அமெரிக்காவும் நேட்டோவும் சிரியாவை தங்கள் பார்வையில் வைத்துள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சிரியாவில் ரஷ்யாவின் இராணுவத் தலையீட்டில் கற்றுக்கொண்ட பாடங்களை ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எவ்வாறு உக்ரேனுக்கு எதிரான அதன் போரில் நன்றாகப் பயன்படுத்துகிறார் என்பது பற்றிய பிரச்சாரக் கட்டுரைகளால் ஊடகங்கள் குவிந்துள்ளன.

அமெரிக்க பைடென் நிர்வாகமும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் உக்ரேனில் நடக்கும் போரை சிரியாவில் இருந்து ரஷ்யாவை வெளியேற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக எந்த அளவிற்கு பார்க்கிறார்கள் என்பதை இந்த ஆத்திரமூட்டல்களின் மூர்க்கத்தனம் சுட்டிக்காட்டுகிறது. அங்கு ரஷ்யா சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தை வீழ்த்துவதற்கான வாஷிங்டனின் திட்டங்களையும் மற்றும் 2011 அரபு வசந்தத்தை அடுத்து இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களை பினாமிகளாகப் பயன்படுத்தி ஈரானைத் தனிமைப்படுத்த முயன்றதையும் முறியடிப்பதில் முக்கிய பங்கு வகித்தது.

அமெரிக்க இன் NPR கட்டுரையின் தலைப்பு “ரஷ்யா சிரியாவில் தனது வழிமுறைளைக் காட்டியது. உக்ரேனில் உள்ள குடிமக்களுக்கு இதன் அர்த்தம் என்ன என்பதை அதில் பட்டியலிட்டுள்ளது. அலெப்போ மற்றும் இட்லிப் மாகாணத்தில் குடிமக்களுக்கு எதிரான ரஷ்ய வான்வழித் தாக்குதல்கள் பரவலான உயிர் இழப்பு, பொதுக் உள்கட்டமைப்பிற்கு சேதம் மற்றும் போர்க்குற்றங்கள் என்று கூறக்கூடிய மக்கள் பெருமளவில் இடம்பெயர்வதற்கு வழிவகுத்தது.

சிரியாவில் அமெரிக்க மற்றும் ரஷ்ய கவச வாகனங்கள் [Credit: Russian MoD]

சிரிய எதிர்ப்பின் மன உறுதியை உடைத்து நாட்டை துண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட அதே கொலைகார தந்திரோபாயங்கள் உக்ரேனிலும் பயன்படுத்தப்படும் என்று NPRவாசகர்களை எச்சரிக்கிறது. 2011 முதல் 2014 வரை சிரியாவுக்கான அமெரிக்கத் தூதராக இருந்த ரொபேர்ட் ஃபோர்டை மேற்கோள் காட்டி, “அவர்கள் பொதுமக்கள் இலக்குகளை தாக்கத் தயங்க மாட்டார்கள். பின்னர் இரண்டாவது பாடம் என்னவென்றால், அவர்கள் அதைப் பற்றி தொடர்ந்து பொய் சொல்கிறார்கள்”.

அவர் மேலும் கூறினார், “நிச்சயமாக, சிரியாவில் அவர்கள் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்துவது முதல் முறை அல்ல. செச்சினியாவில் நடந்த மோதலில் அவர்கள் அதை குரோஸ்னி நகரில் பயன்படுத்தினர். எனவே, இது அவர்களின் வழக்கமான வழிமுறை புத்தகம் என்று நான் கருதுகிறேன். மேலும் அவர்கள் அதை உக்ரேனில் பயன்படுத்தும் காலங்களும் வரலாம்”.

