்று ஸ்னைடர் ஏளனமாக நிராகரிக்கிறார்.
ஆனால் அவரது தொழில்வாழ்க்கையின் முந்தைய கட்டத்தில், ஸ்னைடர் உக்ரேனிய தேசியவாதிகள் அமைப்பின் (OUN) இனப்படுகொலை நடவடிக்கைகள் பற்றிய விரிவான விபரங்களை எழுதியிருந்தார். '1943 உக்ரேனிய-போலந்து இனச் சுத்திகரிப்புக்கான காரணங்கள்' என்ற அவரது கட்டுரை மே 2003 இல் Past and Present என்ற பதிப்பில் வெளிவந்தது.
அந்த 37 பக்க அறிவார்ந்த கட்டுரை, வோல்ஹினியாவில் போலந்து மக்களை OUN பெருமளவில் கொன்றது குறித்து கவனம் செலுத்தியது. OUN இன் இராணுவப் பிரிவான உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் [UPA], 'சுமார் ஐம்பதாயிரம் வோல்ஹினிய போலந்து மக்களைக் கொன்றது மற்றும் பல்லாயிரக்கணக்கானவர்களை 1943 இல் நாட்டைவிட்டு தப்பி ஓடச் செய்தது' என்று ஸ்னைடர் எழுதினார்.
ஸ்னைடரின் கணக்கின்படி, 'ஏப்ரல் 1943 இன் இறுதியில், UPA ஒருவேளை பத்தாயிரம் துருப்புக்களைக் தனது கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. மேலும் வோல்ஹினியாவின் பெரும்பகுதியினரை பரஸ்பர படுகொலை செய்வதற்கு இட்டுசென்றது'. ஸ்னைடர் தொடர்ந்தார்:
ஏப்ரல் முழுவதும் மற்றும் வோல்ஹினியா முழுவதும், UPA படையினர்கள் குடியிருப்புக்கள் மற்றும் கிராமங்களைச் சுற்றி வளைத்து, வீடுகளை எரித்து, தப்பிக்க முயன்றவர்களை சுட்டுக் கொன்றனர் அல்லது அங்கே இருக்க கட்டாயப்படுத்தினர்.
கலப்பு குடியேற்றங்களில் UPA இன் பாதுகாப்பு பிரிவினர் உக்ரேனியர்களை இரவில் தப்பி ஓடுமாறு எச்சரித்தனர். பின்னர் விடியற்காலையில் எஞ்சியிருந்த அனைவரையும் கொன்றனர். இது தலைமையற்ற மற்றும் ஒழுங்கமைக்கப்படாத மக்கள் மீது ஆயுதமேந்திய நபர்களால் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதலாகும்.
உக்ரேனிய தேசியவாதிகளின் படுகொலை பற்றிய ஸ்னைடரின் ஒரேயொரு 'விசமத்தனமான கணக்கு' இதுவல்ல. New York Review of Books இல் பெப்ரவரி 2010 இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், ஸ்னைடர் அப்போதைய உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யுஷ்செங்கோவின் OUN குற்றங்களை மூடிமறைப்பதை வெளிப்படையாகக் கண்டித்தார்.
“ஜூனில் [1941இல்] சோவியத் ஒன்றியத்தை வேர்மாஹ்ட் ஆக்கிரமித்தபோது, அவர்களுடன் ஹங்கேரி, ருமேனியா, இத்தாலி மற்றும் ஸ்லோவாக்கியாவின் படைகள் மற்றும் OUN-B உடன் தொடர்புடைய உக்ரேனிய தன்னார்வலர்களின் சிறிய குழுக்கள் இணைந்தன.
'இந்த உக்ரேனிய தேசியவாதிகளில் சிலர் யூதர்களின் மீதான கொலைவெறி படுகொலைகளை ஒழுங்கமைக்க ஜேர்மனியர்களுக்கு உதவினார்கள். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்களது சொந்த இனத்தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கும், யூதர்களை சோவியத் கொடுங்கோன்மையுடன் அடையாளப்படுத்துவதற்கும் இணக்கமான ஒரு ஜேர்மன் கொள்கையை முன்னெடுத்துச் சென்றனர்.
