கிழக்கு ஜெருசலேமில் நெத்தனியாகுவின் ஆத்திரமூட்டல்கள் பாலஸ்தீனியர்களுடனான போருக்கு அச்சுறுத்துகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் குடியிருப்பில் சியோனிச குடியேற்றவாசிகள் பாலஸ்தீனிய குடும்பங்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்ற முற்படுகையில், ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேலிய பொலிசாரின் கலகப்படை மற்றும் குதிரைப்படையுடனான ஆக்கிரமிப்பை பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சந்தித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் பலத்த இஸ்ரேலிய அடக்குமுறையால் தூண்டப்பட்ட முன்னைய நாட்களின் மோதல்களைத் தொடர்ந்து வருகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் வடக்கு துறைமுக நகரமான ஹைஃபாவின் வீதிகளில் இறங்கியபோது அங்கு 18 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் நாசரேத் மற்றும் ரமல்லாவும் இடம்பெற்றது. ஜெருசலேம் கிப்ரூ பல்கலைக்கழகத்தின் வாயில்களுக்கு வெளியே கலகப் பிரிவு போலீசாருடன் மோதல்களும் நடந்தன. அங்கு இஸ்ரேலிய பொதுமக்களால் ஒரு பாலஸ்தீனியர் தாக்கப்பட்டமை ஒரு ஆர்ப்பாட்டத்தை தூண்டியது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் ஏற்பட்ட காயங்களுக்கு 14 பேர் சிகிச்சை பெற்றதாக பாலஸ்தீனிய Red Crescent அமைப்பு தெரிவித்துள்ளது. இது கடந்த மூன்று நாட்களில் காயங்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையை 560 ஆக அதிகரித்துள்ளது.

மே 8 சனிக்கிழமையன்று கிழக்கு ஜெருசலேமின் ஷேக் ஜார்ரா பகுதியில் பாலஸ்தீனிய குடும்பங்களை வெளியேற்ற திட்டமிட்டதற்கு எதிரான போராட்டத்தின் போது இஸ்ரேலிய காவல்துறை அதிகாரிகள் ஒரு பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரரை தடுத்து வைத்தனர். (AP Photo/Oded Balilty)

பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாகுவின் அரசாங்கம் திங்களன்று ஒரு தீவிர வலதுசாரி இஸ்ரேலிய தேசியவாதிகளின் ஆத்திரமூட்டும் அணிவகுப்பு ஜெருசலேமில் நடைபெற உள்ளதால் பாலஸ்தீனியர்களுடன் மேலும் மோதல்களுக்கு ஆயத்தமாக காவல்துறை மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளை (IDF) தயார் செய்துள்ளது.

ஏப்ரல் 12 ம் தேதி ரம்ழான் நோன்பு தொடங்கியதிலிருந்து ஜெருசலேம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. டமாஸ்கஸ் வாயிலுக்கு வெளியே உள்ள திறந்தவெளியைச் சுற்றி அதிகாரிகள் தடுப்புகளை நிறுவினர். இது அல் அக்ஸா மசூதியில் பிராத்தனைக்கு பின்னர் வழிபாட்டாளர்கள் ஒன்றுகூடும் இடமாகும். இது பொலிஸ் மற்றும் காயமடைந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களுடன் பல மோதல்களுக்கு வழிவகுக்கிறது.

மேலும், அதிகாரிகள் மேற்கு சுவரில் இறந்த படையினருக்கான இஸ்ரேலின் நினைவு நாள் விழாவை பிரார்த்தனைக்கான அழைப்பு ஒலிபெருக்கி அழைப்பு சீர்குலைக்காது இருப்பதற்கு மசூதியின் ஒலிபெருக்கிகளை துண்டித்துவிட்டனர். மேலும் தடுப்பூசி காரணமாக ரம்ழான் சேவைகளில் கலந்துகொள்ளும் மேற்குகரை பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கையை வெறும் 10,000 ஆக கட்டுப்படுத்தியது.

