World Socialist Web Site www.wsws.org


“The World Prospects for Socialism”

"சோசலிசத்திற்கான உலக வாய்ப்புகள்"

Resolution on the International Situation, Socialist Labour League 1961 Annual Conference

1961 சோசலிச தொழிலாளர் கழக (SLL) வருடாந்த மாநாட்டின், சர்வதேச நிலைமை பற்றிய தீர்மானம்

Back to screen version

சீனாவிலும் யூகோஸ்லோவியாவிலும் புரட்சி பரவிவந்தமைக்கு எதிராக சர்வதேச ஸ்ராலினிசத்தால் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பரண்கள் (bulwarks), வெகுஜன புரட்சிகர இயக்கத்தின் ஆற்றல்வாய்ந்த சக்தியாலும், எந்தவொரு நம்பகமான முதலாளித்துவ மாற்றீடு இல்லாததாலும், பழைய ஆட்சிகளின் ஊழல் மற்றும் உடைவுகளாலும் தகர்க்கப்பட்டன. இதன்பின்னர், இங்கே, சர்வதேச ஏகாதிபத்திய கூட்டின் ஓர் உண்மையான உடைவு நடந்தது. கிழக்கு ஐரோப்பாவில், 1944-45இல், சோவியத் அதிகாரத்துவம் பழைய ஆளும் வர்க்கங்கள் மற்றும் கட்சிகளுடனும், நாஜி ஆக்கிரமிப்பாளர்களோடு கூடுதலாக சமரசம்செய்திருந்த பிரிவுகளோடும் கூட, பொதுவாக தான் இணைந்துகொள்ள தயாராக இருந்ததை வெளிப்படுத்திக் காட்டியது. ஆனால் இந்த ஆட்சிகளும் மிகவும் மதிப்பிழந்து இருந்ததோடு, மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் மிகவும் வெளிப்படையான கருவிகளாகவும் இருந்ததால், அத்தகையவொரு கூட்டணியை நீடிக்க இயலவில்லை. இதன் விளைவாக, 1946-47 வாக்கில், சோவியத்திற்கு எதிரான ஏகாதிபத்தியத்தின் நோக்கங்கள் தெளிவாக வெளிப்பட்டிருந்த நிலையில், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு பாதுகாப்பு கூட்டணியைக் கட்டியமைக்கும் நிகழ்ச்சிப்போக்கின் பாகமாக, அதிகாரத்துவ அணுகுமுறைகளால் ஏறத்தாழ விரைவிலேயே முதலாளித்துவ சொத்துடைமை உறவுகள் அழிக்கப்பட்டன.

குறிப்பிட்ட சில அரசியல் போக்குகள், குறிப்பாக திருத்தல்வாத பப்லோவாத குழுவின் போக்குகள், மறைமுகமாகவோ அல்லது பகிரங்கமாகவோ, 'இந்த நிகழ்வுகள் உலக ஸ்ராலினிசத்தின் இயல்பு மற்றும் பாத்திரம் குறித்த ட்ரொட்ஸ்கியின் விளக்கத்திலிருந்து' முரண்பட்டிருப்பதாக வாதிட்டன. புரட்சியின் மையப்பகுதி (epicentre) அபிவிருத்தியடைந்த நாடுகளுக்குள் நகரும் வரையில், அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஒரு சுயாதீனமான மார்க்சிச தலைமையைக் கட்டியமைக்கும் பணி காலவரையின்றி ஒத்திப்போடப்பட வேண்டுமென்றும் அவை இன்னும் கூடுதலாக முடிவெடுத்திருந்தன.

சோவியத் அதிகாரத்துவத்தின் சித்தாந்தம் மற்றும் வேலைத்திட்டமாக இருந்த உலக ஸ்ராலினிசம் குறித்த ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வோடு, சீனா, இந்தோ-சீனா மற்றும் யூகோஸ்லோவியாவின் அனுபவங்கள் முரண்படவில்லை. ஒப்பீட்டளவில், குறிப்பாக இரண்டாம் உலக யுத்தத்தின் காலகட்டத்தில், கம்யூனிச அகிலத்தின் அமைப்புரீதியிலான கடுமையான கட்டுப்பாடுகளிலிருந்து அவை சுதந்திரமாக இருந்ததால், ஒப்பீட்டளவில் இந்த நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளால் சமூகப் புரட்சியோடு சேர்ந்து தேசிய-விடுதலை போராட்டத்தையும் இணைத்த ஒரு சுயாதீனமான கொள்கையைத் தொடர முடிந்தது. எவ்வாறிருந்தபோதினும், அரசு அதிகாரத்திற்கான போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்தத் தலைமைகள், உலக முதலாளித்துவத்தோடு 'சமாதான சகவாழ்வு நலன்களோடு சேர்ந்து, இத்தகைய இயக்கங்களை ஒடுக்கவோ அல்லது நசுக்கவோ விரும்பிய அல்லது அதிகாரத்துவத்தின் சொந்த தேவைகளுக்கு அவற்றை அடிபணிய வைக்க விரும்பிய சோவியத் அதிகாரத்துவத்தோடு முரண்பாட்டிற்கு வந்திருந்தன.