இங்கிலாந்தில், மேர்டோக் பத்திரிகையின் The Sun இவ்வாறு குரைக்கும் தலைப்பின் கீழ் மேலும் செல்கிறது: 'உக்ரேன் போரில் நோய்பிடித்த பேயான புட்டின் சிரியா வழிமுறையைப் பயன்படுத்துகிறார். உலகம் இரசாயன ஆயுதங்கள் மற்றும் மருத்துவமனை குண்டுவெடிப்புகளை எதிர்பார்க்க வேண்டும்.' ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 'ரஷ்யர்களின் மத்திய கிழக்கு மற்றும் செச்சினியாவின் சொந்த பிரதேசத்தில் பயன்படுத்திய அதே போர்த் திட்டத்தை' பின்பற்றுகிறார் என்று குற்றம் சாட்டுகிறது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் 2013 இல் சிரியாவில் ஜனாதிபதி அசாத் நடத்திய ஒரு இரசாயனத் தாக்குதலின் பின்னணியில் கிரெம்ளின் இருப்பதாகவும், 'தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான யோசனையை அங்கீகரித்ததாகவும், சிரியர்கள் தங்கள் சொந்த மக்கள் மீது தாக்குதல்களை நடத்த அனுமதித்ததாகவும்' கூறப்பட்டது.

இரண்டு மோதல்களுக்கும் இடையே சமகாலத் தொடர்பை ஏற்படுத்துவதற்காக, உக்ரேனில் உள்ள தனது படைகளுக்கு ஆதரவாக சிரியாவில் இருந்து 'கூலிப்படைகளை' அணிதிரட்ட ரஷ்யா தயாராகி வருவதாக கட்டாரின் நிதியுதவி பெறும் இணையதளமான அரபி21ஐ ஊடகங்கள் மேற்கோளிட்டுள்ளன. ஒரு சிரிய பத்திரிகையாளர் Arabi21 க்கு, நூற்றுக்கணக்கான சிரிய போராளிகள் ஆபிரிக்காவில் சண்டையிடும் படைகளைக் கொண்ட ரஷ்ய “வாக்னர் குழு” என்னும் ஆயுதக்குழுவில் சேர்ந்துள்ளனர் என்று கூறினார்.

முந்தைய ஏகாதிபத்தியப் போரை நியாயப்படுத்த வெறுக்கத்தக்க நபர்களான அல்-கொய்தா மற்றும் ISIS இன் இறுதிக்கோட்டையாக கருதப்படும், 'எதிர்க்கட்சியின்' கையிலுள்ள இட்லிப்பில் உள்ள சிரிய மக்கள் படும் துன்பங்களில் ஊடகங்கள் தங்கள் கைகளை சூடாக்கிக்கொள்கின்றன. பெயரளவிலான தாராளவாத கார்டியன் உட்பட, குடிமக்களுக்கு எதிராக ரஷ்யா செய்த குற்றங்கள் மற்றும் அட்டூழியங்கள் பற்றிய முடிவற்ற கதைகளை அவர்கள் வெளியிடுகிறார்கள். இதன்மூலம் போர், தணிக்கை மற்றும் நிகழ்ச்சி நிரலை மேலும் முன்னெடுப்பதற்கு தேவையான அரசியல் சூழலை உருவாக்க உதவுகின்றனர். இதன்போது, ஈராக் முதல் சிரியா மற்றும் யேமன் வரையிலான மத்திய கிழக்கின் பல்வேறு பகுதிகளில் நடந்த அமெரிக்க, இஸ்ரேல் அல்லது சவுதி தாக்குதல்களையும், 2017ல் மொசூல் மீது அமெரிக்கா தலைமையிலான குண்டுவீச்சையும், ஏகாதிபத்திய சக்திகள் சிரியா உள்ளடங்கலாக நாடுகளில் தேசிய இறையாண்மையை மீறியதை உலகின் பத்திரிகையாளர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.

மேலும், மூலவளங்கள் நிறைந்த பிராந்தியத்தில் தங்கள் மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக அமெரிக்காவும் நேட்டோவும் மத்திய கிழக்கில் புதிய ஆக்கிரமிப்புப் போர்களுக்குத் தயாராகி வரும் நிலையில், அவர்களின் கூற்றுக்கள் சிரியாவில் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய புறக்கணித்து, திரித்து, முழுதான பொய்யை வெளிப்படுத்துகின்றன.