பழைய நகரத்தின் வடக்கே பாலஸ்தீனிய அண்டை குடியிருப்பான ஷேக் ஜர்ராவில் காவல்துறையினருடன் இரவு மோதல்கள் நடந்துள்ளன. குடியேறியவர்களுக்கு வீடுகளுக்கு வழிவகுப்பதற்காகவும், பழைய நகரத்தை யூதர்கள் அதிகரித்தவில் சுற்றிவளைப்பது தொடர்பான ஒரு நீண்டகால சட்ட வழக்கில், பாலஸ்தீனிய குடும்பங்கள் வெளியேற்றப்படுவதை எதிர்த்து பாலஸ்தீனிய இஸ்ரேலியர்கள் ஒன்றுகூடி வருகின்றனர். தனது ஆதரவு அடித்தளத்தை உயர்த்துவதற்காக நெத்தன்யாகுவால் வளர்த்தெடுக்கப்பட்ட பாசிச மற்றும் இனவெறி சட்டமன்ற உறுப்பினர் இட்டாமர் பென்-கிவிர், தனது சொந்த "அலுவலகத்தை" அக்குடியிருப்பு பக்கத்தில் அமைப்பதன் மூலம் தீப்பிழம்புகளைத் தூண்ட முயன்றார். இன்று இடம்பெறவிருந்த இந்த வழக்கின் உச்சநீதிமன்ற விசாரணை, அரச வழக்குத்தொடுனர் அவிச்சாய் மண்டெல்பிளிட்டின் கோரிக்கையின் பேரில் 30 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட வெளியேற்றம் என்பது நகரத்தை யூதமயமாக்கும் அரசாங்கத்தின் பரந்த செயல்முறையின் ஒரு பகுதியாகும். இதனால் பாலஸ்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேமின் ஒரு பகுதியை அதன் தலைநகராகக் கொண்டு தங்கள் சொந்த குட்டி-அரசை அமைத்துக்கொள்வதை எவ்வகையிலும் சாத்தியமில்லாததாக்குகின்றது.

ஜெருசலேம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் நடவடிக்கைகள், வீடு இடிப்பது, குடியேற்ற விரிவாக்கம் மற்றும் பலஸ்தீனியர்களின் இடம்பெயர்ப்பு ஆகியவை உடமைகளை அழித்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தனது சொந்த மக்களுக்கு மாற்றுவது ஜெனீவா உடன்படிக்கை மற்றும் சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாகும். இது உண்மையான இன சுத்திகரிப்பாகும்.

கடந்த வியாழக்கிழமை இரவு, நூற்றுக்கணக்கான தீவிர வலதுசாரி யூத இஸ்ரேலியர்கள் ஜெருசலேமின் தெருக்களில் "அரேபியர்களுக்கு மரணம்" என்று கோஷமிட்டு பாலஸ்தீனியர்களை எதிர்கொண்டனர். இது 100 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை காயப்படுத்த வழிவகுத்து, 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்ததுடன், மேலும் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை இரவு, கலகப் பிரிவு போலீசார் முஸ்லிம்களுக்கு அல்-ஹராம் அல் ஷாரிப் எனவும் யூதர்களுக்கு மலைக்கோயில் என்றும் அழைக்கப்படும் ஜெருசலேமின் அல்-அக்ஸா வளாகத்தை தாக்கினர். அதிகாரிகள் மீது பாலஸ்தீனியர்கள் கற்களையும் பட்டாசுகளையும் எறிந்ததாகக் கூறியதை அடுத்து மசூதிக்குள் நுழைந்து, தங்கள் காலணிகளால் பிரார்த்தனை விரிப்புகளை மிதித்தனர்.

இதில் 200 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததுடன், 88 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கலவரம் அடக்கும் தாக்கும் உடையணிந்தவர்களை பல நூறு இஸ்ரேலிய பொலிஸை எதிர்கொண்டனர். மசூதிக்குள் மற்றும் முன்னரங்கத்தில் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தினர். பாலஸ்தீனிய Red Crescent இன்படி, காயமடைந்தவர்களில் ஒருவர் கண்ணை இழந்தார், இருவர் தலையில் பலத்த காயம் அடைந்தனர், இருவரின் தாடைகள் எலும்பு முறிந்தன.