மறுபுறம் பீக்கிங் மற்றும் பெல்கிராட் அதிகாரத்துவங்கள், அவற்றின் அனுபவவாத கண்ணோட்டம் மற்றும் தனியொரு நாட்டில் சோசலிசத்தைக்' கட்டியெழுப்புவது குறித்த ஸ்ராலினிச பயிற்சி மற்றும் சீர்திருத்த-கற்பனாவாத கருத்துக்களின் காரணமாக, அரசு அதிகாரத்திற்கான ஐரோப்பிய தொழிலாளர்களின் போராட்டத்தில் அவர்களுக்கு உதவும் ஒரு வேலைத்திட்டத்தையோ அல்லது அமைப்பையோ விரிவாக்க முற்றிலும் இலாயக்கற்று இருந்தன. அவைகள் அவற்றின் சொந்த உடனடி தேசிய நலன்களால் வழிநடத்தப்பட்டும், உலக நிகழ்வுகளின் வீச்சு மற்றும் திசையை கிரகித்துக்கொள்ளமுடியாமலும் மத்தியவாத போக்குகளில் (centrist currents) தங்கியிருந்தன. இந்த தலைவர்களின் திவால்தன்மைக்கு சமீபத்திய பெல்கிராட் மாநாடு ஒரு வெளிப்படையான எடுத்துக்காட்டாகும்.

இந்நாடுகளில் தொழிற்துறைமயமாக்கல் மற்றும் கூட்டு விவசாய முறையை, மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் உதவியில்லாமல் வெற்றிகரமாக நடத்தவியலாது. ஆகவே மேற்கில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதென்பது, இத்தகைய பொருளாதாரங்களின் பகுத்தறிவார்ந்த மற்றும் ஒத்திசைவான ஒருங்கிணைப்பிற்கும், வளர்ச்சிக்கும் ஒரு தவிர்க்கவியலாத முன்நிபந்தனையாக இருக்கிறது.

***

சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், தொழிலாளர்களின் அரசுகளாகும்: அதாவது, இவை அக்டோபர் புரட்சியால் ஸ்தாபிக்கப்பட்ட சொத்துடைமை வடிவங்களின் அடிப்படையில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, சோசலிச சமூகத்திற்கு அடிப்படையான சொத்துடைமை வடிவங்களில் உள்ளன. ஆனால் இந்நாடுகளின் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை, உற்பத்தியில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை, மற்றும் வெளியுலகத்திற்கு இந்த நாடுகளின் கொள்கை தீர்மானிக்கப்படுவதில்லை.

சோசலிசத்திற்கான உலக வாய்ப்புகள்"

உலக புரட்சியின் முதல் கட்டம் ஒரு பின்தங்கிய நாடான சோவியத் ஒன்றியத்தில் மட்டும் கட்டுப்படுத்தப்பட்டமை, அரசியல்ரீதியாக பாட்டாளி வர்க்கத்தை சுரண்டுவதில் ஓர் அதிகாரத்துவ ஜாதியின் வெற்றிக்கு வழிகோலியது. தொழிலாள வர்க்கத்திற்கு மேலேயும், வெளியிலேயும் நின்றிருக்கின்ற இந்த அதிகாரத்துவம், அக்டோபர் புரட்சியால் தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார வடிவங்களின்மீது ஒட்டுண்ணித்தனமாக ஒட்டிக்கொண்டுள்ளது. இது சோசலிச மாற்றத்திற்கான ஒரு தவிர்க்கவியலாத கூறுபாடல்ல, மாறாக இது ரஷ்யப் புரட்சி தனிமைப்படுத்தப்பட்ட பிரத்தியேக நிலைமைகளிலிருந்து எழுந்ததாகும். இது சோவியத் தொழிலாள வர்க்கத்தால் ஓர் அரசியல் புரட்சி மூலமாக வரலாற்றுரீதியில் பிரதியீடு செய்யப்படும். இந்த புரட்சிக்கான தயாரிப்பு, உலகளவில் புரட்சிகர தொழிலாள-வர்க்க சக்திகளின் மூலோபாயத்தில் சார்ந்துள்ளது.