'அவர்களின் கட்டளையின் கீழ், UPA 1943 மற்றும் 1944 இல் மேற்கு உக்ரேனில் போலந்து மக்களை இனரீதியாக சுத்திகரித்தது. UPA கிளர்ச்சியாளர்கள் பல்லாயிரக்கணக்கான போலந்து மக்களைக் கொன்றனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகளும் ஆவர். போலந்து குடும்பங்களில் தஞ்சம் புகுந்த சில யூதர்களும் கொல்லப்பட்டனர்.”
ஸ்னைடர் இப்போது உக்ரேனிய பாசிசம் பற்றிய குறிப்புகளை ரஷ்ய பிரச்சாரம் என்று நிராகரிக்கிறார். ஆனால் 2010 கட்டுரையில், 'ஜேர்மன்-உக்ரேனிய பாசிஸ்டுகள்' பற்றிய சோவியத் விளக்கம், 'சோவியத் ஒன்றியத்திற்கு உள்ளும், அதற்கு வெளியிலும் நீடித்த மற்றும் தாக்கம்மிக்க பிரச்சாரமாக செயல்படும் அளவுக்கு துல்லியமானதாக இருந்தது' என்று எழுதினார்.
அவர் ஒருபோதும் இது பற்றி விளக்காது, பெப்ரவரி 2010 New York Review of Book கட்டுரைக்கும் அக்டோபர் 2010 வெளியிடப்பட்ட Bloodlands ஆகியவற்றுக்கும் இடைப்பட்ட மாதங்களில், ஸ்னைடர் உக்ரேனிய வரலாறு குறித்த தனது விளக்கத்தை அடியோடு மாற்றினார்.
Bloodlands இல் அவர் வழங்கிய கற்பனையான மற்றும் நச்சுத்தனமான சோவியத் எதிர்ப்புக் கட்டுக்கதைகளில் OUN பற்றிய செயல்பாடுகள் முற்றிலும் மறைந்துவிட்டன. ஸ்னைடர் வரலாற்றை எழுதுவதில் இருந்து அமெரிக்காவின் ரஷ்ய-எதிர்ப்பு கொள்கைக்கான பிரச்சாரத்தை தயாரிப்பதற்கு மாறினார்.
ரஷிய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் என்ற எனது புத்தகத்தில், Bloodlands பற்றிய மதிப்பீட்டிற்கு ஒரு அத்தியாயத்தை ஒதுக்கினேன். அதை இங்கே காணலாம்.
அதில் நான் பின்வருமாறு எழுதினேன்: 'திமோதி ஸ்னைடரின் எழுத்துக்களில் நாம் வரலாற்றை எழுதுவதற்கும் பிரச்சாரத்தை தயாரிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை தவிர்க்கும் ஆரோக்கியமற்ற மற்றும் ஆபத்தான போக்கை எதிர்கொள்கிறோம்'. 2014 இல் எழுதப்பட்ட இந்த எனது மதிப்பீடு முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
- 2022 மே தினத்தின் சவால்: முதலாளித்துவம், தேசிய பேரினவாதம் மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக!
- டேவிட் நோர்த் ரஷ்ய தோழருக்கு எழுதிய கடிதம்: "புட்டினின் படையெடுப்பு ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் நேட்டோவின் இடைவிடாத அழுத்தத்திற்கான ஒரு அவநம்பிக்கையான பிரதிபலிப்பு"
- நியூ யோர்க் டைம்ஸ், போர்க்குற்றங்கள் மற்றும் நூரெம்பேர்க் முன்னோடி
- மீண்டுமொருமுறை போர் குற்றங்கள் மற்றும் போர் குற்றவாளிகள் தொடர்பாக