சனிக்கிழமை ஏப்ரல் 3, மதியம் 1:00 மணி, அமெரிக்க கிழக்கத்திய நேரப்படி மதியம் 1 மணி
இந்திய, இலங்கை நேரப்படி சனிக்கிழமை, ஏப்ரல் 3 பிற்பகல் 10,30 மணி
இணையவழி பொதுக்கூட்டத்திற்கு இங்கே பதிவு செய்யவும்
மார்ச் 18, 1871 இல், பாரிஸில் தொழிலாளர்கள் 1870-1871 பிராங்கோ-பிரஷ்ய போரில் நகரின் பாதுகாப்புக்காக வாங்கப்பட்ட பீரங்கிகளை திருடுவதற்கான பிரெஞ்சு இராணுவத்தின் முயற்சியைத் தடுக்க எழுந்தனர். அடோல்ப் தியர் இன் பிரெஞ்சு அரசாங்கம் பீதியுடன் நகரத்தை விட்டு வெளியேறியது, அதிகாரம் ஆயுதம் தரித்த தொழிலாள வர்க்கத்தின் கைகளுக்கு சென்றது. வரலாற்றில் முதல் தொழிலாளர் அரசான பாரிஸ் கம்யூனுக்கு மார்ச் 26 அன்று தேர்தல்கள் நடத்தப்பட்டன.
கம்யூன் என்பது முற்றிலும் புதிய அரசு அதிகாரமாகும், இது சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்கத் தொடங்கியது. ஆனால் மே 21-28 வரையிலான இழிபெயரெடுத்த இரத்தக்களரி வாரத்தில், தியரும் பிரெஞ்சு இராணுவமும் பாரிஸை கடும் பீரங்கிகளால் தாக்கியது. கம்யூனுக்காக போராடிய, பங்கேற்ற அல்லது அனுதாபத்துடன் இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கண்மூடித்தனமாக கொலை செய்தது.
பாரிய இரத்த விலைகொடுத்த கம்யூன், இன்றைய சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு விலைமதிப்பற்ற அனுபவமாக உள்ளது, தொழிலாளர்களின் உயிர் வாழ்க்கை, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் ஒவ்வொரு நாட்டிலும் அரசு அதிகாரத்திற்கான அவர்களின் போராட்டத்திலேயே தங்கியுள்ளது.
பேச்சாளர்களில் டேவிட் நோர்த், அலெக்ஸ் லான்ரியே உட்பட மேலும் பலர் பேசுவார்கள்.
நேர மண்டல மாற்றங்கள்:
Mexico City: 11am, Saturday, April 3
London: 6pm, Saturday, April 3
Paris: 7pm, Saturday, April 3
Istanbul: 8pm, Saturday, April 3
Mumbai: 10:30pm, Saturday, April 3
Beijing: 1am, Sunday, April 4
Sydney: 3am, Sunday, April 4