இவ்விதத்தில், சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பாவை நாம் உருக்குலைந்த அல்லது ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளாக காண்கிறோம். அவற்றின் தற்போதைய வடிவம் தற்காலிகமாக மட்டுமே இருக்க முடியும் என்பதோடு இந்த தற்காலிக உருத்திரிந்த வடிவங்களை சமூகத்தின் அபிவிருத்தில் ஏற்பட்ட ஒரு புதிய அல்லது தவிர்க்கவியலாத கட்டமாக விளக்குவது தவறாகும். இந்த அரசுகளை தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு வெற்றியாக பாதுகாக்க நாம் நிற்கிறோம்; ஏகாதிபத்திய சுரண்டல் வட்டத்திற்குள் அவை மீண்டும் வருவதென்பது, சோசலிசத்தின் வாய்ப்புகளுக்கு ஒரு தகர்விற்கான அடியாக அமைந்துவிடும். அதேவேளை அவை தொடர்ந்து இருப்பதென்பது ஏகாதிபத்தியத்திற்கு ஒரு நிரந்தர சவாலாகவும், அதன் ஸ்திரமின்மைக்கு அச்சுறுத்தலாகவும் விளங்குகிறது. ஆனால் சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா மற்றும் சீனாவை நாம் பாதுகாக்கிறோம் என்பது, விமர்சிக்கும் கடமையைக் கைவிடுகிறோம் என்று அர்த்தமாகாது. உண்மையில் புரட்சியைப் பாதுகாப்பதற்கு எதிராக வேலை செய்துவரும் அதிகாரத்துவத்தின் எதிர்-புரட்சிகர பாத்திரத்தை இரக்கமின்றி விமர்சிப்பதைப் புரட்சியாளர்கள் ஒரு கடமையாக கொண்டுள்ளனர். சோவியத் முகாமிலும், உலகம் முழுவதிலும் நடந்துவரும் வர்க்க போராட்டத்திலும் இரண்டிலுமே, கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கைக் கொண்டு, அதிகாரத்துவம் சோசலிசத்திற்கான போராட்டத்தை நாசப்படுத்துகிறது. அதிகாரத்துவத்தைத் தூக்கியெறிய ஓர் அரசியல் புரட்சிக்கு அழைப்புவிடுக்கிறோம் என்பதற்காக, ஏகாதிபத்தியவாதிகளின் மற்றும் தொழிலாளர் இயக்கத்தில் உள்ள அவர்களுடைய முகவர்களின்விடுதலை பிரச்சாரத்தை நாம் ஆதரிக்கிறோம் என்றாகாது. அத்தகையவொரு புரட்சியைக் காப்பாற்றவும், தேசியமயமாக்கப்பட்ட சொத்துடைமை உறவுகள் மீண்டும் வீழ்த்தப்படக்கூடாதென்றும், முதலாளித்துவ புனருத்தாரனத்திலிருந்து அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவுமே நாம் வாதிடுகிறோம். தொழிலாளர் அரசுகளில் அதிகாரத்துவத்தை தூக்கியெறிவதற்கான ஓர் அரசியல் புரட்சிக்கு நான்காம் அகிலத்தின் அழைப்பானது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உலக புரட்சியின் மூலோபாயத்தின் பாகமாக உள்ளது.