நூற்றுக்கணக்கான வழிபாட்டாளர்கள் தங்கள் ஒற்றுமையைக் காட்ட ஷேக் ஜர்ராவுக்குச் சென்றனர். அங்கு கவச வாகனங்களில் பொருத்தப்பட்ட நீர் பீரங்கியைப் பயன்படுத்தி பொலிசார் அவர்களை தாக்கினர். இஸ்ரேலின் பொது பாதுகாப்பு மந்திரி அமீர் ஓஹானா, "சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்க அனைத்து வழிகளையும், சக்தியையும், தேவையான சக்தியையும் பயன்படுத்த காவல்துறைக்கு முழுமையான ஆதரவு உள்ளது" என்றார். பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பில் நெத்தன்யாகு, “ஜெருசலேமில் சட்டம் ஒழுங்குக்கு மரியாதை அளிப்பதை உறுதிசெய்ய இஸ்ரேல் பொறுப்புடன் செயல்படுகிறது. அதே நேரத்தில் வழிபாட்டு சுதந்திரத்தை அனுமதிக்கிறது.” என்றார்.

சனிக்கிழமை இரவு, 90,000 வழிபாட்டாளர்கள் லயலத் அல்-கத்ர் அல்லது இரவின் பலம் எனப்படும் ரம்ழானின் புனிதமான இரவைக் குறிக்க கூடிவந்ததால், பழைய நகரத்திற்கு வெளியே இஸ்ரேலிய போலீசாருடன் மோதல்கள் வெடித்தன. பாலஸ்தீனிய Red Crescent இன்படி, ஒரு வயது குழந்தை உட்பட குறைந்தது 120 பேர் காயமடைந்தனர், 14 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ”.பொலிஸ் மீண்டும் அல்-அக்ஸாவில் வழிபாட்டுக்கு வரும் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முயன்று, சாலைத் தடைகளை அமைத்து, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து பொது போக்குவரத்தை நிறுத்தி பாலஸ்தீனியர்களை நெடுஞ்சாலைகளில் நடக்க கட்டாயப்படுத்தியது. மற்றவர்கள் சிக்கித் தவிக்கும் வழிபாட்டாளர்களை நகரத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அச்சுறுத்தப்பட்ட ஷேக் ஜர்ரா வெளியேற்றங்கள் மற்றும் அல்-அக்ஸா மீது வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக, யாஃவ்பா மற்றும் நாசரேத் நகரங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள நகரங்களில் பாலஸ்தீனிய இஸ்ரேலியர்கள் கோபமான ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர், பாரம்பரியமாக அந்நியப்பட்டு நிற்கும் இஸ்ரேலின் பாலஸ்தீனிய குடிமக்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் முன்னோடியில்லாத வகையில் தலையிட்டதைக் இது குறித்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு இஸ்ரேலிய படையினரால் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதையும் மற்றும் காயமடைந்ததையும் அத்துடன் பாலஸ்தீனியர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களுக்கு எதிரான முன்னோடியில்லாத அளவிலான குடியேற்றவாசிகளின் வன்முறைகள் நாளாந்தம் அறிவிக்கப்படுகின்றன. பாலஸ்தீனிய அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் சமீபத்தில் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பில் முன்னர் ஒரு முன்னணி பிரிவான இருந்த அவரது ஃபத்தா பிரிவுக்கு ஆதரவு வீழ்ச்சியடைந்த நிலையில், கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனியர்களுக்கு வாக்களிக்க இஸ்ரேல் (நீண்டகாலமாக) மறுத்துவிட்டதை மேற்கோளிட்டு 2006 இற்கு பின்னர் முதல் முதல் பாலஸ்தீனிய தேர்தல்களை ஒத்திவைத்தார்.

அல்-அக்ஸா மோதல்கள் எகிப்து மற்றும் ஜோர்டானில் இருந்து கண்டனத்தைக் கொண்டு வந்துள்ளன. அதன் மக்கள் பெரும்பாலும் பாலஸ்தீனிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாவர். பாலஸ்தீனிய பிராந்தியங்களில் எந்தவொரு உறுதியற்ற தன்மையும் தங்கள் ஸ்திரமற்ற நாடுகளுக்குள் பரவக்கூடும் என்ற அச்சமுற்றுள்ளனர்.

துருக்கி, அதே போல் கடந்த ஆண்டு இஸ்ரேலுடன் இயல்பாக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட இரண்டு நாடுகளான பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் இஸ்ரேலை விமர்சிக்கும் அறிக்கைகளை வெளியிட்டன.