இப்போது 11 வருடங்கள் நீடித்த சிரியப் போர் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. இது அமெரிக்கா மற்றும் அதன் பிராந்திய நட்பு வளைகுடா நாடுகளான துருக்கி மற்றும் இஸ்ரேல் உடன் அரபு வசந்தத்தின் மத்தியில் மார்ச் 2011 இல் ஆர்ப்பாட்டங்களை பன்படுத்தி, அசாத்தை வெளியேற்றுவதற்கு அல் நுஸ்ரா முன்னணி போன்ற அல் கொய்தாவுடன் தொடர்புடைய படைகளுக்கு ஆயுதமளிக்கும் முயற்சியாகத் தொடங்கியது. CIA இன் கையாட்கள் மற்றும் ஆட்சிக்கான எதிர்ப்பாளர்களையும் 'மிதவாத' கூட்டத்தையும் ஊக்குவித்தது. இந்த சுன்னி இஸ்லாமிய கும்பல்களும் ஆயுதக்குழுக்களும் கொலைகள், தேவையற்ற அழிவுகள், மிரட்டல்கள் மற்றும் திருட்டுகள் போன்றவற்றின் வெறியாட்டத்தில் ஈடுபட்டபோதும், மக்கள் ஆதரவைக் குறைவாகக் கொண்டிருந்த இந்த சக்திகளை, ஜனநாயகத்திற்காகப் போராடும் 'புரட்சியாளர்கள்' என்று ஊடகங்களும் போலி-இடது குழுக்களும் பாராட்டின.

சிரிய அரசாங்கம் ஆதரவிற்காக அதன் நட்பு நாடுகளிடம் திரும்பியது. ஈரான் தனது படைகளையும் போராளிகளையும் லெபனான் ஷியைட் குழுவான ஹெஸ்பொல்லாவிடம் இருந்து திரட்டியது. ரஷ்யாவின் ஈடுபாடு மிகவும் குறைவாகவே இருந்தது: அது ஆயுதங்களை வழங்கியது மற்றும் லிபியாவில் நடந்ததைப் போல வாஷிங்டனால் மீண்டும் சூழ்ச்சி செய்யப்படுவதைத் தடுக்க டமாஸ்கஸுக்கு அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்கியது. அது 'கிளர்ச்சியாளர்களுக்கும்' அசாத் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய முயன்றது. அதே நேரத்தில் சிரியாவில் இராணுவத் தலையீடுகளுக்கு ஒரு போலிக்காரணமாகப் பயன்படுத்தக்கூடிய ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களைத் தடுத்தது.

ஆகஸ்ட் 2013 இல், முன்னர் குறிப்பிட்ட டமாஸ்கஸுக்கு அருகில் உள்ள கௌட்டாவில் நடந்த இரசாயனத் தாக்குதலைத் தொடர்ந்து ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு வெளியேறுவதற்கான பாதையாக காட்டி உதவியது ரஷ்யாதான். அமெரிக்கா இத்தாக்குதலுக்கு சிரிய அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டி, அதன்மீதான இராணுவத் தாக்குதலை நியாயப்படுத்த திட்டமிட்டதுடன் ஒரு ஆட்சி மாற்றத்தினை நோக்கி முன்னெடுத்தது. ஒபாமா தனது குண்டுவீச்சு பிரச்சாரத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், திட்டமிட்ட தலையீட்டை இரத்துசெய்து, சிரியாவை இரசாயன ஆயுதங்களிலிருந்து விடுவிக்கும் உடன்பாட்டை புட்டின் வழங்கினார்.

வாரங்களுக்குப் பின்னர், ஐ.நா. இரசாயன ஆயுத ஆய்வாளர்கள், 'கிளர்ச்சி' படைகளால் நடத்தப்பட்ட பல சாரின் வாயுத் தாக்குதல்களைச் சுட்டிக்காட்டினர். அதே நேரத்தில் புலிட்சர் பரிசு பெற்ற புலனாய்வுப் பத்திரிகையாளர் சீமோர் ஹெர்ஷ், London Review of Book இல், ஒபாமா நிர்வாகம் இந்த தாக்குதலுக்கு சிரிய அரசு மற்றும் இராணுவத்தின் மீது பொய்யாக குற்றம்சாட்டுவதற்கு வேண்டுமென்றே எவ்வாறு உளவுத்துறையை திரிபுபடுத்தியது என்பது பற்றிய விரிவான விவரத்தை அளித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை வெளியேற்றி, உக்ரேனிய அரசாங்கத்தை தூக்கியெறிந்த தீவிர வலதுசாரி சக்திகளை உள்ளடக்கிய அமெரிக்க ஆதரவு மைடான் சதியின் ஒரு வருடத்திற்கும் மேலாக, அதன் சொந்த முஸ்லீம் மக்கள் மற்றும் மத்திய ஆசியாவில் அண்டை நாடுகளிடையே அதிகரித்து வரும் அமைதியின் மத்தியில், செப்டம்பர் 2015 இல் தான் ரஷ்யா சிரிய மோதலில் நுழைந்தது.

சிரிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கையின் பேரிலான இந்த தலையீடு, வடமேற்கில் உள்ள சிரியப் படைகள், அசாத்தின் முக்கிய ஆதரவு பகுதிகள் மற்றும் பனிப்போரின் உச்சத்தில் 1971 இல் நிறுவப்பட்ட மத்தியதரைக் கடலில் உள்ள ரஷ்யாவின் ஒரே கடற்படைத் தளமான டார்டஸ் துறைமுக நகரம் உட்பட கடலோரப் பகுதிகளை அச்சுறுத்தும் இஸ்லாமிய படைகளுடனான தோல்வியை எதிர்கொண்டபோது நிகழ்ந்தது.

அரபு உலகில் ரஷ்யாவின் முதல் இராணுவத் தலையீடு இதுவாகும். அதே சமயம் வாஷிங்டனின் மிக சமீபத்திய கொலைவெறி பிரச்சாரங்களில் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா ஆகியவை அடங்கும். அதன் சதித்திட்டங்கள் மற்றும் 1952 இல் பிரிட்டிஷ் ஆதரவு எகிப்திய முடியாட்சியை கேர்னல் கமால் அப்துல் நாசர் தூக்கியெறிய வழங்கிய ஆதரவு உட்பட திரைக்குப் பின்னாலான உள்ள சூழ்ச்சிகளான ஈரானின் தேசியவாத அரசாங்கத்திற்கு எதிரான 1953 இன் சதி, 1957 இல் சிரியா, 1958 இல் லெபனான் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

கிளர்ச்சியாளர்களை தோற்கடிப்பதில் ரஷ்யாவின் வான்படை தீர்க்கமாக இருந்தது. அதன் 5,000-7,000 படைகள் டார்டஸில் விரிவாக்கப்பட்ட கடற்படைத் தளத்திலிருந்தும், சமீபத்தில் விரிவுபடுத்தப்பட்ட கெமிமிமில் உள்ள விமானத் தளத்திலிருந்தும், ஈரானிய, ஹெஸ்புல்லா ஈராக் மற்றும் துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப்பின் மேற்கு மாகாணத்தில் இஸ்லாமியவாதிகளை கட்டுப்படுத்தவதில் வெற்றி பெற்ற சிரிய-ஆட்சியின் தரைப்படைகளுக்கு வான்வழிப் பாதுகாப்பு வழங்கியது. ரஷ்யாவின் தரைப்படைகள் முக்கியமாக அதன் தளங்களைப் பாதுகாக்க இருந்தன.

ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள், எப்போதும் குறிப்பிட்ட நேரத்திற்கு கட்டுப்பட்டதாகவும், நோக்கம் மற்றும் தந்திரோபாயங்களில் வரையறுக்கப்பட்டதாக இருக்கும் நோக்கத்திலானது. இது பெரும்பாலும் ISIS உடன் இணைக்கப்பட்ட குழுக்களை விட அசாத்தின் ஆயுதமேந்திய எதிரிகளை பெரிதும் இலக்காகக் கொண்டதுடன் மற்றும் ஷியா அச்சு என்று அழைக்கப்படும் ஈரான், ஹெஸ்பொல்லா மற்றும் ஈராக் உடனான அதன் பலவீனமான கூட்டணியில் தங்கியிருந்தது.

சிரியாவில் ஒரு கொடிய குறுங்குழுவாதப் போரை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட ஒரு பிற்போக்குத்தனமான ஜிஹாதி அமைப்பான அமெரிக்கா அல்லது ISIS ஆகியவற்றின் கைகளில் அசாத் வீழ்வதை அவர்களில் யாரும் பார்க்க விரும்பவில்லை. ஜூலை 2014 இல், பாக்தாத்தையே அச்சுறுத்தி, ஈராக்கின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியபோதுதான் ISIS முக்கிமான பொது எதிரியானது.