முக்கியமாக, சோவியத் ஒன்றியத்தை 'அரசு முதலாளித்துவத்தின் -‘state capitalism’- ஓர் அமைப்பாக குணாம்சப்படுத்தும் குட்டி-முதலாளித்துவ போக்கே அபாயகரமாக உள்ளது. சோவியத் அதிகாரத்துவம் அரசு எந்திரங்களில் அது கொண்டிருக்கும் கட்டுப்பாட்டின் மூலமாக, அதுவொரு புதிய முதலாளித்துவ வர்க்கமாக மாறி, அக்டோபர் புரட்சியின் அனைத்து வெற்றிகளையும் அழித்துவிட்டுள்ளது என, மேலெழுந்தவாரியான ஒப்பீட்டு முறைகளைப் பயன்படுத்தி, 'அரசு முதலாளித்துவ கோட்பாடுகள் கூறுகின்றன. ஏகாதிபத்திய தாக்குதலில் இருந்து சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாப்பதற்கான அனைத்து பொறுப்பும் இந்த அடிப்படையில் கைவிடப்படுகின்றன என்பதோடு, ஒரு லெனினிச கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான அவசியமும் மறுக்கப்படுகிறது. உத்தியோகபூர்வமாக மார்க்சிசத்தை தழுவிக்கொண்டு, அத்தகைய போக்குகள் உண்மையில் முதலாளித்துவ "சர்வாதிபத்திய" (totalitarianism) கோட்பாடுகளுக்கு ஓர் இடது வேஷத்தையும் மற்றும் தொழிலாள வர்க்க அதிகாரம் சாத்தியமில்லை என்றும் காட்டுகின்றன. கொரிய யுத்தம் போன்ற அரசியல் நெருக்கடி காலகட்டங்களில், அவை ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவு வழங்குகின்றன. அவை ஒரு நேரடி முகமையாக விளங்குகின்றன, அதன்மூலமாக கூர்மையான வர்க்கப் போராட்டம் எழும் போதும், பாட்டாளி வர்க்க கட்டுப்பாடு அவசியப்படும் போதும், மற்றும் கொள்கைரீதியிலான வேலைத்திட்டம் அத்தியாவசியமாகும் காலக்கட்டத்திலும், இயக்கத்திற்குள் இருக்கும் சில பிரிவுகள் மூலமாக அவை குட்டி-முதலாளித்துவ ஜனநாயக கருத்துகளுக்கு சரணடைந்துவிடும். உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் சோவியத் ஒன்றியத்தின் குணாம்சம் குறித்த விவாதமென்பது அல்லாமல், மாறாக 'ஜனநாயகம்' மற்றும் 'சுதந்திரம்' போன்ற அருவமான அரசியல் அளவுகோல்களின் கண்ணோட்டம் இந்த போக்கின் வர்க்க குணாம்சத்திற்கு தெளிந்த ஆதாரமாக உள்ளது. நடைமுறையில் உள்ளதைப் போலவே தத்துவார்த்தரீதியாகவும், அவை வலதுசாரி சமூக ஜனநாயகத்தை நோக்கிச்செல்லும் நேரடிப் பாதைகளாக உள்ளன.

***

சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சமீபத்தில் குரூஷ்சேவ்வின் (Khrushchev) சமாதான சகவாழ்வுக் (peaceful coexistence) கொள்கையின் அனைத்து அடிப்படை தத்துவார்த்த முன்கருத்துக்களையும் கேள்விக்கு உட்படுத்தினர். சமாதான சகவாழ்வானது தற்போதைய நிலையை ஏற்றுக்கொள்வதற்கான ஓர் மறைமுக விருப்பமாக சீனர்களால் பார்க்கப்பட்டது, இவ்விதத்தில் ஃபோர்மோசாவை (Formosa) மீட்பதற்கான சியாங்கிற்கு எதிரான போராட்டத்தையும் மற்றும் ஆயுதக்குறைப்பு உடன்படிக்கைகளுக்கு (disarmament agreements) பிரதியீடாக காலனித்துவ புரட்சிக்களுக்கான உதவி ஆதரவையும் கைவிடுவதாகும். சீனத் தலைமையும், அதற்கிணையாக ரஷ்யாவிலிருப்பதை போன்ற அதிகாரம் மற்றும் தனிச்சலுகையோடு பிணைந்துள்ள ஓர் அதிகாரத்துவ ஜாதியிலிருந்து எழுகின்றது.