இதற்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை, வன்முறையைத் தணிக்க “இரு தரப்பினரும் தீர்க்கமான தலைமைத்துவத்தை கடைப்பிடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியது. இதன் உண்மையில் இஸ்ரேலுக்கு அதன் ஆதரவைக் கொடுக்கின்றது. வெளியுறவுத்துறை பேச்சாளர் நெட் பிரைஸ் "பதட்டங்களை குறைக்கவும் வன்முறையை நிறுத்தவும் தீர்க்கமாக செயல்பட இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன அதிகாரிகளை நாங்கள் அழைக்கிறோம்"என கூறினார்.

மேற்குக் கரையில் தனது படைகளை நான்கு படைப்பிரிவுகளால் விரிவுபடுத்தவும், காவல்துறையினருக்கு பாதுகாப்பில் உதவவும், தெற்கில் நகரும் ஏவுகணைகளை அனுப்பவும் பாதுகாப்பு படையினருக்கு நெத்தன்யாகு உத்தரவிட்டடார். இது இஸ்ரேலின் குடியேற்றக் குழுக்களும் தீவிர வலதுசாரிப் பிரிவுகளும் நேற்று இரவு தொடங்கி இன்று முடிவடை ஜெருசலேம் தினத்தைக் கொண்டாடும் நாளை தொடர்ந்து இடம்பெறுகின்றது. ஜெருசலேம் தினமானது 1967 அரபு இஸ்ரேலிய போரில் ஜோர்டானில் இருந்து கிழக்கு ஜெருசலேம் கைப்பற்றப்பட்ட ஆண்டையும், இஸ்ரேலுடன் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டதையும் இந்த நாள் குறிக்கிறது. இன்றைய முக்கிய நிகழ்வானது பாலஸ்தீனியர்களை இழிவுபடுத்துவதற்காக, நகரத்தின் அரபு குடியிருப்புகள் வழியாக திட்டமிட்ட அணிவகுப்பாகும்.

நெத்தன்யாகுவின் ஆத்திரமூட்டல்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போர் அறிவிப்புக்கு ஒப்பானவையும், மேலும் மத்திய கிழக்கில் ஒரு பரந்த போரைத் தூண்டக்கூடும். அங்கு பிராந்தியத்தின் வலிமையான இராணுவ சக்தியான இஸ்ரேல் வாஷிங்டனின் பினாமி சக்தியாக செயல்படுகிறது. ஜெருசலேம் தினத்தன்று நடந்த கொடி அணிவகுப்பு கிழக்கு ஜெருசலேமில் தீப்பிழம்புகளைத் தூண்டக்கூடும் என்றும் காசா மற்றும் மேற்குக் கரையில் வன்முறை பரவக்கூடும் என்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்ததால் இது இஸ்ரேலுக்குள் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது.

அணிவகுப்பை ஒத்திவைக்கவும், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும், பாதையை மாற்றவும், இதனால் அல்-அக்ஸா வளாகத்திற்குள் நுழையக்கூடாது என்று அரசியல்வாதிகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேலின் இராணுவ வானொலியில் ஆத்திரமூட்டும் அணிவகுப்பு நடைபெறும் என்று கூறினார்.

நெத்தனியாகு சாட்சியமளிக்கும் கட்டத்தில் இப்போது நுழையும் தனது ஊழல் விசாரணையைத் தவிர்ப்பதற்கான தனது தகமையை உறுதிசெய்யும் ஒரு கூட்டணியை ஒன்றிணைக்க இயலாது என்று நிரூபித்ததை அடுத்து, ஒரு அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி ருவன் ரிவ்லின் எதிர்க்கட்சித் தலைவர் யெய்ர் லாப்பிட்டை அழைத்ததால் இந்த நடவடிக்கைகள் வந்துள்ளன. ஒரு புதிய பாலஸ்தீனிய எழுச்சியின் வெடிப்பு, லாபிட்டின் சாத்தியமான வலதுசாரி பங்காளிகளான யமினாவின் நாப்தாலி பென்னட் அல்லது மன்சூர் அப்பாஸின் ஐக்கிய அரபு பட்டியல் அவரது கூட்டணியில் சேருவதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் தடுக்கும். இதன் மூலம் ஐந்தாவது தேர்தல் மற்றும் / அல்லது அவசரகால நிலை அவர் தொடர்ச்சியாக லாப்பிட் பிரதமர் பதவியிலிருப்பதை உறுதிப்படுத்தலாம்.

Loading