மாஸ்கோ முக்கிய மக்கள்தொகையுள்ள மையங்களில் சிரிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைப் பெறவும், அசாத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும், அதன் ஆயுதங்களை சோதிக்கவும், அதன் படையனருக்கு போர்ப் பயிற்சியை வழங்கவும், டார்டஸ் மற்றும் கெமிமிமிம் துறைமுகங்களில் நீண்டகாலம் தங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளைப் பெறவும் முடிந்தது. இது துருக்கி, ஈரான், இஸ்ரேல், எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் லெபனான் உட்பட பிராந்தியம் முழுவதும் அதன் செல்வாக்குடன் மேம்பட்ட ஆயுதங்களை விற்பதற்கும், வர்த்தகம் மற்றும் முதலீட்டின் விற்பனையை விரிவுபடுத்தி, சிரியாவை ரஷ்யாவின் பிராந்திய கோட்டைகளில் மிக முக்கியமானதாக மாற்றியது.

ஒரு நாளைக்கு 4 மில்லியன் டாலர்கள், 28 ரஷ்ய உயிர்கள், மற்றும் 2015 இல் துருக்கியினால் ரஷ்ய Su-24 குண்டுவீச்சு விமானத்தை சுட்டு வீழ்த்தியது என்ற ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் இது அடையப்பட்டது. 224 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய உயிர் இழப்பாகும். அக்டோபர் 31, 2015 அன்று எகிப்தில் ISIS உடன் இணைந்த பிரிவு ஒன்றின் கைகளில் சினாய் தீபகற்பத்தில் அது சுட்டு வீழ்த்தப்பட்டது.

வாஷிங்டனின் இழப்பில் ஒரு முக்கிய புவிசார் அரசியலில் முக்கியதான தீர்மானிப்பவராக மத்திய கிழக்கிற்கு ரஷ்யா திரும்பியுள்ளதை, இப்போது உக்ரேனை மையமாகக் கொண்ட ஆட்சி மாற்றத்திற்கான போரின் ஒரு பகுதியாக, அமெரிக்கா தலைகீழாக மாற்றத் தீர்மானித்துள்ளது. அமெரிக்காவும் நேட்டோவும் மாஸ்கோ சிரியாவில் உள்ள தனது படைகளில் சிலவற்றை உக்ரேனுக்கு மீண்டும் அனுப்ப வேண்டும் என்று எண்ணுகின்றன. இதன் மூலம் இட்லிப் மற்றும் கிழக்கு சிரியாவில் உள்ள தங்கள் இஸ்லாமிய கையாட்கள் துருக்கியின் ஆதரவுடன் சிரியாவின் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசம் மற்றும் சிரியாவின் முக்கிய மக்கள்தொகை மையங்களை நோக்கி முன்னேற முடியும். இதன் மூலம் அசாத்தின் அரசாங்கத்தை பதவி நீக்கலாம்.

அவர்கள், உக்ரேனுடன் சேர்ந்து, துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள டார்டனெல்லஸ் மற்றும் போஸ்பரஸ் ஜலசந்திகளை ரஷ்ய போர்க்கப்பல்களுக்கு மூடுமாறு துருக்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகான் அதன் முழு ஐக்கியப்பட்ட பிரதேசத்திலும் உக்ரேனின் இறையாண்மைக்கு துருக்கியின் ஆதரவை அறிவித்ததை அடுத்து கடந்த வாரம் அங்காரா, ஜலசந்தியை கடக்கும் போர்க்கப்பல்களை நிறுத்தும் முடிவை ரஷ்யாவிற்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாக தெரிவித்தது. இது உக்ரேனை ஆதரிப்பதற்கான ஒரு தற்காப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டாலும், ரஷ்யாவின் கப்பல்கள் மத்தியதரைக் கடலில் இருந்து வெளியேறி தமக்கு தேவையானவற்றை தமது நாட்டிலிருந்து பெறுவதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Loading