ஆனால் புரட்சிகர சக்திகளின் மூல ஊற்றிற்கு அருகில் இருந்துகொண்டு, உள்நாட்டில் கடினமான பிரச்சினைகளை முகங்கொடுத்து கொண்டே, மற்றும் அதன் சொந்த நலன்களுக்கு எதிராக உலக கம்யூனிச இயக்க கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஆட்சேபித்துக் கொண்டே, 'திருத்தல்வாதிகளை' எதிர்த்த லெனினிசத்திலிருந்து அது தேர்ந்தெடுத்த தத்துவார்த்த படைத் தளவாடங்களை கண்டது. டிட்டோயிஸ்டுகள் (Titoists) மீதான இந்த உத்வேக தாக்கம், உண்மையான இலக்காக கொண்டு யாரையும் ஏமாற்ற முடியவில்லை. உண்மையில், இந்த முரண்பாட்டின் போக்கில், சீனர்கள் பல சரியான புள்ளிகளையும் எடுத்துரைத்தனர். பிரிவினையுடைய உலக சக்திகள் குறித்த அவர்களின் மதிப்பீடு மிகவும் எதார்த்தமாக இருந்ததற்காகவும் மற்றும் அவர்களின் சித்தாந்தம் 'தெளிவாக' (purer) இருந்ததற்காகவும், ஒட்டுமொத்தமாக அவர்களின் விஷயத்தை ஏற்றுகொள்வதற்கு இட்டுச்செல்ல முடியாது. அது சம-அளவில் அனுபவரீதியாக எட்டப்பட்டதேயொழிய, ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் எட்டப்பட்டதல்ல. ஒரு ஹைட்ரஜன்-பாம் (H-bomb) யுத்த சோசலிசம் வெற்றிகரமாக இருக்குமென்று வாதிட்ட சில சாகச மற்றும் அபாயகரமான புள்ளிகளையும் அது உட்கொண்டிருந்தது.

***

போலாந்து மற்றும் ஹங்கேரியில் நிகழ்ந்த 1956ம் ஆண்டு நிகழ்வுகள், தொழிலாளர்கள் அரசுகளில் தொழிலாள வர்க்கத்திற்கென ஒரு புரட்சிகர தலைமை இல்லாதிருந்ததன் துன்பியலான விளைவுகளை எடுத்துக்காட்டின; வருங்காலத்தில் தேவையற்ற தியாகங்களை தவிர்க்க வேண்டுமானால், அத்தகைய கட்சிகளைக் கட்டியெழுப்பதற்கான அவசர தேவையை அவை குறித்துக்காட்டுகின்றன. வெகுஜனங்களிடையே ஆழமாக வேரூன்றிய ஒரு மார்க்சிச கட்சியாக ஒழுங்கமைக்கப்பட்ட உண்மையான புரட்சிகர சக்திகளால் முகங்கொடுக்கப்படும் போது மட்டும் தான், அதிகாரத்துவம் அதன் வரலாற்று அழிவு கதியை எதிர்கொள்ளும். சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா, மற்றும் சீனாவில் அத்தகையவொரு முன்னோக்கு, அத்தோடு சேர்ந்து முதலாளித்துவ நாடுகளுக்கு எதிரான இத்தகைய அரசுகளுக்கான நம்முடைய நிபந்தனையற்ற பாதுகாப்பு, அதனோடு சேர்ந்து ஒரு புதிய புரட்சிகர அகிலத்தைக் கட்டியெழுப்புவது ஆகியன சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கிய எமது கொள்கையின் சாரத்தில் உள்ளடங்கியுள்ளன.

ஸ்ராலினின் 'தனியொரு நாட்டில் சோசலிச' தத்துவம் அறிமுகப்படுத்தப்பட்டு 36 ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போதைய உலக நிலைமை, சோசலிசத்தின் எதிர்காலமென்பது உலகப் புரட்சியின் ஒரு பிரச்சினையென்ற உண்மையை வலியுறுத்துகிறது.

இரண்டாம் உலக யுத்தமும், வல்லரசுகள் அணுஆயுதங்களை திரட்டுவதும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சோசலிச சமூகத்தின் தத்துவங்களுக்கு கூர்மையான பதிலை அளிக்கின்றன. ஒருபுறம், சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் மறுபுறம் அபிவிருத்தியடைந்த நாடுகளின் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான ஒரு புதிய உறவு மட்டுமே, சோசலிச வெற்றிக்கு உத்தரவாதமளிக்க முடியும். தொழிலாளர் அரசுகளின் வட்டங்களுக்குள்ளேயே கூட, சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு திட்டமிட்ட உழைப்புப் பிரிவினை (division of labour) மற்றும் ஆதாரவளங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை. அபிவிருத்தியடைந்த நாடுகளில் நடக்கும் புரட்சிகளோடு, சோசலிசம் அதன் மெய்யான புறநிலைமையின் அடிப்படையில், அதாவது உயர்ந்த உற்பத்தியின் பொருள்சார் அஸ்திவாரத்திலும், மற்றும் முதலாளித்துவத்தினாலேயே அபிவிருத்தி செய்யப்பட்ட சர்வதேச உழைப்புப் பிரிவினையாலும் அபிவிருத்தி செய்யப்படும்.